ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142886 topics in this forum
-
மூதூர் நிலவரம் தொடர்பாக மூதூரில் படிக்கும் அப்துல் நவுவ் தரும் தகவல். தமிழீழ விடுதலைப் புலிகள் மூதுர் நகரத்திற்கு வந்துவிட்டார்கள். இராணுவம் முகாமுக்குள்ளே இருக்கின்றது. வெளியிலை வருகிறார்கள் இல்லை. மக்கள் அகதிமுகாமல் இருக்கிறார்கள். பள்ளிவாசல் அரபிக் கல்லுரி அவற்றியல் தங்கியுள்ளனர். எனது கல்லூரிக்கு முன்னாலும் ஒரு போராளியின் வீரச்சாவடைந்த உடல் இருக்கின்றது இராணுவம் விலகி தமது முகாங்களுக்கு போய்விட்டார்கள். நான் இருக்கும் இடத்தில் இருந்து இராணுவ முகாம் 1கிலோ மீட்டருக்குள் இருக்கின்றது. கிராமத்திற்குள் ஒவ்வொரு மூலையிலும் முகாம் இருக்கிறது. விடுதலைப் புலிகள் இராணுவத்தினரையும் பொலிசாரையும் சரண் அடையுமாறு கொடுத்த காலக்கெடு இன்று இரவுடன் முடிவடைகிறது. தற்போது பாரிய…
-
- 0 replies
- 1.4k views
-
-
அரசுக்கு பாதுகாப்பு ஆலோசகராக செயற்படும் முன்னாள் பாகிஸ்தான் தூதுவர் பாகிஸ்தானிலிருந்து அந்நாட்டின் ஷ்ரீலங்காவுக்கான முன்னாள் தூதுவராக பதவிவகித்த பர்ஷிவலி தற்போது ஷ்ரீலங்காவுக்கு வந்திருப்பதாகவும் அவர் ஷ்ரீலங்காவின் பாதுகாப்பு மற்றும் இராணுவ நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட அறிவுறுத்தல்களை ஷ்ரீலங்கா அரசுக்கு வழங்கும் ஏற்பாட்டின் பேரிலேயே இங்கு வந்துள்ளதாகவும் அண்மையில் இந்திய பிரபல ஆங்கில நாளேடாகிய `த ஹிந்து' (The Hindu) தெரிவித்துள்ளது. இதற்கேற்ப பர்ஷிவலி தற்போது ஷ்ரீலங்காவின் பாதுகாப்பு நடவடிக்கைகள் சம்பந்தமாக அறிவுறுத்தல்களை அரசுக்கு வழங்கிக் கொண்டு இருப்பதாக `த ஹிந்து 'தகவல் வெளியிட்டுள்ளது. அத்துடன் குறித்த இந்திய நாளேட்டில் மேலும் கூறப்பட்டிருக்கும் தகவ…
-
- 2 replies
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைக்காக தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை ஒன்று சேரப்போற்றும் மாவீரர் நாள் உரையை தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் நாளை திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு உரை நிகழ்த்தவுள்ளார். தமிழீழ தேசிய மாவீரர் நாள் நாளை திங்கட்கிழமை தமிழ் மக்களால் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட உள்ளது. மாவீரர்கள் அனைவரையும் ஒன்று சேரப்போற்றும் புனித வேளை தொடங்குவதற்கு முன்பாக மாலை 5.30 மணிக்கு தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் மாவீரர் நாள் உரை நிகழ்த்துவார். தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் உரையைத்தொடர்ந்து மாலை 6.05 மணிக்கு ஒரு மணித்துளி நேரம் மணியொலி எழுப்பப்படும். தொடர்ந்து 6.06 மணிக்கு மாவீரர்களுக்காக அகவணக்கம் செலுத்தப்படும். அதனைத்தொடர்ந்து 6.07 மணி…
-
- 0 replies
- 1.4k views
-
-
முஸ்லிம்கள் இல்லாவிடின் யுத்தத்தை முடித்திருக்க முடியாது : பாதுகாப்பு படைகளின் பிரதானி (ரொபட் அன்டனி) முஸ்லிம் மக்கள் இல்லாவிடின் இந்த நாட்டில் யுத்தத்தை முடித்திருக்க முடியாது. முஸ்லிம் மக்கள் எமக்கு வழங்கிய உளவுத்துறை சார்ந்த மிகப்பெரிய ஒத்துழைப்பின் காரணமாகவே எம்மால் யுத்தத்தை வெற்றிகொள்ள முடிந்தது. எனவே அவர்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து நான் கவலையடைகின்றேன். என்று கூட்டுப்படைகளின் பிரதானி ரியல் எட்மிரல் ரவிந்தீர விஜயகுணவர்த்தன தெரிவித்தார். அவசரகால நிலையின் கீழ் இராணுவத்தினர் குறைந்தபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி எடுத்துள்ளனர் என்றும் அவர் குறிப்…
-
- 15 replies
- 1.4k views
-
-
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில்கள் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரித்தானியாவின் Birmingham மாநகரத்தில் சூப்பர் மார்க்கெற் ஒன்றை நடத்தி வருகின்றார் என்று தகவல்கள் கசிந்துள்ளன. கிழக்கு லண்டனில் எஸ்ரேட் ஏஜென்சி நடத்தி வரும் இலங்கையர் ஒருவர் ஊடாக பிரித்தானிய வங்கிகளில் இருந்து பெருந்தொகை பவுண்களைக் கடனாகப் பெற்றுக்கொண்டு அமைச்சர் இச்சூப்பர் மார்க்கெட் வியாபாரத்தை ஆரம்பித்து இருக்கின்றார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் பெற்றிருக்கின்றவருமான சகா ஒருவர் இச்சூப்பர் மார்க்கெற் வியாபாரத்தை நிர்வகிக்கின்றார். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=art…
-
- 2 replies
- 1.4k views
-
-
பிரபாகரன் மகனின் கொலை: புதுடெல்லியைக் கலக்கிய சூடான விவாதம்! [ Tuesday, 13 March 2012, 06:03.45 PM. ] இறுதியுத்ததின்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் மகனை இலங்கை இராணுவம் சுட்டது தொடர்பாக NDTV யில் சூடான விவாதம் ஒன்று இடம்பெற்றுள்ளது.ஜனதா கட்சித் தலைவரும் புலிகள் எதிர்ப்புவாதியுமான சுப்ரமணியசுவாமி, ஜீ.பார்த்தசாரதி, கம்மியூனிஸ் கட்சி ராஜா, மனித உரிமை ஆர்வலர் கங்கூலி, ஊடகவியலாளர் மீனா குமார், உலகத் தமிழர் பேரவை(GTF) பேச்சாளர் சுரேன், சனல் 4 கொலைக்களத் தயாரிப்பாளர் காலம் மக்ரே மற்றும் இந்தியப் பிரதமரின் ஆலோசகர் நாராயன சாமி ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். புதுடெல்லியில் மிகவும் பிரபல்யமான NDTV தொலைக்காட்சியில் இலங்கை தொடர்பாக மிக …
-
- 3 replies
- 1.4k views
-
-
தமிழர்களே வேண்டாம் என்று சொன்னாலும் வல்லரசு நாடுகள் தமிழ் ஈழம் உருவாக்குவார்கள். - ஜெகத் கஸ்பார் பேச்சு! [sunday, 2012-12-30 10:20:57] 'நாம்' அமைப்பும் தமிழ் மையம் அமைப்பும் இணைந்து சங்கம் 4 என்ற பெயரில் 21 நாள் மார்கழித் தமிழ் விழா ராயப்பேட்டையில் நடந்து வருகிறது. 7-ம் நாள் நிகழ்ச்சியில் � முள்ளி வாய்க்கால் முடிவா, தொடக்கமா? � என்ற தலைப்பில் நாம் இயக்க நிறுவனர் ஜெகத் கஸ்பார் பேசினார். அவர், "முள்ளிவாய்க்கால் பேரழிவிற்குப் பின் உலகெங்கும் தன்னெழுச்சியாக தமிழர்கள் நூற்றுக் கணக்கான அறவழிப் போர் முனைகளை திறந்துள்ளனர். இந்தப் புதிய போர் ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் உலக அளவில் புதிய அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும். உலகின் பல்வேறு நாடுகள், குறிப்பாக மேற்கத்திய…
-
- 11 replies
- 1.4k views
-
-
அந்தப்பரிசுப் பெட்டியில் இருந்தது ஈழத்தமிழனின் தலையா..? – கொந்தளிக்கிறார் நாஞ்சில் சம்பத் தமிழ் ஈழத்தை சுடுகாடாக்கிவிட்டு கோவையிலே தமிழுக்கு மாநாடு என்பது உலகத் தமிழர்களை ஏமாற்றுவதற்கே, கனிமொழி வாங்கிய பரிசுப்பெட்டியில் இருந்தது ஈழத்தமிழனின் தலையா என்றும் குமுதம் இதழுக்கு அளித்த பேட்டியில் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். ம.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத்திடம் பேட்டி காண்பது சுவாரஸ்யமான அனுபவம். அழகு தமிழில் அவர் வாதங்களை சரவெடிபோல எடுத்துவைக்கும் விதமே அலாதியானது. அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஐவர் குழு இலங்கை போய் வந்தது அவரை மிகவும் கொதிப்பேற்றியுள்ளது அவரது அனல் வார்த்தைகளில் புரிந்தது! kumudam04112009001 நாடாளுமன்றக் குழு இலங…
-
- 0 replies
- 1.4k views
-
-
-
ஒட்டிசுட்டான், முத்தயன்கட்டுகுளம் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப்புலிகளின் பயிற்சி முகாம் ஒன்றை இன்று காலை 7:45 மணிக்கு தமது விமானப்டையின் ஜெட் விமானங்கள் வெற்றிகரமாக தாக்கியழித்ததாக விமானப் படை குரூப் கப்டன் தெரிவித்துள்ளதாக இங்கு ஊடகங்கள் ஓலமிடுகின்றன. மேலதிக விபரங்கள் ஏதாவது???? ஜானா
-
- 0 replies
- 1.4k views
-
-
இளவயது திருமண எதிர்ப்பு பிரச்சாரம் இலங்கையில் சிறுவயது திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. போதிய அறிவின்மை, குடும்ப பொருளாதாரசூழல் போன்றவையே இதற்கான காரணம் என யுனிசெப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ரீசா ஹொசைனி கூறுகின்றார். சிறுவயது திருமணங்களினால் மன உளைச்சல், சுகாதார சீர்கேடு மற்றும் சிசு மரணங்கள் போன்றன அதிகரிப்பது மட்டுமன்றி, அவர்களுக்கு எதிரான பாலியல் மற்றும் வன்முறைகளும் அதிகரிக்கும் என இலங்கைக்கான யுனிசெப் வதிவிட பிரதிநிதி சுட்டிக்காட்டுகின்றார்.சிறுவயதில் திருமணம் முடித்த 71பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் அவர்களில் 30 சதவீதமானவர்கள் 18 வயதுக்கு முன்னதாகவே கர்ப்பம் தரித்துள்ளார்கள் என தெரிய …
-
- 1 reply
- 1.4k views
-
-
சோக பூமியில் துரோக அரசியல்: சீன அடிமை Vs அமெரிக்க பொம்மை! போரில் தோற்றவர்களைவிட வென்றவர்கள் நிம்மதியாக இருக்க மாட்டார்கள்’ என்பது புத்தனின் வாக்கு! தனது வலது பக்கத்தில் ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாவையும் இடது பக்கத்தில் பாதுகாப்புத் துறைச் செயலாளரும் தனது தம்பியுமான கோத்தபயவையும் வைத்துக்கொண்டு, ஈழத்தில் இரக்கமற்ற ரத்தக் கொடுமையை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தாவின் அரசியல் ஆளுமை காரணமா… ஃபொன்சேகாவின் ராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! மே 18-ம் தேதி விடுதலைப் புலிகள் அமைப்பை முற்றாகமுடித்து விட்டதாக நாடாளுமன்றத்தில் ராஜபக்ஷே அறிவித்த அன்றே, இந்தப் பிரச்னை ஆரம்பித்துவிட்டது. ஃபொன்சேகாவைத்…
-
- 0 replies
- 1.4k views
-
-
புலி சந்தேக நபர்களை கடத்துவது தொடர்பாகவே ரணில் பேசுகின்றார் வீரகேசரி நாளேடு விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் மறைந்ததையடுத்து விடுதலைப்புலிகளின் சர்வதேச பிரசாரராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க செயல்படுகின்றார். சில நேரங்களில் ஸ்ரீகொத்தா புலிகளின் காரியாலயமாக மாறினாலும் புதுமையடைவதற்கில்லை என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது; கொழும்பில் குண்டு வெடிப்பதை தடுப்பதற்கும் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும் ப…
-
- 0 replies
- 1.4k views
-
-
3000 கோடி ரூபா செலவில் நவீன ரக மிக் விமான கொள்வனவிற்கு அரசு திட்டம் வீரகேசரி நாளேடு வருட இறுதிக்குள் 3000 கோடி ரூபா நவீன ரக மிக் விமானங்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து பாராளுமன்றத்துக்கோ கணக்காய்வாளர் நாயகத்துக்கோ இதுவரை அரசாங்கம் அறிவிக்கவில்லை என்று ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்த விமானக்கொள்வனவுக்கு கேள்விப்பத்திரம் கோரப்பட்டுள்ளதா? எந்த அரசாங்கத்துடன் கொள்வனவு செயற்பாடு இடம்பெறவுள்ளது? இந்த விமானங்கள் தயாரிக்கப்பட்டு எத்தனை வருடங்கள் கடந்துவிட்டன? இவற்றின் செயற்பாட்டுத்திறன் எத்தகையது? என்பன குறித்து அரசாங்கம் பதிலளிக்கவேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் …
-
- 1 reply
- 1.4k views
-
-
Published By: VISHNU 20 OCT, 2023 | 01:34 PM மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு சனிக்கிழமை (21) பயணம் செய்யவுள்ளனர். ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோ அவரின் தலைமையிலான 60 ஆதிவாசிகள் குழுவினரே முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு 21,22 ஆகிய இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு தாம் செல்லும் முதல் பயணமாக இது அமைவதாகவும், இரண்டு நாட்களும் யாழ்ப்பாணத்திலுள்ள பிரசித்தி பெற்ற இடங்களை சுற்றி பார்வையிட்டு மீண்டும் தமது இருப்பிடமான மஹியங்கனைக்கு செல்லவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/arti…
-
- 12 replies
- 1.4k views
- 2 followers
-
-
யாழ்ப்பாண பெண்கள் தைரியமானவர்கள் என்பது உலகறிந்த உண்மை என்று யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவர் மூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற பால்நிலை சமத்துவ கருத்தரங்கில் உரையாற்றிய அவர்,நவீன உலகில் பெண்களின் நிலை மிகவும் உயர்ந்திருக்கின்றது. ஆனால் அதே நேரத்தில் அவர்களின் முன்னேற்றங்களை ஆணாதிக்க சமுதாயம் இன்னும் அவர்களது வளர்ச்சியை சரியான முறையில் அங்கீகரிக்க தயாரில்லை. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் எந்த சமுதாயத்திலும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. வடமாகாணத்தில் 30வருடங்களாக எந்த வன்முறைகளும் நடைபெறவில்லை. பெண்கள் அனைத்திலும் சுயமாக செயற்பட்டார்கள் என்று பெருமையாகக் கூறும் சமூகத்தில் தற்போது என்ன நடக்கிறது? இதற்கு காரணம் என்ன? ஊடகங்களும்…
-
- 14 replies
- 1.4k views
-
-
மனித சங்கிலியில் ஒலித்த குரல்கள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி : ஈழத்தமிழர்களை காப்பாற்றுவதற்காக மாணவர்கள் கொட்டும் மழையிலும் அணிதிரண்டு நிற்கிறார்கள். ஆதற்கு பலன் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கிறோம். முதல்வரின் அழைப்பை எற்று தமிழகமே ஒன்று திரண்டு நிற்கிறது. எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் : தமிழத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இலங்கை தமிழ் மக்களை காப்பாற்றுவதற்காக, சிங்கள அரசினுடைய கொடுமையை தடுப்பதற்காக இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக மனித சங்கிலி என்கிற அறப்போர் கொட்டும் மழையில் நடைபெற்றுள்ளது. புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி : இலங்கையில் லட்சக்கணக்கான மக்கள் அன்றாடம் சிங்கள ராணுவத்தின் வெறிதாக்குதலுக்கு ஆளாகி …
-
- 1 reply
- 1.4k views
-
-
அரசுக்கு எதிரான குற்றச்சாட்டு ஐ.நா. வரை செல்லும் அவலம் [20 - June - 2007] * வரலாற்றில் துரதிர்ஷ்டம் என்கிறது ஐ.தே.க. -எம்.ஏ.எம். நிலாம்- இலங்கை நிலைவரங்கள் தொடர்பாக அரசுக்கு எதிரான குற்றச்சாட்டு ஐ.நா. சபை வரை செல்லும் நிலை உருவாகியிருப்பதாகத் தெரிவித்திருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, நாட்டின் அரசியல் வரலாற்றில் இது பெரும் துரதிர்ஷ்ட சம்பவமெனவும் விசனம் தெரிவித்திருக்கின்றது. முன்னொருபோதுமில்லாத விதத்தில் எமது நாட்டில் ஒழுங்கீனமானதொரு ஆட்சி நடந்து கொண்டிருப்பதாகவும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சரும் கண்டி மாவட்ட…
-
- 1 reply
- 1.4k views
-
-
சண்டே டைம்ஸ் செய்தியின் படி, எதிர்கட்சியில் இப்போது மகிந்த ராஜபக்சவின் கட்சி அங்கத்தவர்கள் பெரும்பான்மையாக இருப்பதால் ராஜபக்சவே எதிர்க்கட்சி தலைவராக வர இருக்கிறார். சம்பந்தன் வெறும் பாராளுமன்ற உறுப்பினராவார். http://www.sundaytimes.lk/181216/news/ranil-may-form-national-govt-325512.html
-
- 10 replies
- 1.4k views
-
-
பிரிட்டன் செல்வந்தர்களில் அதிக நிதி உதவி செய்த ஈழத் தமிழர் 13வது இடத்தைப் பிடித்துள்ளார்! [Wednesday 2015-05-06 19:00] சண்டே ரைம்ஸ் மற்றும் சி.ஏ.எப் நிறுவனமும் இணைந்து , செல்வந்தர்களில் எவர் தமது பணத்தை பதுக்கிவைக்காமல் , அதனை ஏழை எழிய மக்களுக்கு செலவுசெய்கிறார்கள் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளார்கள். அதில் 13 வது இடத்தைப் பிடித்திருப்பது வேறு யாரும் அல்ல , ஈழத் தமிழரான சுபாஷ்கரன் அல்லிராஜா தான். உலகில் பலர் பணத்தை சம்பாதிக்கிறார். ஆனால் சம்பாதித்த பணத்தைப் பதுக்கிவைக்கிறார்கள். தாமும் தமது சந்ததியினரும் அனுபவிக்க சொத்தைச் சேர்க்கிறார்கள். ஆனால் சுபாஷ்கரன் அல்லிராஜா முற்றிலும் மாறுபட்ட ஒரு மனிதர். சாதாரண மனிதராக பிரித்தானியா வந்து குடியேறிய அவர் , …
-
- 9 replies
- 1.4k views
-
-
"இலங்கை நிலைப்பிரச்சனை: இராணுவமும், ஜாதியும் காரணம்" இராணுவம் வெளியேறுவதே நிலப்பிரச்சனைக்கான தீர்வாக அமையும் என்கிறது ஆய்வு இலங்கை யுத்தம் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகளான பிறகும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடமாகாண மக்களின் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாமல் இருப்பதற்கு வடபகுதியில் இலங்கை இராணுவம் தொடர்ந்து நிலைகொண்டிருப்பது முக்கிய காரணம் என்று மாற்றம் என்ற தொண்டு நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை குறித்து பிபிசி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட மாற்றம் நிறுவனத்தின் இணை இயக்குனரான சிங்கம், இராணுவத்தினர் தொடர்ந்து வடக்கில் நிலைகொண்டிருப்பது, தம…
-
- 0 replies
- 1.4k views
-
-
பூநகரி கைப்பற்றப்பட்டதனை நாடாளுமன்றத்தில் அறிவித்த விமல் [சனிக்கிழமை, 15 நவம்பர் 2008, 10:59 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து பூநகரி பிரதேசம் சிறிலங்கா படையினரால் கைப்பற்றப்பட்டதனை தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அறிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற வரவு-செலவு திட்ட விவாதத்தில் அமைச்சர் சரத் அமுனுகம உரையாற்றிக்கொண்டிருந்த போது குறுக்கிட்ட விமல் வீரவன்ச, பூநகரி பிரதேசம் படையினரால் கைப்பற்றப்பட்ட செய்தியை சபாநாயகருக்கு அறிவித்தார். இதனையடுத்து அமைச்சர்கள், ஜே.வி.பி உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் மேசையில் தட்டி படையினருக்கு வாழ…
-
- 0 replies
- 1.4k views
-
-
2012 க.பொ.த சா/த தர பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு 2012 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத்தராதர சாதாரணத்தரப்பரீட்டை பெறுபேறுகள் இன்றிரவு வெளியிடப்பட்டுள்ளன என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, இணையத்தளத்தில் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிடுவோருக்கு பரீட்டைகள் திணைக்களத்தினால் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. 1 உங்களது பெறுபேற்றினைத் தெரிந்துக்கொள்வதற்கு உங்களது பரீட்சைச் சுட்டெண்ணைத் திருத்தமாக உட்படுத்துக. வேறொரு சுட்டெண்ணை உட்படுத்துவதால் வேறொருவரது பெயரும் பெறுபேறும் பெறப்படும். 2 இப்பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பாக ஏதேனும் முறைப்பாடுகளோ விசாரணைகளோ இருப்பின், இலங்கை பரீட்சைத்திணைகளத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் அறிவித்துள்ளது. மூலம்/ஆக்கம் :…
-
- 13 replies
- 1.4k views
-
-
கோகுலவதனன், வவுனியா 01/12/2009, 03:33 இரவு நேரங்களில் வீடுகளில் உணவு இருக்கக்கூடாது! படையினர் எச்சரிக்கை! உணவுகளை அளவோடு சமைக்குமாறும், இரவு நேரங்களில் வீடுகளில் உணவு மிச்சமாகக் இருக்கக்கூடாது எனவும் சிறீலங்காப் படையினர் எச்சரித்து வருகின்றனர். அண்மையில் மீள்குடியமர்த்தல் என்ற பெயரில் முழங்காவில் மற்றும் துணுக்காய்ப் பகுதிகளில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களிடமே படையினர் இந்த எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர். அடிக்கடி மக்களில் வீடுகளுக்குச் சென்று படையினர் இக்கருத்தினைத் தெரிவித்து வருவதுடன், புதிதாக யாராவது நடமாடுகிறார்களா என விசாரணைகளையும் நடத்தி வருகின்றனர். pathivu
-
- 2 replies
- 1.4k views
-
-
தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பு (TPNA) பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே சிறந்த வேட்பாளராக தாம் கருதுவதாக தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்ற அமர்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தம்முடன் பாராளுமன்ற வளாகத்தில் பேசியதாகவும் ஆனால் என்ன பேசப்பட்டது என்பதை வெளியிட மறுத்துவிட்டாா். தற்போதைய வேட்பாளர்களில் சிறந்த வேட்பாளராக ஜனாதிபதியை தான் கருதுவதாக அவர் கூறினார். https://www.ilakku.org/சிறந்த-ஜனாதிபதி-வேட்பாளா/?amp
-
-
- 14 replies
- 1.4k views
- 2 followers
-