ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
அவுஸ்திரேலிய மத்திய அரசின் அனுமதியின்றி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக எந்த நாட்டின் எந்த ஒரு நீதிமன்றத்திலும் வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்ய முடியாது என அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் இன்று தெரிவித்துள்ளார். ஒரு நாட்டின் தலைவருக்கு எதிரான இவ்வாறான வழக்குகளை சட்டமா அதிபரின் ஆலோசனையின்றி தொடர முடியாது எனவும் அவுஸ்திரேலிய ஏபீசி வானொலிக்கு வழங்கிய பேட்டியில் ஆஸி. பிரதமர் கூறியுள்ளார். அத்துடன் இந்த வழக்கு குறித்து சட்டமா அதிபருக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை இந்த வழக்கு குறித்த எந்த ஆவணமும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்குக் கிடைக்கவில்லை என ஆஸி சட்டமா அதிபர் திணைக்களமும் தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்த வழக்கு தொடர்பில் சட்ட…
-
- 14 replies
- 1.4k views
-
-
சென்னையில் நடைபெற்ற திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் சுப வீரபாண்டியன் எழுதிய நூல்களின் வெளியீட்டு விழாவில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி ஜனநாயக வழியில் இலங்கைத் தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தருவோம் என்றும் தமிழ் ஈழம் பெற்றுத் தருவதே நமது ஒரே மூச்சு, தமிழ் ஈழத்தை வலியுறுத்தி , சென்னையில் விரைவில் மாநாடு நடத்தப் படும் என்றும் தெரிவித்துள்ளார். அந்நிகழ்ச்சியில் உரை ஆற்றிய கருணாநிதி திமுக ஆட்சி அமைந்து நான் முதல்வராகப் பொறுப்பேற்ற நேரத்தில் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியை மரியாதை நிமித்தமாகச் சந்திக்கவும் வாழ்த்துப் பெறவும் டெல்லி சென்றேன். ராஜீவ் காந்தியைச் சந்தித்த போது என்னிடம் பிரபாகரன் பற்றி விசாரித்த ராஜீவ் காந்தி பிரபாகரன் சிறந்த வீரர்…
-
- 0 replies
- 1.4k views
-
-
முல்லைத்தீவு வான்பரப்பில் இந்திய உளவு அமைப்பின் வானூர்தி வட்டமிட்டு சென்றுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.4k views
-
-
கொழும்பில் தமிழ் ஊடகவியலாளர் கடத்தல் [சனிக்கிழமை, 14 யூலை 2007, 09:32 ஈழம்] [கொழும்பு நிருபர்] கொழும்பில் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் கடந்த புதன்கிழமை அதிகாலை கடத்தப்பட்டுள்ளார். சுயாதீன ஊடகவியலாளரான சக்கிவேல்பிள்ளை பிரகாஸ் (வயது 29) எனபவர் கடத்தப்பட்டிருப்பதாக சிறிலங்கா காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர் சிங்கப்பூரை தளமாகக் கொண்டுள்ள ஊடக அமைப்பின் செய்தி முகவர் நிலையத்தின் இலங்கைக்கான ஊடகவியலாளராகவும் படப்பிடிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். புறக்கோட்டை சிறிலங்கா அதிகாரிகள் தாம் சக்கிவேல்பிள்ளை பிரகாஸை கைதுசெய்யவில்லை என்று தெரிவித்துள்ளனர். சக்கிவேல் பிரகாஸ் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் முகவராகவும் தொழிற்பட்டு வந்திருக…
-
- 1 reply
- 1.4k views
-
-
கே. இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட முடியாது. அது ஓர் இறைமையுள்ள அரசு. எனவே ஒரு வரையறைக்குள்தான் இந்தியா செயல்பட முடியுமென காங்கிரஸ் பேச்சாளர் அபிஷேக் சிங்வி கடந்த 15ம் திகதி கூறியிருக்கிறாரே? பதில் : கடந்த கால சம்பவங்களை அறியாமல் அபிஷேக் சிங்வி தன்னுடைய ஆசைகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.இந்திய அரசு இலங்கை நாட்டு இறையாண்மையில் தலையிட முடிhயாது என்றால் எந்த அடிப்படையில் ராஜீவ் அவர்கள் இந்திய அமைதிப்படையை அங்கு அனுப்பினார்? இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எப்படி ஏற்படுத்தினார்? வடக்கு கிழச்கு மாகாணங்கள் ஒரே பகுதியாக இருக்க வேண்டும் என்கிற கருத்;தை அந்த ஒப்பந்தத்தில் எப்படிப் பதிவு செய்தார்? இந்த வரலாறு எல்லாம் தெரியாத அபிN|க் சிங்வி இன்று சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை 'தம்பி' என செல்லமாக விழித்த சிறிலங்கா அமைச்சர் [Monday, 2011-07-11 19:14:35] தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை 'தம்பி' என செல்லமாக விழித்துள்ளார் சிறிலங்காவின் மீன்பிடி நீரியல் வளத்துறை அமைச்சரான ராஜித சேனரட்ன.கடந்த சனிக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற யாழ். மாவட்டக் கடற்றொழிலாளர் அமைப்பு தோற்றுவிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு விழித்துள்ளார். "அன்று 1988ம் ஆண்டு நான் யாழ்ப்பாணம் வந்த போது தம்பி பிரபாகரனுடன் இருந்த தோழர் பாலகுமார் (தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரமுகர்) அவர்கள் என்னைக் கட்டித் தழுவி முத்தமிட்டு வரவேற்றார்." என உரையில் குறிப்பிட்டார் அமைச்சர் ராஜித சேனரட்ன. ww.seith…
-
- 0 replies
- 1.4k views
-
-
கடத்திச் சென்று சிறைவைத்த நடவடிக்கையானது 30 வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து மக்களுக்கு சமாதானத்தை உருவாக்கிய தமது கணவருக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வழங்கிய பரிசு என அனோமா பொன்சேக்கா கூறியுள்ளார். ஜெனரல் பொன்சேக்காவின் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். 30 வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த ஜெனரல் ஒருவரை அரசாங்கம் இவ்வாறு நடத்துமாயின் எதிர்காலத்தில் நாட்டு மக்களை நடத்தும் விதத்தை எண்ணிப் பார்க்க முடியாது. சரத் பொன்சேக்கா இரகசியமான இடமொன்றில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அவர் கைதுசெய்யப்பட்டிருந்தால் ஏன் இரகசியமாக தடுத்துவைக்க வேண்டும். ஜெனரல் பொன்சேக்கா கைதுசெய்யப்படவில்லை. அவர் கடத்தப்பட்டுள்ளார். நேற்றிரவு 9.30 அளவ…
-
- 16 replies
- 1.4k views
-
-
இலங்கைத் தீவில் பல திசை வாழ் தமிழ் இன மக்கள் மூன்று தசாப்தங்களாக பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து பல துயரங்களை அனுபவித்து ஈராண்டுகளுக்கு முன் ஜனாதிபதி அவர்களின் சிறந்த தலைமைத்துவத்தின் கீழ் அத்துன்ப துயரங்களில் இருந்து மீட்சி பெற்று தற்போது சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழக் கிடைத்திருப்பதையிட்டு முதலில் கடவுளுக்கும் அடுத்து ஜனாதிபதிக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும். முப்பது ஆண்டுகளாக இருள் சூழ்ந்த யுத்தத்தின் கொடூரத்திலிருந்து மீட்சி பெற்று நாம் தற்போது ஒளிமயமான ஒரு காலகட்டத்தை அடைந்துள்ளோம். எமக்கு உதயமாகியுள்ள ஒளிமயமான தீபாவளித் திருநாளாம் இந்நாள் இந்துக்களாகிய எமக்கு சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் கொண்டாடுவதற்கு கிடைத்திருப்பது நாம் பெற்ற விமோசனமாகும…
-
- 3 replies
- 1.4k views
-
-
ஈழமறுப்புத்தீர்வுகள், இனப்படுகொலை ஏற்புத்தீர்வுகளாய் .. பிரபாகரன் உலகின் அனைத்து நிகழ்ச்சி நிரல்களையும் வழிநடத்தும் 50×10தினர், ஈழப்படுகொலை நிகழ்வுகளை அவசரமற்ற, முடிக்கக்கூடாத நிகழ்ச்சியாகவே வைத்திருக்கின்றனர். யார் இந்த 50×10தினர்? உலகின் 50 முன்னணி நாடுகளில் உள்ள, அந்நாடுகளின் அரசியல், பொருளாதார, அயலுறவு கொள்கைகளை தீர்மானித்து வழிநடத்தும் உயர் அதிகாரம் கொண்ட மேல்நிலையில் உள்ள 10 மனிதர்களே இந்த 50×10தினர். இங்கு 50 என்பதும் 10 என்பதும் ±. இன அழிப்பு போருக்கு எதிராகவும், ஈழ அமைவிற்கு ஆதரவாகவும், உலகெங்கும் 10 கோடி தமிழர்களும், இனம் கடந்த எழுத்தாளர்களும், கலைஞர்களும், மனிதஉரிமை அமைப்புகளும், அரசியல் அமைப்புகளும், விமர்சகர்களும், மனிதநேயர்களும் குர…
-
- 0 replies
- 1.4k views
-
-
மீண்டும் - மூன்றே நிமிடங்களை ஒதுக்கி சிறிலங்காவுக்கான வரிச்சலுகையை இரத்துச்செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியத்தைக் கோருவோம் இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் (Link) இணைப்பை அழுத்தி அதன் பின்னர் உங்கள் பெயரையும், முகவரியையும் கொடுக்கப்பட்ட இடங்களில் நிரப்புங்கள். பின்பு,"Send E-mail"-ஐ அழுத்தினால் உங்கள் கடிதம் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையரை உடனடியாகச் சென்றடையும். http://www.congressweb.com/cweb4/index.cfm...amp;hotissue=31 நீங்கள் அனுப்பகின்ற இந்த கடிதத்தின் தமிழ் மொழியாக்கம் கீழே தரப்பட்டிருக்கின்றது. நன்றி அன்புடையீர் உரிய அதிகாரியின் பெயர் இங்கு சேர்க்கப்படும் சிறிலங்கா அரசு தொடர்ந்து மேற்கொண்டு வரும் மனித உரிமை மீறல்களைத் தங்களது கவனத்திற்கு கொ…
-
- 0 replies
- 1.4k views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் பிரான்ஸ் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதற்கு பிரான்ஸிலிருந்து 10 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக கடந்த 02.05.2010 அன்று நடந்த தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விபரங்கள். தேர்தல் தொகுதி பாரிஸ் 75 திரு. சிவசுப்பிரமணியம் மகிந்தன் 547 வாக்குகள் திரு. சிவகுரு பாலச்சந்திரன் 165 வாக்குகள் திரு. கிரகரி கிறிஸ்ரியன் 109 வாக்குகள் திருமதி. இராசமலர் குணசேகரலிங்கம் 67 வாக்குகள் செல்லுபடியற்றவை 13 வாக்குகள் மொத்த வாக்குகள் 901 தேர்தல் தொகுதி சென் ஏ மார்ன் 77 எஸ்ஸன் 91 திருமதி.குருபரநாதன் சுபா~pனி 1448 வாக்குகள் செல…
-
- 8 replies
- 1.4k views
-
-
http://www.yarl.com/files/110614_kirupakaran.mp3
-
- 1 reply
- 1.4k views
-
-
இலங்கையின் தற்காலிக வெளிநாட்டமைச்சராக ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே நியமனம் இலங்கையின் தற்காலிக வெளிநாட்டமைச்சராக ஆளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும், பிரதான கொறடாவுமான அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டிருக்கிறார். வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகம பாகிஸ்தானுக்கான உத்தியோகபூர்வ வியஜமொன்றினை மேற்கொண்டிருப்பதாலும், பிரதி வெளிநாட்டமைச்சர் ஹுசைன் பைலா மத்திய கிழக்கு நாடுகளுக்கான கண்காணிப்பு விஜயமொன்றினை மேற்கொண்டிருப்பதாலும் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தின் பின்னணியிலேயே, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகம நாடு திரும்பும் வரைக்கும் பதில் வெளிநாட்டு அமை…
-
- 2 replies
- 1.4k views
-
-
ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களுக்கு உரிய நான்கு வழிகள் பற்றி மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கருத்து முன்மொழிந்துள்ளார். அதாவது இலங்கையில் வதியும் தமிழர்கள் வரவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும், அல்லது என்ன செய்யவேண்டும் என்பதே அந்த வழிமுறைகளாகும். வழி1. மஹிந்தவை ஆதரித்தல். வழி2. சரத்பொன்சேகாவை ஆதரித்தல் (பொது எதிரணியினரின் வேட்பாளர்). வழி3. சிறுபான்மையினர் ஒரு வேட்பாளரை நிறுத்துதல். வழி4. ஜனாதிபதி தேர்தலினை புறக்கணித்தல். இந்த நான்கில் எதையாவது செய்யவேண்டும் என குறிப்பிட்டுள்ளார் மனோ.
-
- 19 replies
- 1.4k views
-
-
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை ஐ.நா.விலிருந்து இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகள் கண்டித்திருத்திருந்தாலும், நமது நாட்டில் உள்ள இரண்டு கட்சிகள் மிகுந்த மனிதாபிமானத்துடன் கண்டித்து அறிக்கை விடுத்துள்ளது மிகவும் கவனிக்கத்தக்கதாகும். ஒன்று, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, மற்றொன்று, தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான அ.இ.அ.தி.மு.க. FILE இஸ்ரேலின் தென்பகுதியை குறிவைத்து பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்தினர் தொடர்ந்து நடத்திய ராக்கெட் தாக்குதலில் சில இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக கடந்த சனிக்கிழமை முதல் ஹமாஸ் இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் கிட்டத்தட்ட 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெருவாரியானவர்கள் ஹமாஸ் இயக்கத்தினர் என…
-
- 0 replies
- 1.4k views
-
-
09 NOV, 2023 | 12:29 PM (எம்.நியூட்டன்) அரசாங்கம் சைவமக்களை மனம் நோகச்செய்து வருகிறது. கோவில்களையும் காணிகளையும் அபகரித்து வருகிறது. இது அரசாங்கத்துக்கு நல்லதல்ல என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் கவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சைவமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர், அரச அதிகாரிகள் எவ்விதமான அக்கறையும் இல்லாமல் இருப்பது மனவருத்தத்தை தருகிறது. ஜனாதிபதி யாழ்ப்பாண விஜயத்தின்போது நல்லை ஆதீனத்தின் குரு முதல்வரையும் என்னையும் சந்தித்து கலந்துரையாடியபோது, காங்கேசன்துறை தல்செவன ஹொட்டல் பயன்படுத்தப்படுகின்ற ந…
-
- 27 replies
- 1.4k views
- 1 follower
-
-
திரிகோணமலை: இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்கள் அதிபர் தேர்தலில் வாக்களிக்க சுத்தமாக ஆர்வமில்லாமல் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று கூறியுள்ளனர். பொன்சேகாவாக இருந்தாலும் சரி, ராஜபக்சேவாக இருந்தாலும் சரி, யாராலும் நமக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. பின்னர் எதற்காக வாக்களிக்க வேண்டும் என்று இவர்கள் குமுறுகிறார்கள். இதுகுறித்து திரிகோணமலையைச் சேர்ந்த ரமேஷ் என்ற தமிழர் கூறுகையில், எங்களது பிரச்சினைகளைத் தீர்க்கவும், அபிலாஷைகளை நிறைவேற்றவும் ராஜபக்சேவாலும் முடியாது, பொன்சேகாவாலும் முடியாது. அவர்கள் எதுவும் செய்யவும் மாட்டார்கள். தேர்தலுக்காக இப்போது எதை வேண்டுமானாலும் அவர்கள் பேசுவார்கள். எனவே இவர்களுக்கு வாக்…
-
- 12 replies
- 1.4k views
-
-
வெளிப்படுத்தப்படாத சொத்துக்களை... முதலீட்டிற்கு பயன்படுத்த, அனுமதி வழங்கும் நிதி சட்டமூலம் அமுலானது! வெளிப்படுத்தப்படாத சொத்துக்களை முதலீட்டிற்கு பயன்படுத்த அனுமதி வழங்கும் நிதி சட்டமூலம் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் உறுதிப்படுத்தலுடன் இந்த சட்டமூலம் இன்று(வியாழக்கிழமை) முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. வெளிப்படுத்தப்படாத சொத்துக்களை முதலீட்டிற்கு பயன்படுத்த அனுமதி வழங்கும் நிதி சட்டமூலம் திருத்தங்களுடன் கடந்த 7 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. அதற்கு ஆதரவாக 134 வாக்குகளும் எதிராக 44 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1239562
-
- 20 replies
- 1.4k views
- 1 follower
-
-
http://thatstamil.oneindia.in/news/2006/09.../fishermen.html
-
- 1 reply
- 1.4k views
-
-
தனியான முஸ்லிம் மாகாணமொன்று அவசியம் - பசீர் சேகுதாவூத் தனியான முஸ்லிம் மாகாணமொன்று தேவை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். காத்தான்குடியில் நடைபெற்ற அரசியல் சாசனத்திற்கான கருத்துக் கோரும் நிகழ்வில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள் சுயாட்சி அதிகாரங்களை கோரி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கை மீள இணைத்தல் மற்றும் சுயாட்சி அதிகாரங்கள் வழங்குதல் குறித்த கோரிக்கைகளை தமிழர்கள் இன்னமும் கைவிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இதேபோன்று முஸ்லிம்களும் தாயக கொள்கைகளை கைவிட முடியாது எனவும் தனி மாகாணமொன்றின் மூலமே முஸ்லிம்களின் அபிலாஸைகளை பூர்த்தி செய்த…
-
- 16 replies
- 1.4k views
-
-
யாழ். இந்துக் கல்லூரியின் க.பொ.த (சா/த) பரீட்சை முடிவுகள்: 56 பேருக்கு 9A By Shana நேற்று வெளியான 2020 க.பொ.த. சாதாரண தர மாணவர்களின் பெறுபேற்றின் அடிப்படையில் யாழ்.இந்துக் கல்லூரியின் 56 மாணவர்கள் 9A சித்தியும் 21 மாணவர்கள் 8A (ஒரு பாட முடிவு வரவில்லை) சித்தியும் 29 மாணவர்கள் 8 A,B சித்தியும் 10 மாணவர்கள் 8A,C சித்தியும் 13 மாணவர்கள் 7A, 2B சித்தியும் பெற்றுள்ளனர்.கல்லூரியின் அனைத்து மாணவர்களும் சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளதுடன் பரீட்சைக்குத் தோற்றிய 267 மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர். http://www.battinews.com/2021/09/56-9a.html
-
- 16 replies
- 1.4k views
-
-
- Interceptor (March 06, Colombo, Sri Lanka Guardian) Gaddafi: As-Salaam-U-Alaikum Mahinda! As-Salaam-U-Alaikum. I am here Muammar from Tripoli. Rajapakse: Maumar! Ai bowang (Hello), Yarhamuk Allah (may Allah show mercy to you) Ai bowang. How are you? Gaddafi: I need your help urgently Mahinda. There is terrorism in Libya. Americans are playing hell here but can’t say Americans. I say Bin-Laden group. Rajapakse: You must fight terrorism in the way we have defeated the Tamil terrorism in our country. Gaddafi: That is why I have come to you. This is my distress call. Come and help. Tell me what to do. Rajapakse: American’s mu…
-
- 0 replies
- 1.4k views
-
-
சென்னையில் மேலும் ஒருவர் தீக்குளிப்பு, உயிருக்குப் போராடுகிறார் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் 29 ஆகஸ்ட் 2011 சென்னை சென்றார் ராம்ஜெட்மலானி. சாந்தன், முருகன், பேரறிவாளனை விடுதலைச் செய்யக் கோரும் போராட்டங்கள் தீவீரம் பெறும் நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே வன்முறை நிகழ்வுகள் இடம் பெறுகின்றன. மத்திய அரசு அலுவகங்கள் மீது தாக்குதல் நடந்திருக்கிறது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் செங்கொடி என்கிற இளம் பெண் தனக்குத் தானே தீயிட்டு மாண்டு போனார். அது தமிழகம் முழுக்க அதிச்சியலைகளை ஏற்படுத்திய நிலையில், இன்று சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் இனி இம்மாதிரி யாரும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் இன்று இரவு சென்னை சைதாப்பேட்டையில் செல்வம் என்ற நாற்பது வயது நபர் …
-
- 2 replies
- 1.4k views
-
-
தென்னிலங்கையில் ஒரு அறைக்குள் பத்திரிகையாளர்களை அழைத்து வைத்துக் கொண்டு புலிகள் மீண்டும் உருவாகப் போகிறார்கள். தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் வந்துவிட்டது. என்றெல்லாம் தீவிரவாதிகள் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார். விடுதலைப் புலிகளை நாங்கள் மீள உருவாக்கப் போகிறோம். தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்து விட்டோம். என தென்னிலங்கையில் ஒரு அறைக்குள் இருந்து கொண்டு பேசிவரும் தீவிரவாதிகளே வடக்கில் தேசிய பாதுகாப்பினால் இடம்பெயர்ந்து 25 வருடங்கள் அவல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை வந்து ஒரு தடவை பாருங்கள். நான் அந்த மக்களை சந்தித்தேன் அந்த மக்களுடைய வாழ்க்கை முறையை பார்த்தேன். அவர்கள் வாழ்ந்த…
-
- 7 replies
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து எமக்கு எந்த அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை. எமது முடிவின் படியே மடு மாதா சிலையை நாம் அகற்றியிருந்தோம் என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை தெரிவித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.4k views
-