ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142886 topics in this forum
-
27 Nov, 2025 | 05:03 PM நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள 75 பிரதான வீதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் விமல் கந்தம்பி தெரிவித்தார். வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் விமல் கந்தம்பி இன்று வியாழக்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவிக்கையில், சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகவே 75 பிரதான வீதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. வீதிகளை சீரமைப்பதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. அதற்கிணங்க அதற்கான சீரமைப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின…
-
- 1 reply
- 103 views
- 1 follower
-
-
தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள் டக்ளஸ் சபையில் கடும் வாய்ச்சண்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்குமிடையே கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டதனால் சபை சிறிது நேரம் அல்லோலகல்லோலப்பட்டது. பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்டநீடிப்பு விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவரது பேச்சில் குறுக்கீடு செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஸ்ரீகாந்தாவின் கருத்துகளுக்கு எதிரான கருத்துக்களை கூறிக்கொண்டிருந்தார். ஸ்ரீகாந்தா எம்.பி.டக்ளஸின் கருத்துகளை சாட்டை செய்யாமல் தொடர்ந்தும் பேசிக்கொண்டிருந்தார். ஆனால், ஒருகட்டத்தில் …
-
- 9 replies
- 2.7k views
-
-
யாழ்பாணம், ஆனைப்பந்தி- நாவலர் வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த முதியவர் ஒருவர் திடீரென வீதியில் சரிந்து வீழ்ந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று மாலை 6.25 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் ஓட்டுமடத்தைச் சேர்ந்த தம்பு வாமதேவன் வயது-65 என்பவரே உயிரிழந்தவராவார். உறவினர் வீடு ஒன்றுக்குச் சென்று திரும்பிய நிலையிலேயே முதியவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. சம்பவத்தையடுத்து 1990 அம்புலன்ஸ் வண்டிக்கு தகவல் வழங்கப்பட்டது. உடனடியாக அங்கு அம்புலன்ஸ் வண்டி வந்த போதும் முதியவர் உயிரிழந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. https://www.ibctamil.com/srilanka/80/141965?ref=home-imp-flag
-
- 1 reply
- 508 views
-
-
கிளிநொச்சியில் பாலம் புனரமைப்பு பணியில் இந்திய இராணுவ பொறியியல் பிரிவினர் Published By: Vishnu 08 Dec, 2025 | 07:46 PM டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் கிளிநொச்சி மாவட்டம், கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் ஏ35 பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியில் புளியம்பொக்கனை பாலம் சேதமடைந்திருந்தது. இதன் காரணமாக குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து முற்றாக பாதிப்படைந்து காணப்பட்டது. கடமைகளுக்குச் செல்லும் அரச உத்தியோகத்தர்கள் தொடக்கம் பொது மக்கள் வரை இந்த பாதை ஊடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டதனால் கடும் நெருக்கடிக்குள் உள்ளாகினர். எனவே இதனை கருத்தில் கொண்டு உடனடியாக பாலத்தை புனரமைத்து போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வரும் வகையில் இந்திய இராணுவத்தின் பொறியியல் பிரிவுக்கு பால…
-
- 0 replies
- 172 views
- 1 follower
-
-
இரு வார கெடுவுக்குள் நடவடிக்கை- இல்லையேல் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவர்: இந்திய அரசுக்கு தமிழக அனைத்து கட்சிக்கூட்டம் எச்சரிக்கை [செவ்வாய்க்கிழமை, 14 ஒக்ரோபர் 2008, 07:48 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க இரு வார காலத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்றத்தின் 40 உறுப்பினர்களும் பதவி விலகுவர் என்று தமிழ்நாடு அரசாங்கம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பாடு செய்திருந்த தமிழக அனைத்து கட்சிக்கூட்டம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தீர்மானங்கள் விவரம்: தீர்மானம்: 1 இலங்கையில் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிற இனப் படுகொலைக் கொடுமைக்கு உள்ளாகி ஆயிரக்…
-
- 28 replies
- 3.1k views
-
-
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சையின் பின்னர் குணமடைந்த ஒருவருக்கு, மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஜா-எல பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே, இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 67 வயதுடைய குறித்த நபருக்கு, கடந்த மார்ச் 17 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, கொழும்பு ஐ.டீ.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சையில் குணமடைந்து கடந்த மாதம் 17 ஆம் திகதி அவர் வீடு திரும்பியுள்ளார். வீட்டுக்கு வந்து 14 தினங்கள் தனிமைப்படுத்தலில் இருந்த அவர், கடந்த 30 திகதி நெஞ்சு வலி காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட திடீர…
-
- 1 reply
- 441 views
-
-
கோத்தபாய – பசில் இன்று இந்தியா பயணமாகின்றனர் - புதுடெல்லியில் அவசர சந்திப்புகள் ஏற்பாடு - இந்திய வெளியுறவு அமைச்சருக்கு இலங்கை அழைப்பு: ஜனாதிபதியின் ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் இன்று இந்தியா பயணமாகின்றனர். இந்திய பிரதமர் மன்மோகன் சிங், மற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் நேற்று தொலைபேசியில் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றதுடன் இதன் போது, இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன. இந்த நிலையில் இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் பிரச்சினைகள் குறித்து, நேரில் பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில், பசில், மற்றும் கோத்தபாய ஆகியோர் புதுடெல்லி செல்கின…
-
- 6 replies
- 1.9k views
-
-
பரிதி மீதான படுகொலைத் தாக்குதல் புலத்துத் தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டம் மீதான தாக்குதல்! பிரதமர் வி.உருத்திரகுமாரன் By naatham On 11 Nov, 2012 At 07:25 PM | Categorized As முதன்மைச்செய்திகள் | With 0 Comments தமிழீழத் தாயகத்தில் அரசியல்வெளி மறுக்கப்பட்டதொரு சூழலில், மேற்குலகின் சனநாயகச்சூழல் ஈழத் தமிழர் தேசத்துக்கு வழங்கும் வாய்ப்புக்களைச் சாதகமாக்கி நமது தேசத்தின் விடுதலைக்காக புலம்பெயர் தமிழ் மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டச் செயற்பாடுகளை அச்சுறுத்தி அடக்கும் நோக்கமே இக்கொலைக்கான காரணமாக இருந்திருக்கும் என தாம் கருதுவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாள…
-
- 3 replies
- 517 views
-
-
மன்னார் திருக்கேதீச்சரத்து சிவன் ஆலயத்துக்குச் சொந்தமான காணியில் சொரூபம் நிறுவுவதற்கு எதிர்ப் புத் தெரிவித்து நாளை புதன்கிழமை அடையாள ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்துக்குச் சொந்தமான காணியில் அத்துமீறி சொரூபம் நிறுவும் முயற்சிக்கு இந்துக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன் ஆலய நிர்வாகம் உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. நாளைய தினம் சொரூபம் நிறுவப்படவுள்ள இடத்தில் இந்துக்கள் கூடி தமது அகிம்சை வழி எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளனர். http://www.valampurii.lk/valampurii/content.php?id=10593&ctype=news
-
- 7 replies
- 725 views
-
-
கடந்த காலங்களில் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட நிலை இலங்கைக்கும் நேரலாம் - ஐ.தே.க எச்சரிக்கை: கடந்த காலங்களில் இந்தியத் தலையீட்டினால் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட நிலைமை எதிர்காலத்தில் இலங்கைக்கும் நேரிடக் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. கிழக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட கிளர்ச்சி இந்திய தலையீட்டின் காரணமாக பங்களதேஷ் என்ற தனிநாடு உருவாக வழியமைத்ததாக ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. கிழக்கு பாகிஸ்தான் சிவிலியன்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அடக்குமுறைக்கு எதிராக இந்தியா அழுத்தம் கொடுத்தமையினால் பங்களாதேஷ் உருவானதென பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இந்த விடயங்கள் குறித்து அரசாங்கம் விழிப்புடன் செயற்பட வேண்…
-
- 0 replies
- 1.2k views
-
-
பான் கீ மூன் பதவி விலக கோரி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்- நியுசிலாந்து தமிழர் செயலணி Published on November 16, 2012-10:53 am · No Comments ஐரோப்பா, ஒஸ்ரேலியா, நியுசிலாந்து, கனடா, அமெரிக்கா உட்பட ஈழத்தமிழர்கள் வாழும் நாடுகளில் ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் பான் கீ மூன் மற்றும் அவரின் பிரதம ஆலோசகர் விஜய் நம்பியார் ஆகியோர் பதவி விலக வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என நியுசிலாந்து தமிழர் செயலணி இணைப்பாளர் ஆ.தேவராஜன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுநலவாய அமைப்பின் உச்சிமகாநாட்டை கொழும்பில் நடத்தக்கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார். அண்மையில் நடந்த உலக தமிழர் மகாநா…
-
- 5 replies
- 676 views
-
-
இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் போகலே தனது சான்றுகளை இன்றையதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்விடம் கையளித்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக தனது கடைமைகளை பொறுப்பேற்றார். கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை தொலைபேசியில் தொடர்புகொண்ட உயர்ஸ்தானிகர் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு தான் தயாராக உள்ளதாக தெரிவித்தார். இரண்டு நாடுகளும் பல காலங்களாக இணைந்து செயற்பட்ட அனைத்து விடயங்கள் தொடர்பிலான நடவடிக்கைகளுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு தொடர்ந்து இருக்கும் என இரா. சம்பந்தன் உயர்ஸ்தானிகருக்கு உறுதியளித்தார். https://www.ibctamil.com/srilanka/80/143241
-
- 5 replies
- 853 views
-
-
கடல் சீற்றத்திற்கு மத்தியிலும் சட்டவிரோத மீன்பிடியில் இந்திய மீனவர்கள்! Jan 9, 2026 - 10:37 AM தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக கடலுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த சூழலில் பல இழுவைப் படகுகளில் இலங்கையின் வடக்கு கடற்பகுதிக்குள் அத்துமீறி பிரவேசித்துள்ள இந்திய மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடியில் நடவடிக்கையில் ஈடுபடுகின்றமையை அவதானிக்க முடிந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். முல்லைத்தீவு உள்ளிட்ட பல பகுதிகளில் அவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது. கடல் கொந்தளிப்பு காரணமாக ஏற்கனவே வாழ்வாதாரத்தை வட பகுதி மீனவர்கள் இழந்துள்ள நிலையில், இந்திய மீனவர்கள் இந்த நடவடிக்கை மேல…
-
- 0 replies
- 132 views
- 1 follower
-
-
'ராஜீவ் காந்தியின் கொலை என்பது விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதல் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதற்குhப் பரிகாரமாக 35 இலட்சம் இலங்கைத் தமிழர்களைப் பலிகொடுத்துத்தான் ஆக வேண்டுமா என்பதை காங்கிரஸ் கட்சி மீள் பரிசீலிக்க வேண்டும். அத்துடன் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சீமான், அமீர் இருவரையும் அரசு விடுவிக்க வேண்டு என்றும் வலியுறுத்தியுள்ளார் நடிகர் சரத்குமார். மேலும் : கருணாநிதி - பிரணாய் முகர்ஜீ சந்திப்பின் போது தெரிவிக்கபட்ட கருத்தின்படி, நோர்வேத் தூதுக் குழு மீண்டும் பேச்சைத் தொடங்குவதற்கு முன்பு இலங்கை அரசு உடனடியாக இராணுவ நடவடிக்கையை நிறுத்த வேண்டும். நோர்வேத் தூதுக் குழுவில் தமிழகத் தலைவர்களும் இடம் பெற வேண்டும் என்றார் சரத்குமார். …
-
- 0 replies
- 1.5k views
-
-
[size=4]கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு அறிக்கை சிபாரிசுகளின் பிரகாரம் வடக்குஇ கிழக்கில் இருந்து இராணுவ பிரசன்னத்தை குறைக்க சொல்கிறது. ஆதலால் இராணுவத்தில் நமது பெண்களை இணைப்பதை நிறுத்தி தமிழர்களை பொலிஸ் திணைக்களத்தில் இணையுங்கள். இதன்மூலம்தான் உண்மையான தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். பொலிஸ் என்பது ஒரு ஆயுத படையல்ல. அது ஒரு சிவில் திணைக்களம் என்பதால், அதை கடந்த காலங்களைப்போல் பாதுகாப்பு அமைச்சிலிருந்து விடுவித்துஇ உள்துறை அமைச்சில் இணைக்க வேண்டும் என்றும் கற்றுக்கொண்ட ஆணைக்குழு சொல்கின்றது அந்த சிபாரிசுகளை முதலில் அமுல்படுத்தவும் என்றும் அவர் சொன்னார். கொழும்பில் இன்றுஇ 'அதிகாரத்தை பகிர்ந்து நாட்…
-
- 1 reply
- 275 views
-
-
'ஒட்டுமொத்த ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும் கொச்சைப்படுத்தக்கூடாது' -சொர்ணகுமார் சொரூபன் ஒரு சில ஆசிரியர்கள் விடும் தவறால், ஒட்டுமொத்த ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும் கொச்சைப்படுத்துவதற்கு நமது சமூகம் இடமளிக்கக்கூடாது என மேல் நீதிமன்ற முன்னாள் நீதவான் இ.த.விக்னராஜா தெரிவித்தார். சர்வதேச சித்திரவதைகள் எதிர்ப்பு தினத்தை ஒட்டி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தால் ஏற்பாடு செய்யபட்ட நிகழ்வு, இன்று வியாழக்கிழமை (30) யாழில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்;றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், …
-
- 0 replies
- 325 views
-
-
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 2,500 ஆண்டுகளுக்கும் மேலான கலாசார மற்றும் வரலாற்றுத் தொடர்புகள் உள்ளன - ஆளுநர் நா.வேதநாயகன் 19 Jan, 2026 | 01:08 PM இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களை, பெரும்பாலான மேற்குலக நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களின் செலவில் நான்கில் ஒரு பங்கு செலவிலேயே வழங்குகின்றன. இது உயர்தரக் கல்வியை எமது சமூகம் இலகுவாகப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக மாற்றுகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் அனுசரணையில், சிகரம் அக்கடமி மற்றும் சேப் (SAPE) நிறுவனம் இணைந்து நடாத்திய 'இந்தியாவில் கல்வி' (Study in India) கல்வி வழிகாட்டல் கண்காட்சி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண…
-
- 0 replies
- 95 views
- 1 follower
-
-
இராணுவத்தை வெளியேற்று: யாழில் கையெழுத்து போராட்டம் யுத்த இழப்பீடுகளை வழங்குதல், இராணுவத்தை வெளியேற்றுதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னிலை சோசலிச கட்சியினர் யாழில் கையெழுத்துப் பெறும் நடவடிக்கையினை மேற்கொண்டனர். யாழ். பஸ் நிலையத்தின் முன்பாக இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, இராணுவ முகாம்களை மட்டுப்படுத்து, மக்களின் குடியிருப்பு பகுதிகளில் இருந்து இராணுவத்தினை வெளியேற்று, அபகரித்த காணிகளை திருப்பிக்கொடு, போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பொது மக்களிடம் கையெழுத்துப் பெற்றனர். பெரும் திரளான மக்கள் இதில் தமது கையெழுத்துக்…
-
- 1 reply
- 263 views
-
-
கிளிநொச்சி பௌத்தர்களின் வரலாற்றுப் பொக்கிஷம். அங்குள்ள குளங்கள் எல்லாம் சிங்கள மன்னர்களால் கட்டப்பட்டவை. கிளிநொச்சி பௌத்தர்களின் பூர்வீக இடமென உரிமை கோரினார் தொல்லியல் சக்கரவர்த்தியும் ஹெல உறுமய எம்.பி.யுமான எல்லாவல மேதானந்த தேரர். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; பரதர் என்ற இனம் ஆட்சி புரிந்ததாலேயே இந்தியா பாரதம் என்றழைக்கப்படுகின்றது. எனவே, சிங்களவர்கள் ஆளும் நாட்டை சிங்கள நாடு என்று சொல்லாமல் வேறு எப்படிக் கூறுவது? இலங்கைக்கு சிங்களவர்களுக்கு முன் தமிழர்கள் வந்ததாகக் கூறப்படும் கதை விகாரமானது. அதற்கு அடி முடி இல்லை. இலங்கை சிங்களவர்களின் நாடு. …
-
- 3 replies
- 1.5k views
-
-
[size=3][size=4]புலம்பெயர் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் தொடர்ந்தும் இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருவதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.இலங்கை வாழ் தமிழ் மக்களை புலம்பெயர் மக்கள் நேசித்தால் இலங்கைக்கு வந்து அவர்களுக்கு உதவிகளை செய்ய வேண்டும்.[/size][/size] [size=3][size=4]எனினும் அவர்கள் அவ்வாறு செய்வதில்லை என குறிப்பிட்டதுடன் விமானப்படையினர் முல்லைத்தீவு வான் பரப்பில் விமானங்களைச் செலுத்துவதில் எவ்வித பிழையும் கிடையாது.[/size][/size] [size=3][size=4]ஆனால் சிலர் இதனை பிழையாகக் கருதுகின்றனர்.முல்லைத்தீவு மட்டுமன்றி நாட்டின் எந்தவொரு வான் பரப்பிலும் பறந்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது பாதுகாப்புப் படையினரின் கடமையாகும் என…
-
- 1 reply
- 340 views
-
-
பிரித்தானிய தமிழர் அமைப்பு ஒன்று நடத்த உள்ள கலாசார நிகழச்சியை தடைசெய்யுமாறு இலங்கை கோரிக்கை – சிங்கள நாளிதழ்: http://www.globaltamilnews.net/tamil_news....=2128&cat=1 பிரித்தானிய தமிழர் அமைப்பு ஒன்று எதிர்வரும் 26 ஆம் திகதி நடத்த உள்ள கலாசார நிகழச்சியை தடைசெய்யுமாறு இலங்கை அரசாங்கம் நேற்று (நவ 12) பிரித்தானிய அதிகாரிகளிடம் கோரிகை விடுத்துள்ளதாக சிங்கள நாளிதழ் தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாள் விழாவினை கொண்டாடும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. 2004 ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகள் பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதால், இந்தக் கலாசார நிகழ்ச்சியை நடத்துவது, …
-
- 0 replies
- 1.1k views
-
-
ஒட்டுமொத்தக் குடும்பத்தை சிறையில் அடைத்தாலும் மக்களுக்கான எனது அரசியல் பயணத்தை எவராலும் தடுக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார். நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டு, ஒரு சில நிமிடங்களில் தனது பேஸ்புக்கில் இட்டுள்ள பதிவொன்றிலேயே மஹிந்த ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தன் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி தனது பிள்ளைகளை சிறை வைப்பதன் ஊடாக எனது அரசியல் பயணத்தை தடுத்து நிறுத்தி விடலாம் என இவர்கள் நினைத்தால் அது வெறும் கானல் நீராகவே இருக்கும் என்றும் மஹிந்த தனது முகப்புத்தக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இன்றைய தினம் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு…
-
- 1 reply
- 271 views
-
-
இலங்கை தமிழர்கள், முஸ்லிம்கள் இல்லாத ஜனாதிபதி செயலணி: தொல்பொருள் ஆய்வில் அனைவரும் சிங்கள பௌர்த்தர்கள் இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்கான ஜனாதிபதி செயலணியொன்று நிறுவப்பட்டுள்ள பின்னணியில், அது தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு மாகாணமானது, தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களம் என பல சமூகங்கள் வாழும் ஒரு பகுதியாக காணப்படுகின்ற நிலையில், அந்த மாகாணத்தில் தமிழர்கள் மற்றும் சிங்களவர்களுக்கு சொந்தமான பல தொல்பொருள் சின்னங்கள் காணப்படுகின்றன. எனினும், கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் சின்னங்களை அடையாளம் கண்டு அவற்றை முகாமைத்துவம் செய்யும் வகையில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணிய…
-
- 1 reply
- 599 views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்சினை தீர்ப்பதற்கான மாற்று வழிகள் என்னென்ன என்பது குறித்து முதலமைச்சர் கலைஞரிடம் நாளை மறுநாள் அறிக்கை தாக்கல் செய்யவிருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 849 views
-
-
கேந்திர முக்கியத்துவம் பெற்று வரும் பரந்தன். - வன்னியன், ஞாயிறு, 23 நவம்பர் 2008, 06:21 மணி தமிழீழம் [] படைத்தரப்பின் மிகப்பெரும் இலக்காகக் கொள்ளப்பட்டிருந்த பூநகரி படைகளிடம் வீழ்ச்சி கண்டதோடு யாழ்ப்பாணத்திற்கான தரைவழித் தொடர்பு தென்பகுதியுடன் இணைக்கப்பட்டு விட்டது. இவ்வெற்றியினை அடுத்து சிங்கள தேசத்தில் மிகப்பெருமெடுப்பிலான மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள் நடந்தேறிவிட்ட நிலையில் வட போர்முனையில் பூநகரியிலிருந்து பரந்தன் நோக்கி படைகள் நகர்ந்த போது உக்கிரச் சமர் வெடித்தது. இச்சமரினால்; ஏற்பட்ட பாரிய இழப்புக்கள் செய்தித் தணிக்கைகளின் மூலம் மறைக்கப்பட்டாலும் அதனுடைய தாக்கம் தென்னிலங்கையில் மெல்ல மெல்ல உணரப்படத் தொடங்கி விட்டது. பொதுவாக மனித சமூகங்களுக்கிடையே ஏற்படுகின்ற…
-
- 11 replies
- 2.3k views
-