ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143627 topics in this forum
-
நாட்டை இரண்டாகப் பிளவுபடுத்த சர்வதேசம் முயற்சி - தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் நாட்டை இரண்டாக பிளவுப்படுத்தும் சர்வதேச முயற்சிகள் காணப்படுவதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவிக்கின்றது. போர் நிறுத்த உடன்படிக்கையை கடைபிடித்தல், அதி உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல், ஏ9 வீதியை திறத்தல் போன்ற சர்வதேச அழுத்தங்கள் மூலம் இது தெளிவாக தெரிவதாக அதன் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். இந்தியா ஊடாக இதனை மேற்கொள்ள சர்வதேச சமூகம் முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் குணதாச அமரசேகர இந்த கருத்துக்களை கூறினார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 2 replies
- 1.3k views
-
-
விடுதலைப் புலிகள் நாட்டின் எந்தவொரு பகுதியையும் தாக்குதல் உள்ளது - எதிர்க்கட்சித் தலைவர் விடுதலை புலிகளிற்கு நாட்டின் எந்தவொரு பகுதியையும் குறிவைக்க கூடிய ஆற்றல் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் அண்மையில் கட்டுநாயக்க விமானப்படைத்தளம் மீது கொண்ட வான் தாக்குதலில் இருந்து இது புலப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கலந்துரையாடுவதற்கு பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்ற கோரிக்கை பிரதமர் நிராகரித்துள்ளதாக ரணில் சுட்டிக் காட்டினார். மிக் விமானங்கள் கிபிர் விமானங்களை விடுதலைப்புலிகள் அழிக்க முடியாது எனக் கருதி சம்பவத்தை கருத்திற்கொள்ளாது மக்களை ஏமாற்றும் தருண…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஊடகவியலாளரின் கேள்வியால் ஆத்திரமடைந்த மகிந்த "ராஜபக்சா குடும்பத்தினருக்கு எதிராக பல ஊழல், மோசடிகள் குறித்து குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன" இதுகுறித்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என லக்பிம நியூஸ் பத்திரிகையின் ஆசிரியர் ராஜபால் அபேநாயக்க ஜனாதிபதியிடம் கேள்வியெழுப்பியதாகவும், இதனால் கோபமடைந்த மகிந்த குழப்பமடைந்து சத்தமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சனாதிபதியினால் நேற்று ஊடக நிறுவனங்களின் பிரதானிகள் கண்டி ஜனாதிபதி மாளிகைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதன்போதே கேள்விகள் எழுப்பப்படும் சந்தர்ப்பத்திலேயே அபேநாயக்க ஜனாதிபதியிடம் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளார். கோபமடைந்த ஜனாதிபதியை அமைதிபடுத்த அவரது ஆங்கில ஊடகப் பணிப்பாளர் லூசான் ராஜகருணாநாயக்க பலத்த முயற்…
-
- 3 replies
- 1.3k views
-
-
“கவிதாசரண்” என்கிற இலக்கியப் பத்திரிகையில் தன் விலை மதிப்பற்ற உயிரைத் தந்து உலகை விழிக்க வைத்த தம்பி முத்துக்குமாரின் கவிதைகள் இடம்பெற்றிருந்தது. கவிதைகள் ஒவ்வொன்றும் பொட்டில் அடித்த மாதிரி கனல் கக்கும் வரிகளாய்…… இதயத்தை தொட்டது……இல்லையில்லை சுட்டது. எனக்கு மின்னஞசலில் வந்தது. அதிலிருந்து ஒரு கவிதையை இங்கே பதிந்திருக்கிறேன். ஒரு வீடு இரு திருடர்கள் அது அவர்களுடைய தொழில். கொள்ளையடிப்பதும் கொலை செய்வதும். நாய்களுக்கு சிறுநீரால் ஆன எல்லைக்கோடு போல அவர்களுக்கு தொழில் தர்மம். ஒருவர் தொழிலில் மற்றவர் குறுக்கிட்டால் குறுக்கிடும் தொழில் தர்மம். ஒரு வீட்டின் புறவாசல் வழியே ஒருவனும், கூரை வழியே ஒருவனும் தொழி…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழீழ தாயகத்தில் எம் உறவுகள் படுகொலை செய்யப்படுவதை பிரித்தானிய இளையோருக்கு வெளிகாட்டும் வகையில் Dartford பெண்கள் பாடசாலையில் கல்வி கற்கும் தமிழ் மாணவிகள் பாடசாலை அனுமதியுடன் மேல் வகுப்பு மாணவருக்கு தமிழீழ வரலாற்றையும் இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலையையும் 20 நிமிட ஒளித்தொகுப்பு மூலம் காண்பித்து தன்னுடைய பரப்புரையை முன்னெடுத்துள்ளார்கள். தமிழீழ வரலாற்றுடன் தமிழ் மக்கள் இன்று படும் இன்னல்களையும் பிரித்தானியாவில் தமிழ் மக்களால் முன்னெடுக்கும் உரிமை போராட்டங்களையும் துண்டுப்பிரசுரங்கள் ஊடாக மாணவர்களுக்கு தெரியப்படுத்தினார்கள். சில வேற்றின மாணவர்கள் இந்த துண்டுபிரசுரங்களை தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு கொடுப்பதற்காக எடுத்து சென்றுள்ளனர். முதன்முறையாக தமிழ் மக்கள் மீதான …
-
- 4 replies
- 1.3k views
-
-
ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் அமெரிக்க பிரேரணைக்கு இந்தியா ஆதரவளித்ததால் இந்தியாவை பழிதீர்க்கும் செயற்பாடுகளை மகிந்த அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் அடுத்த கட்டமாக இந்திய எண்ணெய் நிறுவனத்துடன் (IOC) செய்துகொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்துச் செய்வதற்குத் தேவையான ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றன. இந்தியாவைப் பழிதீர்க்கும் நோக்கில் இந்தியாவிற்கிடையிலான வர்த்தக உறவுகளில் இடைவெளியை அதிகரித்துக் கொள்வதற்கு மகிந்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கமையேவே இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சிறிய ரக மோட்டார் வாகனங்கள், முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரியை…
-
- 5 replies
- 1.3k views
-
-
ஒஸ்லோ ‘பிரகடனத்தை’ புலிகள் ஏற்றார்களா? இல்லையா? எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டடைப்பு, தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி ஆகிய அமைப்புக்களிடையே எழுந்த வாதம் ஒன்று நம் கவனத்தை ஈர்த்தது. சிறிலங்கா அரசாலும் விடுதலைப் புலிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒஸ்லோ ‘பிரகடனத்தை’ அடிப்படையாக வைத்தே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு முன் வைக்கும் தீர்வுத் திட்டம் அமையும் எனக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் தெரிவித்திருந்தார். பொங்குதமிழ் இணையத்திற்காக எழுதியவர் தாமரை காருண்யன் ஒஸ்லோ ‘பிரகடனம்’ புலிகளால் எற்றுக் கொள்ளப்படவில்லை என தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி தனது எதிர் வாதத்தை முன்வ…
-
- 1 reply
- 1.3k views
-
-
தற்போதுள்ள சூழலில் பொலிசாரைப் பகைத்துக் கொள்ளும் விதமான நடவடிக்கை எதிலும் ஈடுபட வேண்டாமென கோத்தபாயவிற்கு மகிந்த றாஜபக்ச அறிவுரை வழங்கியுள்ளதாக அலரி மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரு தினங்களுக்கு முன்னர் 200இற்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை இடமாற்றம் செய்ய கோத்தபாய றாஜபக்ச நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து குறித்த பொலிசார் மகிந்தவிற்கு கடிதம் எழுதியிருந்ததாகவும் இதனையடுத்தே மகிந்த இந்த அறிவுரையை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து குறித்த இடமாற்றங்களை இரத்துச் செய்யும் படி பொலிஸ் மா அதிபருக்கு கோத்தபாய றாஜக்ச உத்தரவிட்டுள்ளதாகவும் அறிய வருகிறது. Source: http://www.eelamweb.com/
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாமை குறித்து மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் விசனம் by : Dhackshala தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாமை தமிழர்களை புறக்கணிக்கும் நடவடிக்கையாகும் என இலங்கை மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்தோடு, வரலாற்று ரீதியாக சிங்களம் மாத்திரம் போதும் என்ற கொள்கை எமது நாட்டை எவ்வாறு அழித்திருந்தது என்பதை கடந்த காலத்தில் உணர்ந்திருந்தும் அந்த தவறை மீண்டும் செய்து விடக்கூடாது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் பாடப்படுவதை எதிர்த்து இன்று (செவ்வாய்க்கிழமை) பொரளை சுற்றுவட்டத்தில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தேசிய கீதத்தை இசைக்கும் வகையில் இலங்கை ம…
-
- 8 replies
- 1.3k views
-
-
மட்டக்களப்பில் கடத்தப்பட்டவர் சடலமாக மீட்பு http://www.pathivu.com மக்கள் வழங்கிய தகவலையடுத்து இன்று காலை 9 மணியளவில் களுவங்காணி கடற்கரைப்பகுதியில் பகுதியாக புதைந்த நிலையில் சடலம் ஒன்றை சிறீலங்கா காவல்துறையினர் மீட்டுள்ளனர். கொல்லப்பட்டவர் 29 அகவையுடைய கலைக்குட்டி சந்திரசேகரம் எனவும் இவர் கடந்த 9ம் திகதி களுவங்கேணி கோவிலுக்கு சென்ற போது காணாமல் போனதாக அறியமுடிகிறது.
-
- 5 replies
- 1.3k views
-
-
இயக்குனர் நடிகர் சீமான் அவர்கள் ஈழமுரசு ஆண்டுவிழாவில் நிகழ்த்திய உரை ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 1 reply
- 1.3k views
-
-
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் தலைமையில் அனைத்து கட்சிகளும் திரண்டு நாளை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடத்தவுள்ள நிலையில், அக்கட்சிகளால் அழைக்கப்படாத திமுக 6ம் தேதி மாலை பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் முதல்வர் கருணாநிதி பேசுகிறார். தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்தி வரும் அராஜகத் தாக்குதல்களைக் கண்டித்தும், இலங்கை அரசின் போக்கைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் நாளை மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. இந்த போராட்டத்திற்கு அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. அத்தோடு பங்கேற்கவும் உள்ளன. ஆளுங்கட்சியான திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகள் மட்டும் இதி…
-
- 3 replies
- 1.3k views
-
-
[size=4] இந்திய சென்னையில் நடைபெறும் டெசோ மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகரின் வாசாஸ்தலத்திற்கு முன்னால் தேசிய இயக்கங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதன்போது தி.மு.க தலைவர் மு.கருணாநிதி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியேரின் உருவ பொம்மைகளும் எரிக்கப்பட்டன. (படங்கள்: குஸான் பத்திராஜ) http://www.tamilmirr...2-09-43-00.html[/size]
-
- 22 replies
- 1.3k views
- 1 follower
-
-
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களான மாட்டுவண்டிச் சவாரி மற்றும் கிளித்தட்டு ஆகிய போட்டிகளை அமைச்சர் அவர்கள் சம்பிரதாயப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். மாட்டுவண்டிச் சவாரிப் போட்டிகள் பண்டத்தரிப்பு விளான் பகுதியிலுள்ள சவாரித்திடலில் நடைபெற்றன. http://newjaffna.com
-
- 2 replies
- 1.3k views
-
-
[size=4]ஈழப் பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து விவாதிக்க இந்திய மாதர் தேசிய சம்மேளன மாநாடு[/size] [size=4]இலங்கைப் போரில் கணவனை இழந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி விவாதிக்கும் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் அகில இந்திய மாநாடு சென்னையில் நாளை துவங்குகிறது.[/size] [size=4]இது குறித்து இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஆனி ராஜா சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,[/size] [size=4]பெண்களுக்கு எதிரான கொடுமைகள், உரிமைகள் பறிப்பு, பாலியல் குற்றங்களை எதிர்த்து இந்திய மாதர் தேசிய சம்மேளனம் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.[/size] [size=4]அதன் ஒரு பகுதியாக இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 19வது அகில இந்திய ம…
-
- 1 reply
- 1.3k views
-
-
வணங்காமண் கப்பல் மூலம் புலிகளுக்கு ஆயுதங்களும் கொண்டு வரப்படலாம் என்று சிறிலங்கா கூறுகிறது - லண்டன் கார்டியன் Sri Lanka says British aid destined for Tamil civilians could be cover for weaponsCelebrities and politicians gather in London to publicise humanitarian voyage Sam Jones guardian.co.uk, Wednesday 1 April 2009 10.33 BST Article history Sri Lankan Tamil civilians arrive at a government-controlled area after fleeing territory controlled by the Tamil Tigers in northeast Sri Lanka Photograph: Str/Sri Lanka/Reuters Campaigners who have collected 400 tonnes of food and medical aid for the 150,000 Tamil civilians trapped by the fighting between the Sri Lank…
-
- 2 replies
- 1.3k views
-
-
10 ஆயிரம் தொண்டர் படையினரை உருவாக்கும் முயற்சியில் சிறீலங்காப் படையினர் சிறீலங்காப் படைகளில் 10 தொண்டர் படையினரை இணைக்கும் முயற்சியில் சிறீலங்காப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்கான நேர்முகம் பரீட்சைகள் நேற்று வியாழக்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளது. தொண்டர் படைக்கான ஆட்சேர்ப்புக்கள் அனைத்து படை முகாம்களில் பிரதேச செயலாளர் அலுவலகத்திலும் நேர்முகப் பரீட்சைகள் மூலம் இணைத்துக் கொள்ளப்படும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. http://www.pathivu.com/
-
- 6 replies
- 1.3k views
-
-
SLMC VS TMVP - கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக முஸ்லிம் ஒருரே - SLMC அதிக விருப்பு வாக்குகளை பெறுபவரே -முதலமைச்சர் - TMVP நடைபெறவுள்ள கிழக்கு மாகாண தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக முஸ்லிம் ஒருரே நிறுத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. கடந்த முறை தமிழர் ஒருவர் கிழக்கு மாகாண முதலமைச்சராக பதவி வகித்ததால், இம்முறை முஸ்லிம் ஒருவர் அந்த பதவிக்கு தெரிவு செய்யப்பட வேண்டும் என காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், தேர்தலில் அதிக விருப்பு வாக்குகளை பெறுபவரே முதலமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் நடைபெற்…
-
- 2 replies
- 1.3k views
-
-
வடக்குக் கிழக்கில் உள்ள பிரதான வைத்தியசாலைகளுக்கு சயனைட் விஷத்தை முறிக்கும் மருந்துகளை அனுப்பி வைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. ஹோனானிகல இராணுவ முகாமிற்கு வழங்கப்பட்ட உணவில் சயனைட் கலந்திருந்தது என அறியப்பட்ட தகவலை அடுத்து சுகாதார திணைக்களம் இந்த நடவடிககையை எடுத்துள்ளது. படையினருக்கு வழங்கப்படும் உணவை இனிவரும் காலங்களில் நன்கு பரீட்சித்த பின்னர் வழங்க பாதுகாப்பு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். உணவுபொருட்களை கொள்வனவு செய்யும் போது அவற்றை பெற்றுக்கொள்ளும் நபர்கள் குறித்து ஆவதானத்துடன் செயற்படுவது, உணவு பொருள் கொள்வனவு செய்வது முதல் அதனை முகாமுக்கு வழங்கும் வரையான முழுப் பொறுப்பையும் உணவு விநியோகஸ்தருக்கு வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 1.3k views
-
-
வன்னியில் இடம்பெற்ற போரில் கைது செய்யப்பட்ட தமிழ் மக்களை சிறீலங்கா இராணுவம் கைகளை கட்டிய பின்னர் கொண்டு செல்லும் காட்சிகளையும், பல இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சிகளையும் உலகத் தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது. சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இந்த போர்க்குற்றங்கள் தொடர்பான புகைப்படங்களை நேற்று (19) சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் பிரித்தானியா வெளிவிவகார அமைச்சரை சந்தித்த போது தமிழ் மக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை போல பெருமளவான புகைப்படங்கள் தம்மிடம் உள்ளதாகவும், அவற்றில் கைது செய்யப்பட்ட அப்பாவி மக்களும், அதனை மேற்கொண்ட படை அதிகாரிகளும் தொளிவாக தெரிவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உலகத் தமிழர் பேரவை உறு…
-
- 0 replies
- 1.3k views
-
-
மூதூர் கிழக்கு, ஈச்சிலம்பற்றை துண்டித்திருக்கிறது சிறிலங்கா அரசு: சி. எழிலன் "மூதூர் கிழக்கு மற்றும் ஈச்சிலம்பற்று பிரதேசங்கள் சிறிலங்கா அரசாங்கத்தால் முற்றாக திருகோணமலையிலிருந்து துண்டிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன" என்று திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார். இது குறித்து சி.எழிலன் கூறியதாவது: "மூதூர் மக்களின் இடம்பெயர்வு அவலங்கள், நிவாரணம் அளிப்பு மற்றும் மீள்குடியமர்வு என்று செய்யப்படும் பரப்புரைகள் மூதூர் கிழக்குக்கு ஆனவை அல்ல. அவை மூதூர் நகர் சார்ந்த பகுதிகளுக்கானவை மட்டுமே. "திருகோணமலை மாவட்டத்தில் இருந்து மூதூர் கிழக்கு மற்றும் ஈச்சிலம்பற்று பிரதேசங்கள் பிரிக்கப்பட்டு விட்ட நிலைமையே தற்போது உள்ளது. இப்பகு…
-
- 0 replies
- 1.3k views
-
-
அன்பான பெரிய பிரித்தானியா வாழ் தமிழ் மக்களே தாயகத்தில் எம் உறவுகள் படும் இன்னல்களை பிரித்தானிய அரசுக்கும் இங்குள்ள மக்களுக்கு உணர்த்தும் முகமாகவும் அத்துடன் தமிழக உறவுகளின் எழுச்சிக்கும், எம்மவர்கள் தொடர்பில் அவர்களின் நேசக்கரத்திற்கு நன்றி கூறும் முகமாகவும் எதிர்வரும் 19ம் திகதி கார்த்திகை மாதம் புதன்கிழமை மாலை 3.30 மணி தொடக்கம் 6.30 மணி வரை பிரித்தானிய பாராளுமன்ற சதுக்கத்தில் இடம்பெறும்.அனைத்து உறவுகளும் திரண்டு எம் மக்கள் மீதான சிங்கள அரசின் இன அழிப்பினை தெரியப்படுத்துவோம்.நன்றி
-
- 0 replies
- 1.3k views
-
-
புலம்பெயர்ந்த தமிழர்கள் தொடர்பான தனது பரிந்துரையை தனது அறிக்கையில் மிகத் தெளிவாக வழங்கியுள்ள ஐக்கிய நாடுகள் சபை சில பரிந்துரைகளையும் செய்துள்ளது.இது தொடர்பான விடயம் யுத்தக் குற்ற அறிக்கையின் பக்கம் 132ல் இடம்பெற்றுள்ள பரிந்துரை இல.417ல் இருந்து பரிந்துரை 420 வரையே இடம்பெற்றுள்ளது. புலம்பெயர்ந்த தமிழர் சமூகமே விடுதலைப் புலிகளிற்கு மனவலிமையும் நிதி ஆயுத வலிமையையும் பல தசாபத்தங்களாக வழங்கி வந்தது என்றும் இதனால் புலம்பெயர்ந்த சமூகத்திடையே இந்த இறுதிப் போரைப் பற்றிய ஒரு மனவலி இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளதோடு, இறுதிப் போரின் பேரவலத்தின் பின்னைய நாட்களில் புலம்பெயர்ந்த தேசங்களில் புலிகள் தனிப்பட்ட வியாபாரங்கள், ஆலய வருமானங்கள் போன்றவற்றின் மூலம் தொடர்ந்து நிதி சே…
-
- 3 replies
- 1.3k views
-
-
மொனராகலையில் மேலும் 2000 பேர் ஊர்காவல் படைக்கு சேர்க்கப்படுவர் மொனராகலை மாவட்டத்தின் பாதுகாப்பினை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் இரண்டாயிரம் ஊர்காவல் படையினரை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிதாக இணைத்துக் கொள்ளப்படும் இரண்டாயிரம் ஊர்காவல் படையினர் புத்தல, தனமல்வில பகுதிகளில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மொனராகலை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இளைஞர், யுவதிகள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு குறுகிய கால இராணுவப் பயிற்சிகளும் வழங்கப்பட்டு, நியமனங்களும் வழங்கப்படவுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேநிலையில், மொனராகலை மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர், மாவட்ட வைத்திய…
-
- 3 replies
- 1.3k views
-
-
காதலி மறுத்தமையினாலேயே அரசாங்கம் வேறொரு பெண்ணை மணக்கும் நிலை ஏற்பட்டது வீரகேசரி நாளேடு காதலியான ஜே.வி.பி. கல்யாணம் முடிக்க மறுத்தமையினாலேயே வேறொரு பெண்ணை மணம் முடி க்க வேண்டிய நிலை அரசாங்கத்து க்கு ஏற்பட்டது என்று அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே சபையில் நேற்று தெரிவித்தார்.இதற்கு பதிலளித்த ஜே.வி.பி. யின் பாராளுமன்ற குழுத் தலைவர் விமல் வீரவன்ச காதலி மறுத்தமைக்காக வீதியில் அலையும் விபச்சாரிகளை அரசாங்கம் திருமணம் செய்வதா? என்று கேள்வி எழுப்பினார். காதலன், காதலி, விபச்சாரி விவகாரம் காரணமாக சபையில் நேற்று பெரும் சிரிப்பொலி ஏற்பட்டது. பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணியளவில் சபாநாயகர் வி.ஜே. மு. லொக்குபண்டார தலைமையி…
-
- 1 reply
- 1.3k views
-