ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
வவுனியாவில் சுடலையையும் ஆக்கிரமிக்கும் புத்தர்! Published on December 4, 2012-12:39 pm · வவுனியாவில் சுடலையும் விளையாட்டு மைதானத்தையும் கூட புத்தர் ஆக்கிரமித்து வருகிறார் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வணங்கிப் போற்ற வேண்டிய கடவுளை இன ஆக்கிரமிப்பின் அடையாளமாகக் காண்பித்து காணிகளை அபகரிக்கும் நோக்கத்தை அரசு கைவிட வேண்டும் என்று வன்னி மாவட்ட பாhளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தின் முன்புறம் உள்ள விளையாட்டு மைதானத்திற்குள் பழமை வாயந்த அரசமரம் ஒன்றுள்ளது. அதனை அண்டிய பிரதேசத்தில் பொது மயானமும் அமைந்துள்ளது. இந்த அரசமர…
-
- 0 replies
- 231 views
-
-
மானுடத்திற்கு பணியாற்ற நமக்கும் ஒரு வாய்ப்பு!! கையெழுத்து இடுங்கள், தலையெழுத்தை மாற்றுங்கள்!! 0:07 / 3:09கோடிக்கணக்கான கையெழுத்தாக இதை மாற்றுவோம் | SEEMANISM | Support Australia MP Hugh McDermott https://www.change.org/p/mp-hugh-mcdermott-we-demand-that-hugh-mcdermott-sustain-his-support-for-the-australian-tamil-community
-
- 22 replies
- 1.7k views
-
-
முல்லைத்தீவில் சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத் தாக்குதலில் கடற்றொழிலாளர்களின் படகுகள் சேதமாகியுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 695 views
-
-
நாமலுக்கு 'பாய்' இல்லை மெகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, படுத்துறங்குவதற்கு பாய்க்கு பதிலாக மெட்ரஸ் வழக்கப்பட்டுள்ளது. நாமல் ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அமைவாக வைத்தியரின் பரிந்துரையை கவனத்தில் கொண்டே மெட்ரஸ் வழங்கப்பட்டுள்ளது என்று சிறைச்சாலைகள் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார். இந்த அதிசொகுசு மெட்ரஸ், அவரின் வீட்டிலிருந்தே பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக அவ்வதிகாரி தெரிவித்தார். அவர், சிறைச்சாலையினால் வழங்கப்பட்டுள்ள தலையணையை மட்டுமே தற்போதைக்கு பயன்படுத்துகின்றார் என்றும் அவ்வதிகாரி தெரிவித்தார். சந்தேகநபரான நாடாளுமன்ற உறுப்பினர், ஜே கூண்டில் தடுத்துவைக்கப்…
-
- 3 replies
- 623 views
-
-
குருநகர் இறங்குதுறையிலிருந்து புறப்பட்ட படகு விபத்து…! நீரில் மூழ்கிய பலர் – மீட்பு நடவடிக்கை தீவிரம். குருநகர் இறங்குதுறையிலிருந்து புதிய அந்தோனியர் ஆலயத்திற்குப் புறப்பட்ட படகு ஒன்று நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்துச் சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் “ஆலயத்திற்குச் சென்ற பயணிகள் படகு ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த படகில் முதியவர்கள், சிறுவர்கள், பெண்கள் எனப் பலர் நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில், அவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் அப்பிரதேச கடற்றொழிலாளர்கள் உடனடியாக ஈடுபட்டுள்ளனர். இதில் மூன்று பேர் கரைக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். மே…
-
- 4 replies
- 279 views
- 1 follower
-
-
சயனைட் குப்பி மீட்பு எம்.எஸ்.எம்.நூர்தீன் மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவிலங்குதுறை பகுதியிலுள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து, த.வி.பு என பொறிக்கப்பட்ட இலக்கத்தகடு, சேதமடைந்த நிலையிலான அடையாள அட்டை, கைக்குண்டு, பழுதடைந்த நிலையிலான சயனைட் குப்பி என்பவை செவ்வாய்க்கிழமை (19) மாலை மீட்கப்பட்டுள்ளன என்று காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர். மாவிலங்குதுறை கிராமத்திலுள்ள காளிகோவில் வீதியில் தங்கரசா தவேந்திரன் என்பவருக்கு சொந்தமான காணியில் சுற்று வேலி அமைப்பதற்காக குழி வெட்டிக் கொண்டிருந்த போது, மேற்கண்ட பொருட்கள் காணப்பட்டுள்ளன. இதுதொடர்பில், பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியதையடுத்து அ…
-
- 0 replies
- 485 views
-
-
விடுத்லைச்சிறுத்தைகளின் அவசர ஆலோசனைக்கூட்டம் நடத்தி ஈழத்தமிழர்களின் நலன்கருதி மாநாட்டினை டிசம்பர் 14ம் தேதிக்கு சென்னையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தத் தேதியே இறுதி அறிவாப்பாகவும் இதனை எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாதென்றும், இந்த மாநாடு நடப்பதினால் ஏற்படும் எவ்விதமான பிரச்சனையையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும் கூறிவிட்டார். மேலும் இந்த மாநாட்டின் மூலம் நாங்கள் தனித்தமிழீதை அங்கீகரிக்கின்றோம். தனித்த்மிழீழத்தில் தமிழர்களுக்கு ஆட்சி அமைக்கும் அனைத்து உரிமைகளும் உண்டு என்பதை நாங்கள் கூறப்போகின்றோம். மேலும் தமிழர் தாயகமான தமிழீழத்தில் சிங்களப்படைகள் தற்போது ஆக்கிரமித்த்துள்ளன. சிங்கள்ப்படைகள் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் இருத்து விலகிவிட வேண்டு…
-
- 6 replies
- 1.6k views
-
-
கொழும்பில் தமிழர்களின் இருப்பையே கேள்விக்குறியாக்கிய, தமிழரின் வரலாற்றுப் பக்கங்களில் அழிக்க முடியாத வடுக்களை ஏற்படுத்திய, கறுப்புஜூலை நினைவு நாள் இன்றாகும். பல வரலாற்றுத் துன்பங்களை சுமந்து வந்துள்ள ஜூலை மாதம் ஈழத்தமிழரின் வரலாற்றில் ஆழமாகப் பதிந்துவிட்ட ஒன்று. 33 ஆண்டுகளுக்கு முன்னர் இன்றைய நாளில் தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பாரிய திருப்புமுனை ஏற்படுத்திய திருநெல்வேலித் தாக்குதல் நடத்தப்பட்டது. 1983இல் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 13 சிங்கள இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். வெறும் கிளர்ச்சி என அறியப்பட்ட போராட்டம் அத்தாக்குதலுடன் உலகளாவிய ரீதியில் அறியப்பட்டது. 13 இராணுவச் சிப்பாய்கள் கொல்லப்பட்டதன் எதிரொலியாக தலைநகரில் …
-
- 1 reply
- 444 views
-
-
நாட்டில் 5,000 பேர் சிறுநீரக நோயின் இறுதிக்கட்டத்தில்: விழிப்புணர்வுடன் இருக்குமாறு வைத்தியர்கள் எச்சரிக்கை! Published By: Digital Desk 1 26 Mar, 2026 | 11:09 AM (இணையத்தள செய்திப் பிரிவு) நாட்டில் தற்போது 5,000 நோயாளர்கள் சிறுநீரக நோயின் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. அத்துடன், ஆண்டொன்றுக்கு சுமார் 300 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் மாத்திரமே மேற்கொள்ளப்படுவதாகவும் அந்தப் பணியகம் குறிப்பிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில், சிறுநீரக நோய் விசேட வைத்திய நிபுணர் நாலக ஹேரத் கருத்து தெரிவிக்கையில், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், வருடத்திற்கு ஒரு முறையாவது தங்களது சிறுநீரகங்களை பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும். சிற…
-
- 0 replies
- 87 views
- 1 follower
-
-
யுத்த நிறுத்தம் குறித்து கலந்துரையாட விரைவில் பிரணாப் இலங்கைக்கு விஜயம் செய்வார் – கருணாநிதி: இலங்கையில் யுத்த நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டு சமாதானப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தும் வகையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜீ இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கும் நோக்கில் பிரதமர் மன்மோகன் சிங்குடன் நேற்றைய தினம் நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இடம்பெற்று வரும் யுத்தம் குறித்த மகஜர் ஒன்றை தமிழக அனைத்துக் கட்சி குழுவினர் பிரதமரிடம் கையளித்துள்ளனர். மேலும், காங்கிரஸ் கூட்…
-
- 0 replies
- 516 views
-
-
சிங்கள பேரினவாதகொடிய அரசால் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ள மாணவர்களை விடுதலை செய்யக்கோரி இன்று சென்னையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 1. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்ததை கண்டித்தும். 2. யாழ் பல்கலைகழக மாணவர்களை கைது செய்ததை கண்டித்தும்,அவர்களை விடுதலை செய்ய வலியுறித்தியும். 3. தமிழர்களுக்கு காவிரியல் தண்ணீர் பெற்றுதர வலியுறித்தியும். 4. தமிழகத்தில் தொடர் மின்வெட்டை கண்டித்தும். 21/12/2012 அன்று காலை 10 மணிக்கு, சென்னை,நுங்கம்பாக்கம், வள்ளுவர்கோட்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம். http://www.youtube.com/watch?feature=player_embedded&v=geovdHxen_A[/xml] http://www.eeladhesam.com/index.php?optio…
-
- 0 replies
- 532 views
-
-
இலங்கையில் தற்போது பாவனையில் உள்ள அடையாள அட்டைகளுக்குப் பதிலாக அரசாங்கம் வழங்க உத்தேசித்துள்ள கணனிமயப்படுத்தப்பட்ட அடையாள அட்டைகளைத் தயாரிக்கும் கேள்விப் பத்திரத்தை முறைகேடான வகையில் பாகிஸ்தானின் நெட்ரா நிறுவனத்திற்கு வழங்க அரசாங்கத்தின் பொறுப்பு மிக்கவர்கள் சிலர் மேற்கொள்ளும் முயற்சி குறித்து இந்தியா தனது கவலையை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிது. இந்தக் கேள்விப் பத்திரம் பாகிஸ்தானுக்கு வழங்கப்படுவதன் மூலம் முழு இலங்கையர்கள் தொடர்பான விபரங்கள் பாகிஸ்தானிடம் சென்றடையும் என தெரிவித்துள்ள இந்திய அரசாங்கம், இலங்கையின் பாதுகாப்புத் தொடர்பில் தாம் தொடர்ந்தும் உதவிகளை வழங்கி வரும் போது, இலங்கையின் பாதுகாப்பு சம்பந்தமான விடயங்களில் பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய முக்கியமான பொ…
-
- 13 replies
- 4.4k views
-
-
எத்தகைய இடர்களில் இருந்தும் மீண்டெழும் வல்லமை தமிழருக்கு உண்டு! - கூட்டமைப்பு உறுப்பினர் ரதன் உரை!! 'காலத்திற்குக் காலம் எமது வடக்குக் கிழக்கு இணைந்த தாயகத்தில் எத்தனையோ துயரமான நிகழ்வுகளை எமது தமிழினம் சந்தித்த போதிலும் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை அழிவையும், 2009ஆம் ஆண்டு சிங்களப் பேரினவாதம் புரிந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தையும் எமது இனம் மறக்கத் தயாரில்லை. இவ்வாறான இடர்களிலிருந்து மீண்டெழும் வல்லமை படைத்த இனமே தமிழினம்.' - இவ்வாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வவுனியா நகரசபையின் பதில் தலைவர் எம்.எம்.ரதன் தெரிவித்தார். ஆழிப்பேரலை அனர்த்தம் காரணமாக உயிர்நீர்த்த மக்களின் எட்டாம் ஆண்டு நிகழ்வு பூந்தோட்டம் சுனாமி நினைவுத் தூபியில் நகரசபையின் ஏற்பாட்டில் இன்ற…
-
- 1 reply
- 473 views
-
-
ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் எமக்கு அழுத்தம் கொடுக்கவில்லை! இப்படிக் கூறுகின்றார் மைத்திரி "ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் எமக்கு அழுத்தம் கொடுக்கவோ, எம்மீது அதிகாரத்தைப் பயன்படுத்தவோ இல்லை. இந்நாட்டின் மக்களின் நலனுக்காகவும் சட்டத்துறையை மேம்படுத்துவதற்குமாகவே ஆணையாளர், இச்சட்டத்துறையின் சுயாதீனம் பற்றிப் பேசியுள்ளார்." - இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற, 34 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மூதூர் நீதிமன்றக் கட்டடத்தொகுதியைத் திறந்து வைத்ததன் பின்னர், உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், "பொதுமக்களின் நலன்கருதி…
-
- 0 replies
- 269 views
-
-
மனிதாபிமானம் இல்லாது செயற்படும் அரசாங்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- சஜித் மனிதாபிமானம் இல்லாது தொடர்ந்தும் செயற்படும் இந்த அரசாங்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க, மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். மோதரையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு கூறினார். சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா அச்சுறுத்தல் நிலவிவரும் காலத்தில், இந்த அரசாங்கம் மக்களுக்காக எந்த நிவாரணத்தை வழங்கியுள்ளது என கேட்க விரும்புகிறேன். உலகிலேயே இன்று எரிபொருளின் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இலங்கையில் மட்டும் எரிபொருளின் விலையில் மாற்றங்கள் இல்லை. இதுவா மக…
-
- 0 replies
- 367 views
-
-
சிறிலங்கா படையினரின் செறிவான எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களால் ஒட்டுசுட்டானில் அச்சத்துடன் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர தேர்வை மாணவர்கள் எழுதுகின்ற அவலம் ஏற்படுத்தப்பட்டுளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 403 views
-
-
ஒட்டுசுட்டடான் தான்தோன்றிஸ்வரர் ஆலய பூங்காவனம் முல்லைத்தீவு – ஒட்டுசுட்டடான் தான்தோன்றிஸ்வரர் ஆலய வருடாந்த திருவிழாவின் இறுதி உற்சவமான பூங்காவனப் பூசைகள் நேற்று (05) இரவு மிகவும் எளிமையான முறையில் இடம்பெற்றது. இதன்போது பறவைகாவடிகள், பாற்செம்பு காவடி என்பன இடம்பெற்றது. https://newuthayan.com/ஒட்டுசுட்டடான்-தான்தோன்/
-
- 0 replies
- 337 views
-
-
கிளிநொச்சியில் புலிகளின் விஸ்வரூபம். அரசியல்வாதிகளின் விருப்பு, வெறுப்புகளுக்கும், அரசியல் சுய இலாபங்களுக்கும் ஏற்ற விதத்தில் யுத்த நடவடிக்கைகளை வகுக்கும் தவறுக்கான பாடத்தை இவ்வாரத்தில் கிளிநொச்சி சுற்றாடலில் இலங்கைப் படைகள் நன்கு படிக்க வேண்டியதாயிற்று. இலங்கையில் யுத்தத்தை நிறுத்தக்கோரும் வற்புறுத்தல் தமிழகத்தில் தீவிரமடைந்து வருகின்றது. தமிழகத்தின் இந்தக் கருத்து நிலைப்பாட்டை இலங்கை அரசுத் தரப்புக்கு நேரில் எடுத்துரைப்பதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்புவதற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாகத் தமிழக முதல்வரிடம் இசைவு தெரிவித்து இரண்டு வாரங்கள் கழிந்து விட்டன. ஆனால் இந்திய வெளிவிவகார அமைச்சரின் உத்தேச இலங்க…
-
- 0 replies
- 1.9k views
-
-
யாழில் இருந்து மேலும் படையினர் வன்னிக் களமுனைக்கு அனுப்பி வைப்பு திகதி: 26.12.2008 // தமிழீழம் // [சங்கிலியன்] பெரும் இராணுவப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள சிறிலங்கா அரசு தற்போது கிழக்கு மற்றும் யாழ்குடாவில் நிலைகொண்டுள்ள படையினரை அங்கிருந்து எடுத்து வன்னிக் களமுனைக்கு அனுப்பி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் கிழக்கில் இருந்து 500 படையினர் வன்னிக் களமுனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது யாழ்ப்பாணத்திலுள்ள சிறிலங்காப் படையினரின் படைத்தளங்களிலுள்ள படையினர் குறைக்கப்பட்டு அங்குள்ள படையினர் வன்னிக் களமுனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். கடந்த வாரம் பருத்துறை, அச்சுவேலி, யாழ்ப்பாணம் படைத்தளங்களில் படையினர் இவ்வாறு குறைக்கப்பட்டு வன்னிக்கு அனுப்பப்பட்டுள்…
-
- 4 replies
- 2.9k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள குடும்பிமலை பகுதியில் சிறிலங்கா படையினரின் டறக் வாகனம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 389 views
-
-
26 ஆம் 27 ஆம் திகதிகளில் யாழில் 'டெலோ' வின் எட்டாவது தேசிய மகாநாடு! [Friday, 2013-01-11 09:25:38] தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) வின் எட்டாவது தேசிய மகா நாடு இம்முறை யாழ்ப்பாணத்தில் இம்மாதம் 26 ஆம் 27 ஆம் திகதிகளில் இடம் பெறவுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவின் செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ வின் எட்டாவது தேசிய மகா நாடு இம்முறை யாழ்ப்பாணத்தில் இம்மாதம் 26 ஆம் 27 ஆம் திகதிகளில் இடம் பெறவுள்ளது. குறித்த மகா நாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள், தலைவர்கள், செயலாளர்கள் அதிதிகளாக அழைக்கப்பட்டுள்ளனர். தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காண சாத்வீக ரீதியான உரி…
-
- 0 replies
- 273 views
-
-
வலி. வடக்கில் அடுத்த வாரம் மேலும் 6 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த 600 ஏக்கர் வரையிலான நிலம் மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விடுவிக்கப்படவுள்ள பகுதிகளை யாழ். மாவட்டச் செயலர் தலைமையிலான குழுவினர் நேற்று நேரில் சென்று ஆராய்ந்தனர். வலி.வடக்குக் காணி விடுவிப்புத் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கருணாசேன ஹெட்டியாராச்சி தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, பலாலி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. இதன்போது அடுத்த ஆண்டு நடுப் பகுதிக்குள் காணி விடுவிப்பதற்கான கால அட்டவணை தயாரி க்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலர், விரைவில் 700 ஏக்கர் காணி வரை விடுவிக்கப்படும் என்று கூறியிருந்தா…
-
- 0 replies
- 251 views
-
-
ஆனையிறவை ஆக்கிரமித்து விட்டதாக இந்திய ஊடகங்களுக்கு செய்தி வழங்கிய "றோ" [திங்கட்கிழமை, 05 சனவரி 2009, 07:11 மு.ப ஈழம்] [செ.விசுவநாதன்] ஆனையிறவை சிறிலங்கா படைத்தரப்பு ஆக்கிரமித்து விட்டதாக இந்திய செய்தி முகாமைகளுக்கு இந்திய கொள்கை வகுப்பு அமைப்பான "றோ" செய்தி அளித்ததாக இந்தியத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனையிறவை இனிமேல்தான் கைப்பற்றப் போகிறோம் என்று சிறிலங்கா படைத்தரப்பு மற்றும் சிறிலங்கா அரச தரப்பு ஊடகங்கள் இன்றும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஆனால், ஆனையிறவையும் படைத்தரப்பு நேற்றே ஆக்கிரமித்து விட்டதாக இந்திய செய்தி முகாமைகளான பி.ரி.ஐ. மற்றும் யூ.என்.ஐ. ஆகியவற்றுக்கு இந்தியாவின் கொள்கை வகுப்பு அமைப்பான "றோ" பிரிவினர் தகவல் வழங்கியதாக கூறப்படுகிறது…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கையின் புதிய நீதியரசராக முன்னாள் சட்டமா அதிபரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சட்டத்துறை ஆலோசகருமான மோஹான் பீரிஸ் பதவியேற்கவுள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் அவர் பதவியேற்பார் என இன்று காலை கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதம நீதியரசராகப் பணியாற்றிய சிஷானி பண்டாரநாயக்க நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட குற்றப் பிரேரணை மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவரது பதவி நீக்கத்தை உறுதிப்படுத்தி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடிதம் ஒன்றை நேற்று முன்தினம் அனுப்பிவைத்திருந்தார். இந்த நிலையில் புதிய சட்டமா அதிபராக யாரை நியமிப்பது என்பதில் இழுபறி நிலை காணப்பட்டது. ஷிரானி பண்டாரநாயக்கவுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்குத் தயா…
-
- 1 reply
- 514 views
-
-
புலிகளை அழிக்க உதவிய போது வழங்கிய வாக்குறுதியை மீறிய இலங்கை அரசாங்கத்தை என்ன செய்யப்போகின்றது இந்தியா.? விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்காக இந்தியாவின் உதவியை பெறும்போது வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் பின்நிற்பதாகவும் இதற்கு இந்தியா என்ன செய்யப்போகின்றது என்ற கேள்வியை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் எழுப்பினார். சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் அடிப்படையிலும் இலங்கையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச ஒப்பந்ததின் அடிப்படையிலும் இந்த நாட்டில் பிரச்சினையை தீர்ப்பதற்கு சர்வதேசத்தின் பங்களிப்புக்கு இடமுண்டு. அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் …
-
- 3 replies
- 814 views
-