ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142908 topics in this forum
-
பாடசாலைகளுக்கிடையிலான தேசிய போட்டியில் பதக்கம் வென்ற வவுனியா மாணவி! [saturday, 2013-10-05 14:11:01] நடைபெற்று வரும் தேசிய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் 21 வயதிற்குட்பட்ட 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த கமலநாதன் லேகாஜினி மூன்றாம் இடத்தை பெற்று வெங்கலப்பதக்கத்தை பெற்றுக்கொண்டார். கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இப்போட்டிகள் நேற்று முன்தினம் ஆரம்பித்து இடம்பெற்று வருகின்றன. வவுனியா சைவப்பிரகாச இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவியான கமலநாதன் லேகாஜினி இந்தவருடம் நடைபெற்ற 55ஆவது தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள், வவுனியா மாவட்ட தேசிய விளையாட்டு விழா, வடமாகாண தேசிய விளையாட்டு விழா என்பவற…
-
- 4 replies
- 572 views
-
-
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர், நாட்டில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில், எதிர்வரும் இரண்டு வாரங்களின் பின்னரே அறியமுடியுமெனத் தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத், தடுப்பூசியை மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 28 சதவீதமானோர் ஏற்றிக்கொண்டுள்ளனர். அதிகப்படியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 82 சத வீதமானோர் ஏற்றிக்கொண்டுள்ளனர் என்றார். கொரோனா ஒழிப்பு திட்டத்தின் கீழ் இதுவரை 55 சதவீதமானோருக்கு தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், மாவட்ட ரீதியில் அதிகளவானோர் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்ற போதிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் குறைந்தளவிலேயே தடுப்பூசி ஏற…
-
- 0 replies
- 290 views
-
-
எதிர்வரும் அரச தலைவர் தேர்தலை எதிர்கொள்வதற்கான கொள்கைகளை வகுத்துச் செயற்படுவதற்கான நோக்கத்துடன் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் ஆலோசகருமான பசில் ராஜபக்ச தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து அடுத்த வாரம் விலகுகிறார். மாத்தளையில் ஊடகவியலாளர்கள் மத்தியில் இன்று உரையாற்றிய அவர் இதனை உறுதிப்படுத்தினார். அரச தலைவர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் பரப்புரை நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காகவே பதவியைத் துறப்பதாகவும் அவர் தெரிவித்தார். ‘எதிர்வரும் 20ஆம் நாள் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறக்க உள்ளேன்' என்றார் பசில். நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வாசித்த பின்னர் தான் தனது பதவியை விட்டு விலகுவேன். அதன் பின்னர் அரச தலைவர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக பரப்…
-
- 0 replies
- 375 views
-
-
வன்னி மக்களை பண்டிவிரிச்சானுக்கு அனுப்ப முடிவு : உறவினர்கள் கவலை வீரகேசரி இணையம் 11/2/2009 12:39:22 PM - நானாட்டான் சிறுக்கண்டல் நலன்புரி நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வன்னி மக்களில் 09 குடும்பத்தைச் சேர்ந்த 38 பேர் வரை பண்டிவிரிச்சான் பகுதிக்கு அனுப்ப இருப்பதாக மன்னாரில் உள்ள அவர்களது உறவினர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக அவர்களுடைய உறவினர்கள் தெரிவிக்கையில், "வன்னிப்பகுதியைச் சேர்ந்த மக்கள் நலன்புரி நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களை வெளியில் எடுப்பதற்கு இவர்களது உறவினர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து விண்ணப்பங்கள் பரீசிலனை செய்யப்பட்டு, அகதிகளில் சிலர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். சொந்த இடங்க…
-
- 1 reply
- 803 views
-
-
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் ஆபத்தானது - ஹக்கீம் 21 அக்டோபர் 2013 மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் ஆபத்தானது என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தின் மூலம் அரசியல் சாசனத்தில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்ற நிர்ப்பந்தம், இந்த நாடு எதிர்நோக்கிய மிக மோசமான நிலைமையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தனிப்பட்ட சிலரின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் மாற்றங்களைச் செய்யக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சிறுபான்மை மக்களின் உரிமை முடக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். சிறுபான்மை மக்களுக்கு எதிராக மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் பயன்படுத்தப்படுவதனை தடுக்க அரசாங்கம் சகல முயற்சிகளையும் எடுத…
-
- 0 replies
- 420 views
-
-
“18 அமைச்சர்கள் ஒன்றிணைந்த எதிரணியில் இணைவர்” அரசாங்கத்திலுள்ள 18 அமைச்சர்கள், செப்டம்பர் மாத நடுப்பகுதியில் ஒன்றிணைந்த எதிரணியில் இணையவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த இன்று (6) தெரிவித்தார். நெலும் மாவத்தையில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அவர் இதைத் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/செய்திகள்/18-அமைச்சர்கள்-ஒன்றிணைந்த-எதிரணியில்-இணைவர்/175-200102
-
- 5 replies
- 562 views
-
-
துப்பாக்கிச் சூட்டுக்கு அவசியம் இருக்கவில்லை பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவிப்பு (எம்.எப்.எம்.பஸீர்) பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடமராட்சி கிழக்கு - மணல்காடு பகுதியில் மணல் லொறி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட விவகாரமானது, பொலிஸார் அதிகாரத்தை அளவுக்கதிகமாக பயன்படுத்தியதன் எதிரொலி என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி ருவான் குணசேகர தெரிவித்தார். இதனால் துப்பாக்கிச் சூட்டை நடாத்தியதாக கூறப்படும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரையும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரையும…
-
- 0 replies
- 297 views
-
-
வெள்ளத்தில்... மூழ்கியது, நல்லூர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சீரற்ற வானிலை நிலவி வரும் நிலையில், பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்தநிலையில் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று(செவ்வாய்கிழமை) விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார் என்பதுக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1248863
-
- 0 replies
- 318 views
-
-
முன் நாள் னாடுகளின் பிரதமர்கள், தலைவர்கள் ஆகியோர்களைக்கொண்ட உலகின் மிகப்பெரிய விஐபி க்களின் கிளப்பான CLUB DE MADRID எனும் அமைப்பின் இயக்குனர் சபை உறுப்பினராக சந்திரிக்கா குமாரதுங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் ஸ்பெயின் இல் நடந்த பொதுக்கூட்டத்திலேயே இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த பலவருடங்களாக இயக்குனராக வருவதற்கு பலமுயற்சிகளை மேற்கொண்ட சந்திரிக்கா அவரது ஆட்சிகாலத்தில் மனித உரிமை மீறல்கள் பற்றிய விமர்சனங்கள் முன்வைக்கபட்டதால் தெரிவில் உள்ளடங்க்கவில்லை.http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 550 views
-
-
November 3, 2013 தமிழீழ தேசிய தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய இசைப்பிரியா அவர்கள் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு பாலியல்சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமைக்கான வீடியோ ஆதாரங்களை பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் சனல் 4 தொலைக்காட்சி கடந்த 31-10-2013 அன்று வெளியிட்டுள்ளது. இவ் வீடியோகாட்சி இசைப்பிரியா யுத்தம் நடைபெற்றபோது இடையில் சிக்கி இறக்கவோ, காணாமல்போகவோ இல்லை என்பதனையும் மாறாக சிறீலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பாலியல்சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பதனை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றது. கைதியாக உள்ள ஒரு போராளியைக் கொல்வதே சர்வதேச சட்டத்தின் கீழ் ஓரு மோசமான குற்றமாக இர…
-
- 0 replies
- 347 views
-
-
மனோ கணேசனுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். https://www.dailymirror.lk/breaking_news/Mano-Ganesan-contracts-COVID-19/108-224976 விரைவில் நலம் பெற வேண்டும்.
-
- 4 replies
- 473 views
-
-
தமிழகம் முழுவதும் பிரபாரகன் போஸ்டர்கள் ஈழப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக அனுசரிக்கப்படும் மாவீரர் தினத்தையொட்டி தமிழகத்தின் பல பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27ம் தேதி மாவீரர் தினமாக விடுதலைப் புலிகளால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுவரை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால் இந்த ஆண்டின் மாவீரர் தின நிகழ்ச்சிகள் குறித்து பல்வேறு ஊகங்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், சென்னையில் மாவீரர் தின நிகழ்ச்சி நடத்தப்படுவது தொடர்பாக நகரின் பல இடங்களில் பிரபாகரன் படங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதேபோல பிரபாகரனை வாழ்த்தி தமிழகத்தின் பல பக…
-
- 0 replies
- 816 views
-
-
லண்டன்: இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் பங்கேற்க கூடாது என்று, உண்ணாவிரதம் இருக்கும் லண்டன் வாழ் இலங்கை தமிழர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காமன்வெல்த் மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் கலந்துகொள்ள கூடாது என வலியுறுத்தி லண்டனில், இலங்கை தமிழர் பரமேஸ்வரன் சுப்ரமணியம் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இவர் கடந்த திங்கட்கிழமை முதல் பிரதமர் டேவிட் கேமரன் வீட்டின் அருகில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். கடும் குளிர் மற்றும் மழை காரணமாக அவரது உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. இதை அறிந்து தமிழின உணர்வாளர்கள், பரமேஸ்வரனை உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை வடுத்தனர். ஆனாலும், பரமேஸ்வரன் தனது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வந்…
-
- 2 replies
- 540 views
-
-
-
- 0 replies
- 227 views
-
-
’மட்டக்களப்பிலிருந்து விசேட அதிரப்படிடை வெளியேற வேண்டும்’ மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரைப் பலப்படுத்தும் முயற்சி நடைபெறுகிறது. அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் எனத் தெரிவித்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், மணல் ஏற்றுபவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்றும் கேள்வியெழுப்பினார். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மாவட்டங்களில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகச் சம்பவங்கள் தொடர்பாக, ஊடகங்களுக்கு இன்று (26) கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார். "யாழ். நல்லூரில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில், ந…
-
- 1 reply
- 467 views
-
-
யுத்தத்துக்கு பின்னரான நிலைமையில் உள்ள எமது நாட்டை 40 வருட அரசியல் அனுபவம் கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மட்டுமே கட்டியெழுப்ப முடியும். எனவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கின்றோம் என துறைமுக அபிவிருத்தி அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் நிலைமைகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் இது குறித்து மேலும் கூறியதாவது எதிரணி கூட்டணி தொடர்ந்து முரண்பாடான கருத்துக்களையே முன்வைத்து வருகின்றது. தேசிய பிரச்சினை தீர்வு விடயத்தில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் செல்வதாக எதிரணி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா கூறுகின்றார். அப்படியாயின் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப…
-
- 2 replies
- 658 views
-
-
பொலிஸார் மீதான வாள்வெட்டு: ஒருவர் கைது? யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்தவர் என்றும், அவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகின்றது. எனினும் இந்தத் தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை. http://uthayandaily.com/story/15471.html
-
- 7 replies
- 512 views
-
-
ன்னி தடுப்பு முகாம்களில் உணவுக்காக சிறிலங்காப் படையினருடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள தமிழ் பெண்கள் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை என்று படை அதிகாரிகள் மறுத்துள்ளனர். நடத்தப்பட்ட விசாரணையில் அந்தக் குற்றச்சாட்டில் எந்த உண்மையில் இல்லை என்பது கண்டறியப்படதாக வன்னிப் பகுதிக்கான சிறிலங்கா தரைப் படையின் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னே தெரிவித்தார். “அந்த மாதிரியான எந்தச் சம்பவமும் நடக்கவில்லை என்பதை அதிகாரத்துடன் என்னால் சொல்ல முடியும்” என்றார் அவர். படை ஆட்களுக்கு எதிராகவோ அதிகாரிகளுக்கு எதிராகவோ அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் ஏதும் இருப்பின் பாதிக்கப்பட்டவர்கள் அது தொடர்பில் முறையிடுவதற்கு முழு சுத்திரம் இருக்கின்றது எனவும் …
-
- 5 replies
- 4.2k views
-
-
தமிழினத்தின் வரலாற்றில் எத்தனையோ அரசர்களும் பேரரசர்களும் தோன்றி மறைந்துள்ளார்கள். இராசராச சோழனும் அவன் மகன் இராசேந்திர சோழனும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழப் பேரரசை நிறுவிய மன்னர்கள் ஆவர். இலங்கை மீது படையெடுத்து அதனைப் பிடித்து (கிபி 993 - கிபி 1077) ஆட்சி செய்தவர்கள். சோழர்களது ஆட்சி 84 ஆண்டுகள் நீடித்தது. வங்கப் பெருங்கடலில் வலம் வந்த பேரரசர்கள் முதலாவது இராசராச சோழன், முதலாவது இராசேந்திர சோழன் ஆகியோரது கடற்படைக் கப்பல்களில் புலிக்கொடிகள் வானளாவப் பறந்தன. அந்தப் பொற்காலத்தின் பின்னர் தேசியத் தலைவர் பிரபாகரனின் கடற்படைதான் புலிக் கொடிகளோடு வங்கக் கடலில் வலம் வந்தன. உலக வரலாற்றில் கிரேக்கத்தின் மகா அலெக்சான்டர், பிரான்சின் சக்கரவர்த்தி நெப்போலியன் …
-
- 0 replies
- 654 views
-
-
ஒரு நாடு, ஒரு சட்டமல்ல, ஒரு ஆளுக்கு ஒரு சட்டம் -மனோ கணேசன் அமைச்சர் அலி சப்றியை பதவி விலக சொல்லும் ஞானசார தேரரை, ஜனாதிபதி செயலணிக்கு, இந்த ஜனாதிபதிதான் நியமித்தார். அமைச்சர் அலி சப்றியையும், கேபினட் அமைச்சராக இந்த ஜனாதிபதிதான் நியமித்தார் எனத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், இந்நிலையில், ஜனாதிபதியின் ஞானசாரர், ஜனாதிபதியின் அமைச்சரை பதவி விலக சொல்கிறார். இதென்ன கூத்து? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் முகநுாலில் தனது கருத்தை பதிவு செய்துள்ள மனோ கணேசன், “எதிர்கட்சி அரசியல்வாதிகள் இப்படி சொன்னால் அதில் ஒரு அரசியல் தர்க்கமாவது இருக்கும். அப்படியும் நான் அதை சொல்ல மாட்டேன். அரசை நாம் கடுமையாக எதிர்ப்பது என்பது வேறு.ஆனால் இ…
-
- 0 replies
- 163 views
-
-
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆர்.யோகராஜன் மற்றும் பிரதிக் கல்வி அமைச்சர் எம்.சச்சிதாநந்தன் UNPயில் இணைவு‐ 30 December 09 07:48 am (BST) அரசாங்கத்தின் மீது கொண்ட அதிருப்தியினாலும் தனது கட்சியின் மீதான வெறுப்பினாலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியிலிருந்து அதன் தேசிய அமைப்பாளர் ஆர்.யோகராஜன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதிக் கல்வி அமைச்சருமான எம்.சச்சிதாநந்தன் ஆகியோர் விலகியுள்ளனர். இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர்கள் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து கொண்டாதக உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளனர். அத்துடன் அவர்கள் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கப்போவதாகவும் தெ…
-
- 0 replies
- 532 views
-
-
அவசரகாலச் சட்டத்தை மீண்டும் நீடிக்கும் விடயத்தில் சிறிலங்காவின் எதிர்க்கட்சிகள் இரட்டை வேடம் போடுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdz04a40mA45fJ2cd2ePdZAA33dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0
-
- 0 replies
- 565 views
-
-
இந்தநாட்டின் தலைவர், தேசத்தின் பெருமைமிக்க தந்தை என தன்னை கூறிக்கொண்டாலும் அவரது கிராமான மெதமுலன கிராமத்தின் பிள்ளைகளும் இன்று பட்டினியால் வாடுகின்றனர் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்தார். காலி பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், அதிசயமான அபிவிருத்தி என்ற புனைக் கதைகளை கூறி மக்களின் பணத்தை கொள்ளையிட்டு வருகின்றனர். நாட்டின் தலைவர் நாட்டை அழித்து வருகிறார். தரகு பணம் பெறுகின்றார். புலிகளின் தலைவர் பிரபாகரனை உலகில் உள்ள மிகவும் ஆபத்தான பயங்கரவாதி என்றுக் கூறினாலும் அவர், நாட்டின் தற்போதைய ஆட்சியாளர்களை போல் மக்களை இப்படி பழி தீர்க்கவில்லை. நாட்டின் பிள்ளைகளையும் அழித்து விடக் கூடிய தலைவரே ந…
-
- 0 replies
- 775 views
-
-
மகிந்தரின் வெற்றிக்காக ஏங்கும் பாதாள உலகத் தமிழ் தேசியவாதிகள் 10/01/2010 -------------------------------------------------------------------------------- வெள்ளை`வான்' கடத்தல்கள் முடிவிற்கு வருவதுபோல் தெரியவில்லை. யாழ்குடாவிலும், கொழும்பிலும் கடத்தப்பட்டு காணாமல் போகடிப்பது தொடர்கின்றது. பாதாளஉலகத் தமிழ்த்தேசியவாதிகளின் கைவண்ணம் இதுவென்பதை மக்கள் நன்கு உணர்வார்கள். நிபந்தனையின்றி மகிந்தருக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள இக் குழுக்கள், நிரந்தர அரசியல் தீர்வுகுறித்து பேச விரும்பவில்லை. கருணா' என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி, முரளிதரன், சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவர்களில் ஒருவராக இருப்பதால், கட்சியின் முடிவிற்கே தீர்வுத்திட்ட விவகாரத்தை ஒப்படைத்துள்ளா…
-
- 5 replies
- 947 views
-
-
ஆங்கில எழுத்துக்களான S,R, ஆகிய எழுத்துக்கள் இலங்கை அரசியலில் கோலோச்சும் அற்புதத்தை நினைக்கையில் வியப்பாக இருக்கிறது. SRI LANKA என்ற பெயரின் முதல் இரண்டு எழுத்துக்களுமே 'எஸ்' மற்றும் 'ஆர்' தான் என்பதும் இங்கு கவனிக்கற்பாலது. இலங்கையின் முதற் பிரதமர் டி.எஸ். சேனநாயக்கவின் பெயரில் 'எஸ்' இருப்பது தொடக்கம் தற்போதுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பெயர் வரை இவ்விரு எழுத்துக்களுமோ அல்லது ஏதாவதொன்றோ காணப்படுகிறது. (இதில் பிரதமராகப் பதவி வகித்த Wijeyananda Dahanaayakka அவர்களின் பெயரில் மட்டும் எஸ்ஸோ, ஆரோ இல்லை. அவரின் பாட்டனின் பெயர் என்னவென்று தெரியவில்லை.) கீழே ஆங்கிலத்தில் அரசியல்வாதிகள் சிலரின் பெயர்களைத் தந்திருக்கிறேன். சரி பாருங்கள்...அத்தோடு, இந்தப் பட்டியலில…
-
- 3 replies
- 927 views
-