ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143662 topics in this forum
-
கிழக்கு மாகாண முதலமைச்சர் அஹமட் நஷீருக்கு, கடற், விமான மற்றும் இராணுவப் படைகளின் முகாம்களுக்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. திருகோணமலையில், சம்பூர் பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற வைபவத்தின் போது, கடற்படை அதிகாரியொருவரை திட்டியதையடுத்தே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக இலங்கை கடற்படை பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார். இதற்கு மேலதிகமாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் பங்கேற்கின்ற எந்தவொரு வைபவங்களிலும் முப்படையினரும் பங்கேற்க மாட்டார்கள் என்றும் தீர்மாகிக்கப்படுகின்றது. சம்பூரில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலான அறிக்கை, கடற்படையினரால், ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. http://www.t…
-
- 4 replies
- 483 views
-
-
மாங்குளம் பகுதியை கடந்த திங்கட்கிழமை இராணுவம் கைப்பற்றி விட்டதாக அரசு அறிவித்தது. அங்கு தான் இப்போது கடும் சண்டை நடந்து வருகிறது. இதில் இருந்து மாங்குளம் இன்னும் விடுதலைப் புலிகளிடம் தான் இருக்கிறது என்று தெரிய வந்துள்ளது. இராணுவ தரப்பில் நேற்று அதிகாலை தான் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. கொழும்பு ஜெயவர்த்தனா மருத்துவமனைக்குக் நேற்று காலை காயமடைந்த ஏராளமான வீரர்கள் கொண்டு வரப்பட்டனர். இராணுவ விமானங்களும், ஹெலிகாப்டர்களும் வடக்கு பகுதிக்கு பறப்பதும் இராணுவ வீரர்கள் உடல்களை ஏற்றிக் கொண்டு கொழும்பு திரும்புவதுமாக இருந்தன. இராணுவ தாக்குதல் தொடர்பான செய்திகளை இலங்கை பத்திரிகைகள் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு நடக்கும் உண்மையான தகவல்கள் வெளியே சரியாக தெர…
-
- 4 replies
- 2.3k views
-
-
துக்ளக் இதழில் இலங்கை பிரச்சினை தீர்ந்தது என்ற தலைப்பில் வெளியான ஒரு கட்டுரையைக் படித்ததில் சிரித்து சிரித்து வயிறு வலித்தது தான் மிச்சம். அதை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன் இங்கே... ---------------------------------------------------------------------------------------------------------------------- இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற முடியாவிட்டால் இந்த அரசு தேவையா என்று பொதுக்கூட்டத்தில் கேள்வியெழுப்பி, மத்திய அரசுக்கு தந்தி அனுப்பும்படி மக்களைக் கேட்டுக்கொண்டு, போர் நிறுத்தத்துக்கு வழி செய்யாவிட்டால், தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அச்சுறுத்தி, மனிதச் சங்கிலி நடத்தி – எல்லாம் ஓய்ந்துவிட்டது. இப்போது, மத்திய அரசின் நட…
-
- 4 replies
- 3k views
-
-
இலங்கையில் புதிதாக திறக்கப்பட்ட மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் தமது சேவைகளை ஆரம்பித்த எயார் அராபியா விமான நிறுவனம் சேவைகளை இரத்து செய்ய தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2013 மே மாதம் தொடக்கம் எயார் அராபியா விமான நிறுவனம் தமது மத்தல விமான சேவைகளை இரத்து செய்கிறது. மத்தல விமான நிலையம் திறக்கப்பட்டு முதல் சர்வதேச விமான சேவையாக எயார் அராபியா தமது சேவையை தொடங்கியமை குறிப்பிடத்தக்கது. 6 வார கால சேவையின் பின் இந்த சேவை இரத்து முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. எயார் அராபியா மத்தல விமான நிலையத்தில் இருந்து வாராந்தம் இரண்டு விமான சேவைகளை செயற்படுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tab…
-
- 4 replies
- 389 views
-
-
கொழும்பில் நடந்த திருமண வைபவம் ஒன்றில் முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்தவின் காலில் விழுந்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான அப்பாத்துரை விநாயகமூர்த்தி. கடந்தவார இறுதியில் கொழும்பு பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. இந்த சுவாரசியமான சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது: மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியசரர் ஸ்ரீஸ்கந்தராஜாவின் மூத்த புதல்வரின் திருமணம் கடந்தவார இறுதியில் பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது. அதில் முக்கிய விருந்தினராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டார். அத்துடன் அங்கு நீதிபதிகள், சட்டத்தரணிகள் என பெருமளவானோர் திருமணத்தில் கலந்துகொண்டனர். மணமக்கள் ஜனாதிபதியின் …
-
- 4 replies
- 932 views
-
-
இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதோடு எதிர்காலத்தில் இந்தியா துண்டு துண்டாக பிரியும் காலம் வெகுதூரத்தில் இல்லை. ஆனால் இலங்கை எழுச்சி கண்டு வருகிறது என ஆளும் கட்சி எம்.பி.ஜே.ஆர்.சூரியப்பெரும நேற்று சபையில் தெரிவித்தார். யார் முட்டுக்கட்டை போட்டாலும் இன்னும் 5 வருடங்களில் இலங்கை பாரிய தொழில்நுட்ப வளர்ச்சியை காண்பது நிச்சயமாகும் என்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற கோப் அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே சூரியப்பெரும எம்.பி இதனைத் தெரிவித்தார். இங்கிலாந்து ‘‘தும்மினால்’’ இலங்கைக்கு சளி பிடிக்கும் நிலை அன்று காணப்பட்டது. இன்று…
-
- 4 replies
- 627 views
-
-
வடக்கு கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைக்க வேண்டிய அவசியம் எதுவும் தனக்கு இல்லை என அரச தலைவர் தேர்தலுக்கான எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளரும், சிறிலங்காத் தரைப் படையின் முன்னாள் தளபதியுமான சரத் பொன்சேகா அறிவித்திருக்கின்றார். தென் பகுதியில் இடம்பெற்ற – ஐ. தே.க.வினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த – தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் பங்குகொண்டு உரையாற்றிய போதே இதனை அவர் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தான் விடுவித்தமையாலே தான் இரண்டு மாகாணங்களையும் பிரிப்பது சாத்தியமானது எனத் தெரிவித்த ஜெனரல் பொன்சேகா – அதனாலேயே, நீதிமன்றத் தீர்ப்பின் மூலமாக இரண்டு மாகாணங்களும் சட்டபூர்வமாகப் பிரிக்கப்பட்டது எனவும் தெரிவித்தார். நாட்ட…
-
- 4 replies
- 461 views
-
-
தமிழ் ஈழத்தின் களம் இன்னும் அழிந்துவிடவில்லை என்று வைகோ பேசினார்.திருவெறும்பூர் அருகேயுள்ள நாவல்பட்டில் இன்று நடந்த ஒரு திருமண விழாவில் பேசிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ,ஈழ தமிழர்கள் படும் இன்னல்களுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து போராடியவர்கள் நாங்கள்.நடித்து வென்றவர்கள் வேறு சிலர்.இதனால் தமிழ் ஈழத்தின் களம் என்பது இன்னும் அழிந்துவிடவில்லை. மீண்டும் பிரபாகரன் நம் முன் தோன்றுவார். களத்தை வழி நடத்தி செல்வார். அந்த நேரத்தில் முன்பு இருந்ததை விட லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள். முத்துக்குமார் ஏற்றி வைத்த தீபம் இன்னும் அழிந்து விடவில்லை.அந்த தீபத்தை ஏந்திக்கொண்டு உலகம் எங்கும் உள்ள பல லட்சம் தமிழர்கள் மீண்டும் ஒரு களத்தை காண தயாராக இருக்கிறார்கள். களங்க…
-
- 4 replies
- 1.4k views
-
-
சில நிகழ்வுகள் முடிவே தெரியாமல் நீண்டுக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் ஒருநாள் அவை முடிவுகளை சந்தித்தே தீரும். அப்படி முடிவுகளை சந்திக்கும்போது, அதில் இருக்கும் துயரும் மகிழ்வும் சேர்ந்தே வெளிப்படும். தேசியத் தலைவரின் அன்னையை திரும்ப அனுப்பிவிட்டு நடத்தும் அரசியல் கேலிக்கூத்து நம்மை அறுவெறுக்கச் செய்கிறது. ஒருநாட்டின் அரசத் தலைவர் உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவரின் தாய், தமிழீழ அரசின் தலைவர், மேதகு தேசிய தலைவர் அவர்களை அறியாத உலகம் இல்லை. அப்படிப்பட்ட ஒருவரின் தாய், ஒரு நாட்டிற்கு வருவது, ஒரு அரச தலைவருக்கு தெரியாது என்று சொல்லும் அளவிற்கு அந்த அரச தலைவரும், அதை கேட்கும் அளவிற்கு இந்த நாட்டின் மக்களும் எவ்வளவு முட்டாள் தனமாக இருக்கிறார்கள் என்பதை சிந்திக்கும்போது, நமக்கு வ…
-
- 4 replies
- 1.7k views
-
-
பெரும் சத்தத்துடன் வானம்நோக்கி திடீரெனச்சீறிப்பாந்த நீர் நவாலியில் சம்பவம் பீதியால் மக்கள் ஓட்டம் [13 டிசம்பர் 2010, திங்கட்கிழமை 7:25 மு.ப இலங்கை] நவாலி, டிசெ. 13 வயல் நிலத்தில் தேங்கி இருந்த மழை நீர் திடீ ரெனப் பெருஞ் சத்தத்துடன் வான் நோக்கி மின்னல் வேகத்தில் சுழன்று சுழன்று பாய்ந்தது. இதனைப் பார்த்த மக்கள் "சுனாமி” அல்லது சூறாவளி ஏற்பட்டு விட்டது என்று பதறி அடித்துக் கொண்டு ஓட்டம் எடுத்தனர். நவாலி மேற்குப் பகுதியில் நேற்று நண்பகல் நேரம் இந்த அச்சமூட்டும் சம்பவம் இடம்பெற்றது. இது மினிச் சூறாவளியாக இருக்கலாம் என வளிமண்டல வியல் அவதான நிலையப் பொறுப்பதிகாரி புஸ்பநாதன் தெரிவித்தார். நவாலி மேற்கு களையோடை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கும் (பிட்டி அம்மன்) ஆம்பன் குளத்…
-
- 4 replies
- 6.2k views
-
-
மிருசுவிலில் இன்று அதிகாலை ஏதோ பயங்கரமாக நடந்துள்ளது. படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அவர்கள் வெளியிட்ட தகவலில் ஒரு மணித்தியாலங்களாக கடும் மோதல்கள் நடைபெற்றதாக தெரிகிறது. அது தொடர்பான சங்கதியின் செய்தி: யாழில் புலிகள் - படையினர் கடும் மோதல்?? - பாண்டியன் Monday, 05 March 2007 11:16 இன்று அதிகாலை யாழ். தென்மராட்சியில் உள்ள மிருசுவில் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் சிறிலங்கா படையினருக்கும் இடையே கடுமையான மோதல்கள் நடைபெற்றுள்ளதாக சிங்களப் படைத்தரப்பு வெளியிட்டுள்ள தகவலின் மூலம் அறியப்படுகிறது. இன்று அதிகாலையில் படையினரின் முகாம் ஒன்றின் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாகவும் அதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்குமிடையே ஒரு …
-
- 4 replies
- 3.7k views
-
-
Published By: DIGITAL DESK 3 17 JUN, 2023 | 04:20 PM அடுத்த 05 வருடங்களுக்குள் ஆங்கில மொழியை கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் மற்றும் அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுத்து ஆங்கில மொழியையும் தேசிய மொழியாக கொண்டுச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஆங்கில மொழிக்கு மாத்திரம் மட்டுப்படாமல் சீனா, ஜப்பான், அரபு உள்ளிட்ட மொழிகளையும் கற்றுகொள்வதற்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார். அலரி மாளிகையில் நேற்று வியாழக்கிழமை (16) இடம்பெற்ற 2018- 2022 கல்வியாண்டு தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் ந…
-
- 4 replies
- 410 views
- 1 follower
-
-
எல்லோருக்கும் ஆபத்து: ராஜபக் ஷே அலறல்! மார்ச் 28, 2007 கொழும்பு: விடுதலைப் புலிகள் விமான பலம் பெற்றிருப்பதால் இலங்கைக்கு மட்டுமல்ல, இந்தியா, மலேசியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளாக இலங்கை அதிபர் ராஜபக் ஷே கூறியுள்ளார். விடுதலைப் புலிகள், கொழும்பு காட்டுநாயகே விமானப்படை தளம் மீது விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது அந்நாட்டு அரசுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. சிங்களர்கள் மத்தியில் பெரும் பீதி நிலவி வருகிறது. தாக்குதல் தொடரும் என புலிகள் அறிவித்துள்ளால் கொழும்பு முழுவதும் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்தப் புதிய சூழ்நிலை குறித்து அதிபர் ராஜபக் ஷே தலைமையில், கொழும்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் …
-
- 4 replies
- 2k views
-
-
கொழும்பு துறை முகத்திற்கு 48 மணித்தியாலங்களுக்குள் 6 உல்லாச பயணிகள் கப்பல்கள் விஜயம் [Wednesday April 11 2007 11:01:06 AM GMT] [virakesari.lk] கொழும்பு துறைமுகத்திற்கு 48 மணித்தியாலத்திற்கு 6 ஆ டம்பர உல்லாச கப்பல்கள் வந்து சென்றுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இக்கப்பல்கள் ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா ஜெர்மன் மற்ரும் பிரான்ஸ் நாடுகளில் இருந்து வந்துள்ளன. இதன் மூஅல்ம் கொழும்பு துறைமுகத்தின் முக்கியத்துவம் புலப்படுவதுடன் இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்திர்கு வழிவகுக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு ஓஷன் ஒடிசி அஸ்டோட் மக்ஸிம் கோர்கி சுகரோஸ் மற்றும் ஷில்வர் சடோ கப்பல்களே வந்துள்ளன. இலங்கை துறைமுக அதிகார சபையும் கடற்ப்டையினர் இக்கப்…
-
- 4 replies
- 2.1k views
-
-
தென்மராட்சி நோக்கி படையினரையும், போர்த்தளபாடங்களையும் நகர்த்தும் படையினர். தென்மராட்சி கிழக்கு படைத்தளங்களுக்கு நேற்று முன்தினமிரவு 8.00 மணியிலிருந்து அதிகாலை 1.00 வரை பாரிய போர்த்தளபாடங்களும் டாங்குகளும் ஏ-9 பிரதான சாலை வழியாக நகர்த்தப்பட்டு இருப்பதாக இப்பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. பாரிய ஊர்திகள் பிரதான இப்பாதை வழியாக நகர்ந்ததால் ஊர்திகள் செல்லும் சத்தம் இப்பிரதேசம் எங்கும் அதிர்ந்ததாகவும் தெரிவிக்கும் மக்கள் இப்போர்த தளபாடங்கள் படைத்தளங்களுக்கு நகர்த்தப்பட்ட சமயம் தென்மராட்சி கிழக்கு படைத்தளங்களிலிருந்தும் கிளாலி படைத்தளத்தில் இருந்தும் படையினரால் அரசகட்டுபாடற்ற பிரதேசங்களை நோக்கி சரமாரியாக எறிகணை மற்றும் பல்குழல் பீரங்கித் தாக்குதல்கள் தொடர்ச்சியாக மேற…
-
- 4 replies
- 2k views
-
-
மகிந்தவின் மாளிகை யாழ்.பல்கலைக்கு? சுமார் ஐந்நூறு பேர் வரை தங்கிப் கல்விகற்கக்கூடிய காங்கேசன்துறையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மண்டபத்தை யாழ்ப்பாண பல்கலைகழகத்துக்கு வழங்குமாறு வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் அந்த குழு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முப்பது வருடங்களாக வடமாகாணத்தில் இருக்கும் தமிழ் , முஸ்லிம் மற்றும் சிங்கள மாணவர்கள் போரினாலும் வன்முறைகளாலும் தமது கல்வியில் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியிருந்தனர். அண்மையில் வடமாகாணத்துக்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்கள் கல்வியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களு…
-
- 4 replies
- 789 views
-
-
மன்னார் கடலில் பொதுமக்கள் படகு மீது சிறிலங்காக் கடற்படை தாக்குதல் Written by Seran - Oct 18, 2007 at 03:00 PM மன்னார் நாச்சிக்குடாவில் இருந்து தமிழகத்திற்கு படகு மூலம் சென்று கொண்டிருந்த அகதிகள் மீது பேசாலை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினர் நடத்திய கோரத்தாக்குதலில் நால்வர் உயிரிழந்தனர். மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று அதிகாலை 4:30 மணியளவில் நிகழ்ந்துள்ளது. சிறிலங்கா கடற்படையின் இத்தாக்குதலுக்கு நாச்சிக்குடாவைச் சேர்ந்தவர்கள் இலக்காகியிருப்பதாக தெரிகிறது. இச்சம்பவத்தில் புஸ்பமலர் அகவை -34 என்ற தாயும் அவரது இரு பிள்ளைகளும் காயமடைந்துள்ளனர். காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் புஸ்பமலர் மருத்துவர் ஒருவரிடம், தனது கணவர், இர…
-
- 4 replies
- 1.3k views
-
-
யாழ் நகரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கைகளின் போது 140 தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து, இந்த ஆய்வு நடவடிக்கையை மேற்கொண்டதாக ஸ்ரீ ஜயவர்த்னபுர பல்கலைக்கழகத்தின் வரலாறு மற்றும் தொல்பொருள் ஆய்வுப் பிரிவின் கலாநிதி பிரசாந்த பந்துல மண்டாவல தெரிவித்தார். விஜித யுகத்தில் பாதுகாப்பு கோட்டைக்கு வெளியில் கட்டடமொன்று நிர்மாணிக்கப்பட்ட உலகின் ஒரே ஒரு நகரம் யாழ்ப்பாணம் என்பது குறிப்பிடத்தக்கது.இங்கு அமைக்கப்பட்ட அனைத்து கட்டடங்களும் பாதுகாப்பான முறையில் காணப்படுகின்றமை விசேட அம்சம் என கலாநிதி பிரசாந்த பந்துல மண்டாவல குறிப்பிட்டார். இதன்படி எதிர்வரும் காலத்தில் இந்த கட்டடத்தை பாதுகாக்கும் வகையில் புதிய வேலைத்திட்டமொன்று அரசாங்கத்திடம் கைய…
-
- 4 replies
- 1.2k views
-
-
[size=4]சர்வதேச பொலிஸார் என அழைக்கப்படும் இன்ரர்-போலுடன் சிறிலங்காவும் கைகோர்ந்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.[/size] [size=4]இதன் அங்குரார்ப்பண நிகழ்வும் உத்தியோகபூர்வமாக இடம்பெற்றிருந்தது. ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் தகவல் சிறிலங்காவின் குள்ளநரித்தனத்தை அம்பலமாக்கியுள்ளது. இன்ரர் போல் பொலிசாரின் கணணி வலையமைப்போடு, கட்டுநாயக்கா விமானநிலைய கணணிகள் ஏற்கனவே இணைப்பில் இருந்து வருகிறது.[/size] [size=4]இந்தவகையில், 2008 ஆம் ஆண்டு மற்றும் 2010 ஆண்டுகளில், இதன் உதவியுடனே தான் ஆப்கானிஸ்தான் நாட்டவரும், பிறிதொரு தமிழரும் கைது செய்யப்பட்டார்கள். சமீபத்தில் கூட, மாலைதீவில் இருந்து சென்ற நபர் ஒருவரைக் கூட சிறிலங்காவில் வைத்…
-
- 4 replies
- 874 views
-
-
மதுபோதையில் வாகனம் ஓட்டிய சாரதி; அனுமதி பத்திரம் வாழ் நாள் முழுவதும் இரத்து! மதுபோதையில் தனியார் பேருந்தை ஓட்டியதற்காக, பேருந்து சாரதியின் உரிமத்தை வாழ்நாள் முழுவதும் இரத்து செய்ய பாணந்துறை தலைமை நீதிவான் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பை வெளியிட்ட பாணந்துறை தலைமை நீதிவான் சம்பிகா ராஜபக்ஷ, குற்றம் சாட்டப்பட்டவருக்கு அபராதமும் விதித்தார். பாணந்துறையிலிருந்து களுத்துறைக்கு ஒரு தனியார் நிறுவனத்தின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற குற்றம் சாட்டப்பட்டவர், போக்குவரத்து பொலிஸாரால் சோதனை செய்யப்பட்டார். இதன்போது, மதுவின் வாசனை அவர் மீது தொடர்ந்து இருந்ததால், பொலிஸார் அவரை மேலும் விசாரித்தனர், அப்போது அவர் மது போதையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. சாரதி தனது பயணிகளி…
-
-
- 4 replies
- 294 views
-
-
சிறிலங்கா அதிபருக்கும் நீதித்துறைக்கும் இடையில் எழுந்துள்ள முறுகலின் உச்சக்கட்டமாகவே, நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலர் மஞ்சுள திலகரட்ண தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலர் மஞ்சுள திலக ரட்ன, நேற்று கல்கிசைப் பகுதியில் வைத்து இனந்தெரியாத நான்கு ஆயுதபாணிகளால் தாக்கப்பட்டுள்ளார். தனது வாகனத்தில் இருந்து நாளிதழ்களைப் படித்துக் கொண்டிருந்த அவரை வெளியே இழுத்த, ஆயுதபாணிகள் தாக்கிவிட்டு அவரது கைத்தொலைபேசியையும் பறித்துக் கொண்டு சென்றுள்ளனர். முகம் மற்றும் கைகளில் காயமடைந்த மஞ்சுள திலகரட்ண கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தை கேள்வி…
-
- 4 replies
- 494 views
-
-
தையிட்டியில் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படவுள்ள காணிகள்! Dec 31, 2025 - 03:57 PM தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் இன்று (31) மு. ப 10.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள். இக்கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர், தையிட்டி காணி தொடர்பாக, நீண்டகாலமாக தீர்க்கப்படாத விடயங்களுக்கான ஆரோக்கியமான கலந்துரையாடலாக அமைய வேண்டும் என்பதே இக் கலந்துரையாடலின் நோக்கம் எனத் தெரிவித்து, கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுடன் அடுத்த கட்டம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடினார். இதன்போது கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் - ஏகமனதாக திஸ்ஸ விகாரை அமைந்துள்ள…
-
- 4 replies
- 452 views
- 1 follower
-
-
பிரான்சில் கவனயீர்பு நிகழ்வு என்றுமில்லாதளவு மக்கள் உணர்வுடன் கலந்துகொண்டனர்.-படம் இணைப்பு (28.01.2009- புதன்கிழமை) இன்றய நிகழ்வில் 10000 பேருக்கும் அதிகமானோர் பங்கேற்று தங்களது உணர்வுளை வெளிப்படுத்தியிருந்தனர். வன்னிமக்கள் படும் துன்பங்களை வெளிப்படுத்தும் பதாதைகளைத் தாங்கியவாறு கண்டனங்களை உணர்வுடன் வெளிப்படுத்தினர். பெருமளவான இளையோர் பங்கேற்று இலங்கையரசுக்கு ஆயுத உதவி செய்துவரும் பாகிஸ்தானுக்கு எதிராகவும் கண்டனங்களை வெளிப்படுத்தியிருந்தனர். கவனயீர்பு நடைபெற்ற இடத்தில் பாகிஸ்தான் தூதரகம் இருப்பது குறிப்பிடத்தக்கது. photos
-
- 4 replies
- 1.5k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக பிரதிநிதி குமரன் பத்மநாதனுடன் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிநிதி ஜோன் ஹோல்ம்ஸ் தொலைபேசியில் பேச்சுக்களை நடத்தியது தொடர்பாக நடவடிக்கை எடுக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விடுதலைப் புலிகளின் அனைத்துலக பிரதிநிதி குமரன் பத்மநாதனுடன் கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிநிதி ஜோன் ஹோல்ம்ஸ் தொலைபேசியில் பேச்சுக்களை நடத்தியாக சிறிலங்காவுக்கான அமெரிக்கா தூதுவர் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த உரையாடல் வன்னியில் தங்கியுள்ள மக்கள் தொடர்பானது எனவும் விடுதலைப் புலிகளின் நடவடிக்கை…
-
- 4 replies
- 1k views
-
-
வித்தியா படுகொலை வழக்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நாளை விசாரணைக்கு புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை வழக்கு, மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நாளை முதன் முறையாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. யாழ். மேல் நீதிமன்றத்திலேயே வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது. யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை வழக்கின் இறுதிக்கட்ட விசாரணைகளுக்கு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அண்மையில் நியமிக்கப்பட்டது. சட்ட மாஅதிபரின் கோரிக்கைக்கு அமைய பிரதம நீதியரசர் பிரியசத் டெப் மூவரடங்கிய நீதிபதிகள் குழாமை நியமித்தார். வவுனியா மேல் நீதிமன்றத்தின்…
-
- 4 replies
- 703 views
-