ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142921 topics in this forum
-
கடற்புலிகள் தளபதி என கூறப்பட்டவரை விடுவிக்க கனேடிய நீதிமன்றம் உத்தரவு: அகதி உரிமையினை வழங்கவும் பணிப்பு [Thursday, 2011-04-14 12:34:04] கடந்த ஆண்டு இறுதியில் சன் சீ கப்பலில் 490 பேருடன் கனடா சென்றிருந்த அகதிகளில் மூவர் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் என தடுத்து வைக்க பட்டவர்கள் மீது நீதிமன்ற விசாரணைகள் இடமபெற்றது. இந்த நிலயில் நீதி மன்றில் நடைபெற்று வந்த வழக்கில் குறித்த நபர் முன்னாள் கடல் புலி தளபதி நிலை உறுப்பினர் எனவும் அவர் ஆயுதப் பயிற்சி எடுத்தவர் எனவும் ஆனால் தற்போது அவர் விடுதலைப் புலி உறுப்பினர் இல்லையென கூறிய நீதி மன்றம் அவரை விடுதலை செய்துள்ளது. அத்துடன் குறித்த நபருக்கான அகதி உரிமையினை வழங்கும் படியும்குடி வரவு குடியகல்வு அமைச்சுக்கு நீதி மன்றம…
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தினால், வணிகச் சலுகைகளை சிறிலங்கா இழக்கும் ஆபத்து ஏற்படும் என்று, ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்தவாரம் அறிவித்திருந்தார். இதையடுத்து. மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகள் அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. மரணதண்டனையை நடைமுறைப்படுத்துவதை தடுத்து, மரணதண்டனைக்கு எதிரான ச…
-
- 4 replies
- 618 views
-
-
புலிகள் மீதான தடை விலக்க படும் -டில்லி முக்கியஸ்தர் தெரிவிப்பு ..! தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடை தற்போது இலங்கை மீது சுமத்த பட்டிருக்கும் போர்குற்ற நிகழ்வினை அடுத்து இலங்கை தொடர்பான சர்வேதேச நாடுகளின் அரசியல் நிலை பாடுகள் மாற்றம் அடைந்துள்ளதை அடுத்தும் மேலும் இவர்களின் எதிர்கால அரசியல் கொள்கையில் மாற்றங்கள் ஏற்படும் நிலை உருவாகும் நிலையில் இந்தியா தமிழீழ விடுதலை புலிகள் மீது விதிதிருக்கும் தடையினை விரும்பியோ விரும்பாமலோ பிராந்திய நலன் அடிப்படையில் இந்திய விலக்க வேண்டிய நிர்பந்த சூழல் ஏற்படும் எனவும் . அதனை இந்திய செய்தே தீரும் .தமிழர்களை அழித்த பழியினை இந்தியா காங்கிரஸ் மீது விழுந்துள்ள நிலையிலும் ஒட்டு மொத்த தமிழர்களும் இந்தியாவை வெறுத்த…
-
- 45 replies
- 5k views
-
-
'சமுத்திர நலனுக்கான ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைவின் முக்கியத்துவம்' எனும் தொனிப்பொருளில் காலி, லைட் ஹவுஸ் ஹோட்டலில் 'காலி பேச்சுவார்த்தை 2014' எனும் சர்வதேச கடற் பாதுகாப்பு மாநாடு, நேற்று திங்கட்கிழமை (01) காலை ஆரம்பமானது. (படங்கள்: பிரதீப் பத்திரண) http://www.tamilmirror.lk/--main/135299--2014.html
-
- 0 replies
- 304 views
-
-
ஆனையிறவு முகாமைகூட புலிகளிடம் இழக்காமல் பாதுகாத்தோம்… வடக்கில் இராணுவத்தை அகற்றுவோமா?: ஐ.தே.க கேட்கிறது! July 22, 2018 வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள எந்தவொரு இராணுவ முகாமையும் அகற்றுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுக்காது என அந்த கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பெருந்தோட்டத்துறை அமைச்சருமான நவீன் திஸாநாயக்க உறுதிபட தெரிவித்தார். ஆனால் இன்று வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற ஐ.தே.க முனைவதாக பொய் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். அவ்வாறான பொய்யான தகவல்களை எனது அரசியல் வாழ்வில் இதுவரை கேட்டதில்லை எனவும் அவர் தெரிவித்தார். அட்டன், கினிகத்தேனை நகரில் 22.07.2018 அன்று காலை 11 மணியளவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்ப…
-
- 0 replies
- 209 views
-
-
10வயது சிறுமியை வன்புணர்வு - தமிழர் பகுதியில் அரங்கேறிய கொடூரம்! Vhg ஏப்ரல் 01, 2023 வவுனியா - தாண்டிக்குளம் பகுதியினை சேர்ந்த 10 வயது பாடசாலை மாணவியை கடந்த 4 வருடங்களாக பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் மூவர் நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்டவர்கள் குறித்த சிறுமியின் உடன்பிறந்த சகோதரன் மற்றும் சிறிய தந்தையார் உள்ளிட்ட மூவர் என வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியா-தாண்டிக்குளம் பகுதியில் வசிக்கும் 10 வயது மாணவி வவுனியா நகர்ப்புற பாடசாலை ஒன்றில் 5 ஆம் தரத்தில் கல்வி கற்று வருகின்றார். குறித்த மாணவி கடந்த புதன்கிழமை தனது வகுப்பு ச…
-
- 26 replies
- 2.1k views
- 1 follower
-
-
'சட்டத்திலிருந்து யாரும் தப்ப முடியாது': கேகலிய ரம்புக்வெல [திங்கட்கிழமை, 12 பெப்ரவரி 2007, 13:58 ஈழம்] [க.திருக்குமார்] "சட்டத்தின் முன் அனைவரும் சமன்" என சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அண்மையில் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் பதவி நீக்கப்பட்ட மூன்று அமைச்சர்களும் அரசினால் கைது செய்யப்படலாம் என வெளிவந்த செய்திகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது: "யார் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்தாலும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அது எக்ஸ், வை அல்லது சற் ஆக இருக்கலாம். நாடு தற்போது மிகவும் ஆபத்தான கட்டத்தில் உள்ளது. பயங்கரவாதத்தை அ…
-
- 2 replies
- 1.1k views
-
-
மஹிந்த ராஜபக்சவிடம் பேசியது என்ன? உண்மையை வெளியிட்ட சம்பந்தன்! அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோருடன் கலந்துரையாடிமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இன்று கருத்துத் தெரிவித்தார். புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அவர்களிடம் தாம் ஒத்துழைப்புக் கோரியதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் விளக்கமளித்தார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர் ஆகியோருடன் நான் நீண்ட நேரம் கலந்துரையாடினேன் பல விடயங்கள் குறித்து உரையாடினோம். அவர் தனது காலத்தில் தமிழ் தேசிய பிரச்சினைக்கு தீர்வு கான விரும்பியதாகவும் அதற்கு அந்த…
-
- 3 replies
- 664 views
-
-
இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நேற்று நடைபெற்ற பேச்சுக்களில் தமிழர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ள அரசு கொள்கை அளவில் இணங்கி உள்ளது. எந்தெந்த அதிகாரங்களை, எந்த அளவில் எப்படிப் பகிர்ந்து கொள்வது என்று அடுத்தடுத்த அரசியல் பேச்சுக்களில் ஆராய்வது என்றும் இரு தரப்புகளும் முடிவு செய்துள்ளன. அதிகாரங்களைப் பகிரும் போது மத்திய, மாநில அல்லது மாகாண அரசுகளுக்கு இடையில் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் பொதுப்பட்டியல் இருக்கக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்பிரேமச் சந்திரன் உதயனுக்குத் தெரிவித்தார். அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கு இடையிலான ஐந்தாம் கட்ட சந்திப்பு நேற்று மாலை 6…
-
- 7 replies
- 1.5k views
- 1 follower
-
-
மிருசுவில் பகுதியில் 52 ஆவது படையணியின் தலைமையகம் அமைந்துள்ள, தனியாருக்கு சொந்தமான சுமார் 52 ஏக்கர் தென்னங்காணியை சுவீகரிப்பதற்கு அரசுத் தரப்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையை ஆட்சேபித்தும், அதைத் தடுத்து நிறுத்தக் கோரியும் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. மனுவில் எதிர் மனுதாரர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இராணுவத் தளபதி, 52 ஆவது டிவிஷனின் கட்டளைத் தளபதி அனுர சுபசிங்க, காணி அமைச்சர், காணி சுவீகரிப்பு அதிகாரி ஆகியோரை எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடவும் நீதிமன்றம் பணித்தது. மேற்படி, 52ஆவது டிவிஷன் அமைக்கப்ப…
-
- 0 replies
- 236 views
-
-
இலங்கையில் இந்திய சீன யுத்தம் நடைபெறுகிறது; மனோகணேசன் இலங்கையில் வீடுகளை அமைத்துக்கொடுக்கும் விடயத்தில் இந்திய சீன யுத்தம் நடைபெறுகிறது என தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் அமைச்சின் வடக்கு மாகாண அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் வடக்கு கிழக்கில் வீடுகளை அமைத்துக்கொடுக்கும் பணியில் மூன்று வருடங்களை கடத்திவிட்டோம். ஒன்றரை இலட்சம் வரையான வீடுகள் தேவையாக இருந்தது. இதில் நாற்பத்தையாயிரம் வரையான வீடுகளை இந்திய அரசாங்கம் அமைத்துக்கொடுத்துள்ளது, இன்னும் சில வீடுகளை அரசசார்பற்ற நிறுவனங்…
-
- 1 reply
- 377 views
-
-
பாராளுமன்றில் IMF விவாதம்; எதிர்க்கட்சிகள் பங்கேற்காது மொழிப் பிரச்சினையை முன்வைத்து தப்பித்துக்கொள்ள முயற்சி அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கை தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்காதென பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விவாதம் எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெறுமென கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கையை சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் மொழிமாற்றம் செய்யுமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 521 views
-
-
`தீர்வுத் திட்டத்தை முன்வைக்க ஜனாதிபதிக்கு விருப்பமில்லை' [23 - February - 2007] [Font Size - A - A - A] * ஐ. தே.க.வுடனான புரிந்துணர்வு உடன்படிக்கையை அவர் முறித்ததற்கான காரணத்தைக் கூறுகிறார் ரணில் -ஏ.ரஜீவன்- அரசாங்கத்திடம் இனப்பிரச்சினை தீர்விற்கான யோசனைகள் எதுவுமில்லை என குற்றம் சாட்டியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதிக்குள் அரசாங்கம் யோசனைகளை முன்வைக்க வேண்டும் என காலக்கெடு விதித்துள்ளார். கொழும்பில் வர்த்தக சமூகத்தின் மத்தியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்த அவர் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்கான விருப்பம் இல்லாததாலேயே ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியுடனான உடன்படிக்கையை முறித்ததாக குற்…
-
- 1 reply
- 948 views
-
-
காலி மாவட்டத்தில் நடத்தப்படும் பல பிரத்தியேக வகுப்புகளில் (ரியூசன் கிளாஸ்) காட்டப்பட்டு வந்த உள்நாட்டு யுத்த வெற்றி சம்பந்தமான வீடியோக்களை தற்காலிகமாக இடைநிறுத்த காலி பிராந்திய தேர்தல்கள் பிரதி ஆணையாளர் நடவடிக்கை எடுத்தார் எனத் தெரிவிக்கப்பட்டது. இராணுவத்தினரின் ஏற்பாட்டில் பல ரிடியூசன் வகுப்புகளில் யுத்த வெற்றி சம்பந்தமான ஒளிநாடாக்கள் (விடியோ) காண்பிக்கப்பட்டு வந்தன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கான ஆதரவை இந்த ஒளிபரப்புகள் மறைமுகமாகத் திரட்டுவதாகத் தேர்தல்கள் செயலகத்துக்குக் கிடைத்த முறைப்பாடுகளையடுத்து அந்த ஒளிபரப்புகளை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காலி மாவட்டப் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்திருக்கிறார். நாட்டின் எதி…
-
- 0 replies
- 429 views
-
-
அல்லைப்பிட்டி பகுதியில் கோரவிபத்து – இரு பெண்கள் சம்பவ இடத்தில உயிரிழப்பு !! யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்களின் பின்னால் வந்த வாகனம் மோதியதனால் இந்த விபத்து நேர்ந்துள்ளது. https://athavannews.com/2023/1331213
-
- 4 replies
- 552 views
-
-
'வெடிபொருட்களுக்கோ ஆயுதங்களுக்கோ எமக்கு பெரியளவு தட்டுப்பாடுகள் ஏற்படுவதில்லை': சு.ப.தமிழ்ச்செல்வன் "நாம், எமது மண்ணில் ஆக்கிரமித்திருக்கின்ற இராணுவத்தினருடன் போரிட்டு அவர்களிடமிருந்தே பெருமளவு இராணுவத் தளபாடங்களையும் ஆயுதங்களையும் கைப்பற்றுகின்ற வழமையைப் பேணி வருகின்றோம்" சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் 'தமிழ்முரசு' நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முழுமையான பேட்டியின் விவரம்: கேள்வி: அமைதி உடன்பாடு ஏற்பட்டு ஐந்தாண்டுகள் ஆகியிருக்கும் நிலையில், அமைதி உடன்பாட்டை நீங்கள் தொடர்ந்து மதிக்கப்போகின்றீர்களா அல்லது மீறப் போகின்றீர்களா? பதில்: இந்த யுத…
-
- 2 replies
- 1.2k views
-
-
கனடாவின் முதல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள ராதிகா சிற்சபேசனுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளார். கடந்த இரண் டாம் திகதி கனடாவில் நடைபெற்ற தேர் தல் மூலமாக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ள கன்சர்வேடிவ் கட்சி மற்றும் அதன் பிரதமர் ஸ்டீவன் ஹார்ப்பர் ஆகியோருக்கும், அத்தேர்தலின் மூலம் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ராதிகா சிற்சபேசனுக்கும் ஜனாதிபதி வாழ்த்துச் செய்திகளை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்திகளை கனடாவுக்கான இலங்கைத் தூதுவர் திருமதி சித்ராங்கனி வாகீஸ்வர உரியவர்களிடம் கையளித்துள்ளதாக கனடாவின் இலங்கைத் தூதரக கொன்சியூலர் அதிகாரி கருணாரத்ன ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
இரகசிய உடன்பாட்டு ஆவணம் போலியானது – மங்கள சமரவீர DEC 23, 2014 | 0:35by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டதாக வெளியிடப்பட்ட இரகசிய உடன்பாட்டு ஆவணம், போலியானது என்று ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேனவுக்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட இரகசிய உடன்பாட்டின் பிரதி என்று கூறி, ஐதேகவின் முன்னாள் பொதுச்செயலரும், தற்போதைய சுகாதார அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்க ஆவணம் ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தார். அந்த ஆவணம் பொய்யானது என்றும், அத்தநாயக்க காண்பித்த ஆவணத்தில் இடம்பெற்றுள்ள கையெழுத்துகள…
-
- 0 replies
- 317 views
-
-
மயிலிட்டி துறைமுக மீள்கட்டுமான திட்டத்தை ஆரம்பித்து வைக்கிறார் மைத்திரி மயிலிட்டி மீன்பிடித் துறைமுக மீள்கட்டுமானத் திட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்தவாரம் ஆரம்பித்து வைக்கவுள்ளார். சிறிலங்கா படையினரின் ஆக்கிரமிப்பில் நீண்டகாலமாக இருந்து வந்த யாழ். குடாநாட்டின் மிக முக்கியமான- பழைமைவாய்ந்த மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம், அண்மையில் விடுவிக்கப்பட்டது. வடக்கின் மீன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கிலும், மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை நவீன வசதிகளுடன் அபிவிருத்தி செய்து மீண்டும் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக மயிலிட்டி துறைமுக மீள்கட்டுமான திட்டம் ஆர…
-
- 0 replies
- 573 views
-
-
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய மாணிக்கக் கல் தொடர்பில் தகவல்! இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல்லின் உண்மையான மதிப்பு தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி மாணிக்கக் கல் 200 மில்லியன் அமெரிக்க டொலர் என விளம்பரப்படுத்தப்பட்ட குறித்த மாணிக்கக் கல்லின் உண்மையான மதிப்பு 10,000 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது (சுமார் முப்பத்தாறு இலட்சம் ரூபாய் ) எனத் தெரியவந்துள்ளது. அண்மையில் நடைபெற்ற சுற்றுச் சூழல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு இதை தெரிவித்துள்ளது. இதேவேளை, குறித்த மாணிக்கக்கல் துபாயிக்கு முதலில் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து சுவிஸர்லாந்திற்கு கொண்டு செல்லப…
-
- 10 replies
- 956 views
-
-
கைதடியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார் – 23 மே 2011 – குளோபல் தமிழ்ச் செய்தியாளர். தென்மராட்சி கைதடிப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் கைதடி தெற்கினைச் சேர்ந்த 22 வயதுடைய சந்திரலிங்கம் தர்நேசன் என அடையாளங் காணப்பட்டுள்ளார். யாழ் பல்கலைக் கழகத்திற்குச் சொந்தமான கைதடியிலுள்ள சித்த மருத்துவ பீட மாணவ விடுதியின் பகுதியில் மதில் மேலாகக் குதித்து வெளியேற முற்பட்ட வேளையில் காவலிற்கு இருந்த படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இன்று காலை சாவகச்சேரி அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர…
-
- 0 replies
- 708 views
-
-
பதிந்தவர்: ஈழப்பிரியா வெள்ளி, 27 மே, 2011 வருகிற ஆனி மாதம் 1ஆம் தேதி, கோவை மாவட்டம் 299, சத்தி சாலை, கணபதி நகரில் காலை 10 மணிக்கு கோவை மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் யாழ் படிப்பகம் துவக்க விழா நடைபெறயுள்ளது. இந் நிகழ்ச்சியில் கட்சியினர், தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம். அறிவாயுதம் ஏந்துவோம் அனைவரும் வாரீர்! தொடர்புகொள்ள ம.சரண் கோவை 98428 44698 source:vannionline news.
-
- 0 replies
- 982 views
-
-
எங்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வேறு, ஆர். ஏ. சிறிசேன என்ற வேட்பாளர் வேறு:- 05 ஜனவரி 2015 மோசடிகாரர்களின் திட்டமிட்ட சதிக்கு பலியாக வேண்டாம் என்கிறார் மனோ கணேசன்:- எங்கள் பொது எதிரணியின் சின்னம், அன்னப்பறவை சின்னம். எங்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன போட்டியிடும் சின்னம், அன்னப்பறவை சின்னம். இதை நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள் மனதில் கொண்டு வாக்களிக்க வேண்டும். ஆர். ஏ. சிறிசேன என்ற ஒரு வேட்பாளரை தேடிப்பிடித்து, அவரை போட்டியிட வைத்து, அவருக்கு மைத்திரிபாலவை போல் ஆடை உடுத்தி, மூக்கு கண்ணாடி அணிவித்து, பவுடர் பூசி, அலங்கரித்து, படம் பிடித்து, அந்த படத்தை தமிழ் ஊடகங்களில் விளம்பரமாக போட்டு, அப்பாவி தமிழ் மக்களை குறி வைத்து ஏமாற்றும் ஒரு த…
-
- 1 reply
- 1.1k views
-
-
சிங்களக் குடியேற்றம் தொடர்பான ரவிகரனின் கோரிக்கை ஏகமனதாக நிறைவேற்றம் வடமாகாணத்தில் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் குறித்து 3 கோரிக்கைகளை முன்வைத்து வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கொண்டுவந்த பிரேரணை சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாகாணசபையின் 130 ஆவது அமர்வு நேற்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் நடைபெற்றது. இதன்போதே மேற்படி பிரேரணையை ரவிகரன் சபைக்கு கொண்டுவந்தார். பிரேரணையை முன்வைத்து ரவிகரன் உரையாற்றுகையில், தமிழர் நிலங்களில் குறிப்பாக வடமாகாணத்தில் இதுவரை சட்டத்திற்கு புறம்பாக மேற்கொள்ளப்பட்ட சிங்கள மயமாக்கல் முன்னெடுப்புகளையும் தற்ப…
-
- 0 replies
- 314 views
-
-
கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமனம் பெற்றுள்ள இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார். தனது சேவைக் காலத்தில் மக்களின் தேவைகளை அறிந்து எண்ணற்ற சேவைகளை மக்களுக்குச் செய்ய வாழ்த்துத் தெரிவிப்பதாக கமல்ஹாசன் மேலும் தெரிவித்துள்ளார். அதற்கு நன்றி தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், கமல்ஹாசனை கிழக்கு மாகாணத்திற்கு வருகை தருமாறு அழைப்பும் விடுத்துள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து! | Virakesari.lk
-
- 8 replies
- 766 views
-