ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142926 topics in this forum
-
தந்தை செல்வாவின் 45ஆம் ஆண்டு நினைவு தினம் April 26, 2022 இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 45 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பிரதான வீதியிலுள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஓய்வு நிலை ஆயரும் தந்தை செல்வா நினைவு அறங்காவற்குழு தலைவருமான கலாநிதி சு.ஜெபநேசனின் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நினைவுத் தூவிக்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்யப்பட்டது. அஞ்சலி நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், உள…
-
- 1 reply
- 209 views
-
-
எமது இனமும், நிலமும் சூறையாடப்படுகின்றது - மாவை சேனாதிராஜா யாழ் நிருபர் ஞாயிற்றுகிழமை, மே 2, 2010 இன்றைய சந்ததியினர் எமது இனத்தின் அடையாளத்தை தாங்கிப்பிடிக்க அணிதிரளத் தயாராக வேண்டும். இல்லையேல் எமது இனம் இதுவரை செய்த தியா கம் தோற்றுப் போய்விடும். தியாகத்தின் பயனை இழக்கும் நிலைக்கு எமது இனம் தள்ளப்பட்டுவிடக் கூடாது. இவ்வாறு கூறினார் மாவை சேனாதி ராஜா எம்.பி. இலங்கை தமிழரசுக்கட்சியின் மேதினக் கூட்டம் நேற்று மாலை யாழ்.மார்ட்டீன் வீதியிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. விவசாய சங்கங்களின் சம்மேளனத் தலைவர் செ.இலகுநாதனின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் விசேட உரை நிகழ்த்தும்போது மாவை சேனாதி ராஜா மேலும் தெரிவித்தவை வருமாறு: தற்போது எமது சூழலில் நி…
-
- 0 replies
- 493 views
-
-
புதுடெல்லி: இலங்கை ராணுவத்திற்கு இந்திய ராணுவம் தொடர்ந்து பயிற்சி அளிக்கும் என இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் உறுதி அளித்துள்ளார். இந்தியா, இலங்கை, மாலத்தீவு ஆகிய 3 நாடுகள் இடையேயான கடல் வழி பாதுகாப்பு தொடர்பான மாநாடு டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்சே, இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனனை சந்தித்துப் பேசினார். அப்போது இலங்கை ராணுவத்திற்கு இந்திய ராணுவம் தொடர்ந்து பயிற்சி அளிக்கும் என்ற உறுதியை அவர் கோத்தபய ராஜபக்சேவிடம் அளித்ததாக வெளியுறவுத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக மீனவர்கள் நேற்றும், இன்றும் கூட இலங்கை கடற்படையினரால தாக்கப்பட்டு சிறை பிடித்து செல்லப்பட்டுள்ள நிலையில், த…
-
- 2 replies
- 454 views
-
-
ஒருமித்த நாடு என்பதை ஒருபோதும் அனுமதியோம் தினேஷ் சூளுரை; வடக்கு,கிழக்கு பிரிந்து செல்லும் அபாயம் என்கிறார் (ரொபட் அன்டனி) ஒருமித்த நாடு என்ற அடிப்படையில் புதிய அரசியலமைப்பை முன்வைத் தால் அதனை நிச்சயமாக கூட்டு எதிரணி தோற்கடிக்கும். விசேடமாக சர்வஜன வாக்கெடுப்பின் போது நாங்கள் அதனை தோற்கடிப்போம் என்று கூட்டு எதிரணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார். ஒருமித்த நாடு என்பது சமஷ்டி முறைமைக்கு சமனானதாகும். எனேவ ஒரு மித்த நாடு என்ற அடிப்படையில் புதிய அரசியலமைப்பை கொண்டு வந்தால் நிச்சயம் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இலங்கையிலிருந்து பிரிந்து சென்று விடும் …
-
- 0 replies
- 287 views
-
-
. பார்வதி அம்மாள் தமிழகத்தில் சிகிச்சை பெற மத்திய அரசு நிபந்தனையுடன் அனுமதி. சென்னை: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தமிழகத்தில் சிகிச்சை பெற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இத் தகவலை முதல்வர் கருணாநிதி இன்று சட்டப் பேரவையில் அறிவித்தார். தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று இந்த அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். அவர் சென்னையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும்போது அரசியல் கட்சியினரோ அல்லது தடை செய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களோ சந்திக்கக் கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. தடை நீக்கம்: முன்னதாக பார்வதி அம்மாள் சிகிச்சைக்காக மலேசியாவில் இருந்து சென்னை வந்த…
-
- 8 replies
- 1.3k views
-
-
இன்று நள்ளிரவு முதல் புகையிரத பணியாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு.! ரயில்வே ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து அரசாங்கம் காலத்தை கடத்துவதாக குற்றம் சுமத்தி இன்று நள்ளிரவு முதல் புகையிரத பணியாளர்கள் காலவரையறையின்றியபணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர். அரசாங்கத்துடனான எந்த பேச்சுவார்த்தைகளும் வெற்றியளிக்காதமையே இதற்கு காரணமென அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சம்பள உயர்வு கோரிக்கையினை முன்வைத்து கடந்த மாதம் 18 ஆம் திகதி புகையிரத பணியாளர்கள் பணிபகிஸ்கரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த நிலையில் அவர்களின் சம்பள உயர்வு தொடர்பில் கடந்த மாதம் 20 ஆம் திகதி பிர…
-
- 1 reply
- 406 views
-
-
எரிபொருளின், தரம் குறித்து சோதனை… மீறினால் உரிமம் இரத்து! நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் எரிபொருளின் தரம் குறித்து சோதனைகளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஆரம்பித்துள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வழிகாட்டுதல்களை மீறினால் உரிமம் இரத்து செய்யப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எரிபொருளின் தரம் மற்றும் பெட்ரோலிய பொருட்களை கலப்பது குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1280612
-
- 0 replies
- 152 views
-
-
ஆலயங்களில் மிருக பலிக்கு முற்றாக தடை: யாழ் மேல் நீதிமன்று அதிரடி உத்தரவு யாழ் குடாநாட்டு எல்லைக்குட்பட்ட இந்து ஆலயங்களில் மிருகங்கள் பலியிடப்படுவதற்கு முற்றாக தடை விதித்து யாழ் நீதி மன்று நேற்று தீர்ப்பளித்துள்ளது. அகில இலங்கை சைவ மகா சபையினால் ஆலயங்களில் வேள்விகளை தடுத்து நிறுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு யாழ். மேல் நீதிமன்றம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்தது. இந் நிலையில் குறித்த மனு மீதான விசாரணை இன்று மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிபதி இளஞ்செழியன் இந்த உத்தரவை பிறப்பித்தாா். http…
-
- 27 replies
- 2.6k views
-
-
கிளிநொச்சியிலிருந்து புங்குடுதீவிற்கு உறவினர்களைப் பார்வையிடுவதற்காகச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் வெறும் 10 ஆயிரம் ரூபாவிற்காக அடித்துப் படுகொலை செய்யப்;பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் கிளி;நொச்சியைச் சேர்ந்த 56 வயதுடைய சோமசுந்தரம் சுப்பிரமணியம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்றுக் காலை கிளிநொச்சியிலிருந்து புங்குடுதீவிற்கு சென்றுவிட்டு மீண்டும் கிளிநொச்சி திரும்புவதற்காக அப்பகுதியிலுள்ள ஆலடிச் சந்தியில் பஸ் இற்காக காத்துக் கொண்டிருந்த வேளை மது அருந்தும் எண்ணம் ஏற்பட்டதால் அங்கு நடமாடிய இருவரிடம் மதுபானச்சாலை எங்கே என்று கேட்டுள்ளார். மதுபானச்சாலையைக் காட்டுவதாக அழைத்துச் மேற்படி இருவரும் அவரது தலையின் பின்புறமாக கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து விட்டு அவரிடம…
-
- 8 replies
- 1.4k views
-
-
மைத்திரி - மஹிந்த தரப்பு இணையுமா.? எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான விசேட கூட்டமொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர்வரும் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிளவைத் தடுத்து ஒன்றிணைந்து போட்டியிடுவது குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் கலந்து கொள்ளும் இந்த விசேட கூட்டத்தில் தீர்க்கமான முடிவுகள் எட்டப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விசேட கூட்…
-
- 0 replies
- 455 views
-
-
மூன்றாம் தரப்பினரிடம் இருந்து... எரிபொருள் கொள்வனவு – அமைச்சர் விடுக்கும் கோரிக்கை மூன்றாம் தரப்பினரிடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்ய வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஒருசிலர் எரிபொருளை சேமித்து வைப்பதாகவும் கலப்படங்களை மேற்கொண்டு அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தமக்கு தெரியவந்துள்ளது என கூறியுள்ளார். ஆகவே அவர்களை கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஆகவே இவ்வாறான தொழில்களை ஊக்குவிக்க வேண்டாம் என்றும், இது குறித்து அதிகாரிகளிடம் முறைப்பாடு வழங்குமாறும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். https://athavannews.com/2022/128…
-
- 0 replies
- 102 views
-
-
கேபிக்கு பெருமடல் எழுதிய அண்ணோய் சேரமானுக்கு சிறுமடல்! அண்ணோய் சேரமான்! ... கேபி, கேபி, கேபி! சரி அவன் துரோகி! இன்று சிங்களத்துடன் சேர்ந்து ஆடுகிறான்/ஆட்டப்படுகிறான் ... ஏறக்குறைய 10 வருடங்கள் எட்டவல்லவா வைத்திருந்தனீங்கள், இந்த கேபியை! ஏன் பின்பு கிட்ட கொண்டு வந்தது மட்டுமல்லாமல் கேபியை சர்வதேச பிரதிநிதியாக அறிவித்தீர்கள்??? சரி அறிவிக்க முதலாவது, அவனுடைய இன்றைய முகம் கூட, உங்களால் அறிய முடியாத அளவிற்கு அற்புதமான போராட்டம் நடத்தினீர்களா??? இன்று மண்டையை போட்டுடைத்து கொய்யோ, முறையோ என ஒப்பாரி வைக்கிறீர்கள்!! ... புரியவில்லை, அறியவில்லை, தெரியவில்லை, ... இல்லை, இல்லை, இல்லை, ... என்றால் என்ன கோமணத்திலை போராட்டம் நடைபெற்றது???? அதைச் செய்கிறேன், இதை…
-
- 8 replies
- 2.4k views
-
-
ஐ.நா. பாதுகாப்புச் சபையில் 2001ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 28ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட 1373 தீர்மானத்துக்கு அமைவாக, வெளிநாடுகளில் செயற்படும் விடுதலைப் புலிகள் மற்றும் அவர்கள் சார்பு புலம்பெயர் தமிழர் அமைப்புகளான 16 அமைப்புக்களை அரசாங்கம் வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புகளாக பிரகடனம் செய்துள்ளது. ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்பட்ட பின்னணியில் தான் இந்த எதிர் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. ஆனால், அரசாங்கம் சொல்லும் காரணம் அதற்கு முரணானது. இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மீள உயிர் கொடுக்க வெளிநாடுகளில் உள்ள புலிகள் சார்பு அமைப்புகள் முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியே அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ஜெனீவாவில் இலங்கைக்கு எதிர…
-
- 2 replies
- 678 views
-
-
இணையத்தில் கால்பதிக்கும் தாய்நிலம் தமிழர்களின் தாய்நிலத்திற்கும் புலத்திற்கும் பாலமாய் தமிழ் கருத்தியல் வெளியில் அச்சு வடிவத்தில் வாரப்பத்திரிகையாக பாரிஸ் நகரத்திலிருந்து தனது பயணத்தை தொடங்கிய 'தாய்நிலம்' பத்திரிகை எதிர்வரும் 04.07.2010 ஞாயிற்றுக்கிழமையிலிருந்து இணையத்திலும் கால் பதிக்கிறது www.thaynilam.com என்ற இணைய முகவரியில் உலகத் தமிழ் உறவுகள் தாய்நிலத்தை தரிசிக்கலாம். 21 ம் நூற்றாண்டின் முதல் தசாப்தம் தமிழர்களான எங்களுக்கு அளப்பரிய இழப்புக்களையும் வீழ்ச்சியையும் தந்தது என்னவோ உண்மைதான். இந்த இந்த இழப்புக்களில் இருந்து எமது இனத்தை ஆற்றுகைப்படுத்தி மீட்பதற்கும் வீழ்சியிலிருந்து எழுச்சியை நோக்கி எமது இனத்தை உந்தி தள்ள வைப்பதற்கும் 21 ம் நூற்றாண்டு திறந்…
-
- 0 replies
- 1.6k views
-
-
அமைப்புகள் மீதான தடை இலங்கையில் நல்லிணக்க முயற்சிகளைப் பாதிக்கும்! – கனடாவின் நிழல் வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு. [Tuesday, 2014-04-15 17:59:10] சர்வதேச பொது அமைப்புக்கள் பலவற்றின் மீது இலங்கை அரசாங்கம் அண்மையில் கொண்டு வந்திருக்கும் தடை, ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதுடன், அது உடனடியாகவே மீளப் பெறப்பட வேண்டும் என்று கனேடிய எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. கனடாவின் அதிகாரபூர்வ எதிர்க்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியின் வெளிவிவகார நிழல் அமைச்சர் போல் டேவர் (Paul Dewar) மேலும் கருத்துத் தெரிவிக்கையில் "கனடாவில் இருக்கும் சில அமைப்புக்கள் உட்பட சர்வதேச தமிழ் அமைப்புக்கள் மீதான இந்தத் தடை, இலங்கையில் பொறுப்புடைமை மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை பலவீனப்…
-
- 2 replies
- 641 views
-
-
லிபாரா பவுண்டேசன் நிதியுதவியில் மன்னாரில் பாரிய கிணறுகள்: மக்களிடம் கையளிப்பு! இலங்கையின் வடக்கே மன்னார் மாவட்டம் மடு, குஞ்சுக்குளம் பகுதியில் லிபாரா பவுண்டேசன் நிதியுதவியில் பாரிய கிணறுகள் கட்டப்பட்டு இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. மன்னார் குஞ்சுக்குளம் பகுதியில் விவசாயத்தைப் பெருக்கும் நோக்கோடு லிபாரா பவுண்டேசன் நிதியுதவியில் பாரிய கிணறுகள் அமைக்கப்பட்டன. குஞ்சுக்குளம் பகுதியில் சுமார் 60 ஏக்கர் விஸ்தீரணத்தில் விவசாயம் மேற்கொள்ளப்படும் நிலையில் மழைக் காலங்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் இப்பகுதி மக்கள் விவசாயம் செய்வதற்கு பாரிய நீர் பற்றாக்குறை உள்ளமை யாவரும் அறிந்ததே. இந்நிலைய…
-
- 1 reply
- 292 views
-
-
அரசியல்வாதிகளின்... வீடுகளுக்கு எரியூட்டப்பட்ட சம்பவம்: சாணக்கியன், கூறிய கருத்துக்களை... மீளப்பெற வேண்டும் – ரணில் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கடந்த மே மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்தை மீளப்பெற வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் உரையா்றிய அவர், “20ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் உட்பட நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஆதரவளித்தமை காரணமாகவே பலரின் வீடுகள் எரியூட்டப்பட்டதாக சாணக்கியன் வெளியிட்ட கருத்து ஏற்புடையதல்ல. இந்த கருத்தின் மூலம் சாணக்கியன் நடந்த வன்முறைகளை ஏற்றுக்கொள்கிறாரா? மரணத்தை ஏற…
-
- 5 replies
- 949 views
-
-
நெடுந்தீவிலிருந்து குதிரைகளைக் கடத்தியவர்களுக்கு உதவியதாகச் சந்தேகிக்கப்படுகின்ற நெடுந்தீவுப் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு உடனடியாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது என யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமல சேனா தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நெடுந்தீவிலிருந்து பிற இடங்களுக்கு சிலர் குதிரைகளைக் கடத்துவதாகவும் அதற்கு நெடுந்தீவுப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உடந்தையாக இருப்ப தாகவும் எமக்குத் தகவல் கிடை-த்திருந் தது. இதற்கமைய உடனடியாகவே குறி த்த பொலிஸ் நிலையப் பொறுப்பதி காரி க்கு முல்லைத்தீவு மாவ-ட்டத்-திற்கு இட மாற்றம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இக்குழுவின் செயற்பாடுகளை விசாரிப்பதற்காக உதவிப் பொலிஸ் அத்தியட்…
-
- 0 replies
- 373 views
-
-
வவுனியா வளாகத்தில் தமிழ் சிங்கள மாணவர்களிடையே குழப்பம்! தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 63ஆவது பிறந்தநாளுக்கு வவுனியா வளாகத்தில் கேக் வெட்டியமையால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்துத் தெரியவருவதாவது, யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பம்பைமடு விடுதியில் தங்கியுள்ள முதலாம் வருட மாணவர்கள் இன்று பிரபாகரனின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டியுள்ளனர். பின்னர் தமது விடுதியில் இடம்பெற்ற இந் நிகழ்வை முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். குறித்த புகைப்படங்களை அவதானித்த சிங்கள மாணவர்கள், பிறந்தநாள் கொண்டாடியவர்களுடன் முரண்பட்டுள்ளனர். எனினும் விடுதி மேற்பார்வையாளர் இரு பிரிவினரையும் சமரசம் செய்து வை…
-
- 1 reply
- 438 views
-
-
சிங்களப் பேரினவாதம் முஸ்லிம்களையும் ஒடுக்குகிறது ‐ முஸ்தீன் 04 August 10 05:28 am (BST) ""விடுதலைப் போராளிகளால்தான் என்னுடைய தந்தையே கொல்லப்பட்டார். அதற்காக என்னால் அந்த விடுதலைப் போராட்டத்தை மறுக்க முடியாது. இப்போதும் விடுதலைப்புலிகளையோ ஈழ விடுதலைக்குப் போராடிய பிற இயக்கங்களையோ நான் மறுதலிக்கவில்லை. இங்குள்ள சிக்கல் என்பது, ஆதரித்தால் முழுமையாகக் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பேன், எதிர்த்தால் முழுமையாகக் கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பேன் என்று செயல்படுவதுதான். நடுநிலையில் இருந்து பார்க்கும் தன்மை குறைந்து விட்டது. நடுநிலைப் பார்வை என்பதை உருவாக்கினால் மட்டும் தான் பழைய வரலாறுகளைச் சரியாகப் பதியும் ஒரு வேலையைச் செய்ய முடியும்"" என்று சொல்லும் முஸ்தீன் ‐ இலங்கை கிழக்…
-
- 0 replies
- 496 views
-
-
இலங்கையில் 1.6 மில்லியன் மாற்றுத் திறனாளிகள் இலங்கையில் மாற்றுத்திறனாளிகள் 1.6 மில்லியன் பேர் காணப்படுவதாகவும், இது இலங்கையின் மொத்த சனத்தொகையில் 7.9 வீதம் எனவும் மத்திய வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களுக்கு ஏற்ற வாழ்வாதாரங்களை வழங்கி பொருளாதார ரீதியாக பாதுகாக்க வேண்டும். சமூகத்தில் மதிப்பு பெற்று அவர்களும் நாட்டை அபிவிருத்தி செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் . புள்ளி விபர திணைக்களத்தின் அறிக்கையின் படி ஒவ்வொரு 1000 ஆண்களில் 77 ஆண்களும் ஒவ்வொரு 1000 பெண்களில் 96 பெண்…
-
- 0 replies
- 264 views
-
-
“பரந்தன் பூநகரி வீதி அரசியல்வாதிகளின் சட்டைப் பையுக்குள் சென்றுவிட்டது” June 26, 2022 வீதிக்காக ஒதுக்கப்பட்ட நிதி அரசியல்வாதியின் சட்டைப்பைக்குள் காணப்படுகின்றது. இதுதான் இலங்கையின் அபிவிருத்தி என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியினுடைய யாழ்ப்பாண மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அனுரகுமார திசாநாயக்க, “பரந்தனில் இருந்து பூநகரி ஊடாக நான் யாழ்ப்பாணம் வந்தேன். அந்த வீதி போடப்பட்டு எத்தனை ஆண்டுகள் சென்றிருக்கும். எட்டு ஆண்டுகளாகி இருக்குமா? அந்த வீதிக்கு என்ன நடந்தது? சாதாரணமாக அத்தகையவொரு வீதிக்கு 20 வருடங்களாவது உத்தரவாதம் இருக…
-
- 6 replies
- 512 views
- 1 follower
-
-
மருந்துகளுக்குக் கட்டுப்படாத புதிய கிருமி ஒன்று இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும் பரவி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். மனிதர்களின் குடலில் காணப்படுகின்ற இந்தக் கிருமி NDM-1 என்ற என்ஸைமை உருவாக்கக் கூடியது என அவர்கள் தெரிவிக்கின்றனர். அதிக சக்திவாய்ந்த அண்டிபயாடிக் நோய் அழிப்பு மருந்துகளுக்குக் கூட இந்தப் புதிய கிருமி கட்டுப்படவில்லை என்று தெரிவதாக தி லாண்செட் என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரை கூறுகிறது. இந்தக் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த உலகளாவிய கண்காணிப்பும் நடவடிக்கையும் தேவை என பிரிட்டனில் உள்ள விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்தக் கிருமி பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்த…
-
- 2 replies
- 845 views
-
-
மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை மீண்டும் செயற்படுத்த நடவடிக்கை மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை மறுசீரமைப்புச் செய்து, மீண்டும் செயற்படுத்த அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. யுத்தத்தால் மோசமாகச் செயலிழந்த யாழ்ப்பாணம், வலிகாமம் பிரதேசத்தில் அமைந்துள்ள மயிலிட்டி மீன்பிடித் துறைமுகமும் அதனுடன் தொடர்புபட்ட 54 ஏக்கர் காணியும், மீன்பிடி நடவடிக்கைகளுக்காக இவ்வருடம் விடுவிக்கப்பட்டது. அதனடிப்படையில், அப்பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள், மீள அப்பிரதேசத்தில் குடியமர்ந்துள்ளதுடன், மீன்பிடி நடவடிக்கைகளுக்காக மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தைப் பயன்படுத்துவதற்கும் முன்வந்துள்ளனர். அந்த வகையில்,…
-
- 2 replies
- 201 views
-
-
12 இந்திய மீனவர்கள் விடுதலை கடந்த வாரம் பருத்தித்துறை கடற்பரப்பில் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 12 பேரும் இன்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டனர். எனினும், மீனவர்கள் சென்ற பல லட்சம் ரூபாய் மதிப்பிலான விசைப்படகை அரசுடமையாக்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/12-இநதய-மனவரகள-வடதல/175-299965
-
- 1 reply
- 324 views
-