ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143682 topics in this forum
-
யாழ்க்கள உறவுகளே கீழுள்ள இணைப்பைப் பார்த்து உங்களது கருத்துகளைப் பதிவு செய்யுங்கள். நன்றிகள் http://ca.news.yahoo.com/tamil-protesters-ask-probe-war-crimes-allegations-184553741.html
-
- 3 replies
- 1.2k views
-
-
இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட தனி அலகு ஒன்றை உருவாக்குதல். இத்தகைய அதிகாரப் பகிர்வுத் திட்டம் ஒன்றுக்கு சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் கடந்த திங்களன்று இணக்கம் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவருகின்றது. சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தற்போதைய கூட்டத் தொடருக்குச் சமுகம் தரும் சகல கட்சிகளின் பிரதிநிதிகளுமே இத்தகைய யோசனைக்குப் பூரண ஆதரவை வழங்கியிருக்கின்றனர் என்று கூறப்படுகின்றது. சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் கூட்டங்களைப் பிரதான எதிர்க்கட்சிகளான ஐ.தே.கட்சியும், ஜே.வி.பியும் ஏற்கனவே பகிஷ்கரித்து வருகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் பெறும் கட்சிகள் இந்தக் கட்டமைப்புக்கு அழைக்கப்படவேயில்லை. ஆகஇ ஸ்ரீலங்கா முஸ்லிம்…
-
- 0 replies
- 1.2k views
-
-
மார்க்கன் குழுவினரே மாமனிதர் யோசப்பை சுட்டனர்: தப்பி வந்த சிறுவன் கூறுகிறான் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தை சுட்டுக்கொலை செய்தது சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் ஆயுதக் கும்பல்தான் என ஒட்டுப்படையிலிருந்து விடுதுலைப்புலிகளிடம் சரணடைந்த சிறுவன் தெரிவித்துள்ளான். கொக்கட்டிச்சோலை சோலையகத்தில் நேற்று விடுதலைப்புலிகளிடம் சரணடைந்த சிறுவனான செந்தில்நாதன் அருள்ராஜ் என்பவனே இந்தத் தகவலைத் தெரிவித்தான். ஆயுதக் கும்பலைச் சேர்ந்த மார்க்கன் தலைமையிலான ஆட்கள்தான் இந்தக் கொலையைச் செய்ததாக தெரிவிக்கப்பட்டது. தன்னைப் பிடித்து வைத்திருந்த காலத்தில் மார்க்கனின் இடத்தில் நிற்கிறவர்கள் ஜோசப் பரராஜசிங்கம் எம்.பியை சுட்டுப்போட்டார்கள் என ஒட்டுக்குழுவைச் அடிக்கடி பேசிக் கொள்வார்கள்…
-
- 0 replies
- 1.2k views
-
-
ருத்திரகுமாருடன் பசிலின் பேரம் உண்மையானதா? வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழ்ப் பேசும் மக்களில் குறைந்தது பத்துவீதமானவர்கள் தேர்தலை நிராகரித்தால் நாடுகடந்த தமிழீழ அரசைச் சார்ந்த ருத்ரகுமாரிற்கு பணம் வழங்குவதாக பசில் ராஜபக்ச ருத்திரகுமாரிற்கு அனுப்பியதாகக் குறிப்பிடும் மினஞ்சல் ஒன்று சில ஊடகங்களில் வெளியாகியுள்ளது. 2005 ஆம் ஆண்டுத் தேர்தலில் நடைபெற்றது போன்று இத் தேர்தலிலும் பணம் வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளதாகவும், அது தேர்தலுக்கு முன்னதாகவும் பின்னதாகவும் என இரண்டு பகுதிகளாக வழங்கப்படும் எனவும் மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மின்னஞ்சலின் அரசியல் பின்புலமே எமது கவனத்திற்குரியது. தீவிர தமிழ்த் தேசியவாதிகளாத் தம்மை வெளிக்காட்டிக் கொண்டவர்களில் பலர் தேர்தல…
-
- 2 replies
- 1.2k views
-
-
இலங்கை நிலவரம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலின் சிறப்பு கூட்டம் சற்று முன்னர் ஜெனீவாவில் தொடங்கியது. இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக எழும் குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை அரசு விசாரணைகள் நடத்த வேண்டும் எனக் கோரும் முகமாக 17 நாடுகள் ஐ நா வின் மனித உரிமை கவுன்சிலில் ஒரு முன்மொழிவை வைத்தன. இவ்வாறு கோரியுள்ள 17 நாடுகள் பெரும்பாலானவை ஐரோப்பிய நாடுகள், சில லத்தீன் அமெரிக்க நாடுகள். ஆனால் இவ்வாறு அந்த 17 நாடுகள் வைத்திருக்கும் பிரேரணைக்கு எதிராக தமது தரப்பு கருத்துக்களை எடுத்துக் கூறும் விதமாக இலங்கை அரசும் ஒரு வரைவு அறிக்கையை தயார் செய்துள்ளது. இதற்கும் சிலருடைய ஆதரவு கிடைத்துள்ளது. இலங்கையில் 26 வருடங்களாக அரசுக்கும் விடுதலைப் புலிகள…
-
- 1 reply
- 1.2k views
-
-
May 31, 2007 at 06:49 PM வத்தளை, ஹெந்தளை மற்றும் மாபொல பகுதிகளில் பாரிய அளவில் தேடுதல் நடவடிக்கை ஒன்று தற்போது மேற்கொள்ளப்படுகின்றது. இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்தே பாரிய அளவில் இந்த தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். வீதிகள் எங்கும் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டு வீடு வீடாக இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று போயா விடுமுறை தினம் ஆகையால் அனைவரும் வீட்டில் இருக்கும் மற்றும் வாகன போக்குவரத்துக்களும் குறைவாக இருக்கும் இந்த தருணத்தில் இந்த தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த தேடுதல் நடவடிக்கைகளின்போது தமது அடையாளங்களை நிரூபிக்க தவறியுள்ளனர் எனத் தெரிவித்து இதுவரை சுமார் 30மேற்பட்ட இளைஞர் …
-
- 1 reply
- 1.2k views
-
-
அரசாங்கத்தின் கொலை பட்டியலில் 27 ஊடகவியலாளர்கள் இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கொலை செய்வதற்காக அரசாங்கம் 27 ஊடகவியலாளர்களின் பெயர்களை அடங்கிய பட்டியலை தயாரித்துள்ளதாகவும், இந்த பட்டியல் தொடர்பான தகவல்களை ஊடக அமைப்புகள் தூதரங்களுக்கு வழங்கியிருப்பதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தகவல் வெளியிட்டுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். வடக்கில் ஊடகவியலாளர்களை கொலை செய்து, அங்கு ஊடகத்தின் குரலை ஒடுக்கி விட்டு தற்போது, தென் பகுதியில் ஊடகவியலாளர்களை கொலை செய்ய முயற்சிப்பதாக அவர் குற்றம்சுமத்தியுள்ளார். தென் பகுதி ஊடகவியலாளர்களை கொலை செய்யும் சூழ…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையில் தனித் தமிழ் ஈழம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு பா.ஜ. கட்சி ஆதரவளிக்காது என, அந்தக் கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா கூறியுள்ளார். பெங்களூரில் மேலும் அவர் மேலும் கூறியதாவது, இலங்கையைப் பிரித்து தனி நாடு அமைக்க வேண் டும் என்ற கோரிக்கையை பா.ஜ., கட்சி ஆதரிக்கவில்லை. அதே நேரத்தில், அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதை நாங்கள் எதிர்க்கிறோம். அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இலங்கையின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு உட்பட்டு வடபகுதியில் வசிக் கும் தமிழர்களுக்கு உரிமைகள் வழங் கப்பட வேண்டும்.இலங்கையில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது தொடர்ந்தால், அந்நாட்டிற்கு எதி ராக மத்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும். அங்குள்ள இந்திய ஹை கமிஷனரை திரும்…
-
- 3 replies
- 1.2k views
-
-
இலங்கை மிகத் தொலைவிற்குப் போய்விட்டது. அது எல்லாவித கட்டுப்பாடுகளுக்கும் அப்பால் சென்று விட்டது ‐ இன்னர் சிற்றி பிரஸ்‐ 16 July 10 12:26 pm (BST) இலங்கை மிகத் தொலைவிற்குப் போய்விட்டது. அது எல்லாவித கட்டுப்பாடுகளுக்கும் அப்பால் சென்று விட்டது என்று ஐநா பாதுகாப்பு கவுன்ஸிலின் நிரந்தர உறுப்புரிமை நாடுகளின் பிரதிநிதிகள் வியாழனன்று தெரிவித்துள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது. இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றுமு மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐநா செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கும் நிபுணர் குழுவில் ஜசிக்கா நியூவேர்த் நியமிக்கப்பட்டுள்ளதையும் அவர்கள் ஊர்ஜிதம் செய்துள்ளனர். ஜசிக்கா நியூவேர்த் ஐநாவின் மனித உரிமைப் பணியகத்தின் நீண்டநாள் உறுப்பினர் என்றும்…
-
- 3 replies
- 1.2k views
-
-
சிறிலங்காவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருந்த தடை இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது. சிறிலங்காவில் சர்வதேச சட்டங்கள் கடைபிடிக்கப்படாத நிலையில், அங்கிருந்து கடலுணவுப் பொருட்களை இறக்குமதி செய்யப் போவதில்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருந்தது. கடந்த ஒக்டோபர் மாதம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட போதும், அதனை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை. தற்போது அமுலாக்கப்பட்டுள்ள இந்த தடையினால் சிறிலங்காவுக்கு வருடாந்தம் 73 மில்லியன் யூரோக்கள் நட்டம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/news/36974/57//d,article_full.aspx
-
- 8 replies
- 1.2k views
-
-
July 25, 2019 யாழில். சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக வைரவர் ஆலயம் ஒன்று இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டு வந்த அயலவரான முதியவர் ஒருவர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் அமைந்துள்ள மாவிளந்தையடி ஞான வைரவர் கோவில் நேற்று புதன்கிழமை இரவு இனம் தெரியாத கும்பல் ஒன்றினால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆலயத்தில் இருந்த வைரவர் சிலை உள்ளிட்ட விக்கிரங்களையும் அக்கும்பல் களவாடி சென்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில…
-
- 5 replies
- 1.2k views
-
-
ஈழத்தமிழர்கள் மீது சிறிலங்காஅரசு தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும், இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து, தமிழகத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பில், கண்டனப் பேரணிகளும், ஆர்ப்பாட்டங்களும் தலைநகர் சென்னையிலும், பிற நகரங்களிலும், நடாத்தப்பட்டன. இதில் பல்வேறு கட்சிகளும், அதன் தலைவர்களும், தொண்டர்களும், ஆயிரக் கணக்கில் கலந்து கொண்டார்கள். அதன் தொடர்ச்சியாக இன்று 06.10.08 திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு, "இலங்கைத் தமிழர் பிரச்சினை - திமுக நிலையும், மத்திய அரசுக்கு வேண்டுகோளும்" என்ற தலைப்பின் கீழ் இன்று தமிழகத் தலைநகர் சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதி சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு அம…
-
- 0 replies
- 1.2k views
-
-
மட்டக்களப்பு வாகரையில் ஒருவர் சுட்டுக்கொலை மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் இன்று ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதேசத்தில் உந்துருளியில் சென்று கொண்டிருந்த ஒருவர் மீதே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடையாளம் காணப்படாத இரண்டு பேர் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்தனர். இச்செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
-
- 2 replies
- 1.2k views
-
-
மதுரையில் இன்றுகாலை ஆரம்பமாகும் பாஜகவின் 5வது மாநில மாநாட்டில் ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து கட்சியின் தலைவர்கள் அத்வானி மற்றும் சுஸ்மா சுவராஜ் ஆகியோர் முக்கிய உரைகளை நிகழ்த்தவுள்ளனர். இதுகுறித்து தகவல் வெளியிட்ட பாஜகவின் தேசிய செயலர் முரளிதரராவ், இலங்கை தமிழர் விவகாரம், மீனவர்கள் பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பாஜகவின் மூத்த தலைவர் அத்வானியும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜும் விளக்கிக் கூறவுள்ளனர் என்று தெரிவித்தார். அண்மையில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சுஸ்மா சுவராஜ் அங்குள்ள நிலைமைகள் குறித்து விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, கட்சியின் மூத்ததலைவர் அத்வானி ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு எ…
-
- 5 replies
- 1.2k views
-
-
இலங்கையில் இனப்படுகொலையை தடுத்து நிறுத்தக் கோரி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் 7 பேர் உட்பட 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவி விலகல் கடிதங்களைக் கையளித்துள்ளனர். முலமைச்சர் கலைஞர் கருணாநிதி, அமைச்சர் அன்பழகன் ஆகியோர் தலைமையில் நேற்றிரவு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தினைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியிடம் இவர்கள் தமது பதவி விலகல் கடிதங்களை 29ஆம் திகதியிட்டு கையளித்துள்ளனர். தமிழ்நாடு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக எதிர்வரும் 29ஆம் நாள்வரை இந்திய மத்திய அரசுக்கு காலக்கெடு விதிக்கப்பட்டிருப்பதால், 29ஆம் திகதியிடப்பட்டு கடிதங்கள் கையளிக்கப்பட்டு வருகின்றன. ஈழத் தமிழர்கள் மீது சிறீலங…
-
- 0 replies
- 1.2k views
-
-
23.05.2009, 13:51 மணி (தமிழீழம்) "16 மணித்தியாலங்களில், படுகொலை இடங்களைப் பறந்து பார்வையிட்டு ஜனாதிபதியோடு விருந்துண்பார் பான்” - இன்னர் சிற்றி பிறஸ் ஐ.நா அதிகாரிகள் குறிப்பிட்ட " கடற்கரையில் ஒரு இரத்தக்களறி" என்பதைப் பார்வையிட, ஐ.நா செயலாளர் நாயகம் பான் கி முன் மற்றும் ஊடகமும் ஒரு 16 மணித்தியாலப் பயணத்ததை சனிக்கிழமை மேற்கொள்கிறார்கள், "இதை சிலர் வெற்றிச் சுற்றுலா என்றும் கூறுகிறார்கள்" என இன்னர் சிற்றி பிறஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. இவர்கள் இராணுவ உலங்கு வானூர்திகளில்இ ஐ.நாவின் ஜோன் கோம்ஸ் குறிப்பிட்ட ~உலகத்திலேயே மிகப் பெரிய உள்ளேயே இடம் பெயர்ந்தோர்களுக்கான முகாமான, மேனிக் பார்முக்கு பயணம் செய்வார்கள். இதில் வட்டாரம் 1 மற்றும் 4 ஆகியவைக்கே இவர்கள் பயணிப்ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
இயக்குனர் சீமான் அவர்களின் மகிழுந்து எரிக்கப்பட்டதைக் கண்டித்தும்,பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர்மணி,இயக்குனர் சீமான் ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . மாவட்டத்தலைவர் துரைசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்ட த்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டனர். பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் பல்லடம் நகரில் கண்டன ஆர்ப்பாட்டம்! இயக்குனர் சீமான் அவர்களின் மகிழுந்து எரிக்கப்பட்டதைக் கண்டித்தும்,பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர்மணி,இயக்குனர் சீ…
-
- 2 replies
- 1.2k views
-
-
உலகின் பிரபல புலனாய்வு துறையின் முக்கியஸ்தர்கள் சிலர் சுற்றுலாப் பயணிகளை போல் இலங்கைக்குள் நுழைந்துள்ளதாக கிடைத்துள்ள தகவல்களை அடுத்து இலங்கை புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அண்மையில் அமெரிக்காவுக்கு சென்ற ஒருவர், இந்த புலனாய்வு பிரிவின் அதிகாரிகளை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னர், ரஷ்ய ஆயுத முகவர்கள், சுற்றுலாப் பயணிகளை போல் இலங்கை சென்றிருந்தாக, இலங்கை தூதுவரினால், பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. விடுதலைப்புலிகள் முழுமையாக தோற்டிக்கப்பட்டமை, மற்றும் 3 லட்சத்து மக்கள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தொடர்பில் மேற்கூறிய புலனாய்வு பிரிவிற்குரிய நாடு கவலையடைந்திருப்பதாக சிங்கள நாளிதழ் ஒன்றில் தெரிவிக்கப்பட்டு…
-
- 0 replies
- 1.2k views
-
-
யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதலின் போது மாணவர்களை கற்களை கொண்டு தாக்கியவர்களை அடையாளம் கண்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல இதனை தெரிவித்துள்ளார். குறித்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களை அமைச்சர் இன்று சந்தித்துள்ளார். இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், எந்தவொரு சந்தர்ப்பங்களிலும் சட்டங்களை யாரும் கையில் எடுக்க அனுமதிக்க முடியாது. பல வருடங்களாக புதிய மாணவர்கள் எவ்வாறு வரவேற்பார்களோ அவ்வாறே இம்முறையும் யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. எனினும், இந்த சம்பவத்துடன், வெளிநபர…
-
- 3 replies
- 1.2k views
-
-
வணங்காமண் பொருட்கள் இன்று காலை கொழும்பு நோக்கி செல்கிறது காப்டன் அலி கப்பலில் வந்த வணங்காமண் நிவாரணப்பொருட்கள் இன்று(07.07.2009)காலை சென்னையிலிருந்து கொலராடோ கப்பல் மூலம் கொழும்பு நோக்கி புறப்படுகிறது. நாளை இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய தமிழர்கள் அனுப்பிய நிவாரணப் பொருட்களுடன், கொலராடோ கப்பல் சென்னை துறைமுகத்தில் இருந்து இன்று இலங்கை புறப்படுகிறது. இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு, ஐரோப்பிய தமிழர்கள் உணவு, உடை, மருந்து என 884 டன் நிவாரணப் பொருட்களை வணங்காமண் கப்பலில் அனுப்பினர். அந்த நிவாரணப் பொருட்களை சிறிலங்கா அரசு ஏற்காமல், கப்பலை திருப்பி அனுப்பியது. இதையடுத்து வணங்காமண் கப்பல், ஜூன் 12ம் தேதி செ…
-
- 5 replies
- 1.2k views
-
-
தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட ரீதியில் சிறீலங்கா அரச படையினால் அரங்கேற்றப்பட்ட தமிழின அழிப்பினையும், மனித உரிமை மீறல்களையும் வேற்றினத்தவர் மத்தியில் கொண்டுசேர்க்கும் நோக்கோடு லண்டனில் பேரூந்து கண்காட்சியும், துண்டுப்பிரசுர வினியோகமும் நடைபெறுகின்றது. நேற்று முதல் ஆரம்பமாகி இன்றும் தொடரும் இந்த பேரூந்து கண்காட்சியும், துண்டுப்பிரசுர வினியோகமும் நாளையும் தொடர்ந்து நடைபெறவுள்ளது. நேற்றைய தினம் ஈஸ்ட்ஹாம், இல்பேட், வொல்த்தம்ஸ்ரோ, றெட்பிறிச், எட்மெண்டன், கொலிண்டேல், வெம்பிலி, அல்பேட்டன் சவுதோல், சவுத்ஹறோ, றெயினஸ்லேன், ஹறோ ஆகியபகுதிக்அளில் மேற்கொள்ளப்பட்ட இவ் விழிப்புணர்வுப் போராட்டம் இன்று மோர்டன், விம்பிள்டன், ரூட்டிங், மிச்சம், குறைடன், கிளப்ஹாம், ஸ…
-
- 4 replies
- 1.2k views
-
-
சிறிலங்காவில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் வடமேல் மாகாண சபையில் பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
சரணடைந்தவர்களை கூட்டுப் படுகொலை செய்வதற்கான உத்தரவுகளை சிறீலங்கா அரசின் தலைமையே வழங்கியுள்ளது: ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு. [Friday, 2010-12-17 05:44:20] சரணடைந்த தமிழ் மக்களை கூட்டமாக படுகொலை செய்ததற்கான உத்தரவுகளை சிறீலங்கா அரசின் தலைமையே வழங்கியுள்ளது என்பதையே பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சனல் போஃர் தொலைக்காட்சி ஒளிபரப்பிய இரண்டாவது காணொளி உறுதிப்படுத்தியுள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக்குவுக்கு அனுப்பிய கடித்தில் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு 15ம் திகதி அனுப்பிய கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது: சனல் போஃர் செய்தி நிறுவனம் ஒளிபரப்பிய காணொளியில் சிறீலங்கா அரசிடம் சரணடைந்தவர்கள் கண்களும், கை…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஐ.நா தீர்மானத்தை தோற்கடிக்க விமல் வீரவன்சவுடன் கூட இணையத் தயார் - சோமவன்ச அமரசிங்க ஐக்கிய நாடுகள் அமைப்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை தோற்கடிப்பதற்கு ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்சவுடன் கூட இணையத் தயார் என முன்னாள் ஜே.வி.பி.யின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். எந்தவொரு அரசியல் கட்சி எந்தவொரு அரசியல்வாதியுடன் இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை தோற்கடிக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைப் பொறிமுறைமை தோற்கடிக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். கிரமமான ஓர் திட்டத்தின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை தோற்கடிக்க வேண்டுமெ…
-
- 6 replies
- 1.2k views
-
-
இந்தியாவுக்கு செல்லும் இலங்கையர்கள் எதிர்வரும் காலங்களில் அந்நாட்டு விமான நிலையங்களிலேயே வீசாவினை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை நேற்று முதல் நடைமுறை வந்துள்ளது. இதன்படி, இந்தியாவின் புதுடில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர், திருவனந்தபுரம், கொச்சின் மற்றும் கோவா ஆகிய விமான நிலையங்களில் வைத்து இலங்கையர்கள் 30 நாட்களுக்கான வீசாவை பெற்றுக்கொள்ள முடியும். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த மாத இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட போது அவரால் வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைய இந்த வீசா முறை அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியா ஏற்கனவே 43 நாடுகளுக்கு ‘ஒன் அரைவல் விசா’ அதாவது விமான நிலையத்தில் வீசா பெற்றுக்கொள்வதற்கான அனுமதியை வழங்கியிருந்தது. அதனைத் தொடர்ந்து…
-
- 1 reply
- 1.2k views
-