நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
கேழ்வரகு கூழ் கூழுக்கும் தமிழர் வாழ்வுக்கும் உள்ள தொடர்பு பற்றி சொல்லி தெரியவேண்டியது இல்லை.. இன்றும் எங்கள் வயலில் வேலைக்கு வருபவர்கள் மதிய உணவாக விரும்பி கேட்பது மோரில் கரைத்த கூழ்யே ஆகும்.. எளிமையான சத்து நிறைந்த உணவு இது ஆகும்.. தேவையானவை கேழ்வரகு மாவு - 3 கப் பச்சரிசி ரவை - 2 கப் உப்பு - தேவையான அளவு தயிர் - 1 கப் செய்யும் முறை முதல் நாள் இரவு கேழ்வரகு மாவில் உப்புப் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கைகளால் நன்கு கரைத்து மூடி வைத்து விட வேண்டும். மறுநாள் மாலையில், ஒரு பெரிய பாத்திரத்தில் பச்சரிசி ரவையை கழுவி தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். பச்சரிசி வெந்து வர…
-
- 3 replies
- 4.9k views
-
-
பாகற்காய் தக்காளிப் புளிக்கறி உடலுக்கு சத்தான பாகற்காய், சிறுவர் முதல் பெரியவர் வரை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். நீரிழிவு நோயாளிக்களுக்கு மிகவும் நல்லது. ஒருவேளை, அதன் கசப்பு சுவை குழந்தைகளுக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், அதன் மகத்துவத்தை உணர வைத்து குழந்தைகளை சாப்பிட வைப்பது பெற்றோரின் கடமை. தேவையான பொருட்கள்: பாகற்காய் - 250 கிராம் தக்காளிப்பழம் - 250 கிராம் வெங்காயம் - 5 பூண்டு - 10 வெந்தயம் - 2 மிளகாய் வத்தல் - 5 கறிவேப்பிலை - சிறிது புளி - 25 கிராம் நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் கடுகு, சீரகம் - 1 டீஸ்பூன் உப்பு - 1 டீஸ்பூன் மிளாகாய்த் தூள் - 2 டீஸ்பூன் நீர் - தேவைக்கேற்ப …
-
- 5 replies
- 4.9k views
-
-
உடனே இது எங்க சுண்டலா என்று கேட்பீர்களே? இங்கு கேட்கலை என்றால் கூட தனிமடலிலாவது கேட்பீர்களே..அது தான் முதலே சொல்லிடுறேன். இனி செய்முறையை பற்றி: இப்போதெல்லாம் அடிக்கடி இந்திய உணவுகளை வீட்டில் சமைக்கும் எனக்கு ஒரு சில வருடங்களுக்கு முன்னர் இவை பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை. வீட்டில் உள்ள பெரியவர்கள் மூலம் ஈழத்து சமையல்களை தெரிந்து கொண்ட போதும், இந்திய சமையல் முறைகளை அறிந்து கொள்ள நினைத்த போது, பெரிதும் உதவியாக இருந்தது இணையம் தான். இணையத்தில் செய்முறைகளை பார்த்து தான் இந்திய சமையலை பற்றி தெரிந்து கொண்டேன், சமைத்துப்பார்க்கவும் கற்றுக்கொண்டேன். இதன் மூலம் பல நல்ல சமையல் முறைகளை கற்றுக்கொண்டு அவற்றை எப்படி மாற்றி சமைக்கலாம், எப்படி கொழுப்பை குறைக்கலாம் (சம…
-
- 14 replies
- 4.9k views
-
-
இறால் B.B.Q தேவையானவை: இறால் - 30 ஒலிவ் ஒயில் - 1/2 கப் உள்ளி - 4 எலுமிச்சம் பழ சாறு - 1 பழத்து சாறு ஒரேஞ் பழ சாறு - 1 உப்பு போட மறந்திடாதிங்க ;) 1. ஒரு பாத்திரத்தில் மேற்கூறிய பொருட்களை போட்டு கலக்கவும். (இறாலை தவிர) 2. இப்ப அக்கலவையில் இறாலை போட்டு கலக்குங்க. 3. 1 மணித்தியாலத்திற்கு அப்படியே வைத்துவிடுங்கள். 3. B.B.Q Grill சூடாகி இறாலை 3 - 5 நிமிடத்துக்கு போட்டு (ஒரு தரம் திருப்ப வேண்டும்) எடுக்கவும். 4. சுட சுட சாப்பிட்டு வாயை புண்ணாக்காமல். கொஞ்சம் சூடு ஆறியதும் சாப்பிடுங்கள். பின்விளைவுகளுக்கு நானோ அல்லது நிர்வாகமோ பொறுப்பு ஏற்க மாட்டோம் என்பதை இப்பவே சொல்லிடிறம். நன்றி
-
- 17 replies
- 4.9k views
-
-
[size=2][size=4]தேவையான பொருட்கள் :[/size][/size] [size=2][size=4]புளி-ஒரு எலுமிச்சையளவு காய்ந்தமிளகா-நான்கு தனியா-இரண்டு தேக்கரண்டி சீரகம்-ஒரு தேக்கரண்டி வெந்தயம்-ஒன்றைத் தேக்கரண்டி மஞ்சத்தூள்-அரைத் தேக்கரண்டி சாம்பார் பொடி-ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூள்-ஒரு தேக்கரண்டி வெங்காயம்- ஒன்று முழு பூண்டு-ஒன்று தக்காளி-ஒன்று கடுகு உளுந்து -ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை-ஒரு கொத்து எண்ணெய்-ஒரு குழிக்கரண்டி உப்பு-தேவைகேற்ப[/size][/size] [size=2][size=4]செய்முறை :[/size][/size] [size=2][size=4]புளியை இரண்டு கோப்பை நீரில் ஊறவைத்து உப்பைச் சேர்த்து கரைக்கவும்,[/size] [size=4]பின்பு மிளகாய் தனியா சீரகம் ஆகியவற்றை வறுத்து பொடித்து புளித்த்ண்ணீரில் போட்ட…
-
- 8 replies
- 4.9k views
-
-
கோழி வறுத்த கறி தேவையான பொருட்கள் கோழிக்கறி ஒன்றரை கிலோ இஞ்சி விழுது 7 தேக்கரண்டி பூண்டு விழுது 5 தேக்கரண்டி மஞ்சள்தூள் ஒரு தேக்கரண்டி எண்ணெய் 120 மி.லி. வெங்காயம் ஒரு கப் தக்காளி அரை கப் மல்லித்தூள் அரைத்தேக்கரண்டி மிளகாய்த்தூள் அரைத்தேக்கரண்டி ஏலப்பொடி அரைத்தேக்கரண்டி கிராம்பு 2 பட்டை சிறுதுண்டு புளி சிறுநெல்லிக்காய் அளவு மிளகு ஒரு தேக்கரண்டி எலுமிச்சைசாறு ஒரு மேசைக்கரண்டி கொத்தமல்லித்தழை சிறிது கறிவேப்பிலை சிறிது உப்பு தேவையான அளவு செய்முறை கோழிக்கறியினைச் சுத்தம் செய்து, எலும்புகளை நீக்கி, ஒன்றரை அங்குலத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு விழுதில் பாதிப் பாதி எடுத்துக்…
-
- 5 replies
- 4.9k views
-
-
சுவையான புளிச்ச கீரை துவையல்.. தேவையான பொருட்கள் * புளிச்ச கீரை - ஒரு கட்டு * காய்ந்த மிளகாய் - 10 * முழு தனியா - 1 1/2 மேசைக்கரண்டி * பச்சை மிளகாய் - 3 அல்லது 4 * பூண்டு - 7 அல்லது 8 பல் * வெங்காயம் - ஒன்று * வெந்தயம் - அரை தேக்கரண்டி * உப்பு - தேவைக்கேற்ப * எண்ணெய் - தேவைக்கேற்ப * வதக்கி சேர்க்க: * காய்ந்த மிளகாய் - 6 * பூண்டு - 6 பல் செய்முறை: புளிச்ச கீரையை இலைகளை மட்டும் ஆய்ந்து சுத்தம் செய்து கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை தோல் உரித்து நறுக்கி வைத்துக் கொள்ளவும். மேற் சொன்ன மற்ற தேவையானவற்றையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி…
-
- 0 replies
- 4.8k views
-
-
"கருவாட்டு குழம்பு செய்யும் முறை'' தேவையான பொருட்கள் : நெத்திலி கருவாடு - 25 மொச்சை - 1 கப் கத்திரிக்காய் - 2 சின்ன வெங்காயம் - 15 தக்காளி - 1 புளி - ஒரு நெல்லிக்காய் அளவு கறிவேப்பிலை - சிறிது சாம்பார் பொடி - 3 தேக்கரண்டி மஞ்சள் தூள் - சிறிது உப்பு எண்ணெய் - 2 மேசைக்கரண்டி கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு - தாளிக்க செய்முறை : நெத்திலி கருவாடை சூடான நீரில் 2 - 3 மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்ததை நன்றாக 4 - 5 முறை நீர் மாற்றி சுத்தம் செய்து எடுக்கவும். மொச்சையை ஊற வைத்து வேக வைத்து எடுக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் பாதி வதங்கியதும் கத்திரிக்காயை சேர்த்து …
-
- 10 replies
- 4.8k views
-
-
இதமான குளிர்காலம் முடிந்து... வாட்டி வதைக்கும் கோடை குத்தாட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது. ''உணவு முறை, உடை, பழக்கவழக்கங்களை வெயில் காலத்துக்கு தகுந்தவாறு மாற்றிக்கொள்வதன் மூலம், அதையும் சுகானுபவ காலமாக கொண்டாடலாம்'' என்று கனிவுடன் கூறும் சமையல்கலை நிபுணர் கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார், '30 வகை COOL ரெசிபி’களை இங்கே வழங்குகிறார். ''வெயிலின் கடுமையைத் தணிக்க உதவும் இளநீர், தர்பூசணி, கிர்ணிப்பழம், கம்பு, சுரைக்காய், வெந்தயம், தேங்காய்ப்பால் போன்றவற்றைக் கொண்டு விதம்விதமான ரெசிபிகளைக் கொடுத்துள்ளேன். இந்த கூல் ரெசிபிகளை, புன்னகை யுடன் பரிமாறினால்... சாப்பிடுபவரின் உடலும் உள்ளமும் டபுள் கூல்தான்!'' என்று ஆருயிர் தோழியாக, அன்புப் பெருக்குடன் கூறுகிறார் கிருஷ்ணகுமாரி. லிச்சி - கார்…
-
- 0 replies
- 4.8k views
-
-
தமிழ் புது வருட தினமான இன்று, சுவையருவியில் இருந்து உங்களுக்காக ஒரு இலகுவான சர்க்கரை பொங்கல் செய்யும் முறை. அனைவருக்கும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுகின்றேன். சர்க்கரை பொங்கல் pic:nandyala தேவையான பொருட்கள்: அரிசி = 1 பேணி வறுத்த பாசி பயறு = 1/3 பேணி சர்க்கரை = 1 பேணி தேங்காய் பால் = இ பேணி நீர் = 3 பேணி Cashewnuts = 2 மே.க Raisins = 2 மே.க செய்முறை: 1. பொங்கல் பானையில் நீரை விட்டு கொதிக்க விடவும். நீர் கொதித்து வரும் போது அதில் பாலை சேர்க்கவும். 2. பால் பொங்கியதும், ஏற்கனவே சுத்தப்படுத்தி, நீரில் கழுவிய அரிசியை போடவும். அரிசி அரை பதத்திற்கு வெந்ததும் அதில் சர்க்கரையை சேர்க்கவும். [சர்க்கரையை நீரிலோ பாலிலொ கரைத்துவிடுவது நல்லது…
-
- 3 replies
- 4.8k views
-
-
Baby Boom Strawberry White Chocolate Tobblerone Cheese Cake Taro Fresh Cream Cake Prune Cake Cheese Cake New York Cherry Cheese Cake Mocha Toffee Cake
-
- 14 replies
- 4.8k views
-
-
-
- 8 replies
- 4.8k views
-
-
தேவையான பொருட்கள்: சின்ன வெங்கயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது) தக்காளி - 5 (பொடியாக நறுக்கியது) பூண்டு - 30 பல் மல்லி பொடி - 3 டீஸ்பூன் தேங்காய் - 1/2 கப் (தனியாக அரைத்தது) புளிக்கரைசல் - தேவைக்கேற்ப உப்பு - தேவைக்கேற்ப நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப கருவேப்பிலை - தாளிக்க கடுகு - தாளிக்க தனியாக வதக்கி அரைப்பதற்கு: கடலை பருப்பு - 5 டீஸ்பூன் அரிசி - 3 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 8 சின்ன வெங்கயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது) தக்காளி - 5 (பொடியாக நறுக்கியது) …
-
- 3 replies
- 4.8k views
-
-
கத்தரிக்காய் கார குழம்பு செய்வது எப்படி கத்தரிக்காய் வைத்து தொக்கு, புலாவ், குழம்பு செய்தால் சூப்பராக இருக்கும். இன்று காரசாரமான புளிப்பான கத்தரிக்கய் கார குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கத்திரிக்காய் - 6 கடுகு - 1/4 டீஸ்பூன் சீரகம் - 1/4 டீஸ்பூன் உளுந்து - 1/4 டீஸ்பூன் கடலை பருப்பு - 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லித்தூள் - 2 டீஸ்பூன் உப்பு - தேவைக்கு சின்ன வெங்காயம் - 50 கிராம் தக்காளி - 1 கறிவேப்பிலை - ச…
-
- 0 replies
- 4.8k views
-
-
-
- 5 replies
- 4.8k views
-
-
மரக்கறி/மீன் ரொட்டி 500 கிராம் வெள்ளை கோதுமை மா, 1 தேக்கரண்டி உப்பு ( இது மாறுபடும். நான் ஹிமாலயன் உப்பு பாவிப்பதால் 2 கரண்டி போடுவேன்), 1 முட்டை (மரக்கறி முட்டை வெள்ளைக்கருவும் போடலாம்- Vegan Egg Substitute), தேங்காய் எண்ணெய் 4 மேசைக்கரண்டி, கெட்டியான தேங்காய் பால் 4 மேசை கரண்டி ( நான் smoothie maker இல் தேங்காய் சொட்டுகளை அரைத்து ஒரு cream மாதிரி fridge இல் வைத்திருக்கிறேன் - 1 கிழமைக்கு வரும். கேரளா கடைகளில் freezer இல் தேங்காய் சொட்டு பிளாஸ்டிக் bag இல் வைத்திருப்பார்கள்), 1 தேக்கரண்டி தேசிக்காய் புளி , 1 மேசைக்கரண்டி சீனி இவை யாவற்றையும் மாவின் நடுவில் ஒரு பள்ளம் கிண்டி போடவும். பிறகு கரையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் நன்று சேர்க்கவும் . பி…
-
- 20 replies
- 4.7k views
-
-
ஈழத்தமிழர்களின் தேசிய உணவு, ( ஓடியல் (பனங்கிழங்கு) கூழ் ) . உலகில் பல நாடுகள் தமது நாட்டுக்கேயுரித்தான அல்லது அந்த நாட்டு மக்களின் வரலாற்றுடன் தொடர்புள்ள உணவு வகையினை தேசிய உணவாகக் கொள்வது வழக்கம். பல நாடுகளில் அதே வகையான உணவுகள் வெவ்வேறு பெயர்களில் வழங்கப்பட்டாலும், உள்நாட்டில் கிடைக்கப்பெறும் உணவுப் பொருட்களை பாவித்து , பாரம்பரியமாக அந்த நாட்டு மக்களால் தயாரிக்கப்படும் உணவு வகையை அந்த நாட்டின் தேசிய உணவாகக் கொள்ளலாம். இலங்கையின் தேசிய இனங்களில் ஒன்றாகிய ஈழத்தமிழர்களின் தேசிய உணவு எது என்ற கேள்விக்கு ஓடியல் (((((பனங்கிழங்கு) கூழ் என்பது சரியான பதிலாக இருக்க முடியும். சிங்களவர்கள் பனங்கிழங்கில் கூழ் தயாரிப்பதில்லை. இன்று யாழ்ப்பாணத்துக்கு படையெடுக்கும் சிங்க…
-
- 19 replies
- 4.7k views
-
-
மீன் முருங்கைக்காய் குழம்பு தேவையான பொருள்கள் மீன் - 1/2 கிலோ முருங்கைக்காய் நறுக்கியது - 150கிராம் மல்லித்தூள் - 100கிராம் சிவப்பு மிளகாய் - 8கிராம் மஞ்சள் தூள் - 2கிராம் மிளகுத்தூள் - 4கிராம் வெந்தயம் - 2கிராம் தேங்காய் எண்ணெய் - 50மிலி தேங்காய் - 1 வெங்காயம் - 300கிராம் கொடும்புளி(Cocum) - 15கிராம் உப்பு - தேவையான அளவு தக்காளி - 80கிராம் இஞ்சி, பூண்டு கலவை - 10கிராம் கடுகு - 3கிராம் கருவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு சமையல் குறிப்பு விபரம் செய்வது: எளிது நபர்கள்: 4 கலோரி அளவு: NA தயாராகும் நேரம்: 20 (நிமிடம்) சமைக்கும் நேரம்: 30 (நிமிடம்) முன்…
-
- 9 replies
- 4.7k views
-
-
தேவையானவை வாழைப்பூ 1 பெரிய வெங்காயம் 1 பச்சை மிளகாய் 2 கடுகு , சீரகம் விரும்பினால் தேங்காய்ப்பூ சிரிதளவு(உடலில் கொழுப்பு கூடினவர்கள் பாவிக்காமல் இருப்பதே நன்று) :P சிறிதளவு எண்ணை உப்பு இறால் மிளகாய்த் தூள் செய்முறை முதலில் வாழைப்பூவை சிறிது சிறிதாக அரிதல் வேண்டும். அதை ஒரு பாத்திரத்தில் இட்டு தண்ணீர் விட்டு 1 மணித்தியாலத்திக்கு மேலாக ஊர விட வேண்டும் அப்பத்தான் அதில் உள்ள கசப்பு தன்மை நீங்கும், பின்னர் தண்ணீரை அகற்றி வாழைப்பூவை மட்டும் எடுத்து வைத்தல் வேண்டும் இறாலையும் தோல் நீக்கி வைக்க வேண்டும் பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து அடுப்பை போட வேண்டும் பின் சிறிதி எண்ணை விட்டு சூடானதும் அதில் கடுகு சீரகத்தை போட வேண்டும் பின் சிறிதாக அர…
-
- 8 replies
- 4.7k views
-
-
செ.தே.பொருட்கள் :- கோது நீக்கிய உளுந்து – 1 சுண்டு அவித்த வெள்ளை மா – 1 சுண்டு அவிக்காத வெள்ளை மா – 1 சுண்டு வெந்தயம் – 1 தே. கரண்டி சின்னச்சீரகம் – 1 தே. கரண்டி மிளகு – 1/2 தே. கரண்டி உப்பு – தேவையான அளவு மஞ்சள் தூள் – 1/4 தே. கரண்டி தாளிப்பதற்கு :- சின்ன வெங்காயம் – 8 (வெட்டி) செத்தல் மிளகாய் – 3 கடுகு – 1/2 தே. கரண்டி பெருஞ்சீரகம் – 1 தே. கரண்டி கறிவேப்பிலை – 1 நெட்டு செய்முறை :- * உளுந்தை 3-4 மணி நேரம் ஊற விடவும். * சீரகம்,மிளகு,வெந்தயத்தை இன்னொரு சிறிய பாத்திரத்தில் ஊறவிடவும். * உளுந்து ஊறியதும், நன்றாக அரைத்துக்கொள்ளவும். அத்துடன் ஊறவைத்த சீரகம், மிளகு,வெந்தயத்தையும் சேர்த்து பட்டுப் போல் அரைத்து எடுக்கவும். * அரைத்த மா…
-
- 44 replies
- 4.7k views
-
-
மணத்தக்காளி வத்தக் குழம்பு தேவையான பொருள்கள்: புளி – எலுமிச்சை அளவு தேங்காய் – அரை மூடி நல்லெண்ணை – 4 டேபிள்ஸ்பூன் மணத்தக்காளி வற்றல் – 2 டேபிள்ஸ்பூன் * உப்பு, மஞ்சள் தூள் – தேவையான அளவு வெல்லம் – சிறிது (விரும்பினால்) தாளிக்க: நல்லெண்ணை – 4 டேபிள்ஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் வெந்தயம் – 1 1/2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 6,7 துவரம் பருப்பு – 3 டீஸ்பூன் பெருங்காயம் – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் உளுந்து அப்பளம் – 1 மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது செய்முறை: * புளியை 2,3 தடவைகளாக நன்றாகக் கரைத்துக் கொள்ளவும். * தேங்காயை சிறிது தண்ணீர் சேர்த்து விழுது மாதிரி அரைத்துக் கொள்ளவும். …
-
- 3 replies
- 4.7k views
-
-
எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து வல்லாரை கீரையை சாப்பாட்டில் வாரத்திற்கு ஒருமுறையாச்சும் சேர்க்காத நாள் இல்லை எனலாம். வல்லாரை நிறைய சாப்பிட்டா நிறைய ஞாபக சக்தி வரும் என அப்பப்பா சொன்னதை அப்படியே நம்பிட்டேன். [அது நிஜம் என்பது பின்னர் தானே தெரிய வந்தது]. அதிலும் வல்லாரை சாப்பிட்டா தேர்வில நல்ல மதிப்பெண் எடுக்கலாம் என என் அண்ணா சொன்னதில இருந்து, வல்லாரை எனக்கு ஆருயிர் தோழன் ஆகிவிட்டது. [மதிப்பெண் பற்றி கேட்கப்படாது]. என்னதான் ஒஸ்திரேலியாவில் வல்லாரை நன்றாக வளரும் என்றாலும், எங்களுக்கு தெரிந்த யாரிடமும் வல்லாரை செடி இருக்கவில்லை. அப்பாவின் நண்பரிடம் இருக்கு என அறிந்து, இதுக்காக நானும் அப்பாவும் 3 மணித்தியாலங்கள் காரில் போய் செடி வாங்கி வந்து வீட்டில் நட்டோம். இப்பொழுது வ…
-
- 16 replies
- 4.7k views
-
-
- 1 / 2 கி. கோதுமை மா. - 250 கிராம் நெய். - 250 கிராம் ஐஸின் சுகர். - 5 கிராம் பேக்கின் பவுடர். - 2 மே. கரண்டி வனிலா எசன்ஸ். - 100 கிராம் கசுக்கொட்டை அல்லது கச்சான் (நொறுக்கியது). செய்முறை: ஒரு அளவான பாத்திரத்தில் எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டு நன்றாகக் கலந்து குழைக்கவும். ஒரு பெரிய தட்டில் (ரே) அதை பிஸ்கட் பருமனில் தட்டிப் பரவிவிட்டு பின் பிஸ்கட்டுக்குரிய அச்சுகளால் (சதுரம் , வட்டம், நட்சத்திரம், முக்கோணம் போன்றவை) அழுத்தி வெட்டி பின் அவற்றை சூடு தாங்கும் தட்டில் அடுக்கி ஓவனில் 180 c° டிகிரியில் சுமார் 15 , 20 நிமிடங்கள் பேக் பண்ணி எடுத்து ஆறியதும் பரிமாறவும்.
-
- 10 replies
- 4.7k views
-
-
தேவையானவை: குட்டி மீன் மிளகாய் தூள் 1/2 தே.க மஞ்சள் தூள் 1/4 தே.க உப்பு தேவைக்கேற்ப எண்ணெய் பொரிக்க செய்முறை: 1. மீனை வெட்டி, சுத்தம் செய்து எடுத்துக்குங்க. 2. வெட்டிய மீனுக்கு மேற்கூறிய தூள்களையும், உப்பையும் போட்டு நன்றாக பிரட்டி கொஞ்ச நேரம் வையுங்க. [அவசரம் என்றால் உடனே பொரிக்கலாம்] 3. எண்ணெயை சூடாக்கி மீன்களை போட்டு பொரித்தெடுங்கள்.[இரண்டு பக்கமும் திருப்பி பொரிக்க வேண்டும்] http://thooyaskitchen.blogspot.com/2009/03/blog-post_12.html
-
- 19 replies
- 4.7k views
-
-
நான் கடந்த வருடம் ஊருக்கு போனபோது, எனது நண்பன் ஒருவனின் ஆலோசனைப்படி வல்வெட்டிதுறையில் உள்ள ஒரு கொத்து ரொட்டி கடைக்கு இரவு சாப்பிட போனோம். வல்வெட்டிதுறை சந்தியில் இருந்து ஊறணி போற கடற்கரை வீதியில் ஒரு 100 மீட்டர் போனால் வலது கை பக்கமா ஒரு ஒழுங்கை (வல்வெட்டிதுறை சந்தியில் இருந்து 2வது ஒழுங்கை என நினைக்கிறன்) போகுது, அந்த ஒழுங்கைகை ஒரு 20 அல்லது 30 மீட்டர் போனால் இடது பக்கமா அந்த கடை இருக்குது. மிக சிறிய கடைதான் ஆனாலும் எமக்கு இடம் கிடைக்க ஒரு 20 நிமிடம் காத்து இருக்க வேண்டியிருந்தது. அவ்வளவு கூட்டம். சிக்கன் கொத்து, முட்டை கொத்து மற்றும் மரக்கறி கொத்து மட்டும் தான் கிடைக்கும். வேறு ஒரு சாப்பாடும் இல்லை. இங்கை ஒரு விசேடம் என்னவென்றல், மரக்கறி கொத்து தனி அடுப்பு வைத்துதான் போ…
-
- 29 replies
- 4.6k views
-