நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
கறி ரொட்டி தேவையான பொருட்கள் மேல் மாவுக்கு 1. மைதா மா – 2 கப் 2. ஈஸ்ட் – 1 ரீ ஸ்பூன் 3. உப்பு சிறிதளவு 4. மார்ஜரீன் – 1 டேபிள் ஸ்பூன் கறி தயாரிக்க 1. மீன் துண்டுகள் – 1 கப் 2. வெங்காயம் – 1 3. பூண்டு – 2 4. சீரகப் பவுடர் – ½ ரீ ஸ்பூன் 5. கடுகு – ¼ ரீ ஸ்பூன் 6. மிளகாய்த் தூள் – ரீ ஸ்பூன் 7. மஞ்சள் தூள் – ½ ரீ ஸ்பூன் 8. கறிவேற்பிலை சிறிதளவு 9. உப்பு, புளி தேவையான அளவு 10. ஓயில் – 1 டேபிள் ஸ்பூன் செய்முறை 1. தயாரிக்கும் மாவை 5-6 மணித்தியாலங்கள் முன்பு குழைத்து வைத்துவிடுங்கள். மா, ஈஸ்ட், உப்பு, மார்ஜரீன் கலந்து வையுங்கள். தண்ணீரை எடுத்து சிறிது சிறிதாக ஊற்றி பூரிமா பதத்தில் தயார்த்து வையுங்கள…
-
- 7 replies
- 1.9k views
-
-
வணக்கம், ரெண்டு நாளைக்கு முன்னம் ஒரு சின்னப்பிரச்சனை. என்ன எண்டால் வீட்டில இரவு சாப்பிடும்போது சோற்றுக்கு நல்ல கறி ஒண்டும் இருக்க இல்லை. வயிற்றில சரியான பசி. என்ன செய்வது எண்டு யோசிச்சுபோட்டு கடைசியாக ஒரு போத்தலுக்க இருந்த கடையில வாங்கி வச்சு இருந்த மிக்ஸரை (அந்த முறுக்கு, கச்சான், பருப்பு, கஜு, மிளகாய்த்தூள், உப்பு இந்தக்கலவை) சோற்றுக்க போட்டு கலந்து சாப்பிட்டன். பசியுக்கு நிறைவாக இருந்திச்சிது. இதுமாதிரி சிலவேளைகளில தயிர், ஊறுகாய், வேண்டுமானால் ketchup இதுகளையும் ஊத்தி வேற கறி ஒண்டும் போடாமல் சோற்றோட, புட்டு, பாணோட கலந்து சாப்பிடுறது. இப்பிடி வித்தியாசமான சாப்பாட்டு கலவைகளை நீங்களும் சாப்பிட்டு இருக்கக்கூடும். சின்னனில புட்டும், சம்பலும், சீனியும் கலந்து சாப்பிடுறத…
-
- 12 replies
- 4k views
-
-
காலையில் இட்லி அல்லது தோசைக்கு தொட்டுக் கொள்ள என்ன சட்னி செய்வதென்று தெரியவில்லையா? அப்படியானால் கறிவேப்பிலை சட்னியை முயற்சி செய்து பாருங்கள். அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள கறிவேப்பிலை சட்னி சற்று வித்தியாசமான சுவையைக் கொண்டது. சரி, இப்போது அந்த கறிவேப்பிலை சட்னியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: தேங்காய் - 1/2 கப் (துருவியது) உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - 1/4 கப் பச்சை மிளகாய் - 5 புளி - சிறு துண்டு மஞ்சள் தூள் - 1 சிட்டிகை கடுகு - 3/4 டீஸ்பூன் எண்ணெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தண்ணீர் - தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் உளுத்தம் பருப்பு போட்டு பொன்னிறமாக வறுத்து, பின் …
-
- 0 replies
- 514 views
-
-
கறிவேப்பிலை துவையல் இட்லி, தோசை, உப்புமா, மற்றும் பணியாரம் ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். தவிர சூடான சாதத்துடன் இதனை கலந்து நெய் விட்டு சாப்பிடலாம். மேலும் கறிவேப்பிலை துவையல் தயிர்சாதத்துடன் சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள்: கறிவேப்பிலை - 1 கப் எண்ணெய் - 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி வர மிளகாய் - 5 பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி புளி - சிறிய துண்டு …
-
- 3 replies
- 1.1k views
-
-
நமக்கு மிகவும் பிடிச்ச ஐட்டம். இருந்திட்டு சாப்பிடலாம். நல்லாயிருக்கும். தேவையானப் பொருட்கள்: அரிசி - 2 கப் கறிவேப்பிலை - 1 கப் தேங்காய் துருவல் - 1/2 கப் கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 4 மிளகு - 1 டீஸ்பூன் பெருங்காயம் - ஒரு சிறு துண்டு நெய் - 1 டேபிள்ஸ்பூன் எண்ணை - 1 டேபிள்ஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் முந்திரிப்பருப்பு - 10 உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு செய்முறை: அரிசியை வேகவைத்து, குழையாமல் பார்த்து, வடித்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் (pan) எண்ணை விட்டு, பெருங்காயம், கடலைப்பருப்பு, மிளகாய் அகியவற்றை சிவக்க வறுக்கவும். பின் அதில் மிளகு சேர்த்து, சிறிது வறுத்து, அதில் கறிவே…
-
- 30 replies
- 4.1k views
-
-
கறிவேப்பிலை சிக்கன் விடுமுறை நாட்களில் வித்தியாசமாக ஏதேனும் சமைத்து சாப்பிட தோன்றும். அதிலும் அசைவ உணவுகளான சிக்கன், மட்டன் போன்றவற்றை தான் செய்து சாப்பிட விரும்புவோம். உங்களுக்கும் அப்படி தோன்றினால், இந்த வாரம் கறிவேப்பிலை சிக்கன் செய்து சுவையுங்கள். இது நிச்சயம் உங்கள் நாவிற்கு விருந்தளிக்கும். தேவையான பொருட்கள்: சிக்கன் - 250 கிராம் எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு கறிவேப்பிலை - 1 கட்டு பச்சை மிளகாய் - 4 (நீள துண்டுகளாக்கிக் கொள்ளவும்) எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லித் தூள் - 1 டீஸ்பூன் ஊற வைப்பதற்கு... …
-
- 1 reply
- 789 views
-
-
கறிவேப்பிலைக்கு, திடீர் தட்டுப்பாடு ஏன் ஏற்பட்டது? http://www.youtube.com/watch?v=pIp-Va0fsjw
-
- 6 replies
- 929 views
-
-
பொங்கலுக்கு கல்கண்டு பொங்கலை வீட்டில் செய்து உறவுகளை அசத்துங்கள். தற்போது கல்கண்டு பொங்கல் எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கல்கண்டு :400 கிராம் பால் : 1 லிட்டர் திராட்சை : 10௦ நெய் : 200 கிராம் முந்திரி : 10௦ பச்சரிசி : 500 கிராம் ஏலக்காய் : சிறிதளவு தூள் செய்வது எப்படி : எடுத்து வைத்த கல்கண்டை நன்றாக பொடித்து கொள்ளவும். பின்னர் பச்சரிசியை நன்றாக கழுவி அதை அரை மணி நேரம் ஊற வைத்து ரவையை போல உடைத்து கொள்ளவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும். காய்ச்சிய பால் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் நாம் ஏற்கனவே உடைத்து வைத்திருந்த பச்சரிசியை சேர்த்து நன்றாக…
-
- 1 reply
- 1.8k views
-
-
அப்பம் எண்டா கூட எல்லாருக்கும் பிடிக்கும். அதுவும் பால் அப்பம் எண்டா ருசியே தனி. ஊரில அப்பத்துக்கு போட போறம் எண்டா காலேலயே போய் ஒரு டம்ளரில உடன் கள்ளு வாங்கி வந்து மணக்க மணக்க விட்டு குழைச்சு செய்வம். இங்க எங்க பனைமரமா நிக்குது. இல்லை கடையில எங்காச்சும் வாங்க முடியுமா என்ன...அதுக்காக ஒரு வழி சமீபத்தில அறிஞ்சன். (ஆமா இது எப்பவோ எனக்கு தெரியும் எண்டு தெரிஞ்சவை பேசாதைங்கோ) இது தெரியாதவைக்கு மட்டும். செய்முறை: ஒரு டம்ளரில இளஞ் சூடான தண்ணியை தேவையான அளவு விடவும். அப்புறம் ஈஸ்ட் , சீனி தண்ணி அளவுக்கேற்ப போட்டு...கொஞ்ச நேரம் கலக்கி ஊற விடவும். கொஞ்ச நேரத்தால மெல்லிய கள்ளு வாசம் வீசும். அப்புறம் எடுத்து அப்பத்துக்கு பயன்படுத்தலாம். கூட எல்லாருக்கும் அளவுகள் கொ…
-
- 147 replies
- 25.7k views
-
-
காக்கிநாடா சிக்கன் ட்ரை ப்ரை: ஆந்திரா ரெசிபி சிக்கனில் எத்தனையோ வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் காக்கிநாடா சிக்கன் ட்ரை ப்ரை. இந்த ரெசிபியானது ஆந்திராவில் மிகவும் பிரபலமானது. இதனை வீட்டில் கூட செய்து முயற்சிக்கலாம். இங்கு அந்த ஆந்திரா ஸ்பெஷல் ரெசிபியான காக்கிநாடா சிக்கன் ட்ரை ப்ரை ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/2 கிலோ பெரிய வெங்காயம் - 1 பூண்டு - 10 பற்கள் (பொடியாக நறுக்கியது) இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 8 (அரைத்தது) உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு அரைப்பதற்கு... பட்டை - 2 கிராம்பு - 4 மல்லி - 1 டேபிள் ஸ்பூன் வெந்தயம் - 1/4 டீ…
-
- 3 replies
- 1.3k views
-
-
காஜூ (முந்திரி) சிக்கன் தேவையான பொருட்கள் முந்திரி - 200 கிராம் சிக்கன் - 500 கிராம் கடுகி - 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 3 பட்டை - 2 கிராம்பு - 6 ஏலக்காய் - 3 வெங்காயம் - 2 ஜாதி பத்திரி - 1 இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன் மல்லித் தூள் - 1 1/2 ஸ்பூன் கரம் மசாலா - 1 அன்னாசிப் பூ - 1 உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - 2 டீஸ்பூன் பாதாம் - 2 டீஸ்பூன் கசகசா - 50 கிராம் செய்முறை 1.நறுக்கி வைத்துள்ள வெங்காயம், ஊற வைத…
-
- 0 replies
- 595 views
-
-
காஜூ சிக்கன் தேவையான பொருட்கள் முந்திரி - 150 கிராம் சிக்கன் - 500 கிராம் கடுகி - 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 3 பட்டை - 2 கிராம்பு - 6 ஏலக்காய் - 3 வெங்காயம் - 2 ஜாதி பத்திரி - 1 இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன் மல்லித் தூள் - 1 1/2 ஸ்பூன் கரம் மசாலா - 1 அன்னாசிப் பூ - 1 உப்பு - தேவைக்கேற்ப …
-
- 1 reply
- 611 views
-
-
https://youtu.be/kmfilSQXvDE
-
- 0 replies
- 605 views
-
-
அருமையான சைடிஷ் காடை பெப்பர் மசாலா சப்பாத்தி, நாண், புலாவ், சாத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த காடை பெப்பர் மசாலா. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : காடை - 4 பெரிய வெங்காயம் - 2 தயிர் - அரை கப் கொத்தமல்லி - 2 கொத்து புதினா - ஒரு கொத்து மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள் - 2 டீஸ்பூன் கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 2டீஸ்பூன் மல்லித் தூள் - 1 டீஸ்பூன் எ…
-
- 0 replies
- 740 views
-
-
காடை முட்டை குழம்பு கோழி முட்டையை விட காடை முட்டை மிகவும் ஆரோக்கியமானது என்பது தெரியுமா? ஆம், இதுவரை நீங்கள் காடை முட்டையை பச்சையாக குடித்திருப்பீர்கள். ஆனால் அதனைக் கொண்டு குழம்பு செய்து சுவைத்ததுண்டா? இங்கு அந்த காடை முட்டையைக் கொண்டு குழம்பு எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: காடை முட்டை - 20 எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் வெங்காயம் - 1 (நறுக்கியது) கறிவேப்பிலை - சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் தக்காளி - 2 (அரைத்தது) பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது) உப்பு - தேவையான அளவு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லித் …
-
- 11 replies
- 4.4k views
-
-
காட்டேஜ் சீஸ் சாலட் தேவையானவை: பனீர் (காட்டேஜ் சீஸ்) - 250 கிராம் கேரட் - 100 கிராம் பூண்டு - 2 பல் லெட்யூஸ் இலை - 150 கிராம் கிஸ்மிஸ் (உலர் திராட்சை) - அரை டீஸ்பூன் வால்நட் - 4 டேபிள்ஸ்பூன் எலுமிச்சைப்பழம் - ஒன்று (சாறு எடுத்துக்கொள்ளவும்) மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: பனீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இத்துடன் சிறிதளவு உப்பு சேர்த்துக் கலந்து பத்து நிமிடம் ஊறவைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடானதும், ஊறவைத்த பனீர் மற்றும் தோல் நீக்கிய முழுப்பூண்டு சேர்த்து பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுக்கவும். பிறகு, அகலமான பவுலில் பொரித்தெடுத்தவற்றுடன் தேவையான…
-
- 10 replies
- 3.4k views
-
-
காதலர் தின ஸ்பெஷல் கிஃப்ட் பிங்க் மஃபின் கேக் ரெசிப்பி! தேவையான பொருட்கள்: உருக்கிய உப்பில்லாத வெண்ணெய் - 125 கிராம் சர்க்கரை - 125 கிராம் முட்டை - 2 மைதா மாவு - 125 கிராம் ராஸ்பெர்ரி - 150 கிராம் பேசன் ஃப்ரூட் - பழத்தை உடைத்து உள்ளிருக்கும் பல்ப் பகுதியை மட்டும் கூழாக்கிக்கொள்ள வேண்டும். பால் - சிறிதளவு (கேக் தயாரிப்புக்கான கலவை இறுகி விடாமலிருக்க இது உதவும். கேக்கில் ஐஸிங் செய்யத் தேவையானவை: ஐஸிங் சுக…
-
- 0 replies
- 777 views
-
-
காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடனோ, மதிய உணவை முடித்த பின்னரோ, நடுநடுவே சிறு இடைவேளையின்போது அல்லது இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன்னரோ என உலகின் பெரும்பாலானோருக்கு எப்போதும் பிடிக்கும் ஒரு பானமாக காபி உள்ளது. சர்வதேச காபி கழகத்தின் கணக்கீட்டின்படி, கடந்த 1991ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 90 மில்லியன் 60 கிலோ காபி பைகள் பயன்படுத்தப்பட்டதாகவும், இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட அபரிமிதமான வளர்ச்சியின் காரணமாக இந்தாண்டின் காபி பயன்பாடு 160 மில்லியன் பைகளை தாண்டுமென்றும் தெரிகிறது. நேற்று (திங்கட்கிழமை) உலக காபி தினம் கொண்டாடப்பட்ட நிலையில், காபியை பற்றி உங்களுக்கு தெரியாத 10 ஆச்சர்யமளிக்கும் தகவல்களை தெரிந்துகொள்வோம். 1. காபியும் ஒரு பழம்தான்! பழுப்பு நிறத்த…
-
- 3 replies
- 1.1k views
-
-
தேவையான பொருட்கள்: அரிசி – 1 கப், தேங்காய்ப் பால் – 3 கப், ஒரு இன்ச் அளவில் அரிந்த காய்கறிக் கலவை – 1 கப் ( முருங்கை, உருளை, கேரட், பீட்ரூட், பீன்ஸ், பட்டாணி, பட்டர் பீன்ஸ்) வெங்காயம் – 1 தக்காளி – 1 அரைக்க : பச்சைமிளகாய் – 2, இஞ்சி – 1 இன்ச், பூண்டு – 2 பல், எண்ணெய் – 2 டீஸ்பூன். கொத்தமல்லித்தழை – 1 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு செய்முறை: * கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * அரிசியை நன்றாக கழுவி வைக்கவும். * அரைக்கக் கொடுத்துள்ளவற்றை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். * குக்கரில் எண்ணெயைக் காயவைத்து வெங்காயத்தை போட்டு வதக்கிய பின் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும். * இதி…
-
- 0 replies
- 638 views
-
-
[size=5]தேவையான பொருட்கள்[/size] சாதம் - 2 கோப்பை கேரட் - 1 பீன்ஸ் - 50 கிராம் குட மிளகாய் - 1 முட்டைக்கோஸ் - 100 கிராம் பச்சை மிளகாய் - 2 பெரிய வெங்காய் - 1 இஞ்சி பூண்டு விழுது - 1 பட்டை - 2 கிராம்பு - 3 பிரியாணி இலை - 1 ஏலக்காய் - 1 தக்காளி சாஸ் - 2 தேக்கரண்டி நெய் - 2 தேக்கரண்டி எண்ணெய் - 1 தேக்கரண்டி மிளகு - 1/4 தேக்கரண்டி சர்க்கரை - 1/2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு [size=5]செய்முறை[/size] 1. சாதத்தை கொஞ்சம் விறைப்பாக வடித்து ஆற வைக்கவும். 2. கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், குட மிளகாய், பெரிய வெங்காயம் ஆகியவற்றை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை…
-
- 0 replies
- 729 views
-
-
-
-
-
காய்ச்சலை குணமாக்கும் மருத்துவ ரசம் செய்ய...! உடல் வலி, காய்ச்சல், சளி வந்தவர்களுக்கும் ஏற்றது இந்த மருந்து ரசம். இதை செய்வது மிகவும் எளிமையானது. தேவையான பொருட்கள்: கண்டந் திப்பிலி குச்சிகள் - 6 (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) பூண்டு - 4 பல் புளி - நெல்லிகாய் அளவு துவரம் பருப்பு - ஒரு டீஸ்பூன் தனியா - ஒரு டீஸ்பூன் …
-
- 2 replies
- 988 views
-
-
கார சாரமான பேபி உருளைக்கிழங்கு ரெசிபி! உருளைக் கிழங்கில் செய்த உணவுகள் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் சிறிய அளவிலான பேபி உருளை என்றால் அவர்கள் மறு வார்த்தைப் பேசாமல் சாப்பிட்டுவிடுவார்கள். குளிர்காலத்தில் பேபி உருளைக்கிழங்குகளின் சீசன் என்பதால், இந்த மாதத்தில் பேபி உருளையை வெரைட்டியாகச் சமைத்து அவர்களுக்குத் தரலாம். தேவையான பொருட்கள் : பேபி பொட்டேடோ - 200 கிராம் குடை மிளகாய் - 1 இஞ்சி-பூண்டு விழுது - 1 ஸ்பூன் பெரிய வெங்காயம் - 1 தக்காளி சாஸ் - 50 கிராம் இடித்த மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன் …
-
- 0 replies
- 717 views
-