நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
[size=4]தேவையானவை : [/size] [size=4]கோழி துண்டுகள்- 300கிராம்[/size] [size=4]பெரிய வெங்காயம்- 1[/size] [size=4]சின்ன வெங்காயம்- 12[/size] [size=4]தக்காளி- 1[/size] [size=4]பச்சை மிளகாய்- 4[/size] [size=4]இஞ்சி- ஒன்றரை இன்ச் துண்டு[/size] [size=4]பூண்டு- 6பல்[/size] [size=4]மிளகாய் தூள்- 2மேசைக்கரண்டி[/size] [size=4]தனியா தூள்- 3 மேசைக்கரண்டி[/size] [size=4]மஞ்சள் தூள் 1தேக்கரண்டி[/size] [size=4]கறிவேப்பிலை- 2இனுக்கு[/size] [size=4]பாண்டான் இலை-பாதி[/size] [size=4]மல்லிக் கீரை- சிறிதளவு[/size] [size=4]உப்பு- தேவையான அளவு[/size] [size=4]கரம் மசாலா பொடி- 1/2தேக்கரண்டி (பட்டை கிராம்பு, ஏலக்காய், சோம்பு, பிரிஞ்சி இலை சேர்த்து வறுத்து அரைத்த …
-
- 6 replies
- 5k views
-
-
2020 இல் இந்த pandemic துவங்கியபோது, நிறைய நேரம் சும்மா இருந்தது. அப்பொழுது பிரியாணி செய்து பாப்போம் என்று விதம் விதமான ரெஸிபிகள், YouTube விடீயோகள் நிறைய பார்த்து செய்வது. ஆரம்பத்தில் ஒன்றுமே சரியாக வராது, தண்ணி அளவு பிழைக்கும், அல்லது அடிப்பிடிக்கும், சரியான ingredients இருக்காது, தம் சரியாக வைக்க வராது. அப்பிடி இருந்து படிப்படியாக இப்பொழுது, விருப்பமான சுவையில், உறைப்பில் செய்யும் அளவுக்கு வந்துவிட்டேன். ஒரே குறை, பிரியாணி செய்வது கொஞ்சம் நேரம் எடுக்கும் வேலை இதில் ஹைதராபாதி சிக்கன் பிரியாணி , எனது மகன்களில் ஒருவருக்கு பிடிக்கும் என்பதால் ஒவ்வொரு கிழமையும் அவருக்காகவே செய்வேன், நாங்களும் சாப்பிடுவோம். இந்த பிரியாணி மற்றைய வகைகளை விட கொஞ்சம் இலகுவானது, தண்ணி அளவ…
-
- 6 replies
- 498 views
-
-
என்னென்ன தேவை? பச்சரிசி - 2 டம்ளர், புளி - 100 கிராம், வெந்தயம் - 1/2 டீஸ்பூன், மிளகு -1 டீஸ்பூன், தனியா - 2 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 10 அல்லது தேவைக்கு, கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிது, உப்பு - தேவைக்கு. கடுகு - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன், வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயம் - தேவைக்கு, நல்லெண்ணெய் - 1 கப், வெல்லம் - 1 கட்டி. எப்படிச் செய்வது? பச்சரிசியை வேகவைத்து உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும். இதில் சிறிது மஞ்சள்தூள், 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து பிசறி, தட்டில் ஆற விடவும். புளியை கெட்டியாக கரைத்து வைக்கவும். இப்போது வெறும் கடாயில் தனிய…
-
- 6 replies
- 1.1k views
-
-
செட்டிநாடு எலும்பு குழம்பு செட்டிநாட்டு சமையல் அலாதியான சுவை கொண்டது. அதிலும் அசைவ சமையலில் செட்டிநாட்டு சமையலுக்கு ஈடு இணை இல்லை எனலாம். மட்டன் எலும்பு குழம்பு சுவையோடு உடல் ஆரோக்கியத்திற்காகவும் செய்து கொடுப்பார்கள். உங்கள் வீட்டில் நீங்களும் செய்து பாருங்களேன். தேவையான பொருட்கள் எலும்பு கறி - அரைக்கிலோ சின்ன வெங்காயம் – 100 கிராம் தக்காளி – 2 மட்டன் மசாலா தூள் – 3 டீஸ்பூன் மஞ்சள் தூள் – சிறிதளவு இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 2 டீ ஸ்பூன் மிளகு, சீரகம், கசகசா அரைத்தது — 2 டீஸ்பூன் தேங்காய் பால் — 1 கப் எண்ணைய் — 1 1/2 ஸ்பூன் பட்டை — 1 அங்குலம் அளவு கிராம்பு — 4 கறிவேப்பிலை ஒரு கொத்து எலும்பு குழம்பு …
-
- 6 replies
- 1.5k views
-
-
இலங்கை முறைப்படி பத்தியத்தூள் செய்வது எப்படி என்று விளக்கம் தருவீர்களா?
-
- 6 replies
- 2.9k views
-
-
மரவள்ளியா என்று நினைப்பவர்களுக்கு; சவ்வரிசியே மரவள்ளி தானே.
-
- 6 replies
- 1k views
-
-
கோதுமை அல்வா: தீபாவளி ரெசிபி உங்களுக்கு அல்வா பிடிக்குமா? நீங்கள் கோதுமை அல்வாவை சுவைத்ததுண்டா? அதை ஈஸியாக வீட்டிலேயே செய்யலாம். அதிலும் தீபாவளிக்கு ஸ்பெஷலாக அந்த கோதுமை அல்வாவை செய்து சுவையுங்கள். இந்த அல்வா செய்வதற்கு 1/2 மணிநேரம் போதும். சரி, இப்போது அந்த கோதுமை அல்வாவை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: கோதுமை மாவு - 1/4 கப் சர்க்கரை - 1/2 கப் தண்ணீர் - 1/2 கப் + 1/4 கப் நெய் - 1/4 கப் + 2 டீஸ்பூன் ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை பாதாம் - 4 (நறுக்கியது) செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/4 கப் நெய் ஊற்றி சூடானதும், அதில் கோதுமை மாவு சேர்த்து கட்டி சேராதவாறு தொடர்ந்து 20 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும். பின் அதி…
-
- 6 replies
- 4.4k views
-
-
முடக்கத்தான் இலை ரசம் தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு 25 கிராம் முடக்கத்தான் இலை - கிள்ளியது 2 கைப்பிடி புளி அல்லது தேசிக்காய் - தேசிக்காய் - 1 (அல்லது) புளி கோலி உருண்டை அளவு உப்பு - தேவையான அளவு பெருங்காயம் - 1 டீஸ்பூன் தக்காளி- நாட்டு தக்காளி - 1 (பெங்களூர் தக்காளியாகின் 2) மிளகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் செய்முறை: துவரம் பருப்பு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். முடக்கத்தான் இலை எடுத்துத் தண்ணீர்விட்டு வேக வைக்கவும். பிறகு கடைந்து கொள்ளவும். அல்லது மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். புளி எடுத்துக் கரைத்துக் கொள்ளவும். இதனுடன் தேவையான அளவு உப்பு, பெருங்காயம், தக்காளி இவைகளைப் போட்டுத் தண்ணீர் விட…
-
- 6 replies
- 5.5k views
-
-
காலிஃப்ளவர் 65 மாலை வேளையில் பசிக்கும் போது பஜ்ஜி, போண்டா என்று செய்து சாப்பிட்டு போர் அடித்திருந்தால், வீட்டில் காலிஃப்ளவர் இருந்தால், அதனைக் கொண்டு சிக்கன் 65 போன்று, காலிஃப்ளவர் 65 செய்து சாப்பிடுங்கள். இது செய்வது மிகவும் ஈஸி. இங்கு காலிஃப்ளவர் 65 ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள். தேவையான பொருட்கள்: காலிஃப்ளவர் - 1 சிறியது (நறுக்கியது) தயிர் - 100 மி.லி இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன் கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கேசரி பவுடர் - 1…
-
- 6 replies
- 1.8k views
-
-
1 சுண்டுப் பச்சை அரிசி, சிறிய வெள்ளை ரகம் 1/4 சுண்டுக்குச் சிறிது கூடிய இளநீர் 1/2 செ.மீ. தடிப்பமுள்ள கரை நீக்கப்பட்ட ஒரு துண்டு பாண் குவித்து ஒரு தேக்கரண்டி சீனி பெரிய பாதித் தேங்காய் 1 தே.க. உப்புத்தூள் 1/3 தே.க. அப்பச்சோடா பச்சை அரிசியை நன்றாகக் கழுவி, 6-8 மணி நேரம் ஊறவிட்டு, தண்ணீரில்லாமல் வடித்து, பாண், சீனி, இளநீர் என்பவற்றுடன் பிளென்டர் (food blender) அல்லது ஆட்டுக்கல்லில் போட்டு, பட்டு ரவைபோன்ற சிறு குறுணிகள் இருக்கும்படி, சிறிது தொய்ந்த பதத்தில் அரைத்து வழித்து, ஒரு அளவான பானையில் போட்டு, ஐந்து நிமிடங்களாகுதல் நன்றாகப் பினைந்து, வெக்கை பிடிக்கக்கூடியதாக அணைந்த அடுப்பங்கரை, அல்லது மெல்லிய சூட்டில் அணைக்கப்பட்ட அவண் (oven) அல்லது இளஞ்…
-
- 6 replies
- 1.6k views
-
-
வெஜிடேபுள் பிரியாணி வித் மட்டன்: தேவையான பொருட்கள் : வெஜிடேபுள் பிரியாணி வித் மட்டன்: அரிசி - ஒரு படி (எட்டு டம்ளர்) மட்டன் - அரை கிலோ உருளை - கால் கிலோ கேரட் - கால் கிலோ பட்டாணி - 100 கிராம் பீன்ஸ் - 50 கிராம் வெங்காயம் - 700 கிராம் தக்காளி - 700 கிராம் தயிர் - 300 கிராம் இஞ்சி - 200 கிராம் பூண்டு - 125 கிராம் பச்சை மிளகாய் - 15 மிளகாய் தூள் - ஐந்து தேக்கரண்டி மஞ்சள் தூள்- கால் தேக்கரண்டி உப்பு - தேவைக்கு கொத்தமல்லி - இரண்டு கட்டு புதினா - ஒரு கட்டு சாஃப்ரான் - இரண்டு பின்ச் (பாலில் ஊற வைக்கவும்) …
-
- 6 replies
- 1.5k views
-
-
சென்னையில் இங்கலாம் பிரியாணி சாப்ட்டிருக்கீங்களா? #FoodGuide பிரியாணி பிடிக்காதவர்கள் யாராவது இருப்போமா!?. நல்ல சுவையுடனும் இருக்க வேண்டும், அதே நேரத்தில் நியாயமான விலையுடனும் இருக்க வேண்டும் என தேடிப்பிடித்து சாப்பிட்டிருப்போம். முகலாய மன்னர்களின் ஆட்சியில் இந்தியாவுக்குள் பிரியாணி என்ற உணவு வகை நுழைந்ததாக தகவல்கள் இருக்கின்றன. சென்னையில் உள்ள டாப் பிரியாணி கடைகளுக்கு ஒரு ரவுண்டு போய் வரலாமா.., கல்யாண பவன் - எழும்பூர் : இஸ்லாமிய திருமணங்களில் சாப்பிடுவதைப் போல பிரியாணி சாப்பிட ஆசையா?. உங்களுக்காகவே இருக்கிறது 'கல்யாண பவன் பிரியாணி கடை'. எழும்பூரில் மதிமுக தலைமைக்கழகமான தாயகத்தை ஒட்டியே இருக்கிறது ஹோட்டல் கல்யாண பவன் . சிக்கன் பிரியாண…
-
- 6 replies
- 986 views
-
-
அடிக்கடி BBQ/Grill பண்ணி சாப்பிடுபவர்களுக்கு இது ஒரு சுவையான ரெஸிபி. வீட்டில் அடிக்கடி BBQ செய்வோம் அப்பொழுது இதுவும் கட்டாயம் இருக்கும். வீட்டில் எல்லோருக்கும் நன்றாக பிடிக்கும். பார்க்க Turkish Shish Kebab மாதிரி இருந்தாலும், சுவை வித்தியாசமானது. எனது அனுபவத்தின்படி, BBQவிற்கு Lamb கால் வாங்கக்கூடாது, கொஞ்சம் கடினமாகவே இருக்கும், நல்ல tender cutஆக பார்த்து வாங்கினால் மிகவும் சுவையாக இருக்கும். கீழே செய்முறை உள்ளது. நான் ஆரம்பத்தில், வேறு ஒரு சிறப்பான வீடீயோ பார்த்து செய்தேன். அந்த வீடியோவை இப்பொது கண்ணவில்லை. கிட்டத்தட்ட கீழே இருக்கும் செய்முறை போன்றதுதான். இதில் குறிப்பிடப்படும் buttermilk என்பது, எங்களது மோர். இது கிடைக்காவிட்டால் தயிர் பாவி…
-
- 6 replies
- 804 views
- 1 follower
-
-
தேவையான பொருட்கள்: பாறை மீன் பெரியதாக நான்கு * மிளகாய்தூள் -இரண்டுகரண்டி * மஞ்சள்தூள் -ஒருகரண்டி * அரைக்கவும் * பச்சைமிளகாய் -50கிராம் * பூண்டு -10பல் * மிளகு -இரண்டு தேக்கரண்டி * மல்லி பொதினா -தலா ஒருகைப்பிடி * உப்பு -தேவையான அளவு * வினிகர் நான்கு கரண்டி செய்முறை : * மீனை சுத்தம் செய்து இரண்டு பக்கமும் கிறி வைக்கவும் * அரைக்க சொல்லியுள்ள பொருள்களை அரைக்கவும் * மீனில் அதைத்த மசாலா தூள்கள் வினிகர் சேர்த்து நன்கு பிரட்டி இரண்டு மணிநேரம் ஊறவைக்கவும் * பின் கிரில் தட்டில் சிறிது எண்ணெய் தடவி பிரட்டிய மீனை வைக்கவும் * அவெனை 280° சூடாகி அதில் மீனை வைக்கவும் * பத்து நிமிடத்திற்கு ஒரு முறை திருப்பி போடவும் மீன் தண்ணீர் விடு…
-
- 6 replies
- 932 views
-
-
வெண்டைக்காய் சிப்ஸ் மாலையில் அனைவருக்குமே டீ அல்லது காபி குடிக்கும் போது காரமாக எதையேனும் சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்போது பஜ்ஜி, போண்டா செய்து சாப்பிட்டு போர் அடித்திருந்தால், சற்று வித்தியாசமாக வெண்டைக்காய் சிப்ஸ் செய்து சுவையுங்கள். குறிப்பாக இது குழந்தைகளுக்கு பிடித்தவாறு இருக்கும். சரி, இப்போது அந்த வெண்டைக்காய் சிப்ஸை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: வெண்டைக்காய் - 10-15 குடைமிளகாய் - 1/2 கப் (நீளமாக நறுக்கியது) மிளகாய்த்தூள்- 1 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா - 1 டீஸ்பூன் சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் - 1/4 டீஸ்பூன் அரிசி மாவு - 1/4 டீஸ…
-
- 6 replies
- 1.4k views
-
-
தேவையானபொருட்கள் சிக்கன் - 1/2கிலோ வத்தல் தூள் - 4தேக்கரண்டி மல்லித்தூள் 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி கரம் மசாலா - 1/4தேக்கரண்டி எலுமிச்சைசாறு - 5தேக்கரண்டி தயிர் - 2தேக்கரண்டி இஞ்சிபூண்டுவிழுது - 1தேக்கரண்டி ஆரஞ்சு கலர் 1/4 தேக்கரண்டி உப்பு - 1தேக்கரண்டி எண்ணெய் - 2 கப் கொத்தமல்லிதழை - 4 கொத்து செய்முறை சிக்கனை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்..............ஒரு பாத்திரத்தில் வத்தல் தூள்,மல்லி தூள்,உப்பு,கரம்மசாலா,கலர்பவு
-
- 6 replies
- 3.1k views
-
-
ஆயுத பூஜை அசத்தல்!- பொரிவிளங்கா உருண்டை ஆயுத பூஜை, விஜயதசமி கொண்டாட்டத்தில் வீடே அமர்க்களப் படும். நுழைகிற வீடுகளில் எல்லாம் பொரி கடலையைக் கொடுத்து உபசரிப்பார்கள். வீட்டிலும் பொரிகடலை ஏராளமாகக் குவிந்துவிடும். இவ்வளவு பொரியை என்ன செய்வது என்று மலைத்து உட்கார்ந்துவிட வேண்டாம். பண்டிகைக் காலப் படையல் பண்டங்களை வைத்தே விதவிதமான பலகாரங்களைச் செய்து ருசிக்கலாம் . என்னென்ன தேவை? தினை, பாசிப்பருப்பு தலா 1 கப் வெல்லம் 2 கப் வறுத்த வேர்க்கடலை சிறிதளவு தேங்காய்ப் பல் அரை கப் பொடித்த ஏலக்காய் சிறிதளவு எப்படிச் செய்வது? தினையரிசியையும் பாசிப் பருப்பையும் தனித்தனியாகச் சிவக்க வறுத்து, மிக்ஸியில் அரைத்துக்கொள்ளுங்கள். வெல்லத்தில் கெட்டிப் பாகு வைத்து அதில் அரைத்த மாவு…
-
- 6 replies
- 1.6k views
-
-
கீரைப் புட்டு தேவையானப் பொருட்கள் வறுத்த சிவப்பரிசிமா - 2 கப் கலந்து வெட்டிய கீரை - 3 - 4 கப் (அரைக்கீரை, புளிக்கீரை, பொன்னாங்கண்ணி,குறிஞ்சா, சண்டி, முருங்கை etc) தேங்காய்ப்பூ - 4 - 5 மேசைக்கரண்டி சிறிதாக வெட்டிய பச்சை மிளகாய் - 1 மேசைக்கரண்டி உப்பு செய்முறை கீரைக்கு இரு சிட்டிகை உப்பு போட்டு கலக்கவும். அரிசிமாவில் உப்பு சேர்த்து கலந்து சுடு தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும். மாவுக்கலவை கையால் பிடித்தால் நிற்கக் கூடிய பதத்திற்கு வந்ததும் அதனை ஒரு பரந்த தட்டில் (உ + ம்:-பேக்கிங் தட்டு) கொட்டி ஒரு தம்ளரினால் சிறிய குறுணல்களாக கொத்தவும். இதனுடன் தேங்காய்ப்பூ, வெட்டிய கீரைகள், பச்சை மிளகாய் கலந்து ஆவியில் அவித்து எடுத்து ஆறவி…
-
- 6 replies
- 3.7k views
-
-
தேவையான பொருட்கள்:- கரட், கோதுமை பச்சைமா,கோதுமை அவித்தமா,சீனி,எண்ணை,தேவையான அளவு உப்பு,அடுப்பு,தாச்சிசட்டி,பண
-
- 6 replies
- 3.5k views
-
-
உறவுகளே வட்டிலப்பம் செய்வது எப்படி என்று தெரிந்தால் சொல்லுவீர்களா? நன்றி
-
- 6 replies
- 9.5k views
-
-
-
- 6 replies
- 812 views
- 2 followers
-
-
கேரட் ரொட்டி தேவையான பொருட்கள் கோதுமை மாவு - 2 கப் கேரட் துருவல் - 2 கப் கொத்துமல்லி இலை - 1 கப் ( நறுக்கியது ) மிளகாய்ப் பொடி - ஙூ தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு சமையல் எண்ணெய் - 2 தேக்கரண்டி நெய் - தேவையான அளவு தயிர் - 2 மேசைக்கரண்டி செய்முறை 1. கோதுமை மாவில் உப்பு, மிளகாய்ப்பொடி, கேரட் துருவல், மல்லிக்கீரை அனைத்தையும் சேர்க்கவும். 2. தண்ணீரையும், தயிரையும், சமையல் எண்ணெயும் சேர்த்து நன்கு பிசையவும். 3. மாவை சிறிய உருண்டைகளாக உருட்டவும். 4. உருட்டிய மாவை தேவைப்படும் அளவில் ரொட்டிகளாகத் தயாரித்து அதை நான்ஸ்டிக் டவாவில் போட்டு எடுக்கவும். 5. நன்றாக வெந்து பிரவுன் நிறமாகி விடும். 6. திர…
-
- 6 replies
- 2.8k views
-
-
லெபனீஸ் ப்ரட் & டுனா ரப் என்ன எப்ப பார்த்தாலும், வீட்டில செய்யும் சாப்பாட்டையே போடுறிங்க என்று சகோதரங்கள் ஒரே அன்பு தொல்லை. சரி சுவையருவில ஈழத்து உணவுகள் என்பதால் இங்கே போடலாம் என்று..... ரொம்ப அன்புதொல்லை குடுத்தவங்களுக்காக...இந்த செய்முறை... தனிய இருக்கிற அண்ணாக்கள்..மாமாக்கள்..தம்பிம
-
- 6 replies
- 2.3k views
-
-
கத்தரிக்காய் மிளகு கறி ஒரு சுவையான டிஷ். சூடான ரைஸ் உடன் பரிமாறவும். <img class="alignnone size-full wp-image-16470" itemprop="image" src="https://cdn.awesomecuisine.com/wp-content/uploads/2014/07/brinjals.jpg" alt="Brinjals" width="553" height="400" itemprop="image" srcset="https://cdn.awesomecuisine.com/wp-content/uploads/2014/07/brinjals.jpg 553w, https://cdn.awesomecuisine.com/wp-content/uploads/2014/07/brinjals-300x217.jpg 300w, https://cdn.awesomecuisine.com/wp-content/uploads/2014/07/brinjals-40x30.jpg 40w" sizes="(max-width: 553px) 100vw, 553px" title="Brinjals"> தேவையான பொருட்கள் …
-
- 6 replies
- 3.4k views
-
-
இராமநாதபுரம், கீழக்கரை, காயல்பட்டினம் பகுதிகள்�ல் King fish (சென்னையில் வஞ்சிர மீண்) எனப்படும் மீனிலிருந்து மாசி கருவாடு செய்கிறார்கள்.. மாசி கருவாடு விலைஉயர்ந்தது. காய்ந்து கல் போல இருக்கும் மாசிகருவாட்டை தண்ணீரில் நனைத்து பின்னர் தேங்காய் துருவியால் துருவி 'சம்பல்' (துவையல்) செய்வார்கள். ஈக்கான் சம்பல் என்பது மீன் சம்பந்தப்பட்டது. ஊடாங் சம்பல் என்பது இராலுடன் செய்யப்படுவது. மீனை மசாலாவுடன் சேர்த்து உப்புப்போட்டு ஊறவைத்துவிட்டு, அதை அரைவேக்காடாகப் பொரிக்கவேண்டும். இஞ்சி, வெங்காயம், காய்ந்தமிளகாய், தக்காளிப்பழம் முதலியவற்றை அரைக்கவேண்டும். பெரிய வெங்காயத்தை ஸ்லைஸாக வெட்டிக்கொண்டு இருப்புச்சட்டியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கிக்கொண்டு, இஞ்சி வகையறா…
-
- 6 replies
- 3.7k views
-