நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
இது எனக்கு புதிதென்றாலும் பலர் ஏற்கனவே செய்து சாப்பிடுபவர்களாக இருக்கலாம்.இதைவிட நன்றாக செய்யத் தெரிந்தால் உங்கள் செய்முறையையும் பதியுங்கள். பெரியவேலை ஒன்றுமில்லை. ஒரு அளவான சட்டிக்குள் (பொரிக்கிற சட்டி என்றாலும் பரவாயில்லை)முட்டை மூடக்கூடிய அளவுக்கு தண்ணீர்விட்டு கொதிக்க வையுங்கள். தண்ணீர் நன்றாக கொதித்ததும் கொஞ்ச உப்பை அதற்குள் போட்டு ஒரு கரண்டியால் தண்ணீரை சுற்றினால் நடுவில் சுழி வரும். தயாராக வைத்திருந்த முட்டையை சுழி சுற்றும் இடத்தில் உடைத்து ஊற்றுங்கள். கொஞ்சம் பெரிய சட்டி என்றால் 5-6 முட்டை விடலாம். சிலருக்கு மஞ்சள்கரு ஆடினால்த் தான் பிடிக்கும்.சிலருக்கு இறுகினால்த் தான் பிடிக்கும் மஞ்சள்கரு ஆட வேண்டுமென்பவர்கள்2-3 நிமிடம் செல்ல ஒரு எண்ணெய்க் கரண்டியை…
-
- 28 replies
- 2.8k views
- 1 follower
-
-
எனது மனைவி கர்ப்பிணியாக இருக்கிறா ஒவ்வாமைப் பிரச்சனையால் இப்போது சமயலறை எனது பொறுப்பில், அசைவம் சமைப்பது எனக்கு பிரச்ச்னையில்லை , ஆனால் சைவம் மிகப் பெரிய தலைவலி, எனது மனைவிக்கு இடையிடையே கட்டாயம் சைவம் தேவை, எனது மனைவி சொல்லித் தரும் முறைகளில் சைவம் சமைத்துக் கொடுத்து எனக்கு அலுத்து விட்டது, நான் சில தேடல்களை செய்தேன் , அண்மையில் தமிழ்க்கடைக்குச் சென்ற போது எனது தேடலில் சிக்கியது பன்னீர். இணையத்தில் துலாவி பிறகு எனது முறைகளையும் கலந்து செய்த பன்னீர் கறி தற்சமயம் எங்கள் வீட்டில் செம கலக்கல் , நான் பார்த்த சில பன்னீர் செய்முறைகளை உங்களுடன் பகிர்கின்றேன், உங்கலிடமும் டிப்ஸ் இருந்தால் தாருங்கள் (பன்னீர் என்பது பாலில் செய்யப்படும் ஒரு வகை கடினமான சீஸ் என நினைக்கிறேன…
-
- 3 replies
- 3.1k views
- 1 follower
-
-
தேவையான பொருட்கள்: வெந்தயம் - 4 டேபிள் ஸ்பூன் வற்றல் மிளகாய் - 6 உளுத்தம்பருப்பு - 2 ஸ்பூன் பெருங்காயம் - 1 ஸ்பூன் புளி - நெல்லிக்காய் அளவு வெல்லம் - விருப்பப்பட்டால் நல்லெண்ணெய் - 4 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி முதலில் வெந்தயத்தைப் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். பின்னர் வற்றல் மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம் இவற்றை வறுத்துக்கொள்ளவும். பொன்னிறமாக வறுத்த வெந்தயம், வற்றல் மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம், உப்பு, புளி சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். சிறிது வெல்லத்தை பொடி செய்து துவையலில் சேர்க்கவும். வெந்தயத்தை அதி…
-
- 0 replies
- 2.4k views
-
-
30 வகை தீபாவளி பலகாரம்! பலகாரங்களும் பட்சணங்களும்தான் தீபாவளியின் ருசி கூட்டுபவை. இந்த தீபத் திருநாளில் உங்கள் வீட்டின் தித்திப்பு பன்மடங்காக, அல்வா முதல் அதிரசம் வரை பண்டிகை விருந்து படைக்க உங்களை தயார்படுத்துகிறார் சென்னையைச் சேர்ந்த புஷ்பலதா. வரகு சீப்பு சீடை தேவையானவை: வரகு அரிசி மாவு – 1 கப், உளுத்தம் மாவு – கால் கப், கடலை மாவு – கால் கப், தேங்காய்ப்பால் – கால் கப், வெண்ணெய் – 1 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – தேவையான அளவு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் வரகு அரிசி மாவு, உளுத்தம் மாவு மற்றும் கடலை மாவு சேர்த்து, அத்துடன் உப்பு, வெண்ணெய் சேர்த்து கையால் பிசைய வேண்டும். பின்னர் தேங்காய்ப்பாலை லேசாக சூடு செய்து,…
-
- 4 replies
- 20.7k views
-
-
அனைவரும் தெரிந்துக்கொள்ளவேண்டிய எளிமையான அத்தியாவசிய கிச்சன் டிப்ஸ் இதோ... *வெங்காயம் நறுக்கிய பிறகும், பூண்டு உரித்த பிறகும் கைகளில் ஏற்படும் வாடையை போக்க கைகளை stainless steel ஸ்பூன்களில் தேயுங்கள். *பிரியாணி போன்ற மசாலா கலந்த அரிசி உணவுகளை செய்யும்போது, உணவு அடிப்பிடித்து விட்டால் அதன்மீது ஒரு பிரெட் துண்டினை வையுங்கள், தீய்ந்த வாசனை காணாமல் போய்விடும். *பிஸ்கட்டுகளை டப்பாக்களில் அடைத்து வைக்கும் போது, டப்பாவிற்குள் டிஷ்யூ பேப்பரை வைத்துவிட்டால், பிஸ்கட்டுகள் நீண்ட நாட்களுக்கு ஃபிரஷ்ஷாக இருக்கும். *சமைத்த பாத்திரங்களில் இருந்து எண்ணெய் பசையை எளிதாக சுத்தம் செய்ய அதில் ஐஸ் க்யூப் ஒன்றை போடுங்கள். *சப்பாத்திகள் மென்மையாக இருக்க அதன் மாவை வெந்நீரில் பிசையவும்.சிறிது …
-
- 0 replies
- 732 views
-
-
சமையலில் பயன்படும் வாசனைத் திரவியங்கள் வெளிநாடொன்றில் தமிழ்ச்சங்கமொன்றின் சுற்றுலாவிற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தபோது நண்பர்கள் இருவருக்கிடையில் நடந்த உரையாடல் இது: நண்பர் 1: "வறுத்த வேர்க்கடலை இருந்தா நன்னாயிருக்குமே. போறப்போ கொறிச்சுண்டு போயிரலாம்." நண்பர் 2: "எங்களிண்ட ஊரில கச்சானைத்தான் வறுத்துச் சாப்பிடுறனாங்கள். நான் கோயிலுக்குப் போறதே அதுக்குத்தான். அதென்ன வேர்க்கடலை?" நண்பர் 1: "ஓ, அதுவா, பிரவுண் கலரில கோதிருக்கும். உடைச்சாக்க உள்ளார ரண்ணு மூணு பருப்பிருக்கும்." நண்பர் 2: "கச்சானும் அப்பிடித்தான் இருக்கும்" இப்படி பேச்சு வழக்குகளிற்கிடையே மொழிபெயர்ப்பு செய்யப்பட வேண்டிய நிலை சிலவேளைகளில் ஏற்படுவதுண்டு. அதைவிட இந்திய தமிழ் தொலைக்க…
-
- 1 reply
- 1.9k views
-
-
-
- 0 replies
- 996 views
-
-
-
மட்டன் தோரன் எப்போதும் சிக்கனை சாப்பிட்டால் உடல் சூடு பிடித்துவிடும். ஆகவே அவ்வப்போது மட்டனை சாப்பிட்டு வர வேண்டும். உங்களுக்கு மட்டனை ஒரே மாதிரி செய்து சாப்பிட்டு போர் அடித்திருந்தால், மட்டன் தோரன் செய்து சாப்பிடுங்கள். இது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி, இப்போது அந்த மட்டன் தோரனை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: மட்டன் - 1/2 கிலோ மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு சின்ன வெங்காயம் - 10 கறிவேப்பிலை - சிறிது தேங்காய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் மசாலாவிற்கு... தேங்காய் - 2 கப் சீரகம் - 1 டீஸ்பூன் சோம்பு - 1 டேபிள் ஸ்பூன…
-
- 3 replies
- 743 views
-
-
கேழ்வரகு மிச்சர் (தினம் ஒரு சிறுதானியம்-16) இன்றைய குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் வசியப்படுத்திவிட்டது நொறுக்குத் தீனி. உணவைக் காட்டிலும் நொறுக்குத் தீனியை அதிகம் திண்பதில் ஆர்வம் காட்டுவது ஆரோக்கியத்துக்கே வேட்டு வைக்கக்கூடும். கண்ட எண்ணெயில் செய்து விற்பனைக்கு வரும் கடைகளில் வாங்கி சாப்பிடுவதைக் காட்டிலும், உடலுக்கு நன்மையை தரக்கூடிய நம் பாரம்பரிய உணவுகளான கேழ்வரகு, சோளம், தினை, கம்பு என சிறுதானியத்தில் செய்யும் நொறுக்குத் தீனியை வீட்டிலேயே செய்து சாப்பிட்டால்... சுவைக்கு சுவை... சத்துக்கும் சத்து! பலன்கள் கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், கார்போஹைட்ரேட் என அனைத்து சத்துக்களும் இருப்பதால் உடலுக்கு …
-
- 0 replies
- 1.8k views
-
-
முந்திரி சிக்கன் கிரேவி தேவையான பொருட்கள் இஞ்சி – 1 துண்டு பூண்டு – 7 பல் காய்ந்த மிளகாய் – 5 சீரகத்தூள் – ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் – ஒரு ஸ்பூன் முந்திரிபருப்பு – 10 வெங்காயம் – 1 தக்காளி – 1 எண்ணெய் – தேவையான அளவு உப்பு – சிறிதளவு செய்முறை: சிக்கனை நன்றாக கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு இஞ்சி, பூண்டை நைசாக அரைத்துக் கொள்ளவும். அதன்பிறகு மிளகாய், முந்திரிபருப்பையும் அரைக்கவும். இஞ்சி, பூண்டு விழுதை சிக்கனில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். வானலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளியையும் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். அதன்பிறகு அரைத்த மிளகாய், சீரகத்தூள், மிளகுத்தூள் போட்டு வதக்கிவிட்டு பின்பு அதில் சிக்கனையும் போட்டு வதக்க வேண்டும். பின்பு …
-
- 1 reply
- 825 views
-
-
[size=5]சேப்பங்கிழங்கு புளி குழம்பு[/size] [size=5]தேவையானவை[/size] சேப்பங்கிழங்கு - கால் கிலோ வெங்காயம் - இரண்டு தக்காளி - இரண்டு புளி - ஒரு லெமென் சைஸ் தாளிக்க: நல்லெண்ணெய் - மூன்று தேக்கரண்டி கடுகு - அரை தேக்கரண்டி சீரகம் - அரை தேக்கரண்டி மிளகு - கால் தேகரண்டி சோம்பு - அரை தேக்கரண்டி வெந்தயம் - கால் தேக்கரண்டி பூண்டு - ஐந்து பல் கறிவேப்பிலை - ஒரு கைப் பிடி சேர்க்க வேண்டிய பொடி வகைகள்: மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி தனியாத் தூள் - ஒரு தேக்கரண்டி மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி வெந்தய பொடி - கால் தேக்கரண்டி உப்பு தூள் - தேவைக்கு தேங்காய் - மூன்று பத்தை செய்யும் முறை சேப்பங்கிழங்கை மண்ணில்லாமல் கழுவி குக்கரில் மூழ்க…
-
- 0 replies
- 3.2k views
-
-
தேவையான பொருட்கள்: பாதாம் - 25 கிராம் முந்திரி - 25 கிராம் பிஸ்தா - 15 கிராம் பால் - ஒரு லிட்டர் கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை பனை கற்கண்டு - ஒரு கப் குங்குமப் பூ - 2 சிட்டிகை சாரைப் பருப்பு - ஒரு தேக்கரண்டி நெய் - 2 தேக்கரண்டி ஏலக்காய் - 2 செய்முறை : 1.பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றை ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். பாதாமை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும். பாதாம் 3, முந்திரி 3 ஆகியவற்றை துருவிக் கொள்ளவும். 2.ஊற வைத்த பருப்புகளை மிக்ஸியில் போட்டு கால் கப் பால் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ளவும். 3.அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் அரை கப் பால் ஊற்றி கரைக்கவும். 4.அதை அடுப்பில் வைத்து கலர் பவுடர் போட்டு ந…
-
- 3 replies
- 3.8k views
-
-
-
- 0 replies
- 956 views
-
-
பொட்டுக் கடலை எல்லாம் வாங்கியாச்சு...... இந்த வார இறுதியில் களத்தில் இறங்கதான் இருக்கு. http://www.hotstar.com/tv/samayal/1787/madurai-special-recipes/1000099077 http://www.hotstar.com/1000099077
-
- 1 reply
- 666 views
-
-
-
- 2 replies
- 1.1k views
-
-
மைசூர் மசாலா தோசை. பெரும்பாலானோருக்கு தோசை மிகவும் பிடித்தமான ஒரு உணவாகும். இத்தகைய தோசையில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் பெரும்பாலும் மசாலா தோசையைத் தான் அநேக மக்கள் விரும்புவர். அத்தகையவர்களுக்காக, மசாலா தோசையில் ஒன்றான மைசூர் மசாலா தோசையை எப்படி செய்வதென்று கீழே கொடுத்துள்ளோம். இந்த மசாலா தோசையை செய்வது என்பது மிகவும் எளிது மற்றும் சுவையானதும் கூட. சரி, அந்த ரெசிபியைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: அரிசி - 1 கப் உளுத்தம் பருப்பு - 1 கப் கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் மசாலாவிற்கு... உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து மசித்தது) வெங்காயம் - 2 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) பூண்டு - 3 ப…
-
- 2 replies
- 961 views
-
-
கேரளா ஸ்டைல் மத்தி மீன் வறுவல் மத்தி மீனில் உள்ள அதிகளவு கால்சியம் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இன்று மத்தி மீனை வைத்து கேரளா ஸ்டைலில் வறுவல் செய்வது எப்படி என்ற பபர்க்கலாம். தேவையான பொருட்கள் : மத்தி மீன் (sardine) - அரை கிலோ மிளகு - 2 தேக்கரண்டி சீரகம் - 2 தேக்கரண்டி சோம்பு - 1 தேக்கரண்டி இஞ்சி - சிறிய துண்டு பூண்டு - 20 பல் எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி தயிர் - 1 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி …
-
- 7 replies
- 1.1k views
-
-
கொண்டை கடலை குழம்பு செய்ய... அரைப்பதற்கு தேவையான பொருட்கள்: சிறிய வெங்காயம் - 1/4 கப் (நறுக்கியது) துண்டாக்கப்பட்ட தேங்காய் - 1/2 கப் காய்ந்த மிளகாய் - 4 பூண்டு - 2 சீரகம் - 1 தேக்கரண்டி வெந்தயம் - 1/4 தேக்கரண்டி தேவையான பொருட்கள்: …
-
- 0 replies
- 1.3k views
-
-
ஹோட்டல் சரவணபவன் காலையில் வாக்கிங் போயிட்டு வந்து சரவணபவன்ல காப்பி குடிக்கிற சுகமே சுகந்தான். தேன் போல தித்திக்கிற காப்பி மாதிரியே நம்ம ஊரு பஜ்ஜி, சொஜ்ஜிலயிருந்து, பானிபூரி, கட்லட், பாம்பே அல்வா, அமெரிக்கன் பீஸா வரைக்கும் ஒரே அமர்க்களம்தான். இதுபோக இன்னும் இன்னும் பல பதார்த்தங்களை அறிமுகப்படுத்திக்கிட்டே இருக்காங்க. சென்னையின் பல பகுதிகளில் இதன் கிளைகள் இருந்தாலும் வடபழனி முருகன் கோயில்ல சாமி தரிசனம் பண்ணிட்டு அதுக்கு மிக அருகிலேயே இருக்குற சரவணபவன்ல குடும்பத்தோட சாப்பிட்டு பாருங்க உங்களால அத மறக்கவே முடியாது! அஞ்சப்பர் செட்டிநாடு ஹோட்டல செட்டிநாடு சமையல பிடிக்கதாவங்க யாராவது இருக்க முடியுமா?...அந்த காரைக்குடி மணம் சென்னையில அடிக்கிற இடம்தான் நம்ம அஞ்சப்பர் ஹ…
-
- 1 reply
- 1.9k views
-
-
சுவையருவியின் முதல் வணக்கம் யாழில் இன்னுமொரு புதிய அங்கம் இன்றுடன் ஆரம்பமாகின்றது. ஈழத்தமிழர்களின் சமையல் பாரம்பரியம் என்பது ஒரு விசேடமான, அதே சமயத்தில் நம் கலாச்சாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் ஓர் விடயம். எமது பாட்டன் பூட்டன் காலத்து உணவுவகைகளை புலத்தில் இருக்கும் தமிழர்களுக்கு எடுத்து செல்லும் பணிக்காகவே "சுவையருவி" உருவாக்கப்பட்டுள்ளது. தங்கள் ஆலோசனைகளையும், யோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம். இது ஓர் கன்னி முயற்சி. குறை நிறைகளை சுட்டிக்காட்டி சுவையருவியின் முன்னேற்றத்தில் பங்கெடுங்கள். தற்சமயம் சில செய்முறைகளையே கொண்டிருக்கும் சுவையருவியில் உங்கள் செய்முறைகளையும் இணையுங்கள். தளத்தை உருவாக்கியது யார் என சொல்லி தெரிய வேண்டியதில்லை தானே…
-
- 31 replies
- 6k views
-
-
சுவையூட்டிய தயிர் வகைகள் அனைத்திலும் சர்க்கரை அதிகம் என்பது தெரியுமா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தயிர் (யோகட்) வகைகளில் சர்க்கரை நிறைந்துள்ளது. இவற்றை உண்பவர்கள் தாங்கள் மிகவும் ஆரோக்கியமான உணவைதான் உண்டு வருவதாக பொது மக்கள் எண்ணிவிட வேண்டாம் என்று கூறியுள்ளனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES பிரிட்டன் சந்தைகளில் விற்கப்படும் 900 தயிர் (யோகட்) வகைகளில் மே…
-
- 0 replies
- 799 views
-
-
சமையல் பாத்திரங்களின் வகைகளும்.. அவற்றில், சமைத்து சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளும்.. பெரும்பாலான மக்கள் காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு மற்றும் வீட்டு ரசாயன ஆபத்துக்களைப் பற்றி அறிந்திருப்பார்கள். சில சமையல் பாத்திரங்களும் எவ்வாறு நம் உடலை பாதுகாக்கின்றன என்பது குறித்து ஆய்வுகள் காட்டுகின்றன. சில "பாரம்பரிய " சமையல் பாத்திரங்கள் எவ்வாறு உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் கேடு விளைவிக்கின்றது என்பதை காண்போம். ஆளை அமைதியாக கொல்லும் அலுமினிய பாத்திரங்கள்! இங்கு சமையல் பாத்திரங்களின் வகைகளும், அவற்றில் சமைத்து சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் (STAINLESS STEEL) ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் பல தரங்கள் உள்ளன. வழக்கமாக பயன்படுத்தும் ஸ்டெ…
-
- 0 replies
- 3.5k views
-
-
குளிர்சாதனப் பெட்டியில் வைத்த அசைவ உணவா? - சாப்பிடாதீங்க! உணவுப் பொருட்கள் விரைவில் கெட்டுப்போகாமல் பதுகாப்பாக வைத்திருக்க கண்டுபிடிக்கப்பட்டதே ஃப்ரிட்ஜ். ஆனால் சமைக்க சோம்பேறித்தனம் கொண்டவர்களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட சாதனம் போல் ஆகிவிட்டது ஃப்ரிட்ஜ். நம்மவர்களில் பலருக்கு எது எதையெல்லாம் வைப்பது என்றே வரைமுறையே கிடையாது. எதையும் வீணாக்காமல் சிக்கனமாக இருக்கிறோம் என்ற நினைப்பில் முந்தா நாள் சாம்பார், போனவாரம் வைத்த ரசம், புளித்து போன இட்லி மாவு, பால், காய்கறி,முட்டை, இறைச்சி, குளிர்பானங்கள், என சகலத்தையும் உள்ளே வைத்து ஃபிரிட்ஜை கதற அடித்துவிடுவார்கள். இது மிகவும் தவறானது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். காய்கறி,கீரை மற்றும் இறைச்சி, இட்லி மாவு போன்றவற்றை வார…
-
- 9 replies
- 3.9k views
-
-
ருசியான உப்புக்கண்டம் ஆட்டு இறைச்சி உண்பதற்கு சுவையான சத்தான உணவு. அதை உப்பு சேர்த்து நன்றாக காயவைத்து உப்புக்கண்டமாக சாப்பிட்டால் கூடுதல் சுவை கிடைக்கும். உப்புக்கண்டம் எளிதாக செய்யலாம். தேவையான பொருட்கள் ஆட்டு இறைச்சி – 1 கிலோ, இஞ்சி - 1 அங்குல துண்டு, பூண்டு – 20 பல், காய்ந்த மிளகாய் – 15 , மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. உப்புக்கண்டம் செய்முறை ஆட்டு இறைச்சியை நன்றாக கழுவி பெரிய துண்டுகளாக நறுக்கவும். பூண்டு, இஞ்சி, மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். இந்த விழுதினை நறுக்கி வைத்த கறியில் சேர்த்து நன்கு கலக்கவும். மசாலா நன்றாக பிடிக்க வேண்டும். இதனை ஒரு நூலில் கோர்த்து வெயிலில் க…
-
- 5 replies
- 2.3k views
-