நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
பொதுவாகவே சமையல் என்பது மிகவும் இலகுவான வேலை போலவும், சமைப்பவர்கள் வேலை வெட்டி இல்லாதவர்கள் போன்றதொரு மாயையும் உலாவுகின்றது. இதை சமையல் செய்யும் ஒருவரால் ஒத்துக்கொள்ள முடியாது. ஒரு வீட்டில்,கிராமத்தில்,நகரத்தி ன்,நாட்டின் பாரம்பரியத்தையோ/கலாச்சாரத்தையோ அறிந்து கொள்ள சிறந்த இடம் சமையல் தான் என்பது என் கருத்து. இப்படிப்பட்ட சமையல் என்பது அத்தனை இலகுவான காரியம் அல்ல. ஒரு உணவை சமைக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லை எனும் பட்சத்தில் ஒரு தற்கொலையோ,பல கொலைகளோ நிகழ வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த பதிவில் எப்படி தற்கொலையை தவிர்க்கலாம் என பார்ப்போம். கொலைகள் பற்றி பின்னர் யோசிக்கலாம்.கிகிகிகி * சமைக்கும் போது சமையலை மட்டும் பார்க்கவும். கவனம் இல்லா…
-
- 5 replies
- 2.1k views
-
-
சமையலில், திறமைசாலிகள் பெண்கள் தான் என்று தானே எண்ணுகிறீர்கள்; அது உண்மையல்ல... ஆண்கள் தான் தான் "சூப்பர் குக்!' சமீபத்தில் , பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. சர்வேயில் கூறியிருப்பதாவது: சமையல் அறைக்கு சொந்தக்காரர்கள் பெண்கள் தான் என்று, ஒரு பொதுவான கருத்து உள்ளது. ஆனால், அதில் உண்மையில்லை என்பது, பல நாடுகளில் நடத்தப்பட்ட சர்வேக் கள் உறுதி செய்துள்ளன. எந்த ஒரு உணவையும் சுவையாக சமைப்பதில் ஆண்களுக்கு நிகர் ஆண்கள் தான்; பெண்கள் அல்ல. அதற்காக, பெண்களை, ஆண்கள் மட்டம் தட்டுவதில்லை.சமையல் மட்டுமல்ல, எந்த ஒரு விஷயத்திலும், தனக்கு சமமான அந்தஸ்த்தை மனைவிக்கு தருகிறனர் கணவர்கள். அதனால் தான் , ஷாப்பிங் போகும் போதும்,பொறுமையாக மனைவியின் பின்னால் காத்திருக்கின…
-
- 11 replies
- 3.1k views
-
-
சமையலில் நெய்: பூமியிலேயே தூய்மையான உணவு இதுதானா? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SUBODHSATHE/GETTY IMAGES நிறைவுற்ற கொழுப்புகள் (Saturated fats) ஆரோக்கியமற்றதாக கருதப்பட்டதால் நெய் முக்கியத்துவம் இழந்தது. ஆனால் இப்போது, இந்தியர்கள் தங்களுடைய சமையலில் முன்பு முக்கியமான அங்கமாக இருந்த பொருட்களுக்கு திரும்பி வருகிறார்கள். இந்திய உணவு எழுத்தாளரான கல்யாண் கர்மாகர் தனக்குப் பிடித்த பல பெங்காளி உணவு வகைகளில் நெய் சேர்க்கப்படுவதை குறிப்பிட்டு அவற்றின் சுவையை தெரிந்துகொள்ளத் தூண்டுகிறார். நெய் பாத்துக்காக (Ghee bhaat) வேகவைத்த சாதத்துடன் வறுத்த கட்லா மீனை (Indian carp) சேர்க்கிறார். மாவு, பி…
-
- 0 replies
- 431 views
- 1 follower
-
-
சமையலில் பயன்படும் வாசனைத் திரவியங்கள் வெளிநாடொன்றில் தமிழ்ச்சங்கமொன்றின் சுற்றுலாவிற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தபோது நண்பர்கள் இருவருக்கிடையில் நடந்த உரையாடல் இது: நண்பர் 1: "வறுத்த வேர்க்கடலை இருந்தா நன்னாயிருக்குமே. போறப்போ கொறிச்சுண்டு போயிரலாம்." நண்பர் 2: "எங்களிண்ட ஊரில கச்சானைத்தான் வறுத்துச் சாப்பிடுறனாங்கள். நான் கோயிலுக்குப் போறதே அதுக்குத்தான். அதென்ன வேர்க்கடலை?" நண்பர் 1: "ஓ, அதுவா, பிரவுண் கலரில கோதிருக்கும். உடைச்சாக்க உள்ளார ரண்ணு மூணு பருப்பிருக்கும்." நண்பர் 2: "கச்சானும் அப்பிடித்தான் இருக்கும்" இப்படி பேச்சு வழக்குகளிற்கிடையே மொழிபெயர்ப்பு செய்யப்பட வேண்டிய நிலை சிலவேளைகளில் ஏற்படுவதுண்டு. அதைவிட இந்திய தமிழ் தொலைக்க…
-
- 1 reply
- 1.9k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஓம்கார் கர்ம்பேல்கர் பதவி, பிபிசி மராத்தி 2 மணி நேரங்களுக்கு முன்னர் 'கேஸ் அடுப்பில் சமைத்த சாம்பார், விறகடுப்பில் சமைத்த போது இருந்த ருசியில் இல்லை, அந்த அடுப்பில் சமைத்த உணவே சிறந்தது, குக்கரில் சமைத்த சாதமும், சட்டியில் சமைத்த சாதமும் முற்றிலும் வேறு.. மைக்ரோவேவில் சமைத்த உணவில் ருசியே இல்லை. சாரம் இழக்கும் வகையில் சமைப்பது நல்லதல்ல. இப்படி சமைப்பது நல்லது, அப்படி சமைப்பது நல்லது.." இதுபோன்ற வாக்கியங்களை அடிக்கடி நம் வீடுகளில் கேட்க முடியும். பல வீடுகளில், உணவை சமைப்பது, சூடுபடுத்துவது, கொதிக்க வைப்பது என அனைத்திலும் பல விதிகள் பின்பற்றப்படுகின்றன. பெர…
-
- 0 replies
- 331 views
- 1 follower
-
-
யாழ் கள உறவுகளே உங்களிள் யாருக்காவது சுவீஸ்லாந்து நாட்டவர்களின் உணவு வகைகளும் அதன் செய்முறைகளும் தெரிந்தால் இந்த திரியின் கீழ் இணைத்து விடவும் மிகவும் உதவியாக இருக்கும்.
-
- 6 replies
- 1.2k views
-
-
அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியா சமையல் பகுதிக்கும் வந்தாச்சு இங்கதான் சமையல் வல்லுனர்கள்/சமையல் கலைஞர்கள் இருக்கிறீங்களே . எனக்கும் கொஞ்சம் சுவையா சமைக்க உதவி செய்யுங்கோ. என்ர நிறுவனத்தில எங்கட குழுவில 5 பேர் இருக்கிறம். ஒவ்வொரு வியாழக் கிழமையும் ஒராள் சமைக்கவேணும். வாற வியாழன் திரும்ப என்ர முறை. ஏற்கனவே இரண்டு தரம் ஏதோ தட்டுத் தடுமாறி எனக்கு தெரிஞ்சத வைச்சு சமைச்சுக் குடுத்திட்டன். இரண்டு தரமும் கோழியை வைச்சு விளையாடியாச்சு. இனி வேற ஏதாவது புதுசா செய்ய வேணும் . சுலபமா - கனநேரம் செலவளிக்காமல் (30 - 50 நிமிடங்களுக்குள்) செய்யக் கூடிய ஒரு உணவுக்கு செய்முறை சொல்லுங்கோ. புண்ணியமாப் போகும்
-
- 40 replies
- 11.4k views
-
-
மாம்பழ லஸ்ஸி.. செய்வது எப்படி?? தேவையானவை: நன்கு கனிந்த மாம்பழத் துண்டுகள் - ஒரு கப், தயிர் - ஒரு கப், பால் - அரை கப் (காய்ச்சி ஆற வைத்தது), ஐஸ்கட்டிகள், சர்க்கரை - தேவைக்கேற்ப. செய்முறை: கொடுக்கப் பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து, குளிர வைத்து, சிறிய கிண்ணங்களில் ஊற்றிப் பரிமாறவும். தேங்காய்ப்பொடி.. செய்வது எப்படி?? தேவையானவை: முற்றிய தேங்காய் - ஒன்று, உளுத்தம்பருப்பு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 6, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: தேங்காயை உடைத்து துருவிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு தேங்காய் துருவலை சிவக்க வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும். உளுத்தம்பருப்ப…
-
-
- 782 replies
- 228.7k views
-
-
சமையல் பாத்திரங்களின் வகைகளும்.. அவற்றில், சமைத்து சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளும்.. பெரும்பாலான மக்கள் காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு மற்றும் வீட்டு ரசாயன ஆபத்துக்களைப் பற்றி அறிந்திருப்பார்கள். சில சமையல் பாத்திரங்களும் எவ்வாறு நம் உடலை பாதுகாக்கின்றன என்பது குறித்து ஆய்வுகள் காட்டுகின்றன. சில "பாரம்பரிய " சமையல் பாத்திரங்கள் எவ்வாறு உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் கேடு விளைவிக்கின்றது என்பதை காண்போம். ஆளை அமைதியாக கொல்லும் அலுமினிய பாத்திரங்கள்! இங்கு சமையல் பாத்திரங்களின் வகைகளும், அவற்றில் சமைத்து சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் (STAINLESS STEEL) ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் பல தரங்கள் உள்ளன. வழக்கமாக பயன்படுத்தும் ஸ்டெ…
-
- 0 replies
- 3.6k views
-
-
'செப்' தாமு -19/08/2011 நெத்திலிக் குழம்பை நேசிக்காத அசைவப் பிரியர்களே இருக்க முடியாது. எளிதாக சமைத்து ருசியாகச் சாப்பிட ஏற்றது நெத்திலி மீன். சமைச்சு சாப்பிட்டு பாருங்க.. சும்மா கும்முன்னு இருக்கும். என்னங்க எங்க கௌம்பிட்டீங்க... நெத்திலி குழம்பு வைக்கதானே...... தேவையான பொருட்கள்: நெத்திலி மீன் - 1/4 கிலோ சின்ன வெங்காயம் - ஒரு கை அளவு தக்காளி - 3 மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன் மிளகாய்த் தூள் - 2 டீ ஸ்பூன் தனியா தூள் - 3 டீ ஸ்பூன் புளி - ஒரு எலுமிச்சை அளவு எண்ணை - ஒரு குழிக்கரண்டி கடுகு - ஒரு டீ ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 கறிவேப்பிலை - ஒரு கொத்து வெந்தயம் - ஒரு டீ ஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப செய்முறை: * நெத்திலியை சுத்த…
-
- 14 replies
- 5.6k views
-
-
சமையல்:முருங்கைக்காய் கூட்டு ஆ.... ஊனா... முருங்கைக்காயை சாம்பார், புளிக்குழம்புலதான் போடுவோம்... ஆனா.. அதையே கொஞ்சம் வித்தியாசமா கூட்டாகவும் வைக்கலாம் தெரியுமா? வச்சு பாருங்க.. அதோட சுவையும் மணமும் சும்மா சுண்டியிழுக்கும் பாருங்க...... தேவையான பொருட்கள்: சிறிது நீளமாக நறுக்கிய முருங்கைக்காய் - 2 கப் கடலைப்பருப்பு - கால் கப் பாசிப்பருப்பு - கால் கப் தேங்காய் துருவல் - ஒரு டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 2 காய்ந்த மிளகாய் - 2 சீரகம் - கால் டீ ஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீ ஸ்பூன் தாளிக்க: எண்ணெய் - ஒரு டீ ஸ்பூன் கடுகு - கால் டீ ஸ்பூன் உளுத்தம் பருப்பு - கால் டீ ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: * குக்கரில் பாச…
-
- 13 replies
- 9.3k views
-
-
-
சமோசா-சுவையான திரையரங்கு இடைவேளை உணவு... ஸ்டஃப்பிற்கு தேவையான பொருட்கள்(சமோசாவின் உள்ளிருக்கும் கறி) உருளைக்கிழங்கு - 4 பட்டாணி - 1/2 கப் முந்திரி பருப்பு-25 கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி மிளகு - 1/4 தேக்கரண்டி உப்பு - தேவைக்கு வத்தல் தூள் - 1/4 தேக்கரண்டி மாங்காய் பவுடர் - 1 தேக்கரண்டி சீரகம் - 1/2 தேக்கரண்டி நெய் - 3 மேஜைக்கரண்டி பச்சை மிளகாய் - 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி எண்ணெய் - 4 கப் (பொரிக்க) செய்முறை மிக சிறியதாக நறுக்கிய கேரட் உருளைக்கிழங்கையும்,பட்டணியையும் சேர்க்கவும்.சிறிது நேரம் கிளரி அதில் கரம் மசாலா,மிளகு,வத்தல் தூள்,மாங்கய் பவுடர்,சீரகத்தூள் சேர்த்து கலந்து விடவும் அத்துடன் கொத்த…
-
- 3 replies
- 3.5k views
-
-
சரக்குக் கறி நற்சீரகம் - 100 கிறாம் கொத்தமல்லி - 100 கிறாம் உள்ளி(வெள்ளைப் பூண்டு) - பெரிய முழுப்பூண்டு வெங்காயம் - 50 கிறாம் மிளகு - 20 கிறாம் மஞ்சள் - 1 துண்டு(10 கிறாம்) கடுகு - 10 கிறாம் உப்பு - தேவையானளவு கறிவேப்பிலை - தேவையானளவு பழப்புளி - 50 கிறாம் இவற்றை நன்றாக(பட்டுப்போல்) அரைத்து வைத்துக் கொள்ளுங்கள் பிஞ்சு முருக்கங்காய் - 500 கிறாம் தேங்காய்ப்பால் - பாதி கரைத்த புளியைப் பிழிந்த பாலுடன்கலந்து துண்டங்களாக்கப்பட்டவற்றை பிஞ்சு முருக்கங்காய் அதனுடன் அரைத்த சரக்கையும் சேர்த்துக் கொதிக்கவையுங்கள். கறியாக வந்ததும் இறக்கி சாப்பிடலாம்
-
- 5 replies
- 7.7k views
-
-
தினமும் 50 கிராம் சமைத்த கோவக்காயை சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையும். இன்று சர்ச்சரை நோயாளிகளுக்கு உகந்த கோவக்காய் சப்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோவக்காய் சப்ஜி தேவையான பொருட்கள் : கோவக்காய் – 1 கப் தக்காளி – 3 தனியா தூள் – 1 டீஸ்பூன் கொத்தமல்லி தழை – சிறிதளவு சீரகம் – சிறிதளவு மிளகாய்த்தூள் – சிறிதளவு உப்பு – சுவைக்கேற்ப கரம் மசாலா தூள் – சிறிதளவு எண்ணெய் – 4 டீஸ்பூன் முந்திரி பருப்பு – 6 ( தண்ணீரில் ஊற வைக்கவும்) மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன் …
-
- 0 replies
- 735 views
-
-
தமிழ் புது வருட தினமான இன்று, சுவையருவியில் இருந்து உங்களுக்காக ஒரு இலகுவான சர்க்கரை பொங்கல் செய்யும் முறை. அனைவருக்கும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுகின்றேன். சர்க்கரை பொங்கல் pic:nandyala தேவையான பொருட்கள்: அரிசி = 1 பேணி வறுத்த பாசி பயறு = 1/3 பேணி சர்க்கரை = 1 பேணி தேங்காய் பால் = இ பேணி நீர் = 3 பேணி Cashewnuts = 2 மே.க Raisins = 2 மே.க செய்முறை: 1. பொங்கல் பானையில் நீரை விட்டு கொதிக்க விடவும். நீர் கொதித்து வரும் போது அதில் பாலை சேர்க்கவும். 2. பால் பொங்கியதும், ஏற்கனவே சுத்தப்படுத்தி, நீரில் கழுவிய அரிசியை போடவும். அரிசி அரை பதத்திற்கு வெந்ததும் அதில் சர்க்கரையை சேர்க்கவும். [சர்க்கரையை நீரிலோ பாலிலொ கரைத்துவிடுவது நல்லது…
-
- 3 replies
- 4.8k views
-
-
சர்க்கரைப் பொங்கல் தேவையான பொருட்கள்: பச்சரிசி - 400 கிராம். பாசிப்பருப்பு - 50 கிராம் பால் - 250 மி.லி தேங்காய் - பாதி வெல்லம் - 1 கிலோ முந்திரிப்பருப்பு -15 கிராம் கிஸ்மிஸ் பழம் - 15 கிராம் ஏலக்காய் - 5 கிராம் நெய் - 50 மி.லி செய்முறை: 1. பாசிப்பருப்பை இலேசாக வறுத்து வைக்கவும். 2. ஒரு பாத்திரத்தில் 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் பாலைக் கலந்து அடுப்பில் வைக்கவும். 3. வேறொரு பாத்திரத்தில் வெல்லத்தைத் தட்டிப்போட்டு சிறிது தண்ணீர் கலந்து இளம் பாகாய்க் காய்ச்சி கல் இல்லாமல் வடிகட்டி வைக்கவும். 4. நெய்யைக் காய வைத்து முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ், பொடிதாக நறுக்கப்பட்ட தேங்காய் ஆகியவற்றை சிவக்க வறுக்கவும். 5.…
-
- 14 replies
- 3.8k views
-
-
தேவையானவை: பனீர் துண்டுகள் - அரை கப், வேகவைத்து, தோல் நீக்கி, சதுர துண்டுகளாக்கிய சர்க்கரைவள்ளிக் கிழங்கு - அரை கப், ... எலுமிச்சைப் பழம் - ஒன்று, சாட் மசாலாத்தூள், தோல் சீவி, துருவிய இஞ்சி - தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை, நறுக்கிய பச்சை மிளகாய் - தலா ஒரு டீஸ்பூன், நெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. …
-
- 0 replies
- 493 views
-
-
பெர்த் நகரைச் சேர்ந்த Darrsh Clarke இந்த நிகழ்ச்சியில் முதன்முறையாக பாஸ்மதி சாதம், தயிர் ரைத்தா மற்றும் கத்தரிக்காய் கறியை சமைத்து வழங்கியுள்ளார். இலங்கையின் பாரம்பரிய உணவு எனினும், “இதற்கு முன் ஏன் இலங்கை உணவை வழங்கவில்லை” என நடுவர்கள் கேள்வியெழுப்பியிருந்ததுடன் அதற்கு பதிலளித்து பேசிய Darrsh தனது இலங்கை பாரம்பரியத்தை நிராகரித்ததை வெளிப்படுத்தினார். எனினும், அவரை ஊக்கப்படுத்திய நடுவர்கள் MasterChef Australia நிகழ்ச்சி தமது பாரம்பரியத்தை மீட்டெடுக்க உதவுவதாக தெரிவித்திருந்தனர். தனது தந்தை மற்றும் பாட்டியின் சமையலில் Darrsh ஈர்க்கப்பட்டிருந்ததாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. …
-
-
- 4 replies
- 709 views
-
-
கையுக்கு கிளவுஸ், சவரம் செய்யப்பட்ட முகம், அழுக்கில்லாத நேர்த்தியான உடை ,காட்டு கத்தல்கள் இல்லாத அமைதியான சேவை .. அதனாலதான் வெள்ளைக்காரிகளும் விரும்புகின்றனரோ? மனிதனுக்கு தேவை முதலில் சுத்தம் சுத்தம் சுத்தம்... தரம் எங்கிருந்தாலும் பாராட்டியே ஆகவேண்டும்... ஸ்ரீலங்காவின் தெருவோர கொத்துரொட்டி!
-
- 3 replies
- 1.4k views
-
-
சல்மன் மீன் கறி தேவையான பொருட்கள் சல்மன் மீன் - 500 கிராம் வெங்காயம் - 30 கிராம் கறி பேஸ்ட் - 2 மேசைக்கரண்டி கறித்தூள் - 3 தேக்கரண்டி உப்பு - 2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி தேசிக்காய் - 2 தேக்கரண்டி எண்ணெய் - 2 மேசைக்கரண்டி செய்முறை மீனை சிறிய துண்டுகளாக நறுக்கி கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மீன் துண்டுகளை போட்டு அதனுடன் தேசிக்காய், இஞ்சி பூண்டு விழுது, 1 1/2 தேக்கரண்டி கறித்தூள், ஒரு தேக்கரண்டி உப்பு ஆகியவற்றை போட்டு பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய மீன் துண்டுகளை அவண் ட்ரேயில் க்ரில் கம்பியில் அடுக்கி மீடியம் ஹீட்ட…
-
- 17 replies
- 3.3k views
-
-
தேவையான பொருட்கள்: வெற்றிலை - 10 சீரகம் - ஒரு டீஸ்பூன் பூண்டு - 8 பல் மிளகு - 1 டீஸ்பூன் புளி - 50 கிராம் காய்ந்த மிளகாய் - 3 கறிவேப்பிலை - தேவையான அளவு எண்ணெய் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: • நன்றாக கழுவி 9 வெற்றிலைகளை அரைத்து வைத்துக் கொள்ளவும். • 1 வெற்றிலையை நீளமான துண்டுகளாக வெட்டி வைக்கவும். • பூண்டு, மிளகு, சிறிது சீரகம் மூன்றையும் ஒன்றும் பாதியாக நன்றாக இடித்துக் கொள்ளவும். • புளியை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளவும். • கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிது சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். • பின்னர் இதில் இடித்து வைத்…
-
- 1 reply
- 775 views
-
-
சளி பிடித்திருந்தால், அப்போது மிளகு ரசம் செய்து சாப்பிட்டால், சளி மற்றும் இருமல் காணாமல் போய்விடும் என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள். உங்களுக்கு மிளகு ரசம் எப்படி செய்வதென்று தெரியாவிட்டால், தமிழ் போல்ட் ஸ்கை மிளகு ரசத்தின் ஈஸியான செய்முறையைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து அதன்படி செய்து சுவைத்து மகிழுங்கள். அதிலும் இந்த ரசத்தை பேச்சுலர்கள் கூட முயற்சி செய்யலாம். சரி, இப்போது ரெசிபியைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: புளி - 1 எலுமிச்சை அளவு கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு வறுத்து அரைப்பதற்கு... மிளகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் பூண்டு - 1 வரமிளகாய் - 1 துவரம் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன் தாளிப்பதற்கு... நெய் - 1 டீஸ்பூன் …
-
- 3 replies
- 1.3k views
-
-
ஜவ்வரிசி - கால் கப் / சவ்வரிசி பால் - 1 கப் - 1 1/2 கப் நீர் - ஒரு கப் முந்திரி, திராட்சை - தேவைக்கு பாதாம், பிஸ்தா (விரும்பினால்) நெய் - ஒரு தேக்கரண்டி சர்க்கரை - அரை கப் ஏலக்காய் தூள் ஜவ்வரிசியை கழுவி கொதிக்க வைத்த நீரில் போட்டு ஒரு மணி நேரம் ஊற விடவும். பின் குக்கரில் வைத்து 1 - 2 விசில் வைத்து எடுக்கவும். பாதாம் பிஸ்தாவை பொடியாக நறுக்கி வைக்கவும். பாலை நன்றாக திக்காக காய்ச்சி ஆற வைக்கவும். பாத்திரத்தில் நெய் விட்டு முந்திரி, திராட்சை வறுத்து எடுக்கவும். அதே பாத்திரத்தில் நன்றாக வெந்து கண்ணாடி போல் இருக்கும் ஜவ்விரிசியை ஊற்றி சர்க்கரையை சேர்த்து கலக்கவும். சர்க்கரை நன்றாக கலந்து வந்ததும் கடைசியாக பால் சேர்க்கவும். இத்…
-
- 6 replies
- 5.6k views
-
-
சாக்லேட் கேக் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாக்லேட் கேக்கினை கிறிஸ்மஸ் தினத்தன்று செய்து கொடுத்து தேவையானப் பொருட்கள் மைதா - 2 கப் சர்க்கரை - 2 கப் முட்டை - 8 வெண்ணை - 450 கிராம் வென்னிலா பவுடர் - 2 தேக்கரண்டி பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி கருப்பு டேப்லெட் சாக்லேட் - 400 கிராம் செய்முறை சர்க்கரையை மிக்ஸியில் போட்டு தூளாக அரைத்துக் கொள்ளவும். சர்க்கரையை வெண்ணையுடன் நன்கு க்ரீம் போல வரும்வரை கலக்கவும். சாக்லேட்டு துண்டுகளை சுடு நீரில் போட்டு நன்கு கூழ் போல செய்து கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு நுரை வரும் வரை அடித்துக் கலக்கவும். …
-
- 0 replies
- 601 views
-