நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
ராம்ஜான் பண்டிகையில் போது காலை சிற்றுண்டியாக சாப்பிட சுவையான சேமியா மட்டன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மட்டன் - அரை கிலோ சேமியா - அரை கிலோ எண்ணெய் - 100 மில்லி நெய் - 50 மில்லி இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 மேசைக்கரண்டி கரம் மசாலா - அரை தேக்கரண்டி சில்லி பவுடர் - 1 1/2 தேக்கரண்டி (காரம் அவரவர் விருப்பம்) தயிர் - 4 மேசைக்கரண்டி வெங்காயம் - 150 கிராம் தக்காளி - 200 கிராம் பச்சை மிளகாய் - 3 கொத்தமல்லி, புதினா - தலா கைப்பிடியளவு எலுமிச்சைபழம் - பாதி தேங்காய் பாதி - துருவிக் கொள்ளவும் (பால் எடுக்கவும்) உப்பு - …
-
- 4 replies
- 1.2k views
-
-
இலங்கையில் இருக்கும் போது, இதனை வீட்டில் சமைப்போம்... நல்ல சுவையானதாக இருக்கும். இது சிங்கள நாட்டில், விளைவதாக நினைக்கின்றேன். நேற்று... இங்கிலாந்தில் ஒரு தமிழ் கடையில்... கண்டபோது, ஆசையில் வாங்கி விட்டேன். அதனை... எப்படி சமைப்பது என்று, யாருக்காவது தெரிந்தால்... கூறுங்களேன்.
-
- 36 replies
- 15.3k views
-
-
நாங்க சின்ன பிள்ளையா இருக்கேக்க எங்க அம்மம்மா முருங்கைக்காயும் இறாலும் போட்டு நல்ல பிரட்டல் கறி ஒண்டு வைப்பா, வாங்க இண்டைக்கு எப்பிடி அந்த பிரட்டல் கறி செய்யிற எண்டு பாப்பம் வாங்க. நீங்களும் செய்து பாருங்க பாத்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்க என.
-
- 0 replies
- 463 views
-
-
சிறுதானியங்களில் நிறைந்துள்ள சத்துக்கள் தற்போது சிறுதானிய உணவுகளை உண்ணும் ஆர்வம் அதிகரித்திருக்கின்றன. சிறுதானியங்களில் என்னென்ன சத்துகள் நிறைந்திருக்கின்றன என்று பார்க்கலாம். தற்போது சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வும், சிறுதானிய உணவுகளை உண்ணும் ஆர்வமும் அதிகரித்திருக்கின்றன. ஆனால் சிறுதானியங்களில் என்னென்ன சத்துகள் நிறைந்திருக்கின்றன என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இதோ, விவரம்... கம்பு: ‘டைப் 2’ சர்க்கரைநோய் வராமல் தடுக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும். வெயில் காலத்தில் ஏற்படும் தலைச்சுற்றல், கிறுகிறுப்பு, நாவற…
-
- 0 replies
- 737 views
-
-
மாங்காய் பச்சடி செய்வது எப்படி சாதம், தோசையுடன் சாப்பிட மாங்காய் பச்சடி அருமையாக இருக்கும். இன்று இந்த மாங்காய் பச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மாங்காய் - 2 உப்பு - ஒரு துளி, எண்ணெய் - ஒரு டீஸ்பூன் வெல்லம் - ஒரு பாதி மாங்காய் அளவு கடுகு - சிறிது பச்சை மிளகாய் - 2 நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன் செய்முறை : முதலில் மாங்காயை சுத்தம் செய்து, தோலைச் சீவி, சிறிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். வெல்லத்தை பொடித்து கொள்ளவும். பாத்திரத்தில் சிறிது தண்ணீருடன் மாங்காயை…
-
- 0 replies
- 659 views
-
-
-
- 18 replies
- 2.3k views
-
-
ட்ரFவல் - Truffel - உலகின் அதி விலை கூடிய உணவு ? மேலை நாடுகளில் பல அதி விலையுயர்ந்த உணவுப்போடுட்கள் உள்ளன. அதில் இதுவும் ஒன்று. - இது காளான் வகையை சேர்ந்த உணவு. நிலத்திற்கு கீழே வளரும் ஒரு கிழங்கு, அதேவேளை இது 'பங்கஸ்' கூட. - அநேகமாக மரங்களின் கீழே விளைகின்றது. - இதை தேடி நிலத்திற்கு கீழே இருந்து எடுப்பதற்கு இதற்காக பயிற்றுவிக்கப்பட்ட நாய்களை பயன்படுத்துகின்றனர் (முன்னர் பன்றிகளை பாவித்தனர், ஆனால் அவை அவற்றை சாப்பிட்டுவிடும் ) ஐரோப்பாவில் இந்த உணவுவகை பாரம்பரரீதியாக வளர்க்கப்படுகின்றது. பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, கிரேக்கம் நாடுகளில் அதிகம் காணப்படுகின்றது. ஆனால், பிரான்ஸ் மற்றும் வட இத்தாலியில் தரம் கூடிய வகை காணப்படுகின்றது. …
-
- 2 replies
- 855 views
-
-
30 வகை இன்டர்நேஷனல் வெஜ் ரெசிப்பி வீட்டில் பிள்ளைகள் அதிக நேரம் தங்கும் விடுமுறை சீஸன் இது. வித்தியாசமான, சுவையான உணவை எதிர்பார்த்து, ‘’இன்றைய ஸ்பெஷல் என்னம்மா..?’’ என்று ஆர்வத்துடன் கேட்பார்கள். அவர்களுக்கு என்ன செய்து கொடுத்தால் குஷி அடைவார்கள் என்று அக்கறையுடன் யோசிக்கும் இல்லத்தரசிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், கிண்டர் கார்டன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் `30 வகை இன்டர்நேஷனல் வெஜ் ரெசிப்பி’க்களை வழங்குகிறார் சமையல்கலை நிபுணர் அனுப்ரியா ஆனந்த். இவர் இணையத்திலும் சமையல்கலையில் அசத்தி வருபவர். நூடுல்ஸ் சூப் தேவையானவை: நூடுல்ஸ் - கால் கப், கேரட், குடமிளகாய், வெங்காயத்தாள், பச்சை மிளகாய் - தலா ஒன்று, சோள…
-
- 2 replies
- 4.1k views
-
-
சரி எல்லாரும் புதுசு புதுசா செய்முறைகள் போடுகின்றீர்கள்...நானும் எனக்கு தொிந்த ஒன்றை எடுத்துவிடுவம் உறைப்பு முறுக்கு: தேவையான பொருட்கள்: கடலை மா - 2 கப் அவித்த கோதுமை மா அல்லது ஆட்டாமா - 1 கப் எள்ளு: 1/2 கப் தனி மிளகாய்த்தூள் - உங்கள் உறைப்புத்தேவைக்கு ஏற்றவாறு உப்பு: தேவையான அளவு ஓமப்பொடி: சிறிதளவு செய்முறை: மேல் கூறிய அனைத்துப்பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு எல்லாவற்றையும் நன்றாக கலந்த பின்பு தண்ணீர் விட்டு ( சாதாரணமாக tap ல் வரும் தண்ணீர் - சுடு தண்ணீர் அல்ல) விட்டு தண்ணிப்பதமாக குழைக்கவும். அப்படி குழைத்தால் முறுக்கை பிழிவதற்கு மிகவும் இலகுவாக இருக்கும். எண்ணை கொதித்தபின்பு எ…
-
- 17 replies
- 2.1k views
-
-
-
- 0 replies
- 966 views
-
-
தயிர் சாதம் என்ன வேணும்??? அரிசி (பஸ்மதி அரிசி ) 2கப் 3 பேருக்கு . மோர்மிளகாய் 4 . சின்னவெங்காயம் 6 . கடுகு தாளிக்க . இஞ்சி 1 துண்டு . கஜூ 10 . உப்பு தேவையான அளவு . நல்லெண்ணை தேவையான அளவு . கொத்தமல்லி இலை தேவையான அளவு . தயிர் ( யோக்கூர்ட் ) 125 கிறாம் , 4 பெட்டி . கூட்டல் : ஒரு பானையிலை தண்ணியும் உப்பும் போட்டு தண்ணியை கொதிக்க விடுங்கோ . தண்ணி கொதிச்ச உடனை பஸ்மதி அரிசியை கழுவி போடுங்கோ . சோறு அரை பதத்திலை வெந்த உடனை வடிச்சு இறக்கி அதை ஆற விடுங்கோ . சின்ன வெங்காயம் , இஞ்சியை குறுணியாய் வெட்டுங்கோ . ஒரு தாச்சியை எடுத்து அதிலை கொஞ்சம் நல்லெண்ணை விட்டு , மோர்மிளகாய் ***, கஜூ எல்லாத்தையும் பிறிம்பாய் பொரிச்சு எடுங்கோ . மிஞ்சின எண்ணையிலை கடுகை வெ…
-
- 19 replies
- 3k views
-
-
வாங்க இண்டைக்கு நாங்க ரொம்ப ரொம்ப இலகுவா மாலை நேரத்தில செய்ய கூடிய முட்டை கட்லெட் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம். இப்பிடி செய்து பிள்ளைகளுக்கு குடுத்து பாருங்க ஒவ்வொரு நாளும் வேணும் எண்டு கேப்பாங்க அவ்வளவு ருசியா இருக்கும். செய்து பாத்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க என.
-
- 0 replies
- 723 views
-
-
-
சுடச்சுட கடலை வடை செய்ய வேண்டுமா? இரண்டு சுண்டு கடலை பருப்பு (ஏறத்தாள் 50 வடை) இரண்டு மணி நேரம் ஊற வைத்து விறைன்டரில் அரைக்காமல் பூட் பிரசரில் அரைக்கவும்.அரைக்கும் போதே தேவையான உப்பு செத்தல் மிளகாள் போட்டு அரைக்கவும்.இன்னொரு பக்கத்தில் கொஞ்சம் வெண்காயம் இஞ்சி கறிவேப்பிலை நல்ல தூளாக வெட்டி சிறிது சின்ன சீரகமும் பொட்டு அரைத்த பரப்புடன் போட்டு நன்றாக பிசைந்கு ஒன்றாக்கவும்.தேவையான அளவு எண்ணெய் விட்டு கொதித்ததும் உங்களுக்கு தேவையான அளவுக்கு பிடித்து ஒரு கோப்பையில் வைத்து விட்டு சட்டிக்கு ஏற்ற மாதிரி போட்டு இடையில் ஒரு தரம் பிரட்டி பொன்நிறமானதும் எடுத்து ஆற வைத்து சாப்பிடவும். தேவையான பொருட்கள்;- 2 சுண்டு கடலைப்பருப்பு தேவையான அளவு உப்பு உங்களுக்கு ஏற…
-
- 10 replies
- 2k views
-
-
வெள்ளிக்கிழமை நாளா பார்த்து ஆட்டுக்கால் சூப்பை பற்றி குறிப்பு போட்டதால கடுப்பாகி இருக்கும் தமிழ் சிறியின் மூலச்சூட்டை தணிக்க இந்த மிளகு சூப் செய்முறை. சமைக்க தேவையானவை துவரம்பருப்பு - ஒரு கப் ஆப்பிள் - அரை துண்டு தேங்காய் துருவல் - அரை கப் வெங்காயம் - ஒன்று உருளைக்கிழங்கு - ஒன்று பூண்டு - 3 பல் கறிவேப்பிலை - சிறிதளவு மிளகுத்தூள் - கா…
-
- 2 replies
- 1.2k views
-
-
இது வரைக்கும் நீக்க பல்வேறு வைகையான ஐஸ் கிரீம் சாப்பிடு இருப்பீங்க, ஆனா யாழ்ப்பாணத்தில மாவிட்டபுறம் கோயிலுக்கு பக்கத்தில ஒரு சின்ன கடையில மண் சட்டில நல்ல ருசியான ஐஸ்கிரீம் விக்கிறாங்க, நான் இதுவரைக்கும் இப்பிடி ஐஸ்கிரீம் குடிச்சதில்லை அதனால என் அனுபவங்களை ஒரு சின்ன காணொளியா எடுத்து இருக்கன் பாருங்க, வேற எங்காச்சும் இப்பிடி மண் சட்டிக்குள வச்சு ஐஸ்கிரீம் குடுக்கிற கண்டு இருக்கீங்களோ, அப்பிடி என்க கண்டீங்க வேண்டும் சொல்லுங்க. அதோட இந்த கடையில வித்தியாசமான சுவைகளுள குல்வி ஐஸ் கிரீமும் இருக்கு,
-
- 11 replies
- 1.2k views
-
-
வாங்க இண்டைக்கு இலகுவா முட்டைய மட்டும் வச்சு இலகுவா ஒரு உறைப்பான மாலை உருண்டை செய்வம், இத நீங்க மாலைநேரத்துக்கு செய்து தேத்தண்ணியோடையும் சாப்பிட நல்லா இருக்கும். நீங்களும் செய்து பார்த்து எப்படி இருக்கிறது எண்டு சொல்லுங்க என.
-
- 0 replies
- 475 views
-
-
UNSEEN Chinese Street Food BREAKFAST TOUR in DEEP Sichuan, China | STREET FOOD Tour through China! சீன தெருவோர உணவகங்களில் சாப்பாட்டு அசுரன்
-
- 1 reply
- 745 views
-
-
பொதுவாக புடலங்காயை கூட்டு, பொரியல் என்று தான் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் குளிர்காலத்தில் மாலை வேளையில் டீ/காபி குடிக்கும் போது இதமாக ஏதேனும் மொறுமொறுவென்று சாப்பிட நினைத்தால், புடலங்காயை பஜ்ஜி செய்து சாப்பிடலாம். இது உண்மையிலேயே வித்தியாசமான சுவையுடன் இருக்கும். மேலும் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி, இப்போது புடலங்காய் பஜ்ஜியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: புடலங்காய் - 1 எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு பஜ்ஜி மாவிற்கு... கடலை மாவு - 1 கப் அரிசி மாவு - 1/2 கப் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தண்ணீர்…
-
- 0 replies
- 440 views
-
-
தேவையான பொருட்கள்: கேரட் – 1 குடைமிளகாய் – 1 வெங்காயம் – 1 வெங்காயத்தாள் -1 பிடி அஜினோமோட்டோ – 1 டீஸ்பூன் வெள்ளை மிளகுத் தூள் -1 டீஸ்பூன் நெய் அல்லது எண்ணெய் – 3 டீஸ்பூன் பாசுமதி அரிசி – 200 கிராம் உப்பு – தேவையான அளவு செய்முறை: காய்கறிகளைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பாத்திரத்தில், எண்ணெய் விட்டு, காய்கறிகள், வெங்காயம், அஜினோமோட்டோ, வெள்ளை மிளகுத்தூள், உப்பு கலந்து மூடி, அவனில் 3 நிமிடங்கள் ஹையில் வைக்கவும். காய்கறிகள் வெந்ததும் தனியே எடுத்து வைத்துக் கொண்டு, அதே பாத்திரத்தில் சுத்தம் செய்த பாசுமதி அரிசியைப் போட்டு, 300 மி.லி. தண்ணீரை ஊற்றி மூடி, 5 நிமிடங்கள் ஹையில் வைக்கவும். சாதம் வெந்ததும், வெந்த காய்கறிகளை சாதத்தில் கலந்த…
-
- 3 replies
- 1.8k views
-
-
உங்களில் யாருக்காவது சுவையான வாய்ப்பன் எண்ணெய் குடிக்காமல் செய்யும் முறை தெரியுமா?...நிறைய வாழைப்பழம் பழுத்து கனிந்து போய் இருக்குது.சும்மா பழம் என்டால் எறிந்து விடலாம் ஆனால் இந்தப் பழத்தை எறிய மனமில்லாமல் இருக்குது ஆகவே யாராவது வாழைப்பழத்தில் செய்யக் கூடிய பலகாரம் ஏதாவது இருந்தால் சொல்லுங்கோ.செய்ய வேண்டும்...நன்றி
-
- 14 replies
- 7.4k views
-
-
அதிசய உணவுகள் 1 - தவளை சூப்! கடல் உணவுகள் விற்கும் கடையின் முன்னால் சாந்தகுமாரி சிவகடாட்சம் ‘உலகத்தில் உண்மையான காதல் என்பது வேறு எதிலுமே இல்லை. அது உண்ணும் உணவின் மீதுதான் இருக்கிறது!’ - ஜார்ஜ் பெர்னாட் ஷா இரண்டாயிரத்தில் இருந்து பத் தாயிரம் வரையிலான சுவை மொட்டுகளை (Taste Buds) தன்ன கத்தே கொண்ட ஒரு மனிதனுடைய நாக் கின் நீளம் வெறும் 4 அங்குலங்கள் தான். இந்தச் சிறிய நாக்குக்காக படைக் கப்பட்டிருக்கிற பலவகையான உணவு வகைகளை எல்லாம் உலகெங்கிலும் வாழும் மனிதர்கள்கண்டுபிடித்து வைத் திருப்பது உலக மகா அதிசயமாக எனக்குத் தோன்றும். நாக்கின் சுவை என்பது இந்த நாலு அங்குலங்களைத் தாண்டினால் காணாமல் போய்விடும். இதற்குத்தான் மனிதன…
-
- 0 replies
- 1.2k views
-
-
கிராமத்து கருவாட்டு தொக்கு உங்களுக்கு கருவாடு ரொம்ப பிடிக்குமா? இதுவரை கருவாட்டு குழம்பு தான் செய்து சுவைத்திருக்கிறீர்களா? கிராமத்து கருவாட்டு தொக்கு உங்களுக்கு செய்யத் தெரியுமா? தேவையான பொருட்கள்: கருவாடு - 10 துண்டுகள் பூண்டு - 6 பற்கள் (பொடியாக நறுக்கியது) வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன் தண்ணீர் - தேவையான அளவு செய்முறை: முதலில் கருவாட்டை சுடுநீரில் போட்டு 30 நிமிடம் ஊற வைத்து, பின் அலசி தனியாக வைத்துக…
-
- 11 replies
- 4.4k views
-
-
வித்தியாசமான சுவையில் இறால் தொக்கு!#WeekEndRecipe வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான இறால் தொக்கு அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி. தேவையானவை: இறால்(சுத்தம் செய்து குடல் நீக்கியது) - 250 கிராம் பெரிய வெங்காயம் - 100 கிராம் தக்காளி - 100 கிராம் இஞ்சி-பூண்டு விழுது - ஒன்றரை டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் சோம்பு - அரை டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 கறிவ…
-
- 0 replies
- 846 views
-
-