நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
சட்னியில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. இங்கு அதில் மிகவும் எளிமையான ஒரு சட்னி ரெசிபியைக் கொடுத்துள்ளோம். இதற்கு தக்காளி மற்றும் வெங்காயம் இருந்தால் போதும். மேலும் இதனை பேச்சுலர்களுக்கு ஏற்ற ஒரு சட்னி ரெசிபி என்று கூட சொல்லலாம். சரி, இப்போது அந்த தக்காளி மற்றும் வெங்காய சட்னியை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: வெங்காயம் - 2 தக்காளி - 4-5 பச்சை மிளகாய் - 2 உப்பு - தேவையான அளவு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - 2 டீஸ்பூன் செய்முறை: முதலில் வெங்காயத்தை உரித்து, அதனை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் தக்காளியை கழுவி, அதனையும் நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்பு மிக…
-
- 1 reply
- 611 views
-
-
கோக்கோ - முந்திரி பிஸ்கட் தேவையான பொருள்கள்: மைதா - 1 கப் வெண்ணெய் - 3/4 கப் கோக்கோ - 1 டேபிள்ஸ்பூன் பொடித்த சர்க்கரை - 1 கப் பொடித்த முந்திரி - 3/4 கப் பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன் செய்முறை: * சர்க்கரையையும், வெண்ணெயையும் நுரை பொங்கத் தேய்த்துக் கொள்ளவும். * மைதா, கோக்கோ, பேக்கிங் பவுடர் ஆகியவற்றைச் சலித்துக் கொள்ளவும். * மாவை வெண்ணெயோடு சிறிது சிறிதாக முந்திரிப் பொடி சேர்த்துப் பிசையவும். * 10 நிமிடங்கள் ஃப்ரீசரில் வைத்து எடுத்து 1 செ.மீ. கனமுள் சப்பாத்தியாக இட்டு, விருப்பப்பட்ட வடிவத்தில் வெட்டவும். * நெய் தடவி, மாவு தூவிய மைக்ரோ வேவ் தட்டில் இடைவெளி விட்டு அடுக்கி 5 நிமிடங்கள் `மைக்ரோ ஹை'யில் பேக்மோட்'டில் வைத்து வே…
-
- 1 reply
- 1.9k views
-
-
உருளைக்கிழங்கு மசாலா என்னென்ன தேவை? உருளைக்கிழங்கு - 1/4 கிலோ, கடுகு - 1/2 டீஸ்பூன், மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், வெங்காயம் - 1, மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன், தனியா தூள் - 1/4 டீஸ்பூன், கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கு. எப்படிச் செய்வது? உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி நறுக்கி கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், அதன்பின், உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் கரம் மசாலா தூள், இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்கி இறக்கவும். குறிப்பு : வெங்க…
-
- 1 reply
- 937 views
-
-
பெப்பர் சில்லி சிக்கன் சிக்கன் ரெசிபியில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அதிலும் சிக்கனை நன்கு காரமாக சமைத்து சாப்பிட்டால், மிகவும் அருமையாக இருக்கும். பொதுவாக சிக்கனில் சிக்கன் 65 தான் அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் அந்த மாதிரியான வகையில் தான் சில்லி சிக்கனும் இருக்கும். மேலும் சில்லி சிக்கனில் நிறைய வகைகள் உள்ளன. இப்போது அவற்றில் ஒன்றான பெப்பர் சில்லி சிக்கனை எப்படி செய்வது என்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/2 கிலோ முட்டை - 1 கார்ன் ஃப்ளார் - 2 டீஸ்பூன் தயிர் - 1/4 கப் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள் - 4 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன் வெங்காயம் - 2 …
-
- 1 reply
- 1.1k views
-
-
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: வான்கோழி பிரியாணி இந்த வருடம் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வான்கோழி பிரியாணியை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : ஊற வைப்பதற்கு… வான்கோழி - 5 பெரிய துண்டுகள் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 நாட்டுத் தக்காளி - 1 புதினா - சிறிது கொத்தமல்லி - சிறிது எலுமிச்சை - 1 …
-
- 1 reply
- 1.2k views
-
-
இதுவரை எத்தனையோ பஜ்ஜிகளைப் பார்த்திருப்போம். ஆனால் பசலைக் கீரையைக் கொண்டு பஜ்ஜி செய்திருக்கமாட்டோம். பசலைக் கீரை பஜ்ஜியானது மிகவும் எளிமையான மற்றும் வித்தியாசமான சுவையில் இருக்கும் ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி. இதனை மாலை வேளையில் காபி அல்லது டீ குடிக்கும் போது, அதனுடன் செய்து சாப்பிட்டால், நன்றாக இருக்கும். அதிலும் பசலைக் கீரையில் நிறைய சத்துக்கள் நிறைந்திருப்பதால், இந்த பஜ்ஜியை குழந்தைகளுக்கு செய்து கொடுப்பது நல்லது. சரி, அந்த ரெசிபியின் செய்முறையைப் பார்க்கலாமா!!! தேவையான பொருட்கள்: பசலைக் கீரையின் இலை - 1 கப் கடலை மாவு - 1 கப் சோம்பு பொடி - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லி தூள் - 1 டீஸ்பூன் சீரகப் பொடி - 1 டீஸ்பூன் பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை …
-
- 1 reply
- 687 views
-
-
-
-
- 1 reply
- 825 views
-
-
வாழை தண்டு கூட்டு தேவையானவை வாழை தண்டு – ஒரு ஜான் அளவு துவரம் பருப்பு – அரை ஆழாக்கு (100 கிராம்) எண்ணையில் வறுத்து பொடிக்க எண்ணை - ஒரு மேசை கரண்டி காஞ்சமிளகாய் நீட்டு மிளகாய் – 3 கடலை பருப்பு – ஒரு மேசைகரண்டி உளுத்தம் பருப்பு – ஒரு மேசைகரண்டி முழுதனியா – ஒரு மேசை கரண்டி கருவேப்பிலை – 10 இதழ் சீரகம் – ஒரு தேக்கரண்டி தேங்காய் துருவல் – இரண்டு மேசை கரண்டி செய்முறை 1.வறுக்க கொடுக்க பட்டுள்ளவைகளை வறுத்து பொடிக்கவும். 2. வாழை தண்டை வட்ட வட்ட வடிவமாக நறுக்கி இடை இடையே வரும் நாரை பிரித்து எடுத்து பொடியாக அரிந்து கொள்ளவும். 3. பொடியாக அரிந்த வாழை தண்டில் மஞ்சள் பொடி உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து பாதி வே…
-
- 1 reply
- 7.4k views
-
-
வாங்க இண்டைக்கு நாங்க யாழ்ப்பாணத்தில வளக்கிற சிப்பி காளான் வச்சு இரு கறி செய்வம், இது இறைச்சி கறிய விட ரொம்ப சுவையா இருக்கும், ஒருமுறை இப்பிடி செய்து பாருங்க பேந்து விடவே மாட்டீங்க. செய்து பார்த்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க என.
-
- 1 reply
- 657 views
-
-
புதினா மல்லி இறால் குழம்பு என்னென்ன தேவை? இறால் - 1/4 கிலோ (மீடியம் சைஸ்) பல்லாரி - 2 பூண்டு - 5 பல் பச்சை மிளகாய் - 2 புதினா - 1 சிறிய கட்டு கொத்தமல்லி - 1/2 கட்டு இஞ்சி - சிறிதளவு சீரகத்தூள் - அரை ஸ்பூன் மல்லித்தூள் - அரை ஸ்பூன் தேங்காய் பால் - 100 மி.லி. எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன் எப்படிச் செய்வது? முதலில் இறாலை நன்கு கழுவ வேண்டும். இத்துடன் உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து தனியாக வைக்கவும். அப்புறம் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், சீரகத்தூள், மல்லித்தூள், இஞ்சி, பூண்டு மற்றும் பொடியாக நறுக்கிய ஒரு பல்லாரி வெங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நைசாக அரைக்கவும். வாணலியில் 3 ஸ்பூன் எண்ணெய் வி…
-
- 1 reply
- 1k views
-
-
பயனுள்ள சமையல் குறிப்புகள்! 1. வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு இவைகளை சமைக்கும்போது இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு தாளித்தால், மிகுந்த மணத்துடன் இருக்கும். 2. சர்க்கரை பொங்கலின் சுவை மேலும் பிரமாதமாக இருக்க கொஞ்சம் மில்க்மெய்ட் சேர்த்தால் அற்புதமான சுவையை சுவைக்கலாம். 3. இட்லி கெட்டியாக இருந்தால் நாலு பச்சை அப்பளங்களை தண்ணீரில் நனைத்து மிக்ஸியில் ஒரு நிமிடம் ஓட விட்டு மாவில் கலந்து வார்த்துப்பாருங்கள். இட்லி பூ மாதிரி இருக்கும். 4. உருளைக்கிழங்கு பொரிக்கும் முன்பு சிறிதளவு பயத்தம் மாவை தூவுங்கள். பொரியல் மொறு மொறுப்பாக, சுவை அசத்தலாக இருக்கும். 5. முந்திரி பருப்பை எறும்பு அழிக்காமல் இருக்க சிறிதளவு பச்ச…
-
- 1 reply
- 1k views
-
-
கேரளாவில் குழல் புட்டுடன் சாப்பாட்டு அசுரன்
-
- 1 reply
- 597 views
-
-
உருளைக்கிழங்கு பொரியல் தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு: 300 கிராம் சாம்பார் பொடி: 1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு: 1 தேக்கரண்டி புளி: கைப்பிடி அளவு கடுகு: அரை தேக்கரண்டி நல்லெண்ணெய்: சிறிதளவு நெய்: அரை தேக்கரண்டி கறிவேப்பிலை, கொத்தமல்லி: சிறிதளவு உப்பு: தேவையான அளவு செய்முறை: உருளைக்கிழங்கினை கழுவி தோலோடு சிறுசிறு துண்டுகளாக நறுக்கி நீரில் போட்டு வைக்கவேண்டும். புளியினை சிறிது நீர் விட்டு ஊற வைத்து கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, ஒரு தேக்கரண்டி உளுத்தம்பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவைகளைப் போட்டு தாளித்து, நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு புரட்டிக் கொடுக…
-
- 1 reply
- 1.8k views
-
-
* வாழைத்தண்டு வேகவைத்த தண்ணீரை வீணாக்காமல் அத்துடன் மிளகுப்பொடி, உப்பு மற்றும் தக்காளிப் பழம் கலந்து சூப்பாக அருந்தலாம். உடலுக்கு மிகவும் நல்லது. * அரிசி, பயிறு போன்றவற்றை வறுத்து ரவையாக உடைத்து வைத்துக் கொள்ளுங்கள். கேழ்வரகு, கோதுமை போன்றவற்றை முளை கட்டி காயவைத்து ரவையாக உடைத்துக் கொண்டால் தேவையானபோது உடனடியாக கஞ்சி தயாரிக்கலாம். * டீ போடும்போது முதலில் தண்ணீருடன் தேவையான சர்க்கரையைச் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். பின்னர் டீத்தூள் போட்டு வடிகட்டி சூடானபால் சேர்த்தால் டீ திக்காகவும் சுவையாகவும் இருப்பதோடு டீ போட பயன்படுத்தும் பாத்திரமும் கறுத்துப் போகாது. * சிறிது சிறிதாக மிகுந்த ஊறுகாயை ஒன்று சேர்த்து மிக்ஸியிஸ் அரைத்து சிறிது வெல்லம் சேர்த்து எண்ணெய்ச் சட்டியில…
-
- 1 reply
- 1.2k views
-
-
நேற்று இதனை வீட்டில் செய்து கொடுத்தேன், அனைவரும் சாப்பிட்டனர். படம் எடுக்க நேரம் கிடைக்கவில்லை. இவ் காணொளியில் கேரளப் பெண் குட்டி, கொஞ்சி கொஞ்சி பேசும் மலையாளம், கறியை விட சுவையாக இருக்கின்றது ; மலையாளப் பெண்களைப் போன்று..
-
- 1 reply
- 805 views
-
-
தேவையான பொருட்கள்: கொத்துக்கறி – 1/4 கிலோ வத்தல் – 6 கொத்தமல்லி – 2 தேக்கரண்டி பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி வெங்காயம் – 1 பெரியது தேங்காய் – 1 மூடி கசகசா – 1 தேக்கரண்டி பட்டை – 1 அங்குலம் கிராம்பு – 3 ஏலக்காய் – 2 முந்திரிப்பருப்பு – 6 புதினா – சிறிது எலுமிச்சம் பழம் – அரை பழம் செய்முறை: 1. கொத்தமல்லி, பெருஞ்சீரகம், வத்தல் ஆகியவற்றை இளம் வறுவலாக வறுத்துக்கொண்டு அரைக்க வேண்டும். 2.குக்கரில் ஒரு கரண்டி எண்ணெய்விட்டு கறியை தண்ணீரில்லாமல் வதக்கி உப்பு போட்டு உரலில் நன்றாக ஆட்ட வேண்டும். 3.பின் அரைத்த மசாலாவில் பாதியைப் போட்டு, ஒரு முட்டையையும் ஊற்றி கறிக்கலவையை நன்றாக கலந்து உருண்டை பிடித்து வைத்துக் கொள்ளவும…
-
- 1 reply
- 667 views
-
-
கீரையும், வெந்தயமும் இன்றியமையாதவை! Posted on admin on February 18, 2012 // Leave Your Comment நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடிய உணவு வகைகளில் என்னென்ன சத்துக்கள் உள்ளன என்பது குறித்து, நாம் அதிகம் சிந்திப்பதில்லை. திருப்பூரைச் சேர்ந்த கபீர் என்பவர், கீரை மற்றும் வெந்தயம் குறித்த விவரங்களை தொகுத்தளிக்கிறார்:கீரை ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்: கீரைகள், காய்கறிகள் உடல் வளர்ச்சிக்கும், நல்ல ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம். இவை அதிகளவில் முக்கிய சத்துக்களை கொண்டுள்ளன. இந்தியாவில் பல வகை கீரைகள் உணவாக உட்கொள்ளப்படுகின்றன. அவற்றில் மிகவும் பெயர் பெற்றவை, அரக்கீரை, பாலக்கீரை, தண்டு கீரை, புளிச்சக்கீரை, வெந்தயக்கீரை, முருங்கைக் கீரை மற்றும் புதினா தழை போன…
-
- 1 reply
- 1.4k views
-
-
வெந்தயக் கீரை சாதம் தேவையான பொருட்கள் கீரை 1 கட்டு மிளகாய் வற்றல் 4 கடலை பருப்பு 4 ஸ்பூன் உளுத்தம் பருப்பு 3 ஸ்பூன் தனியா 2 ஸ்பூன் எண்ணெய் 5 ஸ்பூன் கடுகு 1 ஸ்பூன் தேவையானால் சிறிய தேங்காய் கீற்று செய்முறை கீரையைச் சுத்தம் செய்து, கழுவி, பொடிப் பொடியாக அரிந்து கொள்ளவும். வெறும் வாணலியில் 2 ஸ்பூன் கடலை பருப்பு, 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு, தனியா, மிளகாய் இவற்றை வறுத்து தேங்காயுடன் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி, மீதியுள்ள பருப்புகளை கடுகு வெடித்ததும் போட்டு, மஞ்சள் தூள், சிறிது பெருங்காயத்தூளுடன் போட்டுக் கீரையையும் போட்டு வதக்கவும். சற்று வதங்கிய பின்னர், கெட்டியாக புளியைக் கரைத்து ஊற்றி,…
-
- 1 reply
- 768 views
-
-
தமிழ்ப் புத்தாண்டு ரெசிப்பிக்கள் தமிழ்ப்புத்தாண்டு அன்று மதியம் எல்லோருடைய வீட்டிலும் வடை பாயாசத்தோடு துவங்கும் ரெசிப்பிக்களை இங்கே உங்களுக்காக வழங்கியிருக்கிறோம். அவற்றில் நான்கு அட்டகாசமான ரெசிப்பிக்களுக்கான செய்முறை வீடியோக்களும் இங்கு உள்ளன. தேவையானவை: பலாப்பழம் - 15 வெல்லம் - அரை கப் கெட்டியான தேங்காய் பால் - அரை கப் இரண்டாம் தேங்காய் பால் - அரை கப் முந்திரி - 10 நெய் - 3 டீஸ்பூன் தண்ணீர் - கால் கப் தேங்காய் துண்டுகள் - ஒரு டேபிள் ஸ்பூன் ஏலக்காய் பொடி - ஒரு சிட்டிகை செய்முறை: பலா பழத்தின் கொட்டையை நீக்கி விட்டு, குக்கரில் சேர்த்து கால் கப் தண்ணீர் விட்டு வேக வைக்கவும். வெந்த உடன் மிக்ஸியில் சேர்த்து அரை…
-
- 1 reply
- 1.1k views
-
-
ரைஸ் புடிங் தேவையானவை: அரிசி முக்கால் கப் பால் இரண்டு கப் சர்க்கரை இரண்டே கால் கப் உப்பு கால் டீஸ்பூன் முட்டை ஒன்று நன்றாக அடித்தது உலர்ந்த திராட்சை முக்கால் கப் நெய் ஒரு டேபிள்ஸ்பூன் வனிலா எசன்ஸ் அரை டீஸ்பூன் செய்முறை: கடாயில் ஒரு கப் தண்ணீரை விட்டுக் கொதிக்க வைக்கவும். பிறகு அரிசியைப் போட்டு நன்றாகக் கலக்கி விட்டு மூடி, மிதமான தீயில் இருபது நிமிடம் வேக வைக்கவும். சாதம் நன்றாகக் குழைய வேண்டும். இதனுடன் ஒன்றரை கப்…
-
- 1 reply
- 778 views
-
-
பப்பாளிக்காய் பொரியல் என்னென்ன தேவை? பப்பாளிக்காய் (துருவியது) - 1 கப் குடமிளகாய் 3 ( பச்சை, சிவப்பு, மஞ்சள்) நறுக்கிய பச்சை மிளகாய் 2 டீஸ்பூன் பெரிய வெங்காயம் 2 தேங்காய்த் துருவல் - அரை மூடி கடலைப் பருப்பு 2 டீஸ்பூன் கடுகு, உளுந்து 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கறிவேப்பிலை, மல்லித் தழை - சிறிதளவு எப்படிச் செய்வது? பப்பாளிக்காயை சேமியாபோல் துருவிக் கொள்ளவும். மூன்று நிற குடமிளகாயையும் நீளவாக்கில் துருவிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து சேர்த்துத் தாளிக்கவும். அதில் கடலை பருப்பைச் சேர்த்து சிவக்க வறுக்கவும். நறுக்கிய வெங்கா…
-
- 1 reply
- 805 views
-
-
சூப்பரான சைடிஷ் சிக்கன் சுக்கா வறுவல் பிரியாணி, புலாவ், சாம்பார் சாதத்திற்கு தொட்டு கொள்ள சூப்பரான சைடிஷ் இந்த சிக்கன் சுக்கா வறுவல். இன்று இந்த சிக்கன் சுக்கா வறுவலை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : எலும்பில்லாத சிக்கன் - ½ கிலோ வெங்காயம் - 1 பட்டை - 1 துண்டு மஞ்சள் தூள் - கால் ஸ்பூன் மிளகு - 2 ஸ்பூன் சீரகம் - 1 ஸ்பூன் சோம்பு - 1 ஸ்பூன் இஞ்சி - 1 துண்டு பூண்டு - 10 பல் கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்…
-
- 1 reply
- 1.2k views
-
-
குளிர் க்ளைமேட்டுக்கு... சுவைகூட்டும் சிக்கன் பெப்பர் ஃப்ரை! #WeekEndRecipes வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான சிக்கன் பெப்பர் ஃப்ரை அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி. தேவையானவை: மீடியம் சைஸ் சிக்கன் துண்டுகள் - அரை கிலோ வெங்காயம் - 150 கிராம் கறிவேப்பிலை - சிறிதளவு மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் மிளகு - 2 டீஸ்பூன் சீரகம…
-
- 1 reply
- 503 views
-
-