நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
ஈரல் வறுவல் தேவையான பொருட்கள்: ஆட்டு ஈரல் - 500 கிராம் வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 2 வர மிளகாய் - 4 இஞ்சி & பூண்டு விழுது - ஒரு டீ ஸ்பூன் மிளகு - ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம் - ஒரு டீ ஸ்பூன் சோம்பு - ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் பொடி - ஒரு டீ ஸ்பூன் கறிவேப்பிலை - இரண்டு கொத்து எண்ணை - முன்று டேபிள் ஸ்பூன் பட்டை, இலை - தாளிக்க செய்முறை: ஈரலை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக வெட்டி இருநூறு மி.லி தண்ணீர் விட்டு முக்கால் வேக்காடு வேக வைக்க வேண்டும். தண்ணீர் முழுவதும் சுண்டி விட வேண்டும். மிளக, சீரகம், சோம்பு, வர மிளகாய் நான்கையும் பத்து நிமிடம் ஊற வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து விழுதாக அரைத்து ஈரலில் போட்டு பிசறி அரை மணி நேரம் …
-
- 22 replies
- 8.2k views
-
-
யாரும் முன்னர் இணைத்தீர்களே தெரியாது இப்ப பிள்ளைகளுக்கு செய்து கொடுத்ததால் இணைக்கிறேன் . தேவையான பொருட்கள் பாஸ்டா -500 g. (எந்த வகைஎன்றாலும் பரவாயில்லை) அரைத்த மாட்டு இறைச்சி-500g பேப்பர்.பச்சை,மஞ்சள்,சிவப்பு -தலா ஒன்று. கிட்னி பீன்ஸ் -540 m.l டின்னில் வரும் வெட்டிய தக்காளிப்பழம் -540 m.l " " காளான் - 200 g Chili seasoning mix -40g (el-paso brand பேப்பர் பக்கெட்டில் வரும் ) அரைத்த இறைச்சியை முதலில் ஒரு பாத்திரத்தில் போட்டு அவிக்கவும் பின் அதற்குள் அனைத்து பெப்பரையும்,காளனையும்சிறு துண்டாக வெட்டி போடவும்.பின் டின்னில் வரும் பீன்ஸ் ,தக்காளியை போட்டு நன்றாக அவித்து ஒரு பதத்திற்கு வர சிசனிங்கை அதற்க…
-
- 2 replies
- 2.8k views
-
-
உறவுகளே வட்டிலப்பம் செய்வது எப்படி என்று தெரிந்தால் சொல்லுவீர்களா? நன்றி
-
- 6 replies
- 9.5k views
-
-
பனீர் பட்டர் மசாலா தேவையான பொருட்கள்: பனீர் - கால் கிலோ பச்சை பட்டாணி - 200 கிராம் பெரிய வெங்காயம் - 200 கிராம் தக்காளி - 200 கிராம் பச்சை மிளகாய் - 2 மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி இஞ்சி - 2 விழுது பூண்டு - 2 விழுது சீரகம் - அரை தேக்கரண்டி மல்லித்தழை - கால் கட்டு வெண்ணெய் - 100 கிராம் எண்ணெய் - ஒரு குழி கரண்டி மல்லி தூள் - 3 தேக்கரண்டி மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி முந்திரி - 100 கிராம் உப்பு தேவையான அளவு செய்முறை: முதலில் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் போட வேண்டும். அது வெடித்ததும் வெங்காயம் போட்டு பொன்னிறமாக வறுத்து கொள்ள வேண்டும். பின்னர் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதங்கியதும் தக்காளி போட்டு வதக்க வேண்டும…
-
- 11 replies
- 5.3k views
-
-
யாராவது சிக்கின் புரியாணி (தமிழ் றெஸ்ரோறன்களில் செய்யிற மாதிரி) செய்யத் தெரிந்தால் ஒருக்கா சொல்வீர்களா? *** தலைப்புத் தமிழுக்கு மாற்றப்பட்டுள்ளது.
-
- 21 replies
- 14.5k views
-
-
பெப்பர் சிக்கன் தேவையான பொருட்கள் : கோழி- ஒரு கிலோ வெங்காயம்- இரண்டு தக்காளி-இரண்டு பச்சைமிளகாய்- இரண்டு இஞ்சி - இரண்டு அங்குலத் துண்டு பூண்டு- பத்து பற்கள் மிளகு- 2 tsp மிளகாய்த்தூள் -2 tsp தனியா-2 tsp மஞ்சத்தூள்- 1 /2 tsp மிளகுத்தூள்- 2 tsp பட்டை-4 கிராம்பு- 4 உப்பு- தேவைக்கேற்ப எண்ணெய்- ஒரு குழிக்கரண்டி கறிவேப்பிலை- 2 கொத்து பெப்பர் சிக்கன் செய்முறை : கோழியை தேவையான அளவில் துண்டுகள் போடவும். வெங்காயம், தக்காளி,பச்சைமிளகாயை பொடியாக நறுக்கவும். மிளகுடன் இஞ்சி பூண்டை சேர்த்து மைய்ய அரைக்கவும். கோழித் துண்டுகளில் மிளகுத்தூள்,மஞ்சத்தூள்,உப்புத்தூள், சிறிது இஞ்சி பூண்டு அரவை,மற்றும் கறிவேப்பிலை சேர்த்து குறைந்தது அர…
-
- 11 replies
- 1.8k views
-
-
வெந்தயக்கீரை மீன் குழம்பு வெந்தயக்கீரையின் கசப்புத்தன்மை குழந்தைகளுக்கு பிடிக்காது. ஆனால் அவைகள் நமது உடல் சூட்டை தனித்து நமக்கு குளிர்ச்சி அளிப்பவை. ஆகையால் இந்த கீரையை மீன் குழம்புடன் சேர்த்து சமைக்கும் போது, மீன் குழம்பின் சுவை அதிகரிப்பதோடு, உப்பு, புளி, காரம் சரியான பக்குவத்தில் சேர்த்தால் கீரையின் கசப்புத்தன்மையே தெரியாமல் குழந்தைகள் கூட சாப்பிட்டு விடுவார்கள்! தேவையான பொருட்கள்: வஞ்சிரமீன் - 1/2 கிலோ வெங்காயம் 200 கிராம் தக்காளி - 350 கிராம் தக்காளி பேஸ்ட் - 50 கிராம் பச்சை மிளகாய் - 2 மிளகாய் தூள் 2 டீ ஸ்பூன் தனியாத்தூள் 2 டீ ஸ்பூன் மஞ்சள் தூள், சீரகத்தூள் தலா - 1/2 டீ ஸ்பூன் உப்பு - ருசிக்கு தேவையான அளவு வெந்தயம் -…
-
- 15 replies
- 3.7k views
-
-
ஞாயிறு வந்தால் மட்டன் பிரியர்கள் ஆசையாக, இறைச்சிக் கடையின் கூட்டத்தில் காத்திருந்து வாங்கிவரும் இறைச்சிக்கு மனைவிமார்களிடம் விதவிதமான கமெண்டஸ்கள்! நானும் எவ்வளவு நேரம் தான் வேக வைக்கிறது? வேகவே இல்லை! உங்களை போலவே கிழட்டு ஆடா பார்த்து கரி வாங்கி வந்தீர்களா? என்று ஒரு நக்கல்! உங்கள் முகத்தை பார்த்தாலே இளிச்சவாயன் என்று அறிந்து இந்த பசையில்லா மட்டனை உங்கள் தலையில் கட்டிவிட்டானா? என மடையன் பட்டம் கொடுத்து மட்டம் தட்டும் மனைவி! கரி கடைகாரன் பொண்டாட்டியை பார்த்து ஜொல்லு விட்டு இருந்த சமயத்தில் வெறும் எலும்பாக உங்கள் தலையில் கட்டிட்டாங்களா பார்த்து வாங்கமாட்டீர்களா? என்று ‘ அக்கரையுடன்’ ஆலோசனைகளும் மனைவிகளால் வழங்கப்படும். மனைவியிடம் மட்டன் வாங்கி நல்ல பேர் வாங்கவும்(க…
-
- 23 replies
- 25k views
-
-
கருணைக்கிழங்கு காரக்குழம்பு தேவையான பொருட்கள் : கருணைக்கிழங்கு -கால்கிலோ தேங்காய்-கால் முடி தக்காளி-ஒன்று வெங்காயம்-ஒன்று பூண்டு- ஒன்று புளி-எலுமிச்சையளவு மிளகாய்த்தூள் -ஒரு மேசைக் கரண்டி மஞ்சத்தூள்-அரைத் தேக்கரண்டி தனியாத்தூள் -இரண்டு தேக்கரண்டி மிளகு, சீரகத்தூள் - தலா-ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை-இரண்டு கொத்து கடுகு- ஒரு தேக்கரண்டி காய்ந்தமிளகாய்-இரண்டு எண்ணெய்-ஒரு குழிக்கரண்டி செய்முறை : கருணைக்கிழங்கை தோல் சீவி துண்டுகளாக்கி கொதிக்கும் நீரில் போட்டு அரைவேக்காடாக வேகவைத்து வடித்து வைக்கவும். தேங்காயுடன் வெங்காயத்தை சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். புளியை ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும். பூண்டை நசுக்கி வைக்கவும…
-
- 9 replies
- 14.9k views
-
-
மீன் சூப் தேவையானவை: ஸ்லைஸ் மீன் - 4 துண்டுகள் இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா - 1 டீஸ்பூன் புளி - சிறிதளவு மக்காச்சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - சிறிதளவு உப்பு - தேவையான அளவு பட்டை லவங்கம் - தலா 2 செய்முறை: புளியைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளுங்கள். அதில் இஞ்சி பூண்டு விழுது, மிளகுத்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்தக் கலவையில் மீன் துண்டுகளைப் போட்டு ஊற வையுங்கள். ஊறிய மீனை எடுத்து தேவையான அளவு நீர் விட்டு வேக வையுங்கள். மீன் வெந்ததும் தண்ணீரை வடித்துக் கொள்ளுங்கள். இந்த நீரில் பட்டை, லவங்கம் தாளித்துப் போட்டு கொதிக்க விட்டு இறக்குங்கள். மேலே பொர…
-
- 6 replies
- 1.9k views
-
-
பயத்தம் பருப்பு தோசை.. வழக்கமான தோசை சாப்பிட்டு அலுத்துப் போனவர்கள் மாறுதலுக்கான பயத்தம் பருப்பு தோசை செய்து சாப்பிடலாம். அதற்கான செய்முறை இதோ. தேவையானவை: பச்சரிசி - 1/2 ஆழாக்கு பயத்தம் பருப்பு - 1 ஆழாக்கு பச்சை மிளகாய் - 2 மிளகாய் வற்றல் - 2 பெருங்காயம் - சிறிது வெங்காயம் - 1 (பெரியது) தேங்காய் - 1 மூடி (துருவியது) உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் வெங்காயத்தைப் பொடியாக அரிந்து கொள்ளவும். அரிசி, பருப்பை தனியே ஊறப் போடவும். இரண்டையும் அரைத்து, மிளகாய், பெருங்காயத்தையும், உப்பையும் சேர்த்து அரைக்கவும். அரிந்த வெங்காயத்தையும் போட்டுக் கலந்து, மாவைக் கரைத்து, தோசைப் பதமாகச் சுடவும். இரண்டு பக்கமும் திருப்பிப் போ…
-
- 4 replies
- 3.7k views
-
-
சமையல்:முருங்கைக்காய் கூட்டு ஆ.... ஊனா... முருங்கைக்காயை சாம்பார், புளிக்குழம்புலதான் போடுவோம்... ஆனா.. அதையே கொஞ்சம் வித்தியாசமா கூட்டாகவும் வைக்கலாம் தெரியுமா? வச்சு பாருங்க.. அதோட சுவையும் மணமும் சும்மா சுண்டியிழுக்கும் பாருங்க...... தேவையான பொருட்கள்: சிறிது நீளமாக நறுக்கிய முருங்கைக்காய் - 2 கப் கடலைப்பருப்பு - கால் கப் பாசிப்பருப்பு - கால் கப் தேங்காய் துருவல் - ஒரு டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 2 காய்ந்த மிளகாய் - 2 சீரகம் - கால் டீ ஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீ ஸ்பூன் தாளிக்க: எண்ணெய் - ஒரு டீ ஸ்பூன் கடுகு - கால் டீ ஸ்பூன் உளுத்தம் பருப்பு - கால் டீ ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: * குக்கரில் பாச…
-
- 13 replies
- 9.3k views
-
-
தேவையான பொருட்கள் 1. இறாத்தல் (lb) மெக்சிக்கன் தேசிக்காய்/ எலுமிச்சம் காய் (ஊரில் உள்ள தேசிக்காய்களிலும் சிறிது, கனடாவில் Key lime என்ற பெயரில் ஒரு இறத்தல் பைகளில் கிடைக்கும், இது கிடைக்காவிட்டால் பெரிய தேசிகாயை பாவிக்கலாம்) Key lime image from : http://pintsizebaker.com/key-lime-pie 2 . மேசை உப்பு - 1 1 /2 கப் 3 . மஞ்சள் போடி - 3 மேசை கரண்டி 4 . 600 மில்லி லிட்டர்/ 1 லிட்டர் கொள்ளளவு உள்ள வாய் அகன்ற, இறுக்கமான மூடி உடைய கண்ணாடி போத்தல் (pasta souse போத்தல் பொருத்தமாக இருக்கும்) 5 . பேக்கிங் தட்டு (Baking tray) , மெழுகு கடதாசி (Parchment paper) 6 . 20 - 25 சாதாரண/பெரிய தேசிகாய் ( இது 3 கிழமைகளின் பின் தான் தேவைப்படும் ) …
-
- 7 replies
- 6.3k views
-
-
மட்டன் ரசம். தேவையான பொருட்கள்: ஆட்டு எலும்பு - 250 கிராம் எலுமிச்சை பழம் - 1 மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி பூண்டுப் பல் - 4 இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி சீரகத்தூள் - 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் - 2 சாம்பார் வெங்காயம் - 50 கிராம் நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி கறிவேப்பிலை - சிறிதளவு கொத்துமல்லி - சிறிதளவு செய்முறை: எழும்புத் துண்டுகளை நன்றாகக் கழுவி, குக்கர் பாத்திரத்தில் போட வேண்டும். எழும்பு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள், இஞ்சி விழுது, கொத்துமல்லி, உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். 3 விசில் வந்ததும் 10 நிமிடம் மிதமான சூட்டில் வைத்து இறக்க வேண்டும். கடாயை அடுப்பில் ஏற்றி, எண்ணெய் விட்ட…
-
- 28 replies
- 6.7k views
-
-
பாண்டிசேரி ஸ்பெசல் புறாக் கறி மசாலா.. தேவையான பொருட்கள்: புறா கறி : 1/4 கிலோ.. வெங்காயம் : 100 கிராம் கடலை எண்ணெய் : 50கிராம் இஞ்சி: சிறுதுண்டு மிளகாய் பொடி : 2 டீஸ்பூன் மஞ்சள் பொடி: அரை டீஸ்பூன் பூண்டு: உரித்தது.4 ஆப்ப சோடா மாவு +உப்பு தேவையான அளவு செய்முறை: புறாக்க றியை சுத்தம் செய்து பாத்திரத்தில் போட்டு மஞ்சள் பொடி மிளகாய் பொடியை போட்டு அரை லிட்டர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும் .இஞ்சியை தோல் நீக்கி பூண்டு உரித்து பட்டை லவங்கம் சோம்பு ஆகியவற்றை தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைத்து கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும் புறாக் கறி பாதிவெந்ததும் உப்பு ஆப்ப சோடாவை நறுக்கி வைத்த வெங்காயத்தில் பாதி போட்டு மூடி…
-
- 14 replies
- 7.3k views
-
-
காளான் குருமா தேவையான பொருட்கள்: காளான் - 200 கிராம் சின்ன வெங்காயம் - 100 கிராம் சோம்பு - 1/2 தேக்கரண்டி கசகசா - 1/4 தேக்கரண்டி தேங்காய் - 1/4 மூடி மல்லித்தூள் - 1 மேஜைக்கரண்டி மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி தக்காளி - 2 இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி பட்டை - 3 கிராம்பு - 3 மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி கொத்தமல்லித்தழை - 1 கொத்து செய்முறை: காளானை சுத்தம் செய்து வெந்நீரில் போட்டுக் கழுவி, பெரிய பெரிய துண்டுகளாக வெட்ட வேண்டும். தேங்காய், கசகசா, சோம்பு ஆகியவற்றை தனியே தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளியை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ள வேண்டும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு பட்டை, க…
-
- 1 reply
- 747 views
-
-
வாழைத்தண்டு கூட்டு வாழைத்தண்டு கூட்டு இது மிகவும் சுவையாகவும் சத்துதானதாகவும் இருக்கும். உடல் நலத்தில் அக்கறையுடன் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரத்தில் ஒரு முறை உண்டால் உடம்புக்கு மிகவும் நல்லது! குறிப்பாக ஆண் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது என்று என் பாட்டி கூறினார்கள். வாழைத்தண்டு உடம்பில் சேரும் கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது. சிறுநீரகத்திலும், கல்லீரலிலும் உண்டாகும் கல்லினைக் கரைக்கக்கூடிய வலிமை வாய்ந்தது சூடான சாதத்தில் நெய் விட்டு இந்த கூட்டு கலந்து சாப்பிட சுவையாக இருக்கும். தேவையான பொருள்கள்: வாழைத் தண்டு – 1 பாசிப்பருப்பு – 200 பச்சை மிளகாய் – 5 வர மிளகாய் - 2 தக்காளி – 1 (நறுக்கியது) சின்ன வெங்காயம் - 100 (நறுக்கியது) பூண்டு…
-
- 2 replies
- 3.9k views
-
-
-
- 5 replies
- 1.4k views
-
-
-
- 11 replies
- 1.6k views
-
-
நண்டு சாப்பிட்டு பழகினவங்க நண்டை எப்படி செய்தாலும் ஒரு கை பாக்காம விட மாட்டாங்க... அதிலும் நண்டு மசாலாவா... சொல்லவே வேணாம்... நண்டு சாப்பிட்டு பழக்கமில்லாதவங்களும் ஒருதடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க.. அப்பறம் நீங்களும் இதுக்கு அடிமையாயிடுவீங்க....! தேவையான பொருட்கள்: நண்டு - 2 பெரியது தேங்காய் (துருவியது) - 1/2 கப் சின்ன வெங்காயம் - 25 மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீ ஸ்பூன் சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் - தேவைக்கு கடுகு - சிறிது கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவைக்கு செய்முறை: * நண்டை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். * சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். * தேங்காய், இரு சின்ன வெங்காயம், சீரகம், மிளகாய…
-
- 36 replies
- 7.1k views
-
-
கிச்சடி தேவையான பொருட்கள்: பொன்னி அரிசி 3 கப் . மைசூர் பருப்பு 1 கப் . தக்காளிப் பழம் 3 அல்லது 4 . செத்தல் மிளகாய் 8 அல்லது 9 . உள்ளி 1 முழு உள்ளி கடுகு 1 சிறிதளவு . கொத்தமல்லிக்கீரை 6 அல்லது 7 நெட்டு . மிளகாய்தூள் 1 1/2 கறண்டி . மஞ்சள் சிறிதளவு . செய்முறை: பொன்னி அரிசியையும் மைசூர் பருப்பையும் கழுவி வைய்யுங்கள் . உள்ளியை உடைத்து தோல் நீக்குங்கள் . பிறசர் குக்கரில் (Presher cooker ) சிறிதளவு எண்ணையை விட்டு கடுகை வெடிக்க விடுங்கள் . தண்ணியில் கழுவிய முழுச் செத்தல் மிளகாயை வதக்குங்கள் வெட்டிய தக்காளிப்பழத்தை சேருங்கள் பொன்னி அரிசி மைசூர்ப் பருப்பு கலவையை குக்கரில் போட்டு , 6 கப் தண்ணியை விடுங்கள் . 1 …
-
- 11 replies
- 2.1k views
-
-
சிம்பிள் மட்டன் தேவையான பொருட்கள்: ஆட்டுக்கறி - 500 கிராம். வெங்காயம் - 200 கிராம் மிளகாய் - 50 கிராம் மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு நல்லெண்ணெய் - சிறிது சீரகம் - 1/2 தேக்கரண்டி செய்முறை: 1. சிறு சிறு துண்டுகளாக வெட்டி இறைச்சியைச் சுத்தம் செய்து சிறிது வேக வைத்துக் கொள்ளவும் 2. ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் சீரகம் போட்டு தாளிக்கவும். 3. வெங்காயம், மிளகாயை நறுக்கிப் போடவும். அத்துடன் வேகவைத்த கறியையும் சேர்த்து வதக்கவும். 4. உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றைப் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு அந்தத் தண்ணீர் வற்றும் வரை வேக வைக்கவும். * மிளகுத்தூள் விரும்பினால் சேர்த்துக் கொள்ளலாம். -சித்ரா ப…
-
- 0 replies
- 984 views
-
-
செய்ய தேவையான பொருட்கள்; 1)அவித்த கோதுமை மா[அரிசி மா விரும்புவர்கள் அரிசி மா சேர்க்கலாம்] நான் வெள்ளை மாவில் தான் செய்யுறனான் அப்பத் தான் சுவை அதிகமாய் இருக்கும் 2)தண்ணீர் 3)ஸ்பினாச் கீரை[லண்டனில் கழுவி பைக்கற்றினுள் இருக்கும்] இந்த கீரை தான் சுவையாக இருக்கும் என்பது என் கருத்து. 4)சின்ன வெங்காயம் அல்லது காரமான சிவப்பு வெங்காயம் 5)பச்சைமிளகாய் செய்முறை; வெங்காயம்,ப.மிளகாய்,கீரை ஆகியவற்றை சிறிதாக வெட்டிக் கொள்ளவும். புட்டுக்கு மாவை குழைக்கவும்[தண்ணீர் அளவாக விட்டுக் குழைக்கவும் தண்ணீர் கூடினால் களியாகப் போய் விடும் ஏனென்டால் கீரையிலும் தண்ணீர் உண்டு] புட்டு மா பதமாக குழைத்த பின் வெங்காயம்,ப.மிளகாய்,கீரை போன்றவற்றை போட்டு குழைக்…
-
- 44 replies
- 11.8k views
-
-
சமையல்: முள்ளங்கி சப்பாத்தி நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் காய்கறிகளும், மற்ற பொருட்களும் உணவுக்கு சுவை ஊட்டுவது மட்டுமின்றி நம் வாழ்வை ஆரோக்கியம் மிகுந்ததாகவும் மாற்றுகின்றன. உடல் பருமனாக உள்ளவர்கள் அன்றாடம் முள்ளங்கி உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டால் அவர்கள் உடல் பருமன் குறைய வாய்ப்புண்டு. ஏனெனில் கெட்ட கொழுப்பை கரைத்து வெளியே தள்ளும் சக்தி வாய்ந்தது முள்ளங்கி. அவ்வகையில் முள்ளங்கி சேர்த்துச் சப்பாத்தி செய்தும் சாப்பிடலாம். ஓமம் சேர்ப்பதால் வாசம் நிறைந்த சத்தான சப்பாத்தி ரெடி! தேவையான பொருட்கள்: முள்ளங்கி - 2 கோதுமை மாவு - 1 கப் சிவப்பு மிளகாய்த்தூள் - 1 டீ ஸ்பூன் ஓமம் - 1 டீ ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன் தனியாத் தூள் - 1…
-
- 3 replies
- 1.1k views
-
-
வெந்தய கீரை: நீங்களை வீட்டில் முளைக்க வைக்கலாம் சின்ன பொட் இல், ஒர் மாதத்தில் அறுவடைக்கு ரெடி, வெந்தயத்தை ஊற போட்டு விதைத்தால் விரைவில் வளரும். வெந்தய கீரையில் பல கறிகள் செய்யலாம் & நல்ல சத்தான உணவு இது வெந்தயம் மாதிரி கயர்ப்பா இருக்காது, நல்ல ருசி, சிறுவர்கள் & கர்ப்பினி பெண்களுக்கு நல்லது தேவையான பொருட்கள் : கீரை- ஒரு கட்டு மைதா மாவு - ஒரு கோப்பை கோதுமைமாவு- முக்கால் கோப்பை கடலைமாவு- கால் கோப்பை மிளகாய்த்தூள்- அரைத்தேக்கரண்டி சீரகம்- அரைத்தேக்கரண்டி மஞ்சத்துள்- கால்த்தேக்கரண்டி உப்பு- காலத் தேக்கரண்டி எண்ணெய்- கால்க்கோப்பை செய்முறை : கீரையை சுத்தம் செய்து ஆய்ந்து வைக்கவும். மாவு வகைகளை ஒன்றாக கலந்து அதில் மிளகா…
-
- 31 replies
- 7.1k views
- 1 follower
-