நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
அரிசி முறுக்கு தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி- 200 கிராம். பச்சரிசி- 800 கிராம். உளுந்தம் பருப்பு-200 கிராம். எள்-20 கிராம் சீரகம்-30 கிராம். நெய் அல்லது டால்டா- 250 கிராம். உப்பு- தேவையான அளவு. செய்முறை: 1. புழுங்கல் அரிசியை இலேசாக வறுத்துக் கொள்ளவும். 2. வறுத்த புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுந்தம் பருப்பு என்று மூன்றையும் சேர்த்து மாவாக அரைத்து வைத்துக் கொள்ளவும். 3. இந்த மாவுடன் நெய் அல்லது டால்டாவைச் சேர்ந்து சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசையவும். பிசையும் போது எள், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்துக் கொண்டு பிசையவும். 4. தேவையான உப்பையும் சேர்த்துக் கட்டியாக முறுக்குக் குழலில் வைத்துப் பிழியும் படியான பக்குவ…
-
- 1 reply
- 1.3k views
-
-
நான் சில மணமில்லாத பெரிய மீன்களையும்(அறக்குளா,கும்பிளா,பாரை,விளை போன்றன),நெத்தலி போன்ற சின்னமீன்கலையும்(நெத்தலி மீன்குழம்பென்றால் அன்று ஒரு வெட்டு வெட்டுவேன்..ரொம்ப பிடிக்கும்) ரின் மீனையும்(ரின் மீன் என்றால் அலாதிப்பிரியம்) தவிர பெரிதாக மீன் சாப்பிடுவதில்லை..ஆனால் மீன் பிரியர்களுக்காக இது... __________________________________________________________________________________ மீன் - என்றதும் அம்மச்சியின் நினைவு கிளர்ந்தெழுகிறது. மீன் சுவையை முதன் முதலில் அறிமுகம் செய்து வைத்தது பாட்டி தான். மண் சட்டியில் வேக வைத்த மீன் குழம்பை சட்டியோடு ஒரு கை பார்ப்பது அலாதியான இன்பம். எந்த மீனை எந்த அளவுக்கு வேக வைக்க வேண்டும் என்பது ஒரு கலை ! அந்தக் கலை எப்படியோ பெண்களுக்கு வாய்த…
-
- 11 replies
- 4k views
-
-
மீன் குருமா செய்வது எப்படி மீன் குழம்பு செய்து அலுத்து போனவர்கள் சற்று வித்தியாசமாக மீன் குருமா செய்து சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : (வாழை மீன் அல்லது நெத்திலி மீன் மட்டும்) வாழை மீன் - 3 பொட்டுக் கடலை - 2 டீஸ்பூன் தேங்காய் - அரை மூடி பச்சை மிளகாய் - 20 (நீளமாக நறுக்கவும்) வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்) நாட்டுத் தக்காளி - 4 (பொடியாக நறுக்கவும்) …
-
- 11 replies
- 3.2k views
- 1 follower
-
-
பயத்தம் லட்டு (பணியாரம் அல்ல) தேவையான பொருள்கள்: பாசிப் பயறு 500 கிராம் சீனி 500 கிராம் ஏலக்காய் தூள் சிறிதளவு முந்திரிப் பருப்பு தேவையானது நெய் 100 கிராம் உப்பு சிறிதளவு செய்முறை: முதலில் பயறை நல்ல வாசம் வரும் வரை வறுத்து மாவாக அரைத்துக் கொள்ளவும் பின் சிறிதளவு நெய் விட்டு முந்திரி பருப்பை பொன்னிறமாக பொரித்து வைக்கவும் அதன் பின் பாத்திரம் ஒன்றில் அரைத்த பயத்தம் மா உப்பு சீனி முந்திரி பருப்பு ஏலக்காய் தூள் அத்துடன் மிகுதியாக உள்ள சுhடாக்கிய நெய் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்த பின் உருண்டைகளாக பிடித்து பின் உண்ணவும் இல்லையேல் பரிமாறவும்........ நான் தளத்தில சுட்டு கொடுக்க அவா தயாரிச்சு தந்தவா...... சுப்பர் தான் நான்…
-
- 22 replies
- 8.8k views
-
-
வாங்க இண்டைக்கு நாங்க உடம்புக்கு ரொம்ப நல்ல, சத்தான சுவையான அரிசிமா கீரை புட்டு எப்பிடி செய்யிற எண்டு பாப்பம், இதோட எப்படி அரிசிமா புட்டும் செய்யிற எண்டு சேர்த்து சொல்லி இருக்கன், நீங்களும் பாத்து, செய்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்க.
-
- 0 replies
- 898 views
-
-
இந்தியா, சீனா மற்றும் மேற்கத்திய நாடுகளில் தங்க கலவையினால் ஆன டீ விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் துபாயில் முதன் முறையாக இந்த தங்க டீ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. துபாயில் உள்ள மொக்கா ஆர்ட் கபே ஓட்டலில் இந்த டீ விற்கப்படுகிறது. இது 22 கேரட் தங்கத்தை கலந்து தயாரிக்கப்படுகிறது. இதன் விலை ஒரு கப் 55 தினார் மட்டும். மொக்கா ஆர்ட் கபேயின் நிறுவனர் அஷ்ரப்மக்ரான் (32) எகிப்தை சேர்ந்தவர். தங்க டீ குறித்து அவர் கூறியதாவது: இந்த டீயை இங்கிலாந்தில் உள்ள ஒரு ஓட்டலில் குடித்தேன். அதன் சுவை எனக்கு பிடித்து விட்டது. அதைத் தொடர்ந்து இந்த டீயை துபாயில் அறிமுகம் செய்தேன்.இலங்கையில் இருந்து தேயிலை இறக்குமதி செய்யப்பட்டு ஜெர்மனிக்கு அனுப்பப்படுகிறது. அங்கு அவை 22 கேரட…
-
- 2 replies
- 689 views
-
-
மாலையில் வடை சாப்பிட வேண்டுமென்று ஆசைப்பட்டால், அப்போது உடனே கடைக்கு சென்று வாங்கி வந்து சாப்பிடாமல், வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள். அவ்வளவு பணம் செலவழித்து கடையில் வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, அதனை வீட்டிலேயே செய்து சாப்பிட்டால், எத்தனை வேண்டுமானாலும் சாப்பிடலாம் அல்லவா. மேலும் வடை செய்வது என்பது மிகவும் எளிமையான ஒன்று. இப்போது வடையில் பருப்பு வடையை எப்படி செய்வதென்று பார்ப்போம்... தேவையான பொருட்கள்: கடலை பருப்பு - 3/4 கப் துவரம் பருப்பு - 1/4 கப் வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 வரமிளகாய் - 3 பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: கடலை பருப்பு மற்றும் துவ…
-
- 5 replies
- 1.5k views
-
-
வாங்க இண்டைக்கு என்க அம்மா சொல்லி தந்த ஒரு முறையில மிக சுவையான எலுமிச்சை ஊறுகாய் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம். இப்பிடி செய்து பாருங்க பாத்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ என.
-
- 0 replies
- 637 views
-
-
எள்ளுப்பா செய் முறை 1)இரண்டு கப் வெள்ளை எள்ளு 2)ஒரு கப் கோது அகற்றிய உழுந்து 3)ஒரு கப் சீனி எள்ளு கொஞ்சம் முறுகலாகும் வரை வறுத்து கோப்பி அரைக்கும் மெசினில் மாவாக அரைக்கவும் உழுந்தையும் அதே மாதிரி வறுத்து மாவாக அரைக்கவும் பூட்பிரசரில் இரண்டையும் கொட்டி சீனியையும் போட்டு(சீனி உங்கள் அளவுக்கு கூட்டி குறைக்கவும்) ஒரு நிமிடம் அரைத்த பின் ஓரளவு கொதித்த நீர் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும்(கூட நீர் விட்டால் கழியாகி விடும்) அப்படியே கொஞ்ச நேரம் அரைக்க பதம் வந்ததும் நிற்பாட்டி எடுத்து உருண்டையாக உருட்டி வைத்தால் விரும்பிய நேரம் சாப்பிடலாம். வேறும் வழி முறைகள் தெரிந்தால் இணைக்கவும்.
-
- 9 replies
- 7.7k views
-
-
சுவையான வெஜிபிரியாணி செய்யும் முறை (கானொளியில்) http://youtu.be/OhEcjC4eI0w
-
- 6 replies
- 1.8k views
-
-
வெந்தயக்கீரை மீன் குழம்பு வெந்தயக்கீரையின் கசப்புத்தன்மை குழந்தைகளுக்கு பிடிக்காது. ஆனால் அவைகள் நமது உடல் சூட்டை தனித்து நமக்கு குளிர்ச்சி அளிப்பவை. ஆகையால் இந்த கீரையை மீன் குழம்புடன் சேர்த்து சமைக்கும் போது, மீன் குழம்பின் சுவை அதிகரிப்பதோடு, உப்பு, புளி, காரம் சரியான பக்குவத்தில் சேர்த்தால் கீரையின் கசப்புத்தன்மையே தெரியாமல் குழந்தைகள் கூட சாப்பிட்டு விடுவார்கள்! தேவையான பொருட்கள்: வஞ்சிரமீன் - 1/2 கிலோ வெங்காயம் 200 கிராம் தக்காளி - 350 கிராம் தக்காளி பேஸ்ட் - 50 கிராம் பச்சை மிளகாய் - 2 மிளகாய் தூள் 2 டீ ஸ்பூன் தனியாத்தூள் 2 டீ ஸ்பூன் மஞ்சள் தூள், சீரகத்தூள் தலா - 1/2 டீ ஸ்பூன் உப்பு - ருசிக்கு தேவையான அளவு வெந்தயம் -…
-
- 15 replies
- 3.7k views
-
-
மிளகு கறிவேப்பிலை மீன் வறுவல் : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள்: மீன் 500 கிராம் கறுப்பு மிளகு – 2 தே.க மிளகாய் தூள் 2 தே.க உப்பு –- தே.அளவு இஞ்சி – 2 தே.க பூண்டு – 2 தே.க எலுமிச்சை சாறு –3 தே.க கறிவேப்பிலை – சிறிதளவு கொத்தமல்லி – சிறிதளவு தண்ணீர் – தே.அளவு அரிசி மா/கட.பருப்பு – 2 தே.க தேங்காய் எண்ணெய் – தே.அளவு செய்முறை: முதலில் ஒரு மிக்ஸியில் அரிசி மா மற்றும் எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் எடுத்து ஒரு மென்மையான பேஸ்ட் போல தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். பிறகு அதில் கறுப்பு மிளகு, மிளகாய் தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். அத்துடன் சிறிது அரிசி மா…
-
- 1 reply
- 715 views
-
-
-
-
- 0 replies
- 752 views
-
-
சூப்பரான சைடிஷ் மீன் டிக்கா மசாலா சப்பாத்தி, நாண், சாதம், புலாவ், பிரியாணிக்கு தொட்டு கொள்ள சூப்பரானது இந்த ஃபிஷ் டிக்கா மசாலா. இந்த மசாலாவை இன்று எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மீன் - 12 துண்டுகள், இஞ்சி பூண்டு விழுது - 3 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், சீரகத்தூள் - 1½ டீஸ்பூன், தனியாத்தூள் - 1½ டீஸ்பூன், மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன், தந்தூரி மசாலா பவுடர் - 1/2 டீஸ்பூன், பொரிக்க எண்ணெய், உப்பு - தேவைக்கு, எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன், வெங்காயம் - 1, …
-
- 0 replies
- 662 views
-
-
தேங்காய்ப்பால் இறால் குழம்பு செய்ய வேண்டுமா...! தேவையான பொருட்கள்: இறால் - அரை கிலோ உப்பு - தேவைக்கு மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் தக்காளி - 1 புளிச்சாறு - 2 டீஸ்பூன் வெங்காயம் - 1 அரைக்க தேவையான பொருட்கள்: …
-
- 1 reply
- 728 views
-
-
டேஸ்டியான மீன் கறி செய்வது எப்படி? இந்த ரெசிபி எல்லாருக்கும் பிடித்தமான ஒன்று. இதில் நிறைய உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் குழந்தைகளுக்கும் நல்லது. மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் கொத்தமல்லி இலைகளில் உள்ள பைடோநியூட்ரியன்ஸ் போன்றவைகள் நமது மூளைக்கு தேவையானவை. நீங்க இதையையே ஒரு லைட்டான கறி டிஷ் செய்ய நினைத்தால் தேங்காய் தண்ணீர் போதுமானது. ஆனால் ரிச் டேஸ்ட் கறிக்கு கண்டிப்பாக 400 மில்லி தேங்காய் பால் மற்றும் 100 மில்லி தண்ணீர் தேவைப்படும். தேவையான பொருட்கள் மீன் துண்டுகள் 1-2 பச்சை மிளகாய் 1 கூடு பூண்டு 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி விழுது 1 கை…
-
- 2 replies
- 1.1k views
-
-
ருசியான பூண்டு சிக்கன் ரைஸ் சமையல் செய்வது எப்படி? உங்கள் வீட்டு குளிர்சாதன பெட்டியில் சிக்கன் இருக்குமெனில்...உங்களுடைய சமையல் பிரச்சனைகள் தானாகவே முடிவுக்கு வந்துவிடுகிறதாம். ஆம், இந்த சிக்கனை, சில எளிய பொருட்களை கொண்டு கலப்பதின் மூலமாக, நிறைய சிறந்த உணவுகள் நமக்கு கிடைக்கிறது. அழற்சியை எதிர்க்கும் பண்பும், கிருமி நாசினி பண்பும் இந்த பூண்டுக்கு இருக்க, நம்முடைய இந்த டிஷ்ஷானது சக்தி வாய்ந்த ஒரு உணவு பொருளாகவும் அமைகிறது. இவ்வாறு சிறந்த பலன்களை அளிக்கும் பூண்டு, சிக்கன் என பலவற்றை கொண்டு இந்த ரெசிபியை தயாரிப்பது எப்படி என நாம் பார்க்கலாம். இந்த சமையலை ஞாயிற்று கிழமை செய்து பார்த்து, உங்கள் ப்ரஞ்ச் (BRUNCH) உணவாக குடும்பத்துடன் சேர்ந்து தான் இதனை உ…
-
- 0 replies
- 1.1k views
-
-
எனக்கு பொழுது போகாட்டி நான் செய்வது புதுசு,புதிசாய் ஏதாவது சமைத்துப் பார்ப்பது அப்படி கண்டு பிடித்தது தான் இந்த சாம்பார்...உங்களுக்கு விருப்பம் என்டால் முதலில் கொஞ்சமாய் சமைத்துப் பாருங்கள்...ஏனென்டால் சில பேருக்கு இதன் சுவை பிடித்தது சில பேருக்கு பிடிக்கவில்லை...ஆனால் எனக்கு மிகவும் பிடித்தது சமைப்பதும் இலகு,எல்லாய் சத்தும் ஒரே அடியாய் கிடைக்கும். இனி செய்யத் தேவையான பொருட்கள்; கோழி 1/2 கிலோ தக்காளி 1/4 கிலோ உருளை கிழங்கு 1/4 கிலோ முருங்கங்காய் 2 கத்தரிக்காய் 2 கருவேப்பிலை றம்பை தாளிக்க தேவையான பொருட்கள்[பெ.சீரகம்,சீ.சீரகம்,கடுகு,கருவா,ஏலக்காய் போன்றன] நல்லெண்ணெய் தூள்,உப்பு வெங்காயம் உள்ளி,இஞ்சி இனி செய்முறையைப் பார்ப்போம்; முதலில் பா…
-
- 49 replies
- 8.8k views
-
-
அருமையான வேலூர் மட்டன் பிரியாணி தம் பிரியாணியில் நிறைய வகைகள் உள்ளன. இன்று வேலூர் மட்டன் பிரியாணியை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மட்டன் - 1 கிலோ வெங்காயம் - 1/4 கிலோ தக்காளி - 200 கிராம் இஞ்சி பூண்டு விழுது - 50 கிராம் பச்சை மிளகாய் - 10 மிளகாய்த் தூள் - 4 தேக்கரண்டி தயிர் - 200 மிலி பட்டை - 1 துண்டு கிராம்பு - 4 ஏலக்காய் - 2 கொத்தமல்லித் …
-
- 1 reply
- 824 views
-
-
மீல் மேக்கர் பக்கோடா தேவையான பொருள்கள் : மீல் மேக்கர் - 20 கடலைப் பருப்பு - ஒரு கிண்ணம் வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 2 தேங்காய்த் துருவல் - ஒரு தேக்கரண்டி மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி பிரெட் - 3 எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி கொத்துமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு செய்முறை : மீல் மேக்கரை கொதி நீரில் போட்டு, ஐந்…
-
- 0 replies
- 1.8k views
-
-
காரமான மசாலா மீன் வறுவல் தேவையான பொருட்கள்: மீன் - 250 கிராம் (முள் இல்லாதது) தேங்காய் எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு அரைப்பதற்கு... சின்ன வெங்காயம் - 3 இஞ்சி - 2 இன்ச் பூண்டு - 6 பற்கள் கறிவேப்பிலை - சிறிது மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் மீன் துண்டுகளை நீரில் நன்கு கழுவி, அதனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பி…
-
- 22 replies
- 6k views
-
-
வட இந்தியாவில் பிரபலமான ஒரு அசைவ உணவு தான் தஹி கோஸ்ட். இதில் தஹி என்றால் தயிர், கோஸ்ட் என்றால் மட்டன். எனவே தயிரையும் மட்டனையும் முக்கியப் பொருளாக கொண்டு, தயாரிக்கப்பட்ட ஒரு கிரேவி தான் தஹி கோஸ்ட். இது மிகவும் சுவையுடன் இருக்கும். இந்த கிரேவியை சாதம் அல்லது ரொட்டியுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும். இதனை செய்துவது மிகவும் எளிது. சரி, இப்போது அந்த தஹி கோஸ்ட்டின் செய்முறைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: எலும்பில்லாத ஆட்டுக்கறி - 500 கிராம் தயிர் - 500 கிராம் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது) வெங்காயம் - 2 (நறுக்கியது) தக்காளி - 2 (நறுக்கியது) மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் மல்லி தூள் - 3 டேபிள் ஸ்பூன் கரம் ம…
-
- 15 replies
- 1.2k views
-
-
-
தேவையான பொருட்கள்: எலும்பில்லாத சிக்கன் - 250 கிராம் பசலைக்கீரை - 500 கிராம் (சுத்தம் செய்து வேக வைத்தது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் வெங்காயம் - 2 தயிர் - 1 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 3-4 மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் மல்லி தூள் - 1 டீஸ்பூன் சர்க்கரை - 1 சிட்டிகை எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் பிரியாணி இலை - 1 உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் பிரஷ் க்ரீம் - 1 டீஸ்பூன் (அலங்கரிக்க) செய்முறை: முதலில் சிக்கன் நன்கு சுத்தமாக கழுவி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் தடவி 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வேக வைத்துள்ள பசலைக்கீரை மற்றும் பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்ட…
-
- 0 replies
- 709 views
-