நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
-
- 0 replies
- 662 views
-
-
கொத்து புரோட்டா தேவையான பொருட்கள் குருமா (வெஜ் அல்லது நான்வெஜ்) - 1 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப் பொடியாக நறுக்கிய தக்காளி - 3/4 கப் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - காரத்திற்கேற்ப முட்டை - 1 மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன் கூர்மையான விளிம்புள்ள டம்ளர் - 1 உப்பு,சமையல் எண்ணெய் பரோட்டா - 5 செய்முறை பரோட்டாவை சிறு துண்டுகளாக பிய்த்துக் கொள்ளவும். அடி கனமான கடாயில் ( நான்ஸ்டிக் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்!) எண்ணெய் காயவைத்து நறுக்கிய வெங்காயத்தில் முக்கால் பகுதி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்த…
-
- 3 replies
- 1.6k views
-
-
டேஸ்டியான மில்க் கேக் பக்லவா !! ஈஸியா ரெசிபி! நீங்களும் ட்ரை பண்ணுங்க!! மில்க் பக்லவா கேக் ஒரு எளிதான ரெசிபி ஆகும். மில்க் கேக்கை பயன்படுத்தி ஈஸியாக கேக் செய்யும் ரெசிபி தான் இது. இது பார்ப்பதற்கு மென்மையாக, இனிப்பா டேஸ்டியாக இருக்கும். பக்லவா என்பது சிரப் தன்மையில் கிரீக் டிசர்ட் மாதிரி இருக்கும். இங்கே மில்க் கேக்கை எப்படி பக்லவா மாதிரி சுவையுடன் செய்யலாம் என்பதை பார்க்க போறோம். ரெம்ப ருசியான இந்த கேக்கில் நீங்கள் ஏலக்காய் மற்றும் ஆரஞ்சு பழ நறுமணத்தையும் சுவையையும் கூட சேர்த்து கொள்ளலாம். உங்கள் தேநீர் வேளைக்கு இது சரியான ஸ்நாக்ஸ் ஆக அமையும். இனிப்பாக இருந்தாலும் அதிக கலோரிகள் கிடையாது. இந்த மில்க் கேக் பக்லவா செஃ…
-
- 0 replies
- 699 views
-
-
துளசி பக்கோடா என்னென்ன தேவை? துளசி, கடலை மாவு - தலா 1 கப் அரிசி மாவு, சோள மாவு - தலா 2 டீஸ்பூன் மிளகாய்த் தூள் ஒன்றரை டீஸ்பூன் வெங்காயம் (நறுக்கியது) 1 கப் பெருங்காயம் சிறிதளவு உப்பு, எண்ணெய் - தேவையான அளவு கறிவேப்பிலை - சிறிதளவு எப்படிச் செய்வது? துளசியை அலசி, நறுக்கிக் கொள்ளவும். கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, மிளகாய்த் தூள், நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், உப்பு இவற்றுடன் நறுக்கிய துளசி, கறிவேப்பிலையைச் சேர்த்து நன்றாகப் பிசையவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு, சிவக்க வேகவிட்டு எடுக்கவும். இருமல், சளி, ஜலதோஷம் ஆகி…
-
- 2 replies
- 795 views
-
-
ப்ராக்கோலி ரோஸ்ட் மாலையில் டீ/காபி குடிக்கும் போது பஜ்ஜி, போண்டா போன்றவற்றை தான் செய்து சாப்பிட வேண்டும் என்றில்லை. பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட ப்ராக்கோலியை ரோஸ்ட் செய்து சாப்பிடலாம். அதிலும் உங்கள் வீட்டில் மைக்ரோ ஓவன் தூங்கிக் கொண்டிருந்தால், ப்ராக்கோலி ரோஸ்ட் செய்து சாப்பிடுவது சிறந்தது. சரி, இப்போது ப்ராக்கோலி ரோஸ்ட்டை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! ப்ராக்கோலி ரோஸ்ட் தேவையான பொருட்கள்: ப்ராக்கோலி - 2 கப் ஆலிவ் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன் பூண்டு - 4 பற்கள் (பேஸ்ட் செய்தது) எலுமிச்சை தோல் பொடி - 1/4 டீஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் சீஸ் - 1 டேபிள் ஸ்பூன் எள் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: …
-
- 0 replies
- 976 views
-
-
நெத்திலி மீன் தொக்கு பலருக்கும் மீனை எப்படி சமைத்து சாப்பிடுவதென்று தெரியாது. அப்படியே தெரிந்தாலும் சுவையாக சமைக்க தெரியாது. அதிலும் குட்டியாக இருக்கும் நெத்திலி மீனை பலரும் குழம்பு தான் செய்து சுவைத்திருப்பார்கள். ஆனால் அதனை தொக்கு செய்தால், இன்னும் சுவையாக இருக்கும் என்பது தெரியாது. உங்களுக்கு நெத்திலி மீன் தொக்கு எப்படி செய்வதென்று தெரியாவிட்டால் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு நெத்திலி மீன் தொக்கின் செய்முறை தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து இந்த விடுமுறையன்று செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். \ தேவையான பொருட்கள்: நெத்திலி மீன் - 300 கிராம் எண்ணெய் - 1/4 கப் + 1/4 கப் வெந்தயம் - 1 டீஸ்பூன் பூண்டு - 2 பற்கள…
-
- 10 replies
- 1.8k views
-
-
கேரட் இஞ்சி சூப் ஞாயிறு, 6 ஜனவரி 2013( 17:49 IST ) கேரட் இஞ்சி சூப்பினை காலை நேரத்தில் சாப்பிட்டால் மதிய உணவு சாப்பிடும்வரை பசியே எடுக்காது. வயிற்றுக்கு நிறைவான உணவை அளிக்கும் இந்த சூப்பை செய்து அசத்துங்கள். தேவையானவை: கேரட் - 6 வெங்காயம் - 1 கொத்தமல்லி - சிறிது இஞ்சி - 1 துண்டு வெண்ணை - 1 ஸ்பூன் சோள மாவு - 1/2 ஸ்பூன் பால் - 1 கப் உப்பு ,மிளகு தூள் - தேவைகேற்ப செய்முறை: வாணலியில் வெண்ணையை சூடேற்றி வெங்காயம், இஞ்சி, கேரட், மற்றும் கொத்தமல்லியை 10 நிமிடங்கள் வதக்கவும். சோள மாவினை தண்ணீருடன் கலந்து சேர்க்கவும். இதோடு உப்பு மற்றும் மிளகு தூளை சேர்த்து கலக்கவும். இந்தக் கலவையை மூடியால் மூடி 10 நிமிடங்கள் வரை சமைக்கவும். இதனோடு பாலை சேர்த்து நன்றாக கொதிவந்ததும்…
-
- 2 replies
- 762 views
-
-
-
வாங்க இண்டைக்கு நாங்க மாலை நேரத்தில் இலகுவா செய்து சாப்பிட கூடிய ஒரு மரவள்ளி செய்வம், இத செய்து பாருங்க ரொம்ப ருசியா இருக்கும். செய்து பாத்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க என. '
-
- 0 replies
- 419 views
-
-
ரியூனா கறி தேவையான பொருட்கள் ரியூனா மீன் பேணி - 1( Tuna in Brine or Tuna in Sunflower Oil) 2 தக்காளிப் பழம் 1 வெங்காயம் - நடுத்தர அளவு 2- 3 பச்சை மிளகாய் சிறிதளவு பெருஞ்சீரகமும் கடுகும் சிறிதளவு எண்ணை சிறிதளவு மிளகாய்த் தூள் . கருவேப்பிலை சிறிதளவு உப்பு சிறிதளவு தேசிக்காய்ப் புளி அடுப்பில் சட்டியை வைத்து சிறிதளவு எண்ணையைவிட்டு சூடாக்கி பின்னர் வெட்டிவைத்த வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு தாளிக்கவும், ஓரளவு வதங்கியதும் கடுகு பெருங்சீரகம், கருவேப்பிலை எல்லாத்தையும் போட்டுத் தாளிக்கவும். வெங்காயம் பொரிந்து பொன் நிறமாய் வந்ததும் வெட்டிவைத்த தக்காளிப் பழத்தையும் போட்டு ரியூனாவையும் போட்டு சிறிது மிளகாய்த் தூள் உறைப்புக்குத் தகுந்த மாதிரிப் போ…
-
- 0 replies
- 1.7k views
-
-
வாங்க இண்டைக்கு நாம இலகுவா காலிஃபிளவர், உருளைக்கிழங்கு வச்சு செய்ய கூடிய ஒரு பிரட்டல் கறி எப்பிடி செய்யிற எண்டு பாப்பம். நீங்களும் இப்பிடி செய்து எப்படி வந்த எண்டு சொல்லுங்க என
-
- 0 replies
- 312 views
-
-
உங்களில் எத்தனை பேருக்கு ஈரல் பிடிக்கும்...ஈரல் சமைப்பதற்கு முன் நன்கு கவனமாக கழுவ வேண்டும், ஈரல் மென்மையானது சமைத்த பிறகு அதன் சிகப்பு நிறம் போய் இருக்க வேண்டும் அத்தோடு அதிக நேரம் அவிய விட்டால் அது இறுகி போய் கடிக்க கஸ்டமாக இருக்கும் ஆகவே கவனமாக சமைக்க வேண்டும்.இனி ஈரல் வறுவல் செய்ய தேவையான பொருட்களை பார்ப்போம்; ஆட்டு ஈரல் அல்லது கோழி ஈரல் 1/2 கிலோ வெங்காயம் 1 உள்ளி 6 அல்லது 7 பல் கருவேப்பிலை தேவையான அளவு மஞ்சல் தேவையான அளவு[1 தேக்கரண்டி] உப்பு தேவையான் அளவு மிளகாய்த் தூள் தேவையான அளவு[3 தேக்கரண்டி] கறுவா 1 துண்டு ஏலக்காய் 2 லவங்கம் 1 எண்னெய் தேவையான அளவு[3தொடக்கம் 5 தேக்கரண்டி] வெங்காயத்தாள் 1 கட்டு இனி எப்படி செய்வது எனப் பார்ப்போம்…
-
- 21 replies
- 11k views
-
-
தேவையான பொருட்கள் காலி பிளவர் 1 கப், காலி பிளவர் தண்டு 1 கப், பால் 3 கப், நெய் 3 தேக்கரண்டி, மைதா 2 தேக்கரண்டி, எண்ணை 1 தேக்கரண்டி, உப்பு தேக்கரண்டி, வெங்காயம் 1, மிளகு தேக்கரண்டி, பூண்டு 6 பல். செய்முறை காலி பிளவரை மிக மிக சின்னத்துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். காலி பிளவர் தண்டு, பூண்டு, வெங் காயத்தை மிக்சியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும். இனி வாணலியில் நெய்யை விட்டு சூடுபடுத்தவும். அதில் காலிபிளவர் துண்டுகளை போட்டு 2 நிமிடம் வதக்கி மிளகு, உப்பு போட்டு தனியாக எடுத்துக்கொள்ளவும். தொடர்ந்து வாணலியில் எண்ணை விட்டு அரைத்த காலி பிளவர் தண்டு, பூண்டு, வெங் காயத்தை இட்டு சிறிதுநேரம் கழித்து மைதா மாவை கலக்கவும். தீ மெதுவாக எரியவேண்டும். பின் …
-
- 0 replies
- 944 views
-
-
செட்டிநாட்டு வத்த குழம்பு.. சுண்டைக்காய் வற்றல் 5 ஸ்பூன் வெங்காயம் - 3 பூண்டு- 10 பல் தக்காளி - 1 சாம்பார் பொடி(கொத்துமல்லி+ மஞ்சள் தூள் + மிளாகாய்தூள் கலவை) - 3 ஸ்பூன் புளி எலுமிச்சை உருண்டை அளவு உப்பு- தேவையான அளவு தாளிப்பதற்கு எண்ணைய் - 5 ஸ்பூன் கடுகு - 1 ஸ்பூன் வெந்தயம் - 1 ஸ்பூன் சோம்பு - 1 ஸ்பூன் கறிவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு.. செய்முறை.. வெங்காயம் தக்காளி பூண்டு மூன்றையும் நறுக்கி கொண்டு .. புளியை உப்பு நீரில் ஊறவைக்கவும்..அடுப்பில் வாணலைவைத்து 5 ஸ்பூன் எண்ணைய்விட்டு மேற்சொன்ன தாளிக்கும் பொருட்களை கடுகு பொறிந்ததற்கு பின் இட்டு...சுண்டைக்காய் வற்றல் வெங்காயம் தக்காளி பூண்டு போட்டு சிவக்க வதக்கி ..வதங்கியவு…
-
- 5 replies
- 15.3k views
-
-
மீன் சூப் தேவையானவை: ஸ்லைஸ் மீன் - 4 துண்டுகள் இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா - 1 டீஸ்பூன் புளி - சிறிதளவு மக்காச்சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - சிறிதளவு உப்பு - தேவையான அளவு பட்டை லவங்கம் - தலா 2 செய்முறை: புளியைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளுங்கள். அதில் இஞ்சி பூண்டு விழுது, மிளகுத்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்தக் கலவையில் மீன் துண்டுகளைப் போட்டு ஊற வையுங்கள். ஊறிய மீனை எடுத்து தேவையான அளவு நீர் விட்டு வேக வையுங்கள். மீன் வெந்ததும் தண்ணீரை வடித்துக் கொள்ளுங்கள். இந்த நீரில் பட்டை, லவங்கம் தாளித்துப் போட்டு கொதிக்க விட்டு இறக்குங்கள். மேலே பொர…
-
- 6 replies
- 1.9k views
-
-
தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரி கோழி குழம்பை சமைப்பார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசியில் இருக்கும். அதில் காரைக்குடி கோழி குழம்பு மிகவும் காரமாகவும், சுவையாகவும் இருக்கும். உங்களுக்கு அந்த காரைக்குடி கோழி குழம்பை எப்படி சமைப்பதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு காரைக்குடி கோழி குழம்பின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்துப் பார்த்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: கோழி - 1/2 கிலோ (நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும்) தக்காளி - 2 (நறுக்கியது) வெங்காயம் - 2 (நறுக்கியது) காஷ்மீரி மிளகாய் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா - 1 டேபிள் ஸ்…
-
- 1 reply
- 581 views
-
-
வணக்கம் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு சமையலை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்; பொரித்த சோறு செய்யத் தேவையான பொருட்கள்; தனித் தனித் உதிரிகளாக சமைத்து எடுக்கப்பட்ட சோறு[மஞ்சலும்,கொஞ்ச பட்டர் அல்லது எண்ணெய் விட்டு சமைத்தால் சோறு உதிரிகளாக வரும்.] எலும்பில்லாமல் அவித்த கோழித் துண்டுகள் அவித்த இறால்,அவித்த நண்டின் சதை கோவா,லீக்ஸ்,கரட்,செலரி,சிகப்பு வெங்காயம்,தக்காளி[சிறிது,சிறிதாக வெட்டியது] முட்டை சோயா சோஸ் தக்காளி சோஸ் எண்ணெய் உப்பு மிளகு இனி செய்முறையைப் பார்ப்போம்; முட்டையை உப்பு,மிளகு போட்டு அடித்து மெல்லிய ஓம்லெட்டாக போட்டு எடுத்து ஒரு பக்கத்தில் வைக்கவும். ஓரு பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி,சூடானதும் அவித்த கோழி,இறால்,நண்டு போட்ட…
-
- 10 replies
- 2.4k views
-
-
சில்லி நண்டு தேவையானவை: நண்டு - ஒரு கிலோ சின்னவெங்காயம் - 2 கப் காய்ந்த மிளகாய் - 10 இஞ்சி - ஒரு இஞ்ச் துண்டு பூண்டு - 6 பல் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் தக்காளி சாஸ் - 4 டேபிள்ஸ்பூன் லைட் சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன் ஸ்வீட் சில்லி சாஸ் - ஒரு டீஸ்பூன் ரெட் சில்லி சாஸ் - ஒரு டீஸ்பூன் எம்.எஸ்.ஜி சுவையூட்டி - ஒரு துளி சர்க்கரை - ஒரு சிட்டிகை தண்ணீர் - 3 கப் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: அடுப்பில் வாணலியை வைத்து சுத்தம் செய்த நண்டுடன் உப்பு, மஞ்சள்தூள், 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். இரண்டு நிமிடம் கழித்து கொதிக்கும் நண்டை வடித்து நன்றாக ஆறவிடவும். சின்னவெங்காயம், காய்ந்த மிளகாய், இஞ்சி, ப…
-
- 3 replies
- 822 views
-
-
முள் இல்லாத மீனில் இருந்து... சுவையான ஃபிஷ் கட்லெட்! #WeekEndRecipes தேவையானவை: மீன் - அரை கிலோ (முள் அதிகம் இல்லாத, அதிகம் சதைப்பற்றுள்ள ஏதாவது ஒருவகை மீன்) பிரெட் - 3 துண்டுகள் பச்சை மிளகாய்(பொடியாக நறுக்கியது) - 10 கிராம் பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 200 கிராம் எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன் ரொட்டித்தூள் - 50 கிராம் கரம் மசாலாத்தூள் - இரண்டு டீஸ்பூன் கொத்தமல்லித்தழை - 50 கிராம் முட்டை - ஒன்று எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். முட்டையை உடைத்து ஒரு ப…
-
- 0 replies
- 803 views
-
-
-
தேவையான பொருட்கள்: * மீன் - 300 கிராம் ( சீலா, இரால், வாவல், வாளை, பிள்ளைச் சிரா, விரால் போன்றவையாக இருந்தால் நல்லது.) * உருளைக்கிழங்கு - 150 கிராம் * பெரிய வெங்காயம் - 100 கிராம் * தேங்காய் - பாதி * மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி * பட்டை, கிராம்புத்தூள் - 1/2 தேக்கரண்டி * முட்டை - 1 * பூண்டு - 7 பல் * ரஸ்க் தூள்- தேவையான அளவு * உப்பு - தேவையான அளவு * இஞ்சி - தேவையான அளவு * மல்லித்தழை - தேவையான அளவு * புதினாத்தழை - தேவையான அளவு * நல்லெண்…
-
- 6 replies
- 3.8k views
-
-
அறிஞர் ஆதிநைனாவின் ந(கை/ள)பாகம் -3 வணக்கம் கன நாளைக்குப் பிறகு சுவைஞர்கள் பகுதிக்கு ஆதிநைனா வந்துள்ளேன். உள்ளாரக் கூப்பிடுங்க. பயப்படாதீங்க எல்லாருக்கு நல்லது செய்யத்தான் வந்திருக்கிறன். ஒரு காலத்தில கனபேரின் வால்கள் வளர்ந்ததற்கு ஆதியைக் காரணம் சொன்னாங்க. இனிமே எல்லாருடைய நா வளர்ச்சிக்கும் ஆதியை சொல்லுவாங்க. நா என்றால் பேச்சு வன்மையை வளர்க்கப்போறன் என்று நினைக்கப்படாது. சுவைகள் அறியும் நா வளர்ச்சியைத்தான் ஆதிநைனா ஆரம்பிக்கப்போறன். இங்க ஆதிநைனா போடுற அட்டில் இரகசியங்களை வாசிக்கிற நீங்களே வச்சுக்கொள்ள வேணும் செயல்முறையைச் செஞ்சு பாக்கவேணும். பின்னாடி உங்க உங்க எசமானிகள் என்ர வீட்டு எசமானியைக் கூப்பிட்டு உன் வீட்டுச் சமையல்காரனின் செய்முறைப் பதிவால தாங்கள் வீட்ல நி…
-
- 14 replies
- 2k views
-
-
-
கர்நாடக லெமன் ரைஸ் தேவையான பொருட்கள் : · வேகவைத்த பிரவுன் ரைஸ் – 2 கப் · எலுமிச்சை பழம் – 1 · மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி · உப்பு – தேவையான அளவு அரைத்து கொள்ள : · கொத்தமல்லி – 1/4 கட்டு · பச்சை மிளகாய் – 3 · இஞ்சி – சிறிய துண்டு தாளிக்க : · எண்ணெய் – 2 தே.கரண்டி · கடுகு – தாளிக்க · உளுத்தம்பருப்பு – 2 தே.கரண்டி · கருவேப்பில்லை – 5 இலை செய்முறை : அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக தட்டி கொள்ளவும். (மைய அரைக்க கூடாது.) எலுமிச்சை சாறு எடுத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + உளுத்த…
-
- 6 replies
- 5.9k views
-
-
தேவையானவை: துவரம் பருப்பு -2 ஸ்பூன் கடலை பருப்பு -2 ஸ்பூன் சாம்பார் பொடி -2 ஸ்பூன் பெரிய வெங்காயம் - 3 புளி - சிறிதளவு பூண்டு - 20 பல் இஞ்சி - 25 கிராம் வறுத்து பொடித்த வெந்தயம் - 1 ஸ்பூன் கடுகு - 1 ஸ்பூன் மஞ்சள் பொடி - சிறிதளவு பெருங்காயம் - சிறிதளவு கறிவேப்பிலை – சிறிதளவு நல்லெண்ணெய் - 4 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு புளி - சிறிதளவு செய்முறை: முதலில் இஞ்சி இன் தோலியை நீக்கவும் . பூண்டு உரிக்கவும், வெங்காயம் நறுக்கவும். மூன்றையும் மையாக அரைக்கவும். கடாயில் நல்லெண்ணைய் விட்டு, கடுகு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். அரைத்த விழுதை போட்டு வதக்கவும். நன்கு எண்ணை பிரியும் வரை வதக்கவும். மஞ்சள் பொடி சேர்க்கவும். 1 டம்ளர் தண்ணீர் வி…
-
- 1 reply
- 663 views
-