கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! இந்திரா பார்த்தசாரதி வா சல் கதவைத் தட்டிவிட்டுப் போய்விட்டான் எமன். நாடகத்துக்கு முதல் விசிலா? டாக்டர்கள் ஆச்சர்யப்பட்டார்கள்... ‘‘இவ்வளவு பெரிய அட்டாக்... நீங்கள் தப்பிச்சது மிராக்கிள்தான்!’’ தப்பித்தது எதற்காக என்று யோசித்தார் நடேசன். உலகத்தில் நடப்பன அனைத்த…
-
- 0 replies
- 942 views
-
-
ஒரு நிமிடக் கதை: வெட்டாட்டம் காலை எட்டு மணிக்கே சாலை முழுவதும் நிரம்பி வழிந்த அதீத வாகன நெரிசலில் ஸ்கூட்டரை ஒடித்துத்திருப்பி, திருப்பி ஒடித்து ஆனந்தியின் வீட்டு வாசலை அடைந்து, பீப்பிட்டபோது சலனமின்றி நின்றது வாசல். ஸ்டாண்டில் இட்டு உள்ளே சென்றாள். "வாருங்கள். ஆனந்தி புடவை மாற்றுகிறாள்" என்று கைகளில் பேப்பரைத் திணித்துவிட்டு டைனிங் டேபிளுக்குச்சென்றான் ஆனந்தியின் கணவன். ஒரு ஒற்றைக்கல் சுவர் தடுப்பிற்குப் பின் இருந்த சாப்பாட்டு டேபிளில் ஆனந்தியின் கணவன் மற்றும் குழந்தை அமர்ந்திருக்க ஊரிலிருந்து வந்திருந்த ஆனந்தியின் மாமியார் சாப்பாடு போட்டுக்கொ…
-
- 0 replies
- 942 views
-
-
எஸ்தர் - வண்ண நிலவன் முடிவாகப் பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுச் செல்வதென்று ஏற்பாடாயிற்று. மேலும், பிழைக்கப் போகிற இடத்துக்குப் பாட்டி எதற்கு? அவள் வந்து என்ன காரியம் செய்யப் போகிறாள்? நடமாட முடியாது, காது கேளாது, பக்கத்தில் வந்து நின்றால், அதுவும் வெளிச்சமாக இருந்தால்தான் தெரிகிறது. ஒரு காலத்தில் பாட்டிதான் இந்த வீட்டில் எல்லாரையும் சீராட்டினவள். பேரப்பிள்ளைகளுக்கெல்லாம் கடைசியாகப் பிறந்த ரூத் உள்பட எல்லாருக்கும் பாட்டியின் சீராட்டல் ஞாபகம் இருக்கிறது. அதற்காக இப்போது உபயோகமில்லாத பாட்டியை அழைத்துக் கொண்டு பிழைக்கப் போகிற இடத்துக்கெல்லாம் கூட்டிச் செல்ல முடியுமா? வீட்டில் பல நாட்களாக இதுதான் பேச்சு. எல்லாரும் தனித்தனியே திண்ணையில், குதிருக்குப் பக்கத்தி…
-
- 0 replies
- 942 views
-
-
கேளடி கண்மணி! ''பாரதி... நான் இவ்வளவு சொல்றேன், ஏன் காது கொடுத்து கேக்க மாட்டேங்குற...'' என்றார், அப்பா ராகவன் சலிப்பாக! ''நீங்கதாம்பா என்னோட உணர்வுகள புரிஞ்சுக்க மாட்டேங்குறீங்க...'' ''ஏண்டி... கல்யாணமாகி, ஆறு மாசம்கூட ஆகல; அதுக்குள்ள இப்படி பிடிவாதமா வந்து நிக்குற...'' என்றாள் ஆற்றாமையுடன், அம்மா. ''ஓ... அதுதான் உன் பிரச்னையா... உன் மக, வாழாவெட்டியா வந்து உட்கார்ந்துடுவாளோ, அக்கம்பக்கம் உள்ளவங்களுக்கு பதில் சொல்லணுமே... இதுதானே உன் பயம்...'' என்றாள், பாரதி. ''அம்மா சொல்றத விடு. விஜய் நல்ல பையன்; எந்த கெட்ட பழக்க வழக்கமும் கிடையாது. கல்யாணமான இந்த குறுகிய காலத்துல, அவரை, நீ …
-
- 2 replies
- 942 views
-
-
அப்பா முகத்தில்... வீடு எப்படி அமைய வேண்டும் என்று அண்ணன், அண்ணி, தம்பிகள், தங்கைகள் எல்லோருடைய கருத்துகளையும் சேர்த்து ஒரு பிளான் வரைந்தார்கள். கடைசியாக அப்பாவிடம் கொண்டு காட்டி, ‘‘அப்பா, இது சரியான்னு பாருங்க. ஏதாவது மாற்றம் இருந்தால் செஞ்சுக்கலாம்’’ என்றார் அண்ணன். அப்பா சிறிது நேரம் பார்த்துவிட்டு, ‘‘எல்லாம் சரிதான். முன் பக்கத்தில் மட்டும் முடிந்தால் கொஞ்சம் கார்டன் போட இடம் விடுங்கள். பூச்செடிகள் வைத்து, சாமிக்குப் பறிச்சுப் போடலாம்’’ என்றார். ‘‘சரிப்பா! அப்படியே பண்ணிடலாம்!’’- அண்ணன். தனிமையில் அண்ணனிடம…
-
- 1 reply
- 941 views
-
-
த்வந்தம் by பா. திருச்செந்தாழை நெய்யாற்றங்கரை பாலத்தின்மீது ரயிலின் வேகம் படிப்படியாகக் குறைந்து கொண்டிருந்தது. அதிகாலை இருட்டிற்குள் தென்னந்தோப்புகளின் பச்சையான மெழுகு வெளிச்சங்கள். திறந்து விடப்பட்ட எனது சட்டை படபடக்க காற்று வழுவி விலகியது. தென்னந்தோப்பிற்குள் சிறியதொரு கோவிலில் மாட விளக்கு பொருத்தப்பட்டிருக்க, சாம்பலான இருளுக்குள் அது அம்மாவின் நெற்றியைப் போல இளவெளிச்சம் கொண்டிருந்தது. சிகரட்டை வெளியே சுண்டினேன். ஊதிய புகை ஒருகணம் எதிர்காற்றில் திகைத்து பிறகு நெஞ்சில் பனியைப்போல் பரவி சட்டென மறைந்தது. தூங்காமலிருக்கப் பழகிவிட்டிருந்த எனது கண்களில் எழுந்த எரிச்சலைக் கசக்கி நீவியபடி, உள்ளே பார்த்தேன். ஜன்னலோரம் முன்சிகைப் பிசிறுகள் முகத்தில் துடிக்க லீ…
-
- 1 reply
- 940 views
-
-
பொலிடோல் நடேசன் (மிருக வைத்தியர் - அவுஸ்திரேலியா) ஆண் இளைஞனாக இருக்கும் காலத்தில் தனது காமத்தின் வீரியத்தால் தனக்குரிய பெண்ணை வசப்படுத்தி வைத்திருக்கலாம் என நினைக்கிறான். மத்திய வயதில் பணத்தால் அது முடியும் என மனம் சொல்லுகிறது வயதான காலத்தில் பிள்ளைகள், குடும்பம் என்பன பெண்களை கட்டுக்குள் வைத்திருக்கும் என அவன் தீர்மானிக்கிறான். இப்படியான ஆண்களின் சிந்தனையைத் தாண்டிச்செல்லும்; அன்னா கரினாக்கள் ரஷ்யாவில் மட்டுமல்ல இலங்கையின் ஒவ்வொரு கிராமங்களிலும் இருக்கிறார்கள். என்பதை புரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு எண்பதாம் ஆண்டுகளில் கிடைத்தது. அந்த அனுபவம் மிகவும் வித்தியாசமானது. மருத்துவர்களுக்கு மட்டுமே இறந்த மனிதர்களின் உடலை வெட்டி உள்ளுறுப்புகளை கூறாக்கி பார்க்கும் …
-
- 0 replies
- 940 views
-
-
இதழில் கதை கணவன் யார் மீதோ பயங்கர கோபமாக சண்டைக்கு புறப்படுகிறான் என்பதை புரிந்துகொள்கிறாள் மனைவி. அவன் சட்டையை மாட்டிக்கொண்டு மேலிருந்து பொத்தான்களை பொருத்த இவள் மேலிருந்து கழற்ற ஆரம்பிக்கிறாள். "என்ன செய்கிறாய்.."கோபமாக "எங்கே புறப்பட்டு விட்டீர்கள் "அவன் கண்களை வாஞ்சையோடு நோக்கியவாறு கேட்கிறாள் "வெளியே ஒரு வேலை இருக்கிறது" "எனக்கு தெரியும் சண்டைக்கு போகிறீர்கள்.." "ம் என்னையே சீண்டி பார்க்கிறார்கள் அவர்களை அடித்தால்தான் மனம் ஆறும்" "நீங்கள் வீர்ர்தான் ஆனால் அடித்தால் பகை வளரும் வஞ்சம் வைத்து காத்திருப்பார்கள் என்னிலோ குழந்தையிலோ கூட பகைமையை காட்ட முனைவார்கள்" "தொட்டுவிடுவார்களா உன்னையோ பிள்ளையையோ" "என் பேச்…
-
- 4 replies
- 939 views
-
-
ஒரு கூதிர்கால செம்மஞ்சள் நிற மாலைப் பொழுதில், வளர்பிறை நிலவு தன்னை அலங்கரித்து பவனி வரக் காத்திருக்கும் இளவரசி போல் முகில் சூழ ஒய்யாரமாக அமர்ந்திருக்க, வேந்தனைக் கண்டு விழிமிரளும் வேலையாட்போல் கதிரவன் நிலவைக் கண்டு தன ஒளிக்கற்றைகளை சுருட்டிக் கொள்ள, மலைமுகடுகளிருந்து வெளிவரும் ஊதக் காற்று செடி கொடிகளை தழுவிக் கொண்டிருந்தது. தழுவியதால் உண்டான இன்பத்தில் இலைகளும் தளிர்களும் சிலிர்த்து ஆடிக்கொண்டிருந்தன. விடுமுறை நாளின் மதிய உறக்கத்திற்குப் பின் சோம்பலுடன் எழுந்து புல்தரையில் வெண்முத்துக்களை பரப்பியது போல் இருந்த சிமென்ட் தரையில் நடந்து கொண்டிருந்தேன். கனாக்களில் எஞ்சியதை நெஞ்சம் அசை போடா, விஞ்ஞானம் பெற்றெடுத்த அலைபேசியில் சேமிக்கப்பட்ட இன்னிசை காதில் தவழ்ந்து கொண்…
-
- 5 replies
- 939 views
-
-
எப்போதோ எழுதியது இப்போது ஒரு ஞாபகமாய் (2000ம் ஆண்டில் இந்த ஞாபகம் எழுதப்பட்டது. ஏற்கனவே பத்திரிகையொன்றிலும் வெளியாகியது. தூசுதட்டப்போனதில் கிடைத்தவற்றிலிருந்து ஒரு ஞாபகக்கதையிது) 1985ம் ஆண்டு. புண்ணியன் சித்தப்பா சந்திராச்சித்தியின் ஊரான கோண்டாவில் அந்நொங்கைக்குப் போய்விட ராசையாப்புவின் கேணியடிக் கடைக்கு நாங்கள் போய்ச்சேர்ந்தோம். கேணியடியிலிருந்துதான் அப்பா புன்னாலைக்கட்டுவன் சங்கத்துக்குப் போய் வரத்தொடங்கினார். புன்னாலைக்கட்டுவனிலிருந்து பல இளைஞர்கள் புலிகளாகி இந்தியாவிலிருந்து திரும்பி ஊருக்குள் வந்தார்கள். ஊர்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த ஆமிக்கு அது பயத்தைக் கொடுத்தது. அப்பாவின் நண்பர்களாக எங்கள் வீட்டுக்கு இரவில் வந்து போகும் அந்த மாம…
-
- 2 replies
- 939 views
-
-
வன்னிச்சி அம்மன் கோவிலடியில் பஸ்சுக்காக காத்திருந்த குமார்,நேரத்தை பார்க்க முழுக்கை சேட்டின் முன்பக்கத்தை இழுத்த போது கையில்கட்டியிருந்த கறுத்த மணிக்கூட்டை பார்த்தான். மிகவும் பழுதாகி விட்டாலும் எதோ ஒரு ஈர்ப்பின் காரணத்தால் இன்னும் எறியாமல் வைத்திருப்பதை எண்ணி தனக்குள் மலர்ந்து உற்சாகமானவன், எப்படியும் இன்னும் ஒருபத்து நிமிடமாவது செல்லும் பஸ் வர, என முனுமுனுத்த படி சேட் பொக்கற்றை தட்டிப் பார்த்து ஒரு சீக்கரட்டை எடுத்து வாயில் வைத்தவன், திருப்ப எடுத்து பார்த்தான். இதையெலாம் பத்தி பழகவேண்டி வந்ததே என சலித்துக்கொண்டவன், கசக்கிபோடவும் முடியாமல் திருப்ப வாயில் வைத்து பத்தவும் முடியாமல் தடுமாறிய கணத்தில் இரைச்சல் சத்தம் கேட்டு திரும்பி பார்க்க முடக்கில் பஸ் வருவதைக்கண்டான்.சிவப…
-
- 3 replies
- 938 views
-
-
இருள்களி - தெய்வீகன் நல்லதண்ணி கிணற்றடிப்பக்கத்திலிருந்து பாய்ந்து வந்து அவள் எனது சைக்கிளை மறித்தாள். மறித்தாள் என்பது மரியாதைக்குரியதாக செயலாக கருதப்படலாம். உண்மையைச் சொல்வதானால், சைக்கிளின் கைப்பிடி நடுஇரும்பின் மீது தனது ஒரேகையை அதிகாரத்தோடு அழுத்தி நிறுத்தினாள். அதற்கு நான்கைந்து விநாடிகளுக்கு முன்னர் “அண்ணா, அண்ணா…” – என்று இரண்டொரு தடவைகள் அவள் அழைத்த குரலுக்கு திரும்பிப்பார்த்து, நானாகவே அவள் பக்கத்துக்கு சைக்கிளைத் திருப்பியிருந்தால், எனது மரியாதைக்கு இவ்வளவு கேடு ஏற்பட்டிருக்காது. கிணற்றடிக்கு அருகாக உள்ள நெல்லிமரத்துக்குக்கீழிருந்து கச்சான் விற்கின்ற அந்தக்கிழவி அன்றில்லை. பாடசாலைவிட்டு வரும்வழியில் தாமரை பிடுங்குவதற்காக குளத்துக்குள் இறங்கும்ப…
-
- 0 replies
- 937 views
-
-
படித்ததில் பிடித்திருந்த கதை. தமிழ்நதி எழுதியிருந்தார்..அதனை இங்கு இணைக்கிறேன்.http://tamilnathy.blogspot.com/2009_07_01_archive.html மாபெரிய பால்வெளி. அதில் சூரியனைச் சுற்றியும் சுழன்றும் செல்லும் பூமியென்ற சிறு கிரகம். அகன்ற நிலப்பரப்பில் ஒரு நாடு. அதிலொரு நகரம். அங்கே குட்டியூண்டு பகுதி. அந்தக் குட்டியூண்டு பகுதியிலொரு குட்டியூண்டு அறையில் ஒரு சதுர அடிக்கும் குறைவான ஒரு பெட்டியின் முன்னமர்ந்து நாங்கள் சண்டை பிடித்துக்கொண்டிருக்கிறோம். பால்வெளியையும் இந்தப் பெட்டியையும் இணைத்தும் நினைத்தும் பார்க்க கொஞ்சம் நகைப்பாகத்தான் இருக்கிறது. வேலிச்சண்டை, கோழிச்சண்டையிலிருந்து இணையச் சண்டைக்கு நாங்கள் பரிணாம வளர்ச்சி பெற்றிருப்பதை எண்ணித் திருப்தியுற வேண்டியதுதான். களைப…
-
- 2 replies
- 937 views
-
-
பாம்புபிடி இனம் கல்பேலியாவும் ரொக்ஸானா என்னும் குழந்தையும்..! - ராஜஸ்தான் கதைகள் முடிவிலிருந்து தொடங்குகிறேன் இந்தப் பயணக் கதையை. பயணம் முடிந்த ஏழாவது நாள் சென்னை விமான நிலையத்துக்குள் நுழையும் போதே பெரும் மழை கொட்டத் தொடங்கியிருந்தது. சுற்றி ஒரே பரபரப்பு. எல்லோருக்கும் வீட்டுக்குத் திரும்பும் சந்தோஷம். எனக்கு அப்படி ஓர் உணர்வு இல்லை. என் மனம் இன்னும் "ரொக்ஸானா"வின் சிரிப்பிலேயே நிலைத்திருந்தது. முழு பற்கள் முளைத்திடாத அவள் பொக்கை வாயும், அந்தச் சிணுங்கலும், என்னை நோக்கி அவ்வப்போது அவள் நீட்டிய அந்த விரல்களின் மென்மையும், அவள் கண்களின் அழகைப் பெருமளவுக் கூட்டிய அந்த "மை"யும், நடனத்தின் இடையிடையே அவளின் அம்மா சில நிமிடங்கள் வந்து அவளுக்கு ப…
-
- 2 replies
- 935 views
-
-
புலரியில் மறைந்த மஞ்சள் கடல் – ப.தெய்வீகன் மயானத்துக்குப் பின்னாலிருந்த மஞ்சள்நிற கடுகு வயலிலிருந்து வந்த காற்று கருங்கல் மதிலின் மேலால் பாய்ந்து உள்ளே நுழைந்தது. அந்தியின் சூரியக்கதிர்களில் அசைந்துகொண்டிருந்த பெருமரங்களில் மோதியது. படர்ந்துநின்ற கொரம்பியா மரங்கள் சின்னதொரு ஆட்டத்தோடு அசைவை நிறுத்திக்கொண்டன. கல்லறைகளுக்கு அருகில் வரிசையாக நின்ற எப்கரிஸ் பூக்கள் தங்கள் இதழ்களை தரையில் சொரிந்தன. பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த சித்திர வட்டக்கற்களுக்கு கீழே பிறப்பும் இறப்பும் இரங்கற் கவிதைகளும் பதித்த கல்லறைகளின் மீது சில இலைகள் பறந்துசென்று விழுந்தன. நான் அந்த மயானத்தின் தென்கிழக்கு மூலையிலிருந்த கல்குடிசைக்கு முன்னால் வேலைக் களைப்போடு அமர்ந்திருந்திருந்து எச்சிலில் மு…
-
- 2 replies
- 934 views
-
-
தங்கமயில் – சிறுகதை -சி.புஷ்பராணி- வெளியிலே நாய்கள் குரைக்கும் சத்தம் அமளியாகக் கேட்டது. தட …தடவென்று யாரோ ஓடிவரும் ஓசை. ‘இது வழக்கமான ஒன்றே… ‘ திரும்பிப் படுத்தேன். எங்கள் வீட்டு ஜெஸியும் குரைக்கும் சத்தம் காதை அறுத்தது. யாரோ கதவைப் பலமாக இழுப்பது போல் இருந்தது… சிறு சத்தமென்றாலே உடனே எழும்புவது நான்தான். தூக்கம் கண்ணைத் திறக்கவிட மறுக்க ”யாரது” என்று குரல் கொடுத்துப் பார்த்தேன்…..பதில் வராததால் கையில் டோர்ச்சை எடுத்துக் கொண்டு கதவடிக்குப் போனேன். ஜெஸியும் பின்னாலேயே வந்தாள். இணைப்புச் சங்கிலியைத் திறந்து பார்த்தால், மகளைத் தோளில் சாய்த்துக்கொண்டு மிரட்சியுடன் தங்கமயில…
-
- 1 reply
- 934 views
-
-
தொலைந்து போனவைகள். போர் சூழலினால் வஞ்சிக்கபட்ட ஒரு இளைஞன் கதை. அமைதியான அந்தக் கிராமத்துக்கு படையினர் உட்புகு மட்டும் மக்கள் சாதாரண வாழ்வு தான் வாழ்ந்தார்கள். அதன்பின்பு தானேல்லாமே தலை கீழாய் போனது. சீர் குலைந்து நிம்மதி இழந்தது. பால பாஸ்கரன் அந்த கிராமத்தின் , ஊர்ச்சங்க தலைவரின் மகன். ஊர்பள்ளிக்கூடத்தின் உதவித் தலைமை ஆசிரியராய் இருந்தான். காலாகாலத்தில் திருமணம் செய்து ....மனைவி கற்பமாய் இருந்த காலத்தில் தான் ராணுவத்தினர் கிராமத்துள் புகுந்தனர் . சோதனை என்றும் சந்தேகம் என்றும் கைது செய்துகொண்டு சென்றுவிடுவார்கள். இதில் பாஸ்கரனும் விதிவிலக்கல்ல. பலமுறை கொண்டு சென்றாலும்.பாடசாலையை காரணம் காட்டி வெளிவந்து விடுவான். இவர்களது தொல்லை தாங்க முடியாமல்,வேறு ஊருக…
-
- 4 replies
- 931 views
-
-
ஒட்டகத்தாரும் ஓசிப்பேப்பரும் நாட்டுநடப்புகள் தந்த மனஅழுத்தத்தில சோம்பலோட சோபாவிலை சாய்ந்திருக்க கிணிங்ங்ங்................................ அழைப்புமணி. சலிப்போடபோய் கதவைத்திறந்தால் வழமைபோல ஒட்டகத்தார்தான். நான் என்னவாக்கும் இந்த நேரத்திலை என்று யோசிக்க ஒட்டகத்தாரே விசயத்தைச் சட்டென்று போட்டுஉடைச்சார். இரண்டு மூன்று நாளாக் காலமையளிலை கவனித்தன் உங்கட வீட்டு வாசலிலை பேப்பர்போடுறவன் நிண்டதை அதுதான் நீங்கள் படிச்சு முடிச்சிருந்தால் நானும் ஒருக்கால் இன்றையப் பத்திரிகையை படிப்பமென்று வந்தனான். அதுசரி மணி பதினொன்றாகுது இன்னமும் வீட்டு உடுப்போட நிக்கிறியள், இன்றைக்கு லீவோ? என்று அடுக்கிக்கொண்டுபோனார். நான் கூடுதலாக இரவிலைதான் வேலை செய்கிறனான் எ…
-
- 0 replies
- 931 views
-
-
இரண்டொழிய வேறில்லை “அப்பா! அத்தான் கிட்டே இருந்து கடுதாசி வந்திருக்கு.”- செம்பவளவல்லி படபடப்புடன் அந்தக் கடிதத்தைப் பிரித்தாள். இருளப்பன் மகள் அருகில் நெருக்கமாக நின்றபடி, “முதல்ல படி, பாப்பம். செந்தில் என்ன எழுதி இருக்கு?” உள்ளம் மகிழ்ச்சியால் துள்ள, கடிதத்தைப் பலமுறை மனதிற்குள் படித்துப் பார்த்தாள் செம்பவளம். “அன்பு பவளம்! இப்போது எனது ஐ.ஏ.எஸ் பயிற்சி முடிந்து எங்களை வேலைக்கு அனுப்பத் தீர்மாணிக்கும் சமயம், நமது ஊர் எல்லைக்காளியை மனப்பூர்வமாக வேண்டிக்கொள். விரைவில் பெரிய கலெக்டராக, நம்ம ஊரிலேயே உன் அருமை அத்தான் வருவேன்! பிறகு கேட்க வேணுமா? நமது சபதம் நிறைவேறும். ஆசை அத்தான்’ செந…
-
- 0 replies
- 930 views
-
-
ஒருநிமிடக் கதை: டைம்..! அங்கே இருந்த இருக்கைகள் யாவையும் யாரோ ஒருவரால் இறுக்கிப் பிடிக்கப்பட்டிருந்தது. மணிக்கணக்காக இப்படித்தான் இருக்கிறது. எழுந்து, இருக்கையில் கைக்குட்டை அல்லது கையில் இருந்த ஃபைல் என்று இடத்தை பத்திரப்படுத்தி பின் ரிசப்ஷனுக்குச் சென்று, ஏதோ விசாரித்து வந்தார்கள். என்ன கேட்கப்பட்டது என்பதை அறிய கம்பசூத்திரம் தெரிய வேண்டாம், கேட்டது காதுகளில் விழவும் வேண்டாம். வேறு வேறு தொனிகளில், வேறு வேறு மொழிகளில், வேறு வேறு டெசிபலில் இது ஒன்றுதான் கேட்கப்பட்டிருக்கும் … “ டாக்டர் என்னை எப்போ கூப்பிடுவார்?” காத்திருப்பின் …
-
- 0 replies
- 930 views
-
-
லதா ரகுநாதன் பரத்திற்கும் அனந்திற்கும் மிகவும் சிரமமாகத்தான் இருந்தது. " இந்த அப்பா காது டமாரமாகத்தான் போயிடுத்து" ஆம் என்று அனந்த் அவசரமாகத் தலையசைத்தான். "நேற்று இந்த மாதச் செலவு சற்றே அதிகம் ஆகும். அதனால் அதிகமாக பணம் தேவைப்படும் என்பதைச் சொல்ல முயன்று என் தொண்டைத்தண்ணி வத்திப்போனதுதான் மிச்சம்" அனந்த், தன் பக்கக் கதையைச்சொன்னான். "ஆமாண்டா.. ஹியரிங் ஏய்டெல்லாம் ஒரு பிரயோசனமும் இல்லை" பரத் அதோடு நிறுத்தாமல் செவிடு, கிழம், பணப்பிசாசு, சனியன் போன்ற அழகிய தமிழ் வார்த்தைகளுடன் அப்பாவின் பல கதைகளை அவிழ்த்துவிட்டான். ராமலிங்கம் காது கேட்காதவர்களுக்கான பிரத்தியேக அசட்டுப் புன…
-
- 0 replies
- 930 views
-
-
மனிதம் ரிஷபன் வாசல் கதவு திறக்கும் சப்தம் கேட்டது. சுப்ரமணியாகத்தான் இருக்கும். சொன்ன நேரத்திற்கு வந்து விட்டான். 'ஞாயிறு காலை பத்து மணிக்கு' என்றால் மிகச் சரியாக ஹால் கடிகாரம் சங்கீதம் எழுப்புகிற நேரத்தில். "வாடா.. கன் டைம். நீ வரலேன்னா என்ன செய்யறதுன்னு டென்ஷன்ல இருந்தேன்" என்றேன். மிக நிதானமாய் அரசு முறை பயணத்தில் வந்தவன் மாதிரி நடந்து சுற்றுப் பிரதேசங்களைப் பார்வையால் அலசினான். "கேசட் கொண்டு வந்தியா" குரல் என்னையும் மீறி பரபரத்தது. வீட்டில் என்னையும் இப்போது வந்த சுப்ரமணியையும் தவிர வேறு யாரும் இல்லை. ஊஹூம். இன்னொரு நபரும் இருக்கிறார். வீட்டுக்குள் இல்லை. வெளியில்.. "பிளாஸ்க்குல காப்பியா" என்றான் மேஜை மீதிருந்ததைப் பார்…
-
- 0 replies
- 929 views
-
-
என்ன கமலா அங்கை பார் அது சண்முகத்தின்ரை பெட்டை போல கிடக்கு? என்னடி உடுப்பு, ஜீன்ஸ் என்ன? சேட் என்ன? ஒரு பொட்டுகிட்டையும் காணேல்லை? அடி மாலா நீ வெள்ளவத்தைக்கு புதுசு தானே அதுதான் அப்படி. இன்னும் கொஞ்ச நாளைக்கு இருப்பாய் தானே அப்ப பார் எங்கண்டை பொடி,பெட்டையளின்ரை உடுப்பு,மேக்கப்,நாகரீகம் எல்லாத்தையும். இப்ப பெட்டையள் எல்லாம் சாறி,பஞ்சாபி போடுறதில்லை ஜீன்ஷும், டீ-சேட்டும் தான். கேட்டால் ஏதோ கிளாமரா இருக்க வேணுமாம் எண்டுதுகள். பொட்டுக்கூட வைப்பதில்லை, வைத்தால் தமிழர் என்று கண்டுபிடிச்சிடுவங்களாம் என்ன காலம் தமிழனின் நிலையை பார்த்தியே? பொடியள் மட்டும் குறைஞ்சவங்கள் இல்லை, கட்டைக் காற்சட்டையும் அதிலையும் முன்னுக்கும்,பின்னுக்கும் கிழிச்ச்விட்டு கசங்கின சேட்டும் போட்டு,கழுத்…
-
- 0 replies
- 927 views
-
-
(பிரித்தானியாவில் அகதி புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட சுமார் நூற்றுக்கும் அதிகமான தமிழர்கள் அந்நாட்டு அரசாங்கத்தினால் இலங்கைக்கு நேற்று நாடு கடத்தப்பட்டுள்ளனர். - நன்றி: புதினம் 17.01.2009) "என்ன கண்ணெல்லாம் சிவப்பாய்க் கிடக்கு? சுகமில்லையே?" என்று சந்திரனிடம் கேட்டான் சோதி. "ஆள் "றெயினா"லை வந்து இறங்கின உடனை நல்லாய் அழுதுபோட்டார்...." என்று முந்திக்கொண்டு கூறினான் குமார். சந்திரன் பொங்கியெழுந்த துயரத்தை அடக்க முற்பட்டவனாய் புன்னகைக்க முயன்றான். அவனால் முடியவில்லை என்பது அப்பட்டமாகவே தெரிந்தது. புகையிரத நிலையத்தில் இருந்து சந்திரனை குமார்தான் அழைத்து வந்திருந்தான். சந்திரன் கிழக்கு ஜேர்மனியிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் குடியிருப்புகளை விலத்தி தனிய…
-
- 1 reply
- 926 views
-
-
இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்துகொண்டது. சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. கூட்டுக்குள் தலையை நுழைத்தது. கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்துவிட்டு, "குருவி அக்கா. எங்கள் வீட்டில் நுழைந்து எனக்கு இடமில்லாமல் பண்ணிவிட்டாயே. தயவுசெய்து வெளியே போய்விடு" என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டது. "போடி போ. உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு. நான் இதை விட்டுப் போகமாட்டேன்" என்று குருவி மறுத்து விட்டது. தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனு…
-
- 0 replies
- 926 views
-