கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3080 topics in this forum
-
அந்த மாலைப்பொழுதில்........... மாலைநேரம். பொழுது போகவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தபடியே யாழ்களம், திண்ணைபக்கம் வந்தும் பார்த்தேன். அங்கேயும் இருக்க பிடிக்காமல், வெளியே சென்று கொஞ்சம் ஓடிவிட்டு வரலாமோ என்று யோசித்துவிட்டு, அதற்கான கால்சட்டை, டிசோ்ட்,சப்பாத்து எல்லாம் டிப்டப்பாக போட்டு ஓடத்தொடங்கினேன். குறிப்பிட்ட தூரம் ஓடிவிட்டு திரும்ப வீட்டை நோக்கி ஒடிக்கொண்டிருந்தபோதுதான் கவனிச்சன் சோடி சோடியாய் வெள்ளைகள் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்ததை. பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருந்தது. என் ஒட்டத்தின் வேகமும் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்தது. முத்தம் அதுதரும் சொர்க்கம். எனக்கும் ஒண்ணு மாட்டுப்படட்டும் இதையே மிஞ்சுடுறேனா இல்லையா என் பார்ப்போம் என மனசுக்குள் வைராக்…
-
- 20 replies
- 2.9k views
-
-
சயந்தன் தான் காதலித்த நிலாந்தியையே கல்யாணமும் கட்டினான் என்றெனக்குத் தெரியவந்தபோது அவனுக்கு இரட்டை ஆண்குழந்தைகளும் பிறந்திருந்தன. அதை வன்னியிலிருந்து பிரான்சுக்கோ கனடாவுக்கோ போக கொழும்பு வந்த பெடியனொருவன் பம்பலப்பிட்டி பஸ் ஸ்ரான்ட்டில் வைத்து எனக்குச் சொன்னான். கொழும்பு பஸ்களில் சிங்களப் பெட்டைகளுக்கு அருகில் சீட் கிடைக்குமா என்று தேடித்திருந்த என் இருபத்தியொரு வயதில் அவன் அப்பாவாகியிருந்தான். காதலித்தவளையே கல்யாணம் கட்டுவது ஒருவரமென அப்போது நான் நம்பியிருந்தேன். அவன் வரம் பெற்றவனாயிருந்தான். “அட்ரசைத் தாரும், நான் கடிதம் போடுறன்” அட்ரஸை கேட்டு வாங்கினேன். சயந்தன், c/o கே ஆர் வாணிபம், உடையார்கட்டு, முல்லைத்தீவு என்ற அதே பழைய முகவரி. கே. ஆர் வாணிபம், கடை அவனது கொட்டிலிலிரு…
-
- 1 reply
- 840 views
-
-
சின்ராசு மாமாவின் சேட்டுப் பொக்கற்றுக்குள் பீடி, சுருட்டு, சிகரெட், சிகரெட் பெட்டி என்பவற்றைப் பார்த்து அவருக்கு இப்ப தொழில் அந்த மாதிரியா, அல்லது நொந்தமாதிரியா என்று நான் சொல்வேன். “என்ன மாமா இண்டைக்கு உங்கடை கடலம்மா பாத்துப்பாராமல் தந்திருக்கிறா போலை” என்று நான் சொன்னால் அவர் சிகரெட்டை பெட்டியாகவே வைத்திருக்கிறார் என்றும் மணிக்கொரு தடவை ஊதித்தள்ளுகிறார் என்றும் அர்த்தம். அவரிடம் சிகரெட், பீடி, சுருட்டு என்பன போலவே கட்டுமரம், கரைவலை, மீன்பிடி வள்ளம், ரோலர் என்ற சாமான்களும் மாறி மாறி வந்து போயின. எப்பவாவது சமாதானம் வாறநேரம் அவர் அங்கையிங்கை கடன்பட்டு நல்ல மீன்பிடிப் படகாக வாங்குவார். பிறகு எல்லாம் முடிந்து வழமைபோல நேவி கடலுக்கை அடிக்கத்தொடங்க ஆழக்கடல் போகாட்டில் வள்ளமெதுக…
-
- 23 replies
- 4.8k views
-
-
எப்போதோ எழுதியது இப்போது ஒரு ஞாபகமாய் (2000ம் ஆண்டில் இந்த ஞாபகம் எழுதப்பட்டது. ஏற்கனவே பத்திரிகையொன்றிலும் வெளியாகியது. தூசுதட்டப்போனதில் கிடைத்தவற்றிலிருந்து ஒரு ஞாபகக்கதையிது) 1985ம் ஆண்டு. புண்ணியன் சித்தப்பா சந்திராச்சித்தியின் ஊரான கோண்டாவில் அந்நொங்கைக்குப் போய்விட ராசையாப்புவின் கேணியடிக் கடைக்கு நாங்கள் போய்ச்சேர்ந்தோம். கேணியடியிலிருந்துதான் அப்பா புன்னாலைக்கட்டுவன் சங்கத்துக்குப் போய் வரத்தொடங்கினார். புன்னாலைக்கட்டுவனிலிருந்து பல இளைஞர்கள் புலிகளாகி இந்தியாவிலிருந்து திரும்பி ஊருக்குள் வந்தார்கள். ஊர்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த ஆமிக்கு அது பயத்தைக் கொடுத்தது. அப்பாவின் நண்பர்களாக எங்கள் வீட்டுக்கு இரவில் வந்து போகும் அந்த மாம…
-
- 2 replies
- 946 views
-
-
எனக்கு பெண் பார்கிறாங்களங்கோ....... ஆமா....வயசு வந்திடிச்சு......(வயசுக்கு வந்து நீண்ட காலம் ஆயிட்டுது...அது வேற கதை)அது தானுங்கோ கல்யாண வயசு....... காதலின் விண்ணப்பங்கள் எல்லாத்தையும் ஒருபடி சமாளிச்சு அந்த வலையில மாட்டுப்பட்டு எனது கற்பை(?) கரைச்சிடாமல் ஒருவாறு நெளிஞ்சு.... சுளிஞ்சு.... இந்தளவிற்கும் வந்தாச்சு..... இப்போ பெண் பார்க்கிறாங்களங்கோ......பெரியவ
-
- 25 replies
- 4k views
-
-
என்னவளே .....அடி என்னவளே .............. அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து , கணவனை வேலைக்கு அனுப்பி விட்டு ......சற்று கண் அயரலாம் என்று படுக்கையில் சரிந்தவளுக்கு .......தொலை பேசியின் கிணு கிணுப்பு ...விழித்து எழ வைத்தது ,,,,,,சுதா ,,எடுத்து கலோ ..........என்றவள் .மறு முனையில் சற்று பழக்கமிலாத குரல் ஆனாலும் எங்கோ கேட்டது போன்று ஒரு உணர்வு ..........கலோ ..நீங்க யார் என்று தெரியவில்லையே .......பெயரை சொன்னான் . பின் நீண்ட மெளனம். அவன் .சுந்தர மூர்த்தி எனும் சுந்தர் ............சுதா என்னை மறந்து விடாயா ? .நீண்ட மெளனம் ...அவளை தாயக நினைவுக்கு இட்டு சென்றது . பாடசாலைக்காலத்தில் ....அதே கலூரியில் படித்தவன். அவள் பினால் சுற்றி திரிந்தவன் .........நீண்ட காலத்தி…
-
- 5 replies
- 3.1k views
-
-
பரிசு .............. அந்த சிறு கிராமத்தில் . வாழ வந்தவள் தான் , சாவித்திரி . தபாற்காரன் சோமுவுக்கு மனைவியாக , இனிதே இல்லறம் நடத்தி வந்தாள் . மூத் தவள் , .சோபனா , சுதா ..இருவரும் படிப்பில் கெட்டிகாரி கள். . கணவனின் வருமானத்துக்கேற்ப செலவு செய்து . தானும் தன பாடுமாக வாழ்ந்து வந்தாள் . சோமுவும் கம்பீரமான தோற்றம் கொண்டவள். அந்த ஊர் மக்களால் மிகவும் விரும்ப பட்டவன் . காதலர்களுக்கு தெய்வமானவன். வழியில் மறித்து தபாலை பெற்று கொள்ளவதில் அந்த ஊர் இளையவர்கள் பலே கிலாடிகள். வீடில் வந்து எதுவுமே சொல்ல மாட்டான் தபால் அதிபர் இருவருடதுக்கு ஒரு முறை மாற்றம் பெறுவார்கள். இடையில் அவர்களது குடும்பத்துக்கு மளிகை பொருட்கள் வாங்கவும் அனுப்ப படுவான் . காலையில் , காக்கி சட்டையுடன…
-
- 3 replies
- 1.1k views
-
-
முன்னுரை ....இது ஒரு பயணக் கட்டுரை அல்ல. ..ஏனெனில் பயணம் என்றால் ஒரு வாரம் அல்லது இரு வாரம் மட்டும் ஒரு ஊருக்கு அல்லது நாட்டிற்கு போய் அது பற்றி எழுதுவார்கள். ஆனால் நான் 5 வருடங்களுக்கும் மேலாக வசித்த நாடு ஐக்கிய அரபு இராச்சியம். அதில் டுபாய் எனும் மற்றவர்களால் சொர்க்கபுரி என கருதப் பட்டு என்னால் பாதி நரகமாகவும் பாதி சொர்க்கமாகவும் உணரப் பட்ட ஒரு ஊரிலும் பக்கத்தில் உள்ள சார்ஜா ஊரிலும் (உண்மையில் இவை மாநிலங்கள்: UAE: Semi federal country ) நான் வாழ்ந்த கதை. சின்ன புள்ளைகள் இதனை வாசித்தால் கெட்டுப் போயிடும் என நினைக்கும் அப்பாமார், அம்மாமார் இந்த தொடரை இரவில் யாருக்கும் தெரியாமல் வாசிக்கவும் (செம build up அப்பு) இதனை வாசிக்க முன் உங்களுக்கு நிச்சயம் தெர…
-
- 72 replies
- 23k views
-
-
நித்திலா .....தாயாகிறாள் . மானிட வாழ்வில் ஒரு பெண் ,திருமணமாகி தாய்மையடைவது இயற்கை தான் இதில் நித்திலா .......என் கதாநாயகி , அப்படி என்ன சாதித்து விடாள் என்று பார்க்கிறீர்களா ? அது தான் கதை ........கதையை வாசிக்க என்னுடன் தொடர்ந்து வாருங்கள். அழகான அமைதியான அந்த சிறு கிராமத்தில் ஒரே ஒரு செல்லமாக வளர்ந்தவள் தான் நித்திலா .....தாய் ...தலைமை ஆசிரியரான தந்தை இவர்களுக்கு குழந்தையாக சிறுமியாக ..செல்லமாக வளர்ந்தவள் தான் இந்த நித்திலா.....காலத்தின் கட்டளையோ , விதிவசமோ , கிராமத்தில் இருந்து ... இடம் பெயர்க்க பட்டு இலங்கையின் கொழும்பு மா நகரின் , ஒரு தொடர் மாடியில் வாழ்வை அமைத்து கொண்டார்கள். யாழ் இளம்பெண் கால ஓட்டத்தில் கல்வியில் தேர்ச்சி பெற்று ,வரு நாள் …
-
- 27 replies
- 5.8k views
-
-
தமிழ்க் கூலி.. தம்பி என்ன நடத்து போறீயள் வாங்கோ நான் கொண்டு போய் உங்கட முகாமிலை விடுகிறன்... வளியில் போன ஒருவர் தானாக முன்வந்து தனது உந்துறுளியில் கொண்டு செண்று விட முன் வருகிறார்... அந்த போராளிக்கும் அவர் அடிக்கடி காணும் பழகிய முகம் தான்... அனேகமான தமிழர்களின் கட்டுப்பாட்டு பிரதேசங்களின் நடக்கும் வழக்கமான நிகள்வு தான் இது... இல்லை அண்ணை பறவாய் இல்லை பக்கம் தானே நான் நடந்து போகின்றேன்... சாச்சா எனக்கு ஒரு கஸ்ரமும் இல்லை நீங்கள் ஏறுங்கோ தம்பி.. நான் போற வளிதான்... வேற வளி இல்லாமல் அந்த போராளியும் உந்துறுளியில் ஏறிக்கொள்கிறார்... தம்பி நீங்கள் எங்களுக்காக எவ்வளவு கஸ்ரப்படுகிறீயள் உங்களுக்காக இது கூட செய்ய இல்லை எண்டால் தமிழனாக இருக்…
-
- 5 replies
- 1.5k views
-
-
அன்றுதான் அண்ணா வீட்டில் இருந்து எங்கள் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தேன் வழியில் செல்லும் பேருந்து நிறுத்தப்பட்டது எல்லோரையும் சோதனையிட்டார்கள் நானும் கொஞ்சம் கறுப்பாக இருப்பதால் என்னையும் கீழ் இறக்கு சோதனையிட்டார்கள் நீ மட்டக்களப்பை சேர்ந்தவன் உனக்கு என்னடா இங்கு வேலை என்று கேட்டு கேட்டு விசாரித்தார்கள் நானும் என் அண்ணனை பார்க்கதான் திருகோணமலை வந்திருக்கிறேன் என்று சொன்னேன் வாடா உன்னை விசாரிக்க வேணும் என்று சொல்லி முகாமுக்குள் கூட்டி சென்றனர் .அங்கு சென்ற எனக்கு கை கால்கள் எல்லாம் உதறியது .யாரோ ஒருவர் முன்னால் நான் நிறுத்தப்பட்டேன் அவருக்கு கண்கள் தெரிய முகங்கள் மறைக்கப்பட்டிருந்தது. என்னை முன் நிறுத்தி இவனா என்றார்கள் அப்போது எனக்கு ஒன்றும் புரியவில்லை அண்ணனுக்…
-
- 22 replies
- 4.7k views
- 1 follower
-
-
நாட்டுக்கட்டை நாக்கமுத்து கரும்பு ஜோரா விளைஞ்சதில கையில கொஞ்சம் காசுகிடக்குது. வீட்டுக்கு ஒரு பிரிஜ்சுப் பெட்டி வாங்கினால் காத்தாயி குளிர்ந்துவிடுவாள் என்ற ஆசையில நாக்கமுத்து ரங்குப்பெட்டியில மடிச்சு வச்சிருந்த கரை வேட்டியையும் தோள்ள தலைவர் எம்.ஜீ.ஆர் படம்போட்ட துண்டையும் எடுத்துப் போட்டுக்கொண்டு பட்டணத்துக்கு பஸ் பிடித்துப் போய்ச் சேர்ந்தார். அங்கை இங்கை தேடி ஒருவழியா பெரியதொரு எலக்றிக்கல் சாமான் விற்பனை செய்யும் கடையைக் கண்டுபிடித்து எம்மாம் பெரிய கடை என முணுமுணுத்தக்கொண்டு கதவைத் திறந்துகொண்டு உள்ளே போனார். வெளியில சுட்டு எரிக்கிற வெய்யிலுக்குக் கடை ஜில்லென்று குளிரா இருக்கிறது. கடையையே இம்மாம் பெரிய பிரிஜ்ஜிற்கை வச்சிரு…
-
- 7 replies
- 3.5k views
-
-
-
விடுமுறை நாளும் அதுவுமா பொழுதே போகாதாம் எதாவது படிக்கலாம் என்ற எண்ணத்தில அலுமாரியிலை இருந்த புத்தகங்களை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தன். ஏதோ ஆளரவம் கேட்குதென்று மெல்லத் திரும்பினால் என்னகாணும் கொஞ்சமென்றாலும் பொறுப்பில்லாமல் வாசக்கதவை ஆவென்று திறந்துவிட்டிட்டிருக்கிறீர
-
- 2 replies
- 859 views
-
-
கடைசிக்கடிதமும் காயாத கண்ணீரும். அவன் இருக்கிறானா ? எங்கே….? வதைமுகாமிலா அல்லது வவுனியா முகாமிலா பத்தாயிரத்துக்கும் மேல் சரண்புகுந்த தோழ தோழியருள் அவனும் தப்பியிருக்கிறானா ? அக்கா அக்கா என அவன் ஸ்கைபியில் கூப்பிடும் குரலும் மறைந்து…ஸ்கைபியில் அவன் பெயர் இப்போது சிவப்பாகிக் கிடக்கிறது…. ஏதோ எனது வீட்டில் என்கூடப்பிறந்த ஓர் இரத்த உறவு போல அவன் என்னுடன் வாழ்ந்து கொண்டிருந்தவன். தனக்குள்ளான துயரங்களை வெற்றிகளையென எல்லாவற்றையும் கடிதமெழுதி இளைப்பாறிக்கொள்ள “அன்பின் அக்கா” என்று ஆரம்பித்து அனைத்தையும் எழுதியனுப்புவான். எத்தனையோ தோழதோழியரின் எழுத்துக்கள் ஞாபகங்கள் போல இவனும் எனக்கு எழுதிய கடிதங்கள் பேசிய வார்த்தைகளென இவன் ஞாபகமாய் ஏராளம் நினைவுகள்…… யார…
-
- 4 replies
- 2.5k views
-
-
பாதை தெரியாத சுவடுகள். ............ புத்தமதத்தை மிகவும் கண்ணியமாககடைபிடிக்கும் லங்காபுரியின் கிழக்கு மாகாண வைத்ய சாலை ஒன்றில் பாக்கியம் ...இரு கால்களும் இழந்த தன் கணவனை பராமரிக்கும் பணியில் ஈடு பட்டிருந்தாள். வெளியில் கையிழந்த ...ஒரு கால் இழந்த ....சிறுவர்கள் சிறு விளையாடு முயாற்சியில் ஈடு பட்டு இருந்தார்கள். பாக்கியம் அறுபதுவயதின் ஆரம்பத்தில் இருப்பவள். கணவன் ஒரு தொண்டு நிறுவனத்தில் வேலைபர்த்துகொண்டிருந்த போது ...அண்மையில் வன்னியில் நடைபெற்ற இன அழிப்பின் இரு கால்களையும் இழந்து ..கப்பல் மூலம் திருமலைக்கு அனுப்பபட்டிருந்தான் .அவனும் ...இளைப்பாறும் வயது ..அவர்களது பிள்ளைகள் நேரத்துடன். வெளி நாடு ஒன்றில் அகதி கோரிக்கையில் ...சென்று இருந்தனர்.. .பாக்கியம் என்னை ஏன் …
-
- 9 replies
- 1.4k views
-
-
கலியாண ஆசை எனக்கு கலியாண ஆசை வந்துவிட்டது. என்ன செய்வது? யாரிடம் போய் இதைச் சொல்வது? எப்படி பெண் தேடுவது என்று யோசிச்சுக் கொண்டிருந்த பொழுதுகளில், ஒருமுறை ஈஸ்ட்ஹாம் தமிழ் கடையில் சாமான் வாங்க சென்றிருந்த சமயம் ஒரு பெரியவர் கேட்டார். தம்பி நீர் உந்த பெற்றேல் ஷட் ல் வேலை செய்யிற ரூபன் தானே எண்டார். ஓம் ஓம் என்றேன். ஆளே சுத்தமா மாறிப் போயிட்டிர் சக்கை பிளாக்காய் கணக்குக்கு உடம்பை வளர்த்து விட்டிருக்கு என்று சொன்னவர் இப்படிப்போனா எங்கே எப்ப கலியாணம் நடக்கிறது என்றபடியே நகர்ந்தார். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. அந்தப் பெரியவர் மீது கோபம் கோபமாய் வந்தது. Punching bag ல் என் ஆத்திரம் தீருமட்டும அடிக்கனும் போல இருந்தது. சும்மா சொல…
-
- 37 replies
- 4.8k views
-
-
சயனைட்டைச் சாப்பிட்டிட்டான். Visit My Website இரவு விழுங்கிய அமைதியில் எல்லா ஜீவனும் உறங்கிக் கிடக்க எங்கோ தொலைவாய் நாய்கள் ஊளையிடும் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது. இடக்கையைப் பிடரிக்கும் , வலக்கையை நெற்றியுலுமாய் வைத்துக் கொண்டு படுத்திருந்தான். இரவின் கருமைக்குள் உறங்கிப் போகாது அந்த அறையின் இருளைத்தன் ஒளிக்கைகளால் துடைத்தபடியிருந்த சிமினி விளக்கினைப் பூச்சிக் கூட்டமொன்று சுற்றிக் கொண்டிருந்தது. அவற்றில் சில பூச்சிகள் சிமினியின் கண்ணாடியில் மோதி எரிந்து விழுந்து கொண்டிருந்தன. அந்த ஒளி விளக்கின் மீதான தன்பார்வையைத் திருப்பி நேரெதிரே பார்த்தான். அகிலன் எந்த அரவமுமின்றிக் கிடந்தான். அவனுக்குப் பக்கத்தில் அவனது அம்மா முளித்தபடிதானிருந்தாள். என்ன தம்ப…
-
- 8 replies
- 3k views
-
-
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யன் மீண்டும் மரத்தின் மீதேறி அங்கு தொங்கும் உடலை வெட்டி வீழ்த்தி தோளின்மீது போட்டுக்கொண்டு மயானம் நோக்கி செல்லுகையில் அதனுள்ளிருந்த வேதாளம் எள்ளி நகைத்துப் பேசத்தொடங்கியது: "மன்னா! பேய்களும் உறங்கும் இந்த நள்ளிரவில் இந்த சுதந்திர தமிழீழத்தின் சுடுகாட்டில் இவ்வளவு சிரமப்படும் நீ இதனால் அடையப்போவதுதான் என்ன? அதோ,புலிக்கொடி பட்டொளி வீசிப்பறக்கும் நகரத்தின் சௌந்தர்யங்களை அனுபவிக்காமல் ஏன் இப்படி உன்னை நீயே வருத்திக்கொள்ளுகிறாய்? கடின முயற்சி உடையவர்கள், சில சமயம் நல்லதே நினைத்து செய்யும் செயல்களும் அவர்களறியாமல் எதிர்மறையான பலனை கொடுத்து முயற்சியில் பெரும் பின்னடைவை உண்டாக்கிவிடும். இந்த சுதந்திர தேசத்தின் நீண்ட நெடிய…
-
- 4 replies
- 3.1k views
-
-
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யன் மீண்டும் மரத்தின் மீதேறி அங்கு தொங்கும் உடலை வெட்டி வீழ்த்தி தோளின்மீது போட்டுக்கொண்டு மயானம் நோக்கி செல்லுகையில் அதனுள்ளிருந்து எள்ளி நகைத்த வேதாளம் பேசத்தொடங்கியது: "மன்னா! எல்லோரும் அமைதியாக உறங்கும் இந்த நள்ளிரவில், தமிழ் ஈழத்தின் இந்த சுடுகாட்டில் நீ எதற்காக இவ்வளவு சிரமப்படுகிறாய் என்று தெரியவில்லை. தளர்வில்லாத முயற்சி சமயங்களில் பின்னடைவை சந்தித்தாலும் அதை செய்பவர்களின் மன உறுதியினால் வேண்டிய பலனை கொடுத்தே தீரும். அதற்கு இந்த தமிழ் ஈழ தேசத்தின் வரலாறே சாட்சி. இந்த தேசத்தின் கதையை கூறுகிறேன் கேள். இந்த சுடுகாட்டின் அருகில் அமைந்துள்ள நகரமானது ஒரு காலத்தில் இந்திர லோகத்தைப்போல் பொலி…
-
- 3 replies
- 14.2k views
-
-
ஒட்டகத்தைத் தேடி நேரம் 15.20 பஸ் மெதுவாக ஓடிக்கொண்டிருந்தது. 15.30 மணிக்குச் சந்திக்கிறன் என்றனான். எப்படியாவது நேரத்திற்குப் போய்ச் சேரவேணுமென்றால், ஒவ்வொரு சந்தியிலையும் சிவப்பில நாலுதரம் நின்று சொதப்புது. குட்டிபோட்ட பு}னைபோல நான் படுகிற அந்தரம் புரியாமல் பஸ் ஆறித்தேறிப்போய் நின்றதும் நிற்காததுமாகப் பாய்ந்து குதித்து இறங்கியபடி நேரத்தைப் பார்த்தன். நேரம் 15.27 கொஞ்சம் எட்டி நடந்தால் எப்படியும் நேரத்திற்குப் போடுவன். ஒட்டகத்துக்கு முதல் போட்டனென்றால் நல்லது, இல்லையென்றால் அறுத்தே ஆளைக் கொண்டுபோடும் பாவி. நடை மெல்ல ஓட்டமாக மாறியது. நேரம் 15.33 மூச்சிரைத்தபடி சுற்றுமுற்றும் பார்த்தன் ஆளைக்காணவில்லை. மக்டொனால்ஸ் வாச…
-
- 3 replies
- 1.2k views
-
-
பூசைக்கு நேரம் போனதை உணர்ந்த கந்தர் ஓட்டமும் நடையுமாக வந்து காலை கழுவி தலையிலும் தண்ணிரை தெளித்து விட்டு அரோகரா என்று தலையில் கையை வைத்து கும்பிட்டபடியே பூசை மணி அடிக்க முதலே முருகனிடம் தனது பிரசனத்தை தெரியபடுத்தி பூசை முடியமட்டும் யாரையும் திரும்பி பார்க்காமல் முருகனுடன் இரண்டர கலந்து விட்டார்.ஜயர் வீபூதி சந்தனம் கொடுக்கும் போது தான் தனக்கு பக்கத்தில் நிற்பவர்களை ஒரு நோட்டம் விட்டார். தனிமையில் பேச்சு துணைக்கு யாரும் கிடைக்கவில்லை என்று பார்த்து கொண்டு நின்ற சுரேசிற்கு கந்தரை கண்டவுடன் அருகே சென்று என்ன அண்ணை எப்படி சுகம் ஏன் பூசைக்கு கொஞ்சம் "லேட்டா" வந்தனீங்க என்று கேட்டான்.மகள் வேலையால் வந்து கூட்டி கொண்டு வர நேரம் போயிட்டுதோ? சீ..சீ நான் அவளின்ட காரில ஏற ஏல…
-
- 12 replies
- 3.5k views
-
-
சிறுகுறிப்பு: அதென்ன இதுக்குமட்டும் தலைப்பில ஒட்டகம் இல்லாமலுக்கு நம்ம தலையின்ரை பெயரை இப்படியா இருட்டடிப்புச் செய்கிறது என்று ஒட்டகத்தார் ரசிகர் வட்டத்தில பலரும் அன்பாய் கடிந்துகொண்டதில் பெயரைமட்டும் மாற்றியிருக்கிறன் மற்றும்படி மத்தியஸ்தம் நடந்தது நடந்தபடி அப்படியேதான் இருக்கு. ... படிக்காதவை தொடர்ந்து படியுங்கோ. படிச்சவை கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கோ. ஒட்டகத்தைத் தேடிய காவல்துறை............உடன் ஒரு சில நாட்களில் சந்திக்கிறன். நாசமாப்போன நாணல் கயிறுவிடுறான் என்று திட்டுறது காதில விழுகிறது. இனியும் கதைச்சுக்கொண்டு நின்றால் வம்பாய்ப் போய்விடும். பிறகு சந்திப்பம்.............. பயத்தில் ஓட்டமுடன் நாணல் எனக்கும் ஒட்டகத்திற்கும் இடையில்.. …
-
- 2 replies
- 1.2k views
-
-
திசைமாறிய காதல் அவளுக்கும் அவனுக்கும் இடையில் மீண்டும் ஒரு சந்திப்பு நிகழும் என்று அவன் எதிர்பார்க்கவில்லைத்தான்.. அதுவும் இப்படி ஒரு கோலத்தில் .... பல காரணங்கள் சொல்லி என்னை தூக்கி எறிந்து விட்டு போனாலும் அவள் எண்ணியபடி எங்கோ வசதியாகத்தான் வாழ்ந்து கொண்டிருப்பாள் என்றுதான் அவன் எண்ணியிருந்தான் .அனால் இன்று ..... ஒட்டிய உடலும் காய்ந்த முகமும் ஆளுக்கு படிந்த ஒரு பழைய புடைவையும் ஒழுங்காக வாரப்படாத தலையும் திலகமில்லா நெற்றியும் ....... அவளை அடையாளம் காண்பதே குமாருக்கு கடினமானதாக இருந்தது . மஞ்சள் நிறமும் குழிவிழும் அழகிய கன்னமும் நீண்ட விழிகளும் நேர்த்தியான உடையும் அளவான ஒப்பனையும் ஒருங்கே இணைய ஒரு தேவதைபோல் துள்ளித்திரிந்த கௌரியா இது ..…
-
- 14 replies
- 3k views
-
-
அடேல் அம்மையாரின் சுத ந்திரை வேட்கை நூலை இந்த சுட்டியில் படிக்கலாம் http://noolaham.net/project/19/1809/1809.pdf http://noolaham.org/wiki/index.php/%E0%AE%...%AE%95%E0%AF%88
-
- 0 replies
- 1.3k views
-