Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. மனவலி யாத்திரை.....! - சுதந்திரா - அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும். அவனது குரல் என்னை அழைக்கிறது. விழிப்புலனில் சிக்காத முகம் ஆனால் அந்தக்குரல் மட்டும் தெளிவாகக் கேட்டது. திடுக்கிட்டு விழித்த எனக்கு அந்தக்குரல் சொன்ன சேதி ஞாபகத்தில் இல்லை. எழுந்து போய் விறாந்தை மின்குமிழைப்போட்டு அதன் ஒளியில் என் விழிக…

  2. சுதந்திரா என்ற பெயரை எங்கேயும் வாசிச்ச ஞாபகம் உங்களுக்கு வரலாம். அந்த சுதந்திரா என்ற பெயரில் எழுத்தில் நான்தான் உலாவியிருக்கிறேன். இப்போது சுதந்திரா என்ற பெயரில் எழுவதும் இல்லை. 2001 ஒரு முகமறியா வீரனின் ஞாபகமாக எழுதிய இக்கதை ஒரு பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த நிகழ்வை நினைவு கொள்ளு முகமாக இணைக்கிறேன். சுதந்திரா என்ற பெயரை முதலில் தாயகத்தில் வெளியாகிய ஈழநாதம் பத்திரிகையில் எழுதிய காலங்களில் பாவித்த புனைபெயர். 2002 தாயகப்பயண அனுபவப்பதிவினை எழுதிய லெப்.கேணல் அருணாண்ணைக்கு அனுப்பியிருந்தேன். அருணாண்ணா வாசிக்க அனுப்பிய கட்டுரை ஆனால் பத்திரிகையில் வெளிவரப்போவதாக ஈழநாதத்தில் விளம்பரம் வந்த போது கிடைத்த மகிழ்ச்சி இன்றைக்கும் மறக்க முடியாத ஞாபகம். அப்போது …

  3. மனித யந்திரம்-புதுமைப்பித்தன் புதுமைப்பித்தன் (மணிக்கொடி, 25-04-1937 ) 1 ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஒரு ஸ்டோர் குமாஸ்தா. அவர் உப்புப் புளி பற்று-வரவு கணக்கின் மூலமாகவும் படிக்கல்லின் மூலமாகவும் மனித வர்க்கத்தின் சோக நாடகங்களையும் மனித சித்தத்தின் விசித்திர ஓட்டங்களையும் அளந்தவர். அவருக்குச் சென்ற நாற்பத்தைந்து வருஷங்களாக அதே பாதை, அதே வீடு, அதே பலசரக்குக் கடையின் கமறல்தான் விதி. அதுவும் அந்தக் காலத்தில் அடக்கமான வெறும் மூலைத்தெரு ராமு கடையாகத்தான் இருந்தது. கடையும் பிள்ளையவர்களுடன் வளர்ந்தது. ஆனால் அதில் சுவாரஸ்யமென்னவெனில் வெறும் 'மீனாச்சி' ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையாகப் பரிணமித்தாலும் அவருக்கு அந்தப் பழையதுதான், அந்தக் காவியேறிய கம்பிக்கர…

    • 0 replies
    • 999 views
  4. மனிதர்களுடன் பேசுவது என்பது நினைப்பதைப் போன்று இலகுவானதன்று என்பதை இப்போது உணரக்கூடியதாகவிருக்கின்றது. உரையாடல் என்பது ஒரு பெரும் கலை. திரும்பிப் பார்க்கும் போது சில மனிதர்களுடனான எனது பேச்சுவார்த்தைகள் மனக்கசப்புகளுடன், பிரிவுகளுடன், கைகலப்புடன், எதிரி என்றான நிலைகளுடன் முடிவந்திருக்கின்றன. இப்போதெல்லாம் முன்பைப் போலல்லாது என் மனது கடந்து வந்த பாதைகளில் எங்கெங்கே தவறு விட்டேன், தவறுக்கான காரணம் என்ன, எப்படி அச் சிக்கலைத் தவிர்த்திருக்கலாம் என்று சிந்திக்கிறது. முன்பெல்லாம் பொதுவேலைகள், விளையாட்டுகள், சங்கங்கள், உன்று கூடல்கள் என்று ஓடித்திரிந்த காலங்களில் பல உரையாடல்களை நான் உரையாடலாகக் கொள்ளாமல் விவாதமாக - தர்க்கமாக மாற்றிக் கொண்டதனால் நட்புகளை மட்டுமல்லாமல் எ…

    • 4 replies
    • 899 views
  5. பற்பல வகைகளில் குணாதிசயம், பழக்க வழக்கங்களுடைய மனிதர்களை தினந்தோறும் நாம் பார்க்கிறோம். பொதுவில், மனிதர்களுக்கு மூன்று விதமான முகங்கள் உள்ளதாக கடவுள் கூறுகிறார். அவரது கதையைக் கேட்போமா?ஒரு நாள் கடவுள் தெருவில் சென்று கொண்டிருந்தார். அங்கே ஒரு மனிதன் கட்டிட வேலை செய்து கொண்டிருந்ததைக் கண்டார். அவனருகே சென்று, “என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார். அவன், “பார்த்தால் தெரியவில்லையா? ஒரு செங்கல் மேல் இன்னொரு செங்கல் வைத்து அடுக்குகிறேன்” என்றான். தெருவில் மேலும் சிறிது தூரம் நடந்து சென்ற கடவுள் அதே வேலையைச் செய்யும் மற்றொரு மனிதனைக் கண்டார். அவனிடமும் அதே கேள்வியைக் கேட்டார். அதற்கு அவன் “நான் ஒரு சுவர் எழுப்புகிறேன்” என்றான். மேலும் சிறிது தூரம் சென்ற அவர் …

  6. மனிதனும்... மனிதமும்! பச்சையப்பனிடம் பேசிவிட்டு திரும்பிய கணத்திலிருந்து மனதில் பாரம், நடையில் துவளல். எனக்கு வயது 62. அரசாங்க உத்தியோகத்திலிருந்து ஓய்வு. எனது ஊர் கடற்கரையை ஒட்டிய இடம். எனது வீட்டிற்கும் கடலுக்கும் துல்லியமாக 3 கி.மீ. எனக்கு எந்தவித நோய், தொந்தி, தொப்பை எதுவும் கிடையாது. பெற்ற பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் முடித்து விட்டு ஓய்வூதியத்தில் நிம்மதியான வாழ்க்கை. நான் தினம் காலை 4.45 க்கு எழுந்து முகச்சவரம் செய்து, பல் துலக்கி, கழிப்பறை இயற்கை உபாதை வேலையை முடித்து விட்டு சரியாய் 5.20 மணிக்கு பொல பொலவென்று விடியும் பொழுதில் என் தெரு திருப்பத்தில் இருக்கும் சாலையில் கிழக்குப் பக்கம் த…

  7. Started by அபராஜிதன்,

    மனிதம் ரிஷபன் வாசல் கதவு திறக்கும் சப்தம் கேட்டது. சுப்ரமணியாகத்தான் இருக்கும். சொன்ன நேரத்திற்கு வந்து விட்டான். 'ஞாயிறு காலை பத்து மணிக்கு' என்றால் மிகச் சரியாக ஹால் கடிகாரம் சங்கீதம் எழுப்புகிற நேரத்தில். "வாடா.. கன் டைம். நீ வரலேன்னா என்ன செய்யறதுன்னு டென்ஷன்ல இருந்தேன்" என்றேன். மிக நிதானமாய் அரசு முறை பயணத்தில் வந்தவன் மாதிரி நடந்து சுற்றுப் பிரதேசங்களைப் பார்வையால் அலசினான். "கேசட் கொண்டு வந்தியா" குரல் என்னையும் மீறி பரபரத்தது. வீட்டில் என்னையும் இப்போது வந்த சுப்ரமணியையும் தவிர வேறு யாரும் இல்லை. ஊஹூம். இன்னொரு நபரும் இருக்கிறார். வீட்டுக்குள் இல்லை. வெளியில்.. "பிளாஸ்க்குல காப்பியா" என்றான் மேஜை மீதிருந்ததைப் பார்…

  8. 8.8.2015 காலை 6.30 மணியளவில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், கிராமத்தில் இருந்து வந்திருக்கும் ஒரு தாயும் மகளும், அண்ணா அரங்கத்திற்கு வழிகேட்டபடி நின்றுள்ளனர். 8.30 மணிக்கு துவங்க இருக்கும் பி.எஸ்.சி அக்ரிகல்ச்சர் படிப்பிற்கான கவுன்சிலிங்கில்கலந்துகொள்வதற்காக, திருச்சிக்கு அருகேயுள்ள சிறு கிராமத்தில் இருந்து வந்திருப்பதாக கூறியுள்ளனர். ஆனால் விவசாயக் கூலியான படிக்காத அந்த தாய்க்கும், அந்த சிறுமிக்கும், அந்த படிப்பிற்கான கலந்தாய்வு கோயம்புத்தூரில் நடக்கிறது என்பது தெரிந்திருக்கவில்லை. ஏதோ தவறான தகவலின்படி சென்னைக்கு வந்துவிட்டனர். காலையில் அங்கே நடைப்பயிற்சி செல்பவர்கள் சிலர் இந்த விவரங்களை கேட்டறிந்து, கலந்தாய்வு நடப்பது கோயம்புத்தூரில் என்ற விவரத்தைக் கூறியிருக்கி…

  9. Started by dakshina,

    மனிதாபிமானம் காலை 6.30, ராஜு அவசர அவசரமாக குளித்து விட்டு பூஜை அறைக்கு வந்தான், சாமியை கும்பிட்டுக் கொண்டே “சுக்கலாம் பரதரம் விஷ்ணும் . . . . அம்மா டையம் ஆச்சு சீக்கிரம் டீபன் எடுத்து வை . . .சசிவர்ணம் சதுர்புஜம் . . .” “டேய் சாமி ரூம்ல சாமியை பத்தி மட்டும் நன” என்றாள் அம்மா புன்சிரிப்புடன். வீட்டு ஹாலில் தூக்க கலக்கத்தில் உக்கார்ந்து இருந்த சொந்தகாரர்கள் அனைவரும் சிரித்தனர். ராஜுவும் பொய் கோபத்தோடு “ஏன் சொல்லமாட்டிங்க இன்னைக்கு ஆபிஸ் வேலையா பாண்டி போணும், காலை சீக்கிரம் எழுப்ப சொன்னா எழுப்பாம நக்கல் வேற” என்று சாப்பிட டைய்னிங் டேபிலில் உக்கார்ந்தான். அதுவரை அமைதியாக இருந்த ராஜுவின் தங்கை மதி வந்து “இங்க பார்டா” என்று அவள் தலையை ராஜுவிடம் காட…

    • 1 reply
    • 1.1k views
  10. மனிதாபிமானம்: ஒரு நிமிடக் கதை “சிவா எங்கே இருக்கீங்க?” கேட்டவர் பெரிய தொழிலதிபர் மாணிக்கம். “வீட்லதான் சார்” “நான் உங்க ஆபீஸ் வாசலில்தான் வெயிட் பண்றேன். சீக்கிரம் வாங்க. உங்ககிட்டே ஒரு முக்கியமான வேலையை ஒப்படைக்கணும். அதுக்கு அட்வான்ஸா அம்பதாயிரம் ரூபாயை இப்ப வந்து வாங்கிக்கங்க.” “இதோ வர்றேன் சார்.” ‘அடடா.. நாம பணக்கஷ்டத்தில் இருக்கோம்னு கடவுள் நமக்காக ஒரு ஆளை உதவி செய்ய அனுப்பியிருக்கார்’ என்று நினைத்தபடி வண்டியை எடுத்தான் சிவா. வரும் வழியில் ஓரிடத்தில் கசகசவென்று கூட்டம். சிவா தன் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு எட்டிப்பார்த்தான். அங்கே பதினைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பையன் அடிபட்டு ரத்த வெள்ளத்தி…

  11. மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்." ஒரு கிராமத்தில் ராமசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்.. அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது. வாரம் ஒரு முறை முருங்கை காய்களை பறித்து, பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டு .... ஒன்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரை நடந்து சென்றே... ரெகுலராக ஒரு மளிகை கடையில் விற்றுவிட்டு வருவது வழக்கம் முருங்கை காயை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக அரிசி பருப்பு சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார்! ராமசாமி கொண்டுவரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம்! இதை பய…

    • 1 reply
    • 1.5k views
  12. Started by நவீனன்,

    மனைவி சூரியன் இன்னும் விழிக்கவில்லை. இன்னும் சிறிது நேரம் தூங்கிவிட்டு எழுந்திருக்கலாம் என நினைத்து மேகப் போர்வைக்குள் நுழைந்தது சூரியன். கட்டிலில் படுத்திருந்த நான் தலைமாட்டில் வைத்திருந்த செல்போனை தட்டி, மணி பார்த்தேன். 5 ஆக 5 நிமிடங்கள் இருந்தன. பக்கத்தில் படுத்திருந்த மனைவி எப்போதோ எழுந்து போயிருந்தாள். தனித்தனி போர்வைக்குள் படுத்திருந்த பிள்ளைகள் இரண்டும் இப்போது ஒரே போர்வைக்குள் படுத்திருந்தனர். அண்ணனின் வயிற்றின் மீது காலைப் போட்டு வசதியாக படுத்திருந்தாள் எனது மகள். இதெல்லாம் காலை நேரத்து ஆச்சரியங்கள். காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரைக்கும் சண்டை போட்டுக் கொள்ளும் இரண்டும் இப்போது அமைதியா…

  13. கணவன் தன் மனைவியிடம் ஒருமுறை ₹250 கடன் வாங்கினான். சில நாட்கள் கழித்து மறுபடியும் இன்னுமொரு 250 ரூபாய் வாங்கிக்கொண்டான் . சிலநாட்கள் சென்றபின் தன் கணவனின் மணிப்பர்ஸில் பணம் இருப்பதைப் பார்த்த மனைவி தான் கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டாள். . மனைவியிடம்..நான் உனக்கு எவ்வளவு பணம் தரவேண்டும் என்று எதார்த்தமாகக் கேட்டான். மனைவி சொன்னாள் ரூபாய் 4100 தரவேண்டும் என்று...... கணவனின் பல மன்றாடுதலுக்குப்பிறகு மனைவி கொடுத்த கணக்கு வழிமுறை . 1). *Rs. 2 5 0* 2). *Rs. 2 5 0* ------------------ *Rs. 4 10 0* ------------------ ஆக மொத்தம் ர…

  14. மனைவியின் காதலனை கொன்ற கணவன்! | நானாவதி கொலை வழக்கு | ஒரு கொலைக் குற்றவாளிக்கு ஏன் இவ்வளவு மரியாதை தரப்பட்டது? இங்கிலாந்து செல்லும்போது சில்வியா என்னும் பெண்ணை காதலித்து கல்யாணம் செய்துகொண்டார் நானாவதி. அதன் பின் அகூஜா மற்றும் உறவினர்கள் சில்வியாவுடன் நெருங்கி பழக ஆரம்பித்தனர். பின்னர் அது காதலாக மாறியது தன் காதல் மனைவியின் இரண்டாவது காதலை, அதுவும் அவள் வாயாலேயே கேட்டதும் நொந்துபோன நானாவதி. இறுதியில் அகூஜாவிடம் தன் மனைவியை கல்யாணம் செய்து கொள்ளுமாறு கேட்டான் அதற்க்கு மாட்டேன் சொன்ன அகூஜாவை சுட்டு கொன்றான்.

  15. மனைவியின் நண்பன்! இரவின் ஆழ்ந்த அமைதியில், 'டிங்'கென, ஒலித்த, 'வாட்ஸ் -அப்' சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள், நீரஜா. படுக்கையருகில் இருந்த மேஜையிலிருந்து மொபைலை எடுத்துப் பார்த்த போது, இரண்டு, 'மெசேஜ்கள்' பச்சை வட்டத்தில் ஒளிர்ந்தது. 'வாட்ஸ் - அப்' மீது விரலை அழுத்தினாள்; விக்ரம் தான் அனுப்பியிருந்தான். 'இவன் எதற்கு இந்த இரவு நேரத்தில், 'மெசேஜ்' அனுப்புகிறான்...' என்று நினைத்தபடி, 'மெசேஜை' பார்த்தாள். 'ஹாய்... துாங்கிட்டயா; பேசலாமா...' என்று அனுப்பியிருந்தான். துபாயிலிருந்து பேசுகிறான்; இங்கு இரவு, 10:30 மணி என்றால், அங்கு, இரவு, ௯:00 தான். 'ஓகே...' என்று பதில் அனுப்பினாள். உடனே, 'வாட்ஸ் - அப்' கால் வந்தது. ''ஹாய் நீரஜா... ஹவ் ஆர் யு?'' என்றான…

    • 1 reply
    • 6.1k views
  16. மனோரஞ்சிதம்! வ.ந.கிரிதரன் - புகலிட அனுபவ சிறுகதை மனோரஞ்சிதம்! நான் மனோரஞ்சிதத்தை மீண்டுமொரு முறை சந்திப்பேனென்று எண்ணியிருக்கவேயில்லை. அதுவும் இவ்விதம் எதிர்பாராமல். இருபது வருடங்களாவதிருக்கும் அவளைக் கடையாகச் சந்தித்து..முன்பை விட இன்னும் தளதளவென்று பூசி மெழுகி மின்னிக் கொண்டிருந்தாள். அழகென்றால் அப்படியொரு அழகு. சங்ககாலக் கவிஞர்கள் வர்ணிப்பதைப் போல் பணை, வன, தட, பருத்த, அகன்ற போன்ற வார்த்தைகளைத் தாராளமாகவே பாவிக்கலாம் அவளை வர்ணிப்பதற்கு. அவ்விதமானதொரு உருவ அமைப்பு. அப்பொழுது நான் மிகவும் கட்டுப்பெட்டி என்று சொல்வார்களே அவ்விதமானதொரு குண அமைப்பு எனக்கு. என் வாழ்வில் எப்பொழுதுமேயே நிதானமானதொரு வளர்ச்சி தான் ஏற்பட்டு வந்திருக்கின்றது. நிதானமென்றால் அப்படியொரு நி…

  17. [size=3] ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.[/size] [size=3] அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.[/size][size=3] [/size][size=3] இந்தக் கடுமையான சட்டத்துக்கு ப…

    • 0 replies
    • 988 views
  18. மன்னவா மாலை கொடு வேலை முடிந்து களைப்புடன் வீடு வந்து சேர்ந்த காயத்திரியை ஓடிவந்து கட்டிக்கொண்ட பிரியா “அம்மா நாங்க வெளியில போவமா?” என்று கேட்டகவும் தன் ஒரே மகள் பிரியாவை வாஞ்சையுடன் அணைத்தபடி “நான் குளித்து உடுப்பு மாத்திப் போட்டு வாறன் இருவருமாகக் கடைக்குப் போகலாம்” என்ற காயத்திரியின் பதிலில் திருப்திப் பட்டவளாக குதூகலமாக அறைக்குள் ஓடிய மகளை பெருமூச்சுடன் பார்த்தபடி ஒருநிமிடம் நின்றவள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். சில வினாடிக்குள் அவள் மனதிலும் சில சலனங்கள். “என் பிரியாவை விட்டு நான் தூரமாகிவிடுவேனோ?” “சீ அப்படியெல்லாம் நடக்காது” இந்த ஜந்து வருடமாக பிரியாதான் என் வாழ்வில் ஒரேயொரு பற்றுக்கோடாக இருக்கிறாள். சிந்தனையுடன் குளியலறைக்குள் நுழைந்தவள் ஒரு பாட்டை முணும…

  19. மன்னிப்புக் கேட்பவர்கள்-மிலன் குந்தேரா (Milan kundera) ஜூன் மாத காலையில், கிழக்கில் கிளம்பிய சூரியனைப் போல, மெதுவாக பாரீஸ் வீதியில் சென்று கொண்டிருந்தான் அலயன். எதிர்ப்பட்ட அனைத்து இளம் பெண்களும் குட்டையாக அணியப்பட்ட மேல் சட்டைக்கும், இறக்கமாக அணியப்பட்ட கால் சட்டைக்கும் இடையில் மையமாக, விகாசமாகத் தொப்புள் தெரியுமாறு உடுத்தி இருந்ததைக் கவனித்தவாறே நடந்தான். அவனைப் பொறுத்த வரை, பெண்கள் மீதான கவர்ச்சியின் மையல் தொடை, மார்பு, பின்புறங்களிலிருந்து ஏகமாக விலகி, இந்த வட்ட வடிவ மையப் புள்ளியில் தேங்கி விட்டதைப் போல, அந்த காட்சிகளால் ஈர்க்கப்பட்டு, வசீகரிக்கப்பட்டு, சலனத்திற்கு உள்ளாகி இருந்தான். தொப்புளின் மீதான இந்த திடீர் மையல், பெண்மையின் கவர்ச்சி சார்ந்து புதி…

  20. மம்முடு-கோமகன் பிரான்ஸ் இன்போ செய்தி : செவ்ரன் நகரில் போதைப்பொருள் தேடுதல் வேட்டையில் இரண்டு கிலோ பிரவுன் சுகர் போதைவஸ்து வில்லைகள் கைப்பற்றப்பட்ட வேளையில் நடந்த மோதலில் ஒரு கறுப்பினத்தவர் உயிரிழந்ததாக செவ்ரன் மாநகரக் காவல்துறை தெரிவிப்பு. 07 மார்கழி 2018 000000000000000000000 கடந்த இரவு அம்மா வாட்ஸ் அப்-இல் எனது கலியாணத்துக்காக அபிப்பிராயம் சொல்லும்படி அனுப்பியிருந்த அந்த அப்பாவிப் பெண்ணை மறுப்புச் சொல்லி செய்தி அனுப்பினேன். அம்மா எனக்காகப் பார்த்த 10-ஆவது பெண் தான் இவள் பெயர் மது. நான் எதிர்பார்த்ததை விட நல்ல வடிவாகத்தான் மது இருந்தாள்.ஆனாலும் எனக்கு ஏனோ அவள் மீது பிடித்தம் வரவில்லை. அப்பாவின் மறைவுக்குப் பின்னர் அம்மாவுக்கு நல்லது கெட்ட…

  21. மம்மூதன் - சிறுகதை வரவணை செந்தில், ஓவியங்கள்: ஸ்யாம் பந்தடித் தெருக்கள் சந்திக்கும் இடத்தில் வெளிர் சந்தன நூற்பாவுகளைத் தகதகக்கும் பச்சை நிறச் சாயத்தில் முக்கி எடுத்துக்கொண்டிருந்தனர் பட்டு நூல்காரர்கள். ஒரு கையில் வேல்கம்பும், மறுகையில் சோழவந்தான் கொழுந்து வெற்றிலையும், கதுப்பில் அடக்கிய பாக்குமாக அவர்களிடம் சுண்ணாம்பு கேட்டுக்கொண்டிருந்தார் தலையாரி பொன்னன். ``ஏப்பா ஏய்... வடக்க இருந்துவந்த தலையாரியா, நாயக்கர் கூப்புடுறாரு...’’ என்று திடுதிடுவென ஓடிவந்து காவல்காரன் அழைக்கவும், பாக்கைத் துப்பிவிட்டு, வேல் முனையைப் பின்பக்கமாகத் திருப்பிக் கையிடுக்கில் வைத்துக்கொண்டு, குனிந்து பவ்யமாக மஹாலுக்குள் ஓட்டமும் நடையுமாகத் தலையாரி நுழைந்தார்.…

  22. மயக்கும் எழுத்துக்காரர் வண்ணதாசன் எழுதிய அகம் புறம் - ஒரு பகுதி உங்களுக்காக! “வாழ்வில் எல்லாம் முக்கியமானவை. எல்லோரும் முக்கியமானவர்கள். இந்த எல்லாவற்றையும் எல்லோரையும் விட என் எழுத்து அப்படியொன்றும் அதிக முக்கியத்துவம் உடையது அல்ல என்பதை உணர்ந்தே இவர்களின் மத்தியிலும் இவற்றின் மத்தியிலும் நான் இருக்கிறேன்...” - இது தான் வண்ணதாசன். எழுத்தை கிரீடமாக்கிக் கொண்டு சிம்மாசனத்தில் அமராத இனிய ஆத்மா. அணுகுவதற்கு எளிய மனிதர். இளம் படைப்பாளிகளை உற்சாகமூட்டி கைதூக்கி விடும் வெள்ளந்திப் படைப்பாளி. மனதை மென்சிறகால் வருடும் உன்னத எழுத்து அவருக்கு வாய்த்த வரம். ஆனந்த விகடன் இதழில் 7.11.2007 முதல் 4.6.2008 வரை ”அகம் புறம்” என்ற தலைப்பில் வண்ணதாசன் எழுதிய அனுப…

  23. மரச் சிற்பம் ஷோபாசக்தி பாரிஸ் நகரத்தில் இந்த வருடம் நிகழவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளைக் குறித்துத் தினப் பத்திரிகையிலிருந்த தலைப்புச் செய்தியை மீறியும் எடுத்த எடுப்பிலேயே இன்னொரு செய்தி எனது கண்களை இழுத்தது. கண்கள் அந்தச் செய்தியை வாசிக்கும்போது, எனக்குக் கிட்டத்தட்டச் சித்தம் கலங்கிவிட்டது என்றே சொல்லலாம். நான் அந்தச் செய்தியை நம்ப முடியாமல் மூன்று தடவைகள் திரும்பத் திரும்ப வாசித்தேன். பிரான்ஸில் இப்போது படு வேகமாக முன்னணிக்கு வந்துகொண்டிருக்கும் தேசியவாதக் கட்சியொன்றின் தலைவர்களில் ஒருவர் இவ்வாறு சொல்லியிருக்கிறார்: “எமது தந்தையர் நாடு இப்போது வாழ்வதற்கு அபாயகரமான நிலமாகிவிட்டது. குற்றக் குழுக்களதும் கலகக்காரர்களதும் கரிய பாதங்களுக்குக் கீழே இந்தத் த…

      • Thanks
      • Like
    • 9 replies
    • 1.6k views
  24. மரண அறிவித்தலும் மணமகன் தேவையும் சிறுகதை- மறைமுதல்வன் சாவுகள்! எத்தனை வகையான சாவுகள்? மனிதர் எப்படி எப்படியெல்லாம் சாகிறார்கள்! முன்பெல்லாம் சாவென்றவுடன் ஞாபகம் வருவன விபத்துகள்தாம். வீதியில் கார் விபத்தில் ஒருவர் அகப்பட்டுச் செத்துப் போனால் ஐயோ பாவமென்றிருக்கும். யாராவது யாரையாவது கொலை செய்து விட்டதாகக் கேள்விப்பட்டால்,மனதில் 'திக்'கென்றிருக்கும். இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்று மனம் அதிரும். லட்சுமிகாந்தன் என்பவனின் கொலைபற்றித்தான் நான் முதலில் கேள்விப்பட்டது. அதுவும் கொஞ்சம் அரசல் புரசலாக. எனது பெரியப்பா யாருடனோ கதைத்துக் கொண்டிருந்த போது காதில் விழுந்தது. அவருக்கு பாகவதருடன் அறிமுகம் இருந்தத…

    • 0 replies
    • 841 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.