கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3075 topics in this forum
-
எப்படியும் வாழலாம்! சுஜாதா உங்களுக்கு வயசு எத்தனை?” ”செரியாச் சொல்ல முடியாதுய்யா!” ”உங்க அப்பாஅம்மா?” ”அவங்கதான் இல்லியே… பூட்டாங்களே… இருந்தாங்கன்னா விசாரிச்சு எத்தனை வயசுன்னு சொல்லலாம்.” ”உங்க சொந்த ஊரு?” ”கோலாருக்குப் பக்கத்துல கொடுமூர்னு ஒரு கிராமம்.” ”த…
-
- 0 replies
- 1.5k views
-
-
துர்சலை - கணேசகுமாரன் ஓவியங்கள் : செந்தில் இரவுக் காற்றுக்கென்று தனி இசை உண்டு. அது தடாக நீரின் சிகை கலைத்து விளையாடிக்கொண்டிருந்தது, விளையாட்டுப் பிள்ளையின் குதூகலத்துடன். காற்றின் மெல்லிய வருடலில் நீரில் மிதந்துகொண்டிருந்த முழுமதி நெளிந்து நெளிந்து தடாகப் படியைத்தொட்டு மீண்டு கொண்டிருந்தது. ‘‘உங்கள் கண்களில் தெரியும் சோர்வினைப் பார்த்தால், இரவுறக்கம் இன்று தள்ளிப்போகும்போல் தெரிகிறது துர்சலை’’ என்றாள் மாதங்கி. துர்சலை வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்திருந்தாள். ஒரு முழுநீளத் துகில்; அவ்வளவுதான். அதைத்தான் உடல் முழுவதும் சுற்றியிருந்தாள். தான் அமர்ந்திருந்த இடம்வரை தன்னிருப்பைப் படரவிட்டிருந்த நிலவொளியைத் தன் வெண்சங்கு நிறப் பாதத்தால் நிரடியபடி சொன…
-
- 0 replies
- 999 views
-
-
கப்பல்காரன் வீடும் வக்சலாவும் ... யாழ்பாணத்தில எங்களின் வீடுக்கு கொஞ்சம் தள்ளி, எங்கள் வீதியின் முடிவில், கப்பல்காரன் வீடு இருந்தது! அந்த வீட்டில் என்னோட மிக சிறிய வயசில், அரச மரக்காலையில் ஸ்டோர் கீப்பர் வேலை செய்த கனகசுந்தரமும் ,அவரின் மனைவி ஸ்டோர் கீப்பர் மாமியும், அவர்களின் ஒரே ஒரு அழகு மகள் வக்சலாவும்,ஊருக்கும் இடைஞ்சல் இல்லாமல் , ஒருவருக்கும் இடைஞ்சல் இல்லாமல் அதில வாழ்ந்ததால " ஸ்டோர் கீப்பர் " வீடு எண்டுதான் ஆரம்பத்தில் ஊருக்குள்ள சொல்லுவார்கள் ! அது எப்படி பின்னாட்களில் " கப்பல்காரன் வீடு " எண்டு மாறியது எண்டு சொல்லுறதுக்கு காரணம் யாழ்பாணத்தில 80 களில், எங்கோ அரபிக் கடலிலும் ,அத்திலாந்திக் கடலிலும் ஓடிய கப்ப…
-
- 0 replies
- 2k views
-
-
வேட்டையில் கிடைத்தது வேறொன்று! கோடையின் வெம்மையில் தகித்த இரவும், உளைச்சலில் தவித்த மனமும் அவனை ஒரு வழியாக்கியிருந்தன. ''இன்னிக்கு ரெண்டு இடம் போகணும்ன்னு சொன்னேல்ல...'' என்றபடி காபி கோப்பையை நீட்டினாள், அம்மா. அமைதியாக அதை வாங்கிக் கொண்டான். அப்பா குளித்து முடித்து, தினசரியை வாசித்துக் கொண்டிருப்பதை பார்த்தான். அவன் பார்வையின் குறிப்பை அறிந்து, ''சுமதி வரன் விஷயமா, அயனாவரம் வரை போயிட்டு அப்படியே வேலைக்கு போறேன்னு சொன்னாரு உங்கப்பா...'' என்றாள். ''வரனா... நம்ம சுமதிக்கா... அதுக்குள்ள என்னம்மா...'' என்ற…
-
- 0 replies
- 1.6k views
-
-
சிவாவும்,கண்ணணும் பள்ளி தோழர்கள் சிறுவயதில் இருந்து ஒன்றாக படித்தார்கள் பெற்றோரும் குடும்ப நண்பர்கள் இதனால் அவர்களின் நட்பிலும் பிணைப்பி அதிகமாக இருந்தது விளையாட்டு,டியூசன் போன்றவற்றிற்கு போகும் போது ஒன்றாக செல்வார்கள். க.போ.த உயர்தரம் இருவரும் கணிதபிரிவில் படிப்பதிற்காக முடிவு செய்தனர் வழமையான அந்த வயதில் இளைஞர்களிற்கு ஏற்படும் காதல்,கள்ள தம் ,பனைமரத்து உற்சாக பானம் போன்ற பழக்கங்கள் ஏனைய நண்பர்களுடன் சேர்ந்து பழகி கொண்டார்கள்,ஆனால் இருவரும் படிப்பில் கவனம் செலுத்தினார்கள்,க.போ.த பரிட்சைகள் முடிந்தவுடன் ஏதோ பயங்கர சாதனை ஒன்றை முடித்த நினைப்பில் அதிகமாக ஊரை சுற்றினாம் கண்ணண்.சிவா தனது படிப்பு முடிந்தவுடன் ஆங்கில வகுப்புகளும்,கோயில்களிற்கு செல்வதும் விரதங்கள் பிடிப்பதா…
-
- 13 replies
- 2.9k views
-
-
மல்லாவி மத்திய கல்லூரியின் மயில்வாகனம் மண்டபம் அரங்கு நிறைந்த பார்வையாளர்களால் நிரம்பியிருந்தது. கண்களில் நீர் சொரிய உணர்ச்சிப் பெருக்கோடு மக்கள் குழுமியிருந்தனர். தன் மன உணர்வுகள் யாவற்றையும் ஒன்று திரட்டி விடுதலை வீரர்களின் பெருமையினையும், தியாகத்தினையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான் சுடரவன். "மானத்தின் திருநாள் கார்த்திகையே! மாவீரத்தின் பெரு நாள் கார்த்திகையே! கார்த்திகை மாதம் கறுப்பு. இந்த கார்த்திகை மாதம் நெருப்பு! கண்ணுக்குள்ளே வைத்துக் காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம்! அந்த புண்ணியர் நெஞ்சிலே பூத்ததோர் கனவினை எண்ணத்திலே வளர்த்தோம்!" என மாவீரர் பெருமை சொல்லும் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் கவி வரிகளை தன் சிறப்புரைக்கு வலுச் சேர்க்கும் வகையில்…
-
- 2 replies
- 1.2k views
-
-
அன்புள்ள கறுப்பி நாயே இந்தவார ஒரு பேப்பரிற்காக தொடர்ந்து என்ரை கதையையே எழுதிக் கொண்டு வாறதாலை இந்தமுறை ஒரு நாய்க்கதை எழுதப்போறன்.எல்லாம் ஒண்டுதான் எண்டு முணுமுணுக்காமல் படியுங்கோ ஏணெண்டால் இது 80 களிலை ஊரிலை நான் வளர்த்த நாயின்ரை கதைதான். நாங்கள் வளர்த்த நாய் வயசு போய் செத்துப்போயிருந்த நேரம் என்ரை நண்பன் இருள்அழகனின்ரை வீட்டு நாய் நாலைஞ்சு குட்டிபோட்டிருந்தது.நான் அதிலை ஒரு நரைநிற கடுவன் ஒண்டையும் கறுப்பு பெட்டைக்குட்டி ஒண்டையும் தூக்கிக் கொண்டு வந்திட்டன்.இப்ப அதுகளுக்கு பேர் வைக்க வேணுமெல்லோ??.வீட்டிலை ஆளாளுக்கு ஒவ்வொரு பெயரை சொல்லிச்சினம். அதே நேரம் என்ரை தங்கச்சி நாயளின்ரை நிறத்தையே பெயராவைப்பம் எண்டிட்டு நரையனுக்கு பிறவ்ணி எண்டும் கறுப்பு கு…
-
- 26 replies
- 5.8k views
-
-
விடுதலைப்புலிகளுக்கும், இரணில் அரசாங்கத்துக்கும் இடையில் நடைபெற்ற சமாதான காலப்பகுதியில் வல்வெட்டித்துறையில், விடுதலைப்புலிகளின் தலைவரின் வீட்டினை ரூபவாகினிக் கூட்டுத்தாபனத்தினைச் சேர்ந்த இரு சிங்கள ஊடகவியளாளர்கள் பார்வையிட்டார்கள். அவர்களை தமிழ் ஊடகவியளாளர் ஒருவர் அவ்விடத்துக்கு கூட்டிவந்திருந்தார். சிங்கள ஊடகவியளாளர்கள், சிங்களத்தில் தங்களது சந்தேகங்களைக் கேட்க , தமிழ் ஊடகவியளாளர் ஆங்கிலத்தில் பதில் அளித்தார். பிறகு அவர்கள் குமரப்பா, புலேந்திரன் ஆகியோரின் நினைவு இடமான தீருவிலுக்கு சென்றார்கள். அங்கே ஒரு 11 வயதுமிக்க சிறுவன் ஒருவன், அவ்விடத்தினை சுத்தம் செய்து கொண்டிருந்தான். சிங்கள ஊடகவியளாளர் ஒருவர் சிங்களத்தில் அச்சிருவனைப்பார்த்து ஏன் இவர்கள் இறந்தார்கள் என்று கே…
-
- 5 replies
- 2.3k views
-
-
பேரறிவாளன் டைரி - 1 தொடரும் வலி..!தொடர் வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன் அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது! 25 ஆண்டுகள் முடிந்துவிட்டன. நினைக்கவே மலைப்பாக இருக்கிறது. இது, ஏதோ அரசியல் வானில் அடியெடுத்துவைத்து அடைந்துவிட்ட பெரும் பதவியின் ஆர்ப்பாட்டமான வெள்ளிவிழா அல்ல... கலைத்துறையில் எனது 25 ஆண்டு சாதனையின் வெற்றிக்கொண்டாட்டம் என நினைத்துவிடாதீர்கள். இருள்சூழ்ந்த காராகிரகத்தின் நான்கு சுவர்களுக்குள் முடங்கிப்போன வேதனை ஆண்டுகள் அவை. இந்த 25 ஆண்டுகால துன்பக் கதைகளை, துயர வாழ்வை 25 பக்கங்களிலும் அடக்கிவிடலாம்... 25 தொகுதிகளுக்கான புத்தகமாகவும் அடுக்கி அழலாம். இந்த கால் நூற்றாண்ட…
-
- 10 replies
- 5.2k views
-
-
வாழ நினைத்தால் .................. வாழ்கை என்று நினைக்கும் போது எம் முன்னே வா ........என்கிறது ,பின் வாழ் .......என்கிறது அதற்கும் பின் வாகை அதாவது வெற்றி வாகை சூடி நீயும் வாழு என்கிறது .என்ன அழகான தத்துவமுத்துக்கள் . அவனும் வாழ தான் நினைத்தான் . ராகவனுக்கு வயது நாற்பது .வைத்திய சாலைக்கே உரிய அந்த நெடி ...அவனுக்கு பழக்கமாகி இருந்தது, முழங்கால் சத்திர சிகிச்சைக்காக படுத்து இருந்தான், அவன் மனம் பலவாறு சிந்தித்தது .தனிமையும் அமைதியும் மனதின் ஆழத்தை ஆராய சிறந்த இடம் என்பார்கள். அன்பான மனைவியும் மகனும் வீடில் , அவள் வர மாலை ஐந்து மணியாகும். இவனுக்கு மறுபக்கத்தில் உள்ள கட்டிலில் நேற்று இரவு ஒரு விபத்து ,சம்பவதுக்காக் ஒருவனை அனுமதித்து …
-
- 6 replies
- 1.5k views
-
-
ஒரு நிமிடக் கதை: கருணை வசந்தி, மாலா இருவரும் அலுவலக தோழிகள். வெவ் வேறு இடத்தில் இருந்து தினமும் மின்சார ரயில் பிடித்து ஒரே அலுவலகம் செல்ப வர்கள். வசந்தி நல்ல நிறமாக, நாகரிகமாக இருப்பவள். மாலா மாநிறம்தான். வசந்தி மாடர்னாக உடை உடுத்துவதுடன், அழகு மற்றும் ஆரோக்கிய குறிப்புகளில் கவனம் செலுத்துபவள். அளவாக சாப்பிட்டு உடலை ஒல்லியாக வைத்திருப்பாள். ரயிலில் ஏறிய நிமிடம் முதல், டிவியில் அல்லது புத்தகத்தில் படித்த அழகு குறிப்பை பற்றி விலாவாரியாக சொல்லிக்கொண்டு வருவாள். மாலாவுக்கு போர் அடிக்கும். இருந்தாலும் பேசாமல் வருவாள். அவர்கள் இறங்கவேண்டிய நிறுத்தம் வந்தது. ரயில் நிலைய மேம்பாலத்தை தாண்டி …
-
- 0 replies
- 2.1k views
-
-
கொஞ்சம் அதிகம் இனிப்பு சிறுகதை :எஸ்.ராமகிருஷ்ணன்ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... அருள்செல்வத்தின் போன் நம்பரை ஸ்டீபன் அனுப்பியிருந்தான். கன்னையா அதைத் தனது செல்போனில் பதிவுபண்ணி வைத்துக்கொண்டான். காலையில் மீன் மார்க்கெட் அருகில் ஸ்டீபனைப் பார்த்தபோது, அருள்செல்வத்தைப் பற்றி அவன்தான் சொன்னான். பூந்தண்டலத்தில் மூன்றரை வருடங்களாக விற்க முடியாமல் கிடந்த நிலம். எப்படியாவது ஒரு பார்ட்டியைப் பிடித்து விற்றுக்கொடுத்தால், கமிஷன் மட்டும் இரண்டரை லட்சம் தருவதாக ஷெட்டி சொல்லியிருக்கிறான். அருள்செல்வத்தை எப்படியாவது பேசி மடக்கிவிட வேண்டும். இந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனையோ நபர்களை அழைத்துக்கொண்டு போய் இடத்தைக் காட்டி…
-
- 0 replies
- 1.9k views
-
-
பட்டணம் தான் போகலாமடி..! சென்னையில் அடுக்கு மாடிகளாகும் மனைகள்... சரவணன் .. சென்னையில் வேலை பார்க்கும் துடிப்பான இளைஞன். ஒருநாள் தன் கிராமத்திற்குச் சென்று ”நான் சென்னையில் ஒரு வீடு வாங்கப் போகிறேன். 5 லட்சம் பணம் தாருங்களப்பா..” என்று தன் தந்தையிடம் கேட்டான். அதற்கு அவர்,”இன்னும் உனக்குத் திருமணமே ஆகவில்லை! அதற்குள் என்ன அவசரம்?” என்றார். "இப்பொழுது வாங்கினால் 30 லட்சத்தில் வாங்கிவிடலாம். பிறகு வாங்கினால் குறைந்தது 60 லட்சம் தேவைப்படும். தினம் தினம் விலை ஏறி கொண்டே போகிறது" என்றான். யோசித்த அப்பா,” சரியான முடிவு தான். ஆனால் நான் ஒரு விவசாயி, உன்னை படிக்க வைக்க வாங்கிய கடனை உன் சம்பளத்தில்தான் அடைக்க ஆரம்பித்து இருகின்றோம்.திடீரென்று 5…
-
- 1 reply
- 1.5k views
-
-
எனது நண்பன் சோமு வீட்டுக்கு போயிருந்தேன்.அவன் மேட்டூருக்கு போயிருப்பதாக சொன்னார்கள்.சரி எதோ சுற்றுலா போயிருக்கிறான் என்று நினைத்துகொண்டிருந்தேன்.நாலை
-
- 16 replies
- 5.1k views
-
-
குதிரை வண்டி! சிதம்பரம் ரயில்வே ஸ்டேஷன் - பிரதான நடைமேடையில் காத்திருந்தேன். இரவு, 8:15 மணிக்கு, செந்துார் விரைவு ரயில் வந்து சேர்ந்தது. எனக்கான பெட்டியில் ஏறி, என் இருக்கையை தேடி, பக்கவாட்டு கீழ் படுக்கையில் போய் அமர்ந்தேன். எப்போது ரயில் பயணம் என்றாலும், பக்கவாட்டு கீழ் படுக்கையை முன்பதிவு செய்வது வழக்கம். காரணம், சரிவாய் அமர்ந்து குளிர் காற்று முகத்தில் அறைய, இரவு வானத்தை ரசிப்பேன். சக பயணியரின் நடை, உடை பாவனை, பேச்சுகளை ஆராய்வேன். டிக்கெட் பரிசோதகர் வந்தார்; பயணச் சீட்டையும், ஆதார் அட்டையையும் ஒரு சேர நீட்டினேன். பயணம் செய்வோர் பட்டியலில் என் பெயரை, 'ட…
-
- 0 replies
- 1.3k views
-
-
"கூட்டுக்குடும்பம்" நான் யாழ், அத்தியடி பிள்ளையார் ஆலயத்தின் முன்னால் இருக்கும் மதகுவில் குந்தி இருக்கிறேன். எனக்கு என் அம்மா மேல் சரியான கோபம் கோபமாக இருக்கிறது. எமது அம்மா மிகவும் நல்லவர் ஆனால் கொஞ்சம் பிடிவாதமும் உண்டு. அவருக்கு எல்லோரும் ஒன்றாய் பக்கத்தில் இருக்க வேண்டும். ஒரு கூட்டுக் குடும்பம் போல் வாழவேண்டும். அதற்கு தானே தலைவி போல இருக்கவேண்டும். தான் தெரிவு செய்பவரையே திருமணம் செய்ய வேண்டும். இப்படி சில சில கொள்கைகள் உண்டு. எனது மூன்றாவது அண்ணா, மற்றும் மூன்றாவது அக்காவின் திருமணத்தின் பின், நானும் தம்பியும் தப்பி இருந்தோம். நான் அப்பொழுது பல்கலைக்கழகத்தால் வெளிக்கிட்டு கொழும்பு கடற்தொழில் பயிற்சி நிலையத்தில், எந்திரவியல் விரிவுரையாளராக…
-
- 0 replies
- 604 views
-
-
மனிதர்களுடன் பேசுவது என்பது நினைப்பதைப் போன்று இலகுவானதன்று என்பதை இப்போது உணரக்கூடியதாகவிருக்கின்றது. உரையாடல் என்பது ஒரு பெரும் கலை. திரும்பிப் பார்க்கும் போது சில மனிதர்களுடனான எனது பேச்சுவார்த்தைகள் மனக்கசப்புகளுடன், பிரிவுகளுடன், கைகலப்புடன், எதிரி என்றான நிலைகளுடன் முடிவந்திருக்கின்றன. இப்போதெல்லாம் முன்பைப் போலல்லாது என் மனது கடந்து வந்த பாதைகளில் எங்கெங்கே தவறு விட்டேன், தவறுக்கான காரணம் என்ன, எப்படி அச் சிக்கலைத் தவிர்த்திருக்கலாம் என்று சிந்திக்கிறது. முன்பெல்லாம் பொதுவேலைகள், விளையாட்டுகள், சங்கங்கள், உன்று கூடல்கள் என்று ஓடித்திரிந்த காலங்களில் பல உரையாடல்களை நான் உரையாடலாகக் கொள்ளாமல் விவாதமாக - தர்க்கமாக மாற்றிக் கொண்டதனால் நட்புகளை மட்டுமல்லாமல் எ…
-
- 4 replies
- 899 views
-
-
[size=6]நவகண்டம்[/size] கதையாசிரியர்: ரஞ்சகுமார் நான் உங்களுக்கு ஒரு காதல் கதையைச் சொல்லப்போகிறேன். காதலும் வீரமும் செறிந்தது பழந்தமிழர் வாழ்க்கை என்ற பெருமை எங்களுக்கு உண்டு. நேற்றுவரை வாழ்ந்து வீழ்ந்தவர்கள் எல்லோரும் என்னைப் பொறுத்தவரை பழந்தமிழர்களே. இந்தக் கதையின் வீரம் மிக்க நாயகன் கொல்லப்பட்டு ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே அவனும் பழந்தமிழன் என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். ‘முப்பது ஆண்டுகள்’ என்னும் இந்தக் கணக்கு மிக முக்கியமானது. முப்பது ஆண்டுகள் ஏறத்தாழ ஒரு தலைமுறைக் காலம் எனப்படுகிறது. தற்காலத் தமிழர்களில் ஆயிரக்கணக்கானோர் முப்பது ஆண்டுகளுக்குள் தம்மைத் தாமே கொன்றுவிடுகிறார்கள். அல்லது பிறரால் கொல்லப்பட்டுவிடுகிறார்கள். அத்துட…
-
- 9 replies
- 2.2k views
-
-
தெரிவு - சோம.அழகு காலைப் பொழுதின் பரபரப்பைச் சற்றே பின்னுக்குத் தள்ளி அமைதி நிறைந்த சில மணித்துளைகளையேனும் தனக்கானதாக்கிக் கொள்ளும் கலை மிக இயல்பாகக் கைவரும் உவளுக்கு. மாடத்தில் உவளுக்கென காத்திருக்கும் இளவெயிலிடம், இளஞ்சூட்டிலான பால் கோப்பையுடன், தனக்குப் பிடித்த எழுத்தை வாசிக்கவோ பகிரவோ இல்லை எனில் உவளால் அந்நாளையே துவக்க இயலாது. அப்படித்தான் அன்றும், சக்தி என்பான்! குலசாமி என்பான்! தாயே துணை என்பான்! மனைவியே தெய்வம் என்பான்! மகளே உலகம் என்பான்! கோவிலுக்குள் நுழைந்தால் தீட்டு என்பான்…! என்ற தோழர் மதியின் கவிதையுடன் கதிரவனும் தகிக்கத் தொடங்கியிருந்தது. இதை வாசித்ததும்தான் உவளுக்குத் திடீரென நினைவிற்கு வந்தது. தேநீர் மேசையில் நீட்டியிருந்த கால்களைச் சட்டென மடக்கிக் கீழே த…
-
- 0 replies
- 442 views
- 1 follower
-
-
http://eathuvarai.net/?p=1943 “சூரிச்” புகையிரத நிலையத்தினுள் நுழைந்த அமுதன் அங்கிருந்த சிற்றுண்டி சாலையை நோக்கி நடந்தான். அங்கு இருந்த கதிரைகளில் பிஸ்கற்றை சாப்பிட்டபடி விளையாடிக்கொண்டிருந்த மாலதியும் தமிழினியும் பல நாட்களிற்கு பின்னர் அமுதனைக் கண்டதும், அப்பா என்றபடி ஓடிப்போனவர்களை முழந்தாளிட்டு இரண்டு கைகளாலும் கட்டியணைத்து மாறி மாறி முத்தமிட்டவன் . தான் வாங்கி உடைந்து விடாமல் பத்திரமாக பாதுகாத்தபடி கொண்டு வந்த இரண்டு Kinder சொக்கிலேற்றுக்களை இருவரிடமும் கொடுத்து விட்டு மேனகாவை பார்த்தான். தன்னை பாரக்கிறான் என்பதை கவனித்த மேனகா அவனை கவனிக்காதது போல் வாடிக்கையாளர் ஒருவரிற்கு குளிர் பானங்களை எடுத்து நீட்டிவிட்டு பணத்தை பெற்றுக்கொண்டிருந…
-
- 60 replies
- 10.3k views
-
-
ஒரு சதுர கஜம் எட்டரை விலைக்கு நிலம் வாங்கி வீடு கட்டினாராம் கிஷனின் அப்பா. ரயில்பெட்டித் தொடர் மாதிரி வரிசையாய் அறைகள். எல்லா அறைகளும் முடிந்தபின் போனால் போகிறது என்று ஒட்டவைத்தாற்போல் ஒரு சமையலறை. இரு ஜன்னல்கள். ஒரு ஜன்னலின் கீழ், குழாய் வைத்த தொட்டி, ஒரு பெரிய தட்டுக்கூட வைக்க வகையில்லாமல் குறுகியது. கீழே, செங்கல் தடுப்பு இல்லாத சாக்கடை முற்றம். மேலே குழாயைத் திறந்ததும் கீழே பாதங்கள் குறுகுறுக்கும். பத்து நிமிடங்களில் ஒரு சிறு வெள்ளக்காடு காலடியில். அதில் நின்று நின்று அடிப்பாதம் எல்லாம் வெடிப்புக் கீறல்கள். சமையலறையில் அடி வைத்து, முதல் நாள் சமைத்து, கைக்குத் தங்க வளையல் போட்ட உடனேயே வெடிப்புக்குத் தடவ ஒரு மெழுகுக் களிம்பு தந்து விடுவாள், ஜீஜி என்று எல்லோரும் கூப்பிடும…
-
- 0 replies
- 1.2k views
-
-
"காகிதப் பூக்கள்".. புத்தம் புதிய நெடுந்தொடர் - அத்தியாயம் 1 எழுத்தாளர் லதா சரவணனின் புதிய நெடுந்தொடர் காகிதப் பூக்கள். தொடரின் முதல் அத்தியாயம் இது. - லதா சரவணன் (சென்னையில் இருந்து 200கிமீ தொலைவில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டைக்கு அருகில் உள்ளது கூவாகம் எனும் ஊர். சித்ரா பெளர்ணமி அன்று உலக கவனத்தையெல்லாம் தன்பால் ஈர்க்கும் கூவாகம் அர்ஜீனின் மகனான அரவான் என்பவர்தான் இங்கு கூத்தாண்டவராக எழுந்தருளி தன்னை மானசீக கணவனாக வணங்கும் அரவாணிகளுக்கு அருள் பாலித்து வருகிறார்) அன்று வந்த கடிதங்களைப் படித்து அதற்கு பதில் குறிப்புகள் தயார் செய்து கொண்டு இருந்தான் கவின். ஆபீஸீல் ஏறத்தாழ எல்லோரும் கிளம்ப…
-
- 20 replies
- 5.2k views
-
-
மதூரி கதிர்வேல்பிள்ளை - அனோஜன் பாலகிருஷ்ணன் [1] “ஓயா பஹின தான மெதன” என்றார் ஓட்டுனர். டாக்ஸி குலுங்கி நின்றபோது மதூரி தூக்கத்திலிருந்து விழித்தாள். இடப்பக்கக் கழுத்து வலித்தது. பயணம் முழுவதும் அவளை அறியாமல் துயில்கொண்டிருந்தாள். உதட்டைக் கர்சீப்பால் அழுத்தித் துடைத்து, சரிந்திருந்த ஆடைகளைச் சீர்செய்தாள். இரண்டு சூட்கேஸை சில்லுகள் தரையில் உருள இழுத்துக்கொண்டு லிப்டுக்குள் நுழையும்போது அருகேயிருந்த கடலின் இரைச்சல் அள்ளிவந்து காதில் அறைந்தது. சின்ன வயதிலிருந்து கேட்ட அந்த இரைச்சல் அவளை வருடித் தழுவி, கடலைப் பார்க்கவேண்டும் என்ற உவகைக்குள் தள்ளியது. அந்த நான்கு மாடிக் குடியிருப்பில் அவளுக்குச் சொந்தமான தனி பிளாட் மூன்றாவது அடுக்கில் இருந்தது. அப்பா, அவளின்…
-
- 1 reply
- 705 views
-
-
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யன் மீண்டும் மரத்தின் மீதேறி அங்கு தொங்கும் உடலை வெட்டி வீழ்த்தி தோளின்மீது போட்டுக்கொண்டு மயானம் நோக்கி செல்லுகையில் அதனுள்ளிருந்த வேதாளம் எள்ளி நகைத்துப் பேசத்தொடங்கியது: "மன்னா! பேய்களும் உறங்கும் இந்த நள்ளிரவில் இந்த சுதந்திர தமிழீழத்தின் சுடுகாட்டில் இவ்வளவு சிரமப்படும் நீ இதனால் அடையப்போவதுதான் என்ன? அதோ,புலிக்கொடி பட்டொளி வீசிப்பறக்கும் நகரத்தின் சௌந்தர்யங்களை அனுபவிக்காமல் ஏன் இப்படி உன்னை நீயே வருத்திக்கொள்ளுகிறாய்? கடின முயற்சி உடையவர்கள், சில சமயம் நல்லதே நினைத்து செய்யும் செயல்களும் அவர்களறியாமல் எதிர்மறையான பலனை கொடுத்து முயற்சியில் பெரும் பின்னடைவை உண்டாக்கிவிடும். இந்த சுதந்திர தேசத்தின் நீண்ட நெடிய…
-
- 4 replies
- 3.1k views
-
-
வழமையை விட இந்தமுறை கூட நாட்கள் எடுத்துவிட்டது. எல்லாம் அந்த தர்மகத்தாவால வந்தது நானும் கொஞ்சம் உணர்சிவசப்படாமல் மற்றவர்களைபோல காலை கீலை பிடிச்சிருக்கலாமொ? இவ்வளவு காசையும்,சொத்துப்பத்தையும் வைத்துக்கொண்டு ஒரு புறம்போக்கு நிலத்தில அதுவும் தற்காலிகமாக ஒரு 20 குடிசைகளை போடுவமென்றால் குடிசை போட நட்டுவைத்த அத்தனை மரங்களையும் வெட்டி வைத்திருக்கின்றாங்கள் பாவிகள்.வந்த கோபத்தில தர்மகத்தாவின்ர தலையை போட்டிருக்க வேண்டும்.ஏதோ அவன் செய்த புண்ணியம் வாய்ப்பேச்சோட நிப்பாட்டியது.பாவம் எங்கட அகதிகள் தான் சரியாக பயந்து போச்சுதுகள்.இவன் வந்து உள்ளதையும் குழப்பிவிட்டு போகப்போறான் என்று.நாளைக்கு வேலைக்கும் அந்த தர்மகத்தாவை தேடித்தானே அவர்கள் போகவேண்டும்.எதோ கடைசியில் ஒரு பிரச்சனையுமில்லாம…
-
- 5 replies
- 1.2k views
-