கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3076 topics in this forum
-
அந்த நீண்டு இருக்கும் வயல் வரப்போடு ஒட்டிய குறுகலான பாதை அதோடு ஒட்டி இருக்கும் தாமரைக்குளத்தை தாண்டியவுடன் அந்த பாதை விரிந்து ஊரி றோட்டில் ஏறுகிறது.மழை அடிச்சு வெள்ளம் வந்தால் குளத்துக்கும் வயலுக்கும் வித்தியாசம் தெரியாது. .இந்த மெயின் றோட்டில் இருந்து இந்த பரந்த வயல் வெளியூடாக ஊரி றோட்டில் தொடங்கும் இடத்தில் இருக்கும் ஊர் மனைகளை பார்த்தால் மிகவும் தூரத்தில் இருப்பது மாதிரி தான் தெரியும். வயல் விளைச்சல் இல்லாத காலங்களில் குளமும் வற்ற வயலும் சும்மா கிடக்க ; அதனூடாக குறுக்கலாக நடந்து சிலர் தூரத்தை குறுக்க முனைய, வேறு சிலர் அதை தொடர ,,தொடர அங்கு ...அதனூடாக பாதை ஒன்று புதிதாக மலர்ந்து விடும். அதனூடாக தான் கொஞ்ச நாளாக .... .....கொஞ்ச நாளாக எ…
-
- 8 replies
- 2k views
-
-
பிப்பிலிப் பேய் இந்தவார ஒரு பேப்பரிற்காக சாத்திரி கதையின் காலம் 1984 ஆஆஆஆஆஆஆஆஆஆ..............ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ ஜயோ.........வழைமையாய் இரவு பத்துமணிக்கு பிறகு கேட்கும் அந்த பெண்ணின் அலறல் அன்றைக்கும் கேட்டது. மருதடி பிள்ளையார் கோயில் தேர் முட்டியில் அரட்டையடித்துக்கொண்டிருந்த அந்த ஆறு பேரும் ஆளையாள் பார்த்துக்கொண்டார்கள். டேய் பேய் கத்துதடா நேரமும் பத்தரையாகிது வாங்கோடா போவம் என்று லேசாய் நடுக்கியபடி சொன்னான் இருள் அழகன்.(சிவா). டேய் அது பேயில்லை மகேந்திரத்தாரின்ரை இரண்டாவது பெட்டை தேவரதிக்கு விசர் பிடிச்சிட்டுதாம். அவள்தான் கத்துறாள். சீரணி மலையாள சாத்திரியிட்டை தொடங்கி மட்டக்கிளப்புவரை கொண்டு போய் பேயோட்டி பாத்திட்டினமாம். ஒண்டும் சரிவரேல்லை …
-
- 38 replies
- 3.6k views
-
-
சொக்கனுக்கு ... வாய்த்த சுந்தரி ..... புலம் பெயர் நாடொன்றில் சொக்கனும் சுந்தரியும் , ஆணும் பெணுமாக இரண்டு பிள்ளைகள் ,காலையில் கணவனை வேலைக்கு .. அனுப்பி விட்டு .... ,ஒரு குட்டி தூக்கம் . பின் ..எட்டு மணியளவில் இரண்டு பிள்ளைகளையும் பாடசாலையில் விட்டு ..வந்து தொலைகாட்சியில் ஒரு நாடகம் அது முடிய ,சமையல். பின் மதியம் இரண்டு மணிக்கு ஒரு படம் . மாலை பிள்ளைகள் வந்ததும் ..படம் முடியும் வரை எதுவும் நடவாது . அதற்கிடையில் ஐஸ் பெட்டியில் உள்ளது எல்லாம் காலி செய்து விடுவார்கள் ..மாலை ஐந்து மணிக்கு சொக்கன் ஒரு வைன் போத்தலுடன் தொலை காட்சிக்கு முன் .. இடை ..இடை உறுக்கள்... என்ன இங்க இருக்கு ,, ,இது குப்பை.. என்ன செய்த்நியடி .....இரவு சாப்பாடு …
-
- 3 replies
- 1.8k views
-
-
ஒரு இளம் பெண்ணும் இருபத்தாறு ஆண்களும்: மாக்சிம் கார்க்கி: மொழிபெயர்ப்பு: சுரா மூலம்: லேகா புத்தகங்கள் http://www.lekhabooks.com/short-stories/322-oru-ilam-pennum-irupattharu-aangalum.html நாங்கள் இருபத்தாறு ஆண்கள். ஒரு இருட்டு நிறைந்த அறையில் அடைக்கப்பட்டிருந்த எங்களுக்கு காலை முதல் இரவு வரை கோதுமை மாவைக் கொண்டு பிஸ்கட்டுகள் தயாரிப்பதுதான் வேலை. செங்கற்களால் ஆன, அழுக்கும் பாசியும் பிடித்த சுவரிலிருக்கும் துவாரங்கள் தான் அந்த அறையின் சாளரங்கள். வெளியே நோக்கியிருக்கும் சாளரத்தின் பலகைகள் மிகவும் நெருக்கமாக இருந்ததால் அதன் வழியாகச் சூரிய ஒளி உள்ளே வரமுடியாமல் இருந்தது. சாளரத்தின் பலகைகளுக்கு மேலே பிசையப்பட்ட மாவு ஒட்டியிருந்தது. …
-
- 4 replies
- 34.2k views
-
-
1984 -85 ம் ஆண்டின் இறுதிக் காலங்கள், இழக்கப்போகும் பெறுமதிமிக்க காலங்களைப் பற்றிய எதுவித அறிகுறிகளுமில்லாமல் ஓடிக்கொண்டிருந்தது. ஊருக்குள் பிரச்சனைகள் மெதுவாய் தொடங்கியிருந்த காலம். 19 - 20 வயதுக்கான எவ்வித முதிர்ச்சியும் இன்றி, எவ்வித கனவுகளும் இன்றி, பல்கலைக்கழக அனுமதிக்கான பரீட்சை எழுதிவிட்டு, பெறுபேறுகளுக்காகக் காத்திருந்தேன். சிங்கள நண்பர்கள் பலர் ஊரைவிட்டு மெது மெதுவாய் இடம் பெயர, இஸ்லாமிய நட்புகளும் பிரச்சனைகளின் காரணமாக தொலைந்து கொண்டிருந்தன. இருப்பினும் துணிந்தவர்கள் சிலரின் நட்புகள் மங்கலான மாலைப் பொழுதுகளில் தொடரத்தான் செய்தன. ஒன்றாய் பழகிய மூவின நட்புகளும் தனித்தனியே தொடர்பில்லாது தம்வழியே சென்றுவிட்டாலும், நட்பு என்னும் சொல் மட்டும் தனது தன்மை…
-
- 5 replies
- 618 views
-
-
நடுவு நிலைமை என்பது எந்தப் பக்கமும் சாராது இருத்தலல்ல இலங்கையிலிருந்து வெளியாகும் ‘ஞானம்’ சஞ்சிகையின் 150வது இதழில் (நவம்பர் 2012) வெளியாகிய எனது நேர்காணல். மின்னஞ்சல் வழியே நேர்காணலை நிகழ்த்தியவர்: லெ.முருகபூபதி. 1. தங்களது படைப்புகளின் ஊடாகவே தங்களது சிந்தனைகளை வாசகர்கள் தெரிந்துகொள்கின்றனர். புலம்பெயர்ந்து வாழும் பல படைப்பாளிகளுக்கு மத்தியில் தாங்கள் மிகவும் துணிச்சலுடன் கருத்தாடலில் ஈடுபடுபவர். தங்களுடன் கருத்தியல் ரீதியாக முரண்படுபவர்கள் கூட தங்களின் படைப்புகளை விரும்பிப் படிப்பதாக அறிகின்றோம். ஈழத்து வாசகர்களுக்கு தங்களது எழுத்துலகப்பிரவேசம் பற்றிய தகவல்களை சொல்லுங்கள்? மிகச் சிறிய வயதிலேயே எனக்குத் தமிழ் தேசியப் போராட்டத்தின் மீது ஈடுபாடு ஏற்பட்டுவி…
-
- 2 replies
- 1.4k views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் பேசாத பேச்சு! ``வந்திருப்பவர்களிடம் முதலில் பேசு... வராதவர்களிடம் அப்புறம் பேசலாம்’’ - மணப்பெண்ணின் செல்போனை வாங்கிவைத்தார் தாத்தா! - கி.ரவிக்குமார் ஞானம் கணவன் வாங்கிவந்த காய்கறிகளைப் பார்த்த மனைவி, “பரவாயில்லையே... நீங்களும் காய்கறி வாங்கக் கத்துக்கிட்டீங்களே! எல்லா காய்கறியிலயும் பூச்சி அரிச்சிருக்கு. கெமிக்கல் பூச்சிக்கொல்லி தெளிக்காத நல்ல காய்கறிதான்” – மனம்விட்டுப் பாராட்டினாள்! - கீர்த்தி நடிப்பு `ஐ லவ் திஸ் லவ்வபிள் இடியயயட்...’ - செல்போன் வீடியோவில் கத்திக்கொண்டிருந்த மகளைப் பார்த்து விக்கித்து நின்றவரின் பக்கத்தில் வந்தவள் ``டப்ஸ்மாஷ் சூப்பரா பண்ண…
-
- 0 replies
- 787 views
-
-
கடுப்பான முகம்! அவன் துணைவியாரோடு அங்காடிக்குச் சென்று இது ஐந்தாவதுகடை என்பாதாலும் ஒரு பிஸ்கற் பெட்டிக்காக இருவரும் ஏனென்றுவிட்டுத் துணைவியார் பொருட்கள் வேண்டச் செல்ல, இவனோ வெக்கையால் சிற்றுந்தை விட்டிறங்கி வீதியை விடுப்புப் பார்க்கலானான். அந்த வீதிவழியே ஒரு கரும்திராட்சையும் வெண்திராட்சையுமாக மகிழ்வோடு சென்றுகொண்டிருந்தனர். கருந்திராட்சைக் கறுப்பழகி நான்குமுழ வேட்டி உடுத்துவதுபோன்ற அரைப்பாவாடை அணிந்திருந்தாள். அது காற்றிலே பறந்து அவளது அழகைப் பறக்கவிட்டவாறு சென்றுகொண்டிருக்க, அவளது இதழ்களோ அவள் கையிலிந்ருந்த ஐஸ்கிரீமைப் பதம்பார்த்தவாறு கரங்களை இணைத்தவாறு நடந்துகொண்டிருந்தனர். அவர்களை எதிர்த் திசையிலிருந்து ஒரு வெள்ளைப்பெண்மணி கடந்தாள். அவளின் முகம் கடுப்பானதோடு ஒரு வி…
-
- 0 replies
- 627 views
-
-
அழகான தேம்சு நதியின் காற்றுக்கு பெயர் போன அந்த நரகத்தில் முன்பே குடியேறிய ஒரு குடும்பத்துக்கும் அண்மையில் புலம் பெயர்ந்த வசதியுள்ள அந்த குடும்பத்துக்கும் இனணைப்பு பாலமாக அமைந்தது அந்த சம்பந்தம். நடராஜா வாசுகி தம்பதிகளுக்கு சுகித்தா அருமையான செல்லப்பெண் . சமையல் தவிர அத்தனை கலைகளும் அவளுக்கு இருந்தன . ஆடுவாள் பாடுவாள் , கூடவே செல்வ செழிப்பும் இருந்ததால்நன்றாக படித்து படமும் பெற்று க்கொண்டால். தந்தை க்கு செல்ல பெண்ணாய் இருந்ததால் அவளுக்கு வேண்டுமளவு சுதந்திரமும் கொடுத்தார். சில் வருடங்களுக்கு முன்பே குடியேறிய ரங்க நாதன் சாவித்திரி குடும்பத்துக்கு தூரத்து உறவு . இவர்களுக்கு மூன்று ஆண் மக்கள். புலம் பெயர்ந்து சென்று இருந்தார்கள். நாடுப்;பிரச்சனையால். அடிக்கடி நடராசாவும் ரங்க…
-
- 8 replies
- 2.1k views
-
-
கேசம் - நரன் ஓவியங்கள் : ரமணன் 1972 பங்குனி ஆத்தியப்பனுக்கு உடலில் எறும்புகள் ஊர்வதுபோல் உணர்வு. காலையிலிருந்தே அப்படித்தான் இருந்தது. இப்படியான உணர்வுகள் வரும்போது அவர் மனதில் இனம்புரியாத சந்தோஷம் கொப்பளிக்கும். ஆண் யானைகளின் காதில் நீர் வடியும் மத்துக்காலத்துக்கு ஒப்பானது அது. ஆனால், இவ்வளவு நாட்களாக இல்லாமல் இன்று திடீரென ஏன் இப்படி என்று தெரியவில்லை. அவருக்கு 59 வயதாகிறது. வேம்பாரிலிருந்து வறுமையான தன் பதின்ம வயதில் விருதுநகருக்குப் பிழைக்க வந்தவர். பஞ்சுப்பேட்டையில் எடுபிடி பையனாக வேலையில் சேர்ந்து அங்கேயே பஞ்சுத் தரகராக மாறி, குறைந்த லாபத்துக்கு சரக்கைக் கைமாற்றிவிட்டு, கொள்முதல் செய்யத் தொடங்கி என இன்று பேட்டையின் பெரிய வியாபாரம் அவருட…
-
- 0 replies
- 2.8k views
-
-
நானும் என் ஈழமும் 5 கடந்த ஞாயிறு நடந்த நாட்டுப்பற்றாளர் தினம் மனதில் பல நினைவுகளை விதைத்து சென்றுவிட்டது. என் வாழ்வில் சந்தித்த சிலர் தம்மை பற்றி பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துவிட்டு சென்றுவிடுவார்கள். இவர்களை பார்த்து பெருமைபடுவதா இல்லை வருத்தப்படுவதா? "என்ன ஆனாலும் சரி பபா படிச்சு பெரிய ஆளா வரணும். அதை இந்த முகிலன் அண்ணா பார்க்கணும்" அடிக்கடி என் முகிலன் அண்ணா சொல்லும் வார்த்தை. முதன் முதலில் பட்டமளிப்பு விழாவிற்கு மேடையேறிய போது , என்னை அறியாமல் என் கண்கள் முகிலன் அண்ணா இருக்கின்றாரா என பார்வையாளர்களை பார்த்தது. இன்றுவரை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயங்களில் இதுவும் ஒன்று. எப்பொழுது நாங்கள் ஊருக்கு சென்றாலும் முகிலன் அண்ணாவை பார்க்காமல் …
-
- 17 replies
- 2.9k views
-
-
"இன்று செவ்வாய்க்கிழமை. வேலைவிட்டு நேரத்திற்கே கிளம்பி வந்துவிட்டது வசதியாகி விட்டது. இன்றும் அவள் வருவாள். கடந்த இரண்டரை வருடங்களாகக் கண்களாலேயே மட்டும் பேசிக்கொள்ளும் எமது உணர்வுகள் மாற்றங்கள் ஏதுமின்றி இன்றைக்கும் தொடரும்" என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டே காரிற்குள் காத்திருந்தேன். பிண்னனியில் இலளையாராஜாவின் பாடல்கள் மெதுவாக மனதைத் தாலாட்டிக்கொண்டிருக்க அவள் வரும் வழி பார்த்துக் காத்திருந்தேன். நேரம் நெருங்க நெருங்க மனது துடிப்பது எனக்கு வெளியே கேட்டது. என்னைத் தாண்டிச் சென்றுகொண்டிருந்த காரெல்லாவற்றையும் மனம் அங்கலாய்ப்புடன் பர்த்துக்கொண்டது. அவளில்லை. சரி, 3 மணியாகிறது, இனிக் கிளம்பலாம் என்று நான் நினைத்திருக்க அவளது சாம்பல் நிறக் கார் வீதியின் ஆரம்பத்தில் திரும்…
-
- 45 replies
- 4.5k views
-
-
சிறு கதை - 124 / "தற்கொலை தீர்வாகுமா?" காவியா தனது ஸ்கூட்டரில் அரசடி சந்தியால் திரும்பி, வைமன் வீதியால், அத்தியடி புது வீதியூடாக, யாழ் போதனா வைத்திய சாலைக்கு வேலைக்கு காலை புறப்பட்டாள். அவள் ஒரு இளம் செவிலியாக அண்மையில் தான் பணிக்கு சேர்ந்தவள். அவள் முகத்தில் புன்னகையைக் காணவில்லை. எதோ ஏக்கம் துக்கம் அவளை வாட்டுவது அப்படியே தெரிகிறது. அதை அவளால் மூடி மறைக்க முடியவில்லை. அத்தியடி புதுவீதியால் போகும் பொழுது, அந்த வீட்டில் பலர் கூடியிருப்பதைக் கண்டு, செவிலி தானே, என்ன ஏது என்று தன்னை யறியாமலே விசாரித்தாள். தானே தற்கொலை செய்து, வாழ்வை முடிக்க திட்டமிட்டவளுக்கு, இப்ப அது உண்மையில் தேவையில்லாத ஒன்றுதான். தன் வேலையிடத்தில…
-
- 1 reply
- 704 views
-
-
காஸ்மிக் திரை சிறுகதை: தமிழ்மகன், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு ‘‘இந்தச் செய்திகளை எல்லாம் மக்கள் நம்புகிறார்களா?’’ ஹாசினி வெறுப்புடன் கேட்டுவிட்டு, இடதுகை மணிக்கட்டில் கட்டியிருந்த ஆல்ஸ்ட்ரிப்பைப் பார்த்தாள். ‘‘நம்புகிறார்களா எனத் தெரியாது, ஆனால் விரும்புகிறார்கள் ஹாசினி. இதை நீ நம்பித்தான் ஆக வேண்டும்.’’ அங்கு இருந்த ஆறு பேரும் ஆழ்ந்த மௌனத்தில் இருந்தனர். ‘‘ஹாசினி, சீக்கிரம் முடிவெடு. செய்திப் பிரிவு தயாராகிவிட்டது. மொத்தம் 20 நிமிடங்கள்தான். அதில் நான்கு க்ளிப்பிங்ஸ். நீ பேசப்போவது ஐந்து நிமிடங்கள்கூட இருக்காது.’’ ஹாசினி மீண்டும் ஆல்ஸ்ட்ரிப்பைப் பார்த்தாள். உலக நேரம், பால்வீதி புள்ளியின் நான்காம் பரிமாண…
-
- 0 replies
- 1.8k views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: ஸ்யாம் குறி ``பேருந்து எப்போ வரும்?'' எனக் கேட்டார், கிராமத்தில் குறி சொல்லும் பூசாரி. - அபிசேக் மியாவ் முன்னேற்றம் ஸ்கூட்டர் ஓட்டத் திணறும் அப்பா, கார் ஓட்டப் பழகினார் செல்போன் கேமில். - கோ.பகவான் சத்துணவு வீட்டில் இருந்து மதிய உணவு கொண்டுவந்திருந்தார் சத்துணவு ஆயா. - சி.சாமிநாதன் ஒற்றுமை ``வழிகாட்ட ஒரு தலைவனே இல்லாம, எப்படி உங்களுக்குள்ள போராட்டம் நடத்துற ஒற்றுமை வந்தது?'' என ஆச்சர்யமானார் சுதந்திரப் போராட்டத் தியாகி. - பெ.பாண்டியன் ஏமாற்றம் ``ஏ.டி.எம்-ல ஒரு பேய் சார்'' என இயக்குநர் சொன்னதும், ``ஏமாந்துபோயிருக்குமே!'' என்றார் புரொடியூஸர்.…
-
- 0 replies
- 2k views
-
-
ஒரு வீடு, இருவேறு உலகம் - எஸ்.கிருஷ்ணமூர்த்தி நாதனது கன நாள் ஆசை இப்போதுதான் நிறைவேறியுள்ளது. அவுஸ்திரேலியாவில் காணி வாங்கி பெரிய மாடி வீடு கட்டு வேண்டும் என்பது. அவனும் மனைவியும் மாறி மாறி உறக்கமின்றி கடுமையாக உழைத்து காசு சேமித்து நிலம் வாங்கி அதில் ஒரு அழகிய பெரிய மாடி வீடொன்று கட்டிவித்தான். வீட்டைக் கட்டிப் போட்டு சும்மா இருந்தால் அதில் என்ன சுகம் இருக்கிறது? நாலு சனம் வந்து வீட்டைப் பார்த்தால் தானே கஸ்டப்பட்டதன் திருப்தி கிடைக்கும். பார்த்த நாலு சனம் பார்க்காத நாலு சனத்திற்குச் சொல்ல அந்தப் பார்க்காத நாலு சனம் இன்னும் பத்துப் பேருக்கு சொல்ல நாதனது வீட்டைப் பற்றிய நியூஸ் கொஞ்ச நாளாவது மெல்பேண் தமிழ் சனத்துக்குள்ளே பரபரப்பாக உலாவும். ‘வீடுகுடிபூர்வை’ என்று யாழ்பாண…
-
- 1 reply
- 1.1k views
-
-
கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்த கருத்து வேறுபாடுகள் பெரும் விரிசலாக வளர்ந்து நின்றபோது சித்தார்த்தும், சியாமளாவும் மனம் இணங்கிப் பிரிந்து போவது என முடிவெடுத்தனர். ஆறு மாத இடைவெளியில் இருவருக்கும் விவாகரத்தை உறுதி செய்த நீதிபதியிடம், ‘‘மகள் சசி எனக்குத்தான் சொந்தம்’’ என சியாமளாவும், ‘‘எனக்குத்தான் சொந்தம்’’ என சித்தார்த்தும் வாதம் செய்தனர். ஒரு நிமிடம் யோசித்த நீதிபதி, ‘‘இதை உங்க மகளிடமே கேட்டுடுவோம். ஏன்னா அவ இப்போ மேஜர்!’’ என்று சசியை அழைத்தார். ‘‘நீ அம்மாகூட இருக்கியா? இல்ல, அப்பாகூட இருக்கியாம்மா?’’ - கேட்டார் நீதிபதி.‘‘அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருந்தப்பதான் அவங்க எனக்கு அப்பாவும் அம்மாவும். நானும் அப்போதான் அவங்களுக்குச் சொந்தம். அவங்கதான் பிரிஞ்சிட்டாங்களே! அதனா…
-
- 1 reply
- 1.6k views
-
-
அவளது வீடு - சிறுகதை 'வீடு வாடகைக்கு விடப்படும்’ என்ற விளம்பரத்தைப் பேப்பரில் பார்த்ததும், அதன் தொலைபேசி எண்ணைக் குறித்துக்கொண்டாள் அகல்யா. அலுவலகம் முடிந்து போகும் வழியில், 'அந்த வீட்டைப் பார்த்துவிட வேண்டும்’ என்று நினைத்தபடியே, லன்ச் பாக்ஸையும் குடிநீர் பாட்டிலையும் எடுத்து ஹேண்ட்பேகில் வைத்துக்கொண்டு ஸ்கூட்டியில் கிளம்பினாள். அவள் வேலை செய்யும் ஆடிட்டர் அலுவலகம், மந்தைவெளியில் இருக்கிறது. மறைமலைநகரில் இருந்து கிளம்பி அலுவலகம் போவதற்கு எப்படியும் 1.30 மணி நேரத்துக்கு மேல் ஆகும். 'நேரத்துக்குள் போகாவிட்டால், அரை நாள் சம்பளத்தைப் பிடித்துக்கொள்வார்கள்’ என நினைத்தபடியே சாலையில் செல்லத் தொடங்கினாள். பேப்பர்களில் வெளியாகும் வாடகை வீடு பற்றிய விளம்பரங்களை, அக…
-
- 0 replies
- 4k views
-
-
லண்டன்அகதி இளைய அப்துல்லாஹ் லண்டனில் எறிக்கும் வெயில்தான் வெள்ளைக்காரருக்கு பிடிக்கும். ஆனால் எனக்கு குளிர்தான் பிடிக்கும். காரணம் பல. பகலில் அந்த வெக்கையில் கட்டிலில் படுக்க முடியாது வியர்த்து ஒழுகும். இரவில் யன்னலைத் திறந்தாலும் அவியும். கட்டில் சூடு கிளைமேட் எல்லாம் சேர்ந்து வேகும் நித்திரை வராது. சிலர் வேர்வை ஒழுக ஒழுக படுப்பார்கள். என்னால் முடியாது. இப்பொழுது குளிர்காலம். எல்லோரும் குளிர் உடுப்புக்கு மாறி விட்டார்கள். ஹவுன்ஸ்லோவில் இருந்து எமது வீட்டுக்கு போகும் பாதைக்கு செல்ல கொஞ்சம் வேகமாக நடந்தால் பத்து நிமிடம் நடக்க வேண்டும். நடந்து தான் போகிறேன். குளிர் முகத்தில் அறைகிறது. மழை தூறப்போகிறது. வெள்ளைக்காரர் சொல்லுவினம் வைபையும் வெதரையும் நம்ப முடியாது எண்டு. …
-
- 5 replies
- 1.8k views
-
-
நிசிக்கு ஒரு கலியாணத்தை செய்து வைச்சால் நான் நிம்மதியாக இருக்கலாம் என்றால் அவளும் ஒன்றுக்கும் சம்மதிக்கிறாள் இல்லையே ,ஒவ்வொன்றுக்கும் ஒரு குறை சொல்லி கொண்டிருக்கிறாள் என்று புறுபுறுத்தபடியே வந்த அமர்ந்தாள் ஏன்னுடைய பத்தினி.நேற்று பார்த்த பெடியனைப்பற்றி என்ன சொல்லுகிறாள் உன்ட மகள் என்றேன்.அவனையும் பிடிக்கவில்லையாம்,சரியான" வொப் " என்கிறாள். அது என்னடி வொப் என்றால் ,உங்களுக்கு ஒரு நாசமறுப்பும் தெரியாது ,இந்த காலத்து பெட்டைகள் பெடியன்களைப்பற்றி கதைக்கிற கதைகளைப்பற்றியும் தெரியாது ,சரி எனக்கு ஒன்றும் தெரியாது உனக்கு தெரிஞ்சதை சொல்லப்பா என்றேன். வொப் என்றால் fresh on boat(FOB) அதாவது பெடியனை பார்த்தால் ஊரில இருந்து இப்பதான் வந்த பெடியன் மாதிரி இருக்காம் கன்ன உச்சிபி…
-
- 60 replies
- 7.1k views
-
-
பெய்யெனப் பெய்யும் மழை குமரன் கிருஷ்ணன் முன் குறிப்பு: 1. ஒப்பு மொழி [compatible language]: கி.பி 2300 வாக்கில் உருவாகி கடந்த நூறாண்டுகளாய் உலக மக்கள் அனைவராலும் பேசப்படும் மொழி. 2.இந்தக் கதையில் வரும் உரையாடல்கள் அனைத்தும் ஒப்பு மொழியில் பேசப்பட்டதாகும். நமக்கு அம்மொழி பரிச்சயம் இல்லை என்பதால் தமிழில் அவை மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன. 3. சர்வதேச மழை நினைவு தினம்: உலக நகரங்களில் மழை பொழிவது நின்று போய் சுமார் முன்னூறு ஆண்டுகள் ஆகி விட்டன. இறுதியாக பதிவு செய்யப்பட்ட மழை ஆகஸ்ட் 30, 2070ல் பெய்ததாய் பழங்கால அரசாங்க ஆவணங்கள் குறிப்பிடுவதால், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30, மழை நினைவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 4. ஆதிவாசிகள் தீவு: “நாகரிகம்” அடையாத மனிதர்கள்…
-
- 0 replies
- 1.3k views
-
-
அசுரன் மைசூரில் இருந்து கிளம்பும்போதே முதல் வகுப்புப் பெட்டியில் மூன்று பேர்களுடன் காற்றுதான் பிரயாணம் செய்தது. காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு நீர் விடுவது பற்றி எழுந்த உணர்ச்சிப் பிழம்பு கார்களையும், பஸ்களையும், கடைகளையும் எரித்துத் தள்ளி விடும் தீவிரத்தில் இருந்ததுதான் காலி வண்டிக்குக் காரணம். சுமாராக நடந்த அறிமுகப் பேச்சில் மற்ற இருவரும் சகோதரர்களென்றும் அவர்கள் பெங்களூரில் இறங்கி விடுவார்களென்றும் தெரிந்தது. சென்னை வரைக்கும் காலி வண்டியில் ஒற்றை ஆளாகப் பிரயாணம் செய்யும் பாக்கியம் பெற்றவன் என்பதை விட பயம்தான் அதை மீறி நின்றது. பெங்களூரில் கொஞ்சம் கூட்டம் சேர்ந்து கொண்டால் நன்றாயிருக்கும் என்று மனது அடித்த…
-
- 0 replies
- 987 views
-
-
குறிப்பு :- இக்கதையை எழுதியவள் ஒரு முன்னாள் பெண்போராளி. இந்தக்கதை அவள் தனது வாழ்வைப் பற்றி மேலோட்டமாக எழுதியிருக்கிறாள். எதிர்வரும் காலங்களில் ஆழமாகத் தனது வாழ்வை எழுதும் நிலமைக்கும் வருவாள். இவளுக்காக நானும் ஒரு துணையைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அவளது வயதின் முதிர்வு தடையாய் நிற்கிறது. பேசுகிற தருணங்களில் அவளது வேதனைகைளைச் சொல்லுவாள். ஆனால் வெறுங்கையால் எதையும் செய்ய முடியாதுள்ளது. அவளின் பிரச்சினை (சிறுகதை) -ஆனதி- தேவாநந்தியை இப்போதெல்லாம் மனதின் வெறுமை மட்டுமே கோலோச்சுகிறது. ஏன்தான் தான் இன்னமும் வாழ்கிறேனோ என்று தன்னில்தானே பச்சாதாபப் பட்டுக்கொள்கிறாள். பதினெட்டு வயதுமுதல் முப்பத்தாறு வயதுவரை போராளியாக வாழ்ந்த காலங்களில் இருந்த நம்பிக்கையும் வாழ்க்க…
-
- 20 replies
- 3.8k views
- 1 follower
-
-
"மாற்றம்" [யாழ்ப்பாணத்து தமிழ் மருத்துவ மாணவனின் கதை] துடிப்பான நகரமான யாழ்ப்பாணத்தில், இலங்கையின் வடபகுதியில், பரபரப்பான தெருக்களுக்கும், யாழ்ப்பாணக் கடல் நீரேரியின் [கடற்காயல் அல்லது வாவி] அமைதியான கடற்கரைக்கும் நடுவே, குறளரசன் என்ற இறுதியாண்டு மருத்துவ மாணவர் வாழ்ந்து வந்தார். தீவின் வரலாற்றில் வேரூன்றிய நீண்ட பரம்பரையுடன் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்த குறளரசன், பல நூற்றாண்டுகளின் பாரம்பரியத்தின் எடையையும் 'மாற்றத்திற்காக' ஏங்கும் மக்களின் அபிலாஷைகளையும் [ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பையும்] தனக்குள் சுமந்தார். குறளரசன் மருத்துவம் படிக்கும் மாணவர் மட்டுமல்ல; அவர் தனது தமிழ் சமூகத்தின் உரிமைகள் மற்றும் அங்கீகாரத்திற்க…
-
- 1 reply
- 408 views
-
-
இது மாதிரியும் மருத்துவர்கள்... டாக்டர் உள்ள வரலாமா ? வாங்க வாங்க உட்காருங்க என்ன பிரச்சனை ? நீங்க எப்படி இருக்கீங்க டாக்டர் ? நல்லா இருக்கேன்...சொல்லுங்க.... ஒண்ணுமில்ல டாக்டர் கழுத்தில இருந்து வலது கை,தோள்பட்டை எல்லாம் ஒரே வலி..நைட் தூங்க முடியல.... எவ்வளவு நாளா இருக்கு ? அது இருக்கும் டாக்டர் நாலஞ்சு மாசத்துக்கு மேலயே இருக்கும்..நெறய ட்ரீட்மென்ட் பார்த்தாச்சு..ஒண்ணும் சரியா வரல.... அப்படியா (பரிசோதனைக்கு பின்) சரி ஒரு எக்ஸ்ரே எடுத்து பார்த்திரலாம்.... எக்ஸ்ரே எதுக்கு டாக்டர் MRI எடுத்துரலாமே.... ( இன்ஸூரன்ஸ் வச்சிருக்காராம்...) இல்லங்க அவசியம் இல்ல. தேவையின்னா நானே சொல்லுவேன். இல்ல டாக்டர் MRI ல எல்லாம் தெரியும…
-
- 0 replies
- 620 views
-