கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
மாயக்கிளிகள் ஜீ. முருகன் தனது இனத்துடன் வனங்களில் திரிந்து கொண்டிருந்தவளிடம் பிரேமைகொண்டு பட்டமகிஷியாக்கிக் கொண்டான் அரசன். மலைநாட்டுக்காரி ராணியாகி விட்டாள். அவள் இங்கே வரும்போது சீதனமாகப் பாடல்களைக் கொண்டு வந்திருந்தாள்; ஏராளமான பாடல்கள். அவள் பாடத்தொடங்கிய கணத்திலேயே நறுமணம் கமழ்ந்தது. துரிதமாக வளர்ந்து பூத்தன செடிகளெல்லாம். அவள் வருகைக்குப் பின்னர் அந்தப்புரத்திற்கு விதவிதமான பறவைகள் வரத்துவங்கின. புதுப்புது வண்ணங்களில் பட்டாம்பூச்சிகள் காணக்கிடைத்தன. வேட்டைக்குப் போனவன் இப்படி மணக் கோலத்துடன் திரும்பி வருவானென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சூன்யக்காரி என்று குமைந்தார் கிழட்டு மந்திரி. ஒரு மலைநாட்டுக்காரி கீர்த்திமிக்க இந்நாட்டின் மகாராணியாவதை அவருட…
-
- 0 replies
- 753 views
-
-
அங்கீகாரம்: ஒரு நிமிடக் கதை இரவு 11 மணி. நல்ல தூக்கத்தில் இருந்த சரவணனுக்கு ஏதோ சத்தம் கேட்டதும் விழிப்பு வந்தது. லைட் வெளிச்சம் கூச வைக்க கண்களைக் கசக்கியவாறே பார்த்தான். அருகில் உட்கார்ந்து தபால் கார்டில் எழுதிக்கொண்டிருந்த மனைவி லதா "சாரிங்க.." என்று கீழே விழுந்த தண்ணீர் டம்ளரை எடுத்தாள். எரிச்சலுடன் அவளைப் பார்த் தான். இவளுக்கு வேறு வேலை கிடையாது. கடையில் காசு கொடுத்து வாங்கும் வார, இரு வார, மாத இதழ்கள் தவிர அலுவலகத்திலிருந்து அவன் கொண்டு வரும் பத்திரிகைகளை யும் ஒன்றுவிடாமல் படித்து விடுவாள். படிப்பதோடு, அதில் அவளுக்கு பிடித்த விஷயங்களைப் பாராட்டி அந்தப் பத்திரிகைக்கு எழுதிவிட்டுத்தான் ஓய்வாள். …
-
- 1 reply
- 751 views
-
-
தங்கமீன் : விஜய ராவணன் நண்பா! நம் இரு தரப்புக்கும் இடையேயான இந்தப் பல வருடப் போரில் நான் இரவை விட, பகலைக் கண்டு தான் அதிகம் அஞ்சுகிறேன். உனக்குத் தெரிந்தது தான். போர்க் காலத்தின் விடியல் பொழுது ஏமாற்றங்கள் நிறைந்தவை. இரவின் இருட்டில் நடந்தேறிய கொடுமைகளை பகல் அப்படியே திரைதூக்கிக் காட்டிவிடும். உயிர்வாழ இன்னுமொரு பொழுது போராட வேண்டியிருக்கும் என்ற அறிவிப்புதான் இங்கு விடியல். உள்ளங்கையில் மினுங்கும் தோட்டாக்களை ஆட்காட்டி விரலால் உருட்டியபடி மேலும் சொன்னான், யோசித்துப் பார்த்தால் போர் சூழ்ந்த இந்நிலத்தில் இரவு பகல் இரண்டுக்கும் பெரிய வித்தியாசமொன்றும் இருந்ததில்லை. ஆனால் அப்போது கண்ணாடித…
-
- 0 replies
- 751 views
-
-
அவரவருக்குச் சொந்தமான நிலம் குலசேகரன் ஓவியங்கள்: ரவி அன்றும் வழக்கம்போல் நாராயணமூர்த்தி காலை வேளையில் நிலத்துக்குப் புறப்பட்டார். ஊரில் வசிப்பவர்களில் பலர் நகரத்துக்குக் குடி பெயர்ந்து போய்விட்டதால் வெறிச்சோடியிருந்த தெருக்களின் வழியாக நடந்தார். குட்டையான கோபுரத்தில் சுண்ணாம்புச் சிற்பங்கள் சிதைந்து மூளியாக நிற்கும் பழைய மாரியம்மன் கோயிலையும் கடந்து ஆற்றை நெருங்கினார். நிறைய மரங்கள் வெட்டப்பட்ட கரை வெறுமையாக நீண்டிருந்தது. பழைய ஞாபகங்ளோடு ஆற்றில் முகத்தைக் குனிந்து பார்ப்பதுபோல் எஞ்சியிருந்த சில மரங்கள் கவிந்து நின்றிருந்தன. ஆழ்ந்த பெருமூச்சுடன் அவர் ஆற்றில் இறங்கினார். எங்கும் மணல் பரவியிருந்த ஆறு பெரிய பாலைவனமாகத் தோற்றமளித்தது. எண்ணற்ற கா…
-
- 0 replies
- 751 views
-
-
எனக்கு புரியவில்லை.... ஈழத் தமிழர்களை காப்பாற்றுவோம் என்கிறார்கள்; ஆனால் ஈழத்து தமிழ் மக்கள் மீதும் எமது குழந்தைகள் மீதும் தூவப்படும் மரண குண்டுகளில் அவர்கள் பெயர்களைப் பொறித்து அனுப்பியிருக்கிறார்கள். பிணங்களை காப்பாற்றி ஈழத்தில் எதை சாதிக்கப் போகிறார்கள்?{ பிணந்தின்னிக் கழுகுகளின் இரையே பிணங்கள் தான் என்பதை மறந்துவிட்டு என்ன இது முட்டாள் தனமான கேள்வி?} மரமேறி விழுந்தவனை மாடேறி மிதிச்சுதாம். அப்பிடி இருக்கு இந்திய அரசின் ஒப்பனை வசனங்கள். ஒரு பக்கம் அம்மா வயதான ஐயாவுக்கு கடிதம் எழுதுகிறாராம் தீர்வு காணவும் போரை நிறுத்தவும் வலியுறுத்துவோம் என்று... இன்னொரு பக்கம் நச்சு வாயுவையும், எரி குண்டுகளையும் எதிர்க்கு பரிசளிப்பாராம். பார்த்துக் கொண்டிருக்கும் வெளி உலகில்…
-
- 0 replies
- 750 views
-
-
இரண்டு சம்பவங்கள் சம்பவம் ஒன்று---இன விரோதம் மே மாதம் 1983. பொறியியல் பீடத்துக்குத் தெரிவாகி பேராதனைப் பல்கலைக்கழகம் போயிருந்தோம். ஜேம்ஸ் பீரிஸ்---ஜே.பி., கில்டா ஒபேயசேகரா விடுதிகள் எங்களுக்கு---முதல் வருட ஆண்களுக்குத் தரப்பட்டிருந்தது. பெண்கள் சங்கமித்த, இராமநாதன் விடுதிகளில் இருந்தார்கள். எங்கள் படிப்பு மகிழ்ச்சியும் ஆரவாரமுமாக ஆரம்பித்தது. ஒவ்வொரு விடுதிக்கும் ஒரு கன்ரீன் இருக்கும். அங்கு நாங்கள் செய்யும் சேஷ்டைகள் கணக்கிலடங்காதவை. எங்கள் ஆட்டம் பாட்டத்துக்கு ஆப்பு வைத்தார்கள். ஆப்பு வைத்தவனே ஆபத்பாந்தவன் ஆவதையும் தரிசித்தோம். மலையின் உச்சியில் இருக்கும் 'ஜே.பி' விடுதி பார்ப்பதற்கு அழகாக இருக்கும். நாங்கள் அதில் ஏறி இறங்குவதற்கு இரண்டே இரண்டு பாதைகள…
-
- 1 reply
- 749 views
-
-
மஞ்சள் சுவாலை (சிறுகதை) .................................................... அன்று நாங்களொரு தீர்மானத்திற்கு வந்திருந்தோம். பரந்தனில் இருந்து கரடிப்போக்கு சந்தியை நோக்கி ஜீவனேசன் தன் லுமாலாவை வேகமாக மிதித்துக்கொண்டிருந்தான்.நான் அவனுக்கு உதவியாக பெடல் போட்டபடி அவனுக்கு பேச்சு கொடுத்து கொண்டிருந்தேன். இடைக்கிட அவன் வியர்வை என் கன்னத்தில் சிந்தியது . மூச்சிரைக்க என்னை ஏற்றிக்கொண்டு கரடி போக்கு சந்திக்கும் பரந்தன் சந்திக்கும் இடையில் இருக்கும் வயல் வெளியின் எதிர்காற்றுக்கு ஈடுகொடுத்து சைக்கிளை செலுத்தி கொண்டிருந்தான் ஜீவனேசன்.அவன் பருத்த தேகத்தின் பலத்திற்கு முன்னால் எதிர்காற்று ஒரு பொருட்டல்ல என்றே தோன்றியது எனக்கு “டேய் குண்டா எனக்கு பயமாகிடக்கு ” “ஏன் டா” “மாட்டினம் உ…
-
- 0 replies
- 748 views
-
-
நஞ்சு - ஜெயமோகன் நேரில் சந்தித்தால் அக்கணமே கையில் கிடைத்த பொருளால் அடித்து அங்கேயே கொன்றுவிடவேண்டும் என்று நினைத்திருக்கும் ஒரு பெண். அவளை ஓடும் பஸ்ஸில் இருந்து எதிரே செல்லும் பஸ்ஸில் பார்த்தேன். ஊட்டி சென்றுகொண்டிருந்தேன். இறங்கிய பஸ் ஒன்று வளைந்து ஒதுங்கி என் பஸ்ஸுக்கு இடம் கொடுத்தது. அந்த பஸ் என்னை கடந்துசென்றபோது ஒரு கணம் மிக அருகே அவள் வந்து அப்பால் சென்றாள். என் மனம் படபடத்தது. செத்தவன்போல கைதளர்ந்து அப்படியே அமர்ந்துவிட்டேன். பஸ் மேலேறிச் சென்றது. என்ன செய்வது என்று தெரியாமல் ஏதேதோ எண்ணங்களுடன் இருந்தேன். பின்னர் எண்ணியபோது அந்த எண்ணங்களெல்லாமே விசித்திரமாக இருந்தன. நான் எழுந்து சன்னல்வழியாக வெளியேறி அந்த பஸ்ஸை துரத்திக்கொண்டு பறந்து, ஆம் பறந்து, அதை…
-
- 1 reply
- 748 views
-
-
வெள்ளைக்காரன் அ.முத்துலிங்கம் சிண்டரெல்லா கதையில் யார் கதாநாயகன் அல்லது நாயகி என்று கேட்டேன். நான் கேட்டது ஓர் ஆறு வயது பெண் குழந்தையிடம். அந்தக் குழந்தை பதில் சொல்ல ஒரு விநாடிகூட எடுக்கவில்லை. ’மணிக்கூடு’ என்றது. நான் திடுக்கிட்டுவிட்டேன். சிண்டரெல்லாவைச் சொல்லலாம், அல்லது ராசகுமாரனை சொல்லலாம். அல்லது தேவதையை சொல்லலாம். ஏன் சிண்டரெல்லாவின் இரண்டு சகோதரிகளைக் கூடச் சொல்லியிருக்கலாம். இது புதுவிதமாக இருந்தது. யோசித்துப் பார்த்தேன். அந்தக் குழந்தை சொன்னது சரிதான். மணிக்கூடு இல்லாவிட்டால் கதையே இல்லையே. அதுதானே முடிச்சு. 12 மணி அடிக்கமுன்னர் சிண்டரெல்லா வீடு திரும்பவேண்டும். இதுதான் தேவதையின் கட்டளை. ஆகவே கதையில் முக்கியமானது மணிக்கூடுதான். …
-
- 0 replies
- 748 views
-
-
சமாளிக்க முடியாமல் திணறினார் அந்த இளம் பெண் !அந்த பெண்ணைச் சுற்றி ஏராளமான நிருபர்கள் கூட்டம் ! கேள்வி மேல் கேள்வியாக தொடுத்தார்கள் தொலைக்காட்சி நிருபர்கள் ..! அந்த பெண்ணின் பெயர் ஸ்ருதி … வயது 24 ..! பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கோர்ட்டில் இப்போது ஜட்ஜ் ஆக இருக்கிறார் …! கோர்ட் வளாகத்துக்குள்தான் நிருபர்கள் சந்திப்பு !அந்த பெண் நீதிபதியிடம் நிருபர்கள் கேட்ட கேள்வி : “இவ்வளவு இளம் வயதில் எப்படி மேடம் , இவ்வளவு பெரிய பதவிக்கு வந்தீர்கள் ? உங்கள் குடும்பம் மிகப் பெரிய செல்வாக்கு படைத்த குடும்பமா..?” ஸ்ருதி சற்று நேரம் மௌனமாக இருந்தார்.எதுவும் பேசவில்லை . பின் அமைதியாக சொன்னார் : “இல்லை .. என் குடும்பம் மிக மிக எளிமையான குடும்பம் .. ஒரு சாதாரண கிராமத்து பெண் நான் ..!” …
-
- 2 replies
- 747 views
-
-
ஆஷ்ட்ரேயில் உதிர்ந்திருக்கும் விரல்கள் நேசமித்திரன் மழை முடிந்திருக்கும் மரத்தின் கிளைகள் தாழ்ந்திருக்கின்றன .உன்னுடனான முதல் சொல்லை இத்தனைத் தயக்கங்களுடன் துவங்க நேரும் ஒரு பொழுதை எப்படி கடப்பது.தண்டவாளத்தின் குறுக்குக் கட்டைகளைப் போல் புதைபட்டிருக்கும் நினைவின் சாயைகளில் இருந்து மீட்டெடுக்க கூடாததாய் இருக்கிறது பகிர்ந்த கணங்களின் துடிப்பு மீதமிருக்கும் தசை. உச்சிப் பகலில் உயரமாய் தெரிகிறது ஆகாயம்.குடித்துக் கொண்டிருக்கும் கன்றை வலிந்து இழுத்து கலயம் ஏந்தும் மடியில் சொட்டும் துளிகள் இந்த சொற்களுக்கான ஈரம் தரக் கூடும்.அதீதமான துக்கத்தை தருபவை மிக விழைந்த பிரியங்களாய் இருக்கின்றன .கிளையைப் போல் பிரிந்து பறவையைப் போல் பறந்து போவது என்பதெல்லாம் எழுதுவதைப்போல…
-
- 0 replies
- 746 views
-
-
"மறுபடியும் இந்தத் தடவை யாரைக் கெடுக்கிறாய்?" தோளின் பின்னாலிருந்து சுவாமிநாதனின் குரல் கேட்டதும், விசு பேனாவை மேஜை மீது வைத்துவிட்டான். இனி அவன் இருக்கும் வரை எழுத ஓடாது. "புதுப் பறவையா?" சுவாமிநாதன் கேட்டான். விசு சிரித்தான். சுவாமிநாதனைப் பார்த்தால் அவனுக்குச் சிரிப்பு வரும். இயலாமையை நல்லதனம் என்று நினைத்துக் கொண்டு திருப்திப் பட்டுக்கொள்பவர்கள். சுவாமிநாதன் நல்லவன். சிகரெட் பிடிக்கமாட்டான். சீட்டாட மாட்டான். முதல் வரிசையில் உட்கார்ந்துகொண்டு பாடத்தை சிரத்தையாகக் கேட்பான். பெண்களின் நிழல் கூடப் பிடிக்காது. அவனைக் கண்டால் விசுவுக்கு பாவமாக இருக்கும். வேடிக்கை என்னவென்றால் விசு என்றால் சுவாமி நாதனுக்கும் இரக்கம்தான். " பெண்களுக்கே இல்லாத …
-
- 0 replies
- 745 views
-
-
சொந்தம் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்த கருத்து வேறுபாடுகள் பெரும் விரிசலாக வளர்ந்து நின்றபோது சித்தார்த்தும், சியாமளாவும் மனம் இணங்கிப் பிரிந்து போவது என முடிவெடுத்தனர். ஆறு மாத இடைவெளியில் இருவருக்கும் விவாகரத்தை உறுதி செய்த நீதிபதியிடம், ‘‘மகள் சசி எனக்குத்தான் சொந்தம்’’ என சியாமளாவும், ‘‘எனக்குத்தான் சொந்தம்’’ என சித்தார்த்தும் வாதம் செய்தனர். ஒரு நிமிடம் யோசித்த நீதிபதி, ‘‘இதை உங்க மகளிடமே கேட்டுடுவோம். ஏன்னா அவ இப்போ மேஜர்!’’ என்று சசியை அழைத்தார். ‘‘நீ அம்மாகூட இருக்கியா? இல்ல, அப்பாகூட இருக்கியாம்மா?’’ - கேட்டார் நீதிபதி.‘‘அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருந்தப்பதான் அவங்க எனக்கு அப்பாவும் அம்மாவும். நானும் அப்போதான் அவங்களுக்குச் சொந்தம். அவங்கதான் பிரிஞ்சிட்ட…
-
- 0 replies
- 745 views
-
-
ஷூட் தி பப்பி - அருண் சரண்யா தவிப்போடு காத்திருந்தோம். தனக்கு வந்திருந்த அவசரத் தொலைபேசி அழைப்பில் பேசிக்கொண்டிருந் தார் கோபி. எங்கள் நிறுவனத்தின் முக்கிய செயலதிகாரி. நிர்வாகத்தின் முகம். ‘‘போயிட்டு வா அனு. என்னாலே வர முடியாதும்மா. சாரி. ஆல் தி பெஸ்ட்...’’ மறுமுனையில் பேசுவது அவர் மனைவி என்பது புரிந்தது. மொபைலை ஆஃப் செய்தார். அடுத்த கணம் எங்கள் இருவரையும் உற்றுப் பார்த்தார். நீளமாக ஏதோ உரையாற்றுவார் என நினைத்தோம். ஊஹூம். ‘‘ஷூட் தி பப்பி’’ என்ற ஒற்றை வாக்கியத்தைக் கூறிவிட்டு மாநாட்டு அறையிலிருந்து கிளம்பத் தயாரானார் கோபி. போகும்போது ஒரு பட்டியலை நீட்டிவிட்டுச் சென்றார். அந்தப் பட்டியலை மேம்போக்காகப் பார்த்தேன். ஒவ்வொரு பெயரும் வலியைக் கிளப்பியது. கடைச…
-
- 0 replies
- 743 views
-
-
*அப்பாப் பூனை* வேர்கள் துளிர்க்கும் தமிழீழப்பெண் சிறுகதைத் தொகுதியிலிருந்து....ஒலிவடிவி
-
- 1 reply
- 742 views
-
-
உரத்துக் கேட்கும் மௌனம்: சக்கரவர்த்தி ஓவியம் எஸ். நளீம் மெக்சிக்கோ வளைகுடாவில் உருவாகிய தாழ் அமுக்கம் மூன்று நாட்களுக்கு முன்பு அலபாமா பகுதிக்குள் பெரும் புயலாக மாறிக் கடும் சேதத்தை ஏற்படுத்தியிருந்தது. கரோலினா கரையோரமாக நகரும் டகோடா புயல், நியூயோர்க் மாநிலத்தைக் கடந்து, ஒன்டாரியோவில் எங்கள் பகுதியூடாகச் சற்று வலுவிழந்து வடபுலம் போகப் போகிறது. ரொறன்டோவில் பலத்த காற்றுடன் கூடிய பெருமழைப் பெய்யுமென எச்சரிக்கப்பட்டிருக்கிறோம். சிறிதான காற்றுடன் காலையில் இருந்தே தூறல் தூவிக் கொண்டிருக்கிறது. சிகப்பியை எண்ணித்தான் கவலையாக இருக்கிறது. நான்கு நாட்களுக்கு முன்புதான் கோதுடைத்துக் குஞ்சுகள் வெளிவந்தன. அவள் கூடு சிறு காற்றைத் தாங்கும். டகோடா போன்ற பெரும்புயலை எதிர்த்த…
-
- 1 reply
- 741 views
-
-
உள்ளங் கவர் கதை . இறந்துவிட்டோம் என்பதை ஒருவனால் எப்படி தெரிந்துகொள்ளமுடியும்? இந்தக் கேள்வி அடிக்கடி மூர்த்தியை சல்லடையாய் துளைக்கிறது. யோசிக்க யோசிக்க சூன்யமே மிஞ்சுகிறது. "நாம் உயிரோடுதான் இருக்கிறோம் என்று எப்போது நம்மால் உணரமுடியவில்லையோ, அப்போது நாம் இறந்துவிட்டதாக நினைத்துக்கொள்ள வேண்டும்' என்று ஒருவாறு விளக்கம் சொல்லிக்கொண்டான். இறந்துவிட்டபின் எப்படி நினைத்துக் கொள்ளமுடியும்? என்று திருப்பிக்கேட்டது அவன் மனம். 'சே' என்று அலுத்துக்கொண்டு, விரல்களால் பவுடரைத் தொட்டு கண்ணாடிக்குள் ஊடுருவிப் பார்த்து முகத்தில் பூசினான். கருப்பாக இருந்தாலும் சதைப்பிடிப்பான முகம் அழகாகவே தெரிந்தது. தலைமுடியைச் சீவி, கிருதாவை வருடியபோதுதான் கவனித்தான். இடது கிருதாவில் ஒரு வெள…
-
- 1 reply
- 741 views
-
-
சுணைக்கிது -நிரூபா (சிறுகதை) கறுப்பு. அதில வெள்ளப் புள்ளி. சிவப்பும் நீலமும் கலந்தது. கறுப்பில மஞ்சள் ஊத்திவிட்டமாதிரி. எத்தின வித விதமா. வண்ணாத்திப்பூச்சி! பஞ்சு போல செட்டயள். அடிச்சு அடிச்சு பறக்க எவ்வளவு வடிவாக் கிடக்கு. 'வண்ணத்திப் பூச்சி வண்ணத்திப் பூச்சி பறக்கிது பார். பறக்கிது பார். அழகான செட்டை அடிக்கிது பார். அடிக்கிது பார்" ரீச்சற சுத்திச் சுத்தி ஓடுறது. ரண்டு கையும் செட்ட. நேசறி ரீச்சர் சொல்லித் தந்த பாட்டுகளில இப்பவும் பிடிச்சது இதுதான். சில நேரங்களில கும்பலா வரும். எதப் பாக்கிறது எண்டுதெரியாமல் இருக்குமென்ன? வண்ணாத்தி எண்டால் நல்ல விருப்பம். அதப் பிடிச்சு கிட்டவைச்சுப்பாக்கவேணும். பின் வளவில் ஒரு நாள் …
-
- 2 replies
- 741 views
- 1 follower
-
-
உறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு மட்டுமே ஆழப்படுகின்றன. பலம் பெறுகின்றன. மனம் விட்டுப் பேசுவது நின்று போகுமானால் அனுமானங்களும், சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப் பெற்றுக் கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விடுகின்றன. பின் அந்த உறவுகளில் விரிசல் விழுகின்றன; நட்புகள் துண்டிக்கப்படுகின்றன. என்றோ படித்த ஒரு வியட்நாமியக் கதை நினைவுக்கு வருகிறது. ஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது. அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி. இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள். போர் முடிந்து உயிரோடு த…
-
- 2 replies
- 740 views
-
-
மாற்றமா ? தடுமாற்றமா? அ. முத்துலிங்கம் பூப்போல கீழே வந்து இறங்கியது விமானம். பதினைந்து வருடத்திற்குப் பிறகு கொழும்புக்கு வருகிறேன். மனைவி சொல்லியிருந்தாள். “நீங்கள் நம்பமாட்டீர்கள், அவ்வளவு சேஞ்ச்” என்று. நான் பல நாடுகளுக்கும் போயிருக்கிறேன்; பல இடங்களில் வேலை பார்த்துமிருக்கிறேன். ‘என்ன தான் என்று பார்ப்போமோ?’ என்று வந்திருந்தேன். குடிவரவுக்கு (Immigration) வரும் போதே இது விஷயம் வேறு என்று உடனே தெரிந்து விடுகிறது. அதிகாரிகள் முகத்தை உம்மென்று தான் வைத்துக் கொண்டிருப்பார்கள். ஒரு மனிதப் பிராணி அவர்கள் முன்பு நிற்பது அவர்களுக்குத் தெரியும்: ஆனால் நிமிர்ந்து கூட பார்க்க மாட்டார்கள். என் முறை வந்தது. பாஸ்போட்டை நீட்டினேன். குனிந்த படி ஏதோ எழுதி விட்டு பா…
-
- 0 replies
- 740 views
-
-
கடவுளின் மரணம் - செல்வன் | "கடவுள் இறந்து விட்டார்..அன்னாரது ஈமக்கிரியைகள் வரும் 16ம் தேதி நடைபெறும்" "கடவுள் இறந்து விட்டார்..அன்னாரது ஈமக்கிரியைகள் வரும் 16ம் தேதி நடைபெறும்" இடி இறங்குவது போல் அந்த செய்தி மக்களிடையே இறங்கியது. ஆரம்பத்தில் யாரும் அதை நம்பவில்லை.ஆனால் கடவுளின் உடலை மக்களின் பார்வைக்கு வைத்ததும் தான் அதை அனைவரும் நம்பினர். "ஓ"வென அனைவரும் அழுது புலம்பினர். அவரது உடல…
-
- 0 replies
- 739 views
-
-
வருகை கே.ஜே.அசோக்குமார் புலியை நேரில் சந்திக்கும்போது ஏற்படும் கிலி எப்படிப்பட்டதாக இருக்குமென்று அப்போதுதான் உணர்ந்தான் சசி. அதுவும் புலியை ஒரு அறையில் சந்திப்பது என்பதை அவன் நினைத்துகூட பார்த்தது இல்லை. இதுவரை அது எப்படிப்பட்ட அதிர்ச்சியாக இருக்கும் அதிலிருந்து எப்படி தப்பிக்க முடியும் என்று சிந்தித்ததும் இல்லை. இரவு விளக்கு மட்டும் எரியும் அந்த மெல்லிய இருட்டில் பலமாக மூச்சுவிடக்கூட பயமாக இருந்தது அவனுக்கு. தும்மலோ இருமலோ வந்துவிடக்கூடாது என்று மிக கவனமாக கடவுளை வேண்டிக் கொண்டான். ஒரு குழந்தை போன்று எந்த கவலையும் இன்றி தூங்கும் அதனிடம் மெல்லிய குறட்டைஒலி வருவது போலிருந்து. தான் குறட்டை விட்டிருந்தால் அது அறிந்திருக்க வாய்ப்பிருக்குமோ என்ற சந்தேகமும் பயமாகவும் …
-
- 0 replies
- 738 views
-
-
எல்லாம் எனக்கே! ""செல்வி, இங்கே வாம்மா.'' செல்வியின் அம்மா மலர்விழி, அழைப்பது கேட்டது செல்விக்கு. செல்வி இப்போதுதான் வணிகத்தில் முதுகலைப் படித்துவிட்டு வேலைக்காக முயன்று கொண்டிருக்கிறாள். ஒரே பெண் என்பதால் ஏகப்பட்ட செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்டவள். தனக்குப் பிடித்த பொருள்களைப் பிறர் தொடுவதைக் கூட விரும்பாத சுயநலம் மேலோங்கும் எண்ணம் கொண்டவள். அவளுடைய எண்ணத்தில் வன்மம் ஏதும் இல்லை என்றாலும், கிடைப்பதில் அரிதானவையோ அல்லது அழகானவையோ தனக்கே கிடைக்க வேண்டும் என்ற விருப்பம் அவளுக்கு சிறுவயது முதல் இருந்துவருகிறது. ஒரே பெண் என்பதால் அவள் கேட்டதெல்லாம் நடந்துவருகிறது. ""செல்வி'' மீண்டும்…
-
- 0 replies
- 738 views
-
-
மீட்சியற்ற நகரத்தில் செண்பகம் துப்பிய எச்சம்- சந்திரபோஸ் சுதாகர் மழைக்கான ஆரம்ப அறிகுறிகள் தோன்றத்தொடங்கியிருந்த ஒரு பிற்பகல் நேரத்தில் அவனை அவர்கள் கைது செய்தார்கள். சனநடமாட்டம் அதிகமாயிருந்த கடைத்தொகுதியின் மாடிக்குச் செல்லும் படிக்கட்டில் புழுக்களைப் போல மிகமிக அற்பத்தனமாக அந்த நிகழ்வு நடந்தது. கண்களின் மீது இருளடைந்த தெருக்கள் ஊர்ந்தன. மனசிலிருந்த ஓவியங்கள் சிதைந்து போயிற்று. குருதியும் தசையும் மண்டிய புதிய ஓவியங்கள் அவனுள்; தொங்கின. மழை தூறத்தொடங்கிவிட்டது. கடைத்தொகுதியின் இரண்டு பக்க வாயில்களையும் ஒரு வித கட்டளைக்கு கீழிப்படிகின்றவர்களைப் போல அல்லது அவர்கள் தாங்களே அவற்றைப் பிறப்பித்தவர்கள் போல தங்களால் அட…
-
- 0 replies
- 737 views
-
-
’ஸ்மாட் போன்’ ( சிறுகதை)– கே.எஸ்.சுதாகர் வேகமாக வளரும் தொழில் நுட்பத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் நானும் எனது கைத்தொலைபேசியை மாற்றுவதென முடிவு செய்து கொண்டேன். I – Phone ஒன்றை வாங்குவதற்காக வியட்நாமியக் கடையொன்றிற்குப் போயிருந்தேன். “அப்பா…. காலத்துடன் நாங்கள் பயணம் செய்யவேண்டும்! கார் இடையிலை நிண்டா… காட் அற்றாக் வந்தா ” என்று ஐந்து வருடங்களுக்கு முன்பு ஐந்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த என் மகன் பெரியதொரு பட்டியலிட்டு என்னைப் பயப்படுத்தியிருந்தான். அதற்கு முன்னர் என்னிடம் கைத்தொலைபேசி இருக்கவில்லை. அவனது அட்வைஸ்சிற்கு கட்டுப்பட்டு மிகக்குறைந்த விலையில் ஒரு கைத்தொலைபேசி ஒன்றை வாங்கியிருந்தேன். இப்போது அதை மாற்றுவதற்குரிய காலம் வந்துவிட்டது. மனைவி…
-
- 0 replies
- 737 views
-