கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3082 topics in this forum
-
நிசிக்கு ஒரு கலியாணத்தை செய்து வைச்சால் நான் நிம்மதியாக இருக்கலாம் என்றால் அவளும் ஒன்றுக்கும் சம்மதிக்கிறாள் இல்லையே ,ஒவ்வொன்றுக்கும் ஒரு குறை சொல்லி கொண்டிருக்கிறாள் என்று புறுபுறுத்தபடியே வந்த அமர்ந்தாள் ஏன்னுடைய பத்தினி.நேற்று பார்த்த பெடியனைப்பற்றி என்ன சொல்லுகிறாள் உன்ட மகள் என்றேன்.அவனையும் பிடிக்கவில்லையாம்,சரியான" வொப் " என்கிறாள். அது என்னடி வொப் என்றால் ,உங்களுக்கு ஒரு நாசமறுப்பும் தெரியாது ,இந்த காலத்து பெட்டைகள் பெடியன்களைப்பற்றி கதைக்கிற கதைகளைப்பற்றியும் தெரியாது ,சரி எனக்கு ஒன்றும் தெரியாது உனக்கு தெரிஞ்சதை சொல்லப்பா என்றேன். வொப் என்றால் fresh on boat(FOB) அதாவது பெடியனை பார்த்தால் ஊரில இருந்து இப்பதான் வந்த பெடியன் மாதிரி இருக்காம் கன்ன உச்சிபி…
-
- 60 replies
- 7.1k views
-
-
பெய்யெனப் பெய்யும் மழை குமரன் கிருஷ்ணன் முன் குறிப்பு: 1. ஒப்பு மொழி [compatible language]: கி.பி 2300 வாக்கில் உருவாகி கடந்த நூறாண்டுகளாய் உலக மக்கள் அனைவராலும் பேசப்படும் மொழி. 2.இந்தக் கதையில் வரும் உரையாடல்கள் அனைத்தும் ஒப்பு மொழியில் பேசப்பட்டதாகும். நமக்கு அம்மொழி பரிச்சயம் இல்லை என்பதால் தமிழில் அவை மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன. 3. சர்வதேச மழை நினைவு தினம்: உலக நகரங்களில் மழை பொழிவது நின்று போய் சுமார் முன்னூறு ஆண்டுகள் ஆகி விட்டன. இறுதியாக பதிவு செய்யப்பட்ட மழை ஆகஸ்ட் 30, 2070ல் பெய்ததாய் பழங்கால அரசாங்க ஆவணங்கள் குறிப்பிடுவதால், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30, மழை நினைவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 4. ஆதிவாசிகள் தீவு: “நாகரிகம்” அடையாத மனிதர்கள்…
-
- 0 replies
- 1.3k views
-
-
அசுரன் மைசூரில் இருந்து கிளம்பும்போதே முதல் வகுப்புப் பெட்டியில் மூன்று பேர்களுடன் காற்றுதான் பிரயாணம் செய்தது. காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு நீர் விடுவது பற்றி எழுந்த உணர்ச்சிப் பிழம்பு கார்களையும், பஸ்களையும், கடைகளையும் எரித்துத் தள்ளி விடும் தீவிரத்தில் இருந்ததுதான் காலி வண்டிக்குக் காரணம். சுமாராக நடந்த அறிமுகப் பேச்சில் மற்ற இருவரும் சகோதரர்களென்றும் அவர்கள் பெங்களூரில் இறங்கி விடுவார்களென்றும் தெரிந்தது. சென்னை வரைக்கும் காலி வண்டியில் ஒற்றை ஆளாகப் பிரயாணம் செய்யும் பாக்கியம் பெற்றவன் என்பதை விட பயம்தான் அதை மீறி நின்றது. பெங்களூரில் கொஞ்சம் கூட்டம் சேர்ந்து கொண்டால் நன்றாயிருக்கும் என்று மனது அடித்த…
-
- 0 replies
- 996 views
-
-
குறிப்பு :- இக்கதையை எழுதியவள் ஒரு முன்னாள் பெண்போராளி. இந்தக்கதை அவள் தனது வாழ்வைப் பற்றி மேலோட்டமாக எழுதியிருக்கிறாள். எதிர்வரும் காலங்களில் ஆழமாகத் தனது வாழ்வை எழுதும் நிலமைக்கும் வருவாள். இவளுக்காக நானும் ஒரு துணையைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அவளது வயதின் முதிர்வு தடையாய் நிற்கிறது. பேசுகிற தருணங்களில் அவளது வேதனைகைளைச் சொல்லுவாள். ஆனால் வெறுங்கையால் எதையும் செய்ய முடியாதுள்ளது. அவளின் பிரச்சினை (சிறுகதை) -ஆனதி- தேவாநந்தியை இப்போதெல்லாம் மனதின் வெறுமை மட்டுமே கோலோச்சுகிறது. ஏன்தான் தான் இன்னமும் வாழ்கிறேனோ என்று தன்னில்தானே பச்சாதாபப் பட்டுக்கொள்கிறாள். பதினெட்டு வயதுமுதல் முப்பத்தாறு வயதுவரை போராளியாக வாழ்ந்த காலங்களில் இருந்த நம்பிக்கையும் வாழ்க்க…
-
- 20 replies
- 3.8k views
- 1 follower
-
-
"மாற்றம்" [யாழ்ப்பாணத்து தமிழ் மருத்துவ மாணவனின் கதை] துடிப்பான நகரமான யாழ்ப்பாணத்தில், இலங்கையின் வடபகுதியில், பரபரப்பான தெருக்களுக்கும், யாழ்ப்பாணக் கடல் நீரேரியின் [கடற்காயல் அல்லது வாவி] அமைதியான கடற்கரைக்கும் நடுவே, குறளரசன் என்ற இறுதியாண்டு மருத்துவ மாணவர் வாழ்ந்து வந்தார். தீவின் வரலாற்றில் வேரூன்றிய நீண்ட பரம்பரையுடன் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்த குறளரசன், பல நூற்றாண்டுகளின் பாரம்பரியத்தின் எடையையும் 'மாற்றத்திற்காக' ஏங்கும் மக்களின் அபிலாஷைகளையும் [ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பையும்] தனக்குள் சுமந்தார். குறளரசன் மருத்துவம் படிக்கும் மாணவர் மட்டுமல்ல; அவர் தனது தமிழ் சமூகத்தின் உரிமைகள் மற்றும் அங்கீகாரத்திற்க…
-
- 1 reply
- 419 views
-
-
இது மாதிரியும் மருத்துவர்கள்... டாக்டர் உள்ள வரலாமா ? வாங்க வாங்க உட்காருங்க என்ன பிரச்சனை ? நீங்க எப்படி இருக்கீங்க டாக்டர் ? நல்லா இருக்கேன்...சொல்லுங்க.... ஒண்ணுமில்ல டாக்டர் கழுத்தில இருந்து வலது கை,தோள்பட்டை எல்லாம் ஒரே வலி..நைட் தூங்க முடியல.... எவ்வளவு நாளா இருக்கு ? அது இருக்கும் டாக்டர் நாலஞ்சு மாசத்துக்கு மேலயே இருக்கும்..நெறய ட்ரீட்மென்ட் பார்த்தாச்சு..ஒண்ணும் சரியா வரல.... அப்படியா (பரிசோதனைக்கு பின்) சரி ஒரு எக்ஸ்ரே எடுத்து பார்த்திரலாம்.... எக்ஸ்ரே எதுக்கு டாக்டர் MRI எடுத்துரலாமே.... ( இன்ஸூரன்ஸ் வச்சிருக்காராம்...) இல்லங்க அவசியம் இல்ல. தேவையின்னா நானே சொல்லுவேன். இல்ல டாக்டர் MRI ல எல்லாம் தெரியும…
-
- 0 replies
- 629 views
-
-
மன்னன் ஒருவன் தன் அரண்மனைக் குதிரைகளைக் காவல் செய்வதற்காக சேவகன் ஒரு வனை நியமித்தான். விழித்திருந்து குதிரைகளைக் காவல் செய்யாவிடில் குதிரைகள் ஓடிச் சென்று விடும். எனவே குறித்த சேவகன் உறங்காது விழித்திருப்பதற்கு வழி தேடினான். தன் தலைவனாக இருக்கக்கூடிய மன்னனிடம், அரசே! குதிரைக் காவலின்போது உறக்கம் மேலிட்டுக் கொள்கிறது. உறங்காது விழித்திருக்க ஏதேனும் வழி சொல்லுங்கள் என்றான். இரவுவேளை, வானத்தில் இருக்கக்கூடிய நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டே இரு. இதுதான் பொருத்தமான வழி என்றான் மன்னன். மன்னனின் ஆலோசனைப்படி சேவகன் வானத்து நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டே இருந்தான். விடியற்காலைப் பொழுதில் நட்சத்திரங்கள் எண்ணுவதை விடுத்து குதிரைகளைப் பார்த்த போது அங்கு எந்தக் குதிரைகளு…
-
- 1 reply
- 540 views
-
-
நிலவிற்குத் தெரியும் தங்கமணி கண்முழித்துப் பார்த்தபோது உன்னிகிருஷ்ணன் பக்கத்திலில்லை .அவன் பாத்ரூமில் இருக்கவேண்டுமென்று நினைத்துக்கொண்டு திரும்பிப் படுத்தாள்.ஆனால் அமைதி கனமாக இருந்தது;முழித்திருந்தபடி ஏதாவது சத்தம் வருகிறதா என்று உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தாள்.ஆனால் ஒரு சின்னச் சத்தமுமில்லை.தங்கமணி எழுந்து விளக்கை ஏற்றினாள். மாடிப் படியின் முகப்புக்கதவும் திறந்துகிடந்தது.கலவரம் அடைந்து மாடிப்படிகளில் வேகமாக இறங்கினாள்.;மூச்சிறைத்தது அவள் திணறினாள்.. பழைய மரமாடிப்படி சத்தம் ஏற்படுத்தியது.பெரியதாத்தா விழித்துக்கொண் டார். “தங்கமணி..’ மாடிப்படியின் கீழிருந்து கூப்பிட்டார். “அவர் அறையில் இல்லை…”தங்கமணியின் குரல் ஹாலில் எதிரொலித்தது. வீடு முழுவத…
-
- 0 replies
- 532 views
-
-
மதுவந்தி - சிறுகதை சிறுகதை: ஜி.ஆர்.சுரேந்தர்நாத், ஓவியங்கள்: ஸ்யாம் கடவுள் ஒரு நாள் எழுந்தார். அழகின் கோடி துளிகளை ஒரு கோப்பையில் ஏந்தினார். உலகிலுள்ள அனைவர் மீதும் அந்தத் துளிகளைத் தெளிப்பதற்காக விண்ணில் பறந்தார். கோப்பை கை தவறி கடவுளின் கையிலிருந்து நழுவி விழ…. அழகின் அத்தனைத் துளிகளும் ஷ்ரவந்தியின் கண்களில் விழுந்தது. இயக்குநர் ஜோவின் டைரியிலிருந்து... மாலையிலிருந்து ஆறாவது முறையாக, க்யூ நியூஸில் காண்பித்துக்கொண்டிருந்த எனது நேர்காணலைப் பார்த்துக்கொண்டிருந்தேன். டி.வி-யில் அந்த இளைஞன் என்னிடம், “டைரக்டர் ஜோவோட பொற்காலம் முடிஞ்சு போச்சுன்னு சொல்ற விமர்சனங்களைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?” என்று கேட்கிறான். சுள்ளென்று வந்த கோபத்தை அடக்க…
-
- 0 replies
- 3.3k views
-
-
கர்ப்பம்: நொயல் நடேசன் நான் ஒரு மிருகவைத்தியர். சனிக்கிழமை வேலைக்குச் சென்றபோது, வாசலில் வைத்தே கதவைத் திறந்தபடி “ இன்று ஒரு நாயை எக்ஸ்ரே எடுக்க வேண்டும்.” என்று எனது நேர்ஸ் சொன்னாள். வழக்கமாகவே சனிக்கிழமையில் அப்படி வேலை இருப்பதில்லை. வெளி நோயாளர்களைப் பார்ப்பது மட்டுமே. ஏதாவது அவசரமாக இருக்கலாம். அல்லது தன்னார்வத்தில் அவளே தீர்மானித்தாளா? எக்ஸ்ரே எடுக்க அரைமணியிலிருந்து முக்கால் மணிநேரம் எடுக்கும். மனிதர்கள்போல் இலகுவானதல்ல. ஒத்துழைக்காத அல்லது பயந்த பூனை , நாயானால் சில நேரத்தில் மயக்க மருந்து கொடுக்க வேண்டியிருக்கலாம். அதன்பின் அவை மயக்கம் தெளியும்வரை காத்திருக்கவேண்டும். நான்கு மணி நேரத்தில் இவை நடக்குமா? “என்னத்திற்காக எக்ஸ்ரே?” “பெண் நாய், கர…
-
- 3 replies
- 1.3k views
- 1 follower
-
-
சீனிவாசன் ஒரு ஓட்டல் நடத்தி வந்தார்! அவர் கடையில்... தொட்டுக் கொள்ள சீனி கொடுப்பார்கள்! . ஆனால் சீனி விலை உயர்வின் காரணமாக சீனி கொடுக்க முடியவில்லை! . ஒரு போர்டு எழுதி போட்டார்! "இன்று முதல் தோசைக்கு சீனி கிடையாது" . கிச்சாமி அந்த ஓட்டலுக்கு வாடிக்கையாளர்! சாப்பிட போனார் ! முதலில் ஒரு தோசை வாங்கினார்! . இரண்டாவது ஒரு தோசை வாங்கினார்! சீனி கேட்டார்! . முதலாளி சொன்னார்! சீனி கிடையாது! . கிச்சாமி சொன்னார் போர்டை படியுங்கள் " முதல் தோசைக்கு மட்டும் கிடையாது! . இது இரண்டாவது தோசை! முதலாளி தலையில் தட்டி கொண்டே சீனி கொடுத்தார்! . அடுத்த நாள் போர்டு ஐ மாற்றி எழுதினார் "இனி மேல் தோசைக்கு சீனி கிடை…
-
- 0 replies
- 1.5k views
-
-
பனங்கொட்டை பொறுக்கி பனங்கொட்டை பொறுக்கி குரு அரவிந்தன் (குரு அரவிந்தன்) உள்நாட்டுப் போரின் பாதிப்பு ஆங்காங்கே வெளிப்படையாகத் தெரிந்தது. கவனிப்பு அற்ற பிரதேசம் என்பதால் ஏ9 பாதை குண்டும் குழியுமாயிருந்தது. சில இடங்களில் பாதைகள் செப்பனிடப் பட்டிருந்தன. முன்பெல்லாம் இப்பாதையில் பயணிக்கும்போது பயந்து நடுங்கிக் கொண்டே பயணிக்கவேண்டும். இராணுவத்தின் கெடுபிடி ஒருபக்கம், தெருவோரக் கண்ணிவெடிகளின் பயம் மறுபக்கம். தப்பித்தவறி வண்டி பாதையைவிட்டு விலகினால் காவு கொள்ள எங்கேயென்று கண்ணிவெடிகள் காத்திருக்கும். பாதை ஓரத்தில் அக்குள் தண்டு பிடித்து மெல்ல மெல்ல நொண்டிக் கொண்டு சென்ற அந்த சிறுவனுக்காக என் மனம் பரிதாபப்பட்டாலும், சற்றுத்தள்ளி மூன்று காலில் நொண்டிக் கொண்டு புல…
-
- 11 replies
- 3.3k views
-
-
புலன் அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா? எந்த நிகழ்வு? எந்த உலகம்? சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல. நம் தாய் பூமி அல்ல. நம் பூமி அல்ல. நாட் அவர் பேல் ப்ளூ டாட். இன்னொரு சோலார் சிஸ்டம். இன்னொரு பூமி-நிகர் உலகம். நம் பூமியில் இருந்து சில மில்லியன் ஒளி வருடங்கள் தொலைவில். ஆனால் பூமியின் டிட்டோ. அங்கே இரண்டு வகை மனிதர்கள் இருக்கிறார்கள். H 1 மற்றும் H 2. கி.பி. 2300 இல் நம் பூமி மிகப்பெரிய அழிவை சந்தித்தது. ஆஸ்டிராய்டு இம்பாக்ட் ஒன்றில் மனித குலம் கிட்டத்தட்ட அழிய இருந்த போது எங்கிருந்தோ வந்த மகானுபாவர்களான இவர்கள் தான், அதாவது H 1 மனிதர்கள் அழிவின் விளிம்பில் இருந்த H 2 மனிதர்களை காப்பா…
-
- 1 reply
- 1.2k views
-
-
பகிடிவதை விதுஷன் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் மூன்று விசேட சித்தியும், ஒரு திறமைச் சித்தியும் பெற்று சித்தியடைந்த மாணவன். கல்முனையில் பின் தங்கிய கிராமத்தைச் சேர்ந்தவன். தந்தையை இளமையிலேயே இயற்கைக்குப் பலி கொடுத்தவன். வயதுடைய தாயையும், தனக்குக் கீழ் இரு தங்கைகளையும் கொண்டவன். இவ்வளவு காலமும் தாய் தயிர் காய்ச்சி விற்றும், அரிசி குற்றி விற்றும், விதுவை ஆளாக்கி விட்டாள். அவனும் விடுமுறைகளில் சிறுசிறு வேலைக்குச் சென்று பணம் தேடினான். ஆனால், இனி? அவனது எதிர்காலப் படிப்பு கேள்விக் குறியாகி விட்டது. தாய்க் கிழவி ஓயாத இருமலுடன் மூலைக்குள்ளே முடங்கி விட்டாள். இதுவரை இவர்களை எட்டிப்பார்க்காத சொந்தங்கள் விதுஷன் பல்கலைக்கழகம் செல்லவிருப்பதை…
-
- 13 replies
- 3.7k views
-
-
சிவா கத்திக் கொண்டிருந்தான்.. 'என்னம்மா பொண்ணு இவ நாம் படிக்க வைத்து வேலைக்கு அனுப்பியது கண்டவனையும் லவ் பண்ணவா..... என்ன நினைசிட்டுருக்கா இவ மனசில தங்கச்சின்னு கூட பார்க்க மாட்டேன்... வெட்டி போட்டுடுவேன் ....' நம்ம சாதி சனம் என்ன பேசும்.... அப்போது அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் சங்கரி.. சிவாவின் மனைவி கல்யாணம் ஆகி இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. ஒரே சாதியில் நடந்த திருமணம்....' ''என்ன இவன் கூட பிறந்த தங்கையின் மனதை புரிந்து கொள்ளாமல் இப்படி பேசுகிறானே மனதில் நினைத்துக் கொண்டாள். உள்ளே சிவாவின் தங்கை அழுது கொண்டிருந்தாள். அப்போது சங்கரி உள்ளே வந்தாள்.. அண்ணியை பார்த்தவுடன் கண்களை துடைத்து கொண்டாள். ''அழாதே கண்ணை துடைச்சுக்கோ...காதலிக்கறது தப்பில…
-
- 3 replies
- 1.4k views
-
-
வெங்கடேசன் இருக்காரா?’ “இன்னும் ஆபீசிலிருந்தே வரலியே! உள்ளே வாங்க!” என்று என்னை வரவேற்றாள் வெங்கடேசனின் மனைவி. “பரவாயில்லை. நான் அப்புறம் வரேன். போன வாரம் நான் வந்துட்டுப் போனதை சொன்னீங்களா?” “சொன்னேன். எப்படியும் இந்த மாதக் கடைசிகுள்ளே குடுத்துடறேன்னு சொல்லச் சொன்னாங்க. உங்க மனேஜர் கிட்ட சொல்லி நீங்கதான் எப்படியாவது கொஞ்சம் போருத்துக்கச் சொல்லணும்.” “அவரு நம்ப மாட்டாரு. இதோட நீங்களும் பத்துப் பதினைஞ்சு தடவைக்கு மேல் இப்படியே சொல்லிக்கிட்டு இருக்கீங்க.” “இல்லை. இந்த தடவை மட்டும் எப்படியும் நிச்சயம் குடுத்துடுவார். இப்ப ஒரு இடத்தில் டேம்பரரியா வேலை கிடைச்சிருக்கு. கொஞ்சம் தயவு செய்து போருத்துக்கச் சொல்லுங்க.” நான் தெருவில் இறங்கி நடந்தேன். வெங்கடேசனின் மனைவியை …
-
- 10 replies
- 2.3k views
-
-
டிக் டிக் டிக் ஓயாமால் கேட்டபடி என்ன அது அதனருகே நான்,எத்தனையோ சத்தங்களை முன்பு கேட்டு கொண்டிருந்த பொழுதும் இப்பொழுது இந்த சத்தம் உறுத்தி கொண்டிருந்தது அது ஒரு சுவர் மணிக்கூடு அதனருகே நான் ,,ஏன்... இருக்க வேண்டும்...இருந்தே தீரவேண்டும்..அது ஒரு ஆஸ்பத்திரி வார்ட் ..நேற்று வரை நல்லாத்தான் இருந்தேன்..யார் சொன்னார்கள்...நான் தான் சொல்லுகிறேன்...மற்றவர்களுக்க
-
- 6 replies
- 1.6k views
-
-
[size=4]பிரபல எழுத்தாளர் திரு.குரு அரவிந்தன் அவர்கள் (கனடா) ஆதரவுடன் யாழ்பாணத்தில் வெற்றிமணி பத்திரிகை நடத்திய அகில இலங்கைக்கான மாணவர் சிறுகதைப் போட்டி முடிவுகள்.[/size] [size=4]சிறுகதைப் போட்டி முடிவுகள்: 1வது பரிசு: மிருகம்[/size] செல்வன். பாலசுப்பிரமணியம் நிதுஜன் யா. மகாஜனாக் கல்லூரி தெல்லிப்பழை [size=4]மாணவர் சிறுகதைப் போட்டியில் முதலாம் பரிசு பெற்ற சிறுகதை. (பாலசுப்பிரமணியம் நீதுஜன், மகாஜனாக்கல்லூரி, தெல்லிப்பழை)[/size] [size=4]கொண்டுவந்திருந்த தண்ணீர்ப் போத்தலை எடுத்துப் பார்த்தேன். அது காலியாக இருந்தது. ஏமாற்றத்துடன் டேவிட்டின் முகத்தைப் பார்த்தேன். ஐந்து மணிநேரமாக ஒரே இடத்தில் காத்துக் கிடக்கும் சலனமோ களைப்போ முகத்தில…
-
- 5 replies
- 1k views
-
-
ஒரு ஊர் கோடியில் மக்கள் கூட்டம் அழுகுரலோடு அலைமோதிக்கொண்டிருந்தது.அந்த வழியே போன குருடன் ஒருவன் ஒரு மனிதனை அழைத்து இந்த அழுகையின் சத்தத்துக்கு காரணம் என்ன என்று வினவினான். அந்த மனிதன் சொன்னான் ஐயா ஒரு குழந்தை செத்து போய்விட்டது அது தான் இந்த சத்தத்துக்கு காரணம் என்ரு சொன்னான். உடனே குருடன் கேட்டான் எப்படி குழந்தை செத்தது என்று? அந்த மனிதர்:பால் குடிக்கும் போது விக்கி செத்துப்போனது என்றான். குருடன்:ஐயா பால் குடிக்கும் போதா?அப்படின்னா அந்த பால் எப்படி இருக்கும்.? அந்த மனிதர்:யோவ் பால் வெள்ளையாய் இருக்கும் குருடன்:ஐயா மண்ணிச்சுக்குங்க,வெள்ளை எப்படி ஐயா இருக்கும்? அந்த மனிதர்மிகவும் சலித்துக்கொண்டு)கொக்கு மாதிரி இருக்கும்யா. குருடன்:ஐயா…
-
- 6 replies
- 2.5k views
-
-
வெந்துருதி தி(த்)றைஸ் – ( சிறுகதை ) – கோமகன். முடிவு. ஹொப்பித்தால் ஃவிஷா(L’hôpital Bichat): அந்த ஆஸ்பத்திரியின் அவசரப்பிரிவு பலரின் அழுகுரலில் திணறியது. மதுமிதா செய்வதறியாது அழுதவாறே நின்றிருந்தாள். இந்த அல்லோல கல்லோலத்திற்குள்ளும் ஆஸ்பத்திரியின் அந்தப்பிணவறையில் அமைதியின் ஆட்சி அள்ளித்தெளிந்திருந்தது. அந்த நீண்ட அறையின் மாபிள் பதித்த தரையின் மேல் பலவகை அடுக்குகளில் லாச்சிகள் இருந்தன. லாச்சிகளின் முனையில் இருந்து மைனஸ் 20பாகை உறை குளிரின் வெண்புகை கசிந்து கொண்டிருந்தது. சிறிது மணித்துளிகளுக்கு முன்பு ஆயிஷா, சுலைமான், டோலி, ரத்தினசிங்கம் என்ற ரட்ணா என்று நால்வராக இருந்த நாங்கள் இப்பொழுது ‘அவைகளாக’ இலக்கங்களுடன் லாச்சிகளில் உறைந்து போயிருந்தோம். இந்த இலக…
-
- 0 replies
- 993 views
-
-
டிப்ஸ் தர்மம்! வ ழக்கமாக புதன்கிழமையன்று எனக்கும், மேனேஜருக்கும் ஃபீல்ட் வொர்க் நாள் முழுவதும் இருக்கும். இந்த மேனேஜர் புதியவர். பத்து மணி சுமாருக்கு ஓட்டல் ஒன்றில் இரு வரும் டிபன் சாப்பிட்டோம். பில்லை வைத்த சர்வர் தலையைச் சொறிந்தான். வேறென்ன, டிப்ஸ் வேண்டுகோள்தான்! பர்ஸை எடுத்த என்னைத் தடுத்த மேனேஜர், ‘‘என்னப்பா... சம்பளம் வாங்கா மலா வேலை செய்யறே? போ, போ!’’ என மறுத்து விட்டார். எனக்குச் சங்கடமாக இருந்தது. இவ்வளவு பெரிய பதவியில் இருப்பவர்கள் ஜஸ்ட் இரண்டு ரூபாய், மூன்று ரூபாய் விஷயங்களில் இப்படிக் கடுமையாக நடந்துகொள்கிறார்களே என்றிருந்தது எனக்கு. இருந்தும் என்ன செய்வது... ஒன்றும் சொல்ல முடியாது. மேனேஜராச்சே! மதிய சாப்பாட்டுக்கு இன்னொரு ஓட்டல். சொல்லிவைத்த…
-
- 0 replies
- 1.5k views
-
-
வணக்கம் சகோதரர்களே, இத்துடன்"புபாள ராகங்கள் சிறுகதைப் போட்டியிலே பரிசுபெற்ற என்னுடைய அக்கரைப் பச்சை என்ற சிறுகதையை இணைக்கிறேன். உங்களுடைய கருத்துக்களை ஆஆஆஆவலுடன் (அடேயப்பா எவ்வளவு ஆவல்) எதிர்பார்க்கிறேன் அன்புடன் மணிவாசகன் அக்கரைப் பச்சை இருளரக்கனை விரட்டியடிப்பதற்கான கதிரவனின் இறுதிக் கட்டத் தாக்குதல் அரங்கேறிக் கொண்டிருக்கும் அதிகாலை நேரம். விடிந்தும் விடியாத அந்தப் பொழுதின் குளுமையை, அமைதியை, அழகை ஒரே நொடியில் அஸ்தமிக்கச் செய்த அந்தச் சத்தம் ஊரையே பரபரப்படையச் செய்கிறது. உயிர்ப்பலி எடுப்பதற்காய் யமதர்மன் 'பொம்மர்' உரு எடுத்து வந்து விட்டான். "தம்பி சத்தம் கேக்குது. எழும்பி பங்கருக்கை ஓடடா" சொல்லிக் கொண்டே ஓட்டப் பந்தயத்தில் ஒலிம்பிக் வீராங…
-
- 27 replies
- 5.6k views
-
-
பார்ட் டைம் ஜெனரல் பீட்டர்ஸ் சாலையிலிருந்த அந்த ஆட்டோ மொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் கடையில், கூட்டம் நிறைந்திருந்தது. மாநிலத்தின் பல பாகங்களிலிருந்தும் வந்திருந்த வியாபாரிகள், தமக்கு தேவையான வண்டியின் ஸ்பேர் பார்ட்சுகளை வாங்கிக் கொண்டிருந்தனர். கடையின் பின்னாலிருந்த கோடவுனிலிருந்து பொருட்கள் பெரிய பெரிய அட்டைப் பெட்டியில் வெளியே வந்து, கடை முன் நிறுத்தப்பட்டிருக்கும் டெம்போ வேன், மினி லாரிகளில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன. கடையில் ஒரு பக்கமாக உட்கார்ந்து, எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான் மூர்த்தி. கனஜோராக நடக்கும் வியாபாரத்தைப் பார்த்தால், ஒரு நாளைக்கு பல லட்சம் ரூபாய்க்கு வியாபாரம் நடக்கும் போலிருந்தது.…
-
- 0 replies
- 1k views
-
-
பறந்து போன இருமரங்களும் பச்சையம் இழந்த காடுகளும் டிசே தமிழன் பகுதி-01 1. பொலித்தீன் பையைத் தன்னுடல் முழுதும் சுற்றிக்கொண்டு எரிந்துகொண்டிருக்கும் நண்பனைப் பற்றிய கனவு அவனைத் திடுக்குறச்செய்து விழிப்படையச் செய்தது. நேரம் என்னவாயிருக்குமென சிவப்பு ஒளியில் மிளிர்ந்துகொண்டிருந்த அலாரமைப் பார்த்தபோது 3.25 A.M என்றிருந்தது. இனி விடியும் வரைக்கும் நித்திரை வராது என்ற நினைப்பு அவனுக்கு இன்னும் எரிச்சலைக் கொணர்ந்தது . இப்போதுதான் முதற்தடவையாக நண்பன் எரிந்துகொண்டிருக்கும் கனவு வருகின்றது என்பதல்ல; முன்னரும் பலமுறை வந்திருக்கின்றதுதான். ஒவ்வொருமுறையும் அலறிக்கொண்டு அதலபாதாளத்திற்கு விழும் கணத்தோடு ஓர் உறைநிலை…
-
- 2 replies
- 1.3k views
-
-
சதைகள் – அனோஜன் பாலகிருஷ்ணன். குருநாகல் புகையிரத நிலையத்தில் நியோன் வெளிச்சத்தில் நுளம்புகளை விரட்டிக்கொண்டு நின்றேன். குலுங்கலுடன் சிலுப்பி அதிர்ந்து புகையிரதம் பிளட்ஃபோமில் என் கால்விளிம்பருகே பாரிய உலோக அதிர்வுடன் நின்றது. அதிஷ்டவசமாக ஜன்னல் இருக்கை கிடைத்தது. ஆசுவாசப்படுத்திக்கொண்டு அமர்ந்தேன். வேகமாக இருட்டில் பதுங்கிய தென்னைமரங்கள் நீண்ட இலைகளுடன் என்னைக் கடந்துகொண்டிருக்க, தடக் தடக் ஒலிகள் காதின் சவ்வுகளை அதிர்வித்துக்கொண்டிருந்தன. சூடான மூச்சுக்காற்று என் மூக்கிலிருந்து புறப்பட்டு என் நெஞ்சில் மையம்கொண்டது. நேரத்தைப் பார்த்தேன் ஏழுமணியைக் கடந்திருந்தது. கொட்டுவை போய்ச்சேர பதினொரு மணியாகும். புகையிரதக் குலுங்கல் மத்தியிலும் பக்கத்திலிருந்த சிங்களவர் மூக்குக் க…
-
- 0 replies
- 1.5k views
-