கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
அழுக்கு!! ஆக்கம் - களவாஞ்சிகுடி யோகன்..!! அலுவலக மாதந்தம் கூட்டத்தில் இருந்த போது தான் அந்த அழைப்பு.கைத் தொலைபேசியைத் தூக்கி இலக்கங்களை பார்த்தான் "பிறைவேற்" என்று விழுந்திருந்தது.பட்டனை அழுத்தி "கலோ" என்ற பொழுது மறுமுனையில் தெய்வேந்திரன் அங்கிள். "எப்படியிருக்கிறீர்கள் தம்பி?" கேட்டார்.சுகத்தைக் கூறி என்ன விஷயம் அங்கிள்?" என்று விசாரித்தான் செல்வன். "இந்த சனி ஞாயிற்கு ஏதாவது அலுவல்கள் இருக்கிறதோ?" "ஏன் அங்கிள்?" "ஒருக்கா வீட்டுக்கு வாங்கோ கதைக்க வேணும்." தொலைபேசியைத் துண்டித்துவிட்டு கூட்டத்திலே கவனம் செலுத்தத் தொடங்கினான்.கூட்டம் முடிந்த பின்னர் தெய்வேந்திரன் அங்கிள் ஞாபதிற்கு வந்தார்.அவரோடு செல்வனுக்கு பன்னிரன்டு வர…
-
- 29 replies
- 5.6k views
-
-
நடுநிசி தாண்டியும் நித்திரை வராமால் தவித்தார் சுப்பர் என்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் . அவரது அந்த பெயரை மட்டும் சொன்னாலே காணும் ஊரே முழங்காலில் நின்று மண்டியிட்டு மரியாதை செலுத்தும். அது எல்லாம் ஒரு காலத்தில். . நித்திரை இல்லாமால் தவிப்பதுக்கு வயோதிகமா அல்லது வேறு ஏதும் நீண்ட நாள் சுகபடாத வருத்தமா என பெரிய உடல் கூற்று ஆராய்ச்சி எல்லாம் தேவையில்லை . என்ன என்றது மிக இலகு. இப்பவும் இடைக்கடை ஒலித்து ஓய்ந்து மீண்டும் ஒலிக்கும் மனித குரல்களின் கோரஸ் சத்தங்கள் தான் காதுகளில் தார் ஊற்றியமாதிரி அவரது நித்திரைக்கு பங்கம் விளைவித்து கொண்டு இருக்கிறது http://sinnakuddy.blogspot.com/2008/03/blog-post.html
-
- 17 replies
- 3.3k views
-
-
சுது மாத்தையாவும் சுடுபாணும். பாண் எண்டதும் பலரின் நினைவுகள் கட்டாயம் ஊருக்கு ஒருக்கால் போய்வரும்.வெளிநாட்டில் விதம் விதமாய் வகை வகையாய் பாணை சாப்பிட்டாலும். ஊரில் முன்னர் இருந்த ஒரு இறாத்தல் அச்சுப்பாண் றோஸ் பாண் அடுத்ததாய் வித்தியாசமாய் சங்கிலிப்பாண் சீனிப்பாண் மாலுப்பாண் எண்டும் இருந்தது . ஊரில் சாப்பிட்ட பாண் என்பது பலருக்கும் பல சம்பவங்களுடனும் ஒரு தொர்பை கொண்டருக்கும் எனவே பல நினைவுகளை கட்டாயம் ஒரு முறை கொண்டுவரும்.இலங்கை அரசியலையே மாற்றக்கூடிய வல்லமை இந்தப் பாணுக்கு இருக்கு அதாலைதான் ஒவ்வொரு தேர்தல்களிலையும் வேட்டபாளர்கள் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பணின்விலையை குறைப்போம் எண்டு தேர்தல் வாக்குறுதி குடுக்கிறவை ஆனால் பிறகு அவை ஆட்சிக்கு வந்ததும் பாண் இருக்…
-
- 42 replies
- 8k views
-
-
ஊசியிலை மரங்களுடன் கூடிய ஐரோப்பிய மண்ணில் உள்ள இங்கிலாந்தில் பாகிஸ்தானிய இஸ்லாம் மதத்தைச் சார்ந்த பெற்றோருக்குப் பிறந்தவள் றுக்சானா (Ruksana) என்ற அந்தச் சிறுமி. எல்லா இங்கிலாந்துச் சிறுவர் சிறுமியர் போல அவளும் சுதந்திரச் சிட்டாக பள்ளிக் காலத்துக்குள் நுழைகிறாள். அவள் பள்ளியில் துடிப்புடன் செயற்பட்டு சிறந்த மாணவியாக ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய முக்கிய மூன்று பாடங்களிலும் set 1 (உயர்நிலைக்குரிய) மாணவியாகவே இருந்து வந்துள்ளாள். 15 வயதை அடைந்து பருவமும் அடைகிறாள். 15 வயதில் ஒரு சிறுமிக்குள் என்னென்ன அழகிய கனவுகள் ஓடுமோ அத்தனையும் இவளுக்குள்ளும் ஓடிக் கொண்டிருக்கும் வேளையில்.. பாகிஸ்தானிய பூர்வீகப் பெற்றோர் இவளை சுற்றுலாவுக்கு என்று பாகிஸ்தான் அழைத்துச் ச…
-
- 32 replies
- 5.5k views
-
-
கே.எஸ் பாலச்சந்திரன் நடிக்கும் அடைக்கலம் -- நாடகம்
-
- 1 reply
- 1.4k views
-
-
டிங்கிரி.சிவகுரு புராண இதிகாச நாடகங்களையே பார்த்து வாளும்.வேலும்.விழியும் .கண்ணாளா.மன்னா.மந்திரி என்று பழக்கப்பட்டுபோயிருந்த மக்களிற்கு வித்தியாசமான அதுவும் வாழ்வின் அன்றாட நிகழ்வுகளை முளுக்க முளுக்க நகைச்சுவையாக இருவர் மட்டுமே மேயில் தோன்றி நடித்த இரட்டையர்கள்தான் டிங்கிரி மற்றும் சிவகுரு என்பவர்கள்.இவர்களின் வருகை சமூக மற்றும் நகைச்சுவை நாடகங்களிற்கென மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது மட்டுமல்ல. பினர் பல நகைச்சுவை நடிகர்கள் தோன்றுவதற்கும் காரணமாக இருந்தது என்றும் சொல்லலாம். அது மட்டுமல்ல சாதாரணமாக ஒரு நாடகம் போடுவதென்றால் விளம்பரத்தில் நாடகத்தின் பெரைச்சொல்லி பின்னர் அதில் நடிக்கும் நடிகர்களின் பெயரைச்சொல்லி விளம்பரப்படுத்துவதுதான் வழைமை …
-
- 13 replies
- 3.3k views
-
-
விகடனில் வெளியான இந்த கதை எனக்கு பிடிச்சிருந்தது.. ஆறாவது அறிவு கழுத்துப் பட்டையை இறுக்கிக்கொண்டு இன்னொரு முறை கண்ணாடியில் முகம் பார்த்தார் டாக்டர் ராம்நாராயண். மோவாயில் நரை தொட்டு அடர்த்தியாகப் படர்ந்திருந்த தாடியையும், கொஞ்சமாக முன் பக்கம் வெற்று மண்டையைக் காட்டிவிட்டுச் சரிந்த கேசத்தையும் வாஞ்சையாகத் தடவினார். மூப்பின் அடையாளங்கள் துவங்கிய, ஆராய்ச்சி, பரிசோதனை என்று கழிந்த சுவாரஸ்யமற்ற வாழ்க்கைச் சுழற்சியில், எந்தப் பெண்ணும் ஆர்வம் காட்டாத அந்த முகத்தின் மேல் திடீரென்று பிரியம் வந்தவர் போல் பராமரித்தார். இன்னும் அரை மணியில் பத்திரிகைக்காரர்கள், தொலைக்காட்சி நிலையங்கள், செய்தி நிறுவனங்கள் என மொய்த்து புகைப்படம் எடுத்துத் தள்…
-
- 5 replies
- 2k views
-
-
நான் கொஞ்சம் படபடப்பாக படலையைத் திறந்து கொண்டு உள்ளே வந்தேன். ஓடி வந்ததினால் மூச்சு வாங்கியது. ´´ஏன்ரா ஓடுறாய்´´ என வழியில் கேட்ட சுதனண்ணைக்கு, கடைசி விரலைத் தூக்கிக் காட்டி விட்டு வந்ததை நினைக்க சிரிப்பா இருந்தது. பள்ளிக் குடத்தில் இருக்கும் போதே சுற்றிவர நாய்கள் குலைக்கும் சத்தம் கேட்டது. அப்போதிருந்தே துருதுருவென இருந்தேன். அவ்வப்போது வெளியில் எட்டிப் பார்ப்பதை மனோன்மணி ரீச்சர் (டீச்சர்) வேறு கண்டு விட்டா. ´´என்ன பிரச்சனை உனக்கு.. அடிவாங்கப் போறியோ´´ ´´இல்லை ரீச்சர் வெளியில ஆமிக் காரர்´´ ´´அதுக்கென்ன.. உன்னையோ தேடி வந்தவங்கள்? பேசாமல் படத்தைக் கீறு பாப்பம்´´ நான் கடற்கரை என்று தலைப்பிட்டு விட்டு கீழே கொஞ்சம் நீலம், மேலே கொஞ்சம், நீலம் நடுவில் மண்ணிறமென …
-
- 6 replies
- 1.5k views
-
-
``சிங்கள தன்னவத? ´´ (சிங்களம் தெரியுமா) என்றார் கண்ணாடித் தடுப்பிற்கு அப்பால் அமர்ந்திருந்த மீசையற்ற அதிகாரி. இல்லையென்று தலையாட்டினான் சீலன். ``தன்னாய்´´ (தெரியாது) என சிங்களத்திலேயே அவனால் பதிலளித்திருக்க முடியும். கொழும்பில் தங்கியிருந்த கடந்த இரண்டு வருட காலத்தில் எக்காய், தெக்காய், துணாய் எனச் சில எண்களும் மேக்க, பைனவ, கருணாகர எனச் சில பயணச்சொற்களுமாக அவன் அறிந்து வைத்திருந்தான். சென்ற முறை கூட இதே பாஸ்போட் ஒபிஸில் (Office, ஆபிஸ்) தெரிந்த சில சிங்களச் சொற்களை வைத்துத்தான் சமாளித்தான். அப்போதெல்லாம் சிங்களம் தெரியாது எனச் சொல்லும் மனநிலை அவனிடத்தில் இருக்கவில்லை. ``தெரியாது..? எவ்வளவு காலம் இங்கை இருக்கிறது? ´´ இலக்கணங்கள் மீறிய போதும் கேள்வித் தொனியிலான அவர…
-
- 12 replies
- 3.5k views
-
-
29.02.2008 காலை 09.35 இன்று காலை எனக்கு மனம் மிகவும் மனம் பாரமாக இருக்கிறது. உண்மையில் சுஜாதாவின் இழப்பு தொடர்பாகத்தான் அது. ஒரு அறிவாளியின் இழப்பு அது. அவருடனான நேரடி தொடர்பு எனக்கு இருந்தது. பழகுவதற்கு மிக அன்பானவர். ஒரு தேர்ந்த விஞ்ஞானி அவர். அவரின் இழப்பு மிகவும் கவலையாக இருக்கிறது. அனஸ்
-
- 13 replies
- 2.9k views
-
-
தொழுவத்திலிருந்து கட்டியிருந்த மாட்டின் அழுகுரல் கேட்டு நினைவு திரும்பினார் கந்தர். எண்ணக்கோவைகள் எங்கொங்கோ சுழன்று சம்பந்தம் சம்பந்தமில்லாத இடத்துக்கு சென்று திரும்பவும் தொடங்கிய இடத்துக்கு வந்து கொண்டிருந்தன. யோசிச்சு யோசிச்சு மண்டையை உடைச்சாலும் தீர்வில்லாமல் தவித்தார். இறந்த போன மனிசியையும் நினைத்து http://sinnakuddy.blogspot.com/2008/02/blog-post_21.html
-
- 22 replies
- 3.8k views
-
-
பிரம்மலோகத்தில் ஜுவராசிகள் நடிகர்கள் மணியம். எஸ். யேசுரட்ணம் பார்வதி. திருமதி ஆன் அன்ரனி பிரமதேவன். அப்புக்குட்டி ராஜகோபால் நாய் .பி.லோகதாஸ் வெளவால். ஆந்தையாக. திருமதி நவரட்ணராணி சிவலிங்கம் http://www.tamilnews24.com/twr/audio/Naada...iramalogam.smil http://eu-avalam.com/
-
- 5 replies
- 2.2k views
-
-
www.tamil.2.ag என் இனியவளே, நான் உன்னை ஒவ்வொரு பொழுதும் சிந்தித்த்துக்கொண்டே இருக்கிறேன். என் கண்களில் காணும் காட்ட்சிகள் உன்னை ஞாபகப்படுத்துகின்றன. என் மனக்கண்களிலும். எம்மை மறப்பதற்கு யார் காரணம்? நானா? யார்? தெரிவித்துவிடு சரி செய்து முடியும் என்ற நம்பிக்கை என்னை தொந்தரவு செய்கிறது. பாவத்தை என்மேல் சுமத்துவியா? ஏங்குகிறது மனம். பாவத்தின் தண்டனையை அனுபவிக்க எனக்கொரு சந்தர்பம் தா. உன்னை மட்டும் நேசிக்காதோ என்காதே. என்னில் நான் இல்லை உன்னை கண்ட முதல். இப்பவும் நாமாகவே வாழ்கிறேன் நான். நீ எவவாறு என்று அறிய துடிகிறேன். என்ன செய்கிறாய், என்ன நினனகிறாய் என்பதை ஒவ்வொரு நிமிடமும் அன்று போல் இன்றும் மனத்திரையில் ஓடுகிறது. உன்னை குழந்தையாய் பாதுகாத்தேன் என்ம…
-
- 0 replies
- 1.1k views
-
-
மலரே மௌனமா? வசந்தகால ஆரம்பத்தின் இதமான குளிர்காற்று உடம்பைத் தழுவ புரண்டு படுத்த பிரியாவுக்கு அதிகாலையிலேயே விழிப்பு வந்து விட்டது. இதுவரை தூங்கியது கூட கோழித் தூக்கம்தான். மனதில் விவரிக்க முடியாத விநோதமான உணர்வுகளின் சங்கமம். இன்று தன் மனதுக்கினியவனுக்கு இன்ரவியூ நடக்க இருக்கிறது. அதனால்தான் அவள் மனதுக்குள் பயம் கலந்த மகிழ்ச்சி. காரணம் தன் பெற்றவருக்தும் உடன் பிறப்புகளுக்கும் தெரியாமலே தன் மனம் கவர்ந்த பிரசாந்தை பொன்சர் செய்திருந்தாள்;. இச் செய்தி வீட்டிலிருப்பவர்களுக்குத் தெரிந்துவிடும் என்று மிகக் கவனமாகவே செயற்பட்டாள்;. தனது வீட்டிலிருந்து போன் எடுக்காமல் தன் நண்பியின்; வீட்டிலிருந்துதான் பிரசாந்திற்கு போன் எடுப்பது கடிதத் தொடர்புகூட நண்பியின் வீட்டிற்கு வரு…
-
- 7 replies
- 2.2k views
-
-
கணக்குப் புத்தகமும் காதலும் இந்தவார ஒரு பேப்பரில் காதலும் கணக்குபண்ணிறதும் இரண்டும் ஒண்டுதானே என்று நீங்கள் யோசிக்கிற கோணத்திலை யோசித்தாலும் சரிதான் ஆனால் என்ரைவாழ்க்கையிலை இந்த காதல் கணக்குப்பாடம் இரண்டும் ஒண்டுதான் ஏணெண்டால் இரண்டிலையும் நான் அடிக்கடி கோட்டைவிட்டிருக்கிறன்.படிக
-
- 21 replies
- 4.1k views
-
-
காதலர் தினத்தை முன்னிட்டு டைகர் பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும் "இதய காவியம்" ஜம்மு பேபியின் "காதல்"...(தற்போது யாழ்கள சினிமாவில் அட்டகாசமாக திரையிடபட்டுள்ளது).... *கதாநாயகன் - "காதல் இளவரசன்" கலைஞன் திரைபடத்தில் மதன் *கதாநாயகி - "காதல் இளவரசி" வெண்ணிலா திரைபடத்தில் லாவணியா *இவர்களுடன் டைகர் பிலிம்சின் தனித்துவ கதாநாயகன் "காதல் மன்னன்" சுண்டல் திரைபடத்தில் சுரேஷ் அறிமுகம் சிரிபழகி அனுஷா (சிட்னி வருகை) அறிமுகம் இனிய இசை இன்னிசை (பிரிஸ்பன் வருகை) *கெளரவ வேடத்தில் அட்டகாசமான குணசித்திர நடிகர் நெடுக்ஸ் தாத்தா (திரைபடத்தில் கனகசுந்தரம்) கலக்கல் மன்னன் சுவி.. (தற்போது உங்கள் குடும்ப திரையரங்கான யாழ்களத்திள் காண்பிக்கபடுகிறது)…
-
- 29 replies
- 4.8k views
-
-
உறவுகளிற்கு வணக்கம் இது என்னுடைய இன்னும் ஓர் சிறியமுயற்சி. ஈழத்தமிழ் கலைஞர்கள் படைப்பாளிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் பற்றிய விபரங்களை கணணிமுலம் ஆவணப்பதிவாக்குவதே என்னுடைய நோக்கமாகும்.என்னுடைய இந்த நோக்கத்திற்கும் வழைமை போல உறவுகள் அனைவரினதும் ஆதரவும் இருக்கும் என நம்பிக்கையுடன் தொடங்குகிறேன். ஏற்கனவே பிரான்சில் வாழும் திரு வண்ணை தெய்வம் அவர்கள் காலங்கள் வாழ்த்தும் 300 ஈழத்துக்கலைஞர்கள் என்றொரு ஆவணத்தொகுப்பினை புத்தகமாக வெளியிட்டுள்ளார். அவரது அனுமதியுடன் அவரது புத்தகத்தில் இருந்தும் நண்பர்கள் உதவியுடனும் மற்றும் எனக்கு தெரிந்ததையும் உங்கள் ஆதரவுடன் ஆவணமாக்குகின்றேன். நன்றி சாத்திரி. முதலாவதாக நாடகக்கலைஞர் திரு முகத்தார் யேசுரட்ணம் அவர்கள் முகத்தார…
-
- 9 replies
- 2.7k views
-
-
அந்த ரயிலின் வருகையை எதிர்பாத்து இங்கை பலர் படுகிற பாடு இருக்கே சொல்லி மாளேலாது.இன்னும் சிறிது நேரத்தில் இந்த இந்தாம் நம்பர் மேடைக்கு காங்கேசன்துறையை நோக்கி புறப்பட இருக்கும் யாழ் தேவி வந்தடையும் என்று புகையிரத நிலைய ஒலிப்பெருக்கி மும்மொழிகளிலும் திரும்ப திரும்ப சொல்லி மனம் பாடம் பண்ணி கொண்டிருக்கிறது. அதுவும் தமிழை மிகவும் கடித்து துப்பி அறிவிப்பதால் என்னவோ அது வேறு மொழி போல காற்றில் பரவி கரைந்து கொண்டிருக்கிறது http://sinnakuddy.blogspot.com/2008/02/blog-post.html
-
- 6 replies
- 2.1k views
-
-
மன்னவா மாலை கொடு வேலை முடிந்து களைப்புடன் வீடு வந்து சேர்ந்த காயத்திரியை ஓடிவந்து கட்டிக்கொண்ட பிரியா “அம்மா நாங்க வெளியில போவமா?” என்று கேட்டகவும் தன் ஒரே மகள் பிரியாவை வாஞ்சையுடன் அணைத்தபடி “நான் குளித்து உடுப்பு மாத்திப் போட்டு வாறன் இருவருமாகக் கடைக்குப் போகலாம்” என்ற காயத்திரியின் பதிலில் திருப்திப் பட்டவளாக குதூகலமாக அறைக்குள் ஓடிய மகளை பெருமூச்சுடன் பார்த்தபடி ஒருநிமிடம் நின்றவள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். சில வினாடிக்குள் அவள் மனதிலும் சில சலனங்கள். “என் பிரியாவை விட்டு நான் தூரமாகிவிடுவேனோ?” “சீ அப்படியெல்லாம் நடக்காது” இந்த ஜந்து வருடமாக பிரியாதான் என் வாழ்வில் ஒரேயொரு பற்றுக்கோடாக இருக்கிறாள். சிந்தனையுடன் குளியலறைக்குள் நுழைந்தவள் ஒரு பாட்டை முணும…
-
- 7 replies
- 2.4k views
-
-
வெண்ணிலா வானத்தில் முழுமதி ஒளிவீசிக் கொண்டிருந்தது. அன்று போயா விடுமுறை. எங்கும் கடைகள் மூடப்பட்டிருந்ததால் வீதி வெறிச்சோடிக் கிடந்தது. அந்த அகலமான வீதியில் தன்னந்தனியாக நடந்துகொண்டிருந்த அருணிற்கு சொந்த மண்ணின் காற்றைச் சுவாசிப்பது சுகமாகவே இருந்தாலும் சுதந்திரக் காற்றை எப்போ சுவாசிக்கப் போகிறோம் என்று அங்கலாய்ப்பாகவே இருந்தது. ஜந்து வருடங்களாக திரைகடலோடித் திரவியம் தேடிவிட்டு நேற்றுத்தான் அருண் நாடு திரும்பி இருந்தான். தன் சொந்தமண்ணில் நடைபெற்றுவரும் அவலங்களை அப்பப்போ செய்திகள் மூலம் அறிந்த அருணிற்கு மனதுக்குள் இனம் புரியாத ஏதோ ஒரு உணர்வு. ஒரு விதமாக ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டு தனது நாட்டிற்குத் திரும்பி வந்தாலும் தன் அன்னையையும் தங்கைகளையும் பார்க்க இன்னும் வழ…
-
- 4 replies
- 2.1k views
-
-
Voracious in my appetite for the uncertain and unknown, I do not whine for paradise as Ovid did, expelled from Rome .-Baudelaire. சபிக்கப்பட்ட கவிஞன் ஷார்;ஸ் போதலயர். 'புல்லின் இதழ்கள்' (Leaves of grace) என்ற தலையங்கம் எவ்வாறு வோல்ட் விற்மனை உடனடியாக நினைவுக்குக் கொண்டுவருகிறதோ , அவ்வாறே 'துன்பத்தின் பூக்கள்' (Fleurs du mal) என்று கூறியவுடன் ஷார்ல் போதலயர் என்ற நாமம் ஞாபகத்தின் மேற்பரப்பில் மிதக்கவாரம்பிக்கிறது. ஏழு வயதில் தந்தையை இழந்து, தாயே தன் பிரபஞ்சமென்று அடங்காத பாசங்கொண்டு வாழ்ந்த சிறுவன் ஷார்ல் அவளின் இரண்டாந்தாரத் திருமணத்தின் போது தான் இரண்டாந்தரம் அனாதையாக்கப்பட்டதாக உணர்கிறான். தனக்கும் தாய்க்குமான பிரத்தியேகப் பாச உறவில் வேறொரு உறவு புகுந்து…
-
- 0 replies
- 833 views
-
-
ஊருக்குப் போனேன்- பாகம் 4 (இறுதிப் பாகம்) -வாசுதேவன் இதுதானா என் வீடு ? இத்தனைவருட காலமாகக் காணக் கனவு கண்டு கொண்டிருந்த என் வீடு இதுதானா ? முற்றத்தில் தென்னைமரமில்லாமல், வேப்பமரமில்லாமல்,வேலியில் பூவரசமரமில்லாமல், கடதாசிப்பூக்கள் இல்லாமல், முருங்கைமரங்கள் இல்லாமல், புல்பூண்டு சூழக் கிடந்த இது என் வீடா ? என் வீட்டிற்கு வடக்குப் பக்கத்தில் ஒரு வீடு இருந்தது. அதையடுத்து இன்னும் பல வீடுகள் இருந்தன. அதைத் தொடர்ந்து பனங்கூடல் இருந்ததே ? என் வீட்டிற்குத் தெற்குப் பக்கத்தில் ஒரு வீடு இருந்தது . அதைத்தொடர்ந்து இன்னும் பல வீடுகள் இருந்தன. என் வீட்டு வேப்பமர உச்சியிலிருந்து பார்த்தாலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரையும் வீடுகள் இருந்தனவே ? என் வீடு என்பது நாற்திசையும் பரந்திர…
-
- 9 replies
- 2.3k views
-
-
டைகர் பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும் மற்றுமொரு திரைகாவியம் "புதிய சிவப்பு ரோஜாக்கள்"... (கண்டிப்பா வயது வந்தவர்களிற்கு மட்டுமே குழந்தைகள் மற்றும் கர்பிணி பெண்கள் தயவு செய்து பார்க்க வேண்டாம்...) கதாநாயகன் - இளைய தளபதி சுண்டல் (டைகர் பிலிம்சின் தனித்துவ கதாநாயகன்) இவருடன்..... *மக்கள் திலகம் திரு.கலைஞன்.. *நடிகர் திலகம் திரு.கந்தப்பு.. *கெளரவவேடத்தில் கனவுநாயகன் மருமோன்.. மேலும் புதுமுக நடிகர்களின் அட்டகாசமான நடிப்பில் மலர்ந்துள்ள திரைகாவியம்... வெளுறிய முகபரப்பில் உறைந்து போனது விழி! பூக்களும்,நிலவும்,கனவுகளும் கையூடு உதிர்ந்து கொட்ட கிடிநடுங்கி ஒரத்தே ஒதுங்கி உயிருக்காய் இறைஞ்சியது வாழ்க்கை!! "புதிய சிவப்பு ரோ…
-
- 50 replies
- 7.6k views
-
-
இந்தவார ஒரு பேப்பரில் வெளியான சுதந்திராவின் ஞாபகப்பதிவுகளில் வெளியான கதை இது. எங்கள் ஊர் அழகியின் மரணம்...மறைபட்ட மரணமாய்....... ! மழையில் நனைந்த நிலமும் மாரியில் கரைந்த புழுதியுமாக அந்தநாள். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒவ்வொருவரையும் விசாரித்தபடி பூசனியக்கா போனதும் , அதன் பின் அவரது வீட்டிலிருந்து கேட்ட அழுகையும் அதன் பின்னால் நடந்த பூசனியக்காவின் சாவும் அந்தச் சிறுவயதில் அழுவதைத்தவிர வேறெதையும் செய்யத் தெரியவில்லை. நஞ்சருந்தி தற்கொலை பண்ணிய பூசனியக்காவின் இழப்பானது அவரது குடும்பத்தைவிட மற்றவர்களுக்கு வளமையான ஒரு மரணவீடு. சில தசாப்தங்களைக் காலம் அள்ளிக் கொண்டு போன பின்னர் என் ஞாபகங்களுக்குள் பூசனியக்கா..... எங்கள் ஊரின் அன்றைய அழகி பூசனியக்கா. இராமநாதன் கல்லூரியில் ப…
-
- 6 replies
- 2.1k views
-
-
நான் யாழில் புலம்பெயர் தேசத்தில் நடந் உண்மைச்சம்பவங்கள் பலவற்றை முன்னர் கதையாக்கியிருந்தேன் அவற்றின் பதிவுகள் வைத்திருக்கவில்லை இந்தக் கதையும் நான் யாழில் போட்டிருந்ததுதான் இன்று கூகிழில் மேய்ந்த பொழுது இந்தக் கதை கிடைத்தது இப்போ பல புதியவர்கள் யாழில் இருப்பதால் திரும்ப இதை இணைக்கிறேன் நன்றி புதன்கிழமை, 31 ஆவணி 2005 யாழ் பட்டால்த்தான் கடிதம் எழுதிக்கொண்டிருந்த சிவா கதவை யாரோ திறக்கும் சத்தம் கேட்டு எட்டிப்பார்த்தான். "எட சண்முகநாதன், நான் ஆரோ கள்ளர் கள்ளத்திறப்பு போட்டு கதவைத் திறக்கிறாங்கள் எண்டு நினைச்சன். எங்கையடா ஒருகிழமை லீவுஎண்டனி... அதுக்கு பிறகு நாலு நாளா ஆளைக் காணேல்லை. உன்ரை கான்ட் போனுக்கும் அடிச்சுப்பாத்தன். வேலை செய்யேல்லை. என்னடா உன்ரை கோல…
-
- 8 replies
- 2.1k views
-