Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. என்னடா முனிவர் இப்ப கதையில இறங்கிவிட்டார் என்று பார்க்கிறியளே நம்மட பொடியங்கள் செய்யுற வேலையை பார்க்க முடியல்ல அதுதான் இந்த கதை[வெளிநாட்டில ] வணக்கம் சாமித்தம்பி அண்ணே என்ன மகன் வெளிநாடு போக போறான் போல ஓம் சிவன் .நல்லாத்தான் படித்தான் ஆனால் இங்கு வேலை எடுக்கிற என்றால் சும்மாவா என்ன!! அதுவும் நம்மட தமிழ் சனங்களுக்கு வேலை கொடுக்கிறதென்றால் ஒரு வேண்டா வெறுப்பாத்தானே பார்க்கிறாங்கள் அதுதான் சும்மா இங்கு இருந்து என்ன செய்யிறது ஆளை வெளிநாட்டுக்கு அனுப்புவம் என்று பார்க்கிறன் இங்க அவனுக்கு பயந்து இவனுக்கு பயந்து இருக்கிறத்தை விட அங்க போனால் கொஞ்சம் நம்ம நிம்மதியாக இருக்கலாம் தானே...அது சரி அவ்வளவு காசுக்கு எங்க போவியள் . என்ன செய்யுற சிவன் ஒரு வாய் சோறு தாற நிலத்தைத…

  2. அக்கா கேக்குத….ஓம் கேக்குது சொல்லுங்கோ…..அவள் தன்னை முதலில் அறிமுகம் செய்து கொண்டாள். ஞாபமிருக்கோ…? தன்னைப்பற்றி இன்னும் நினைவு கொள்ள வைக்கும்படியான நாட்களை ஞாபகப்படுத்தினாள். அக்கா….நான் முகாமிலயிருந்து வெளிய வந்திட்டன்….அவரைத்தானக்கா காணேல்ல…..தேடலாமெண்டு சொல்லீனமாக்கள்…ஆனா நான் எல்லா இடத்திலயும் தேடீட்டன் ஒரு தொடர்புமில்லை….இஞ்சை ஆக்கள் சொல்லீனமக்கா கனபேர் வெளிநாட்டிலை இருக்கினமாமெண்டு….இவரும் உங்கினேக்கை எங்கையும் இருப்பரோண்டு தேடேலுமேக்கா…..? அவளது அப்பாவித்தனமான கேள்விக்கு எந்தப்பதிலைச் சொல்ல…..? ஆரிட்டையும் விசாரிச்சுப் பாப்பம்….அப்ப ஆரோடை இப்ப இருக்கிறீங்கள்……? எத்தினை பிள்ளையள் ? ஒரு தோட்டக்காணியில என்ரை பாவத்தைப்பாத்து ஒரு கொட்டிலொண்டு போ…

    • 6 replies
    • 2.3k views
  3. புலம் பெயர் ஆரம்ப காலகட்டத்தில் ஊரிலிருந்து யாருக்காவது கலயானமாம் என்று கடிதம் போட்டால் அந்தக்கடிதம் இங்கு வந்து சேரும் போது அவருக்கு குழந்தை பிறந்திருக்கும். தொலை பேசுவதானால் யாரும் கொழும்புக்கு வந்தால்தான் உணடு அப்படி ஒரு தொடர்புகள் குறைந்த காலகட்டத்தில் வாழ்ந்த எமக்கு ஊருக்கு போய்வரக்கூடிய ஒரு நிலமையை உருவாக்கியது சமாதன காலம். இந்த வாய்ப்பு பலருக்கு தங்கள் ஏக்கங்களை தீர்க்க ஓரளவாவது உதவியது.தம் பெற்றோர்,சொந்தங்கள்,நன்பர்கள்,தவழ்ந்து திரிந்த முத்தம் தொடக்கம் காதல் கடிதம் கொடுக்க காத்திருந்த ஒழுங்கைவரை என பார்க்க பழக என ஊர் போய் வந்தார்கள். ஆனால் இந்த வாய்ப்பை எல்லாரும் மேற்ச்சொன்ன காரனங்களுக்காக மட்டும்தான் பயன்படுத்தினார்கள் என்று சொல…

  4. வீட்டில் இருந்து புறப்படும்போது மனதில் ஒரு திருப்தி இருக்கவில்லை. ஏன் அந்த அதிருப்தி என்றும் விளங்கவில்லை. சில சமயங்களில் இப்படி நேர்ந்து விடுகிறது. அடிமனதில் உறைந்துபோன வாழ்வு அனுபவங்களின் வெளிப்பாடாக இருக்கலாம். மனதில் திருப்தியீனத்துடன் வெளியே செல்வதற்கு விருப்பமில்லை. அப்படிச் செல்லாமல் இருப்பதற்கும் இயலவில்லை. மிக முக்கியமான காரியம். அதனை எப்படித் தவிர்த்துவிட இயலும்? தவிர்த்து விட்டு பின்னர் அதற்கென்ன நியாயம் சொல்லிக் கொள்ளலாம். அவன் மனம் அவனுக்குப் புரியவில்லை. மனதின் விந்தை விளையாட்டு இதுதான். இதனை விளையாட்டென்று சொல்ல இயலாது. மனதின் எச்சரிக்கையாகவும் அது இருக்கக்கூடும். அந்தச் சமிக்ஞை, முன்னெச்சரிக்கை என்ன என்று உணராது, மீறி நடந்து, ஆபத்தில் போய் வீழ்ந்துவிடவ…

    • 0 replies
    • 1.2k views
  5. வெள்ளிக்கிழமை இரவுகள் அ.முத்துலிங்கம் ஏதோ காட்டு மிருகம் துரத்தியதுபோல உள்ளே பாய்ந்தாள் ஆகவி. பத்து வயதுதான் இருக்கும். அவளுடன் வந்த காற்றும் உள்ளே நுழைந்தது. புத்தகப் பையை கீழே எறிந்தாள். எதையோ தேடுவதுபோல இரண்டு பக்கமும் பார்த்தாள். பத்து மைல் தூரம் ஓடிவந்ததுபோல அவளுக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. தாயார் சமையல் அறையில் இருந்து மெள்ள எட்டிப் பார்த்தார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இப்படி நடப்பதுதான். பள்ளியிலிருந்து வரும்போதே சண்டை பிடிக்க ஏதாவது காரணத்துடன் வருவாள். அகிலா தனியாக கனடாவுக்கு அகதியாக வந்தபோது நாலு மாதம் கர்ப்பம். ஐந்து மாதம் கழித்து ஆகவி பிறந்தாள். தாயாரின் ஒரே செல்லம். அவர் மடியில் தலைவைத்து படுக்க அகிலா முடியை கோதிவிட்டார். ‘கோதாதே. என்…

  6. வெள்ளிப்பாதசரம்!… ( சிறுகதை )…. – இலங்கையர்கோன் (த. சிவஞானசுந்தரம்) அகரன்June 17, 2018 சிறப்புச் சிறுகதைகள் (2) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – இலங்கையர்கோன் எழுதிய ‘வெள்ளிப்பாதசரம்’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தன் வீட்டுக்கு ஒரு அடுக்குப் பெட்டியும் தனக்கு ஒரு தையற் பெட்டியும் வாங்கவேண்டும் என்று நினைத்து வந்தவளுடைய உள்ளம் விம்மும்படி கோவில் வீதியெல்லாம் பெட்டிகளும் கடகங்களும் மலைமலையாய்க் குவிந்திருந்தன. குஞ்சுப்பெட்டி, அடுக்குப்பெட்டி, தையற்பெட்டி, மூடற்பெட்டி, பின்னற்பெட்டி… ஊ! எத்தனை வகை! அருகில் மாட்டை அவிழ்த்து அதன் வாயில் பொங்கிய நுரையை வழித்து அதன் மினுமினுக்கும் கரிய முதுகில் தேய்ப்பதில் க…

  7. வெள்ளை நிற பள்ளிச் சீருடை சயந்தன் December 30, 2018 மிருதுவான கன்னத்தில் பிஞ்சு விரல்களைப் பொதித்தபடி நிச்சலனத் தூக்கத்திலிருந்த குழந்தையின் கழுத்தை நெரித்துக்கொல்வதே காலத்திற்குச் செய்கின்ற நீதியாயிருக்குமென்று இளமாறனுக்குத் திடீரென்று தோன்றிற்று என்றெழுதிய கதைசொல்லி இக்கதைக்குப் பயன்படுமென்று கருதிய ஆவணங்களையும், கடிதங்களையும், கத்தரித்த செய்தித் துணுக்குகளையும் தொடர்ந்து வாசிக்கலானான். 1999.05.16 ஹொட்டஹேன பொலிஸ் நிலைய ஆய்வாளர் ஆரியரட்ணவினால் கொழும்பு பெரியாஸ்பத்திரியில் வைத்துப் பெறப்பட்ட வாக்குமூலத்தின் பிரதி. (வலது மூலையில் பச்சை நிறப் பேனாவால் “நல்ல பொலிஸ்காரன்” என்று எழுதப்பட்டிருந்தது.) …பெயர் அரங்…

  8. அவர் பூபாலசிங்கம் உதயகுமார். அவரது மனைவி ப்ரியா உதயகுமார். ‘தாய்’ எனும் கிரீடத்துக்கு உரிமை கொண்டாட அவருக்கு இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே இருந்தன. உதயகுமாரின் சாயலையொத்த அழகிய பிஞ்சுக் குழந்தையொன்றை உதயகுமாருக்குப் பரிசளிக்க அவர் கனவு கண்டார். அக் குழந்தையினதும் ப்ரியாவினதும் எதிர்காலத்தை சிறப்பாக்குவதே உதயகுமாரின் இலட்சியமாக இருந்தது. அதற்காக அவர்கள் நிறைய கனவுகள் கண்டார்கள். அவர்களது அழகிய அக் கனவுகள் மேல் ஷெல் மழை பொழிகையில் அவர்கள் தமது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தப்பியோட வேண்டியிருந்தது. எனினும், தமது பாதுகாப்புக்காகத் தப்பியோடுவதைக் கூட அவர்களால் செய்ய முடியாதிருந்தது. ஏனெனில், விடுதலைப் புலிகளால் பொதுமக்கள் அந் நேரம் மனிதக் கேடயங்களாக ஆக்கப்பட்டிருந்தனர்.…

  9. வெள்ளைக்காரன் அ.முத்துலிங்கம் சிண்டரெல்லா கதையில் யார் கதாநாயகன் அல்லது நாயகி என்று கேட்டேன். நான் கேட்டது ஓர் ஆறு வயது பெண் குழந்தையிடம். அந்தக் குழந்தை பதில் சொல்ல ஒரு விநாடிகூட எடுக்கவில்லை. ’மணிக்கூடு’ என்றது. நான் திடுக்கிட்டுவிட்டேன். சிண்டரெல்லாவைச் சொல்லலாம், அல்லது ராசகுமாரனை சொல்லலாம். அல்லது தேவதையை சொல்லலாம். ஏன் சிண்டரெல்லாவின் இரண்டு சகோதரிகளைக் கூடச் சொல்லியிருக்கலாம். இது புதுவிதமாக இருந்தது. யோசித்துப் பார்த்தேன். அந்தக் குழந்தை சொன்னது சரிதான். மணிக்கூடு இல்லாவிட்டால் கதையே இல்லையே. அதுதானே முடிச்சு. 12 மணி அடிக்கமுன்னர் சிண்டரெல்லா வீடு திரும்பவேண்டும். இதுதான் தேவதையின் கட்டளை. ஆகவே கதையில் முக்கியமானது மணிக்கூடுதான். …

  10. இன்றைக்கு ஒரு கை பார்க்கிறது தான்... என்று காலையில் நித்திரையால எழும்பினது முதலே ஏதேதோ எண்ண அலைகள் எழுந்து என்னுள் முட்டி மோதிக் கொண்டிருந்தன. சரி அது இப்போதைக்கு கிடக்கட்டும்.. என்று ரீவியை ஆன் செய்து மனதின் எண்ண ஓட்டத்தை கஸ்ரப்பட்டு மாற்ற முற்பட்டுக் கொண்டிருந்தேன். ஆப்கான் எல்லையை ஒட்டிய பாகிஸ்தான் கிராமத்தில் அமெரிக்க றோன் (ஆளில்லா விமானம்) நடத்திய தாக்குதலில் 16 தலிபான் பயங்கரவாதிகள் பலி என்று பிபிசி மணத்தியாலத்துக்கு ஒரு தடவை முக்கிக் கொண்டிருந்தது. இவங்களுக்கு வேற வேலை இல்ல.. ஒருக்கா சொல்லுவாங்கள்.. பயங்கரவாதிகள் பலி என்று. பிறகு இரண்டு நாள் கழிச்சு.. சொல்லுவாங்கள் சிறுவர்கள் உட்பட 16 பொதுமக்கள் பலி என்று. பிறகு சொல்லுவாங்கள்.. தவறுதலாக நடந்த அந்த தாக…

  11. ஓய்வுக்காக காட்டுக்குச் சென்றபோது தனது செல்ல நாயையும் அழைத்துப் போனார் ஒரு அரசர். அவர் வேட்டையில் மும்முரமாக இருக்க, அங்குமிங்குமாக பாய்ந்துபாய்ந்து காட்டின் வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திக் கொண்டிருந்தது நாய். பல நிமிடங்களுக்குப் பிறகுதான் தான் வழியைத் தவறவிட்டுவிட்டதை உணர்ந்தது. அப்போது சற்று தூரத்தில் புலி ஒன்று வருவதைக் கண்டது நாய். அது தன்னை வேட்டையாடத்தான் வருகிறது என்பதையும் உணர்ந்தது. தப்பிப்பது எப்படி என்று எண்ணியபோது எதிரில் சில எலும்புத் துண்டுகளைக் கண்டது. சட்டென ஒரு காரியம் செய்தது அந்த நாய் . புலிக்கு முதுகு காட்டியவண்ணம் எலும்புத் துண்டுகளின் முன் அமர்ந்தது. புலி அருகில் வந்தவுடன் "ஆஹா...புலியின் மாமிசம் எவ்வளவு சுவை! இன்னும் ஒரு புலி கிடைத்தால் நன்றாக இ…

  12. TN 00 E - 1111 குளத்தில் சிறுநீர் கழிக்கும் சிறுவன் பூமியில் இருந்தபடி ஆகாயத்தை அசைக்கிறான்! - ஜென் கவிதை சனி, ஞாயிறு தவிர்த்து, தினமும் காலையில் இவனும் இவன் மகனும் பள்ளிக்குக் கிளம்புவார்கள். மகன் படிக்கும் பள்ளி யில் அவனை இறக்கி விட்டுவிட்டு, இவன் தன் பள்ளிக்குப் புறப்பட்டுப் போவான். இன்றுவரை மகனது நம்பிக்கையில் இவனும் ஒரு மாணவன்தான். தேர்ட் ஸ்டாண்டர்ட் 'எ’ செக்ஷன் படிக்கிறான். அதுவும் பல வருடங்கள் அதே தேர்ட் ஸ்டாண்டர்டில் ஃபெயிலாகி ஃபெயிலாகி 'கே’ செக்ஷனில் இருந்து இப்போதுதான் 'எ’ செக்ஷன் வந்திருக்கிறான். பள்ளிக்குச் செல்லும் வழியில் இவர் களது உரையாடல் இப்படித் தொடங்கும். 'அப்பா... ஹோம்வொர்க் பண்ணிட் டீங்களா?’ 'அய்யோ மறந்திட்டேன் ராஜா!’ 'போச்சு. நல்லா மாட்டிக்…

  13. வேட்டு - ஜெயமோகன் எருமைமாட்டின் இறைச்சியை மிகநுணுக்கமான துண்டுகளாக நறுக்கி குருமிளகும் இஞ்சியும் சேர்த்து அரைத்த மசாலாவுடன் கருகப்பொரித்து எடுக்கும் ஒரு தொடுகறிக்கு புகழ்பெற்ற முழுப்பிலங்காடு ஜானம்மாவின் விடுதியில் நானும் ஔசேப்பச்சனும் ஸ்ரீதரனும் குமாரன் மாஸ்டரும் பழனியப்பனும் அமர்ந்திருந்தபோதுதான் ஔசேப்பச்சன் “பிரதர் லைஃப் இஸ் எ மித். இதில் காதல் கற்பு எதற்கும் எந்த மதிப்பும் இல்லை. காமம், அதுமட்டும்தான் உண்மை. ஐந்து நிமிட நேர உண்மை. ஒரு இரண்டுமணிநேரம் அந்த உண்மையைச் சுற்றி அழகான பொய்யை கட்டிக்கொள்ளமுடியும்… அவ்வளவுதான்” என்றான் பழனியப்பன் ஒரு புதிய பிளாண்ட் திறந்திருந்தமையால் ரெமி மார்ட்டின் பதிமூன்றாம் லூயிஸ் ரேர் காஸ்கின் செலவு அவனுடையது. அவன் மெல்லிய ஏப…

    • 8 replies
    • 984 views
  14. வேட்டை - வா.மு.கோமு உச்சி வெய்யில் ஏறியிருந்தது. தலைக்குச் சூடு தெரியாமலிருக்க, தோளில் கிடந்த துண்டை உதறி உருமாலைக் கட்டுக் கட்டியிருந்தார் ஆரப்பன். தரையைத் தொட்டுவிடுமோ என்கிற மாதிரி, அடிக்கடி தொங்கி வரும் நாக்கை வாய்க்குள் இழுத்துக்கொண்டு டைகர் அவருக்கும் முன்னால் வேலியோரமாக அவரைப் பத்திரமாகக் கூட்டிப் போவதுபோல் நடந்தது. இருவருமே சங்கித்தான் போயிருந்தார்கள். போக, இருவருக்கும் வயதும்வேறு ஆகிவிட்டது. ‘‘ஏப்ரல்லயே வெய்யொ இந்தப் போடு போட்டா, இன்னமும் மே மாசமுன்னு ஒண்ணு முழுசாக் கிடக்கே டைவரே! ஒடம்புல இருக்குற எல்லா மசுருகளும் கருகிப்போயிரும். கருகல் வாசம் நம்ம மூக்குக்கே அடிக்கும் பாரு, வடைச் சட்டி தீயுற வாசமாட்டொ” டைகரிடம் சொல்ல…

  15. Started by கோமகன்,

    1977 ல் ஒருநாள் காலைமை எங்கடை வீட்டு கோலிலை இருந்து படிக்கின்றன் எண்டு அப்பாவுக்கு படம் காட்டிக்கொண்டிருந்தன் . எனக்கு அப்பாவிலை செரியான கோபம் . நான் தமிழிலை 85 மாக்ஸ் எடுத்தனான் . அவருக்கு நான் 95 மாக்ஸ் எடுக்கேலையெண்டு தென்னம்பாழையாலை தன்ரை கோபத்தை என்னிலை தீத்து போட்டார் . நான்தான் வகுப்பிலை கெட்டிக்காறன் . எலாப்பாடத்திலையும் 80க்கு மேலை எடுப்பன் . நல்லாய் விளையாடுவன் . நான்தான் உயரம் பாயிறதிலையும் சரி , குண்டு எறியிறதிலையும் சரி , உதைபந்து அடிக்கிறதிலையும் சரி முதல் ஆள் . இதாலை பெட்டையளிட்டை போட்டி ஆர் என்னோடை கூடப் பளகிறதெண்டு . இந்த குவாலிபிக்கேசன் எல்லாம் என்ரை அப்பரை குளித்திப்படுத்தேலை . என்னை தென்னம்பாழையாலை வகுந்து போட்டார் . அப்பர் அடிச்ச காயம் எனக்க…

  16. வேட்டையன்– சித்தாந்தன் ஆத்மார்த்தனுக்கு அன்றைய பொழுது எரிச்சலுடனேயே விடிந்தது. அறையின் மூலைக்குள் இருந்து தவளை ஒன்று கத்துவதைப்போல அவன் மனைவியின் குரல் ஒலித்தது. ‘எழும்புங்கோ உங்களை யாரோ தேடி வந்திருக்கிறார்’ இந்தக் காலை வேளையில் தன்னை யார் தேடி வந்திருப்பார்கள்? அதுவும் இன்று விடுமுறை நாள். மிக்க அலுப்பும் சோர்வும் படர கட்டிலிலிருந்து எழுந்து கொண்டான். நீண்டதோர் பெருமூச்சு. காலை எழுந்தவுடனேயே வாயலம்பாமல் தேநீர் பருகும் பழக்கத்தைக் கொண்டவன் ஆத்மார்த்தன். ஆனால் சில நேரங்களில் இந்த வழக்கத்தை மறுதலிப்பது போலவும் அமைந்து விடுவதுண்டு. இரவு முழுக்கவும் தன்னுடைய பண்ணையின் கணக்குகளைப் பார்த்து முடித்துவிட்டுத் தாமதமாகத்தான் படுத்தான். இரண்டோ அல்லது ம…

  17. “வேந்தர் விலாடிமிர் வீழ்ந்தார்! வேந்தர் வேலன் வாழ்க!!” இராணியை அந்த இடத்துக்கு கொண்டு வந்தவுடன், வேந்தர் விலாடிமிரின் பதினைந்து வருட ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டோம் என்று வேலனுக்குத் தெரியும். மேற்கண்ட வரிகளை நாளைய நாளிதழ்கள் அலறும். இந்த நாளுக்குத் தான் கடந்த ஐந்து வருடங்களாக போராடிவந்தான். பன்னிரண்டு சுற்றுப் போட்டியின் இறுதி ஆட்டம் வேலனின் வாழ்க்கைக் கனவை நனவாக்கிவிட்டது. விலாடிமிர் கைகுலுக்கியபோது வேலன் மகிழ்ச்சி மேகங்களில் மிதந்தான். ஆனால் விலாடிமிர் அவனிடம் கூறிய வார்த்தைகள் அவனைத் தரைக்கு கொண்டு வந்தன. “Bad day” என்றார் விலாடிமிர். “How about tonight?” உலகத் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் செய்தி நிருபர்களுக்கும் பேட்டி அளிக்கும்போதுகூட விலாடிமிரின் …

    • 0 replies
    • 1.1k views
  18. வேட்டையில் கிடைத்தது வேறொன்று! கோடையின் வெம்மையில் தகித்த இரவும், உளைச்சலில் தவித்த மனமும் அவனை ஒரு வழியாக்கியிருந்தன. ''இன்னிக்கு ரெண்டு இடம் போகணும்ன்னு சொன்னேல்ல...'' என்றபடி காபி கோப்பையை நீட்டினாள், அம்மா. அமைதியாக அதை வாங்கிக் கொண்டான். அப்பா குளித்து முடித்து, தினசரியை வாசித்துக் கொண்டிருப்பதை பார்த்தான். அவன் பார்வையின் குறிப்பை அறிந்து, ''சுமதி வரன் விஷயமா, அயனாவரம் வரை போயிட்டு அப்படியே வேலைக்கு போறேன்னு சொன்னாரு உங்கப்பா...'' என்றாள். ''வரனா... நம்ம சுமதிக்கா... அதுக்குள்ள என்னம்மா...'' என்ற…

  19. வேண்டியது வேண்டாமை அம்மா வருத்தமாக உட்கார்ந்து கொண்டிருப்பதைப் பார்த்து வேதனையாக இருந்தது. காலையில் மாயா இறந்ததாக செய்தி கிடைத்து அப்பா அவசரமாக கிளம்பிச் சென்றதிலிருந்தே அம்மா இப்படித்தான் வருத்தத்தைச் சுமக்கிறாள். ‘‘அம்மா, எதுக்காக துக்கப்படறீங்க? பீடை ஒழிஞ்சதுன்னு நிம்மதியா இருங்க...’’ என்றேன். என்னை உற்றுப் பார்த்தாள். நான் கூறியது மனிதாபிமானம் குறைந்த வாக்கியம் என்பது எனக்கே தெரிந்ததுதான். ஆனால், கடந்த பல வருடங்கள் எங்களுக்குத் தொடர்ந்து கிடைத்து வந்த வலியும், ஏளனப் பார்வைகளும் என்னை அப்படிக் கூற வைத்தன. ஆனால், இப்போது அம்மாவிடமிருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் திகைப்பை அளித்தன. ‘‘உங்க அப்பாவை நினைச்சால் பாவமாய் இருக்குடா. இதிலி…

  20. வேண்டுதல் சிறுகதை: விமலாதித்த மாமல்லன், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு கிழவர் படுத்த படுக்கையாகி அன்றோடு ஆறாவது நாள். பாத்ரூம் போகக்கூட எழுந்திருக்க முடியாமல் படுக்கையிலேயே இருந்துவிட்ட அன்றே, எல்லோருக்கும் சொல்லிவிடுவது எனப் பெண்ணும் மாப்பிள்ளையும் முடிவுசெய்துவிட்டார்கள். கிழவரைப் பார்த்துக்கொண்டது என்னவோ இளைய பெண்தான் என்றாலும், அவள் இருந்தது அவர் வீட்டில். இளையவள் சொந்தத்திலேயே மணமுடித்து இருந்ததால், அவர் வீட்டிலேயே சுவாதீனமாய் மாப்பிள்ளையும் தங்கிவிட்டார். அவர் பார்க்கும் வேலைக்கு அதைப்போல இரண்டு வீடுகளை வைத்துக்கொள்ள முடியும் என்பதால், அக்கம்பக்கத்தில்கூட பெரிய வம்பு எதுவும் எழவில்லை. இன்னும் இருந்த இரண்டு…

  21. அபிதா பெயருக்கு ஏற்ற போல அவளும் அழகிய பெண்..அபிதாவுக்கு ஒரே அண்ணன் வெளி நாட்டில் வேலையில் இருந்தான்.. அபிதா அம்மா அப்பாவோட ஊரில் இருந்தாள்.. அம்மா நான் பாடசலைக்கு போகுறேன்.. என்று சொல்லிய படி தன் தோழி வீடு நோக்கி நடக்க தொடங்கினாள் அபிதா... சுசிதா அபிதாவின் நண்பி இருவரும் ஒரே தெருவில் இருந்தார்கள்.. சிறு வயது முதல் இருவரும் நண்பிகள்.. அதை விட இருவரும் ஒரே பாடசாலையில் படித்தார்கள்... அபி நம்ம பாடசாலை பெடியன்கள் வாறாங்கள்.. அங்க பாரு... அபி அங்க பாரு செந்தில் வாறன்.. உன்னுடன் இப்ப பேசுறது இல்லையா? அப்படி இல்லை சுசி போன் பண்ணி பேசுவான்.. செந்தில் வேறு யாரும் இல்லை அவர்கள் வகுப்பில் படிக்கும் மாணவன்..சுசிதா யாருடனும் அதிகம் பேச மட்டாள்.. அபிதா …

    • 5 replies
    • 3.7k views
  22. வேதாளத்திற்கு சொன்ன கதை - யோ.கர்ணன் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத வேதாளம், மீண்டும் அந்த விசாரணைக் குறிப்பைப் புரட்டியபடியிருந்தது. அந்த அறிக்கையிலிருக்கும் ஏதாவது ஒரு சொல் அல்லது வசனம் தனக்குரிய துப்பைத் தருமென்றோ அல்லது அவனது பொய்யை அம்பலப்படுத்துமென்றோ அது நினைத்திருக்க வேண்டும். விக்கிரமாதித்தன் என்ற அவனது பெயரை ஆங்கிலம், சிங்களம், தமிழ் என தனக்குத் தெரிந்த மொழிகளில் எழுத்துக்கூட்டி வாசித்து உறுதி செய்துகொண்டது. விக்கிரமாதித்தன் என்ற பெயரில் எந்தக் குழப்பமும் இல்லை. போதாததற்கு அவனது வாயாலும் பெயரை உச்சரிக்க வைத்தது. பிறகு பிறந்த ஆண்டு, மாதம், திகதி, விலாசம் எதிலும் பிசகில்லை. தனது வலது கையில் தூக்கி வந்த அந்த பெரிய விசாரணை அறிக்கைக்குள்ளிருந்…

    • 15 replies
    • 2.7k views
  23. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யன் மீண்டும் மரத்தின் மீதேறி அங்கு தொங்கும் உடலை வெட்டி வீழ்த்தி தோளின்மீது போட்டுக்கொண்டு மயானம் நோக்கி செல்லுகையில் அதனுள்ளிருந்து எள்ளி நகைத்த வேதாளம் பேசத்தொடங்கியது: "மன்னா! எல்லோரும் அமைதியாக உறங்கும் இந்த நள்ளிரவில், தமிழ் ஈழத்தின் இந்த சுடுகாட்டில் நீ எதற்காக இவ்வளவு சிரமப்படுகிறாய் என்று தெரியவில்லை. தளர்வில்லாத முயற்சி சமயங்களில் பின்னடைவை சந்தித்தாலும் அதை செய்பவர்களின் மன உறுதியினால் வேண்டிய பலனை கொடுத்தே தீரும். அதற்கு இந்த தமிழ் ஈழ தேசத்தின் வரலாறே சாட்சி. இந்த தேசத்தின் கதையை கூறுகிறேன் கேள். இந்த சுடுகாட்டின் அருகில் அமைந்துள்ள நகரமானது ஒரு காலத்தில் இந்திர லோகத்தைப்போல் பொலி…

  24. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யன் மீண்டும் மரத்தின் மீதேறி அங்கு தொங்கும் உடலை வெட்டி வீழ்த்தி தோளின்மீது போட்டுக்கொண்டு மயானம் நோக்கி செல்லுகையில் அதனுள்ளிருந்த வேதாளம் எள்ளி நகைத்துப் பேசத்தொடங்கியது: "மன்னா! பேய்களும் உறங்கும் இந்த நள்ளிரவில் இந்த சுதந்திர தமிழீழத்தின் சுடுகாட்டில் இவ்வளவு சிரமப்படும் நீ இதனால் அடையப்போவதுதான் என்ன? அதோ,புலிக்கொடி பட்டொளி வீசிப்பறக்கும் நகரத்தின் சௌந்தர்யங்களை அனுபவிக்காமல் ஏன் இப்படி உன்னை நீயே வருத்திக்கொள்ளுகிறாய்? கடின முயற்சி உடையவர்கள், சில சமயம் நல்லதே நினைத்து செய்யும் செயல்களும் அவர்களறியாமல் எதிர்மறையான பலனை கொடுத்து முயற்சியில் பெரும் பின்னடைவை உண்டாக்கிவிடும். இந்த சுதந்திர தேசத்தின் நீண்ட நெடிய…

  25. வேதியின் விளையாட்டு (சிறுகதை) ‘ அது சரிவராது போலத்தான் இருக்கு…,’ என்ற மனைவியின் பதிலால், பென்னம்பலம் மனமுடைந்து போனார். இந்த அளவுக்குச் சிக்கலாய் விஷயம் இருக்குமென்று அவர் கனவிலும் நினைக்கவில்லை. அவர் சம்பாதித்துள்ள குடும்ப செல்வாக்கிற்கும் கௌரவத்துக்கும், இது வெகு சுலபமாக நடக்க வேண்டியது. ஆனால் காலம் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிட்டது! பொன்னம்பலத்தார், வாழ்கையை எப்படியும் வாழலாமென்று வாழ்பவரல்ல. அவருடைய வாழ்க்கையில் எப்போதும் ஓர் ஒழுங்கு முறை இருக்கும். வளவிலுள்ள மரங்கள் தொடக்கம் வீட்டிலுள்ள மனிதர்கள்வரை ஒருவகைக் கட்டுப்பாட்டுக்குள் வளரவேண்டுமென்று எதிர்பார்ப்பார். தனது குடும்பத்தில் பத்து வருஷங்களுக்குப் பின்னர் நடக்கப்போகும் விஷயங்களையும் இப்போதே தீர…

    • 0 replies
    • 996 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.