கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3071 topics in this forum
-
எனது நண்பன் சோமு வீட்டுக்கு போயிருந்தேன்.அவன் மேட்டூருக்கு போயிருப்பதாக சொன்னார்கள்.சரி எதோ சுற்றுலா போயிருக்கிறான் என்று நினைத்துகொண்டிருந்தேன்.நாலை
-
- 16 replies
- 5.1k views
-
-
மனவலி யாத்திரை.....! - சுதந்திரா - அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும். அவனது குரல் என்னை அழைக்கிறது. விழிப்புலனில் சிக்காத முகம் ஆனால் அந்தக்குரல் மட்டும் தெளிவாகக் கேட்டது. திடுக்கிட்டு விழித்த எனக்கு அந்தக்குரல் சொன்ன சேதி ஞாபகத்தில் இல்லை. எழுந்து போய் விறாந்தை மின்குமிழைப்போட்டு அதன் ஒளியில் என் விழிக…
-
- 12 replies
- 2.2k views
-
-
மதியண்ணாவின் "கண்ணம்மா" இனிய ஒரு காலை நேரம். என்னை பொருத்த வரைக்கும் நன்றாக தூங்கும் பொன்னான காலம். கவலைகள், யோசனைகள் அற்ற இனிமையான பத்து வயதிற்குள் நான் காலடி எடுத்து வைத்திருந்தேன். "கண்ணம்மா..கண்ணம்மா.." இந்த அம்மாவுக்கு வேலையே இல்லையா? தூங்க விடாமா எழுப்புறாங்களே!! "கண்ணம்மா..." இது மதி அண்ணாவின் குரல் ஆயிற்றே. மதி அண்ணா என்றாலே எனக்கு ஒரு சந்தோசம் தான். எங்கள் வீட்டுக்கு முன்னால் தான் அண்ணாக்களின் முகாம் இருந்தது. நான் பிறந்ததில் இருந்து எனக்கு தெரிந்தது எல்லாம் அண்ணாக்களை தான். நாட்டு பிரச்சனையால் உறவுகள் எல்லம் இடம் பெயர்ந்து செல்ல தொடங்கிய கால கட்டம். உறவுகளை விட உயிராய் எமை காக்கும் அண்ணண்களை தான் நான் அதிகம் நேசித்தேன்..நேச…
-
- 23 replies
- 4k views
-
-
எழுதியவர் ஷண்முகி tanilamutham அன்று அதிகாலை வேளை கண்கள் மூடியபடியே இருக்க நினைவுகளை அசைபோட்டுக் கொண்டேஇ படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டிருக்கிறேன். நித்திரைக்கும் நினைவுகளுக்கும் இடையே நடைபெறும் போராட்டம். அதில் நினைவுகள் வெற்றி பெற்றுக்கொள்ளஇ நித்திரை மெல்லென விடைபெற்றுக் கொண்டிருந்தது. இன்று எனக்கு பதினெட்டாவது வயது. என் மனம் ஏனோ என் அம்மாவை நினைத்துக் கொண்டு ஏங்கியது. என் சின்னச் சின்ன தேவைகள்இ என் அன்பை முழுவதுமாக கொட்டிக்கொள்ள... அம்மா என்னுடன் இருந்திருந்தால்இ எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். என்ன செய்வது. ம்... அன்று செய்ய வேண்டிய கடமைகள் ஒவ்வொன்றையும் மனதினுள் எடைபோட்டுக் கொண்டிருந்தேன். அப்போது அறைக்குள் வந்த அப்பா "இனிய பிறந்த நாள் வாழ்த்த…
-
- 3 replies
- 2.5k views
-
-
சிவபெருமானுக்கு மூத்திரம் கொடுத்த ஓணான். சரேலெனத் திரும்பினார் சந்திரோதயத்தார். கண்களைக் கசக்கி மறுபடியும் பார்த்தார்இ சந்தேகமே இல்லை... வழவழப்பான தோற்றம்இ ஒவ்வொரு வளைவிலும் வெயில் பட்டுத் தெறிக்கும் மெர்க்குரி வெளிச்சம்.... அழகு ஜெகத்ஜோதியாக மின்னியது. ஜில் ! ஜில் ! ஜிக்குமாலா ! இ எல்லோருக்கும் புரியும்படியாக நல்ல தமிழில் பேசிக் கொண்டார். அழகில் மயங்கி எவ்வளவு நேரம் நின்றாரோ தெரியவில்லை... இப்படி மயங்கினால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்... வேலிக்கட்டை ஓணான் போல சரக் சரக்கென தலையை ஆட்டினார். சிவபெருமானுக்கு மூத்திரம் கொடுத்த குற்றத்திற்காக அவர் ஊரில் எத்தனையோ ஓணான்களைக் கொன்றிருக்கிறார். ஓணான்கள் போலவே தலையை சொடக் சொடக்கென ஆட்டியபடி க…
-
- 10 replies
- 4.2k views
-
-
பொய் சொல்லலாம் பொய் சொல்லலாம் ஆற்றங்கரையடியில் ஒருவர் மரம்வெட்டிக்கொண்டு இருந்தாராம்.அப்ப அவற்ற கோடரி தண்ணிக்குள்ள விழுந்திட்டுதாம்.அவருக்கு மரம் வெட்டுறதுதான் தொழில் அப்ப கோடரி இல்லாமல் வாழ்க்கையே பெரும்பாடாயிடுமே அதால கடவுளிட்ட முறையிட்டாராம்.கடவுள் டாண் என்று வந்து நின்றாராம் அந்த விறகு வெட்டுறவருக்கு முன்னால.(ம் ம் நானும்தான் இண்டைக்கு எக்ஸாம் ஹோல்ல ஒருக்கா கூப்பிட்டுப் பார்த்தன் கடவுள் வந்தாத்தானே.) பக்தா ஏன் அழுகிறாய்? கடவுளே என் கோடரி ஆத்தில விழுந்திட்டுது.அது இல்லாம நான் எப்பிடி விறகு வெட்டுவன் எப்பிடி என்ர குடும்பத்தைக் காப்பாற்றுவன். சரி அழவேண்டாம் நான் இப்பவே கோடாரியோட வாறன் என்று தண்ணிக்குள்ள குதிச்சு ஒரு பொற்கோடாரியோட வந்தாராம். இதுவா…
-
- 61 replies
- 7.1k views
-
-
சரவணனிற்கு தவறுதலாய் தான் மண்டை உடைந்தது, இருந்தும் தான் தள்ளியதால் தான் உடைந்தது என்ற கவலை கலந்த பதட்டம் கலாவிற்குள். 999 ற்கு அடிக்கச் சென்றாள். "இஞ்ச கலா அதொன்டும் பெரிய காயம் இல்லை பேசாமல் விடும், இப்ப அவங்களுக்கு கடிச்சால் ஆயிரம் கேள்வி கேட்டுக்கொண்டிருப்பானுகள். அவனது பேச்சைக் கேட்கையில் தலைக்கேறின வெறி முற்றாய் முறிஞ்சிருக்க வேணும் என்ற எண்ணம் கலாவிற்குள் எழுந்தது. சரவணனின் பேச்சையும் மீறி 999 ற்கு அடித்து அம்புலன்சிற்கு சொல்லிவிட்டு வீட்டுச்சாவி மற்றும் ஏனைய முக்கிய பொருட்களை எடுத்து கைப்பையில் போட்டுக்கொண்டு அம்புலன்ஸ் வர போவதற்கு தயாரானாள். சரவணனின் தலையில் இருந்து கசிந்து கொண்டிருந்த இரத்தத்தை நிறுத்த வெள்ளைத்துணியினால் கட்டி தன்னால் முடிந்த முதலு…
-
- 5 replies
- 2.7k views
-
-
வதனியின் இதயத்தில் இனந்தெரியாதவொரு படபடப்பு. தான் செய்தது சரியா பிழையா என்பதை அவளால் தீர்மானிக்க முடியாமலிருந்ததே அதற்குக் காரணம். "நானுந்தான் எத்தனை எத்தனை வழிகளிலெல்லாம் முயன்றேன். ஒன்றுமே சரிவரவில்லை என்பதால்தானே இதைச் செய்யத் துணிந்தேன். அதனால் இது தவறே அல்ல!" அவள் மனதின் ஒரு பக்கம் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தது. "உன்னைப் போலவே மற்றவர்களும் நடந்துகொள்ள முயன்றால்? அதன் விளைவுகளை எண்ணிப்பார். தெரியாமல் செய்திருந்தால் அது பிழை. நீ திருந்திக் கொள்ள வாய்ப்புண்டு. நீயோ தெரிந்தே செய்துவிட்ட பிழையிது. இது பிழையென்றல்ல குற்றமென்று நீ சரியாகப் புரிந்து கொள்." வதனியின் மனச்சாட்சியின் மறுபக்கம் இவ்வாறு வலியுறுத்திச் சொல்லிக் கொண்டிருந்தது. தான் தங்கிய…
-
- 15 replies
- 2.4k views
-
-
வணக்கம், நலமாக இருக்கிறீர்களா? வாழ்க்கை எப்படி போகின்றது? "அட என்னத்த இங்க வந்து கண்டோம்" என அலுத்துக்கொள்கிறீர்கள் போல? இருங்கோ தேத்தண்ணி போட்டு கொண்டு வாறன். சரி இப்ப நாங்கள், என்னை போல, உங்களை போல, நம்மை போல சில மனிதர்களை பார்ப்போமா? இஞ்ச பாருங்கோ இப்பவே சொல்லி போட்டன். இது முற்றிலும் ஒரு கற்பனை கதை என்ன. இடங்களின் பெயர்கள் மட்டும் நிஜ வாழ்வில் உள்ள இடங்கள். சம்பவங்களும், கதாபாத்திரங்களும் கற்பனை. பிறகு அங்க அவுஸ்திரேலியாவில இருக்கிறவ கோவ பட கூடாது. சரியோ?? சரி இனி உங்களுக்காக புலத்தில் இருந்து ஓர் புலம்பல்... புலத்தில் இருந்து ஓர் புலம்பல் ஈழத்தில் வடமராட்சியில் காலம் காலமாக வாழ்ந்த ஓர் குடும்பம், நாட்டு நிலமையால் அவுஸ…
-
- 244 replies
- 31.3k views
-
-
நீ அங்கே நான் இங்கே -சினேகிதி- அம்மா அப்பான்ர கடிதம் வந்திருக்கு இந்தாங்கோ. கொண்டா கொண்டா என்னடா இன்னும் இந்த மாசம் கடிதம் வரேல்ல எண்டு பார்த்தன்.சுஜி கவி இங்க பாருங்கோ அப்பா கவிக்கு பிறந்தநாள் வாழ்த்து அனுப்பியிருக்கிறார். அம்மா முதல் என்னட்டதான் தரோணும். இன்னொரு சந்தோசமான செய்தி என்னெண்டால் அப்பா வாற மாசம் ஸ்பெயின்ல இருந்து இங்க வாறாராம்ம்ம்ம். ஐ ஜாலி. சின்னவா கவி அப்பாட்ட என்னத்துக்கெல்லாம் சொல்லிவிடலாம் என்று அம்மாட்ட நச்சரிக்க மூத்தவ சுஜி 10ம் வகுப்புக்குப் பரீட்சைக்குப் படிக்கப் போட்டா.அப்பா வரப்போறார் என்று தெருவால போற வாற எல்லாருக்கும் சொல்றதுதான் கவின்ர வேலை. அப்பா வந்தவுடனே அம்மா ஓடிப்போய் அப்பாவைக் கட்டிப்புடிச்சிட்டா.சுஜி …
-
- 27 replies
- 4.5k views
-
-
வாய் அந்த இளைஞனை நெடுநேரமாய் கூர்ந்து பார்த்தேன்.... எங்கேயோ பார்த்த முகம்... நன்கு தெரிந்த ஒரு முகத்தின் அச்சு மின்னி மின்னி மறைந்தது... யாராக இருக்கலாம் ... கேட்க வேண்டும்போல மயிர்க் கூச்செறிந்தது... திகைத்து நின்றேன்... கழுத்தில் சுருட்டிவிட்ட நேர்த்தியான இளம் கம்பளிச் சட்டை, உடம்போடு அளவாகப் பிறந்ததுபோல நேர்த்தியான லோங்ஸ்... அவனுடைய சப்பாத்தின் கூரிய முனையின் பளபளப்பில் என் முகம் தெரிந்தது... அருகில் சென்றேன்... மேலும் ஒரு அடுக்கு கூர்மையாகப் பார்த்தேன்... களிம்பு போட்டு சுருள விட்ட கேசம்...அரும்பாத புதிய மீசை.. உயரம் போலவும், திடகாத்திரம் போலவும் ஒரு காந்தத் தோற்றம்.. கதைப்பதற்கு ஆயத்தமானேன்.. அதற்குள் யாரோ ஒருவர் கைகாட்ட ஓடிப்போய் காரில…
-
- 10 replies
- 2.3k views
-
-
தபால்பெட்டியை அடிக்கடி திறந்து பார்த்தாள் சுமதி. வேலைக்கும் நேரம் ஆகின்றது... அட எதிர்பார்த்தால் தான் எப்பவும் லேட்டாகத்தான் வருவான் இந்த தபால் காரன் என்று நினைத்து விட்டு வேலைக்கு சென்று விட்டாள். அதே நினைப்பில் இருந்தவளுக்கு வேலையிலும் நிம்மதியாக இருக்க முடியலை. வந்திருக்குமோ வந்திருக்குமோ என்று நினைத்துக்கொண்டிருதாள். வரவில் போடவேண்டியதை செலவில் இட்டு மனேஐரிடம் திட்டும் வாங்கிகொண்டாள். தலையிடி என்று சாட்டு சொல்லி விட்டு அவசரமாக வீடு திரும்பிளாள். பாதையிலும் பல நினைவுகள் அவளுக்கு.... வந்திருக்குமா என்று. அம்மாவிற்கு போன் பண்ணி கேட்டுவிடலாமோ என நினைத்து கைத்தொலைபேசியை எடுத்தாள். "சீ அம்மாவை இனியும் போன் பண்ணி கேட்டால் போனிலே அடித்து விடுவா" என்று நினைத்து …
-
- 28 replies
- 4.8k views
-
-
அப்பா எங்கே? எனது அப்பா எங்களுடன் இல்லையே என்ற கவலை என் மனதை எப்போதும் வாட்டிக்கொண்டிருந்த போதும் இன்று எனது நண்பியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்று வந்ததிலிருந்து எனக்கு அப்பாவை உடனே காணவேண்டும்போல இருந்தது. எனது மனவாட்டத்தைக்கண்ட அம்மாவின் முகத்திலும் சோகத்தில் சாயல் பரவத்தொடங்கியது. "அம்மா, எனக்கு அப்பாவைப் பாரக்கவேண்டும்போல் இருக்கிறது" என்று கூறினேன். அம்மா பதில் எதுவும் சொல்லாமல் தனது வேலைகளிலேயே கவனமாக இருந்தார். மீண்டும் நானே அம்மாவின் அருகில் சென்று "இன்று எனக்கு அப்பாவைப் பார்க்கவேண்டும்போல இருக்கிறது என்றேன்" என்றேன். "அப்படிப்பார்க்க முடியாது என்று உனக்குத் தெரியும்தானே, பிறகு ஏன் என்னைக்கேட்கிறாய்?" என்றார். அம்மா கூறியது சரிதான். …
-
- 8 replies
- 3.4k views
-
-
நியாயத்தை கேளுங்கோவன்!? கல்யாணம் ஆன நாளில் இருந்து இப்படிதான் என்ட மனிசன். எனக்காக எதையும் செய்வார், ஆனால் ஊருக்கு எங்கட மக்களுக்கு கொஞ்சம் பணம் அனுப்பலாம் என்றால் மட்டும், மனிசன் அசைய மாட்டுது. சரி நானும் அதிகம் இவரிட்ட எதிர்பார்க்க கூடாது தானே? என்ன என்று கேக்கிறியள் போல? நானும், என்ட மனிசனும் காதல் திருமணம் புரிந்தவர்கள். பல்கலைக்கழகத்துக்கு போன காலத்தில இவரை பார்த்து, பழகி, மனசு ஒத்து போனதால் திருமணம் செய்யலாம் என நினைத்து என்ட அப்பரிட்ட கேட்டா.. தாம் தீம் தான். யோசிக்காமலே "வேண்டாம் இவன்". எனக்கு சரியான கோவம் பாருங்கோ. நான் சரி என்று இருப்பேனா? கேட்டனே "அவருக்கு நல்ல மனம்,நல்ல படிப்பு,நல்ல குடும்பம்..நல்லத எல்லம் சொல்லி பார்த்தேன். …
-
- 17 replies
- 3k views
-
-
எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த ஞாபகம் -சினேகிதி- அன்பான தன் சிறிய குடும்பத்துடன் வாழ்ந்தவள் ஆதிரை.சின்ன வயது முதலே படிப்படியாக பல வெற்றிகளைக் கல்வியில் அடைந்து மிகுந்த புகழுடன் இருந்தாள்.இனப்பிரச்சனையால் சொந்த ஊரை விட்டு நீங்கும் துன்பத்தை ஆதிரை குடும்பமும் ஏற்க வேண்டியதாயிற்று.கொழும்புக்க
-
- 30 replies
- 4.7k views
-
-
தரிசனம் கிடைக்காதா? ஓவ்வொரு வருசமும் முத்துமரி அம்மன் கோவில் திருவிழா இருபத்தைந்து நாட்களும் புத்தக விற்பனை நடப்பது வழக்கம்.அவ்வாறே 2000ம் ஆண்டும் புத்தக விற்பனைப் பிரிவுக்கு அருகில் உள்ள இரண்டு பாடசாலைகளிலிருந்தும் மாணவர்கள் அழைக்கப்பட்டு ஒவ்வொரு செயற்திட்டங்கள் வழங்கப்பட்டது.காலை ஆறு மணியிலிருந்து மத்தியானம் இரண்டு மணிவரைக்குமான காசுப்பொறுப்பாளர்கள் சயிந்தினியக்காவும் ராஜேஷண்ணாவும் மற்ற மற்ற பொறுப்புகளுக்குமாக மொத்தமாக எட்டு பேர் இருப்பார்கள்.அதில நான் விற்க வேண்டியது மு.வரதனாரின் புத்தகங்கள் ("தம்பிக்கு" "தங்கைக்கு" அப்பிடிதான் அவருடைய புத்தகங்களின் தலைப்புக்கள் இருந்நதாக ஞாபகம் ).இருபத்தைந்து நாட்கள் சந்திக்கிற இரண்டு பாடசாலை மாணவர்களுக்கும் இடையே நிறைய காதல்…
-
- 63 replies
- 9.5k views
-
-
"இருந்தால்" இல்லாமல் ஆன கதை "பெத்தவள் மேல் கொஞ்சமாவது அன்பு இருந்தால், உடனே புறப்பட்டு வா.." - அம்மாவின் கடிதம். இந்த கல்யாணத்திற்கு போனால் தான் எனக்கு அம்மாவின் மேல் இருக்கும் அன்பு வெளிவருமா?அல்லது நிரூபணமாகுமா? அம்மா எப்பொழுதும் இப்படி தான். நினைவு தெரிந்த நாளில் இருந்து பார்த்து இருக்கிறேனே. சரி வீட்டிற்கு போயும் கனநாட்கள்...அல்ல வருடங்கள் ஆகிவிட்டது. 5 வருடங்களாக அதிகமாக வேலைகள் இருந்ததால் , எதற்கும் இடமில்லாமலே இருந்தது. இப்பொழுதுதான் கொஞ்சம் பரவாயில்லை. கல்யாணமும் வேற்று மனிதருக்கு அல்லவே. என் கூட பிறந்த சகோதரிக்கு தானே.சரி போகலாம் என நினைத்து வந்தது தவறோ என தோன்றியது. நினைவில் ஆழ்ந்திருந்த போது பக்கத்தில் படுத்திருந்த குழந்தை சிணுங்கி…
-
- 24 replies
- 4.1k views
-
-
உறவுகளிற்கு வணக்கம். யாழ் களத்திலை இந்திர ஜித்தின்ரை தொடர் கதையை பாத்த உடைனை நானும் ஒரு தொடர் கதை எழுதுவம் எண்டு நினைச்சன். இதுவும் நடந்த ஒரு உண்மை சம்பவம்தான் சம்பவத்துடன் சம்பந்த பட்டவரின் அனுமதியுடன் கதை எழுதபடுவதார் கதையில் வருபவர்களின் பெயர்கள் மட்டும் மாறியிருக்கிறது. அதே நேரம் கதையை படித்து விட்டு அடுத்த தொடர் எப்படியிருக்கும் எண்று உங்கள் ஊகங்களையும் இங்கு தெரிவியுங்கள். உண்மை சம்பவம் எண்ட படியால் கதையின் போக்கை மாத்த முடியாது.சரியாக ஊகிப்பவருக்கு இராவணணிட்டை சொல்லி ஏதாவது பரிசு தர சொல்லுறன் சரி கதைக்கு போகலாம் தெரியாத பாதை தெளிவானபோது கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் ஓர் தங்கு விடுதி கோயிலுக்கு போன சாந்தியும் தாயாரும் அவர்கள் தங்கி…
-
- 189 replies
- 26k views
-
-
வலி தெரியாக் காயங்கள்.... முருகன் கோவிலுக்கு முன்னால் மனதால் கும்பிட்டுவிட்டுத் திரும்பி பார்த்தாள் வேணி. அவளையே வைத்த கண்வாங்காமல் பார்த்தபடி நின்ற முகத்தினைக் கண்டு திடுக்குற்று, அவன் யார் என்று உற்றுப் பார்த்தாள் முகம் புரியவில்லை. கடந்த ஒரு மாதமாக அவளையே பின் தொடரும் யார் அவன்? பாடசாலைக்கு முன்னால் நிற்பான். ரீயூசனுக்கு போனாலும் வருவான். கோவிலுக்கு போனாலும் வந்து நிற்கிறானே யார் இவன்? மெல்லிய அரும்பு மீசை, கூரான நாசி ம்ம் பார்த்தால் மறு முறை பார்க்க தூண்டும் முகம். அடுத்த நாளும் பாடசாலைக்கு போகும் போதும் அவன் பின்தொடர்வதை அவள் உணர்ந்து கொண்டாள். பின்னால் வரும் அந்த இளைஞன் யார் என்று கூட வந்த சினேகிதியிடம் கேட்டாள். "யார் ஊருக்குள் புதுமுகம் என்றும், ம்ம் கொ…
-
- 120 replies
- 14.6k views
-
-
நாங்கள் தொடர்ந்து ஒரு கதையை உருவாக்குவோமா? சரி நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் ஒருவர் இரு வரிகள் உபயோகிக்கலாம் ஆனால் கதை தொடர்ச்சியாக போக வேண்டும் அத்துடன் நீங்கள் மற்ற இரசிகள் பதில் எழுதும் வரைய்ம் பொறுத்து இருக்க வேண்டும் சரியா? ஆரம்பிப்போமா?
-
- 313 replies
- 32.9k views
-
-