கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
ரம்போ – ப.தெய்வீகன் EditorOctober 17, 2023 (1) தலைநகர் கன்பராவில் பெருமைக்குரிய சாவுகளின் நினைவாக வீற்றிருந்த ஆஸ்திரேலிய போர் நினைவுப் பேராலயம், அதி முக்கிய கௌரவிப்பு நிகழ்வொன்றுக்காக தயாரகிக்கொண்டிருந்தது. காலை வெயில் விழுந்து நினைவாலயத்தின் முன்கோபுர நிழல் பரந்த பச்சைப்புல்வெளியில் சரிந்திருந்தது. நாயை எதிர்பார்த்தபடி நானும் பேர்கஸனும் காத்திருந்தோம். ஈராக்கில் சித்திக் என்ற குறுநகரில் காலை நேர ரோந்துப் பணியின்போது வெடித்த கண்ணியில் படுகாயமடைந்தவன் பேர்கஸன். சிதறிய காலோடு இரத்தச் சகதியில் கிடந்தவனை, சக இராணுவத்தினர் இழுத்தெடுத்து, உயிர் கொடுத்ததோடு, நாடு திரும்பியவன். ஆறு ஆண்டுகளாக அன்பான அயலவன். சக்கர நாற்காலியையும் என்னையும் தவிர, நெருக்கமான உறவ…
-
- 1 reply
- 938 views
-
-
பதுங்கு குழி எழுத்தாளர்: பொ. கருணாகரமூர்த்தி நாச்சிக்குடா வீழ்ந்ததிலிருந்து மாதவன் மனத்துள் அந்தகாரம் புகுந்துகொண்டது. இராணுவம் முன்னேறிய வேகத்தைப் பார்க்கையில் மாதவனது மனம் துவண்டுபோனது. இனிமேலும் நாம் இப்போரை வெல்லமுடியுமோ என்று ஒரு சந்தேகமுண்டாகியது. அவன் அடிக்கடி யோகபுரத்திலுள்ள தன் வீட்டுக்குப்போய், அம்மாவையும் சகோதரங்களையும் பார்த்து வருவதும் அவனது அணியின் பொறுப்பாளனுக்குப் பிடிக்கவில்லை. இப்போது தந்தைக்கு திவசம் கொடுப்பதற்காக வீட்டுக்குப் போய்க்கொண்டிருக்கிறான். தந்தைக்கான சடங்குகளைச் செய்வதற்கும் அணித் தலைவனிடம் மண்டாடியே ஒருநாள் விடுப்பு எடுத்து வந்து நிறைவேற்றவேண்டியுள்ளது. தேசத்தின் நிலமையில் மக்களின் பொருண்மியம் பெரிதும் குன்றிவிட்டதால் இப்போ…
-
- 1 reply
- 1k views
-
-
அப்பாச்சி கை விளக்கு நெருப்புப் பெட்டி சுங்கான் புகையிலைப்பெட்டி தனக்கே உரியதான தடித்த தலையணை தலையணையின் கீழ் வைக்க வாங்குப்பலகை தண்ணீர்ச் செம்பு முதுகுக்கு விரிக்கும் பழைய சேலை வியர்வை துடைக்க துவாய் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஒருமுறை நோட்டமிட்டவர் ஏதோ ஒரு பொருள் குறைவது கண்ணில்பட அவசரமாக முற்றத்துக்குச் சென்று வேலியோர மறைவில் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த எச்சில் படிக்கத்தை எடுத்து மண் அரைவாசிவரை நிறைத்துக் கொண்டுவந்து தலைமாட்டின் பக்கத்தில் வைத்தபின் ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் அரச கொலுமண்டபத்துக்கு விஜயம் செய்யும் மன்னனின் கம்பீரத்துடன் கால்களை நீட்டிப் போட்டபடி அமர்ந்த அப்பாச்சி புகையிலைத் துண்டங்களை அளவாகப் பிய்த்து சுங்கானில் அடைக்கத் தொடங்கினார். …
-
- 8 replies
- 3.4k views
-
-
தாயும் நீயே தந்தை நீயே .......... லண்டன் கீத்ரோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் பலரோடு லதாங்க்கினி யையும் ஏற்றிக் கொண்டு தான் பயணத்தை தொடங்கியது .பல நாட்களாக் ஆசைபட்ட பயணம் அவளுக்கு .லண்டன் மாநகரம் மாணவ விசாவில் படிக்க சென்று ஐந்துவருடங்களின் பின் நாடு திரும்புகிறாள். போர்க்கால சூழலில் ....தாய் தந்தையை வன்னிக் கிராமத்தில் பறி கொடுத்த பின் எரியூட்ட பட்ட் வீடில் .பெற்றவர் உடல்களையும் காணத துயரங்களில் மூழ்கி இருந்த வேளை,...... அவளுக்கு சித்தப்பா தான் கை கொடுத்தார். இருவரையும் கொழும்புக்கு எடுப்பித்து ஒரு விடுதிக் நிர்வாகி மூலம் ஒரு பெண்கள் விடுதியில் லதாவையும் உறவினர் வீட்டில் மனோகரையும்......சேர்த்துவிட்டு சகோதரனின் மறக்க முடியா இழப்பையும் த…
-
- 16 replies
- 5k views
-
-
புத்தனிற்கு ஒரு ஆசை யாழ்கள உறவுகள் நிறைவேற்றுவார்கள் என்று ஒரு நம்பிக்கை அதாவது படைபாளி என்று ஓர் கட்டுரை அல்லது தொடர்கதை ஆரம்பிக்க உள்ளேன் உங்களது ஆதரவை நாடி நிற்கிறேன். அன்று வெள்ளிகிழமை வார இறுதி சஞ்சிகைகளிற்காக படைப்புகளை படைத்து கொண்டிருந்தான் சிவா இயற்கை தனது இயற்கையான குணங்களை வெளிபடுத்தியது திடிரேன மனிதர்கள் போல மணம் மாறியது வெயில் அடித்தது திடிரேன மழை கொட்டியது அத்துடன் பனிசாரலும் தூவின சிட்னியில் சிவா ஒரு சிறந்த எழுத்தாளன்,இலக்கியவாதி பலராலும் போற்றபடும் ஓர் படைபாளி சொந்த பெயரிலும் எழுதுவார் புனைபெயரிலும் எழுதுவார் பாடசாலையில் படிக்கும் போதே அவனிற்கு கதை,கட்டுரைகள் எழுதுவது என்றால் அவனுக்கு ரொம்பவே பிடித்த விடயம் அதிலும் புராண கதைகள்,ஆத்மீக கதைகள் என்றால…
-
- 11 replies
- 2.4k views
-
-
மலரே மௌனமா? வசந்தகால ஆரம்பத்தின் இதமான குளிர்காற்று உடம்பைத் தழுவ புரண்டு படுத்த பிரியாவுக்கு அதிகாலையிலேயே விழிப்பு வந்து விட்டது. இதுவரை தூங்கியது கூட கோழித் தூக்கம்தான். மனதில் விவரிக்க முடியாத விநோதமான உணர்வுகளின் சங்கமம். இன்று தன் மனதுக்கினியவனுக்கு இன்ரவியூ நடக்க இருக்கிறது. அதனால்தான் அவள் மனதுக்குள் பயம் கலந்த மகிழ்ச்சி. காரணம் தன் பெற்றவருக்தும் உடன் பிறப்புகளுக்கும் தெரியாமலே தன் மனம் கவர்ந்த பிரசாந்தை பொன்சர் செய்திருந்தாள்;. இச் செய்தி வீட்டிலிருப்பவர்களுக்குத் தெரிந்துவிடும் என்று மிகக் கவனமாகவே செயற்பட்டாள்;. தனது வீட்டிலிருந்து போன் எடுக்காமல் தன் நண்பியின்; வீட்டிலிருந்துதான் பிரசாந்திற்கு போன் எடுப்பது கடிதத் தொடர்புகூட நண்பியின் வீட்டிற்கு வரு…
-
- 7 replies
- 2.2k views
-
-
யாழ்பாணத்தில் பெரும்பாலும் எல்லோர் வீட்டுவளவுகளும் சோலையாக இருந்தது……..நிலம் கண்ட இடமெல்லாம் மரங்களும், பூமரங்களும் கண்டமேனிக்கு செழித்து வளர்ந்திருந்தன…….முன்பெல்லாம் ஒரு பூச்செடியை நட்டுவிட்டு அடிக்கடி தண்ணீர் ஊற்றி...ஊற்றி...அதிக கவனம் எடுத்து வளர்த்தாலும் வளராத பூமரங்கள்…….நன்றாக செழித்து வளர்ந்திருந்தன……...மல்லிகை, அடுக்கு மல்லி, முல்லை, பாரிஜாதம், மந்தாரை (இந்த பூவை இம்முறை தான் முதல் தடவை கண்ணால் பார்த்தேன்), மயிர் கொன்றை சிவப்பு,றோஸ் வர்ணங்களில், முசண்டாஸ், பாதிரிப்பு மஞ்சள், பிங்க், வெள்ளை...எக்சோறாவில்...சிகப்பு., றோஸ், மஞ்சள் நிறங்களில்…..நீலபூக்கொடி, கறுத்தபூக்கொடி (இது violet color), மஞ்சள், வெள்ளை நந்தியாவட்டை, திருவாத்தி…..(இதன் மஞ்சள்..வெள்ளை பூக்களை பார்த…
-
- 3 replies
- 4.1k views
-
-
அலை மகள். அன்றைய பூரணை நிலவு அள்ளியெறிந்து கெண்டிருந்த வெள்ளொளியில் மெல்லலைகள் வீசிக்கொண்டிருந்த முல்லைக்கடலின் ஓருபகுதி கைகளையும் கால்களையும் அகலப்பரப்பி அண்ணாந்து படுத்திருந்தபடி ஆயிரமாயிரமாய் மின்னிக்கொண்டிருந்த நட்சத்திரங்களையும் பூரணையின் பூரணநிலை பூரித்துப் போயிருந்தாள் அலைமகள். ஆகாயத்தை பார்த்தபடியே கடலில் கைகால்களை விரித்து மிதப்பதென்றால் அவளிற்கு அளவற்ற ஆசை. கரையில் நின்றிருந்த பயிற்சியாளர் இரண்டாவது தடைவையும் விசிலடித்து கையில் சிறிய சிவப்பு வெளிச்சத்தையும் அசைத்துப் பார்த்துவிட்டார் அவள் அசைவதாய் தெரியவில்லை. கையிலிருந்த நடைபேசியில்(வோக்கி)தூரத்தே காவலிற்கு நின்ற கடற்புலிகளின் படகோடு தொடர்பு கொண்டதையடுத்து படகு அவளை நோக்கி வந்துகொண்…
-
- 37 replies
- 3.5k views
-
-
மதங்களால் பிரிந்த மனங்கள்....... சிறு கதை அன்று இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு தொடக்கத்தின் முதல் நாள் கார்த்திக் தனது நேர அட்டவணையைப் பார்த்தபடி அவனின் வகுப்பு அறைக்கு வந்து சேர்ந்த போது பேராசிரியர் இன்னும் வந்து சேரதபடியால் எல்லா மாணவர்களும் அறைக்கு வெளியிலே கல கலப்பாக கதைத்தவண்ணம் காத்திருந்தனர். கார்த்திக் வந்ததை கண்டதும் அவனுடன் இரசாயனத்துறையில் முதலாம் ஆண்டு படித்த மாணவர்கள் ''கி, கெல்லொ'' என்றெல்லாம் சொல்லிவிட்டு அமைதியாக நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் நின்ற அந்த இடத்துக்கு ரோஜா ஒன்று பளிச்சென்று வந்து நின்றுகொண்டது, தலை மட்டும் கருப்புத்துணியால் போர்திருந்தது. ஆம் ! அவள் முஸ்லீம் அழகி எல்லோரும் ஒருதடவை அவளைப் பார்த்துவிட்டு பின்னர் தங்கள் பேச்சுக்களை …
-
- 8 replies
- 2.2k views
-
-
மைக்ரோ கதை தினம் தினம் அம்மா - மனைவியிடையே நடக்கும் போராட்டத்தில் இருந்து விடுபட்டு, அலுவலக வேலையாக வெளிமாநிலம் வந்தான் சேகர். மாமனார் வீட்டில் விட்டுவிட்டு வந்த மனைவிக்கும், தன் வீட்டில் இருக்கும் அம்மாவுக்கும் கைபேசியில் பேச மனமில்லாமல், தனித்தனியே கடிதங்கள் எழுதினான். "என் அம்மாவின் மோசமான குணம்தான் உனக்குத் தெரியுமே... இன்னும் கொஞ்சம் காலம்தான் அவர்கள் வாழ்வு. அதுவரை பொறுமையாக இரு' என மனைவிக்கும், "என்ன செய்ய? இவளைக் கட்டித் தொலைச்சாச்சு. கொஞ்சநாள் பார்ப்போம். சரி வரவில்லையென்றால் அவள் வீட்டிற்கே விரட்டிவிடுவோம். அதுவரைக்கும் பொறுமையா இருங்க'' என்று அம்மாவுக்கும் எழுதிய கடித…
-
- 0 replies
- 820 views
-
-
காட்சி 1 ஒரு நாள் இரவு மனைவி காதுக்குள் கதைக்கத்தொடங்கினாள். (முன்பெல்லாம் இந்த தலையணி மந்திரத்துக்கு காது கொடுப்பதில்லை. அனுபவத்தால் அவளது சில தகவல்களைக்கேட்காது விட்டு வாழ்வில் சில விடயங்களில் வாங்கிக்கட்டியதாலும் மக்களது நலன் சார்ந்தும் தற்பொழுது காது திறந்து விடப்பட்டுள்ளது) மனைவி : அப்பா இவன் பெரியவன் அடிக்கடி வெளியில் போகின்றான். இரவு நேரம் சென்றுதான் வீட்டுக்கு வருகின்றான். எனக்கு கொஞ்சம் பயமாக்கிடக்கு. (தற்பொழுது அவர்கள் குழுவாக படிக்கும் காலம். அடிக்கடி பரீட்சைகளும் இருக்கு. இது எல்லோருக்கும் தெரியும்) எனக்கு தாயின் கவலையைப்புரிந்து கொள்ள முடிந்தது. ஆனாலும் இதை தொடரவிடக்கூடாது. அது இருவருக்கும் நல்லதல்ல. நான் : அவனுக்கு இப்ப எத்தனை வயசு? மனைவி : …
-
- 62 replies
- 6.3k views
-
-
குருபீடம் - சிறுகதை ஜா.தீபா - ஓவியங்கள்: ரமணன் பேருந்து கிளம்பிவிட்டது. சென்னை எல்லையைத் தாண்டியதும் நடத்துநர் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்பாக வந்து நின்றார். பேருந்தின் உட்புறம் அமைதியானது. சிவகாமியின் இருக்கை, தொலைக்காட்சிப் பெட்டிக்குக் கீழே முதல் வரிசையில் அமைந்திருந்தது. பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட இருக்கை அது. திரையில் நீலம், பச்சை என வண்ணங்கள் மாறி மாறித் தெரியத் தொடங்கின. பிறகு, தெளிவான சித்திரங்களோடு திரைப்படம் ஆரம்பமானது. அது திரையரங்கில் அப்போது ஓடிக்கொண்டிருந்த பரபரப்பான ஒரு திரைப்படம். சிவகாமிக்கு நீளமான கொட்டாவி வந்தது. தலைக்கு மேல் அலறப்போகும் வசனங்களை மீறித் தூங்குவதற்கு, அவசியம் பயிற்சி இருக்க வேண்டும். அது சிவகாமிக்குக் கொஞ…
-
- 0 replies
- 7.2k views
-
-
முதுமைப்பசி! காலையில் எழுந்ததும், மொட்டை மாடியில் இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது தான் அலமேலுவின் முதல் வேலை. காய்கறி செடி, பூச்செடி என்று ஒவ்வொரு செடிக்கும் பார்த்து பார்த்து, பக்குவமாக தண்ணீர் ஊற்றுவாள். அவரைக் கொடி படர்ந்திருந்த பந்தலின் ஓரத்தில் கட்டி விடப்பட்டிருந்த கூண்டில், இரண்டு தேன் சிட்டுகள் கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்ததை மகிழ்ச்சியுடன் பார்த்தாள். தன் குடும்பத்திற்காக உழைத்து, பிள்ளைகளுக்காக வளைந்து, தேவையற்ற பொருளாக தனிமைப்படுத்தப்பட்ட அலமேலுவுக்கு, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதும், தேன் சிட்டுகளை பார்த்து ரசிப்பது மட்டுமே ஆனந்தம். அலமேலுவுக்கு மொத்தம் ஐந்து பிள்ளைகள்.…
-
- 0 replies
- 1.1k views
-
-
http://sinnakuddy.blogspot.com/2007/02/blog-post_5401.html லொக் லொக் என்று சதா இருமியபடி கொண்டிருந்தது உந்த அப்பம்மா. சாடையாய் வந்த தூக்கத்தை கெடுத்து போட்டுது என்று மனதிலை பொருமி என்று படுக்க . அதைவிட வெளியே வேலிக்கு போட்ட சொத்தி பூவரசு மரத்திலிருந்து அண்ட காகம் ஒன்று தலையை குத்தி குத்தி கரைந்து கொண்டிருந்தது. வராத ஆக்கள் தூரத்திலிருந்து வர போயினோமோ .அல்லாட்டி மண்டையை போட்டினமோ.காகத்தின் பாசையை தெரிந்த மாதிரி மொழி பெயர்த்து கிழவி தன் பாட்டில் புறு புறுத்து கொண்டிருந்தது. வாசலில் சைக்கிள் மணி அடிக்க தந்தியோடாய் மோனை திடுக்கிட்டு பட படக்க. இல்லை இவன் மூர்த்தியணை என்று கொண்டு படலைக்கு போக அவன் பட படத்துக்கொண்டு பேய் அறைஞ்சவன் மாதிரி நின்று
-
- 1 reply
- 1.5k views
-
-
லெப்.கேணல் ஜொனி(விக்கினேஸ்வரன்: விஜயகுமார்) பருத்திதுறை(குட்டலை) இவர் பேராதனை பல்கலை கழகத்தில் பெளதீக விஞ்ஞான மாணவகாய் கல்வி கற்று கொண்டிருந்த காலத்தில் தன்னை விடுதலை போராட்டத்திற்காய் இணைத்த ஒரு போராளி.இந்தியா விடுதலை புலிகளிற்கும் பயிற்சி வழங்க முன்வந்த போது தலைவர் தொலை தொடர்பு மற்றும் அது சம்பந்தமான தொழில்நுட்ப பயிற்சிகளிற்கு ஜொனியை தெரிவு செய்து அனுப்பிருந்தார். அப்போது புலிகளிடம் தொலை தொடர்பு வசதிகள் அவ்வளவாக இல்லாத கால கட்டம் யாராவது மிக நம்பிக்கையான ஒருவர்தான் செய்திகளை காவிசென்று மற்றைய போராளிகளிற்கு தெரிவிப்பது வழைமை அப்படி புலிகளின் ஆரம்பகாலத்தில் இருந்தே பல இரகசிய செய்திகளைதாங்கி எடுத்து செல்பராக இருந்தவர்களில் முக்கியமானவர் ஜெனி. …
-
- 2 replies
- 1.1k views
-
-
ஏதோ ஒரு சத்தம் காது செவிப்பட்டறை வந்து அழுத்தியது .திடுக்கிட்டு எழுந்தாள் .சத்தம் வந்த திசையை அனுமானிக்க முடியாமால் அதிர்ந்ததுடன் அரண்டு இருந்தாள்,சுவரில் இருந்த மணிக்கூடு இது எழும்பும் நேரமல்ல அதையும் தாண்டியும் என உணர்த்தியது.யன்னலூடு நோட்டமிட்டாள் வெண்பனி கொட்டியிருந்தது .வந்து ஊரில் இருந்து புலத்துக்கு வந்து நாலு நாளாகியும் இரவு பகலும் மாறி இருந்தாலும் வெளி குளிரும் உள் வெப்பமும் கூடி இறங்கினாலும் இந்த உலகத்தோடு ஒன்று இணைய முடியாமால் தவித்தாள் ,தனிமையும் விரக்தியும் குற்ற உணர்வும் இயலாமையும் ஒன்றுக்கு ஒன்று போட்டி போட்டு கொண்டு அழுத்தியது. நாலு நாள் முதல் தான் கண்டவன் நானூறு நாள் தேக்கி வைத்த வெறியை தணிக்க முயன்றது உடலிலும் மனதிலும் தெறிக்க கட்டில் இருந்திருந்து …
-
- 20 replies
- 3k views
-
-
வெண்ணிலா வானத்தில் முழுமதி ஒளிவீசிக் கொண்டிருந்தது. அன்று போயா விடுமுறை. எங்கும் கடைகள் மூடப்பட்டிருந்ததால் வீதி வெறிச்சோடிக் கிடந்தது. அந்த அகலமான வீதியில் தன்னந்தனியாக நடந்துகொண்டிருந்த அருணிற்கு சொந்த மண்ணின் காற்றைச் சுவாசிப்பது சுகமாகவே இருந்தாலும் சுதந்திரக் காற்றை எப்போ சுவாசிக்கப் போகிறோம் என்று அங்கலாய்ப்பாகவே இருந்தது. ஜந்து வருடங்களாக திரைகடலோடித் திரவியம் தேடிவிட்டு நேற்றுத்தான் அருண் நாடு திரும்பி இருந்தான். தன் சொந்தமண்ணில் நடைபெற்றுவரும் அவலங்களை அப்பப்போ செய்திகள் மூலம் அறிந்த அருணிற்கு மனதுக்குள் இனம் புரியாத ஏதோ ஒரு உணர்வு. ஒரு விதமாக ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டு தனது நாட்டிற்குத் திரும்பி வந்தாலும் தன் அன்னையையும் தங்கைகளையும் பார்க்க இன்னும் வழ…
-
- 4 replies
- 2.1k views
-
-
பற்பல வகைகளில் குணாதிசயம், பழக்க வழக்கங்களுடைய மனிதர்களை தினந்தோறும் நாம் பார்க்கிறோம். பொதுவில், மனிதர்களுக்கு மூன்று விதமான முகங்கள் உள்ளதாக கடவுள் கூறுகிறார். அவரது கதையைக் கேட்போமா?ஒரு நாள் கடவுள் தெருவில் சென்று கொண்டிருந்தார். அங்கே ஒரு மனிதன் கட்டிட வேலை செய்து கொண்டிருந்ததைக் கண்டார். அவனருகே சென்று, “என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார். அவன், “பார்த்தால் தெரியவில்லையா? ஒரு செங்கல் மேல் இன்னொரு செங்கல் வைத்து அடுக்குகிறேன்” என்றான். தெருவில் மேலும் சிறிது தூரம் நடந்து சென்ற கடவுள் அதே வேலையைச் செய்யும் மற்றொரு மனிதனைக் கண்டார். அவனிடமும் அதே கேள்வியைக் கேட்டார். அதற்கு அவன் “நான் ஒரு சுவர் எழுப்புகிறேன்” என்றான். மேலும் சிறிது தூரம் சென்ற அவர் …
-
- 0 replies
- 1.1k views
-
-
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை -1 கார்த்திக் டிசம்பர் 22, 2024 மூலம் : யமுனா ஹர்ஷவர்த்தனா தமிழாக்கம் : கார்த்திக் திருமதி. யமுனா ஹர்ஷவர்த்தனா அவர்கள் எழுதி கிரி ட்ரேடிங் நிறுவனம் வெளியிட்ட ” Once upon a Time Thousands of years ago “ என்ற ஆங்கில புத்தகத்தின் மொழிபெயர்ப்பு இது. மஹாபாரத கதைகளின் தொகுப்பே இந்த நூல். ஆனை முகத்தோனுடன் ஓர் ஒப்பந்தம் உலகின் தலைச்சிறந்த காவியத்தை எழுதுவதற்கான நேரம் அது , வரலாற்றை சந்ததியருக்காக ஆவணப்படுத்தப்பட வேண்டிய நேரம். மீனவப் பெண்ணான சத்யவதிக்கும், பராசர முனிவருக்கும் பிறந்த கரிய நிறத்தை கொண்ட ரிஷி கிருஷ்ண த்வைபாயனா அந்தப் பொறுப்பை தனதாக்கிக் கொண்டார். பரந்த வேதங்களை படிப்பதற்கும் அடுத்த தலைமுறைகளுக்கு தொகுத்து வழங்கவும் வசதியாக தொகு…
-
-
- 15 replies
- 1.1k views
- 1 follower
-
-
மனித யந்திரம்-புதுமைப்பித்தன் புதுமைப்பித்தன் (மணிக்கொடி, 25-04-1937 ) 1 ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஒரு ஸ்டோர் குமாஸ்தா. அவர் உப்புப் புளி பற்று-வரவு கணக்கின் மூலமாகவும் படிக்கல்லின் மூலமாகவும் மனித வர்க்கத்தின் சோக நாடகங்களையும் மனித சித்தத்தின் விசித்திர ஓட்டங்களையும் அளந்தவர். அவருக்குச் சென்ற நாற்பத்தைந்து வருஷங்களாக அதே பாதை, அதே வீடு, அதே பலசரக்குக் கடையின் கமறல்தான் விதி. அதுவும் அந்தக் காலத்தில் அடக்கமான வெறும் மூலைத்தெரு ராமு கடையாகத்தான் இருந்தது. கடையும் பிள்ளையவர்களுடன் வளர்ந்தது. ஆனால் அதில் சுவாரஸ்யமென்னவெனில் வெறும் 'மீனாச்சி' ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையாகப் பரிணமித்தாலும் அவருக்கு அந்தப் பழையதுதான், அந்தக் காவியேறிய கம்பிக்கர…
-
- 0 replies
- 998 views
-
-
வீரயுக நாயகன் வேள் பாரி - 1 புதிய வரலாற்று தொடர்சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ., முன்னுரை இளைப்பாற நிழலின்றித் தவிக்கும் வழிப்போக்கனின் கண்ணில் படும் பெரும் ஆலமரம்போல, மூவேந்தர்களும் மன்னர்கள் பலரும் ஆண்ட தமிழகத்தில், தவித்தலைந்த உயிர்களுக்காகத் தன்னையே தந்தவன் வேள்பாரி. தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது. பாரிக்கு எதிராகத் தனித்தனியே அவர்கள் மேற்கொண்ட போர் முயற்சிகள் கைகூடவில்லை. இறுதியில் மூவேந்தர்களும் ஒன்றிணைந்தனர். அவர்களின் கூட்டுப்படை பாரியின் பறம்புந…
-
- 127 replies
- 526.8k views
-
-
வழி (தமிழீழப் பெண்களின் சிறுகதைகள்) e-book வடிவில் http://www.padippakam.com/document/ltte/Book/book00042.pdf
-
- 0 replies
- 684 views
-
-
*******என்னுடைய இந்தச் சிறுகதை அமெரிக்காவின் மின்னெசோட்டா மாநிலத்தின் தமிழ் சஞ்சிகையான பனிப்பூக்கள் http://www.panippookkal.com/ithazh/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%81/ இதழின் இன்றைய பதிப்பில் வெளிவந்துள்ளது. ***** விமானம் கிளம்புவதற்கு இன்னும் அரைமணி நேரமாவது ஆகும் என்பதால் அதுவரை இருக்கையில் இருக்க மனமில்லாமல் எழுந்து என் கைப் பையில் இருந்த புத்தகங்களில் ஒன்றை எடுத்துப் படிக்கத் தயாரானபோது என் மகள் குறுக்கிட்டாள். “அப்பா இன்னும் எவ்வளவு நேரத்திலை நாங்கள் யாழ்ப்பாணத்துக்குப் போகலாம்” “இன்னும் ரெண்டு நாள் ஆகுமட செல்லம்…” “ரெண்டு நாளோ… அப்ப இண்டைக்கு திங்கள்… செவ்வாய்… புதன் கிழமை …
-
- 0 replies
- 982 views
-
-
ஒரு நிமிடக் கதை: வசதி எனக்கு மிகவும் நெருங்கிய குடும்ப நண்பர் பாபுவின் குழந்தைக்கு காதணி விழா. நான் என் மனைவி சித்ராவையும், ஃப்ரான்ஸில் இருந்து வந்திருக்கும் என் தங்கை பத்மாவையும் அந்த விழாவுக்கு அனுப்பி வைத்தேன். வேலை பளு காரணமாக நான் செல்ல முடியவில்லை. விழா முடிந்து திரும்பி வந்த என் மனைவி தன் முகத்தை தூக்கி மூன்றாவது மாடியில் வைத்திருந்தாள். “என்னாச்சு, ஏன் இப்படி ‘உம்’முன்னு இருக்கே?” என்று என் தங்கைக்கு தெரியாமல் அவளிடம் கேட்டேன். “எல்லாத்துக்கும் காரணம் என்கூட நீங்க உங்க தங்கச்சியை அனுப்பி வைச்சதுதான்!” என்று சொல்லிவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள். “ஏய்... …
-
- 0 replies
- 848 views
-
-
முயல் சுருக்கு கண்கள் - சிறுகதை அகரமுதல்வன் - ஓவியங்கள்: செந்தில் மிகப்பரந்த மாலையில் நடந்துவரும் கிழவருக்கு, மெலிந்த அந்தியின் ஒளி மேற்கில் இருந்து கூசியது. ஒரு சாயலில் கண்களை மூடித் திறந்தார். கோடுபோல நடந்துபோகும் தனது நிழலை ஊடறுத்துப் பறக்கும் மணிப்புறாவைப் பார்க்க அவருக்குத் தோன்றவில்லை. மணிப்புறாவின் அலகில் கிழவர் தொங்கி நின்றதைப்போல அந்தரத்தின் அழகு நிழல் காட்டியது. பாலையின் குரலாகத் தொய்வற்று முன்னேறும் அவரின் பின்னே, நடந்துபோகும் அமலனின் வலதுபக்கத் தோளில் தொங்கிக் கொண்டிருக்கிறது உடும்பு. மூச்சிரைக்க நடக்கும் அவன் காலடிக்கு இடையில் காடு பெருகுகிறது. கிழவர், காலைக் கழுவி, குதிக்காலைத் திருப்பிப் பார்த்து வீட்டுக்குள் சென்றார். உடும்பை வ…
-
- 0 replies
- 2.9k views
-