Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. ஆபரேஷன் புலி - சிறுகதை மூன்று காரணங்களுக்காக, எங்கள் வார்டு கவுன்சிலர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளரை நிறுத்துவது என நாங்கள் முடிவெடுத்தோம். ஒன்று, புலி எந்த நேரமும் முழு போதையில் தெருவில் அங்குமிங்கும் உலாத்திக்கொண்டே இருப்பது. இரண்டு, புலி முழு போதையில் எந்த நேரத்திலும் யார் வீட்டுக்குள்ளும் உள்ளே நுழைந்து சமையலறையில் தண்ணீர் எடுத்துக் குடிப்பது, சோற்றை எடுத்துப் போட்டுச் சாப்பிடுவது. மூன்று, எங்கள் தெருவுக்குள் புதிதாக யார் நடந்து சென்றாலும் அவர்களை நிறுத்தி அலப்பறை கொடுத்து, அவர்கள் சட்டைப்பையில் கையை விட்டு, தனது குடிக்காக ஐந்து ரூபாய் எடுத்துக்கொள்வது. இது அப்பட்டமான ரெளடித்தனம்; பகல் கொள்ளை. எங்கள் தெரு, பேருந்துநிலையத்…

  2. ஓனர் - சிறுகதை சிறுகதை: கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி, ஓவியங்கள்: ஸ்யாம் ‘`விகடனுக்கு ஒரு கதை அனுப்பணும்’’ ‘`சூப்பர்டா… எப்பக்குள்ள அனுப்பச் சொல்லிக் கேட்ருக்காங்க?’’ இன்றுவரை அவன் அந்தக் கேள்வியை சீரியசாகக் கேட்டானா இல்லை கிண்டலுக்காகக் கேட்டானா என்று தெரியவில்லை. செய்யும் வேலையில் அவ்வப்போது சிற்சில சாதனைகள் செய்துவந்தாலும், அதற்கான பாராட்டுகள், அங்கீகாரங்கள், கைத்தட்டல்கள் கிடைக்கப்பெற்றாலும், இந்த ஆசை மட்டும் தீரவே இல்லை. ஆனந்த விகடனுக்கு ஒரு கதை அனுப்பணும். இதில் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். கதை விகடனில் பிரசுரமாக வேண்டும் என்பதைப் பற்றி அதிகம் சிந்தித்ததில்லை. முதலில் விகடனுக்கு அனுப்ப ஒரு கதை எழுத வேண்டும். இதுதான் மனதில…

    • 1 reply
    • 2.4k views
  3. பித்தளை நாகம் - சிறுகதை இவனுக்கு, இப்போது பஞ்சாலையின் இதயமான `கார்டிங்’ பிரிவின் இயந்திரப் பராமரிப்புத் துறையில் பணி. துறையில் மொத்தம் இரண்டு குழுக்கள். இயந்திரத்தை அக்கு அக்காகக் கழட்டி மாட்டுபவரை பொருத்துநர் எனலாமா? அல்லது... கழட்டி? பெருசுகள்கூட ``ஆ...மா இவுரு பெரிய கழட்டி, போடா மூடிட்டு!’’ என்பார்கள். இந்தப் பிரிவின் `கழட்டி’ வின்சென்ட். கழட்டிக்கு ஓர் `எடுபிடி’ ஜெயக்குமார். எடுபிடிக்கு ஓர் `அல்லக்கை’ குமரவேல். ஆக, மூவர் உள்ளிட்ட `பழுதுபார்க்கும் குழு’. இரண்டாவது குழு `சுத்தக்குழு’. இந்தக் குழுவினர் ஓடிக்கொண்டிருக்கும் இயந்திரங்களை முறைவைத்து வாரம் ஒருமுறை நிறுத்தவேண்டும். பிறகு அவற்றின் உடைகளைக் களைந்து, `கம்ப்ரசர்’கொண்டு காற்…

  4. லால் அங்கிள்.. கண்டியில் இருந்த தன் வீட்டில் லால் கட்டைக்காற்சட்டையும் அரைக்கை ரீ சேட்டும் போட்டு கதிரையில் சாய்ந்திருந்தபடி தொலைக்காட்ச்சிப்பெட்டியை வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.அருகிலிருந்த சோபாவில் சஞ்சையும் துசியும் சதீஸும் எதுவும் பேசாது அமைதியாக தொலைக்காட்ச்சியை அவதானித்துக்கொண்டிருந்தனர்.மூவர் முகத்திலும் கவலையுடன் கூடிய அமைதி குடிகொண்டிருந்தது.தெரணை ரீவியில் செய்தியறிக்கையில் படையினர் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இறந்த உடலை கைப்பற்றிவிட்டதாகக்கூறி ஒரு வீடியோவை ஒளிபரப்பிக்கொண்டிருந்தனர்.எதையும் வெளிப்படையாகச் சொல்லமுடியாமல் பயத்துடன் உட்கார்ந்திருந்தாலும் பொடியங்கள் மூவர் முகத்திலும் சோகம் அப்பியிருந்தது.லாலிற்க்குப் பயந்து லாலின் முன்னால் அவர்…

  5. புகழ்பெற்ற விஞ்ஞான புனைகதை ஆசிரியர் Sir Arthur C Clarke உடனான சில எண்ணப் பகிர்வுகள்! அனைவருக்கும் வணக்கம், இன்று/நாளை 16.12.2008 அன்று இந்த வருடம் மறைந்த உலகப்புகழ் பெற்ற விஞ்ஞான புனைகதை ஆசிரியர் மதிப்புக்குரிய Sir Arthur C Clarke அவர்களின் 91வது பிறந்தநாள். நான் சிறீ லங்காவில இருந்தபோது Sir Arthur C Clarke அவர்களுடன் வாழ்வியல், விஞ்ஞானம் சம்மந்தமாக எனது பல சிந்தனைகளை பகிர்ந்து இருந்தன். 1997ம் ஆண்டில இருந்து ஒவ்வொருவருடமும் அவருக்கு நான் பிறந்தநாள் வாழ்த்து அனுப்புவது. கடைசியாக சென்றவருடம் அவரது 90வது பிறந்ததினத்திற்கு ஒரு Teddy bearம் பூச்செண்டும் வாங்கி அனுப்பி இருந்தன். நன்றி கூறி பதில் அனுப்பி இருந்தார். அதுவே அவருடனான எனது கடைசி எண்ணப்பர…

  6. நெஞ்சில் உள்ள சோகம் ஒன்று ........... புலம் பெயர் மண்ணில் , ஒரு மாசி மாத நாளிலே . மதியும் கணவனும் இரு பிள்ளைகளும் நெருங்கிய உறவினர் வீட்டுக்கு பயணித்தார்கள். அவர்களுக்கு அன்பளிப்பாக ,ஒரு சிறு உணவுப்பொருளை அருகிலிருந்த கடையில் வாங்கி கொண்டு , பயணத்தை தொடர்ந்தார்கள் . இவர்கள்வயது ஒத்ததா இரு சிறுவர்களும் அவ்வீடில் இருந்தார்கள். கனடாவின் ,பனிப்புயல் ,வீசியடித்து ஓரளவு ஓய்ந்து இருந்த காலம்,இன்னும் சில இடங்களில் இறுகிய கல்லாகவும் சில இடங்களில் வீட்டு தாழ்வார குழாய் மூலம் உருகி சொட்டு சொட்டாக ... வடிந்து கொண்டு இருந்தது .இவர்கள் அவ்வீட்டை அண்மித்ததும் ,சிறுவர்கள் இருவரும் இறங்கி ஓடி விட்டனர், மதியும் கணவனும் காரை விட்டு இறங்கி , ஒரு அடி எடுத்து வைத்தவள் , கதவு இ…

    • 10 replies
    • 2.1k views
  7. ஒரு நிமிடக் கதை: பணம்! “மாமா! வாக்கிங் போய்ட்டு வர்றப்போ பாலும், காய்கறியும் வாங்கிட்டு வந்துடுங்களேன்!” லட்சுமி தன் மாமனார் சிவராமனிடம் சொன்னாள். “சரிம்மா!” என்றபடி வீட்டி லிருந்து இறங்கிய சிவராமனுக் குள் அந்த எண்ணம் மெலிதாக எட்டிப் பார்த்தது. ‘பாலும் காய்கறியும் வாங்கி வரச் சொன்னவள் பணம் தரவேண்டாமா? என் பென்ஷன் பணம் கண்ணை உறுத்துதோ?’ -யோசித்தபடி நடந்தவர், நடைப் பயிற்சியை முடித்துவிட்டு, பால் மற்றும் காய்கறிகளை வாங்கிக் கொண்டு வந்தார். வீட்டு காம்பவுண்டுக்குள் நுழையும்போதே தன் மகன் ஆனந்த், கடுமையான குரலில் லட்சுமியிடம் பேசுவது கேட்டது. தோட்டத்துச் செடிகளை வேடிக்கைப் பார்ப்பது போல வாசல் …

  8. *அப்பாப் பூனை* வேர்கள் துளிர்க்கும் தமிழீழப்பெண் சிறுகதைத் தொகுதியிலிருந்து....ஒலிவடிவி

  9. ஓடிப்போன ஒட்டகம் இந்தப்பனிக் குளிருக்கு எவன் வீட்டிற்குள்ளையே அடைபட்டுக்கிடப்பான். என்ரை நாட்டிலைதான் நான் சுதந்திரமாகச் சுத்தலாம் என்று ஒரு துண்டுக் காகிதத்திலை எழுதி வைத்திட்டுச் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டைவிட்டுக் கிளம்பி டுபாய்க்குக் கப்பல் ஏறின ஒட்டகம், கோடைகாலம் தொடங்க...... போனதுபோலவே சொல்லாமல் கொள்ளாமலுக்கு இரண்டு நாளுக்குமுதல் வந்து தன்ரை அறையுக்கை படுத்துக்கிடந்தது. சரி என்னதான் நடக்குது பார்ப்பம் என்று பேசாமலுக்கு இருந்தால் அது பாட்டுக்குத் திரும்பவும் தன்ரை குணத்தைக் காட்டத் தொடங்கிவிட்டுது. அதுதான் அந்தக் கதையளை உங்களுக்குச் சொல்லுவமென்று வந்து உட்கார்ந்தால் வைத்தியரிடம் மருந்தெடுக்கப்போறதுக்கு நேரமாச்சுது. கோபியாதையுங்கோ போட்டுவந…

  10. சதா சண்டித்தனம் செய்யும் ஒருவனை வீட்டில் பூட்டி வைக்கலாம். நான்கு அடி கொடுத்து அடக்கப் பார்க்கலாம். பேசாமல் முறைத்துக்கொண்டு மௌன வதை செய்யலாம். அதிக பட்சம் சோறு போடாமல் கூட இருக்கலாம். யாராவது உணவகத்தில் வேலைக்குச் சேர்த்து விடுவார்களா? என் அம்மாவுக்கு இதுபோன்ற திட்டமெல்லாம் எங்கிருந்துதான் வருமோ. சபா மாமாதான் இனி உன்னை மேய்க்க லாயக்கு என கழுத்தைப் பிடித்து தள்ளாதக் குறையாக அனுப்பியே விட்டார். சபா மாமா என்றாலே எனக்கு நடுங்கும். சபா மாநிலத்தில் போலிஸ் வேலை செய்யப்போனவர், மேலதிகாரி ஏதோ திட்டினான் என்பதால் நான்கு அறையும் கூடவே வேலையையும் திரும்ப கொடுத்துவிட்டு தீபகற்பத்திற்கு வந்து சேர்ந்துவிட்டார். சபாவில் குறிப்பிட்ட ஒரு இன பெண்களுக்குக் கறுத்த கட்டை என்றால் கொள்ளை …

  11. மழை நின்ற காலத்தில்... குருவாயூர் கோயிலில் லட்டு கிருஷ்ணனின் தரிசனத்துக்காக வரிசையில் காத்து நின்றிருந்தேன். விசேஷ நாள் கிடையாது தான். என்றாலும் கூட்டம் இருந்தது. எதிரே துலாபாரத்தில் ஒரு சிறுமியை உட்கார வைத்து எடைக்கு எடை நேந்திரம் காய்களை காணிக்கைக் கொடை தந்து கொண்டிருந்தார்கள். உள்ளே பூஜை நடந்து கொண்டிருக்க கொஞ்ச நேரமாகக் காத்திருப்பு. யாரோ என் தோளைத் தொட திரும்பினேன். "நிங்ஙள அவிட யாரோ விளிக்குன்னு...'' அந்தப் பெரியவர் கை காட்டின திசையில் நோக்கினேன். எனக்குப் பின் வரிசையில், பத்திருபது பேர் தள்ளிக் கைக்குழந்தையுடன் நின்றிருந்த அந்தப் பெண் உற்…

    • 3 replies
    • 1.5k views
  12. பிரம்மோபதேசம் சுப்பிரமணியனுக்கு உபநயனம்! அதாவது பூணூல் கல்யாணம் என்கிற பிரம்மோபதேசம். முகூர்த்த நாள் எல்லாம் குறித்தாகிவிட்டது. ஒற்றைப் படை வயதில்தான் பூணூல் போட வேண்டும் என்பது சம்பிரதாயம்! ஏழாவது வயதில் பூணூல் போடுவது சிலாக்கியம். காமம் மனதில் நுழைவதற்கு முன் பூணூல் போட்டு விட வேண்டும். சுப்பிரமணியனுக்கு இப்போது பதின்மூன்று வயது பிறந்திருக்கிறது. கல்யாண முஹூர்த்தம் எளிதில் கிடைத்துவிடும் பூணூலுக்கு முஹூர்த்தம் கிடைப்பது அவ்வளவு சுலபம் இல்லை. "எல்லாருக்கும் சொன்னோம். ஆனால் அண்ணாவுக்கு சொல்ல வேண்டாமா?' என்றாள் அம்மா. அம்மாவின் ஒரே அண்ணா ருத்ரமூர்த்தி சாஸ்திரிகள் மிகவும் ஆச்சாரமானவர். அடுத்தவர்கள் வீ…

  13. தங்கச்சி.. புள்ள.. என்னம்மா.. எங்க புள்ள போயிட்டு வாறா..?! உவர் எங்கட கணேஷ் மாமா பிரான்சில இருந்து வந்திருக்கிறார் எல்லோ.. அவர் வீட்ட தானம்மா போயிட்டு வாறன். ஏன் புள்ள சொல்லாமல் கொள்ளாமல் போனனி.. இப்படித்தானே புள்ள பள்ளிக்கூடம் போறன் என்றிட்டு சொல்லாமல் கொள்ளாமல் இயக்கத்துக்கு ஓடிப் போயிட்டா. அதுக்கு பிறகு முள்ளிவாய்க்கால்.. வன்னி காம்புகள் என்று அலைஞ்சு திரிஞ்சு.. தண்ணி சாப்பிடில்லாமல் கிடந்து.. கொப்பரும் கிபீர் அடியோட போய் சேர.. தனிக்கட்டையா எவ்வளவோ கஸ்டப்பட்டு.. உந்த வவுனியாவில நிக்கிற அறுவாங்களின்ர காலை கையைப் பிடிச்சு கெஞ்சிக் கூத்தாடி உன்னை எடுத்து வந்திருக்கிறன். ஓமம்மா. என்னை வெளில எடுக்க கணேஸ் மாமாவும் ஈபிடிபி ஆக்களுக்கு புளொட் ஆக்களுக்கு…

  14. ஜூட் - அனோஜன் பாலகிருஷ்ணன் வீதியிலே எப்போவும் நிற்கும் அந்த நாய், உற்றுப்பார்க்க கொஞ்சம் பயங்கரமாகவே தோன்றும். குறுக்காகவும் நெடுக்காகவும் வீதியைக்கடந்து எப்பவும் ஓடிக்கொண்டிருக்கும். மண்ணிறத்தில் நுனிவாலில் வெள்ளை நிறத்துடன் அந்தநாய் இருந்தது. எப்போதும் ஊட்டத்துடன் ஜொலிப்பாகவே ரௌத்திரமாக திரியும். குறுக்காக போய்வரும் சைக்கிள்களை மட்டுமல்லாது போய்வரும் மோட்டார் சைக்கிள்களையும் நாக்கில் எச்சில் வழிந்து ஒழுகிக்கொண்டிருக்க கால்தொடைகள் படபடக்க பின்னால் மூர்க்கமாக துரத்தும். இந்தநாயின் உபத்திரத்தினால் அவ்வீதியில் ஆட்கள் செல்வது குறைந்து கொண்டிருந்தது . கீர்த்தனாவுக்கு இந்த நாய் கிடைத்தது சுவாரசியமான வரலாறு ஏதும் இல்லாத தற்செயலான ஒன்றாகவே கொள்ளமுடியும். அவசரமாக பல…

  15. ஒரு குடிகாரனும் மகளும்-நோர்வேஜியச் சிறுகதை- தமிழில்: ரூபன் சிவராஜா மகளுக்கு ஐந்து வயது. அவனிடமிருந்து விவாகரத்துப் பெற்றுப் பிரிந்து விட்டாள் அவள். ஒரு நாளையேனும் விட்டுவைக்காது தலைகால் புரியாமல் குடித்துக்கொண்டிருந்த அவனைச் சகித்துக்கொள்ள அவளால் முடிந்திருக்கவில்லை. சிவத்துப்பிதுங்கிய அவனது கண்களை பார்த்திருப்பது மனவுளைச்சலைக் கொடுத்தது. விவாகரத்து சுலபமாகக் கிடைத்துவிட்டது. அற்வக்கேற்றிடம் சென்றுவந்த அதேநாள், தனி அறையொன்றை வாடகைக்கு எடுத்துக் குடியேறினான். பெற்றோரின் மணமுறிவுச் சம்பவம் பற்றிய விளக்கம் மகளைப் பெரிதாகச் சென்றடைந்திருக்கவில்லை. ஆரம்பத்தில் சில நாட்கள் தகப்பனைப் பற்றி அடிக்கடி கேட்டுக்கொண்டிருந்தாள். நாட்கள் போகப்போக அவன் பற்றிய…

    • 1 reply
    • 1.9k views
  16. ரிபிசி ராம்ராஜ் அப்படி சொன்னதை எனக்கு ஜீரணிக்கச் சற்றுக் கடினமாகத்தான் இருந்தது. மாவிலாறில் அப்பொழுதுதான் பிரச்சனை ஆரம்பமாகிக் கொண்டிருந்தது. தமிழீழப் போராட்டம் போகப் போகின்ற கொடுரமான திசை பற்றி யாரும் கனவிலும் நினைக்காத நேரம் என்னுடைய இணையத்தில் ரிபிசி பற்றி வந்த விமர்சனத்திற்கு பதில் சொல்வதற்கு தொடர்பு கொண்ட ராம்ராஜ் அப்பொழுது நடந்த உரையாடலின் போது ஜீரணிக்க முடியாத ஒரு எதிர்வுகூறலை சொன்னார். அவர் சொன்னதன் சாரம்சம் இதுதான். விரைவில் பெரும் யுத்தம் வரும் உலகின் பலநாடுகள் சிறிலங்காவிற்கு உதவி செய்யும். விடுதலைப் புலிகள் வன்னியின் ஒரு பகுதியில் முடக்கப்பட்டு அழிக்கப்படுவார்கள். பிரபாகரன் மீது உண்மையான விசுவாசம் வைத்திருக்கும் சில ஆயிரம் புலிகள் கடைசி மட்டும் போராட…

  17. "அது ஒரு வசந்த காலம் .............". துள்ளித்திரிந்த பருவம் ...கொஞ்சம் அடங்கி ..... பத்தாம் வகுப்பு இறுதி வருட சோதினைக்கு தயார் படுத்தும் காலம். பாட சாலை முடிந்து (துஷன்) பிரத்தியேக வகுப்புக்கு போவதுண்டு . முதல் தடவை ஏழு பாடம் ,கணிதம் தவிர சித்தியடைந்தேன் .கணிதம் கோட்டை விட்டதால் ,வீட்டில் அனுமதி பெற்று , அயல் கிராமத்துக்கு படிக்க போவதுண்டு . காலை ஏழு மணிக்கு ஒரு வகுப்பு... .மாலையில் எட்டரைக்கு பாடசாலை ..பின் ஐந்து மணிக்கு மறு துஷன் வகுப்பு . இப்படியாக பாடசாலையும் டுஷன் வகுப்புமாக இருந்த காலம் . .காலை பரபரப்பில் ஒரு பாண் துண்டு கடியுடன் போவதுண்டு . மதிய " சாப்பாடு " அமுதம் போல் இருக்கும் . நான் மாமிச பிரியன் (சை…

    • 1 reply
    • 1.5k views
  18. முகப்புத்தகம் என்றைக்கும் விட இன்றைக்கு மாறுதலாய் இருக்கும் என்று எண்ணவில்லை, எப்போதும் போலவே உள்நுழைந்த போது நண்பராய் சேர விண்ணப்பித்த மனு ஒன்று எட்டிப்பார்த்தபடியே இருந்தது,திறந்து பார்த்தால் நிலா, என்னுடைய பள்ளித்தோழி,தூரத்து உறவும் கூட பெயரைப்போலவே வட்ட முகம்,பெரியகண்கள் சிவந்தும் இல்லை,கருப்பும் இல்லை பொது நிறம் அழகானவள். உரிமையுடன் சண்டை பிடிப்பவள் அன்றிலிருந்து இன்று வரை "டா" "டி" முதல் பேய்,பிசாசு வரை செல்லச்சண்டைகள் கைகலப்புவரை போக வட்டவாரி கொண்டு குத்தும் வரை வந்திருக்கிறாள். ஆண்டு ஒன்று முதல் ஆறு வரை ஊர்பள்ளிக்கூடத்தில் ஒன்றாக படித்த காலங்கள் எல்லாம் பசுமரத்தாணி போல் பதிந்தவை பள்ள்ளிச்சட்டை போலவே மனதும். காலமை எழும்பி வீட்டை குளிக்க பஞ்சியிலை தோட்டத்துக்கு…

  19. கயிறு இழுத்தல் போட்டி அன்று யாழில், அந்த கல்லூரியில், வருடாந்த மெய்வல்லுனர் போட்டி இறுதிநாள். வள்ளுவர், கம்பன், இளங்கோ, பாரதி என நான்கு இல்லங்கள். நான்கு வீடுகளிலும் தமது இல்லமே வெல்லவேண்டும் என பல மாதங்களாக எடுத்த முயற்சிகள், பயிற்சிகள்... இவற்றின் இறுதி பலாபலனை அடையும் நாள் இன்று. இல்லங்கள் நாலாக இருந்தாலும் போட்டி இரண்டு இல்லங்கள் இடையேதான் என ஆரம்பத்தில் இருந்தே இருந்தது. ஆனால் அதில் மூன்றாவதாக இருந்த இல்லத்தில் பலத்த முயற்சிகள் இருந்தும் எதிர்பார்த்த பலன் கிட்டவில்லை. ஏன் சலிப்பும் இருந்தது. என்ன தான் முயன்றும் முடியவில்லையே என....இத்தனை வருடங்கள் முயன்றோமோ ...ம் ம் என சலித்தவர்களும் அந்த இல்லத்தில் இருக்கத்தான் செய்தனர் 'முயற்சி உடையான் இகழ்ச்சி …

    • 2 replies
    • 2.6k views
  20. சிட்னியில இருக்கிற குமர்கள்,குமரங்கள்,கிழடன்கள்,கிழடிகள்,நடுவயதானர் ஒருவித அருட்டப்பட்ட நிலையில் இருக்கிறார்கள் .காரணம் என்ன தெரியுமோ இளைய தளபதி விஜய் எங்கன்ட சிட்னியில நிற்கிறார் எனபதுதான். தலைவா படப்படிப்பு சிட்னியில் நடைபெறுகிது. கமராவுக்கு முன்னாள் நின்று இளை தளபதி இலையான் கலைப்பது போல் கையை,காலை ஆட்டினால் கோடியாக பணம் அவரது வங்கியில் போய்சேரும். எங்களுக்கு என்ன வரும் ?????? "தம்பி என்னை ஒருக்கா கூட்டிகொண்டு போறியேடா”, "எங்கன ஆச்சி கோவிலுக்கோ? பஜனைக்கோ? அல்லது எவனாவது புது சாமிமார்,சாத்திரிமார் இந்தியாவில் இருந்து வந்திருக்கிறானோ " "இல்லையடா தம்பி எங்கன்ட தளபதி விஜய் தலைவா பட சூட்டின் சிட்னியில் எடுக்கிறாங்கள் அதுக்கு வந்திருக்கிறார்" நான் எம்.ஜி.ஆர்…

  21. திருடன் காலையில் வழக்கம்போல வாக்கிங் புறப்பட்டேன். எப்போதுமே டிராக் சூட், ஷூ எல்லாம் அணிந்த பிறகு பர்ஸில் இருந்து பத்து ரூபாய் எடுத்து பையில் வைத்துக் கொள்வேன். ஒருவேளை வழியில் கிறுகிறுப்பு வந்துவிட்டால் ஒரு சோடா வாங்கவாவது பணம் வேண்டுமே? இதுவரை அப்படியொரு சூழல் வந்ததில்லை என்பதால் பத்து ரூபாய்க்கு சோடா கிடைக்குமா என்பது பற்றிக்கூட யோசித்ததில்லை. டிராக் சூட் போல, ஷூ போல பத்து ரூபாய் என்பதும் வாக்கிங் வஸ்துக்களில் ஒன்றாகிவிட்டது. அந்தவகையில் பத்து ரூபாயை எடுக்கலாம் என்று ஃப்ரிட்ஜின் மேல் இருந்த பர்ஸை எடுத்தபோது கொஞ்சம் உள்வாங்கி இருந்தது. முந்தைய தினம்தான் ஏடிஎம்மில் இருந்து மூவாயிரம் ரூபாய் எடுத்திருந்தேன். மகனுக்கு செருப்பு வாங்க முந்நூறு ரூபாய் எடுக்கப் போனபோத…

    • 1 reply
    • 3.1k views
  22. ஒவ்வொன்றாய்த் திருடுகிறாய் சிறுகதை: ஜி.ஆர்.சுரேந்தர்நாத், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு பின்வரும் குறிப்புகளில் இருந்து, நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்... எஃப்.எம் தொகுப்பாளினிக்கு மதியம் 12 மணி வெயிலில் போன் போட்டு, 'குளிருதே... குளிருதே... உடம்பெல்லாம் உதறுதே...’ என்ற பாடலை ஒலிபரப்பச் சொல்லி, என் நண்பன் அரவிந்துக்கு டெடிகேட் செய்வேன் (அப்போதுதான் அரவிந்த் மறுநாள், 'நெஞ்செல்லாம் சிதறுதே... நீ வேணும்னு கதறுதே...’ என்ற பாடலை எனக்கு டெடிகேட் செய்வான்). நீங்கள் நினைப்பது சரிதான். நான் படித்து முடித்துவிட்டு வீட்டில் சும்மா இருக்கிறேன். ஓர் ஆண், வேலை இல்லாமல் இருப்பது …

  23. அண்மையில் ஷோபாசக்தியின் “வெள்ளிக்கிழமை” என்ற சிறுகதையினை வாசித்தேன். முன்னரும் பலதடவை யாழ் களத்தில் கூறியதைப் போல, சமகால ஈழத்துத் தமிழ்ப் படைப்பாளிகளில் ஷோபாசக்திக்கு நிகராய், இல்லை அருகாய்க் கூட எவரையும் என்னால் காணமுடியவில்லை (இது எனது அபிப்பிராயம் மட்டுமே). அந்த வகையில், எனது அபிப்பிராயத்தில், வெள்ளிக்கிழமை சிறுகதை, ஷோபாசக்தின் பிரமிப்பூட்டும் இன்னொரு பரிமாணத்தைக் காட்டி நிற்கின்றது. மிகவும் சிக்கலான இக்கதையிற்கு எனது புரிதல் மட்டுமே சரியான அர்த்தம் என்று நான் கூறவரவில்லை. எனது புரிதலை பகிர்ந்து மட்டும் கொள்கின்றேன். உங்கள் புரிதல்கள் பற்றியும் அறிய ஆவலாய் உள்ளது: குறிப்பு: எனது புரிதலைப் படிக்கு முன்பு, கதையைக் கீழுள்ள இணைப்பில் படித்து விடுங்கள். (இக்கதையை…

    • 19 replies
    • 3.9k views
  24. Started by nochchi,

    ஈசாப் கதைகள் என்ற நூலில் இருந்து .... கழுதை வீரம் பூனைக்கு யார் மணி கட்டுவது? என்ற குட்டிக்கதைகள்.

    • 2 replies
    • 5.6k views
  25. சீனாவில் அந்த ஏழு நாட்கள் லியோ நிரோச தர்ஷன் இலங்கையின் தமிழ் ஊடகவியலாளர்கள் குழு கடந்த வாரம் சீனாவுக்கு விஜயம் செய்தது. இதனை கொழும்பில் உள்ள சீன தூதரகம் ஒழுங்குபடுத்தியிருந்தது. முற்றிலும் மாறுபட்ட சூழல், உணவு மற்றும் மனிதர்கள் என பல்வேறு வேறுபாடுகளுக்கு மத்தியில் புதிய அனுபவங்களை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இந்த விஜயம் அமைந்திருந்தது. குறிப்பாக உணவு விடயத்தில் கிடைத்த அனுபவம் மறக்க முடியாத ஒன்றாகவே அங்கு சென்ற தமிழ் ஊடகவியலாளர்களுக்கு காணப்பட்டது. எவ்வாறாயினும் சீன அரசின் நோக்கம் அந்த நாட்டின் பல்துறைசார் வளர்ச்சியை எமக்கு காண்பிப்பதாகும். அதனடிப்படையில் மெய்சிலிர்க்க கூடிய பல கட்டுமானங்கள் எம்மை ஆச்சரியப்படுத்தியது மாத்திரமல்லாது தனது த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.