கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
அழகிய மதிய பொழுது. நந்து வீட்டில் மதிய உணவருதிய பின்னர் நந்துவின் பெற்றோரும், சிந்துவின் பெற்றோரும் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இடையிலே காணாமல் போன நம்ம கதாநாயகனை தேடி சிந்து வீட்டு தோட்டத்தை நாடி சொல்கின்றாள். இனி அலட்டலை பார்க்கலாமா? (யப்பா ஒரு ஆரம்பம்குடுக்கணும்னுறதுக்க
-
- 14 replies
- 2.6k views
-
-
அமரந்தா - சிறுகதை சிறுகதை: நரன், ஓவியங்கள்: ஸ்யாம் புனே ரயில்வண்டி நிலையத்தில் இரைச்சலும் பரபரப்பும் நிறைந்திருந்தது. வெவ்வேறு வயது, நிறம், தோற்றம், மொழி கொண்ட கலவையான மனிதர்கள் பயணத்திற்காய் ரயில் நிலையம் முழுக்கப் பரவிக்கிடந்தார்கள். நிலையத்தில் அந்த இருவரையும் கடந்து செல்லும் எல்லாமனிதர்களும் விநோதத் தன்மையோடு சில நொடி நேரம் நிலைகுத்திப் பார்த்து, பின் அவர்களிடமிருந்து பார்வையைப் பிரித்துக்கொண்டு நடந்தார்கள்.அங்கங்கே கொஞ்சமாய் நரை சிதறியிருந்த முடிகளோடு நாற்பந்தைந்து வயதுப் பெண்ணாய்த் தோற்றமளிக்கும் வயிறு புடைத்த பெண் அமரந்தா ஆறாவது நடை மேடையைத் தேடியபடி மெள்ள நடந்து வந்துகொண்டிருந்தாள். உடன் அந்தப் பெண்ணின் எழுபது சதம்…
-
- 0 replies
- 2.6k views
-
-
பெரிசு சமய போட்டி வருகிறது அந்த கேள்வி கொத்தை கொண்டு வாங்கோ படிப்போம் .சுரேஸ் முத்தவளை பெரிசு என்றும் இளையவளை சிறிசு என்றும் செல்லமாய் அழைப்பான்.இவன் கேள்விகொத்து என்று சொன்னது என்னவென்று பெரியவளுக்கு விளங்க வில்லை .அவள் அப்பொழுது மூன்றாம் வகுப்பு படித்து கொண்டிருந்தாள் . தமிழ் பேசுவாள் ஆனால் கேள்விகொத்துஎன்ற கடின சொற்கள் விளங்குவது கொஞ்சம் கடினம்.."வட் அப்பா கொத்தோ,வாரேன் "என ஒடி வந்தாள் எங்க கொத்து றொட்டி என்று அப்பாவின் கையை பார்த்தாள் .கொத்து ரோட்டி இல்லையம்மா சமய போட்டி க்கு சைவபாடசாலையில் கொடுத்த கேள்விகளை கொண்டுவாங்கோ படிக்கிறதற்க்கு.நான் விளையாடப்போறன் தங்கச்சியோட பிறகு படிப்போம் அப்பா என சினந்தாள்.நாளைக்கு போட்டி தேவாரம் படிக்கவேண்டும் ,சமய அறிவுத்திறனுக்கு படிக்…
-
- 37 replies
- 2.6k views
-
-
தேவதை..தேவன்....பிசாசு நிழலாடும் நினைவுகள். சாத்திரி ஒரு பேப்பர் நீங்கள் யாராவது தேவதையைப் பார்த்திருக்கிறீர்களா?? நான் பார்த்திருக்கிறேன்.பழகியிரு
-
- 13 replies
- 2.6k views
-
-
பெட்டிசம் பாலசிங்கம் யாழ்பாணத்தில சின்ன வயசில் எங்களின் வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி பெட்டிசம் பாலசிங்கம் இருந்தார் ,அவரை ஏன் காரண இடுகுறிப் பெயராக பெட்டிசம் எண்டு சொல்லுறது எண்டு பெட்டிசம் எழுதுறது எண்டால் என்ன எண்டு விளங்கியவர்களுக்கு தெரியும், பாலசிங்கத்துக்கு அரசாங்கத்தில் கிளறிக்கல் என்ற எழுத்துவேலை செய்யும் வேலை செய்ததால், இலங்கை குடியரசின் நிர்வாக சட்ட திட்டங்கள் தெரியும் , பெட்டிசம் எழுதும் தகுதி அத்தனையும் பெற்றிருந்தவர். ஆங்கிலத்திலும் எழுதக்கூடிய புலமை உள்ளவர். அதாலா பெட்டிசம் எழுதுறது, யாரை யாரிட்டப் போட்டுக் கொடுக்க வேண்டும் எண்டு இலங்கை ஜனநாஜக சோஷலிச குடியரசின் நீதி நிர்வாக சட்ட திட்டங்கள் நல்லாத் தெரியும். பெட்டிசம் அதை …
-
- 7 replies
- 2.6k views
-
-
பிடிகயிறு - சிறுகதை நர்சிம், ஓவியங்கள்: ஸ்யாம் பிடிமாடாப் போச்சேடா தவுடா!'' - சொல்லிக்கொண்டே ஓடியதில் மூச்சு முட்டியது பாண்டிக்கு. கையில் இருக்கும் பிடிகயிற்றைச் சுற்றிக்கொண்டே சற்று நின்று மூச்சுவாங்கிய பாண்டியை, பரிதாபமாகப் பார்த்தான் தவுடன். ''விடப்பா, நிண்டு விளையாடுச்சு. நல்லவேள, குத்தித் தூக்கத் தெரிஞ்சிச்சு அந்தப் பாளமேட்டுக்காரனை. எல்லக் கவுறு வந்ததும் தாவிப் பம்மிப் படுத்துட்டான் தாயளி. இல்லேண்டா அவென் கொடலு கொம்புல தொங்கிருக்கும்!'' அதை ஆமோதிப்பது போல பார்த்துக்கொண்டிருந்தான் பாண்டி. கிட்டத்தட்ட ஆறேழு கிலோமீட்டர் ஓடிய களைப்பு, அவர்களின் முகங்களிலும் இடுப்புகளிலும் தெரிந்தன. கையை மாற்றி மாற்றி இடுப்பைப் பிடித்தவாறே அங்கிருந்த…
-
- 2 replies
- 2.6k views
-
-
பங்குனி வெய்யில் அக்கினி தாண்டவத்தை ஆடி கொண்டிருந்தது. ஊரே ஊரடங்கு போட்டமாதிரி இருந்தது. ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்க முடியாத படி வெப்பம் கண்ணை பஞ்சடைத்த மாதிரி ஆக்கி விட்டிருக்கு . இந்த கொதிக்கும் வெய்யிலின் அகோரத்தையும் பொருட்படுத்தமால் நீண்ட பரந்த பரப்புடைய அந்த தோட்டத்து ஊடாக நடந்து கொண்டிருந்தார் சண்முகம் வாத்தியார். அந்த தோட்டம் அநத ஊரிலிருந்து அடுத்த ஊரையும் ஊடறத்து விரிந்து இருந்தது. வாத்தியார் நடக்கின்றாரோ நாட்டிய மாடி வாறரோ என்ற மாதிரி இருக்குது.கொதிக்கும் நிலத்தில் முழும் பாதம் வைத்து அழுத்த முடியாமால் கெந்தி கெந்தி நடந்து வருவதால்.. முன் கால்விரலுக்குளை கொழுவிற இடத்தில் அவருடைய பாட்டா செருப்பு அறுந்திருந்தது. அதை. சட்டை ஊசியால் செருகி இவ்வளவு காலம…
-
- 13 replies
- 2.6k views
-
-
இது பல மாதங்களுக்கு முன்பு எழுதிய கதை!! இங்கு புதிது என்பதால் பதிக்கலாம் என்று தோன்றியது.. ஏற்கனவே வாசித்தவர்கள் பொறுமை காத்தருளவும். என்னால் ஏனோ நித்திரைகொள்ள முடியவேயில்லை. கண்களை மூடியவாறு புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தேன். எவ்வளவுதான் முயன்றாலும் நேற்றய நிகழ்வுகளை என்னால் மறக்கவே முடியவில்லை. அவள் நேற்றுப் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் என் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருந்தது. அந்தச் சிரிப்பு! தலையை அடிக்கடி கொதும் விரல்கள்! நெற்றியில் விழும் அந்த ஒரு தொகுதி கூந்தல்! கண்களை அகல விரித்தவாறு பேசும் அந்தத் தோறனை! எந்தப் பையனும் இதை மறக்கவே மாட்டான். சிங்களத்தை வெறுத்தாலும் இந்த சிங்களத்தியை மட்டும் என்னால் வெறுக்க முடிய வில்லையே. அ…
-
- 11 replies
- 2.6k views
-
-
அகதி-கோமகன் எனது கதை : பாரிஸ் பெருநகரின் வடகிழக்குப் புறத்தில், ஏறத்தாழ அறுபது மைல்கள் தொலைவில், பிரான்ஸின் சர்வதேச விமான நிலையத்தின் அருகே செவ்ரன் என்ற வ்போ (beau sevran) செவ்ரன் நகர் அமைந்து இருந்தது. இந்த நகரில் வசிப்பவர்களை ‘செவ்ரனைஸ்’ (Sevranais) என்று சொல்வது வழக்கம். போ செவ்ரனை சரியாகத் தமிழ்ப்படுத்தினால் அழகிய செவ்ரன் என்று வரும். ஆனால் இந்த நகரில் அநேகர் குடியேற்றவாசிகளாகவே இருந்ததினால் அழகிற்கும் சுத்த பத்தங்களுக்கும் இந்த நகர் எட்டியே நின்றது. இன்றும்கூட செவ்ரன் தொடருந்து நிலையத்தின் முன்னால் குடியேற்ற வாசிகளினால் விற்கப்படுகின்ற சோளம்பொத்திகளும் இறைச்சியில் வாட்டி விற்கின்ற சான்விச்சுகளும் பிரபலம். அதில் இருந்து வெளியாகும் தீய்ந்த புகையினால் சு…
-
- 13 replies
- 2.6k views
-
-
பவானி மச்சாள் – சிறுகதை – இராகவன் பவானி மச்சாள் எங்கடை ஊரிலை இருக்கிற ஒரேயொரு முற்போக்குவாதி யாரெண்டு கேட்டால் அப்பவும் இப்பவும் எப்பவுமே அது சற்குணம் மாமாதான். அவரோடை ஒரேயொரு பொம்பிளைப்பிள்ளையான அம்பிகா மச்சாள் ஓயெல் படிச்சு கொண்டிருந்த மூட்டம் ஒரு நாள் , “அப்பா நான் கராட்டி பழகப் போறன்” எண்டு சொன்னாள். “அதுக்கென்ன பிள்ளை” எண்டு சற்குணம் மாமா சர்வசாதாரணமாய் சொல்ல சிந்தா மாமிதான் ஆட்லெறி செல் விழுந்து வெடிச்சமாதிரி அதிர்ந்து போனா. “இதென்ன நாசமறுப்பு. ஒரு குமர்பிள்ளை கதைக்கிற கதையைப் பார். கராட்டி பழகப் போறாவாம் கராட்டி. அதுக்கு இவரும் ஒத்தூதுறார்.” எண்டு சிந்தாமாமி அளப்பரிக்க தொடங்கீட்டா. “அதுக்கு நீயேனப்பா அளப்பரிக்கிறாய்? அவள் ஆச…
-
- 6 replies
- 2.6k views
-
-
பாத்திமா - ஹைஃபா பீதர்(haifa bitar) தமிழில் விக்னேஷ் பாத்திமா பிச்சை எடுக்கும் குழந்தை என்பதால் மட்டும் அவள் என் கவனத்தை ஈர்க்கவில்லை. வாழ்வின் துயரங்களுக்கு எடுத்துக்காட்டாக, சாலைகளிலும் தெருக்களிலும் போவோர் வருவோரை மறித்துப் பிச்சை எடுக்கும் எத்தனையோ குழந்தைகளை, என்னையும் மீறி நான் பார்த்துப் பழகியிருக்கிறேன். ஆனால் பத்து வயது கூட நிரம்பியிராத இந்த பாத்திமாவினுள் உள்ள ஏதோ ஒன்று என் அறிவை முடக்கி உணர்ச்சிகளின் வசப்படுத்துகிறது. அவள் என் அலுவலகத்திற்கு வரும் போதும், அவளை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும், ஒரு மௌன இரைச்சல் என் மனதைக் கிழிக்கிறது. பிச்சை எடுப்பவளிடம் இத்தனை தன்னம்பிக்கையை எதிர்பார்த்திராததால் பாத்திமா எங்கள் முதல் சந்திப்பிலிருந்தே எ…
-
- 0 replies
- 2.6k views
-
-
இன்னும் முன்னேற இடமுண்டு - சிறுகதை அ.முத்துலிங்கம், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு ஒரு பழைய மஞ்சள் கடித உறையின் பின்னால் எழுதியிருந்த எண்ணை அவள் படித்தாள். அந்த எண் அவளுடைய வாழ்க்கையை மாற்றப்போகிறது என்பது அவளுக்குத் தெரியாது. அவள் அப்பாவின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சியை அவள் இதற்கு முன்னர் கண்டதே இல்லை. துபாயில் உள்ள மிகப்பெரிய செல்வந்தர் ஒருவரின் மகன், அவளுடன் பேச வேண்டுமாம். மணமுடிக்க விரும்புகிறான். அந்தச் சின்னக் கிராமத்தில் தொலைபேசி வசதி எல்லாம் கிடையாது. போரில் பல சனங்கள் வெளியேறிவிட்டார்கள். அப்பா அவளை ஒரு கடைக்கு அழைத்துச் சென்று, முதலிலேயே காசை எண்ணிக் கொடுத்துவிட்டு, அந்த எண்ணை அழைத்துப் பேசினார். அவர…
-
- 0 replies
- 2.6k views
-
-
சில நாட்களுக்கு முன் லா சப்பலில் வீதியில் சென்று கொண்டிருந்தேன். போகும் பாதையில் ஒரு கூட்டமாக இருந்தது. நடுவில் இரு பெண்கள் (பிரெஞ்சுக்காரர்கள்) வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். காதுக்கு எட்டியவரையில் அவர்கள் இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் என்பதும் நீண்டநாளாக அவர்களுக்குள் பிரச்சினை இருப்பதும் தெரிந்தது. அனைவரும் ஒரே அலுவலகததில் வேலை செய்பவர்கள் என்பதும் அலுவலகத்தை விட்டு வீதியில் நின்று பிரச்சினைப்படுகிறார்கள். மீதிப்பேர் சமாதானப்படுத்துகிறார்கள் என்பதும் தெரிந்தது. அவர்களைக்கடந்து போய் சில செக்கன்களில் பெரும் அவலக்குரல் கொண்டு ஒரு பெண் கத்துவது கேட்டது. தானாடாவிட்டாலும் சதையாடும் அல்லவா?. திரும்பி வந்தேன். ஒரு பெண் மேலாடை கி…
-
- 10 replies
- 2.6k views
-
-
காலத்துடன் தொலைந்துபோன பயணத்தோழன்... மிதிவண்டியைப்பற்றி பலரும் பலநூற்றுக்கணக்கான பதிவுகளை எழுதியிருப்பார்கள் ஆனாலும் மிதிவண்டியுடனான எனது நினைவுகளை என்னால் எழுதாமல் இருக்கமுடியவில்லை.அன்று ஞாயிற்றுக்கிழமை வார நாட்கள் முழுவதும் கலகலத்துக்கொண்டிருந்த பாரிஸ் புறநகரின் ஆரவாரம் எங்கோ ஓடி ஒளிந்துவிட்டிருந்தது.அந்த நகரின் ஓயாத இரைச்சலை விழுங்கிவிட்டு அமைதி எங்கும் படர்ந்திருந்தது.தெருக்களில் வேலைநாளின் அவசரமின்றி அங்கங்கு ஆறுதலாகப் போய்க்கொண்டிருந்த ஒன்றிரண்டு மோட்டார் வண்டிகளைத்தவிர தார்வீதியின் கருமையும் அமைதியுமே வழிநெடுக நிறைந்திருந்தது.யாழ்ப்பாணத்து வீதிகளில் மாலைப்பொழுதுகளில் முகத்திலடிக்கும் அதே மெல்லிய மஞ்சள் நிறவெய்யில் அன்று பாரிஸிலும் எட்டிப்பார்த்துக்கொண்டி…
-
- 15 replies
- 2.6k views
-
-
ஏறக்குறைய இருபது ஆண்டுகள் கழித்து சொந்த ஊரான குரும்பசிட்டியில் என்னுடைய பாதம் படுகிறது. அது ஒரு பெரும் உணர்ச்சிக் கொந்தளிப்பான நிகழ்வு. வீடுகளும், தெருக்களும், கோவில்களும், கடைகளும், மனிதர்களும் இன்னபிறவும் நிறைந்த அந்த அழகிய கிராமம் அழிவுண்டு போய் கிடந்தது. இருபது ஆண்டுகளாக குரும்பசிட்டி உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தது. மனிதர்களின் நடமாட்டமே இல்லாத பேய்களின் ஊராக அது இருந்தது. குரும்பசிட்டிக்கு திரும்புவது அந்த கிராமத்து மக்களின் மிக முக்கிய கனவுகளில் ஒன்று. இந்தக் கனவு ஈடேறாமலேயே இறந்து போனவர்கள் பலர். எனக்கும் அந்தக் கனவு என்றைக்கும் இருந்தது. விடுதலைப் புலிகள் யாழ் குடாவை கைப்பற்றிய பின்புதான் அந்தக் கனவு கைகூடும் என்று உறுதியாக நம்பிய…
-
- 25 replies
- 2.6k views
-
-
கயிறு இழுத்தல் போட்டி அன்று யாழில், அந்த கல்லூரியில், வருடாந்த மெய்வல்லுனர் போட்டி இறுதிநாள். வள்ளுவர், கம்பன், இளங்கோ, பாரதி என நான்கு இல்லங்கள். நான்கு வீடுகளிலும் தமது இல்லமே வெல்லவேண்டும் என பல மாதங்களாக எடுத்த முயற்சிகள், பயிற்சிகள்... இவற்றின் இறுதி பலாபலனை அடையும் நாள் இன்று. இல்லங்கள் நாலாக இருந்தாலும் போட்டி இரண்டு இல்லங்கள் இடையேதான் என ஆரம்பத்தில் இருந்தே இருந்தது. ஆனால் அதில் மூன்றாவதாக இருந்த இல்லத்தில் பலத்த முயற்சிகள் இருந்தும் எதிர்பார்த்த பலன் கிட்டவில்லை. ஏன் சலிப்பும் இருந்தது. என்ன தான் முயன்றும் முடியவில்லையே என....இத்தனை வருடங்கள் முயன்றோமோ ...ம் ம் என சலித்தவர்களும் அந்த இல்லத்தில் இருக்கத்தான் செய்தனர் 'முயற்சி உடையான் இகழ்ச்சி …
-
- 2 replies
- 2.6k views
-
-
கடந்த ஒரு பேப்பரி இந்தப் பதிவினை ஒரு நிஞாபகப்பதிவாகவே மேலோட்டமாக எழுதியிருந்தேன். அதனை படித்த பலரும் இந்திய இராணுவகாலத்தில் தெய்வேந்திர சர்மா தலைமையில் நடந்த hடுகொலைகளைகளை ஏன் எழுதவில்லையென்றும் இனி வருங்காலத்தில் யாரும் புத்தகங்களையோ பதிவுகளையோ தேடி எடுத்து மினக்கெட்டு படிக்கப்பது அரிழதாகவே இருக்கும் எனவே அவற்றை கணணி பதிவுகளாக்குவது அவசியம் இன்று இல்லாவிட்டாலும் எதிர்வரும் காலத்தில் எமது மக்கள் எதிர்கொண்ட அழிவுகளை எமது சந்ததி அறியவேண்டிய தேவை உள்ளதால் அவற்றை முடிச்தளவு கட்டாயம் எழுதும் படி கேட்டிருந்தனர் எனவேதான் அதன் தொடராக இந்தப் பதிவினை எழுதுகின்றேன். இந்திய இராணுவம் சுதுமலையம்மன் கோயிலை பெரும் எதிர் பார்ப்புடன் முற்றுகையிட்டு அங்கு புலிகள் இல்லாத கார…
-
- 20 replies
- 2.6k views
-
-
பிறை நிலா சிறுகதை பிறை நிலா நியதி வரதன் காலை நேர பரபரப்பில் பம்பரம் போல் சுற்றி கொண்டிருந்தாள் வித்யா .இன்னும் பதினைந்து நிமிடத்தல் மகனின் பள்ளி வாகனம் வந்து விடும் அதற்குள் அவனை தயார் படுத்த வேண்டும் .மகனை ஒருவழியாக வாகனத்தில் ஏற்றி விட்டு ,கணவனை அலுவலகத்திற்கு அனுப்பி விட்டு சற்று ஓய்வாக இருக்கையில் மணி எட்டு என்பதை காட்ட அவள் பரபரப்பு இன்னும் அதிகமானது . சட்டென்று ஒரு குளியலை போட்டு விட்டு கைக்கு கிடைத்த புடவையை கட்டினால் ப…
-
- 1 reply
- 2.6k views
-
-
கார்குழலி ‘சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தன் இந்தளவா கீழ்த்தரமாக இறங்கிவிட்டான்?’ கேள்வியை கண்களில் தேக்கியபடி புலவர் தண்டியை பல்லவ இளவரசனான ராஜசிம்மன் நோக்கியது ஒரே ஒரு கணம்தான். அதற்குள் ‘ஓம் நமச்சிவாய... ஓம் நமச்சிவாய...’ என சபையில் இருந்த அனைவரின் உதடுகளும் ஏக காலத்தில் உச்சரிக்கத் தொடங்கின. இளவரசனை அணைத்தபடி புலவர் தண்டியும் சிவநாமாவளியை உச்சரிக்கத் தொடங்கினார். ராஜசிம்மனின் உள்ளத்தில் பக்தியோ, சிவ ஸ்வரூபமோ இப்போது இல்லை. கோபம் எரிமலையாய் கொந்தளித்துக் கொண்டிருந்தது. புலவர் தன் கைகளில் பிரசாதமாக அளித்த நாகலிங்க புஷ்பத்தை மெல்லத் திறந்தான். உள்ளே பொன், வெள்ளி, செம்பினால் செய்யப்பட்ட பல்லவ நாணயம் மின்னியது. முன்புறம் ரிஷப உ…
-
- 0 replies
- 2.6k views
-
-
வெள்ளிக்கிழமை இரவுகள் அ.முத்துலிங்கம் ஏதோ காட்டு மிருகம் துரத்தியதுபோல உள்ளே பாய்ந்தாள் ஆகவி. பத்து வயதுதான் இருக்கும். அவளுடன் வந்த காற்றும் உள்ளே நுழைந்தது. புத்தகப் பையை கீழே எறிந்தாள். எதையோ தேடுவதுபோல இரண்டு பக்கமும் பார்த்தாள். பத்து மைல் தூரம் ஓடிவந்ததுபோல அவளுக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. தாயார் சமையல் அறையில் இருந்து மெள்ள எட்டிப் பார்த்தார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இப்படி நடப்பதுதான். பள்ளியிலிருந்து வரும்போதே சண்டை பிடிக்க ஏதாவது காரணத்துடன் வருவாள். அகிலா தனியாக கனடாவுக்கு அகதியாக வந்தபோது நாலு மாதம் கர்ப்பம். ஐந்து மாதம் கழித்து ஆகவி பிறந்தாள். தாயாரின் ஒரே செல்லம். அவர் மடியில் தலைவைத்து படுக்க அகிலா முடியை கோதிவிட்டார். ‘கோதாதே. என்…
-
- 3 replies
- 2.6k views
-
-
கழட்டின பேண்ட்டை மாட்டிட்டு வாங்க! - சூர்யபுத்திரன் அவள் பார்த்தால் சிரித்தால் அசந்தால் எல்லாமே அழகுதான்! காலை நேரத்து வெயிலின் வெப்பம் கொஞ்சங்கூட உள்ளே நுழையாமல் குளிரூட்டப்பட்ட அந்த அறையே சொர்க்கம் போல இருந்தது சுந்தருக்கு. மங்கலான ஒளியில் மெத்தையில் அரைகுறை ஆடையில் சோம்பல் முறிப்பதுபோல் அவள் கைகளை உயரத் தூக்கி நெளிய... அவளை விழுங்குவது போல் பார்த்த அவன் சப்த நாடியிலும் இன்ப ஊற்று! இருக்காதா பின்னே? மெத்தையில் ஒரு மோகினி... மெழுகு பொம்மை போல... அவனுக்காகவே கொண்டு வரப்பட்ட குட்டியாம். கூட்டிக் கொடுப்பவள் சொன்ன கூடுதல் தகவல் இது. அந்தக் குட்டியின் கிளுகிளுப்பில் சொக்கி, உருகி அவன் தன் ‘பேன்ட்டை’க் கழற்றி முட்டிவரை கீழே இறக்க... கைப்பேசி அபாயகரமாய் அலறியத…
-
- 1 reply
- 2.6k views
-
-
பிசாசுகளின் இராச்சியம் தமிழீழத்தில் இயற்கை எழில் கொஞ்சும் வன்னிப் பிரதேசம் அது. அங்கே ஓங்கி உயர்ந்த பல வகைமரங்கள். அவற்றுக்கிடையே பல விழுதுகள் தாங்க, பரந்து, விரிந்த கிளைகளைத் தாங்கிய பல ஆலமரங்கள். ஆலமரங்களிலே கூடு கட்டி, உள்ளாசமாக கொஞ்சிக் குலாவி வாழும்; குருவிக் கூட்டங்கள். மரத்துக்கு மரம் தாவும் மந்திக் கூட்டங்கள். மரங்களுக்கிடையே துள்ளி ஓடும் மான் கூட்டம். சுழண்டாடும் மயில் கூட்டம். மந்தைகள் எங்கும் பரந்து மேயும். முல்லையும் மருதமும் இணைந்து வளங் கொழிக்கும். இப்பிரதேசம், 2009 மே மாதம் 18ம் திகதி, புகைமண்டலமாகக் காட்சி அளித்தது. அங்கே என்ன நடந்தது? அங்கே வாழ்ந்த மக்களுக்கு என்ன நேர்ந்தது? என, ஒருவராலும் அறிய முடியவில்லை. சிலநாட்களுக்குப்பின், அப் பகுதியை முற்ற…
-
- 7 replies
- 2.6k views
-
-
கவுண்டிங் இன்னும் அரைமணி நேரத்தில் முடிந்து விடும்.... க்ரிஷ், காதர், ஹனி மூவரும் டென்ஷனாக இருந்தார்கள்.... அவர்கள் இருந்தது ஒரு விண்கலம்... விண்வெளி உடையில் இருந்தார்கள்.... க்ரிஷ் அந்தக் கலத்தின் கமாண்டர்.... கலத்தின் பெயர் ராம்-பாபர்.... காதர் ராம்-பாபரைச் செலுத்தப் போகிறவன்... ஹனி கமாண்டரின் வலதுகை.... இந்தியாவின் நிலவுப் பயணத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மூவர் இவர்கள் தான்.... ராக்கெட் ஒன்று பூமியின் புவியீர்ப்பு எல்லை வரை இவர்கள் கலத்தை இழுத்துச் செல்லும்.... அதன் பின்னர் காதர் தான் கலத்தைச் செலுத்த வேண்டும்... மூன்று பேரின் உயிரும் அவன் கையில் இருக்கிறது.... சுமார் 5 ஆண்டுக்கால அசுரப் பயிற்சி அவன் கண்களில் தெரிந்தது.... க்ரிஷ்-ன் சிறுவயது கனவு நிறைவேறப் போக…
-
- 13 replies
- 2.6k views
-
-
ஆலடி பஸ் - சிறுகதை சிறுகதை: இமையம், ஓவியங்கள்: ஸ்யாம் ``கொஞ்சம் நவுந்து குந்து'' என்று வடக்கிருப்புக்காரி சொன்னாள். ``ஆளு வருது!'' பிரியங்கா சொன்னாள். ``ஆளு வரப்ப எந்திரிச்சுக்கிறேன். இப்ப நவுந்து குந்து.'' ``கடக்கிப் போயிருக்காங்க. இப்ப வந்துடுவாங்க.'' ``பஸ் ஒங்க ஊட்டுதா?'' ``கவர்மென்ட்டுது.'' ``அப்பறம் என்னா... நவுந்து குந்து.'' ``ஆளு வருதுன்னு ஒனக்கு எத்தன வாட்டி சொல்றது? வேற எடம் பாத்து குந்து.'' ``ஆளு வரப்ப வரட்டும். நீ நவுந்து குந்து. இல்லன்னா வழிய வுடு'' என்று வடக்கிருப்புக்காரி முறைப்பது மாதிரி சொன்னாள். இரண்டு ஆள்கள் உட்காரக்கூடிய சீட்டில் முதலில் பிரியங்கா உட்கார்ந்திருந்தாள். பக்கத்தில் ஜன்னலையொட்டியிருந்த …
-
- 0 replies
- 2.6k views
-
-
“காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்” சயிக்கிளில் முன்னால் பாரில் இருந்து எம்ஜிஆர் பாடிக்கொண்டு வாறார், நான் முக்கி முக்கி கொக்குவில் தொழில் நுட்ப கல்லூரி றோட்டில சயிக்கிளை உழக்குகின்றன். “டேய் கடைசி மேடு வரேக்கையாவது டபிள் பரல் போடடா “ “சொறி மச்சான், அதை கேட்டுவாங்கிப் போனால் அந்த கன்னி என்னவானாள்” எம்சியின் பாட்டு தொடருது. லண்டன் சிட்டியை தாண்டி TRAIN READING நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றது. எம்சியை பத்துவருடங்களுக்கு பின் சந்திக்க போய்கொண்டிருக்கின்றேன். எம்சிக்கு என்ன நடந்தது?. ஊரில என்னோட திரிந்தவர்களுக்குள் நேர்மை ,நீதி என்று எப்பவும் நிப்பவன் எம்சிதான்.வலிய வம்பிற்கு போக மாட்டன் வந்தால் விடமாட்டான்.இதனால் ஆனந்தன் என்ற அவனது பெயர் ஊரில் எம்ஜிஆர்…
-
- 18 replies
- 2.6k views
-