கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
ஒரு நிமிடக் கதை உளவியல் உளவியல் உற்சாகமாய் வீட்டுக்குள் நுழைந்த குருமூர்த்தி குழந்தைகள் கையில் பழங்களைக் கொடுத்தபடி மனைவி வித்யாவை அழைத்தான். “வித்யா! 75 ஆயிரம் ரூபாய் சம்பளத்துல புதிய வேலை கிடைச்சிருக்கு. இனியும் இந்த பாவப்பட்ட ஜனங்க வசிக்கிற இடத்துல இருக்க வேண்டாம்னு தோணுது. கொஞ்சம் வசதியானவங்க இருக்கிற இடத்துக்கு மாறிடலாம்னு தீர்மானிச்சுட்டேன்” – உற்சாகமாய்ச் சொன்னான் குருமூர்த்தி. “10 வருஷமா இங்கதானே இருக்கோம். இப்போ எதுக்கு இடம் மாறணும்?” –வித்யா புருவத்தைச் சுருக்கியபடி கேட்டாள். “அடுத்த வாரமே கார் வாங்கப்போறேன். குழந்தைகளை நல்ல பள்ளிக்கூடத்துக்கு மாத்தணும். அதுக்கெல்லாம் …
-
- 0 replies
- 2.5k views
-
-
உறவும் வரும் பகையும் வரும் ( தொடர்ச்சி ) ....... நித்திலா என்ன செய்வாள் . ?.....அவள் இபோதெலாம் வகுப்புக்கு போவதில்லை ..பெற்றோர் தடுத்து விட்டனர் கார்த்திகையும் வந்தது .மாமன் மகன் இடையில் வீட்டுக்கு வந்த போனான் .தலைநகரம் சென்று கடவு சீட்டு பெறுவதற்கான ஆயதங்களுடன் ,நிதிலாவை மாமன் மகனுடன் அனுப்பி . இது அவளுக்கு மனம் விட்டு கதைக்கும் ஓர் உறவாக இருந்தது .அவள் மனதை தொடக்கம் முதல் அழுகையுடன் சொல்லி முடித்தாள் சில நாட்களாக ஆதவனும் கடையில் தென் படுவதில்லை . அவனது தம்பி வியாபாரத்தை கவனித்தான் .ஒரு வாரம் கழித்து நித்திலா கடவு சீட்டுடன் ஊர்வந்து சேர்ந்தாள் .வந்ததும் மாமன் மகன் தனக்கு கலியாண" பலன் "பார்த்ததாகவும் ...அடுத்த வருடம் தான் சரிவரும் என்றும் தெ…
-
- 13 replies
- 2.5k views
-
-
ரங்கராட்டினம் - சிறுகதை நர்சிம், ஓவியங்கள்: செந்தில் அந்தத் தளம் பரபரப்பில் பற்றி எரியத் தொடங்கியிருந்தது. படப்பிடிப்புத் தளம் என்ற பெயர் எல்லாம் வெளியே உள்ளவர்களுக்குத்தான். இங்குள்ள எங்களுக்கு அது ‘ஸ்பாட்.’ அதுவும் என்னைப் போன்ற புதியவனுக்குத் திகுதிகுவென உடலில் நெருப்பு எரிவது போன்ற பிரமையை ஏற்படுத்திவிடும். ஒரே நேரத்தில் பலர், பல வேலைகளைச் செய்துகொண்டிருக்கும்போது எழும் இயற்கையான சத்தம்தான். ஆனால், எல்லாமே செயற்கைக்காக. எந்த நொடியிலும் இயக்குநர் வந்துவிடுவார். அவர் வருவதற்கு முன்னர் செட்டில் எல்லாம் பேசியது பேசியபடி இருக்க வேண்டும் என்பதைத் தாரகமாக வரித்துக்கொண்டு, ஒரு போர்ப்படைத் தளபதிபோல் சத்தம் கொடுக்கும் விக்டரைப் பார்த்துக்கொண்டிருப…
-
- 1 reply
- 2.5k views
-
-
யாரும் இழுக்காமல் தானாக... - சிறுகதை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு...வண்ணதாசன் சொப்பனத்தில் அப்பா வந்திருக்கிறார். எழுந்திருக்கும்போதே நீலாவுக்குச் சந்தோஷமாக இருந்தது. பச்சைக் கட்டம் போட்ட போர்வையை ஒரு தடவை கசக்கினாற்போலப் பிடித்து, முகத்தோடு ஒத்திக்கொண்டாள். பட்டாசலில் கிடக்கிற அப்பா போட்டோவைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. அப்பாவுக்கு ஜெமினி கணேசன் மாதிரி ஜாடை. ஜாடை என்றால் மூக்கு, முழி எல்லாம் இல்லை. சுருட்டை சுருட்டையாகத் தலைமுடி அப்படி. மீசையை வைத்திருப்பதும் வட்டக் கழுத்து ஜிப்பா போடுவதும் அப்படி. அம்மாவின் தோளைப் பிடித்துக்கொண்டு அப்பா நிலாவைப் பார்க்கிறது மாதிரியான பக்கவாட்டுப் புகைப்படம் ஒன்று உண்டு. ரொம்ப அழகா…
-
- 0 replies
- 2.5k views
-
-
நானும் உந்தன் உறவை... நாடி வந்த பறவை! நர்சிம், ஓவியம்: அரஸ் ''டி.ஆர். உன்னையத் தேடுனாப்புல மாப்ள, என்னா மேட்டரு?' காளி அப்படிச் சொல்லிவிட்டு சைக்கிள் பெல்லை, ஒரு சீரான தாள லயத்தில் அடித்துக்கொண்டே போனான். ஒருவன் எவனிடமாவது மாட்டிக்கொண்டால், அடுத்தவனுக்கு இயற்கையிலேயே எழும் மகிழ்ச்சியை அந்த ட்ரிங்... ட்ரிங்... ட்ட்ட்ரிங்ங்... ட்ட்ட்ரிங்ங்... ட்ரிங்... ட்ரிங்... உணர்த்தியது. எனக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. இத்தனைக்கும் டி.ஆரால் தேடப்படுபவன் நான் அல்ல. என் அருகில் அமர்ந்திருக்கும் ரகு. 'எதுக்குடா டி.ஆர். என்னையத் தேடுறாப்லயாம்?' - லேசாகச் செருமிக்கொண்டே கேட்டான் ரகு. அந்த 'எதுக்குடா?’-வில் லேசான பதற்றமும் 'என்னைய’ என்பதி…
-
- 1 reply
- 2.5k views
-
-
கூப்பன் கடை...... (நினைவுகள் ) இஞ்ஞாருங்க மகள் சாப்பிடுகிறாள் இல்லை .ஒருக்கா என்னென்று கேளுங்கோவன் என்று என் மனைவி பத்மா சொல்ல சி மன்னிக்கவும் அஸ்வனா சொல்ல என் மனிசி பெயர்தான் பத்மா அவள் வெளி நாடு வந்த பிறகு அஸ்வனா என்று பெயரை மாற்றிக்கொண்டாள் .ஆனால் பாஸ்போட்டில் பத்ம அரசி தான் ஆனால் அது பழைய பெயராம் .ஆனால் நான் வாய்க்கு இனிமையாக பத்மா என்று கூப்பிட்டால் கூட ஒரு முறைப்பு முறைப்பாள் அதனால் வீட்டில் மட்டும் செல்லமாக அவளை பத்மா என்று கூப்பிடுவேன். ஏன் மகள் சாப்பாடு வேண்டாம் இல்லை அப்பா எனக்கு பசிக்கவில்லை என்றாள் மகள் அஸ்வினி.நானும் மனிசி என்ன செய்திருக்கிறாள் என்று பார்க்கபோனேன்.ஏனென்றால் இந்த ரீவில காட்டுற சமையல் குறிப்புக்களையும் விளம்பரங்களையும் பார்த்து ஏதாவது…
-
- 17 replies
- 2.5k views
-
-
காணாமற்போனவர் ஷோபாசக்தி எனக்கு எதிரே உட்கார்ந்திருந்த அந்த மனிதர், நான் தேடிக்கொண்டிருந்த பாவெல் தோழரைக் கொல்வதற்குத் தானே உத்தரவிட்டதாகச் சொல்லிவிட்டு ஒரு கோணல் சிரிப்புடன், பாதி நரைத்துப்போன அவரது மீசையில் படிந்திருந்த ‘பியர்’ நுரையை அழுத்தித் துடைத்துக்கொண்டார். நான் அவரையே வெறித்துப் பார்த்தவாறு இருந்தேன். இந்தக் கதை இன்னும் அய்ந்து நிமிடங்களில் முடியவிருக்கிறது. இந்தக் கதை இப்படித்தான் ஆரம்பித்தது. சென்ற கோடை காலத்தில் எனது அப்பா சென்னையில் இறந்துபோனார். அம்மா வேளாங்கண்ணி கோயிலுக்குப் போய்விட்டு மறுநாள் திரும்பி வந்தபோது, கதவு உட்புறமாகத் தாழிடப்பட்டிருந்த வீட்டுக்குள் அப்பா தரையில் விழுந்து இறந்து கிடந்தார். காவற்துறை வந்து பூட்டை உடைக்க வேண்டியிருந்தது. அம்மா …
-
- 21 replies
- 2.5k views
-
-
சுரேஸும், ரசிகாவும்ஒரு வாரமாக பேசவில்லை. சுரேஸ் அவளுடன் பேசுவதற்கு ஒருமுறை முயன்றும் அவள் முகம் கொடுக்காமல் போனதால், தனக்கே உரிய மிடுக்கில் அவனும் அதன் பின் அவளுடன் பேச முயலவில்லை. எப்போதும் மலரும் மகரந்தமும் போல் உல்லாவிய இவர்களின் புது நடத்தை இருவரின் நன்பர்களின் முகத்திலும் பல கேள்விகளை எழுப்பியது. சுரேஸின் நன்பர்கள் என்ன நடந்தது என்று குடைந்து கொண்டு இருந்தார்கள். சுரேஸோ "ஒண்டும் இல்லையடா சும்மா இருக்க பாப்பம்" என்று சினந்துகொண்டே அவ்விடத்தை விட்டு அகன்றான். ரசிக்காவும், சுரேஸும் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டில் படிக்கும் மாணவர்கள். பல்கலைக்கழக வாழ்க்கையைத் தொடங்கிய காலத்தில் தான் இருவரும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமானவர்கள். ரசிகா கொழும்பில் புறநகர் பகுதியில் …
-
- 6 replies
- 2.5k views
-
-
மூன்று நகரங்களின் கதை – க.கலாமோகன் அப்பா இறந்துவிட்டார் யாழ்ப்பாணத்தில். காலையில்தான் தந்தி வந்தது. பாஸ் எடுத்து கொழும்பில் வந்து நிற்கும் உறவினர்களுடன் நான் உடனடியாகப் பேச வேண்டும் என்பதை தெரிவிக்கும் சிறு குறிப்பு: Contact Immediately. தந்தி கிடைக்குமுன் எழுதத் தொடங்கிய சிறுகதையின் பக்கங்கள் சில மேசையின் மீது அலங்கோலமாகக் கிடக்கின்றன. சிகரெட் ஒன்றைப் பற்றவைத்துக்கொண்டு கீழேயிறங்கி சிகரெட் விற்பனை நிலையமொன்றில் நுழைந்து சில ரெலிகாட்களை (பொதுத் தொலைபேசி நிலையத்திலிருந்து பேசுவதற்காக உபயோகிக்கப்படும் கார்ட்கள்) வாங்கிய பின், தொலைபேசிக் கூடமொன்றிற்குள் போய் கொழும்பிற்கு அடிக்கின்றேன். “சாப்பிடப் போய்விட்டார்கள். ஒரு மணித்தியாலம் கழித்து எடுங்கள். அவ…
-
- 18 replies
- 2.5k views
-
-
எவ்வளவு தூரம் நடந்தானோ அவனுக்கே தெரியவில்லை .கால்கள் தளர்ந்து எங்காயினும் குந்துவமோ என்று மனம் தத்தளிக்கும் பொழுது தான் அவ்வளவு தூரம் நடந்திருக்கிறமே என்று தெரிய வந்தது .இந்த வெய்யிலில் இப்படி நடந்து திரிவது முட்டாள்தனமான பலப் பரீட்சை என இன்னும் நினைக்கவில்லை தானே என்று அப்பொழுது திருப்தி பட்டுக் கொண்டான். .நாட்டை விட்டு ஓடி எவ்வளவு காலத்துக்கு பிறகு திரும்பி வந்து ஒரு சாரமும் சேட்டுடன் காசுவலாக மூன்று மைல் நீளப்பாட்டுக்கும் நாலு மைல் அகலப்பாட்டுக்கும் கால் போன போக்கில் பைத்தியக்காரன் போல் நடந்து திரிகிறான், அப்படி ஒரு ஆசை இருந்தது அதில் ஒரு சந்தோசம் இருக்கும் என நினைத்து அப்படியே நடந்தாலும் இன்னும் ஒரு தெரிந்தவன் படித்தவன் கூட அவன் கண்ணில் தென் படவில்லை ..அட எல்லாரும் …
-
- 16 replies
- 2.5k views
-
-
மிக உள்ளக விசாரணை - ஷோபாசக்தி ஃப்ரான்ஸ் காஃப்காவினது புகழ்பெற்ற நாவலொன்றுக்கும் இந்தச் சிறுகதைக்கும் ஓர் ஒற்றுமையும் ஒரு வேற்றுமையுமுள்ளன. அவரது நாவலின் தலைப்பு ‘விசாரணை’. இந்தக் கதையின் தலைப்பு ‘மிக உள்ளக விசாரணை’. வேற்றுமை என்னவென்றால், காஃப்காவினது நாயகனுக்கு ஒரு கவுரவமான பெயர் கிடையாதெனினும் அவனை ‘K’ என்ற ஓர் எழுத்தாலாவது காஃப்கா குறித்துக்காட்டினார். நம்முடைய நாயகனுக்கு அதற்குக் கூட வக்கில்லை. இப்போது நாங்கள் நேரடியாகவே கதைக்குச் சென்றுவிடலாம். எண்பத்தைந்து மனித மண்டையோடுகளும் குவியலாக மனித எச்சங்களும் அகழ்ந்தெடுக்கப்பட்ட, இருபத்தைந்து வருடங்களிற்கு முந்தைய மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து இந்தக் கதை திடீரெனத் தொடங்குகின்றது. யாழ்ப்பாணப் பட…
-
- 3 replies
- 2.5k views
-
-
என் அத்தை மக…. சினிமா பாடல் வரிகளை விசில் அடித்துக் கொண்டு சிவா வீட்டுக்கு கீழ் உள்ள நிலவறையில் காரை நிறுத்தி விட்டு மாடிப்படியேறி ஓடுகிறான். அன்று வெள்ளிக்கிழமை வார இறுதிநாள். திருமணமாகி இரு வாரங்களே கடந்த புது துணைவி. அவளுடனான புதுவாழ்க்கைக்கு இடையே இருவரது பணிகளின் குறுக்கீடு. இருந்தாலும் அவன் சந்தோசமாகவே இருந்தான் தான் விரும்பியவளை கரம்பிடித்த மகிழ்வை அவனின் துள்ளல் நடை பறைசாற்றியது. பணியிடத்தின் பணிச்சுமைகளை இறக்கி விட்டு புத்துயிர் பெற்றவனாய் இன்ப சொரூபமான அவளை நோக்கி செல்கிறான். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 2.5k views
-
-
அந்த பள்ளிகூட பஸ் வழக்கம் போல் எம்மையும் எம்மவர்களையும் ஏற்றி தனது ஏக்கபெருமூச்சை புகையாக தள்ளி பொற்பதி பிள்ளையார் கோவிலடியில் வந்து அடுத்த பட்டாளத்தை சுமக்க தயாரானது. யாரோ ஒரு புதுவரவு வெள்ளை சட்டை, வேம்படி ரை ஆனால் கண் முட்ட மை,கறுப்பு பொட்டு,கை நிறைய வளையல்,காதில் சிமிக்கி, ஆள் அவித்து வைத்த முட்டை கலர். இதென்னடா புதுவரவு என நாம் வாயில் கையை வைக்க எனக்கு அடுத்து இருந்த குரங்கு “வேம்படியில் இப்ப சின்ன மேளமும் படிப்பிக்கினமோ” என கேட்க பஸ் முழுக்க ஒருமுறை சிரித்ததிர்ந்தது. முகத்தில் எதுவித உணர்ச்சியும் காட்டாமல் முதல் நாள் பாடசாலை ராகிங் இல் அனுபவம் போல் அப்படியே அமர்ந்துவிட்டது அந்த பெண். பின்னர் காலை மாலை அதே கோலங்களுடன் தினமும் காண்பதால் எங்களுக்கு அது பழகிப…
-
- 22 replies
- 2.5k views
-
-
கடவுள் தந்த அழகிய வாழ்கை ,,,,,,,,,,,,,,,,, அதிகாலை ஐந்து மணியிருக்கும் அலாரச்சத்தம் கேட்டு கோமதி எழுந்து தன் காலைக்கடன் முடித்து கோப்பி குடித்து ,இரவு பெட்டியில் போட்டு வைத்த் மதிய உணவையும் எடுத்து கொண்டு ,பஸ் தரிப்பு நோக்கி நடந்தாள் . கனடா தேசத்தின் மார்கழி குளிரில் தன்னை பாது காக்க காலுறை கையுறை, தடித்த அங்கி ,காதுகளை மூடிய "மபிலேர்" என்று தன்னை ஒரு துணி மூடை யாகவே ,போர்த்தியிருந்தாள் . பஸ் வண்டி வரவே ஏறி அமர்ந்தவளின் எண்ணம் தாயகம் நோக்கி சென்றது . அம்மாவும் அப்பாவும் தன் இரு தங்கைகளும் என்ன பாடோ ? நான் இந்த குளிரில் உழைத்து அனுப்பும் காசில் தான் அவர்கள் சீவியம் .அப்பாவுக்கும் வயதாகிறது இனி பாடசாலை ஆசிரியார் பதவியிலிருந்து அடுத்தவருடம…
-
- 3 replies
- 2.5k views
-
-
மான்டேஜ் மனசு 18: மாறாக் காதலின் பொக்கிஷங்கள்! பல ஆண்டுகளுக்குப் பிறகு குமார் செல்போனில் அழைத்தான். ''என்ன பண்ற மாப்ள'' ''அலுவலகத்துல இருக்கேன் டா. என்ன விஷயம்?'' ''நானும் சென்னையிலதான் இருக்கேன். உன் ஆபிஸ் எங்கே?'' ''மவுன்ட் ரோடு'' ''சூப்பர் மாப்ள. நான் தேனாம்பேட்டையிலதான் வீடு எடுத்து தங்கி இருக்கேன். வந்து ஒரு மாசம்தான் ஆச்சு'' ''சூப்பர் டா. சந்திக்கலாமா'' ''நிச்சயமா'' ''சரி சாயந்திரம் பேசுறேன்'' என்று உரையாடலுக்குத் திரையிட்டு பணிகளில் கவனம் செலுத்தினேன். இன்றைய இரவை எப்படிக் கழிக்கலாம் என்ற யோசனையுடன் இருந்தபோ…
-
- 1 reply
- 2.5k views
-
-
இல் அறம் வீட்டில் அவன் கூட அவளும் இருந்தாள். மனைவி. என்றாலும் அவன் ஏனோ தன்னைத் தனியனாகவே உணர நேர்ந்தது. அவளை அவனுக்குப் பிடிக்கவில்லை. அவனுக்குப் பிடிக்கவில்லை என்பதை அவளும் உணர்ந்தாள். இதற்கு என்ன செய்ய தெரியவில்லை. அவளால் என்ன செய்ய முடியும்? அவள் அருகில் வந்தாலே அவனிடம் ஓர் விறைப்பு வந்தாப் போலிருந்தது. கனிவு அல்ல இறுக்கம் அது. ஒரு பெண்ணை இத்தனை கிட்டத்தில் ஒருவனால் வெறுக்க முடியுமா, ஒதுக்கி அலட்சியப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. முதலில் ஆச்சர்யமும் பிறகு அதிர்ச்சியும் அவளுக்கு ஏற்பட்டன. அழுகை வரவில்லை. அவளுக்கு அழவே வராது. துக்கிரி என்றும் பீடை என்றும் ப…
-
- 4 replies
- 2.5k views
-
-
காட்டுப்பேச்சிகள் காடுகளில் வசிப்பதில்லை! - சிறுகதை மாரி செல்வராஜ், ஓவியங்கள்: ஸ்யாம் பெரியவர் நிறைக்குலத்தானுக்கு இன்று நிச்சயமாகக் கடைசி நாள்தான்! 'நிறைக்குலத்தான்’ - இந்தப் பெயரை, ஒரு முறை உங்களின் வாய் திறந்து நாக்கைக் கடித்து ஒலி எழுப்பிச் சொல்லிப் பாருங்களேன். பெரிய ஓர் ஆலமரம், அந்தப் பெயர் முழுவதும் தன் நிழல் பரப்பி இருப்பதுபோல உங்களுக்குத் தோன்றும். ஆனால், அந்த ஆலமரம் விழுதுகள் இல்லாத ஆலமரமாக, இலைகள் இல்லாத ஆலமரமாக, துளி பச்சைகூட இல்லாத ஆலமரமாக, பங்குனி வெயிலில் எப்போது வேண்டுமானாலும் பற்றி எரிகிற மொட்டை ஆலமரமாக இருந்தால் எப்படி இருக்கும்? நினைத்துப் பார்த்தாலே உங்கள் கண்கள் தீப்பிடித்து எரிந்து கசங்குகின்றனதானே! அப்படி ஒரு மொட்டை ஆலமரம்…
-
- 0 replies
- 2.5k views
-
-
மாயாவி ஒரு பேப்பரிற்காக சாத்திரி மாயாவி எண்டதும் சின்ன வயதிலை படிச்ச சித்திரக்கதை மாயாவிவேதாளன் கதை பலபேருக்கு ஞாபத்துக்கு வரும். ஆனால் இது சித்திரக்கதையில்லை ஊரிலை நடந்தகதை. முந்தி ஊரிலை காலத்துக்குக்காலம் மர்ம மனிதர். இல்லாட்டி மாயாவி மனிதர் உலாவுவினம். இல்லாட்டி உலாவுறகதை (வதந்தி) அடிக்கடி அடிபடும்.கதையளைக்கேட்டாலே ஒருவித மர்மம் நிறைஞ்ச ஒரு பரபரப்பாத்தான் இந்த மர்மமனிசனின்ரை கதை ஊரிலை கதைப்பினம்.கதையைக் கேட்டால் ஏதோ திகில் நிறைஞ்ச ஒரு இங்கிலிஸ் படம் பாத்தமாதிரி இருக்கும்.பெரும்பாலும் இந்தமாயாவி மனிசர் தோட்டங்களிலை விழைச்சல் இல்லாட்டி அருவிவெட்டு(நெல்லு வெட்டு)காலங்களிலைதான் அதிகமாய் உலாவுவினம்.அப்பிடித்தான் எங்கடை ஊரிலையும் திடீரெண்டு மர்ம மனிசனின்ரை கதை …
-
- 15 replies
- 2.5k views
-
-
பிங்க் - சிறுகதை அந்த மாலை நேரத்தில், நீங்கள் வீட்டுக்குச் செல்லும் பரபரப்பில் இருக்கலாம். உங்கள் இணையை, நண்பர்களை, சொந்தங்களைப் பார்ப்பதற்காக வேக வேகமாக என்னைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறீர்கள். எப்படியிருந்தாலும், இம்மாநகரத்தின் முக்கியமான இடங்களில் ஒன்றான இந்த ரயில் நிலையத்தை ஒட்டி இருக்கிற கூவம் பாயும் பாலத்தை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாகக் கடக்கவே நீங்கள் விரும்புகிறீர்கள். நான் அங்கே வெகு நேரமாக நின்றுகொண்டிருப்பது உங்களுக்கு ஆச்சர்யத்தை வரவழைக்கவில்லை, சரியா? ஏதோ ஒரு தொழிற்சாலையோ, ஆய்வுக்கூடமோ இந்தக் கூவம் நீரில்... இல்லை இல்லை... சாக்கடையில் கலந்துவிடும் பிங்க் நிறச் சாயம் ஒட்டாமல் சென்றுகொண்டிருந்தது. நான் அதை வெகு நேரமாகக் கவனித்துக்கொண…
-
- 1 reply
- 2.5k views
-
-
மனுவேல் பொன்ராசாசாவிற்கு ஆயிரத்துத் தொளாயிரத்து தொண்ணூற்றோராம் வருடம் ஜனவரி மாதம் ‘கப்டன்’ பட்டம் தமிழீழ விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்டது. அந்தச் சம்பவம் பின்வருமாறு நிகழலாயிற்று: ஆயிரத்துத் தொளாயிரத்து தொண்ணூறாம் வருடம் ஜுன் மாதம் யாழ்ப்பாணக் கோட்டை விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டது. கோட்டைக்குள் நூற்றுக்கணக்கான இராணுவத்தினர்கள் சிக்கியிருந்தார்கள். கோட்டைக்கான அனைத்து வழங்கல்களும் புலிகளால் துண்டிக்கப்பட்டன. சிறியரகக் ‘கிரேன்’களின் உதவியுடன் புலிகள் கோட்டை மதில்களில் ஏற முயன்றுகொண்டேயிருந்தார்கள். கடலிலிருந்து கோட்டைக்குள் படகில் செல்வதற்கான இரகசிய வழியொன்றுமிருந்தது. புலிகள் அந்த வழியால் சிறிய வள்ளங்களில் சென்று கோட்டைக்குள் புக முயன்றார்கள். புலிகளின் ஆட்லரிக…
-
- 18 replies
- 2.5k views
-
-
எனக்கு ஒரு ஈ-மெயில் அனுப்பப்பட்டிருந்தது... கீழ் உள்ள விபரங்களுள்ளவரை யாருக்கும் தெரிந்தால் தகவலை தெரிவித்து விடுங்கள்...வலைபதிவுயூடாக இந்த செய்தியை பார்ப்பவர்கள் சம்பந்த பட்டவர்களை அடையாளம் கண்டு சில நேரம் உதவுவார்கள் என்ற நோக்கி இதை பிரசுரிக்கிறேன் அன்பு உறவுகளே கனடாவில் இருந்து இந்தியாவுக்கு சென்றிருக்கும் திரு திருமதி செல்வதுரை இளையதம்பி ( ஆனந்தலச்மி ) தம்பதியர்களின் Passport மெட்ராஸ் இல் கண்டு எடுக்கப்பட்டுள்ளது . இவர்கள் பளையை சேர்ந்தவர்கள் நல்லுரிலும் இருந்திருக்க வேண்டும் இவர்களை தெரிந்தவர்கள் அவர்களுக்கு அறிவித்து எங்களுடன் தொடர்பு கொள்ளவும் . சிவா 416 493 6117 SIVA RATNASINGAM VERICO The Mortgage Practice SENIOR MORTGAGE CONSULTANT TEL:…
-
- 9 replies
- 2.5k views
-
-
காதல் 2086 பயணி, ஓவியங்கள்: ஸ்யாம் சிவா குடும்பத்து அப்பார்ட் மென்ட்டுக்கும் கௌரி குடும்பத்து அப்பார்ட்மென்ட்டுக்கும் நடுவே இருந்த குறுகிய நடையில் பலர் கூடியிருந்தனர். சிவா அவனது பாட்டியின் முகத்தின் மேல் தலையணையைப் போட்டு மூச்சு நிற்கும்படி அழுத்திப் பிடித்திருந்தான். சிவாவின் வீட்டு முன்னறையில், சுவரில் தொங்கிக்கொண்டிருந்த ஸ்ட்ரெட்ச்சர் போன்ற படுக்கையில்தான் சிவாவின் பாட்டியைக் கிடத்தியிருந்தார்கள். அவர் மீது கறுப்பு நிறத்தில் ஒரு போர்வை போத்தியிருந்தது. அவளது கைகளும் கால்களும் அதற்காகவே செய்யப்பட்ட பட்டைகளால் கட்டப்பட்டிருந்தன. பாட்டியின் அசைவு நின்றிருந்தது. பாட்டியின் தலை பக்கத்தில் தலையணையைப் பிடித்தபடி சிவா நின்றிருந்தான். கால் பக்கத்த…
-
- 0 replies
- 2.5k views
-
-
ஈழத்தோடான என் அனுபவங்களில் போர்,போரின் கொடுமைகள்,பாதிப்புகளை தவிர்த்து சில விசித்திரமான மனிதர்களையும் கண்டேன். சற்று முன் என் ஒன்றுவிட்ட சகோதரி ஒருவருடன் தொலைபேசியில் கதைத்ததன் பலனாக சில சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. அன்றும் (2006)ஒரு நாள் இப்படி தோன்றிய நினைவுகளின் பலனாக நான் கதையாக எழுதிய ஒரு நிகழ்வை இந்த பகுதியில் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். கனடாவில் இருந்து பெரியம்மா குடும்பம் வந்திருந்தார்கள். பெரியப்பா, பெரியம்மா, அக்கா, அக்காவின் கணவர், மற்றும் அவர்களில் குழந்தைகள். அங்கு விடுமுறை காலம், இங்கு அப்படியா? விடுமுறை காலம் அல்லவே! புலம்பெயர் வாழ்க்கையின் சாபத்தில் இதுவும் ஒன்று எனலாம். வேறு நாட்டில் இருந்து உறவினர்கள் வந்தால் விடுமுறை…
-
- 19 replies
- 2.5k views
-
-
இன்றைக்கு ஒரு கை பார்க்கிறது தான்... என்று காலையில் நித்திரையால எழும்பினது முதலே ஏதேதோ எண்ண அலைகள் எழுந்து என்னுள் முட்டி மோதிக் கொண்டிருந்தன. சரி அது இப்போதைக்கு கிடக்கட்டும்.. என்று ரீவியை ஆன் செய்து மனதின் எண்ண ஓட்டத்தை கஸ்ரப்பட்டு மாற்ற முற்பட்டுக் கொண்டிருந்தேன். ஆப்கான் எல்லையை ஒட்டிய பாகிஸ்தான் கிராமத்தில் அமெரிக்க றோன் (ஆளில்லா விமானம்) நடத்திய தாக்குதலில் 16 தலிபான் பயங்கரவாதிகள் பலி என்று பிபிசி மணத்தியாலத்துக்கு ஒரு தடவை முக்கிக் கொண்டிருந்தது. இவங்களுக்கு வேற வேலை இல்ல.. ஒருக்கா சொல்லுவாங்கள்.. பயங்கரவாதிகள் பலி என்று. பிறகு இரண்டு நாள் கழிச்சு.. சொல்லுவாங்கள் சிறுவர்கள் உட்பட 16 பொதுமக்கள் பலி என்று. பிறகு சொல்லுவாங்கள்.. தவறுதலாக நடந்த அந்த தாக…
-
- 14 replies
- 2.5k views
-
-
ஞானி – 1. மனிதன் கால் சட்டையும் மேல் அங்கியும் நவநாகரீக தோற்றத்துடன் ஒருவன் ‘ஞானி நான்’ என்றான். “என்ன ‘ஞானியா’? உன்னிடம் தாடி இல்லையே? அழுக்கு வேட்டி கிழிந்த சட்டை இப்படி எதுவுமே இல்லையே? நீ ஞானி இல்லை” - என்றேன் நான். “மாயை” - என்றான். “என்ன?”. “மாயை”. “உன் பெயர் என்ன?” “பெயரா?”;. மெல்ல சிரித்தான். “முகவரிக்கு முன்னே எழுத கேட்கிறாயா? ‘எனக்கு முகவரியே இல்லை. அறிமுகம் தேவையா? அறிமுகம் இல்லாத பலரில் நானும் ஒருவன். ஏன் கேட்கிறாய் பெயரை?” - என்றான் “கூப்பிடத்தான்”. “யாரை?” “உன்னைத்தான்”. மீண்டும் சிரித்தான். “ஏன் சிரிக்கிறாய்?”. “பெயரைக் கேட்டாய். கூப்பிட என்று. இன்னும் சில நொடிகளில் உன்னை நான் பார்க்க மாட்டேன்…
-
- 1 reply
- 2.5k views
-