Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. செக்கு மாடு (குறுநாவல் ) வ.ஐ.ச.ஜெயபாலன் தனக்கு தொல்லை தருகிற பேய் ஒளித்திருக்கிற இடத்தை இன்னமும் குமரனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அன்றைக்குப் பொழுது சாய்வதற்கு முன்னமே அந்தக் கொடிய பேயைக் கண்டுபிடித்து நொருக்கிப் போடுவதாக அவன் சங்கற்பம் செய்திருந்தான். நோர்வே போன்ற துருவத்து நாடுகளில் கோடை நாட்களில் பொழுது சாய்வதில்லை என்பது வேறு விடயம். அந்தப் பேயை யார் ஏவி விட்டிருப்பார்கள் என்பது பிடிபடவில்லை. அவனைச் சந்திப்பதற்க்காக சென்னைக்கு வந்து இரண்டு வருடங்களுக்கு மேலாக தவமிருக்கும் அவன் தாய் கனகம்மாவுக்கும் காதலியும் தூரத்து உறவுக்காரியுமான கமலிக்கும் கூட இது பற்றிக் கடிதம் எழுதியிருந்தான். பதறிப் போன அவர்கள் மறுகடிதத்துக் குள்ளேயே மந்திரித்த ந…

    • 3 replies
    • 2.2k views
  2. தண்டவாளத்தின் ஓரமாக கவிழ்ந்து கிடந்த ஒற்றைச்செருப்பை மீண்டும் திரும்பிப் பார்க்கிறேன். என்னையறியாமல் கண்களை அதன் மற்றைய செருப்பை தேடுகின்றன. அருகில் எங்கேயும் காணவில்லை. ஏமாற்றத்துடன் தொடருந்து வருகிறதா என்று பார்க்கிறேன் அல்லது பார்ப்பது போல நடித்து என்னை ஏமாற்றிக்கொள்ள முயல்கிறேன். இதோ இந்த தண்டவாளத்தில் எத்தனையோ பொருட்கள் சிதறியும் சிதைந்தும் கிடக்கின்றன. குழந்தைகளின் பொருட்கள் கிடக்கின்றன. உடைந்து போன குடை கிடக்கிறது. கையுறைகள் கிடக்கின்றன. யாரோ ஒரு பெண் அணிந்த அலங்கார தலைமுடி கூட கிடக்கிறது. ஆனால் இந்த செருப்பை மட்டும் மனது ஏன் காவிக்கொண்டு வருகிறது. மீண்டும் அந்த செருப்பு கிடந்த இடத்தை பார்க்கிறேன். முழுமையாக பார்ப்பதற்காக கொ…

  3. அப்பா! - சிறுகதை விடியற்காலை ஐந்து மணி. நந்தினியின் செல்போன் விடாமல் அடிக்க... கண்களைக் கசக்கிக்கொண்டே போனை எடுத்த நந்தினி, அண்ணாவின் பெயரைப் பார்த்ததும் பயந்து போனாள். “என்னடா, இந்த நேரத்துல... யா... யாருக்கு என்னாச்சு?” “அப்பாக்கு ஹார்ட் அட்டாக்டி. சாரதா நர்ஸிங் ஹோம்ல சேர்த்திருக்கோம்.” அவ்வளவுதான்... நந்தினிக்கு அவள் உலகமே சுற்றியது. நிதானத்துக்கு வந்து ஆகாஷிடம் சொல்லிவிட்டு மருத்துவமனைக்குப் பயணித்த அந்த நிமிடங்கள் நரகமானவை. எட்டு வருடங்களுக்கு முன்னால், அப்பாவின் முன் நின்றது நினைவிலாடியது. “நான் எவ்ளோ சொல்லியும் கேக்காம ஆகாஷை கல்யாணம் பண்ணிண்டு வந்து நிக்கற... இதுக்கு மேல உன் கூட எனக்குப் பேச இஷ்டம் இல்ல...” “எதுக்கு இப்…

  4. மம்முடு-கோமகன் பிரான்ஸ் இன்போ செய்தி : செவ்ரன் நகரில் போதைப்பொருள் தேடுதல் வேட்டையில் இரண்டு கிலோ பிரவுன் சுகர் போதைவஸ்து வில்லைகள் கைப்பற்றப்பட்ட வேளையில் நடந்த மோதலில் ஒரு கறுப்பினத்தவர் உயிரிழந்ததாக செவ்ரன் மாநகரக் காவல்துறை தெரிவிப்பு. 07 மார்கழி 2018 000000000000000000000 கடந்த இரவு அம்மா வாட்ஸ் அப்-இல் எனது கலியாணத்துக்காக அபிப்பிராயம் சொல்லும்படி அனுப்பியிருந்த அந்த அப்பாவிப் பெண்ணை மறுப்புச் சொல்லி செய்தி அனுப்பினேன். அம்மா எனக்காகப் பார்த்த 10-ஆவது பெண் தான் இவள் பெயர் மது. நான் எதிர்பார்த்ததை விட நல்ல வடிவாகத்தான் மது இருந்தாள்.ஆனாலும் எனக்கு ஏனோ அவள் மீது பிடித்தம் வரவில்லை. அப்பாவின் மறைவுக்குப் பின்னர் அம்மாவுக்கு நல்லது கெட்ட…

  5. காட்சி பெட்டிக்கடை மணிக்கு அப்பாசாமியைப் பார்த்தாலே எரிச்சல்தான். தினமும் பஸ் ஏற வருபவர், ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்து அன்றைய செய்தித்தாள், பத்திரிகைகள் என எல்லாவற்றையும் ஓசியிலேயே வாசித்துவிட்டுத்தான் கிளம்புவார். ஒரு நாள் கட்டு வர லேட்டானாலும், ‘‘ஏம்பா, இன்னைக்கு அந்தப் பத்திரிகை வரணுமே... வரலையா?’’ என முதல் போட்ட முதலாளி மாதிரி கேள்வி வேறு! ‘இது கடையா, இல்லை கண்காட்சியா? எல்லாரும் இப்படியே ஓசியில் படிச்சிட்டு படிச்சிட்டு போனா தொழில் என்னாகுறது?’ மனம் புழுங்குவான் மணி.ஆனால் அன்று அப்பாசாமி கடைப் பக்கமே திரும்பவில்லை. செய்தித்தாளையும் புரட்டவில்லை. சோகமாக எங்கோ பார்த்தபடி நின்றார். ‘‘என்ன சார்... ஒரு மாதிரியா இருக்கீங்க..?”…

    • 1 reply
    • 971 views
  6. பேச்சு ‘‘இதோ பார்... இப்படி அடிக்கடி வந்து என்னைத் தொந்தரவு செய்யாதே!’’ - வீடு தேடி வந்த நெருங்கிய நண்பனிடம் எகிறி விழுந்தான் ஏகாம்பரம். ‘‘டேய், மூணாம் மனுஷன்கிட்ட பேசற மாதிரி கத்தாதே! நான் உன் குளோஸ் ஃபிரண்டுடா...’’‘‘இதோட உன் நட்பை குளோஸ் பண்ணிட்டேன்... போதுமா?’’ பரிதாபமாகத் திரும்பிப் போனான், நாற்பது வருட நண்பன்.‘‘ஏங்க! பீச்சுக்குப் போய் ரொம்ப நாள் ஆச்சு... சாயங்காலம் போலாமா?’’ - ஆசையுடன் கேட்ட மனைவியை எரித்து விடுவது போல் பார்த்தான் ஏகாம்பரம். ‘‘அங்கே போய் வாங்கினாத்தான் காத்தா? நம்ம வீட்டு மொட்டை மாடியில போய் நில்லு... அதே காத்து வரும்!’’‘‘அப்பா, செஸ் விளையாட வர்றீங்களா?’’ - கேட்ட மகனுக்கு முதுகிலேயே ஒன்று வைத்தான். ‘‘டேய்! ஏண்டா இப்படி எல்ல…

  7. பார்வை தழையத் தழைய புடவை கட்டி, நெற்றியில் குங்குமப் பொட்டுடன், மணக்கும் மல்லிகையை ஒரு கை மொத்தத்துக்கு தலையில் வைத்திருந்த பாவனாவை டிபார்ட்மென்டல் ஸ்டோரில் பார்த்து அதிர்ந்தாள் கமலா.‘‘போன வருஷம் கணவனை ஆக்ஸிடென்ட்ல பறிகொடுத்த பாவனா, இவ்வளவு அலங்காரத்தோட பந்தா பண்ணுறாளே!’’ - கணவனிடம் சொன்னாள். ‘‘இது 2017. இப்படிப்பட்ட பெண்களுக்கு சுமங்கலி போன்ற தோற்றம் பாதுகாப்பா இருக்கு. இதுல என்ன தப்பு?’’ என்றான்.‘‘இல்லைங்க! ஒண்ணு, அவ ரெண்டாவது கல்யாணம் பண்ணியிருக்கணும்! இல்லைன்னா யார் கூடயாவது லிவிங் டுகெதர்ல இருக்கணும்! இவ்ளோ அலங்காரம், ெராம்ப சந்தோஷமா குடும்ப வாழ்க்கை இருந்தா மட்டும்தான் வரும்!’’ - வாதாடினாள் கமலா. அடுத்த நாள் பாவனா, கமலாவின் வீட்டுக்கே வந்தாள். அலங்காரம் சற…

  8. Started by Rasikai,

    வெண்புறா எல்லோரும் இரவோடிரவாக நடந்தார்கள். தங்களால் கைகளில் எடுத்துக்கொள்ளக் கூடிய பொருட்களை எடுத்துக் கொண்டு நடந்தார்கள். அவர்களில் ஒருத்தியாக ரம்யாவும் நடந்துகொண்டிருந்தாள். அவள் கைகளிலும் சிறிது பொருட்கள் இருந்தன. அவள் எங்கே போகின்றாள்? யாரிடம் போகின்றாள்? அது அவளிற்கு மட்டுமல்ல அதில் போகின்றவர்களிற்கே தெரியாத ஒன்று. அவர்கள் எல்லோருக்கும் ஒரே பெயர். அது தான் அகதி. அங்கே நான் பெரியவன் நீ சிறியவன் என்ற பேதம் கிடையாது. அங்கு யாவரும் ஓரினம் அதுதான் தமிழினம். அகதித் தமிழினம். கும்மிருட்டு வேளையிலும் கொட்டும் மழையினிலும் அவர்கள் யாவருக்கும் தேவையாயிருந்தது ஒதுங்க ஓரிடம். எல்லோரும் தங்கள் தங்கள் இஷ்ட தெய்வங்களைக் கூப்பிட்டனர். எப்படியாவது உயிர் பிழைக்க வ…

  9. மனக்கணிதம் - சுதாராஜ் - தாமரா வீட்டை விட்டுப் போய் பத்து நாட்களாகிறது! இன்றைக்கு வருவாளோ.. இன்றைக்கு வருவாளோ, என எண்ணி ஏமாந்த பொழுதுகளைப் போலவே இன்றைய நாளும் போய் விடுமோ என்ற ஏக்கம் மனதை ஆக்கிரமித்திருக்கிறது. சோகம் அவனைக் குப்புறப் போட்டு அழுத்தியது. படுக்கையிலிருந்து எழவும் மனதில்லை. அழவேண்டும் போன்றதொரு உணர்வு தொண்டையை அடைத்துக்கொண்டிருக்கிறது. அழுகை எதற்காக? தாமராவுக்காகவா? தாமரா வீட்டை விட்டுப் போன நாளிலிருந்து அவனுக்கு, தான் தனிமைப்பட்டுப்போனது போன்றதொரு விரக்தி மனதை எரித்துக்கொண்டிருந்தது. தன் உணர்வுகளை அவள் புரிந்து கொள்ளவில்லையே என மனம் வெதும்புகிறது. அப்படி அலட்சியப்படுத்தினால் அதற்கு அழுகை ஏன்? தாமரா தனக்கு யார்? என்ன உறவு? உறவு ஏதுமில்லையெனில் ஒன்றுமே இல்…

  10. நன்னயம் செய்துவிடேல்! "வரப் போறாளாமா? வரட்டும்... வரட்டும்... நாக்கைப் புடுங்கற மாதிரி நாலு கேள்வி கேக்காம உட மாட்டேன் நான். இப்பதான் ஒடம்பொறப்பு தெரிஞ்சுதாமா? அம்மா செத்துப் போயி இந்தச் சித்திரை வந்தா பதினாலு மாசம் ஆகுது. மொத வருசம் திதி குடுக்கும்போது பாத்ததுதான்... அப்பறம் ஒரு கடிதாசி கூடப் போடலியே? இப்ப கூட வரப்போறோம்னு எதுக்காகப் போட்டிருக்கா தெரியுமா? தேவியம்மா வரப் போறங்கள்ல... நாங்க எங்கியாவது வேற ஊருக்குப் போயிட்டா என்ன செய்யறது? அவ வர்றது வேஸ்டாப் பூடுமில்ல... அதுக்காகத்தான். எல்லாம் ஒரே காரியவாதிதான். ஆமாம்... இப்ப அவளுக்கு எல்லாக் காரியமும் முடிஞ்சு போச்சு... பசங்க எல்…

  11. கானல் நீர் காட்சிகள் வாட்ஸ்அப் பதிவு : 1 எங்கே இரண்டு நாளா ஆளையே காணோம்'' 7.35 PM ""டூர் போயிருந்தேன்'' 7.36 PM ""டூரா ! எந்த ஊருக்கு ?'' 7.37 PM ""மூணாறு, கேரளா'' 7.39 PM ""சொல்லவே இல்லை'' 7.40 PM ""சாரி.. திடீர்னு முடிவாயிடுச்சு'' 7.42 PM ""பரவாயில்லை, குடும்பம் எல்லாரும் போனீங்களா'' 7.44 PM ""இல்ல... ப்ரெண்úஸாட போனேன்'' 7.46 PM ""பயங்கர ஜாலிதான், ட்ரிங்க்ஸ்'' 7.38 PM ""கொஞ்சம், ரொம்ப கொஞ்சம்'' 7.48 PM ""ஏன் குடும்பத்தை கூட்டிப் போகல'' 7.51 PM ""அடுத்த வாரம் கூட்டிப் போகணும்'' 7.52 PM ""எதுல கூட்டிப் போவீங்க'' 7.55 PM ""வீட்ல…

  12. சோதனைச்சாவடி - சிறுகதை கவிப்பித்தன் - ஓவியங்கள்: ஸ்யாம் கோடை வெயில், பெட்ரோல் விலையைப் போன்று விறுவிறுவென ஏறிக்கொண்டிருந்தது. வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த வருவாய் ஆய்வாளர் சிதம்பரத்தின் நடு உச்சிக்கு மேல் கொதித்துக்கொண்டிருந்தான் சூரியன். இலைகளை உதிர்க்கத் தொடங்கியிருந்த வயதான ஒரு புளியமரம், சிதம்பரத்தின் வலதுபுறம் ஒற்றைக் கிளையுடன் நின்றிருந்தது. அதன் வெக்கை, அங்கே மேலும் மேலும் உஷ்ணத்தைக் கிளப்பிக் கொண்டிருந்தது. தலைமைக் காவலர் இருவர், சாலையில் வரும் கார்களை நிறுத்தி அதன் டிக்கிகளைத் திறந்து காட்ட, தலையைச் சாய்த்து சாய்த்து உள்ளே எட்டிப் பார்த்துக்கொண்டிருந்த சிதம்பரத்துக்கு எரிச்சலாக இருந்தது. சவுக்குத்தோப்புபோல …

    • 1 reply
    • 1.9k views
  13. என்னைக் கவர்ந்த எளுத்தாளர்களில் ந . பிச்சமூர்த்தியும் ஒருவர் . நான் சிறுவயதில் கலைமகளில் அவரின் கதை ஒன்று வாசித்தேன் . பல வருடங்கள் கடந்து மீண்டும் அதே கதையை இணையத்தில் வாசிக்கும் சந்தர்ப்பம் அண்மையில் மீண்டும் எனக்குக் கிடைத்தது . அவரின் இந்தக்கதை 60 களில் வெளிவந்தாலும் , குறிப்பாக எம்மிடையே இப்பொழுது நடக்கின்ற சம்பவங்கழுக்கு ஒரு செய்தியை இந்தக் கதைமூலம் 60 களிலேயே சொல்லியிருப்பது எனக்கு ஆச்சரியத்தையே ஏற்படுத்தியது . உங்களுக்காக இதைப் பகிர்கின்றேன்..................................... ஆதிகாலம் முதற்கொண்டே வங்காள வேங்கைக்கும் மூங்கில் கொத்துக்கும் இணை பிரியாத நட்பு. அப்பொழுது மூங்கில்களுக்குப் பொன்வர்ணம் இல்லை. பச்சையாகவே இருந்தன. புலிக்கு வரிகள் இல்லை. பழம் போன்ற …

  14. ஒருவன் காலையில் தூங்கி எழுந்தான்... . இரவு தூங்க வெகுநேரம் ஆனதால் காலை எழுந்து கொள்ள நேரமாகி விட்டது... . சுவரில் மாட்டப் பட்டிருந்த கடிகாரத்தில் 9 ஆகிவிட்டதை காட்டும் விதமாக 9 மணிஅடித்து ஓய்ந்தது.... . குளித்து முடித்து... காலண்டரில் தேதியை கிழித்தான்... 8-ம் தேதி‌ போய்.. இன்று தேதி 9 எனக் காட்டியது... . வங்கிக்கு சென்று வரலாம் என்று வங்கிக்கு செல்ல ஆட்டோ பிடித்தார்... . அதில் ஆட்டோ எண் 9 என வட்டம் போட்டு எழுதியிருந்தது... . வங்கியில் இறங்கி வங்கியில் நுழையும் போதுதான் கவனித்தான் வங்கியின் க‌தவு எண் 99 என இருந்தது.. . வங்கியின் உள்ளே சென்று கணக்கரிடம் தன்னுடை பாஸ்புக்கை காண்பித்து பண இருப்பை சரி பார்த்தான் அதில் 9 இலட்சங்கள் உள்ளது எனக்…

  15. என் தந்தை ஒரு போஜனப்பிரியர், அதனால் எனக்கு காதல் தோல்விகள் என்றால் உங்களுக்கு சிரிப்பாய்த்தான் இருக்கும். அந்தக்காலத்தில் எங்கள் ஊரில் ரெங்க விலாஸ் என்னும் உணவகம் இருந்தது. அங்கே சாம்பார் வடை பேமஸ். இரண்டு சாம்பார் வடை வாங்கினால் ஒரு லிட்டர் சாம்பாரை வாளியில் ஊற்றி தருவார்கள். வாரத்தில் மூன்று நாட்களாவது அந்த கடை சாம்பார் வேண்டும் என் தந்தைக்கு. அது வந்தவுடன் அவர் இட்லி சாப்பிட ஆரம்பிப்பார். துணைக்கு அப்பொழுது அரைத்த தேங்காய் சட்னி, இரவு மீதமான தக்காளி கார சட்னி, எப்பொழுதும் வீட்டில் இருக்கும் எண்ணெய் மிளகாய்ப் பொடி.இரவுகளில் ராஜு ஆப்பக்கடையிலோ, குதிரை மார்க் புரோட்டா ஸ்டாலிலோ வாங்கப்படும் வீச்சு புரோட்டா, வெங்காய கறி. நான் வாங்கி வந்த உடன் என் தாயார் ஆம்லேட் சுட ஆரம்பிப்…

    • 2 replies
    • 1.5k views
  16. [size=6]யாரோ ஒருவன்[/size] யோ.கர்ணன் நேற்று முழுவதும் அக்காவின் ஞாபகம் ஒரு காரிய நிழலாக மனதில் படர்ந்திருந்தது. அந்த அடர் திரையை விலக்கி ஒரு ஒளிக்கற்றைகூட மனத்திரையில் பதியவேயில்லை. மனதின் இருளில் வழிதெரியாத நினைவுகள் அல்லாடிக் கொண்டிருந்தன. அம்மாவின் முகமே இருண்டிருந்தது. யாருடனும் அவர் சரியாகக் கதைக்ககூடயில்லை. கடந்த சில மாதமாகத்தான் அவர் வாழ்வில் ஒளி கொண்டிருப்பதாக ஓயாத சிரிப்புடன் சொல்லிக் கொண்டிருந்தவர், இன்று அனைத்தையும் இழந்துவிட்டார். அம்மா இவ்வளவு சீரியசாக இருக்கத் தேவையில்லையென்றுதான் எனக்குப்பட்டது. ஆனாலும் எதனையும் நான் சொல்லவில்லை. நீண்ட பிரிவின் பின் கடந்த சிலமாதமாகத்தான் அம்மாவுடன் சேர்ந்திருக்கிறேன். எதனையும் தனது விருப்பத்தின்படியே செய்து முட…

    • 2 replies
    • 1.2k views
  17. ஐஞ்சு சதத்துக்கு கடலைக் கொட்டையும் ஐநூறு பிறாங்குக்கு அன்ரி எயாக்கிறாவ் மிசைலும்........? ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- எங்கடை ஊரிலை ஒருத்தர். அம்பத்தைஞ்சு அறுவது வயதிருக்கும். பெரிய கமக்காரன். எந்த நேரமும் வாயிலை சுருட்டுக் கிடக்கும். அடிக்கடி நெருப்புப் பெட்டியைத் தட்டி அதை மூட்டிக் கொண்டிருப்பார். ஆனால் அதைத் தொடர்ந்து பத்தி முடிக்கிறேல்லை. விடிய வெள்ளாப்போட வாயில வைக்கிற சுருட்டு இரவு படுக்கைக்குப் போகும் வரைக்கும் வாயிலேயே கிடக்கும். அவர் பெரிய கமக்காரன் எண்டதோட ஆள் பெரிய பொயிலை வியாபாரியும், வீட்டில சுருட்டுக் கொட்டி…

  18. இந்த மூட்டைப் பூச்சி பற்றிய விடயம் ஒரு சிறியதே என்றாலும், இன்றுவரை அதன் நினைவு என் நெஞ்சை விட்டு அகல மறுத்து ஆழப் பதிந்ததனால் கட்டாயம் இது பற்றியும் எழுத வேண்டும் என்றுமுடிவெடுத்தேன். ஆனால் பலருக்கு மூட்டைப் பூச்சி பற்றித் தெரிந்தே இருக்காது. எங்கள் வீடு மிகச் சுத்தமானது என்பதால் வீடுத் தளபாடங்களும் சுத்தமாகவே இருக்கும். நான் நான் வேம்படிக்குப் படிக்கப் போனதன் பின்னர் எனக்காகப் படிப்பதற்குத் தனி மேசை கதிரை கட்டிலுடன் தனி அறை இருந்தது. அது எனக்குப் பதவி உயர்வு கிடைத்தது போன்றது. எனக்குப பல நண்பிகள் இருந்தனர். அவர்கள் வந்தால் நாம் வீட்டு முற்றத்தில் இருந்து கதைப்போம். முற்றத்தில் வேறு யாராவது வந்தால், ஏதாவது பகிடியாகக் கதைப்பதெனில் என் அறைக்குள் போய் இருந்து கதைப்போம…

  19. 10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் ஹோம்வொர்க் ‘‘டேய்... ஹோம்வொர்க்கை முடிச்சிட்டியா?’’ என்று மகனிடம் குரல்கொடுத்த அதே நேரத்தில், ‘ரிப்போர்ட் ரெடியா?’ என பாஸிடம் இருந்து இமெயில் வந்தது `வொர்க் ஃப்ரம் ஹோம்' ரகுவுக்கு! - சாய்ராம் கஷ்டம் இன்ஜினீயரிங் காலேஜ் ஓனர் வருத்தத்துடன் சொன்னார், “நான் கான்வென்ட் ஸ்கூல் நடத்தவேண்டியது தம்பி... தெரியாத்தனமா இன்ஜினீயரிங் காலேஜ் ஓப்பன் பண்ணிட்டேன். அதான் கஷ்டப்படுறேன்.” - வைத்தீஸ்வரன் பாலகிருஷ்ணன் லைக் “ஃபேமிலியுடன் ஒரு வாரம் ஃபாரின் டூர் போறேன், feeling happy” என்ற ராஜேஷின் ஸ்டேட்டஸுக்கு, தன் ஃபேக் ஐ.டி-யில் இருந்து லைக் போட்டான் ஏரியா திருடன்! - எஸ்கா …

  20. துரோகம் தன்னுடைய முன்னாள் குரு, இயக்குநர் சேதுராமனின் படத்தை முதல் காட்சியில் பார்க்க ஆர்வமாகத் திரையரங்கத்துக்குச் சென்ற சுரேந்தர், படத்தைப் பார்த்து அதிர்ந்து போனான். அவன் டைரக்டராக அறிமுகம் ஆவதற்காக இரண்டு வருடங்களுக்கு முன்பு எழுதி வைத்திருந்த கதையை ஒரு சில நகாசு வேலைகள் செய்து படமாக எடுத்திருந்தார் சேதுராமன். பணபலமும், அரசியல் செல்வாக்கும் உள்ள சேதுராமனிடம் மோதுவது இயலாத காரியம். சுரேந்தர் யோசனையில் ஆழ்ந்தான். பளீரென அவன் நினைவுக்கு வந்தது சம்யுக்தாதான். சேதுராமனின் ஒரே மகள். சுரேந்தரை உயிருக்குயிராய் காதலிக்கிறாள். சேதுராமனுக்கு துரோகம் செய்யக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக சம்யுக்தாவின் காதலை மறுத்திருந்தான் சுரேந்தர். ‘‘எத்தனை வருஷமானாலும் உனக்காக…

  21. ஒரு நண்பன் - சிறுகதை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... அசோகமித்திரன், ஓவியங்கள்: அனில் கே.எஸ். ஹரிகோபால் என்னை எச்சரித்தான்: ''இதோ பார், நீ ரொம்ப 'ரெட்’ ஆகுற. போலீஸ் பிடிச்சா என்ன ஆகும் தெரியாது!'' அவன் சொன்னதில் தவறு கிடையாது. ஆனால் இவன் யார், எப்போது பார்த்தாலும் என்னை இதைச் செய்யாதே அதைச் செய்யாதே என்று சொல்வது? விவிலியத்தில் கெய்ன், கர்த்தரிடம் சொல்வான்: 'நான் என்ன, என் சகோதரனைக் காவல் காப்பவனா?’ இதை அவன் சகோதரன் ஏபல்லைக் கொன்ற பிறகு சொல்கிறான். என்ன நெஞ்சழுத்தம்! ஹரிகோபால், இந்த மாதிரி என் விஷயங்களில் தலையிடுவது இது முதல்முறை அல்ல. நான் இன்ஸ்பெக்டர் செண்பகராமனுடன் சினிமாவுக்குப் போனது, அவர் ஒரு மாடி வீட்டுக்க…

  22. நெஞ்சம் மறப்பதில்லை அந்த அரச மரம் அங்கிருக்கிறதா? என்று என் கண்கள் தேடியது. ""அந்தப் பக்கமெல்லாம் இப்ப போக முடியாதுண்ணா... புதர் மண்டிக் கிடக்கு'' என்றான் என் தம்பி. ""அது ரொம்பப் பெரிசாச்சே கொஞ்சம் தள்ளி நின்னு கூடப் பார்க்கலாமே. சுத்தி வரக் கல் பாவியிருக்கும் பாரு. அதப் பார்க்கணும் எனக்கு'' என்னையே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தான். அந்த ஒளியைக் கண்டு கொண்டானோ என்னவோ? நினைப்பு தந்த சந்தோஷத்தை மலர்ச்சியை முகத்தில் கண்டிருக்கலாம். ""சரிண்ணா... வாங்க போவோம்'' அவனோடு நடந்தேன். ஒரு குறிப்பிட்ட தூரம் சென்று நின்று விட்டான். ""இந்த எடம் எதுன்னு தெரியுதா?'' சுற்று மு…

    • 1 reply
    • 1.1k views
  23. எட்டாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வு முடிந்து கடைசி நாளன்று தோழிகளுடன் பள்ளியின் மாமரத்தடியில் பேசிக்கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த ஸ்டீஃபன் சார் என்னைக் கூப்பிட்டு ஒரு ரோஸ் கலர் நோட்டீசை தந்து விட்டு சென்றார். அதில் இயேசுவின் வாழ்க்கை குறிப்பு எழுதப்பட்டு முடிவில் பாஸ்காவை காண வாரீர். இடம், நாள், நேரம். எல்லாம் குறிப்பிடப் பட்டிருந்தது. அப்போதே தீர்மானித்துக் கொண்டேன். சைக்கிளில் வீட்டிற்குப் பறந்தேன். அம்மா இன்னும் வரவில்லை, பள்ளியில் கடைசி நாள் என்பதால் பார்ட்டி இருக்கும். அப்பாவின் வண்டியை காணவில்லை. மெயின் ரோடுக்கு போயிருப்பார். பொருட்கள் வாங்க, நண்பர்களுடன் அளவளாவ. பாட்டி திண்ணையில் கால்நீட்டி அமர்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தார்கள். தம்பி வாசலில் விள…

  24. பெலிசிற்றா : ஜே.கே ஜே.கே ஏழு பதினொன்றுக்கு வரவேண்டிய தொடருந்து தாமதமானதால் பயணிகள் மேடை அலுவலகப் பணியாளர்களாலும் பாடசாலை மாணவர்களாலும் நிறைய ஆரம்பித்தது. தலைக்கு பீனித் தொப்பி, கழுத்துச்சால்வை, முழங்கால்வரை நீளும் குளிர் ஜாக்கட், சுடச்சுடக் கோப்பி என அத்தனை போர்வைகளையும் மீறிக் குளிர் அவர்களை உறைய வைத்துக்கொண்டிருந்தது. இந்தக் குளிரிலும் காற்சட்டை அணிந்து மேலே வெறுமனே ஒரு சுவெட்டரை மாத்திரம் மாட்டியிருக்கும் மாணவர்களைப் பார்த்து பெலிசிற்றா பொறாமைப்பட்டாள். அவர்களில் பலரும் இந்திய நிறத்தைச் சூடியவர்கள். சிலருக்குச் சீனத்து முகம் இருந்தது. பெலிசிற்றா அவுஸ்திரேலியாவுக்கு வந்த இந்த நாற்பது வருடங்களில் நிகழ்ந்த பெரும் மாற்றம் இது. இந்த நிலத்தில் வாழ்ந்த ஆதிக்குடிக…

    • 1 reply
    • 692 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.