கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
பெண்ணாய் பிறந்தால் என்னவாம்? ''தீபா... ஜன்னல் பக்கத்துல நின்னு, பொம்பள பிள்ள தெருவ வேடிக்கை பாக்கக் கூடாதுன்னு எத்தினி வாட்டி சொல்றது... வா, வந்து இந்த மசாலாவ அரைச்சுக் குடு,'' என்று சமையற்கட்டிலிருந்து கூச்சல் போட்டாள், விமலா. உடனே, சமையற்கட்டிற்கு விரைந்து, அம்மியின் முன் உட்கார்ந்து, இறுகிய முகத்துடன் மசாலாவை அரைக்கலானாள், தீபா. ''என்னடி, உன் ஆத்திரத்த அம்மிக் குழவி மேல காட்டுறியா... மசாலா வழியுது பாரு...'' என்று அவள் தலையில் குட்டி,''நாளைக்கு இன்னொரு வீட்டுக்கு வாழப் போறவ நீ, இப்படி வீட்டு வேலை செய்தா, 'பொண்ணை சரியா வளர்க்கல'ன்னு என்னையதானே உன் மாமியார் கொறை…
-
- 0 replies
- 815 views
-
-
இல்வாழ்வு தந்த இயலாமை கனமான அந்த அல்பத்தை தூக்க முடியாமல் சிரமப்பட்டு தூக்கிக்கொண்டு, அங்காலயும் இங்காலயும் சாய்ந்து சாய்ந்து மகள் ஜனனி ஓவர் ஆக்சன் வேற போட்டுக்கொண்டு, "அம்மா அம்மா பிடியுங்கோ" என்று சத்தம் போட்டுக்கொண்டு வருவதைப் பார்த்ததும் மேனகாவுக்குச் சிரிப்புத்தான் வந்தது. "இப்ப என்னத்துக்கு ஜனனி இதைத் தூக்கிக் கொண்டு வாறீங்கள்? அம்மாட்டா கேட்டா எடுத்துத் தந்திருப்பன்தானே?" "அம்மா நான் உங்கட கல்யாண வீட்டுப் படம் பார்த்துக் கனநாள்தானே.. வாங்கோ பார்ப்பம். நான்; அதில நிக்கிற ஆக்களெல்லாம் யார் யாரெண்டு சொல்லுவனாம் நீங்கள் நான் சொல்றதெல்லாம் சரியோ என்று பார்ப்பீங்களாம். சரியோ?" "ம்... மகாராணி சொன்னா அதுக்கு மறுபேச்சு இருக்கா? சரி சொல்லுங்கோ மகாராணி..."…
-
- 8 replies
- 1.9k views
-
-
தேவதையைத் தரிசித்த மனிதன் ஜீ.முருகன், ஓவியங்கள்: செந்தில் “அவரின் இறுதித் திரைப்படமாக ‘ரயில்’ இருந்திருக்கலாம்” என அவன் சொன்னான். இத்தகவல் எனக்கு வியப்பாக இருந்தது. அப்படி ஒரு படத்தைக் குறித்து அவருடைய பேட்டிகளிலோ, அவரோடு பணியாற்றிய திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்களின் பேட்டிகளிலோ, கட்டுரைகளிலோ, வேறு வகைகளிலோகூட, படித்ததாகவோ கேள்விப்பட்டதாகவோ ஞாபகம் இல்லை. ஜெர்மன் கலைஞரான இ.டி.எ.ஆஃமேனின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு ‘ஆஃப்மேனியானா’ என்ற படத்துக்குத் திரைக்கதை எழுதியும் அவரால் இயக்க முடியாமல் போனது தெரியும். ஆனால் இது? முழு அளவு இஞ்சித் தேநீர் நிரம்பிய கோப்பையை, காலி கோப்பை ஒன்றால் தாங்கிப் பிடித்துச் சுவைத்தபடி, அவன் அந்…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஆனந்த குமாரசாமி முகாமின் K வலயத்தின் அந்த வீடுக்கு முன்னால் வரிசையாக சனம். அதில் ஒருவராக நானும் அக்காவும். ஏதோ நிவாரணத்துக்கான வரிசையோ, அல்லது இராணுவம் பதிவு செய்யும் வரிசையோ இல்லை. எல்லோருடைய கையிலும் ஒரு வெத்திலை. அந்த வெத்திலை கூட அந்த வீட்டுக்கு முன்னால் இருக்கும் கடையில் தான் வாங்கபட்டது. கொளுத்தும் வெய்யிலை பொருட்படுத்தாது சனம் வரிசையில் ஊர்ந்தபடி இருந்தார்கள். இது என்ன எங்களுக்கு புதுசே கிளிநொச்சியிலே இருந்து எதுகெடுத்தாலும் வரிசை தானே. "அக்கா எனக்கெண்டால் இதிலை கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை வா போவோம்." "கொஞ்சம் பொறுடா எல்லாரும் இந்த சாத்திரி உண்மை சொல்லுறான் என்று தானே இவ்வளவு கூட்டமா நிக்கிறாங்கள். கொஞ்சம் பொறு வந்தது தான் வந்தோம் ஒருக்கா கேட்டிட…
-
- 8 replies
- 1.9k views
-
-
அம்மா நான் கோதை அல்ல அந்திவான் நாணச் சிவப்பேறப் புள்ளினங்கள் பாட்டிசைத்தன. கரைமோதும் அலைக்கரம் தன்னிருப்பைக் காட்டுவதற்காக இரைச்சலிட்டபடி நுரைத்துக் கொண்டிருந்தது. பந்தலில் படர்ந்த கொடியில் முல்லைகள் விரிவிற்காக விண்ணப்பம் எழுதின. தென்னங்கீற்றோடு மாருதம் சலசலத்துப் பேசி சமயத்தில் சண்டையும் போட்டது. ஒழுங்கையில் மேய்ச்சலுக்கு விட்ட ஆடுகளை வீட்டுக்குக் கலைத்தபடி மணியம் நடந்தார். முற்றத்து விலாட் மாமரத்தில் ஓடித்தாவித் திட்டி விளையாடும் அணில்களை ரசித்துப் புன்னகைத்தாள் அந்தப் பதினாறு வயது நிரம்பிய பருவமகள். சின்னச் சின்ன மஞ்சள் பூக்கள் தூவிய கறுப்புநிற அரைப்பாவாடையும், மஞ்சள் மேலாடையும், சற்றே தளர்த்திப் பின்னலிட்ட இரட்டைச்சடையும் கோதையின் வனப்பை உச்சத்திற்கு ஏற்றின. …
-
- 2 replies
- 1.7k views
-
-
கிஷோர் வெளியே சென்று விட்டு வீட்டுக்குள் நுழைந்ததுதான் தாமதம், ஆளாளுக்கு பிலுபிலு என்று பிடித்துக் கொண்டனர். “டேய், அங்கேயே நில்லு, குழாய் பக்கத்துல ஹேண்ட் வாஷ் வெச்சிருக்கேன், மொதல்ல அதைத் தடவி கைகளை நல்லாத் தேய்ச்சிக் கழுவிட்டு அப்பறம் உள்ள வா” என்றார் அம்மா. “கைகள் மட்டும் இல்லப்பா , கால்களையும் நல்லா கழுவிகிட்டு வா” என்றார் அப்பா. “உள்ள வந்ததும் மொதல்ல நீ போட்டுட்டு இருக்கற எல்லா துணிகளையும் சோப் தண்ணியில ஊறவை” என்றாள் அக்கா. ‘என்ன கொடுமை கிஷோரு இது’ என்று தனக்குத் தானே கூறி தலையில் அடித்துக் கொண்டே, “டேய், உன் பங்குக்கு நீ ஏதாவது சொல்றது தானே?” என்று தம்பியைப் பார்த்துக் கிண்டலாகக் கேட்டான் கிஷோர். “யார் என்ன சொன்னாலும்…
-
- 0 replies
- 375 views
-
-
பருவத்தே செய்யும் பயிர் .............. அன்று ஞாயிறுமாலை ஆதவன் கடற்கரையோரமாய் அமர்ந்திருந்தான் .எண்ண அலைகள் தாயகம் நோக்கி செல்ல தொடங்கியது கல்வியின் உயர் தரம் முடித்து பெறுபேறுகளுக்காக காத்திருந்த நேரம் .ராணுவ அடகாசங்கள் கட்டு மீறி செல்ல தொடங்கியிருந்தது .. ஆதவனின் அப்பாவும் அம்மாவும் இவனை லண்டனுக்கு அனுப்ப முடிவு செய்தனர் .அதற்கான ஒழுங்குகள் ஏற்கனவே அங்கு இருந்த மாமாவால் செய்யபட்டு ,காணி பூமி ,அக்கா கெளசலா திருமணத்திற்கென வைத்திருந்த உடமை இ எல்லாம் பணமாகி ,அவன் லண்டனை அடைந்தான் . மூன்று மாதங்கள் மாமாவீடின் சுகம் பிரிவை கொஞ்சம் தணித்து .மெல்ல மெல்ல வேறிடம் பார்கவேண்டியதேவை ,மாமா உணர்த்த ,அவன் இடம் மாறினான் . சிலமாதங்கள் ஆக பெற்றவரிடமிருந்து இருந்து கடன் பத்…
-
- 8 replies
- 1.8k views
-
-
தோடம்பழக் கொம்பனியும்.லண்டன் பயணமும். சாத்திரி ஒரு பேப்பர். இந்த வருசம் நத்தாரோடை பத்து நாளைக்கு கடையை பூட்டுவம் எண்டு முதலாளி சொல்லிட்டான்.நீண்ட நாளின் பின்னர் பத்துநாள் லீவு மகிழ்ச்சிதான் நத்தார் முடிந்ததுதம் லண்டனுக்கும் ஒருக்கா போய் சில உறவுக்காரர் பழைய சினேதங்கள். எல்லாத்தையும் பாத்திட்டு வரலாமெண்டு நெற்றிலை மலிவாய் றிக்கற்றை பாக்கத் தொடங்கினன். வழக்கம் போலை தோடம் பழக் கொம்பனி அதுதானுங்கோ Easy jet அதிலை றிக்கற்றும் பதிஞ்சிட்டன். ஆனால் போகிற நேரக் குளப்பத்தாலை பதிவு போடுறதும் நிறுத்திறதும் திருப்ப பதியிறதுமாய் ஒரு நலைஞ்சு தரம் செய்து ஒரு மாதிரி பதிஞ்சு முடிச்சிட்டன். நத்தாருக்கு மனிசி எனக்கு ஒரு ஜுன்ஸ் பரிசா வாங்கி வைச்சிருந்தாள். வாங்கிய…
-
- 45 replies
- 3.3k views
- 1 follower
-
-
பாவ மன்னிப்பு | சாதனா சகாதேவன் புனித லூசையப்பு தேவாலயத்தின் பாதிரியார் ஆஸ்திரோவ்ஸ்கிக்கு பெருத்த சங்கடமாகப் போயிற்று. படபடத்த தேகத்தோடு கூண்டுக்குள் கைகளை நுழைத்து தன் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு ஒருசிறுவனைப் போல் அழுதுகொண்டிருக்கும் துர்கனேவ்வின் கைகளை விலத்திக் கொள்ள அவர்முயன்றார். முடியாமற் போகவே அவனைச் சமாதானப்படுத்த எண்ணி, ‘தண்ணீர் குடிக்கிறாயா?’ என்றார். தலையை ஒரு வேகத்தோடு உலுப்பி, வேண்டாமென்றவன், மேலும் அழுதான். அப்படி அவன்அழும்போது அவன் கண்களிலிருந்து கண்ணீரானது பெருகிற்று. ஆஸ்திரோவ்ஸ்கி தோற்றுப் போனார். அவரால் எவ்வளவோ முயன்றும் துர்கனேவ்வின் அழுகையை நிறுத்த முடியவில்லை. அவனை எப்படித்தேற்றுவது என்றும் அவருக்குத் தெரியவில்லை. சில நிமிடங்கள் கழித்து, …
-
- 0 replies
- 544 views
-
-
வான்கா ஒன்பது வயதான வான்கா ழுகோவ் அல்யாகினின் செருப்புக் கடையில் வேலைசெய்கிறான், அந்த வேலைக்கு வந்து மூன்றுமாதமாகிவிட்டது.அது கிறிஸ்துமஸ் தினம்.முதலாளி,அவர் மனைவி,கடையின் மற்றவேலைக்காரர் கள் எல்லோரும் நள்ளிரவு வழிபாட்டிற்குப் போவதற்காகக் காத்திருந்தான். அவர்கள் போனபிறகு முதலாளியின் அலமாரியிலிருந்து மைபாட்டிலையும், துருப்பிடித்த முனையுடய பேனாவையும், கசங்கியிருந்த தாளையும் எடுத்துத் தனக்கு முன்னால் வைத்துக்கொண்டு எழுதஆரம்பித்தான்.தனது முதல்கடி தத்தை எழுதுவதற்கு முன்னால் கதவுகள்,ஜன்னல்கள் பரவியிருந்த ஷெல்பு கள் என்று சுற்றுமுற்றும் பயத்தோடு சில தடவைகள் பார்த்தான்.பெருமூச்சு விட்டான்.பெஞ்சில் அந்தத்தாள் இருக்க மண்டியிட்டு உட்கார்ந்தான். “அன்புள்ள தாத்தா,கான்ஸ்…
-
- 3 replies
- 1.7k views
-
-
வெப்பச் சூத்திரம்: சக்கரவர்த்தி ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் “எனது பெயர் ஷாரிகா. எனது அம்மாவின் பெயரைச் சொன்னால் என்னைத் தெரிந்து கொள்ள இன்னும் உங்களுக்கு இலகு. விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர் மருத்துவர் ராஜினி திரணகமவின் மகள். ஷாரிகா திரணகம.” பேச்சின் ஊடாக உணர்வுகளைப் பகிர நான் தெரிந்து வைத்துக் கொள்ளவில்லை. மௌனம்தான் எனது ஊடகம். மௌனத்தின் ஊடாக மட்டுமே ஊணர்வுகளை பகிரத் தெரியும். புத்தர்தான் மௌனத்தை எனக்கு கற்றுக் கொடுத்திருந்தார். இரண்டாயித்தி ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் மௌனப் பிரசங்கம் செய்த சோனாலியில், இலைகளின் சலனம் இல்லாத அதே அரச மரத்தடியில் என்னை மட்டும் தனியே அமர்த்தி, இருபத்தைந்து ஆண்டுக…
-
- 6 replies
- 993 views
-
-
புத்துணர்ச்சி பத்திரிகையின் பக்கங்களைப் புரட்டியபடியே சோபாவிலே சாய்ந்திருந்த ரம்யாவின் கண்களிலே அந்த மரண அறிவித்தல் பட்டது. அதிலே அவள் கண்கள் அப்படியே நிலை குத்தி நின்றன. இது நிச்சயமாக அவள்தான். கடவுளே.. .. அப்படி இருக்கக்கூடாது கண்களை அகலத் திறந்தபடி பெயர் ஊரைக் கவனமாக உற்று நிதானமாக வாசித்தாள். ஆமாம் அவள் என் மாணவி தான். அமைதி, அடக்கம், பொறுமையின் சிகரமான அவளுக்கா இக்கதி? நெஞ்சிற்குள் ஏதோ செய்வது போலிருந்தது. இவளால் எப்படி போராட்டத்தில் இணைய முடிந்தது? எப்படி அவள் இறந்திருப்பாள்? தனக்குத்தானே கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தவள் கண்களில் இருந்து கண்ணீர்த்துளிகள் அவள் கன்னங்களில் வடிந்தோடின. ரீட்டா ஒரு ஏழை. அவள் தந்தையார் அன்றாடம் தோட்ட வேலை செய்பவர். ஆறு …
-
- 5 replies
- 1.9k views
-
-
"-------" கள் தினம். காலையில் எழுந்ததில் இருந்து எல்லாம் வித்தியாசமாக இருந்தது. மனைவி போட்டுத்தந்த தேத்தண்ணி தேவாமிருதமாக இருந்தது. அதைக் குடித்துப் போட்டு இன்னுமொரு குட்டிப் தூக்கம் போட்டேன். "பொறுப்பில்லாமல்" நித்திரை கொள்வதாக மனைவி சொல்லவில்லை. இரண்டாம் தரம் அடித்த "அலாரம்" மணிக்கூட்டு கூட சங்கீதமாக ஒலித்தது. வழக்கம் போலில்லாமல் நிதானமாய்க் குளித்து, நிதானமாய்ச் சாப்பிட்டுவிட்டு பஸ் ஸ்டாண்ட் போனேன். பஸ் ஸ்டாண்டில், சும்மா புன்னகைத்தாலும் பதிலுக்கு முறைக்கும் அந்தச் சீனன், இன்று வலியக் "காலை வணக்கங்கள்" என்றான். வெள்ளைக்காரங்களுக்கு மட்டும் காலை வணக்கம் சொல்லும் நாதனும் (தன பெயர் நேத்தன் என்றுதான் அடம் பிடிப்பார்) இன்று "என்ன சுகமே, நல்ல weather என்ன?" என்று…
-
- 3 replies
- 1.7k views
- 1 follower
-
-
உனைத்தேடி நான் வருவேன்.... சிறு கதை..... பல வருடங்களின் பின் அவன் தாய் நாட்டிற்கு போயிருந்த படியால் அவன் லண்டன் வந்த பின்னர் ஆவணி மாதம் 2003 இல் யுத்த நிறுத்தக் காலத்தில் லண்டனிலிருந்து இலங்கை சென்று பின்னர் யாழ்ப்பாணம், பின்னர் நல்லூர் என்று சென்றடைந்தான் சந்திரன். நல்லூர் திருவிழா எல்லாம் அவனின் குடும்பத்தாருடன் மிகவும் சந்தோசமாகக் கழித்துவிட்டு மீண்டும் திரும்புவதற்கு சில நாட்களே இருக்கும் சமயத்தில் தான் சிறுவயதில் பார்த்த வல்லிபுரக் கோவிலை பார்க்க ஆசைப்பட அவனின் அக்காவின் மச்சானும்( அக்காவின் புருசன்) வான் ஒன்றை ஒழுங்கு செய்து ஒரு சனிக்கிழமை எல்லோரும் புறப்படத் தயாராயினர். சிறுவயதில் தந்தையை இழந்த சந்திரன் தன்னுடன் சேர்த்து பொறுப்பில்லாத மூத்த…
-
- 4 replies
- 1.2k views
-
-
கபிலனுக்கு மனம் நிறைந்த சந்தோசம். மதுவின் சம்மதம் இன்றுதான் கிடைத்தது. ஒருமாதமாக தூக்கமில்லை, ஒழுங்காக உண்ண முடியவில்லை, ஏன் மற்றவர்களுடன் கதைத்துச் சிரிக்கக் கூட முடியாமல் தன்னுள் தானே அவஸ்தையில் மூழ்கியிருந்தான். மதுவைக் கண்ட நாள் முதல் மனம் கிடந்தது அடித்துக் கொண்டது. இவள் தான் எனக்கு ஏற்றவள் என மனம் சொன்னாலும் அவள் அதை ஏற்பாளா என்னும் தவிப்பு. அந்தத் தவிப்புக்கும் காரணம் இருந்தது. கபிலன் சாதாரணமான ஒருவன். மிகவும் அமைதியானவன். நண்பர்கள் பலர் இருந்தாலும் அவர்களுடன் இவனாக அரட்டை அடிக்க மாட்டான். அவர்களின் பம்பலில் தானும் பங்குகொள்வானே தவிர தானாக எதுவும் பெரிதாகக் கதைக்க மாட்டான். நண்பர்கள் இவனை வம்புக்கிழுத்தாலும் என்னை விடுங்கோடா என்பான் அல்லது ஒரு சிரிப்பை பதிலாகத் த…
-
- 100 replies
- 9.3k views
-
-
எனது கிறுக்கல் –( facebook இல் லொள்ளு விடும் ஆண்களுக்கு சமர்ப்பணம்) வரதட்சனைக்கு முன் வரையறைகள் ராத்திரி நான் படுக்க போக முதல் "நாளைக்கு எனக்கு ஒரு முக்கியமான நாள் " எண்டு facebook இல message ஒண்டு போட்டிட்டுத்தான் படுத்தனான் , என்ன காரணம் என்று போட நிறையத்தயக்கம் அது என்னவாயிருக்கும் எண்டது உங்களுக்கு விளங்கும் எண்டு நினைக்கிறன் , சும்மா சொல்லகூடாது பாருங்கோ நான் “இனிய காலை வணக்கம்” எண்டு ஒரு மெசேஜ் போட்டாலே அதுக்கு குறைஞ்சது நூ று லைக்ஸ் உம் ஒரு பத்து comments உமாவது வரும் , இன்றைய நாள் இனிய நாளாகட்டும் எண்ணுவினம் , ரண்டு வரிலை கவிதை எழுதுவினம் , சினிமப்பாட்டில இருந்து சில வரிகளை எடுத்து விடுவினம் ...அதுவும் இரவில ‘குட் நைட்’ எண…
-
- 0 replies
- 967 views
-
-
என்னவளே .....அடி என்னவளே .............. அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து , கணவனை வேலைக்கு அனுப்பி விட்டு ......சற்று கண் அயரலாம் என்று படுக்கையில் சரிந்தவளுக்கு .......தொலை பேசியின் கிணு கிணுப்பு ...விழித்து எழ வைத்தது ,,,,,,சுதா ,,எடுத்து கலோ ..........என்றவள் .மறு முனையில் சற்று பழக்கமிலாத குரல் ஆனாலும் எங்கோ கேட்டது போன்று ஒரு உணர்வு ..........கலோ ..நீங்க யார் என்று தெரியவில்லையே .......பெயரை சொன்னான் . பின் நீண்ட மெளனம். அவன் .சுந்தர மூர்த்தி எனும் சுந்தர் ............சுதா என்னை மறந்து விடாயா ? .நீண்ட மெளனம் ...அவளை தாயக நினைவுக்கு இட்டு சென்றது . பாடசாலைக்காலத்தில் ....அதே கலூரியில் படித்தவன். அவள் பினால் சுற்றி திரிந்தவன் .........நீண்ட காலத்தி…
-
- 5 replies
- 3.1k views
-
-
தெளிவு பிறந்தது ................. அன்றைய பொழுது ராகவனுக்கு எதோ கசந்து போய் இருந்தது ,காலையில் ...........அலுவலகம் வந்தான். எல்லாமே எதோ வழமைக்கு மாறானது போல ஒரு உணர்வு ........அலுவலக டைபிஸ்ட் , வந்து வழமை போல அன்றைய கடிதங்களுக்கு குறிப்பு எடுத்து சென்று விடாள். ஒரு சிகரட் பற்ற வைப்பதற்காக வெளியில் வந்தான். இரவு நிம்மதியான நித்திரை இல்லை. கடைக் குட்டி மாதுளனும் காய்ச்சலுடன் , முனகி கொண்டிருந்தான். அவனுக்கு அம்மாவின் அணைப்பு வேணுமாம். எனக்கு மட்டும் என்னவாம். அவனது பத்து வருட திருமண வாழ்வில் , கண் மணியான் இரு பையன்கள் ஒன்பது வயதிலும் நான்கு வயதிலும் . கடைக்குட்டி மாதுளன் அம்மா செல்லம். மனோஜனும் மாதுளனும் தனியே படுக்க பழகி இருந்தார்கள். ஆனால் நேற்று இரவு காய்ச்சலின் கடும…
-
- 9 replies
- 1.6k views
-
-
காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன் புதிய தொடர் -யுவகிருஷ்ணா அடியென்றால் அடி. சரியான அடி. தன்னை ஏன் அந்த போலீஸ்காரன் அப்படி அறைந்தான் என்று அடிவாங்கியவனுக்குத் தெரியவில்லை. ‘என்ன சார், திடீர்னு தெரு முழுக்க போலீஸ்?’ என்று சாதாரணமாகத்தான் கேட்டிருந்தான். அதற்கு இப்படியா அடிப்பது? வாசலில் நின்று தேமேவென்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவன், கண்கள் இருள கன்னத்தை தடவிக்கொண்டு, அவசரமாக வீட்டுக்குள் போய் கதவைத் தாழிட்டான். மெதிலின் நகருடைய முக்கியமான சாலை அது. தனித்தனி பங்களாக்களாக பெரிய வீடுகள். கொலம்பியாவின் இரண்டாவது பெரிய நகரம். நானூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த நகரம் என்பதால் மரபும், நவீனமும் கலந்த கவர்ச்சியை தன்னகத்தே கொண்டிருந்தது மெதிலின். சுற்றிலும் ஒன்பது…
-
- 70 replies
- 19.9k views
-
-
ஊருக்குள் நூறு பெண்.... மட்டுவில் ஞானக்குமாரன் அந்தப் பெண்களோடு பேசிய பின்னால் தான் அவருக்கு இப்படி ஒரு ஞானம் வந்திருக்கோணும். நெஞ்சு இறுக்கம் அடைவது போலவும் அடிமனதிலே சில பேர் சேர்ந்து சம்மட்டியால் அடிப்பது போலவும் ஒரு வலி. அவரிடம் கடைசியாக வந்த சுகன்யாவுக்கு 20 வயது தான் ஆகிறது. மூன்று வயதிலே ஒன்றும் இரண்டுவயதிலே இன்னொன்றுமாக இரண்டு குழந்தைகளை கையிலே கொடுத்துவிட்டு அவளது கணவன் போய்விட்டான். இங்கே நடக்கக் கூடிய வழமையான செயற்கைச் சாவிலே ஒன்றாக அவனது பெயரையும் காலம் இணைத்துக் கொண்டது. வறுமையோடு போராடும் பெற்றோர் ஒரு பக்கம் வெறுமையாகிப் போன வாழ்க்கை மறுபக்கமுமாகித் தவிக்கின்ற சுகன்யாவின் கதையைக் கேட்கக் கேட்க கவலையாகத் தான் இருந்தது. இதுவரையிலும் ஒரு பன்னிரண்ட…
-
- 2 replies
- 1.3k views
-
-
பொம்மை - சிறுகதை பாலகுமாரன் - ஓவியங்கள்: செந்தில் மழை பெய்து நெகிழ்ந்திருக்கும் மண் சாலை, பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. ஓவியத்தில், புகைப்படத்தில் இன்னும் கூடுதல் அழகாக இருக்கும். ஆனால், நடப்பதற்குத் தோதாக இல்லை. ஸ்ரீனிவாசன், மிகுந்த கவனத்தோடு அந்தச் சாலையில் நடந்து கொண்டிருந்தான். அவனுக்கு அது பழக்கம் இல்லை. ``எழுத்தாளரே, இன்னும் கொஞ்சம் விரச நடக்கலாம். கேரளம், பத்து நிமிஷத்துக்கு ஒரு மழை பெய்யும். ஒரு மேகம் வந்து தழைஞ்சு, கரைஞ்சு சற்றுப் பொறுத்து இன்னொரு மேகம் தழையும். மழையாய்க் கரையும். எனவே, விரைந்து வாரும்” என்பதாக மலையாளத்தில் கூச்சலிட்டார். அவர் சந்திரமோகன். எழுத்தாள ரான ஸ்ரீனிவாசனின் வாசகன்.…
-
- 0 replies
- 4k views
-
-
மனைவியின் நண்பன்! இரவின் ஆழ்ந்த அமைதியில், 'டிங்'கென, ஒலித்த, 'வாட்ஸ் -அப்' சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள், நீரஜா. படுக்கையருகில் இருந்த மேஜையிலிருந்து மொபைலை எடுத்துப் பார்த்த போது, இரண்டு, 'மெசேஜ்கள்' பச்சை வட்டத்தில் ஒளிர்ந்தது. 'வாட்ஸ் - அப்' மீது விரலை அழுத்தினாள்; விக்ரம் தான் அனுப்பியிருந்தான். 'இவன் எதற்கு இந்த இரவு நேரத்தில், 'மெசேஜ்' அனுப்புகிறான்...' என்று நினைத்தபடி, 'மெசேஜை' பார்த்தாள். 'ஹாய்... துாங்கிட்டயா; பேசலாமா...' என்று அனுப்பியிருந்தான். துபாயிலிருந்து பேசுகிறான்; இங்கு இரவு, 10:30 மணி என்றால், அங்கு, இரவு, ௯:00 தான். 'ஓகே...' என்று பதில் அனுப்பினாள். உடனே, 'வாட்ஸ் - அப்' கால் வந்தது. ''ஹாய் நீரஜா... ஹவ் ஆர் யு?'' என்றான…
-
- 1 reply
- 6.1k views
-
-
விரக்தியே வாழ்வாய்போன விதுசன் விதுசனிற்கு இப்பொழுது வயது 14 .கடந்த வருடம் வன்னியில் தன் 9 வயது தம்பியுடன் துள்ளித்திரிந்த பள்ளிமாணவன்தான் இவனும். வன்னியில் போரின் இறுக்கம் அதிகரித்த காலம் தைமாதம் ஒரு நாள்பொழுதில் எங்கிருந்தோ வந்து வீழ்ந்த செல் குண்டொன்று அவனது தாயாரை பலியெடுத்துப் போனது. தாயின் இழப்பு அவனது வாழ்வில் வீழ்ந்த முதலாவது இடி. தாயாரை இழந்தாலும் தந்தையின் அரவணைப்பில் தாயின் சேகத்திலிருந்து மெல்ல மீண்டெழுந்து கொண்டு வந்தாலும் கொடிய யுத்தம் கூடவே துரத்தியது. வன்னியின் வழமான வாழ்ககைகைள் அத்தனையையும் ஒரு நொடிப்பொழுதில் இழந்துவிட்டு ஓடிய அத்தனை மக்களுடனும் விதுசனின் குடும்பமும் ஓடிக்கொண்டிருந்தது.விதுசனும் தந்தையின் கையை பிடித்தபடி மறுகையால் தம்பியை…
-
- 13 replies
- 2.7k views
-
-
மலையாளக் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மாவின் வீட்டிற்கு நானும் ஜெயனும் பலமுறை சென்றிருக்கிறோம். அவர் ஜெயனுக்கு குருவும் தந்தையுமானவர். கேரளத்தில் திருச்சூரில் இருந்தார். எங்களுக்கு திருமணமாகி நான்கைந்து வருடங்கள் கழித்து ஒருமுறை அங்கு சென்றபோது, அவர் வீட்டு முற்றத்தில், மாமரத்தடியில் அமர்ந்து அவருடன் தனியே பேசும் சந்தர்ப்பம் ஒன்று வாய்த்தது. அப்போது ஆற்றூர் என்னிடம் ஜெயன் பற்றி ஏதோ கேட்டார். நான் என் வழக்கப்படி உணர்ச்சி பரவசத்துடன் பதில் கூறினேன். அப்போது அவர் “மலையாளத்தில் ’பிரகாசம் பரத்துந்ந பெண்குட்டி’ என்றொரு சொற்பிரயோகம் உண்டு. நீயும் ஜெயமோகனும் உங்கள் திருமணம் நடந்த மறுநாள் இங்கு வந்து பத்து நாட்கள் போல தங்கினீர்கள். .அப்போது உனக்கு சிறிதும் மலையாளம் தெரியாது. எனக்குத் த…
-
- 5 replies
- 2.1k views
- 1 follower
-
-
ஒரு பைத்தியக்கார கோடீஸ்வரன் ஒரு முதலைப் பண்ணைக்கு பார்வையாளராக போயிருந்தான். திடீரென ஒரு முட்டாள்தனமான அறிவிப்பை வெளியிட்டான். அதாவது இந்த முதலைகள் நிறைந்த குளத்தை உயிருடன் நீந்தி கடப்பவருக்கு ரூபாய் பத்து லட்சம் தருவதாக கூறினான். அப்படி நீந்தும் போது முதலைகள் தாக்கி இறந்து போனால் அவரது மனைவிக்கோ அல்லது உறவினருக்கோ ஐந்து லட்சம் ரூபாய் தந்து விடுவதாகவும் கூறினான். எல்லோரும் திகைத்து போய் வெகுநேரம் அந்த குளத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று ஒரு தைரியசாலி குளத்தில் குதித்து நீந்த தொடங்கினான். முதலைகள் அவனை விரட்ட தொடங்கின. அவன் உயிரை கையில் பிடித்து கொண்டு வேகமாக நீந்தி அக்கரையை அடைந்து விட்டான். அந்த பணக்காரனும் பே…
-
- 2 replies
- 667 views
-