கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
ஜம்பது என்றால் அரை சதம் என கிரிக்கட் விளையாட்டில் சொல்லுவார்கள்.வாழ்க்கையில் 50 வயசை தாண்டினால் அரை கிழடுதான் ஆனால் மனம் ஒத்துக்கொள்ளாது.உண்மையிலயே அரைகிழடு என்று சொல்வதைவிட முக்கால் கிழடு என்றுதான் சொல்ல வேண்டும்.மனித வாழ்க்கையில் முழுசதம் போட்டவர்கள் மிக குறைவு.சராசரி மனித வாழ்க்கை 75 அல்லது 80 என்றுதான் சொல்லாம்.அதன் பின்பும் மனிதன் வாழ்ந்து முழுசதம் போட்டால் அது அவர்களுக்கு கிடைத்த போனஸ் அல்லது ஆறுதல் பரிசே ஆகும்.. நான் சிறுவனாக இருக்கும் பொழுது 40 வயதுக்கு மேற்பட்டோரை கண்டால் முதியவர்கள் என்ற எண்ணம் தான் தோ ன் றும்,அதே வயதை நான் அடைந்த பொழுது அன்று நான் நினைத்த வயதானோர்(கிழடுகள்)என்ற எண்ணம் வரவில்லை,அன்று இருந்த ஆசைகளும் எண்ணன்களும்தான் மனதில் வருகின்றது.உடலி…
-
- 40 replies
- 4.6k views
-
-
ஒரே விகிதம்! "உங்களுக்கு யார் யாரிடம் என்னென்ன பேசணுமென்று தெரிவதே இல்லை!'' என்று குற்றம் சாட்டினாள் சுபத்ரா - ஓய்வு பெற்ற பேராசிரியை. அவள் பெயருடன் இணைந்து வரும் பட்டங்கள் கொஞ்சம் நீளமானவை. (இடத்தை அடைக்கும்) சொன்னதோடு இல்லாமல் அசோக்கை உறுத்துப் பார்த்தாள். "எல்லாம் உன்னால தான்' என்று அவள் பார்வை சொல்லியது. அவள் கணவர் பாலகோபால் எங்கோ யோசித்தபடியிருந்தார். "ஏன்தான் பேச்சை ஆரம்பித்தோமோ?' என்று அவருக்குத் தோன்றிற்று. இருந்தாலும் அசோக்கின் நிலைமை உறுத்திக் கொண்டுதானிருந்தது. ஏதோ எம். ஏ., படிக்கிறேனென்று தொடர்ந்து பயிற்சிக்குப் போனான். ஒரு "குரூப்' தேர்வு பெறுவதற்குள் போது…
-
- 0 replies
- 683 views
-
-
அந்நியன் படத்தில் விக்ரம் விவேக் சதா நடிகர்ள் நடித்து ஆடி பாடிய ஹாலந்து நாட்டு அந்த அழகிய பரந்த பூந்தோட்டங்களில் நடுவில் இருந்த கைவிடப்பட்ட பழைய இராணுவ முகாம் ஒன்று இப்பொழுது அகதி முகாமாக்க பட்டிருக்கிறது. அந்த முகாமில் ஏழாம் நம்பர் றூமில் கீழ் படுக்கையில் நான் தூங்க விரும்பியும் தூங்கமால் தவித்து கொண்டிருந்தேன்,அவன் அடிச்சு பிடிச்சு ஓடிவந்து மூச்சிரைத்து சொன்னான் .வாடா உனக்கு ஒன்று காட்டிறன் என்று. இவன் மோகன் தோட்டம் துரவு சந்து ,பொந்து பீச்சு கடல் என்று வேடிக்கை பார்ப்பதிலை விண்ணன்.அத்துடன் சிக்கலை மற்றவர்களுக்கு தெரிந்தோ தெரியாமால் உருவாக்கி தருபவன் .என்பதால் காது கொடுக்காத மாதிரி மற்ற பக்கம் மாறி நித்திரை மாதிரி கிடந்தேன். அந்த அகதி முகாம் ஹாலந்து நாட்ட…
-
- 13 replies
- 6.6k views
-
-
ஒளி வளர் விளக்கு - சிறுகதை காயத்ரி சித்தார்த் - ஓவியங்கள்: ஸ்யாம் அனு பேசினாள். கல்லூரி வாட்ஸ் அப் குரூப்பிலிருந்து எப்படியோ என் நம்பரைப் பிடித்திருக்கிறாள். நம்பவே முடியவில்லை. நாங்கள் இளங்கலை முடித்து 21 ஆண்டு ஆகிறது. இடையில் இரண்டு முறைதான் பேசினோம். நான்தான் அவள் வீட்டு லேண்ட்லைன் நம்பரைத் தொலைத்துவிட்டேன். நாங்கள் வீடு மாறும்போதெல்லாம் எங்கள் போன் நம்பரும் மாறிக் கொண்டிருந்தது. என்னுடைய மொபைல் நம்பரையும் நான் ஆறு முறை மாற்றிவிட்டேன். கடைசியாக மாற்றியது ஏர்செல் பிரச்னையில். நான் வாட்ஸ் அப் குரூப்களைத் திறந்து பார்ப்பதேயில்லை. பெரும்பாலும் ஃபார்வேர்டு மெசேஜுகள். குட்மார்னிங், குட்நைட், ஹீலர்கள், போலி இ…
-
- 0 replies
- 2.1k views
-
-
ஒவ்வொன்றாய்த் திருடுகிறாய் சிறுகதை: ஜி.ஆர்.சுரேந்தர்நாத், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு பின்வரும் குறிப்புகளில் இருந்து, நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்... எஃப்.எம் தொகுப்பாளினிக்கு மதியம் 12 மணி வெயிலில் போன் போட்டு, 'குளிருதே... குளிருதே... உடம்பெல்லாம் உதறுதே...’ என்ற பாடலை ஒலிபரப்பச் சொல்லி, என் நண்பன் அரவிந்துக்கு டெடிகேட் செய்வேன் (அப்போதுதான் அரவிந்த் மறுநாள், 'நெஞ்செல்லாம் சிதறுதே... நீ வேணும்னு கதறுதே...’ என்ற பாடலை எனக்கு டெடிகேட் செய்வான்). நீங்கள் நினைப்பது சரிதான். நான் படித்து முடித்துவிட்டு வீட்டில் சும்மா இருக்கிறேன். ஓர் ஆண், வேலை இல்லாமல் இருப்பது …
-
- 4 replies
- 4.3k views
-
-
ஓடாதே ரிஷபன் ‘வாச்சா மடத்துக்கு தென்கோடில வீடு. அங்கே வந்து சுந்தர்னு கேட்டா யாரும் சொல்வாங்க. மறக்காம வந்துரு’ என் இலையில் இன்னொரு மால்பூவாவை வைத்து விட்டு இந்த வார்த்தைகளைக் கிசுகிசுத்து விட்டு மோர் வாளியுடன் ஓடினான். ஹோசூரில் ஒரு திருமணம். முதல் தடவை நான் ஹோசூர் மண்ணை மிதிக்கிறேன். முகநூலில் நட்பாகி இன்று தன்னுடைய பெண்ணுக்குத் திருமணம் என்று அழைக்கும் அளவுக்கு நெருக்கம்.. ஆறு மணிக்கு நிச்சயதார்த்தம்.. இப்போதே மணி ஐந்தரை. பஸ் நிலையம் அருகில் ரூம் போட்டிருந்தார். நாலாவது தளத்தில் ரூம். தகவல் சொன்னதும் நண்பர் நேராகவே வந்து விட்டார். “காபி குடிச்சீங்களா” “ஆச்சு. ரூம் சர்வீஸ். இப்போதான் காலி ப்ளாஸ்க்கும் பணமும் வாங்கிட்டு போறார்” “ப்ச்.. பண…
-
- 0 replies
- 708 views
-
-
சின்னாச்சிக் கிழவிதான் விசயத்தைப் போட்டுடைத்தது... "எடியே பொன்னம்மா தெரியுமே விசயம்?". சின்னான் எப்பவும் இப்படித்தான் தொடங்கும். அநேகமாக உப்புச் சப்பில்லாத விசயங்கள்தான் வந்து விழும். சிலவேளை முக்கிய புலனாய்வுத் தகவல்களும் இருக்கும். பொன்னம்மாக் கிழவி கொஞ்சம் அழுத்தக்காரி; விசயத்தைத் துழாவினால் கௌவரவக் குறைவு என்று ஒரு அழுத்தமான கொள்கை ஒன்றை வைத்திருக்கிறா. விசயம் தன்பாட்டில் வந்து விழும் என்று நன்றாகத் தெரியும். எனவே 'நீ சொல்லப்போறது முக்கியம் இல்லை' என்றது மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு குட்டப் பெட்டியைத் திறந்து வெத்திலை, பாக்கைத் தயார் பண்ணினா. காதுகள் மட்டும் அடுத்த தகவலுக்காகக் காத்திருந்தன. "எனக்குக் கொஞ்சம் கிறுதி'யாக இருக்கு" என்று சொல்லிக்கொண்டு வெத்தில…
-
- 0 replies
- 721 views
-
-
ஓடிப்போன ஒட்டகம் இந்தப்பனிக் குளிருக்கு எவன் வீட்டிற்குள்ளையே அடைபட்டுக்கிடப்பான். என்ரை நாட்டிலைதான் நான் சுதந்திரமாகச் சுத்தலாம் என்று ஒரு துண்டுக் காகிதத்திலை எழுதி வைத்திட்டுச் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டைவிட்டுக் கிளம்பி டுபாய்க்குக் கப்பல் ஏறின ஒட்டகம், கோடைகாலம் தொடங்க...... போனதுபோலவே சொல்லாமல் கொள்ளாமலுக்கு இரண்டு நாளுக்குமுதல் வந்து தன்ரை அறையுக்கை படுத்துக்கிடந்தது. சரி என்னதான் நடக்குது பார்ப்பம் என்று பேசாமலுக்கு இருந்தால் அது பாட்டுக்குத் திரும்பவும் தன்ரை குணத்தைக் காட்டத் தொடங்கிவிட்டுது. அதுதான் அந்தக் கதையளை உங்களுக்குச் சொல்லுவமென்று வந்து உட்கார்ந்தால் வைத்தியரிடம் மருந்தெடுக்கப்போறதுக்கு நேரமாச்சுது. கோபியாதையுங்கோ போட்டுவந…
-
- 9 replies
- 1.7k views
-
-
புகைகளை கக்கி கொண்டு உறுமியபடி இருந்தன அந்த உந்துருளிகள். ஓட்டிகள் அனைவரின் முகத்திலும் வெல்லவேண்டும் என்ற வெறி அப்பட்டமாக தெரிந்தன. விசிலை வாயிலே வைத்தபடி அரவிந்தன் வாத்தி எந்த நேரமும் ஊதுவதற்கான ஆயத்த நிலையில் இருந்தார். இயக்கச்சி சந்தியில் ஆரம்பம். முடிவு கோடு பரந்தன் உப்பு உற்பத்தி நிலையம். எப்படியும் ரகுவை வென்றிட வேண்டும் இது மட்டும் தான் குகனின் மனதில் ஒலித்த வார்த்தைகள். எல்லாரிடமும் ஒரே மாதிரியான உந்துருளிகள். அன்றைய வன்னி இளைஞர்களின் கனவு உந்துருளிகள். குகன் மறுபடியும் வேக அழுத்தி, தடை அழுத்திகளை சரிபார்த்து கொண்டான். 1 ... 2 ... 3 ... ஊ ஊ ..ஊ .. வாத்தியின் விசில் சத்தம் கேட்டது தான் தாமதம்..புகை மட்டும் சூழ்ந்த அந்த …
-
- 9 replies
- 1.5k views
-
-
ஓணான் கோட்டை தான் இருப்பது எந்த இடம்? என்று சசிக்குப் புரியவில்லை. உள்ளே ஒரே இருட்டு. கொஞ்ச நேரத்தில் அவனைச் சுற்றி ஜோடி ஜோடியாய் விளக்குகள் முளைத்தன. சுற்றிலும் பார்த்த அவன் பயத்தில் கத்தியே விட்டான். அவனைச் சுற்றி ஓணான்களின் கூட்டம்! எல்லாம் கண்களை உருட்டிச் சுழற்றி அவனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. பார்த்துவிட்டுத் தலையை ஆட்டிக் கொண்டு மெல்லச் சிரித்தன. சசி எழுந்து ஓடிவிடலாம் என்று நினைத்தான். ஆனால் அவன் ஓணான்களை விடச் சின்னதாக, குட்டியூண்டாக மாறிவிட்டானே! அவனுக்கு அழுகை அழுகையாக வந்தது. எப்படி இங்கே வந்தான்? பள்ளிக்கூட விடுமுறை நாள்களில் ரமேசும், அவனும் சேர்ந்து ஓணான் வேட்டைக்குப் போவார்கள். ஊருக்கு வெளியே உள்ள கருவேலஞ்செடிகளில் உட்கார்ந்து …
-
- 19 replies
- 6.9k views
-
-
ஓனர் - சிறுகதை சிறுகதை: கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி, ஓவியங்கள்: ஸ்யாம் ‘`விகடனுக்கு ஒரு கதை அனுப்பணும்’’ ‘`சூப்பர்டா… எப்பக்குள்ள அனுப்பச் சொல்லிக் கேட்ருக்காங்க?’’ இன்றுவரை அவன் அந்தக் கேள்வியை சீரியசாகக் கேட்டானா இல்லை கிண்டலுக்காகக் கேட்டானா என்று தெரியவில்லை. செய்யும் வேலையில் அவ்வப்போது சிற்சில சாதனைகள் செய்துவந்தாலும், அதற்கான பாராட்டுகள், அங்கீகாரங்கள், கைத்தட்டல்கள் கிடைக்கப்பெற்றாலும், இந்த ஆசை மட்டும் தீரவே இல்லை. ஆனந்த விகடனுக்கு ஒரு கதை அனுப்பணும். இதில் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். கதை விகடனில் பிரசுரமாக வேண்டும் என்பதைப் பற்றி அதிகம் சிந்தித்ததில்லை. முதலில் விகடனுக்கு அனுப்ப ஒரு கதை எழுத வேண்டும். இதுதான் மனதில…
-
- 1 reply
- 2.4k views
-
-
வேலைப்பளு நிறைந்த 13 வாரங்களுக்குப் பிறகு இரண்டு நாட்கள் விடுமுறையில் ஓய்வெடுப்பதென முடிவு செய்தேன். விடுமுறையின் முதல்நாள் காலை சிற்றுண்டி முடித்ததும் அப்பாடாவென சோபாவில் வந்து உட்கார்ந்தேன். செய்தித்தாள்கள், மெலிதான் மின்விசிறி ஒலி. அமைதி நிலவும் பொழுது. ஓ! எத்தனை நாட்கள் ஆகின்றன...! என் ஐந்து வயது மகன் மெல்ல ஒரு திருடனைப் போல நுழைந்தான். “அப்பா” “என்னடா” “பாட்டி சொல்வது உண்மையா.... உன்னை இன்று தொந்தரவு செய்யக் கூடாதாமே?” “அ.. ஆமாம்.” நான் முடிவாகச் சொன்னேன். “இன்றைக்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க வேண்டும்” “சரி. ரெஸ்ட் எடுங்கள்..” அவன் மெலிதாக “கங்கெரு மட்டும் எங்கே வாழும் என்பதை எனக்குச் சொல்லிவிட்டு உங்கள் இஷ்டம் போல ஓய்வெடுங்கள்” “கங்கெரு அல்…
-
- 0 replies
- 851 views
-
-
அந்தச் சின்னஞ் சிறு கிராமம் ........காலை யில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் ..... பட்டணத்துக்கு போக பஸ் வண்டிக்கு விரைவோர்....காலை,ஆலயமணியின் பக்தி மிகு எழுப்புதல்கள் .. பள்ளிச் சிறார்கள் ..என்று வீதி ...போக்குவரத்தால் நிறைந்து இருக்கும்.. கலைவாணி அந்த ஊரின் பாட்டு வாத்தியார் பொண்ணு ...கல்லூரியின் இறுதி யாண்டு படித்துக் கொண்டிருந்தாள் ......பெணகள் கல்லூரி அது .எந்நேரமும் சிரிப்பொலிக்கு பஞ்சமில்லை .....பெண்கள் என்றாலே மகிழ்ச்சி தானகவே வரும். ஆண்டு இறுதிகளில் ...வகுப்பேற்றம் நிகழும்..பன்னிரண்டாம்வகுப்பு, முடிவில் ( பிளஸ் டூ போன்று ) . பல்கலை யின் நுழைவு தேர்வு இருக்கும். பாட்டுவாத்தி யாரின் மகள் என்பதாலோ என்னவோ கலைவாணிக்கு நன்றாக பாட்டு வந்தது …
-
- 9 replies
- 5.8k views
-
-
ஓரிரவு ஞானசேகர் மணி ஏழாகிவிட்டிருந்தது. எனது டீம் லீட் சியோக் வீ அன்று மதியம் என்னிடம் ஒரு வேலையை அளித்திருந்தாள். என்னவென்று கண்டறிய முடியாத ஒரு தவறு காரணமாக அதன் மொத்த செயல்பாட்டையே நான் வேறு மாதிரி மாற்றி எழுத வேண்டும். ஏற்கனவே அது ஒருவனிடம் கொடுத்து அவனால் அந்தத் தவறைக் கண்டறியமுடியாமல் பின் அவளும் முயற்சி செய்து பார்த்துவிட்டு இறுதியில் என்னிடம் மொத்தத்தையும் மாற்றி எழுதக் கேட்டிருந்தாள். மூன்று நாட்கள் அவகாசம் கேட்டிருந்தேன். ஆனால் அதனை சோதிக்க ஆரம்பித்த இரண்டு மணி நேரத்திலேயே என்ன தவறு என்பதைக் கண்டுபிடித்துவிட்டேன். ஒரு சிறிய கவனக்குறைவான ‘கோட்’ பிழை. புதிய கண்களுக்கு எளிதில் அகப்பட்டு விடும் பிழைதான். எப்படியோ தவ…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஓரு கப் டீ காலையை பின்னுக்குத்தள்ளி மதியத்திற்கு கடிகாரம் நகர்ந்திருந்தது. பெரிய முள்ளும் சின்ன முள்ளும் கூடிக் கலைந்திருந்தன. அந்த பிரம்மாண்ட மாலில் கூட்டம் ட்யூப்பில் அடைக்கப்பட்ட பேஸ்ட்டைப் போல அடர்த்தியாய் இருந்தது. ஏற்றிவிடுவதும் இறக்கி விடுவதுமாய் எஸ்கலேட்டர் ஓய்வில்லாமல் மடங்கிக் கொண்டிருந்தது. பத்தடிக்கு ஒரு ஜோடி. கமிட் ஆனவர்களும் ஆகப்போகிறவர்களும் கண்களில் கனவு விதைத்து உதடுகளில் அறுவடை செய்து கொண்டிருந்தார்கள். மாலில் நுழைந்த அவன் ஜீன்ஸ் அணிந்திருந்தான். பொருந்தா ஆஃப் ஸ்லாக்கை தாறுமாறாக இன் செய்திருந்தான். ஸாக்ஸ் தவிர்த்து ஷூ அணிந்திருந்தான். செக்யூரிட்டிகளுக்கு நல்ல பிள்ளையாய் கைதூக்கி, மெட்டல் டிடெக்டர்களில் அமைதி காத்து வேகமாய் லானில் ந…
-
- 1 reply
- 992 views
-
-
நான் 2005 சமாதான காலத்தில ஊருக்குப் போயிருந்தேன்...பயணம் முடிஞ்சு திரும்பி கொழும்புக்கு வரும் போது எனக்கு ரெயினில் போக வேண்டும் என ஆசையாயிருக்குது ரெயினில் போவோம் என்று அம்மாட்ட சொன்னேன்...அம்மா சொன்னா ரெயினில் போனால் நிறைய நேரம் செல்லும்,தனக்கு காலும் எலாது வான் புக் பண்ணி கொழும்புக்கு போவோம் என சொன்னார்...நான் இல்லை என்று அடம் பிடிச்சு ரெயினில் புக் பண்ணியாச்சு. நான் பயணக்கட்டுரை எழுதலேல்ல...அம்மா சொன்ன மாதிரி ரெயின் சரியான நேரம் எடுத்தது அத்தோடு நின்று,நின்று மெதுவாய்ப் போச்சுது...அம்மாவும்,தம்பியும் என்னைப் பேசி,பேசி வந்தார்கள் நான் காதில போட்டுக் கொள்ளேல்ல வடிவாய் எஞ்ஜோய் பண்ணிக் கொண்டு வாறன் ...சொல்ல மறந்து போனேன் நாங்கள் பயணம் செய்த பெட்டி பூரா முஸ்லீம் ஆட்கள…
-
- 36 replies
- 3.2k views
-
-
ஓர் ஆனந்த பைரவியும் சில அபஸ்வரங்களும் கதையாசிரியர்: ராஜேஷ்குமார் ‘தண்ணீர்ப்பந்தல் பாளையம் ஊராட்சி ஒன்றியம் உங்களை மகிழ்வுடன் வரவேற்கின்றது’ என்கிற பெயர்ப்பலகை கிராமத்து எல்லையிலேயே வரவேற்க, தம்முடைய காரின் வேகத்தைக் குறைத்தான் ரகுராம். காரின் பின் சீட்டில் உட்கார்ந்திருந்த மூன்று நண்பர்களைத் திரும்பிப் பார்த்தான். “கிராமத்துக்குள்ளே நுழையப் போறோம். அதோ! அந்த வேப்பமரத்துக்குக் கீழே ஒரு பெட்டிக்கடை தெரியுது. அங்கே விசாரிச்சா ராமசாமி வாத்தியார் வீடு எங்கே இருக்குன்னு சொல்லுவாங்க… கேட்டுடலாமா?” “ம்… கேட்டுட வேண்டியதுதான்!” உச்சிவெயில்மண்டையில் உறைக்கிற அந்த மத்தியான நேரத்தில் மண்ரோட்டுப் புழ…
-
- 1 reply
- 1k views
-
-
ஓத்துழைக்க மறுக்கும் கணணியுடன் மல்லுக்கட்டியபடியே எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவிற்கு ரெலிக்கொம்மை திட்டிக்கொண்டிருந்தேன் இணையத்தொடர்புக்கான வசதிகளில் அவர்கள் குளறுபடிகளுக்கு அவர்கள் இடம் கொடுத்திருந்தனர் அதுவும் வேலையை முடித்து வீடுதிரும்பும் நேரத்தில்! நேரம் அபாயக்கட்டத்தினை தாண்டியிருந்தாலும் அப்படியே விட்டு விட்டுப்போகமுடியாது. அலுவலகத்தில் இரவுப்பணியாளர்கள் போட்டுத்தாக்கி விடுவார்கள்! dOWNLOAD1 dOWNLOAD2
-
- 2 replies
- 1.9k views
-
-
சிறுகதை - இளங்கவி தந்தையை 5 வயதிலேயே இழந்த குடும்பச்சுமை, திருமணமாகத மூன்று சகோதரிகள், ஊரெல்லாம் கடன்பட்டு வளர்த்தெடுத்த அம்மா இப்படிச் சொல்லொண்ணாத் துயரங்களை புலம்பெயர்தேசத்திலே வந்த புதிதில் அனுபவித்துக்கொண்டிருந்தான் கணேஸ். வேலையும் பல மாதங்களாய்க் கிடைக்காமல் இருந்த கஸ்ரத்திலிருந்தவனுக்கு ஓர் வேலை கிடைத்தது ஏதோ கடவுள் செயல் போல இருந்தது... எப்ப முதல் சம்பளம் வரும், கொஞ்சமென்றாலும் பிரச்சனைகளைத் தீர்க்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு சம்பளமும் வர அதை எவரெவருக்கு எப்படிப் பிரிக்கலாம் என்று கணக்குப் பார்த்து முடிந்து தூக்கத்துக்குப் போனவனுக்கு அதிகாலை வேளை ஓர் தொலைபேசி அழைப்பு. அதிகாலை தொலைபேசியென்றாலே அது இலங்கையில் இருந்துதான் என்று நினைத்து பதறியட…
-
- 6 replies
- 1.2k views
-
-
ஓர் ஊரின் கதை ஊருல தெருக்கள் இருக்கும். ஆனா, ஒரு தெருவே ஊராய் இருக்குமா? இருக்கே! நம்பிக்குறிச்சிங்கிற ஊர், அப்படி ஒரு தெருதானே! ஒரு காலத்துல ஓகோன்னு இருந்த ஊர். இப்ப, வெற்று அடையாளங்களோட, கட்டட மண்ணும் குட்டிச் சுவருமாக் கிடக்கு. சோலைவனம் போலப் பூத்துச் செழிச்சிருந்த ஊராக்கும் இது! இப்ப கரடு தட்டிப் போன காட்டுப் பகுதி மாதிரில்ல காணப்படுது. ஓ! எப்பேர்ப்பட்ட மனுசங்க நடமாடின மண் இது! இங்க மொதல் வீடே தபால் பண்ணைத் தாத்தா வீடுதான். கறுப்பா இருந்தாலும் கம்பீரமா, லெட்சணமா இருப்பாங்க. வெள்ளை மீசையைக் கெத்தா முறுக்கி விட்ருப்பாக. அவுக ஊர்வழி போறப்ப தூள் க…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஓர் ஊரில் ஒரு கிழவி.. அவளது ஒரு பேத்திக்கு லண்டனில் அவளால் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாத பெயரைக் கொண்ட ஒரு ஊரின் மண்டபத்தில் கலியாணம் நடந்த 6ம் நாள். இன்னொரு பேத்தி சாமத்தியப்படுவதற்கு சரியாக 25 நாட்கள் முன்பாக அம்மம்மா செத்துப்போனா. அவ சாவுக்கு நான் தான் காரணம் என்றாகிப்போனேன். என்னை கொலைகாரனாக்கி விட்டு அம்மம்மா செத்துப்போனா. சாகிற வயசுதான் சுமார் 60தைக் கடந்து விட்டிருந்தா. தீராத நோயாளியைப்போல மாத்திரைகளும் கையுமாய் வாழ்ந்து கொண்டிருந்தவள் தான் அவ. ஆனாலும் அவ அதிஸ்டக்காரி. மறுபடியும் தான் வாழ்ந்த ஊரிலேயே செத்துப்போகிற வாய்ப்பு அவ வயுசுக்காரிகளிலேயே அவவுக்குத்தான் கிடைத்திருக்கிறது. அந்த ஊர் அவவுக்கு மிக நெருக்கமானது. கணவன் பக்கத்து வீட்டுக்காரியோடு ஓடிப்போ…
-
- 1 reply
- 1.3k views
-
-
நான் அப்போது அகதியாய் இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்தில கொக்குவிலில இருந்தன். அது போர் உக்கிரமாக நடைபெற்றுக்கொண்டு இருந்த காலம். அன்று ஒரு நாள் பிரவுன் வீதியால யாழ்நகர் நோக்கி துவிச்சக்கரவண்டியில போய்க்கொண்டு இருக்கேக்க எதிராக இன்னுமோர் துவிச்சக்கரவண்டியில சென்ற ஒருத்தன் திடீரெண்டு என்ர பெயரைச் சொல்லி கூப்பிட்டான். நானும் ஆச்சரியப்பட்டு யார் என்று திரும்பிப் பார்த்தன். அது எனது பழைய நண்பன். முந்தி பாடசாலைக்கு நாங்கள் இரண்டுபேரும் ஒன்றாய் போவம். வகுப்பிலையும் பக்கத்தில பக்கத்திலதான் இருக்கிறது. ஆரம்பத்தில அவன் எனக்கு உயிர் நண்பன் மாதிரி. ஆனால்.. நாங்கள் நாலாம் வகுப்பு படிக்கேக்க இரண்டுபேருக்கும் ஒரு சண்டை. அவன் எனக்கு அடிச்சுப்போட்டான். அதுக்கு பிறகு நாங்கள் ஆளோட ஆள் இரண்ட…
-
- 26 replies
- 7.5k views
-
-
மறதி என்பது பெரிய வரம் என்று சிலர் சொல்வதுண்டு. அதிலும் குறிப்பாக தேவையில்லாத குப்பைகளை மனச்சிறையில் பூட்டி வைத்துக்கொண்டு கவலைப்படுவதை விட மறப்பது மேல். வெகு சிலருக்கு மட்டுமே இந்த மறதி என்பது ஒரு வரமாக அமைகிறது. எல்லோருக்கும் இந்த வரம் கிடைப்பதில்லை. மறக்க வேண்டிய விஷயங்களை மனதில் போட்டு குழப்புவதை விட மறந்து விடுவது மேல் தானே. ஆனால் அது அத்தனை சுலபம் அல்ல. தேவையான விஷயங்கள் மறந்து விடுவதும் தேவையற்ற விஷயங்கள் மனதில் பசுமரத்தாணி போல பதிந்து விடுவதும் இயல்பு தானே. படம்: இணையத்திலிருந்து…. நண்பரின் தாயார்: நாங்கள் எப்போது நண்பரின் வீட்டிற்குச் சென்றாலும் அவரது தாயார் எங்களையும் அவரது மகன் போலவே பாவித்து, "சாப்பிட்டு போடா கோந்தே" என்று ச…
-
- 3 replies
- 896 views
- 1 follower
-
-
ஓலைக் கிளி எஸ். ராமகிருஷ்ணன்ஓவியங்கள் : ஸ்யாம் அபார்ட்மென்ட்டின் காவலாளி வந்து வீட்டின் காலிங் பெல்லை அடித்தபோது காலை மணி எட்டரை இருக்கும். பேப்பர் படித்துக்கொண்டு இருந்த நான் எழுந்து கதவைத் திறந்தபோது, சற்று எரிச்சலான குரலில் வாட்ச்மேன் சொன்னான், ''டாக்டர் சார், உங்களைப் பாக்க ஒரு கிழவன் ஒரு பொண்ணைக் கூட்டிக்கிட்டு வந்து கேட் முன்னாடி உட்கார்ந்து இருக்கான். விடிகாலை நாலு மணிக்கு எல்லாம் அந்த ஆளு வந்து உங்க பேரைச் சொல்லிக் கேட்டான். மூணாவது ஃப்ளோர்ல வீடுன்னு சொன்னேன். அய்யா தூங்கி எந்திரிச்சி குளிச்சி, சாப்பிட்டு ரெடியாகட்டும். அதுவரைக்கும் இப்படி உட்கார்ந்துக்கிடுறேன்னு சொல்லி பைக் ஸ்டாண்ட் பக்கமா உட்கார்ந்துக்கிட்டான். பேரைக…
-
- 0 replies
- 3.5k views
-
-
அவளைநான் பார்க்கவில்லை.எனக்கு தெரியவும் தெரியாது.நிறம் அதுவும் தெரியாது.ஆனாலும் அவளுக்கு நான் வைத்த பெயர் ஓவியா.பதினாறு வருடங்கள் பின் நோக்கிபார்கிறேன். ------------------------------------------------------------------------------------------------------ 1997.எதோ ஒரு மாதத்தின் எதோ ஒருநாள்.விடிகாலை பொழுது.காந்தன் அவளின் வருகை கருதி அழகாய் அமைத்திருந்த தன் வீட்டில் அவளின் கனவுடன்.தொலைபேசி-காதில் வைத்தான். அவளேதான்.அத்தான் நான் உக்ரைன் நாட்டிற்கு வந்திட்டேன்.எனக்கு பிரச்சனை இல்லை.நீங்கள்என்ன செய்கிறிங்கள்.தேன்வந்து பாய்ந்தது காந்தனின் காதிலே .காந்தனுக்கு சிறு வயதில் இருந்தே பேசிவைக்க பட்ட பெண் அவள்.மச்சாள்.சுவிஸ் வந்தநாள் முதல் அவளின் நினைவில்…
-
- 25 replies
- 2.4k views
-