கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
சுதந்திரா என்ற பெயரை எங்கேயும் வாசிச்ச ஞாபகம் உங்களுக்கு வரலாம். அந்த சுதந்திரா என்ற பெயரில் எழுத்தில் நான்தான் உலாவியிருக்கிறேன். இப்போது சுதந்திரா என்ற பெயரில் எழுவதும் இல்லை. 2001 ஒரு முகமறியா வீரனின் ஞாபகமாக எழுதிய இக்கதை ஒரு பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த நிகழ்வை நினைவு கொள்ளு முகமாக இணைக்கிறேன். சுதந்திரா என்ற பெயரை முதலில் தாயகத்தில் வெளியாகிய ஈழநாதம் பத்திரிகையில் எழுதிய காலங்களில் பாவித்த புனைபெயர். 2002 தாயகப்பயண அனுபவப்பதிவினை எழுதிய லெப்.கேணல் அருணாண்ணைக்கு அனுப்பியிருந்தேன். அருணாண்ணா வாசிக்க அனுப்பிய கட்டுரை ஆனால் பத்திரிகையில் வெளிவரப்போவதாக ஈழநாதத்தில் விளம்பரம் வந்த போது கிடைத்த மகிழ்ச்சி இன்றைக்கும் மறக்க முடியாத ஞாபகம். அப்போது …
-
- 5 replies
- 1k views
-
-
நான் யாழில் புலம்பெயர் தேசத்தில் நடந் உண்மைச்சம்பவங்கள் பலவற்றை முன்னர் கதையாக்கியிருந்தேன் அவற்றின் பதிவுகள் வைத்திருக்கவில்லை இந்தக் கதையும் நான் யாழில் போட்டிருந்ததுதான் இன்று கூகிழில் மேய்ந்த பொழுது இந்தக் கதை கிடைத்தது இப்போ பல புதியவர்கள் யாழில் இருப்பதால் திரும்ப இதை இணைக்கிறேன் நன்றி புதன்கிழமை, 31 ஆவணி 2005 யாழ் பட்டால்த்தான் கடிதம் எழுதிக்கொண்டிருந்த சிவா கதவை யாரோ திறக்கும் சத்தம் கேட்டு எட்டிப்பார்த்தான். "எட சண்முகநாதன், நான் ஆரோ கள்ளர் கள்ளத்திறப்பு போட்டு கதவைத் திறக்கிறாங்கள் எண்டு நினைச்சன். எங்கையடா ஒருகிழமை லீவுஎண்டனி... அதுக்கு பிறகு நாலு நாளா ஆளைக் காணேல்லை. உன்ரை கான்ட் போனுக்கும் அடிச்சுப்பாத்தன். வேலை செய்யேல்லை. என்னடா உன்ரை கோல…
-
- 8 replies
- 2.1k views
-
-
என்னாங்க... "சொன்னது எல்லாம் ஞாபகமிருக்கா...?? நான் ரயிலேறின பிறகு எதையும் மறந்துட மாட்டீங்களே"...!! "மாட்டேன்"... "எதச் சொன்னாலும் பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டுங்க"... "கவலை படாம போயிட்டு வாம்மா, நாலே நாளுதானே நான் பாத்துக்கிறேன்"... "உங்கள நம்ப முடியாது, எதுக்கும் இன்னொரு தடவ பாயிண்ட் பாயிண்ட்டா சொல்லிடுறேன்".... பாயிண்ட் நம்பர் 1... "வீட்ல வச்சது வச்சபடி இருக்கணும். எதாவது எடம் மாறியிருந்ததுன்னா எக்கச்சக்கமா கடுப்பாயிடுவேன்". பாயிண்ட் நம்பர் 2... "சமையல் கட்ட நீட்டா தொடச்சி வச்சிருக்கேன், காபி, டீ போட்டு சாப்ட்டா... டம்ளரையும், பால் காய்ச்சுன பாத்திரத்தையும் காய விடாமா, உடனே கழுவி கவுத்தி வச்சிடணும்"... "உத்தரவு"... பாயிண்ட…
-
- 1 reply
- 774 views
-
-
ஒரு நிமிடக் கதை - பயம் அமரனுக்கு தன் மகன் சிவா, திருமணத்துக்கு சம்மதிக்காமல் இருப்பது பெரும் கவலையாக இருந்தது. அமரன் ஒரு இதய நோயாளி. நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறார். தான் நன்றாக இருக்கும் போதே தன் மகனுக்கு திருமணம் செய்துபார்க்க விரும்பினார். அமரனின் நண்பர்கள் மூலம் பல நல்ல இடத்து சம்மந்தங்கள் கூடி வந்தது. ஆனால் சிவா எதையும் ஏறெடுத்துக் கூட பார்க்கவில்லை. எல்லாவற்றையும் உதாசினப்படுத்தினான். இது அமரனுக்கு மேலும் மன அழுத்தத்தை கொடுத்தது. தான் படும் வேதனையை மகன் புரிந்துக் கொள்ளவில்லையே என்று அமரன் ஒவ்வொரு நாளும் உள்ளுக்குள் அழுது கொண்டிருந்தார். இதை அறியாத சிவா, தன்…
-
- 2 replies
- 842 views
-
-
சிறுகுறிப்பு: அதென்ன இதுக்குமட்டும் தலைப்பில ஒட்டகம் இல்லாமலுக்கு நம்ம தலையின்ரை பெயரை இப்படியா இருட்டடிப்புச் செய்கிறது என்று ஒட்டகத்தார் ரசிகர் வட்டத்தில பலரும் அன்பாய் கடிந்துகொண்டதில் பெயரைமட்டும் மாற்றியிருக்கிறன் மற்றும்படி மத்தியஸ்தம் நடந்தது நடந்தபடி அப்படியேதான் இருக்கு. ... படிக்காதவை தொடர்ந்து படியுங்கோ. படிச்சவை கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கோ. ஒட்டகத்தைத் தேடிய காவல்துறை............உடன் ஒரு சில நாட்களில் சந்திக்கிறன். நாசமாப்போன நாணல் கயிறுவிடுறான் என்று திட்டுறது காதில விழுகிறது. இனியும் கதைச்சுக்கொண்டு நின்றால் வம்பாய்ப் போய்விடும். பிறகு சந்திப்பம்.............. பயத்தில் ஓட்டமுடன் நாணல் எனக்கும் ஒட்டகத்திற்கும் இடையில்.. …
-
- 2 replies
- 1.2k views
-
-
பச்சைக் கனவு - லா.ச.ராமாமிர்தம் முதுகு பச்சையாய்க் கன்றிப் போகக் காயும் வெய்யிலில் முற்றத்தில் உட்கார்ந்துகொண்டு நேற்றிரவு கண்ட கனவை மறுபடியும் நினைவில் எழுப்ப முயன்றான். கனவற்ற தூக்கமே என்றுமில்லை. எனினும் விடிந்ததும் அக்கனவுகள் மறந்துவிடும். ஆயினும் நேற்றிரவு கண்ட கனவு அப்படியல்ல. பச்சைக் கனவு. உடல் மேல் உரோமம் அடர்ந்தது போன்று, பசும் புற்றரை போர்த்து நின்ற நான்கு மண் குன்றுகள். அவை நடுவில் தாமரை இலைகளும் கொடிகளும் நெருங்கிப் படர்ந்த ஒரு குளம், சில்லிட்ட தண்ணீரில் காலை நனைத்துக் கொண்டு அண்ணாந்து படுத்திருந்தான். கைக்கெட்டிய தூரத்தில் பச்சைக் கத்தாழையும் அதன் பக்கத்தில் சப்பாத்திப் புதரும், மேல், ஒரு பச்சை வண்டு ரீங்காரித்துக் கொண்டே வந்து …
-
- 2 replies
- 1.8k views
-
-
பள்ளி பருவத்தில் கல்வியை தேடினேன் பெற்றோர்களின் முயற்சியால் பல்கலைகழகம் செலவதிற்கு ஏற்ற கல்வியை பெற்றேன்.பட்டதாரி என்ற அந்தஸ்து கிடைத்தது.சாதாரன நடுதர வர்க்கத்தை சேர்ந்த நான் நடுதர வர்க்கத்தில் மேல்தட்டு வர்கதிற்கு போக வேண்டும் என்ற ஆசை பொருளை தேட தூண்டின அதற்கு எனது பட்டதாரி என்ற பட்டம் கைகொடுத்தது. பிரபல வர்த்தகர் தனது ஒரே பெண்ணிற்கு படித்த மாப்பிள்ளை தேடி கொண்டு இருந்தார் தரகர் வீடு வந்து எனது பெற்றோரிடம் சொன்னதை கேட்டு கொண்டிருந்தேன்,மாப்பிள்ளைக்கு பெண்ணின் தந்தை தனது வர்த்தக ஸ்தாபனத்தை சீதனமாக கொடுப்பதாகவும் வெளிநாடு சென்று மேற்படிப்பு படிப்பதிற்கான செலவுகளை தானே கவனித்து கொள்வதாக சொன்னவுடன்,எனக்கு பெண்ணை பார்பதை விட பணத்தை பார்பதிற்கான ஆசை தோன்றவே எப்படியாவது அ…
-
- 8 replies
- 1.9k views
-
-
இறுதி வணக்கம் - சயந்தன் நான் பார்த்த கணத்தில், வளவன் தன் காலின் கீழே, பச்சைநிற ஈரலிப்பான முதுகில் கருமை நிறப் புள்ளிகளைக் கொண்ட தவளையின் மீது, கையில் ஏந்தியிருந்த உடைந்த கொங்கிறீட் கல்லை நசுக் என்று போட்டான். புளிச் என்ற சத்தம் கேட்டது போலிருந்தது. நான் ஒருவித அசூசையான உணர்வில் ஆட்பட்டு கண்களை மூடி பற்களைக் கடித்தேன். வளவனுக்கு ஆறு வயதும் முழுதாக நிரம்பியிருக்கவில்லை. அவன் எனக்கு மருமகன் முறை, அக்காவின் மகன். பற்றிப்பிடித்திருந்த கை தளர்ந்தால் எந்நேரமும் இடுப்பில் வழியத் தயாராயிருந்த ஒரு தொளதொளத்த காற்சட்டையை மட்டும் அணிந்திருந்தான். உருண்டையான முகத்தில், அலட்சியமான பெரிய கண்களோடு காலையிலிருந்து அவன் வளவு முழுவதும் திரிகிறான். நான் அவனுக்குப் பின்னாலேயே அலைகின்றேன். …
-
- 2 replies
- 1.5k views
-
-
நான் அப்போது அகதியாய் இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்தில கொக்குவிலில இருந்தன். அது போர் உக்கிரமாக நடைபெற்றுக்கொண்டு இருந்த காலம். அன்று ஒரு நாள் பிரவுன் வீதியால யாழ்நகர் நோக்கி துவிச்சக்கரவண்டியில போய்க்கொண்டு இருக்கேக்க எதிராக இன்னுமோர் துவிச்சக்கரவண்டியில சென்ற ஒருத்தன் திடீரெண்டு என்ர பெயரைச் சொல்லி கூப்பிட்டான். நானும் ஆச்சரியப்பட்டு யார் என்று திரும்பிப் பார்த்தன். அது எனது பழைய நண்பன். முந்தி பாடசாலைக்கு நாங்கள் இரண்டுபேரும் ஒன்றாய் போவம். வகுப்பிலையும் பக்கத்தில பக்கத்திலதான் இருக்கிறது. ஆரம்பத்தில அவன் எனக்கு உயிர் நண்பன் மாதிரி. ஆனால்.. நாங்கள் நாலாம் வகுப்பு படிக்கேக்க இரண்டுபேருக்கும் ஒரு சண்டை. அவன் எனக்கு அடிச்சுப்போட்டான். அதுக்கு பிறகு நாங்கள் ஆளோட ஆள் இரண்ட…
-
- 26 replies
- 7.5k views
-
-
தரிசனம் கிடைக்காதா? ஓவ்வொரு வருசமும் முத்துமரி அம்மன் கோவில் திருவிழா இருபத்தைந்து நாட்களும் புத்தக விற்பனை நடப்பது வழக்கம்.அவ்வாறே 2000ம் ஆண்டும் புத்தக விற்பனைப் பிரிவுக்கு அருகில் உள்ள இரண்டு பாடசாலைகளிலிருந்தும் மாணவர்கள் அழைக்கப்பட்டு ஒவ்வொரு செயற்திட்டங்கள் வழங்கப்பட்டது.காலை ஆறு மணியிலிருந்து மத்தியானம் இரண்டு மணிவரைக்குமான காசுப்பொறுப்பாளர்கள் சயிந்தினியக்காவும் ராஜேஷண்ணாவும் மற்ற மற்ற பொறுப்புகளுக்குமாக மொத்தமாக எட்டு பேர் இருப்பார்கள்.அதில நான் விற்க வேண்டியது மு.வரதனாரின் புத்தகங்கள் ("தம்பிக்கு" "தங்கைக்கு" அப்பிடிதான் அவருடைய புத்தகங்களின் தலைப்புக்கள் இருந்நதாக ஞாபகம் ).இருபத்தைந்து நாட்கள் சந்திக்கிற இரண்டு பாடசாலை மாணவர்களுக்கும் இடையே நிறைய காதல்…
-
- 63 replies
- 9.5k views
-
-
வணக்கம் உறவுகளே! "விழுதல் என்பது" என்னும் தலைப்பில் உலகம் முழுவதிலும் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் இணைந்து எழுதும் தொடர் கதை நாளை பல இணையத் தளங்களில் ஒரே நாளில் ஆரம்பமாகின்றது. ஒவ்வொரு பகுதியும் வாரம் ஒருமுறை பிரசுரிக்கப்படும். திரு ஏலைய்யா முருகதாசனின் அவர்களின் கூட்டு முயற்சியில் இத்தொடர் ஆரம்பமாகிறது. நாளை பகுதி ஒன்று இங்கு பிரசுரிக்கப்படும். யாழ் இணையமும் இதற்கு ஒத்துழைப்புத் தந்துள்ளது. அதற்காகத் தயாரிக்கப்பட்ட ஒளி,ஒலிப் பேழையை என்னால் இங்கு போடா முடியவில்லை. யாராவது விடயம் தெரிந்தவர்கள் உதவ முன்வந்தால் அதனை மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு அனுப்பிவைக்கலாம்.
-
- 64 replies
- 17.9k views
-
-
கயிறு! இயற்கை எழில் மிகுந்த அந்த கிராமத்தில், மரத்தின் நிழலில் உட்கார்ந்து, தேனீர் அருந்திக் கொண்டிருந்தான், ரகு. உடலை தழுவிச் செல்லும் தென்றல், பறவைகளின் இசை தாலாட்டில் சொக்கிப் போனான். 'எவ்வளவு நாட்கள் ஆயிற்று இதையெல்லாம் அனுபவித்து...' என்று எண்ணியவனுக்கு, 'இனி, மறுபடியும் இப்படி ஒருநாள் தன் வாழ்வில் அமையப் போவதில்லை...' என்பதை நினைக்கும் போது, பயமாக இருந்தது. தேனீர் கடையில் உட்கார்ந்திருந்த இருவர், அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர். அங்கிருந்து எழுந்து, நடந்தான், ரகு. அவர்களும் அவனை பின் தொடர்ந்தனர். அதைப் பற்றி கவலைப்படாமல், எதிரே இருந்த பெட்டிக் கடையில், பீடி வாங்கி பற்ற வைத்தபடி, கடைக்காரரிடம் பத்மினிய…
-
- 1 reply
- 1.1k views
-
-
http://www.viduthalaipulikal.com/file/docs...6/09/132-08.pdf
-
- 3 replies
- 1.5k views
-
-
"சித்தப்பா பூங்கா" தர்ஷன் அருளானந்தன் சமீப நாட்களில் எல்லாம் பஸ் ஏறுவதற்காக ஓராம் கட்டை சந்திக்கு வந்தால் அவனுக்குள் தோன்றி மறைந்து கொண்டிருக்கும் அந்தக் கனவு தன் உள்ளத்தில் எங்கேயோ ஒரு புல்லாங்குழல் இனிமையானதோ, துன்பகரமானதோ எனப் புரியாத ஒரு இராகத்தை மீட்டிக் கொண்டிருக்கின்றது. அவ்வளவு எல்லையற்றதாக இருந்தது அவனது மகிழ்ச்சியும், வேதனையும்.கண்களைத் செருகி கனவில் வந்த சித்திரங்களை ஆராய்ந்தான். விசித்திரமான சீருடையுடன் அழகான மனிதர்களின் அரைப்பட போட்டோக்கள் மதில்கள் முழுவதும் தெரிந்தன.'வீரவணக்கம்' என்னும் தலையங்கத்தின் கீழே. விசித்திரமான மந்திரப் பாட்டுப் பொட்டியில் இருந்து துள்ளலும் , இனிமையுமான சங்கீதம் பரவிக் கொண்டிருந்தது. கிளைகளும் மரங்களும், இலைகளும் பூக்க…
-
- 0 replies
- 1k views
-
-
இரவு பத்தரை இருக்கும் இங்கு வீ்ட்டின் பின் பக்கம் அவல குரலுடன் கீச்சிடும் சத்தம் கேட்டு தேய்ந்து .ஓய்ந்தது இந்த குரலை எங்கையோ கேட்டிருக்கிறன். ஆ..அது ஒரு பறவையின் குரல் இந்த வினோதமான குரலை நீண்ட காலத்துக்கு பிறகு கேட்டிருக்கிறன்.ஆ..இதை சுடலை குருவி என்று சொல்லுவினம்..நாடு கடல் மைல்கள் காலங்கள் தாண்டி ஒலித்த இந்த குரல் திரும்ப திரும்ப ஒலித்து பேயறைந்தவன் போல் என்னை ஆக்கி கொண்டிருந்தது. நீண்ட பரந்த செவ்வக வடிவமுள்ள வயல் பரப்பு பகுதியின் வடகிழக்கு மூலையில் அந்த ஊர் சுடலையும் அடர்ந்த பனங்காணியும், வட மேற் மூலையில் வேப்பமரத்துடனூன வைரவர் கோயிலும் இருக்கு தென் மேற்கு மூலையில் தனித்து விடப்பட்ட மாமரத்து உடனனா பழங்கால வீடும் அதன் பின் சில இடை வெளி விட்டு தான் நெருங்கிய ஊர்…
-
- 9 replies
- 2.4k views
-
-
இந்தவார ஒரு பேப்பரில் வெளியான சுதந்திராவின் ஞாபகப்பதிவுகளில் வெளியான கதை இது. எங்கள் ஊர் அழகியின் மரணம்...மறைபட்ட மரணமாய்....... ! மழையில் நனைந்த நிலமும் மாரியில் கரைந்த புழுதியுமாக அந்தநாள். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒவ்வொருவரையும் விசாரித்தபடி பூசனியக்கா போனதும் , அதன் பின் அவரது வீட்டிலிருந்து கேட்ட அழுகையும் அதன் பின்னால் நடந்த பூசனியக்காவின் சாவும் அந்தச் சிறுவயதில் அழுவதைத்தவிர வேறெதையும் செய்யத் தெரியவில்லை. நஞ்சருந்தி தற்கொலை பண்ணிய பூசனியக்காவின் இழப்பானது அவரது குடும்பத்தைவிட மற்றவர்களுக்கு வளமையான ஒரு மரணவீடு. சில தசாப்தங்களைக் காலம் அள்ளிக் கொண்டு போன பின்னர் என் ஞாபகங்களுக்குள் பூசனியக்கா..... எங்கள் ஊரின் அன்றைய அழகி பூசனியக்கா. இராமநாதன் கல்லூரியில் ப…
-
- 6 replies
- 2.1k views
-
-
சாரதா - இமையம் இடித்துப் பிடித்துக்கொண்டு ரயிலில் ஏறிய தனவேல் உட்காருவதற்கு இடம் இருக்குமா என்று பார்த்தார். உட்காருவதற்கு இடமில்லாமல் ஏற்கனவே நிறைய பேர் நடைபாதையில் நின்றுகொண்டிருப்பது தெரிந்தது. “ஊருபோயி சேருறவர நின்னுக்கிட்டுத்தான் போவணும்போல இருக்கு” என்று தனக்குள் சொல்லிக்கொண்டார். மறு நிமிஷமே ரிசர்வ் கோச்சில் எப்படி இடம் காலியாக இருக்கும் என்று தன்னையே கேட்டுக்கொண்டார். நிற்பதற்கு இடம் கிடைத்ததே பெரிது என்று நினைத்தார். தாம்பரத்தில் ஏறியவர்களால் கோச்சில் நின்றுகொண்டு பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. “ரிசர்வ் கோச்சில எதுக்கு ஏறுனீங்க? அன்ரிசர்வடு கோச்சுக்குப் போங்க” என்று டிடிஇ கத்துவாரோ என்ற கவலை வந்தது. “கோச்சுல காலவச்சி நிக்ககூட எடம் இருக்காதே”…
-
- 4 replies
- 2.1k views
-
-
நாவல் மரம் சிறுகதை: அகரமுதல்வன், ஓவியங்கள்: ம.செ., `அவளை இன்று பார்க்க வேண்டும்' என நினைத்தபடியேதான் நித்திரையில் இருந்தே கண்விழித்தேன். பிரிவுக் காலங்களின் பொழுதுகள் எல்லாம் எனக்குள் குடிகொண்டுவிட்டதைப் போன்று சலனமுற்றுக்கொண்டே இருக்கிறேன். இரவும் பகலும் தணல் என எரிந்தன. நானும் என் சிந்தையும் சாம்பலாகியும், அவளின் கண்களும், மூக்கின் மச்சமும், பூவரசம் இலையின் நரம்புச் சிரிப்பும், எரியாத விருட்சத்தின் வேராக இன்னும் இன்னும் எனக்குள் இறங்கி வளர்கின்றன. அவளின் நினைவுகள், வளரும் நிலம் என மாறிய என் பொழுதுகளில் யுத்தம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. எறிகணைகள் விழுந்து வெடித்த வீதிகளில் ஊரே இடம்பெயர்ந்துகொண்டிருந்த ஒரு மதிய நேரத்தில், கோயில் கிணற்றில் தண்ணீர…
-
- 0 replies
- 1.6k views
-
-
அந்தப் புதன் கிழமை என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். அன்று ஒருவரும் சாகவில்லை. ஏறக்குறைய ஆறுமாதத்தில் ஆக அதிர்ஷ்டம் கூடிய நாள் அதுதான். வழக்கமாக நாளுக்கு ஒன்று, இரண்டு, ஐந்து, பத்துப்பேர் என செத்துக்கொண்டு இருந்தோம். அப்போதுதான் தீர்மானித்தேன். எப்படியாவது நாட்டைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்று.’ அகதி ஒரு நாற்காலியில் கைப்பிடிகளில் முட்டாமல் நடுவே ஒடுங்கி உட்கார்ந்திருந்தான். அமண்டா ஒரு சோபாவில் காலை நீட்டியபடி அவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். ரொறொன்ரோவின் லொப்லோஸ் சுப்பர்மார்க்கெட்டுக்கு முன்னே அவனை அமண்டா சந்தித்தாள். அவனுக்கு 25 வயது இருக்கும். ஒரு விளம்பரத் துண்டை அவளிடம் நீட்டினான். அசிரத்தையாக அதைப் படித்தபோது அதில் இப்படி எழுதியிருந்தது. ’நான் ஓர் அக…
-
- 0 replies
- 1.1k views
-
-
அதிசயம் யேசு மாட்டு கொட்டகையில் பிறந்தது மட்டுமல்ல அப்படி ஒன்று எங்கள் வீட்டிலும் நடந்தது.அது நடந்ததுக்கு தடங்கள் இல்லை இப்ப என்ற மாதிரி,எங்கள் வீட்டு அதிசயத்துக்கான தடங்களும் இப்ப இல்லை .என்றாலும் இன்று போல அந்த நாள் அது நடந்த நேரம் இப்பவும் என் முன் திரைபடம் போல ஓடி கொண்டிருக்கிறது ..வேறு ஒன்றுமில்லை எனக்கு அதிசயமாக இருந்தது .உங்களுக்கு எப்படி இருக்கும் என்று தெரியாது . நத்தார் பிறக்கும் இரவு ஒரு பதினொரு பன்னிரண்டு மணிக்கும் இடையில் தான் அது நடந்தது என்று நினைக்கிறன் .கொட்டும் மழை வேறை அன்றைய காலையிலிருந்து. அடியென்றால் அந்த மாதிரி விடாமால் ஓரே அடி .அந்த மழை எல்லாரையும் வெளிக்கிட விடாமால் வீட்டுக்குள்ளை அன்று முழுவதும் கட்டி போட்டது போதாதுக்கு அன்று இரவும் நித்திரை கொள்…
-
- 13 replies
- 1.3k views
-
-
அமரந்தா - சிறுகதை சிறுகதை: நரன், ஓவியங்கள்: ஸ்யாம் புனே ரயில்வண்டி நிலையத்தில் இரைச்சலும் பரபரப்பும் நிறைந்திருந்தது. வெவ்வேறு வயது, நிறம், தோற்றம், மொழி கொண்ட கலவையான மனிதர்கள் பயணத்திற்காய் ரயில் நிலையம் முழுக்கப் பரவிக்கிடந்தார்கள். நிலையத்தில் அந்த இருவரையும் கடந்து செல்லும் எல்லாமனிதர்களும் விநோதத் தன்மையோடு சில நொடி நேரம் நிலைகுத்திப் பார்த்து, பின் அவர்களிடமிருந்து பார்வையைப் பிரித்துக்கொண்டு நடந்தார்கள்.அங்கங்கே கொஞ்சமாய் நரை சிதறியிருந்த முடிகளோடு நாற்பந்தைந்து வயதுப் பெண்ணாய்த் தோற்றமளிக்கும் வயிறு புடைத்த பெண் அமரந்தா ஆறாவது நடை மேடையைத் தேடியபடி மெள்ள நடந்து வந்துகொண்டிருந்தாள். உடன் அந்தப் பெண்ணின் எழுபது சதம்…
-
- 0 replies
- 2.6k views
-
-
-
நாம் வாழும் உலகுக்கு அடியில் வெகு ஆழத்தில் உள்ள இன்னொரு உலகம், குரூரத்தால், வலியால், சிறுமையால் எழுதப்பட்டது இது, மானுடம் என்ற மகத்தான சொல்லின் நிழல், ஒரு கோணத்தில் நமது நமது அனைத்து செயல்பாடுகளையும் மௌனமாக அடிக்கோடிடும் கருமை. சரளமும் நுட்பமும் கொண்ட மொழியில் நேரடியாகச் சொல்லப்படும் இந்நாவல் , நம் வாழ்வு குறித்தும் நம் பண்பாடு குறித்தும் மிக அந்தரங்கமாக நாம் எழுப்பிக்கொள்ளச் சாத்தியமான எல்லா வினாக்களையும் நைச்சியமாகத் தூண்டக்கூடியது. இதை படிக்கும் நாம் தான் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறோம்? என நிச்சயம் உணரவைக்கும். தப்பித் தவறி இந்த இழி நிலை நமக்கு வந்திருந்தால்? நம் உறவினருக்கோ, நண்பருக்கோ ஏற்பட்டிருந்தால்? ஐயகோ!!!! ஏழாம் உலகம்- ஜெயமோகன் த…
-
- 2 replies
- 1.9k views
-
-
தேவகியும் வந்து சேர்ந்து விட்டாள். வாழ்க்கையில் ஏதோ அர்த்தம் பொதிந்து கிடப்பதாக அவனுக்குத் தோன்றியது. வெளி நாட்டு மருத்துவர்களுக்கான 'மொழிப் பரீட்சை'யிலும் சித்தியெய்தி விட்டாள். தேவகி வந்ததும் தனியாக ஒரு சிறிய வீடொன்று வாடகைக்கு எடுக்க வேண்டி ஏற்பட்டதால். செலவுகளும் அதிகரித்து விட்டது. தேவகியின் சில சொந்தங்களும், அடிக்கடி வந்து போகத் தொடங்கின. அவர்கள் கன காலத்திற்கு முன்பு இங்கு வந்தவர்கள்.அவர்களது 'சமூக அந்தஸ்து' மிகவும் உயர்ந்ததாக அவர்கள் காட்டிக் கொண்டார்கள். தேவகியின் காதில் அடிக்கடி குசு குசுப்பார்கள். இதனைப் பெரிதாகச் சந்திரன் கணக்கில் எடுக்கவில்லை. சில வாரங்கள் கழிந்ததும், தேவகிக்கு 'பெர்மிங்கம்; என்னும் இடத்தில் ஒரு ஆஸ்பத்திரியில் வேலை கிடைத்தது. அவளது வேலையி…
-
- 17 replies
- 1.9k views
-
-
அப்பாவைக் கூட்டிவர காசு தருவீங்களா சித்தி....! அம்மா....! தர்சன் மாமா , சுகன் மாவெல்லாம் தடுப்பிலயிருந்து வந்திட்டாங்களாம்....! ஏனம்மா எங்கடை அப்பாவை கூட்டியர நீங்கள் போறீங்களில்லை....! இன்று முழுவதும் மகிழன் அபிராவை இப்படித்தான் தொல்லைப்படுத்திக் கொண்டிருந்தான். மகன் அம்மாட்டைக் காசில்லை....அதான அப்பாவைக் கூட்டியரப் போகேலா....! தாயின் சமாதானத்தில் அமைதியடையாதவன் மேசையில் இருந்த கொப்பி புத்தகங்களை நிலத்தில் எறிந்தான். கன்னத்தைப் பொத்தி அறைந்தாள் அபிரா. என்னடா....! என்ன வேணுமிப்ப...! பொறுமையின் எல்லை கடந்த நிலையில் அபிராவின் கைகள் அவனைத் தாக்கின. அடியின் நோவில் அவன் நீண்ட நேரம் அழுது கொண்டேயிருந்தான். எப்போதும் போலன்றிய அவனது அடம்பிடித்தல் இன்று எல்…
-
- 9 replies
- 10.1k views
-