கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
ஓவியாவின் கனவுகள் மண்ணுக்காய் மரணத்தை சுமந்தவன் மலரவன். அவன் உயிர் எறிந்து சென்று பத்து வருடம் ஆகிவிட்டது. பாவம் இவன் குடும்பம் இப்போ படும் பாடு போதும். ஒன்றாகவே விடுதலைக்கு போன ஓவியாவை திருமணம் செய்தவன். நாம் தமிழர் விடுதலைக்காய் நாளும் பொழுதும் உழைத்த குடும்பம். இரவு பகலாய் எதிரி எம் மண்ணில் நுழையாமல் எல்லையில் நின்று கண் முழித்து காவல் நின்றவள் ஓவியா. இறுதி யுத்தத்தில் இவன் போன பின் எல்லாமே இழந்த பின் மலரவனின் மனைவி ஓவியாவுக்கும் இவள் நான்கு குழந்தைகளுக்கும் எதுக்கும் இப்போ வழி இல்லை. நான்கு பிள்ளைகள் நாளாந்தம் குடும்பம் ஓட்டுவதே கடினம். ஓவியா இப்போ கூலி வேலை செய்து குடும்பத்தை ஓட்டுகிறாள். அவள் படும் பாடு இப்போ பெரும் பாடு அவள் சுமக்கின்ற வலியோ தீராது. ஒரு க…
-
- 4 replies
- 615 views
-
-
மனிதனும் விலங்கும்மாறுபட்ட கருத்துடையவர்களும் ஒருங்கிணைந்து வாழ முடியும் என்பதனை விளக்குவதற்காக ஒரு மிருகக் காட்சி சாலையில் ஒரே கூட்டில் ஒரு புலியும் முயலும் சேர்த்து வைக்கப் பட்டிருந்தன.இந்த அதிசயக் காட்சியைக் காண தினமும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர்.புலி படுத்திருக்கும்.அதன் வயிற்றில் சாய்ந்தவண்ணம் முயல் படுத்து தூங்கிக் கொண்டிருக்கும்.ஒரு பெண்மணி இதை வியப்புடன் பார்த்து விட்டு நிர்வாகியிடம் சென்று, ''இது எப்படி சாத்தியம்? எப்படி இவ்வாறு பயிற்சி கொடுத்தீர்கள்?''என்று ஆர்வமுடன் கேட்டார்.அன்று அந்த நிர்வாகி பணியிலிருந்து ஓய்வு பெரும் நாள் எனவே அவர் அந்தப் பெண்ணிடம் மெதுவாக,''இதில் பெரிய ரகசியம் ஒன்றும் இல்லை.தினசரி நாங்கள் ஒரு ஆட்டை மாற்றிவிடுவோம்,இதை யாரிடமும் சொல்லி …
-
- 4 replies
- 10.5k views
-
-
ஓஷோ சொன்ன குட்டிக்கதை ஒரு கானகத்தில் காட்டாறு ஒன்று பாய்ந்து ஓடிக்கொண்டிருந்தது. அந்த ஆற்றின் கரையினிலே ஒரு மாமரம் ஒன்று கிளைபரப்பி நின்றிருந்தது. அதில் அண்ணன், தம்பி என இரண்டு கிளைகளும் இருந்தன. அண்ணன் கிளை எப்போதும் அமைதியானது. காற்றடித்தால் ஆடும். தம்பி கிளை ஆரவாரமானது. தானாகவே ஆடி காற்றை வரவழைக்கும். ஒருநாள் பயங்கர மழை பொழிய ஆரம்பித்தது. கூடவே கடும்புயல் வேறு. காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பல மரங்களின் கிளைகளும் முறிந்து விழுந்தன. அண்ணன் கிளை வழக்கம்போல், நடப்பதை அமைதியாக வேடிக்கை பார்த்தபடி, புயலில் ஆடிக்கொண்டிருந்தது. தம்பி கிளையோ ‘என்னண்ணே, இது..நாசமாப் போற காத்து..இப்படி அடிக்குது” என்று புலம்பிக்கொண்டிருந்தது. …
-
- 4 replies
- 1.1k views
- 1 follower
-
-
ரயிலில் இருந்து இறங்கும்போதே வயிற்றை கலக்க ஆரம்பித்துவிட்டது. அடக்க முடியவில்லை. இந்த டக்கீலா கருமத்தை இரவு அடிச்சாலே இதே பிரச்சினை தான். அவதானமாக இருந்திருக்கவேண்டும், இருக்கத்தான் டக்கீலா விடவில்லையே! காலையிலேயே ஒரு மாதிரி மார்க்கமாக தான் இருந்தது. கொஞ்சம் இஞ்சி போட்டு கோப்பி குடிச்சதால அவ்வளவு தெரியவில்லை. ஆனால் ரயில் ஜோலிமொன்ட் ஸ்டேஷன் கடக்கும் போது வயிறு கொஞ்சம் மக்கர் பண்ண தொடங்கியது. அட இதெல்லாம் நமக்கு சாதாரணம் என்று அதை பற்றியே யோசிக்காமல் பாட்டு கேட்டுக்கொண்டு வந்ததில் ஒருமாதிரி சமாளித்தாயிற்று. மெல்போர்ன் சென்ட்ரல் ஸ்டேஷனில் இறங்கும்போது புரிந்துவிட்டது. இன்றைக்கு சங்கு தான். அலுவலகத்துக்கு பதினைந்து நிமிடங்கள் நடக்கவேண்டும். இந்த வயிற்றோடு தாம் தாம் என்று…
-
- 25 replies
- 19.5k views
-
-
கங்கம்மா "பெத்த புள்ளையத் தொலைச்சிட்டு... பேதையா நிக்கிறேனே.... ஒத்தப் புள்ளைய காணாம.... ஒறக்கமத்துப் போனேனே....'' காலங்காத்தால பிலாக்கணத்தை ஆரம்பிச்ச கங்கம்மாளப் பாத்த தங்கவேலுவுக்கும் வவுத்தெரிச்சலாதானிருக்கு. புள்ளைய நெனைச்சி கங்கம்மா அறுத்துப் போட்டக் கதுரா தொவண்டு போய்ட்டா. "இந்தா புள்ள, ஒரு வாயாவது குடி கொவளையில கஞ்சிய வைச்சிக்கிட்டு கெஞ்சறாரு தங்கவேலு.'' மூச்ச வுடலையே அவ. பின்னயென்ன கோவம்னா கோவம் அப்பிடியொரு கோவம் புருசங்காரருமேல. "சேத்து வைச்சிருக்க சொத்தே நாலு தலமொறைக்குத் தாங்கும். அந்நிய தேசத்துல எம்புள்ள போய் செரமப்படணும்னு தலையெளுத்தா என்ன?'' சீலத்தலப்பு நனைஞ்சது. "இந்த…
-
- 1 reply
- 1.2k views
-
-
கசங்கிய கடிதம் ஆடம்பரமான ஒரு சிறிய அழகிய மண்டபம். அங்கே உள்ள மேசை ஒன்றில் சிறிய படம் ஒன்று மாலை போட்டபடி இருக்க, அதற்கு முன் ஒரு விளக்கு, தான் எரிந்து, படத்துக்கு வெளிச்சம் கொடுத்தபடி இருந்தது. படம் இருந்த மேடைக்கு, ஒருவர் எதையோ பறிகொடுத்தவர்போலவும், தொலைந்த எதையோ நிலத்தில் தேடுபவர் போலவும் தலைகுனிந்தபடி மேடைக்கு சென்றார். அங்கே வைக்கப் பட்டிருந்த ஒலிவாங்கியைக் கையால் திருப்பிச் சரிபார்த்து. பேசத் தொடங்கினார். உறவுகளே! எமது தாயக விடுதலையில் தன்னை இணைத்து, போராடி, இரத்தம் சிந்தி, விழுப்புண் அடைந்து, எமக்காகவே தமது வாழ்வை அர்ப்பணித்து, அங்கவீனமடைந்து உயிர் நீத்த உத்தமன் அவர்களின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் ஒன்றுகூடி இருக்கிறோம். குறுகிய நாளில்…
-
- 5 replies
- 2.5k views
-
-
2007 ஆவணி காலை 7.30 மணி, 27 வருடத்திற்கு பிறகு கோண்டாவில் சந்தியில் கொண்டுவந்து நண்பன் என்னையும் மனைவியையும் இறக்கி விட்டு எதற்கும் முதல் நந்தவனம் போய் பாஸ் எடுங்கள்,பிறகு மற்ற அலுவல்கள் எல்லாம் என்றான். எனது சந்தி,நான் காலகாலமாக உழுது திரிந்தசந்தி அந்நிய பிரதேசமாக காட்சி அழித்தது.தெரிந்தவர் எவருமில்லை.சனங்ககள் திரியுது எவர் முகத்திலும் சிரிப்பு இல்லை.பான்ஸ்சோட திரியிற எனது மனுசி புலி அலுவலகம் என்று சல்வார் அணிந்து வந்தார், எல்லாம் ஒரு நடிப்பு அதைத்தான் அவர்களும் எதிர்பார்த்தார்கள். நந்தவனத்தில் போய் இருக்கின்றேன்.சற்று தள்ளி எங்களது தோட்டக்காணி,அருகில் நான் சிக்சர் சிக்சர் ஆக அடித்து தள்ளிய விளையாட்டு மைதானம்.யாருடனாவது கதைக்க வேணும் போலுள்ளது தெரிந்த முகம் எதுவு…
-
- 9 replies
- 1.7k views
-
-
கச்சாமி கண்டி நகரத்திலிருந்து வடமேற்காக நாற்பது கிலோ மீற்றர்கள் தொலைவிலிருந்த புராதன புத்த விகாரையைச் சுற்றிப் பார்த்துவிட்டு நானும் கெய்லாவும் வெளியே வந்தபோது எங்களையே பார்த்துக்கொண்டு இரண்டு பொலிஸ்காரர்கள் வீதியில் நிற்பதைக் கண்டேன். நானும் கெய்லாவும் செருப்புகளை அணிந்துகொண்டு வீதிக்கு வந்தபோது, வீதியில் சனங்களும் கூடிநின்று எங்களையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதுவொரு மிகச் சிறிய நகரம். புத்த விகாரையைச் சுற்றியே அந்த நகரம் அமைந்திருந்தது. விகாரையின் முன்னால் ஏழெட்டுக் கடைகள் இருந்தன. அந்தப் பொலிஸ்காரர்கள் இருவரும் ஏதோ காரியமாகத்தான் எங்களையே கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் என எனது உள்ளுணர்வு சொல்லியது. வரப்போகும் பிரச்சினைகளை முன்கூட்டியே அனுமானிக்கும் எ…
-
- 8 replies
- 1.5k views
-
-
கடன் - தமிழ்நதி ஓவியங்கள் : ரமணன் சுவரில் கல்லோடுகள் பதிக்கப்பட்ட ‘பேப்’ புகையிரத நிலையத்தை சத்தியன் ஏற்கெனவே தெரிவுசெய்துவிட்டான். அதுதான் இருப்பவற்றுள் அழகியது. அங்கு இறங்கி நின்று, அடுத்து வரும் இரும்பு வேதாளத்தின் முன்னால் பாய்ந்து சிதறத் திட்டமிட்டிருந்தான். விரைந்தோடி வரும் ரயிலின் முன் உடலை வீசியெறியும்போது எப்படி இருக்கும்? ஒருகணம் கூசி சிலிர்த்தன மயிர்க்கால்கள். இரத்தக்கூழாக அவன் தன்னைக் கண்டான். கூட்டம் கூடுகிறது; பிறகு கலைகிறது. ஆகக்கூடி ஒரு மணித்தியாலத்தில் மீண்டும் புகையிரதம் ஓடும். மனிதர்கள் அதனைப் பிடிக்க ஓடுவார்கள். குளியலறைக் கண்ணாடியில் தெரிந்த விழிகள், பித்தின் சாயல்கொண்டு மினுங்கின. ஒடுங்கிய கன்னங்களை மறைத்து வளர்ந்திருந்தது …
-
- 2 replies
- 2.8k views
-
-
கடன் மஹாத்மன் அமைதி நிலவியது. நீள் கல்லிருக்கையில் படுத்ததும் சட்டெனத் தூங்கிப் போனேன். அவ்வப்போது முகத்தை மூடிய சிறு துண்டு நழுவிக் கீழே விழும்போது தன்னிச்சையாக என் இடதுகை அதனை எடுத்து மறுபடியும் முகத்தை மூடிற்று. அசதியில் உடல் படுத்திருந்தாலும் மூளை மட்டும் விழித்துக்கொண்டிருந்தது. அதிகாலை நெருங்கியிருக்கும். விசும்பல் சத்தம் கிணற்றடியிலிருந்து கேட்பது போலிருந்தது. விழித்துக்கொண்டேன். கண்ணிமைகளை இலேசாய்த் திறந்தபடியே எதிரில் இருப்போரைக் கண்ணோட்டமிட்டேன். அழுக்கு உடைகளைத் தரித்திருந்த ஒரு சீனன் சன்னக் குரலில் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான். நடுவில் பயணி ஒருவர் தன் அகலமான நீண்ட துணிப் பெட்டியின்மீது தலையைக் கவிழ்த்தபடி தூங்கிக் கொண்டிருந்தார். இடது மூலை…
-
- 2 replies
- 1.2k views
-
-
என் வாழ்க்கையில் நான் பட்ட கடன்களை வரிசைப் படுத்தும்போது பல கடன்களை நான் தீர்க்கவில்லை என்பது இப்போது தெரிகிறது. சிறுவயதில் பக்கத்து மேசை நண்பனிடம் பென்சில் கடன் வாங்கி அதை திருப்பிக் கொடுக்கவில்லை. கோயிலுக்கு நேர்ந்து கடவுளுக்கு இது செய்வதாக, அது செய்வதாகச் சொல்லி செய்யாமல் விட்டது. புத்தகங்கள் கடன் வாங்கிப் படித்தால் தவறாமல் திருப்பிவிடுவது என் வழக்கம். ஒரு முறை என் புத்தகத் தட்டை ஆராய்ந்தபோது யாரோ ஒருவரிடம் கடன் வாங்கிய புத்தகம் ஒன்று இன்னும் திருப்பிக் கொடுக்காமலே இருப்பது தெரிந்தது. ஆனால் யாரிடம் புத்தகத்தை இரவல் வாங்கினேன் என்பது மறந்துவிட்டது. உரிய நேரத்தில் கடனை அடைக்காவிட்டால் அதை திருப்பிக் கொடுக்கும் வாய்ப்பே சமயத்தில் நழுவி விடக்கூடும். சில நாட்களுக்கு மு…
-
- 3 replies
- 1.1k views
-
-
கடமை ‘‘டேய்... மாதவா! முதல்ல இந்தக் காபியைக் குடிடா. அப்பா வந்தபிறகு ஸ்கூல் ஃபீஸ் விஷயமா பேசிக்கலாம்...’’ வேண்டா வெறுப்பாக காபியை வாங்கிக் குடித்தான் மாதவன். அப்போது வெளி வாசலில் நுழைந்துகொண்டிருந்தார் அப்பா. ‘‘அப்பா வந்தாச்சு! ஸ்கூல் ஃபீஸ் பத்தி கேட்கணும்னு சொன்னியே... இனி உன் பாடு, உன் அப்பா பாடு...’’ என சொல்லிவிட்டு சமையலறைக்குச் சென்றாள் கலா. தயங்கியபடி அப்பாவிடம் பேச்சுக் கொடுத்தான் மாதவன். ‘‘அப்பா! ஃபர்ஸ்ட் டேர்ம் ஸ்கூல் ஃபீஸ் இருபதாயிரம் ரூபா கட்டணும். ஒரு செக் தந்தா போதும்...’’ மாதவனை முறைத்தார் அப்பா. ‘‘என்னாலே ஸ்கூல் ஃபீஸ் எல்லாம் தரமுடியாது. அதெல்லாம் நீயே பாத்துக்க வேண்டியதுதான்...’’ கறாராகச் சொன்னார் அப்பா. ‘‘இப்படிச் சொன்னா எப்படிப்பா? உங்களுக…
-
- 0 replies
- 1.4k views
-
-
நாம் உயர்வதற்குரிய ஒரே வழி நம் முன் இருக்கும் கடமைகளைச் செய்வதாகும். அப்படிச் செய்வதன் மூலம் வலிமையைப் பெருக்கிக் கொண்டே சென்று, இறுதியில் உயர் நிலையை அடைந்து விடலாம். ஓர் இளம் துறவி காட்டிற்குச் சென்றார். அங்கு தியானம், வழிபாடு, யோகப் பயிற்சி முதலியவற்றில் நெடுங்ககாலம் ஈடுபட்டிருந்தார். ஒருநாள் அவர் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார். அப்போது அவர் தலைமீது சில சருகுகள் வீழ்ந்தன. அவர் நிமிர்ந்து பார்த்தார். அங்கே மரக்கிளை ஒன்றில் ஒரு காகமும், கொக்கும் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அவருக்கு வந்ததே கோபம். ஆத்திரத்துடன், 'என்ன! எவ்வளவு துணிவிருந்தால் என் தலைமீது சருகுகளை உதிர்ப்பீர்கள்' என்று கூறியபடியே அந்தப் பறவைகளைக் கோபத்துடன் பார்த்தார். யோகி அல்லவா!…
-
- 0 replies
- 1.8k views
-
-
கடற்கன்னி ஒருநாள் முழுவதும் பிரகாசித்து அன்றைய நாளை முடிக்க தென் மேற்கு திசையை நோக்கி நகர ......, நாள் முழுவதும் பறந்து திரிந்து தமது குஞ்சு களுக்கு இரைதேடி கொண்டு தமது கூட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தன ..... பறவைகள், இருள் மெல்ல ..... மெல்ல .... கவ்வ தொடங்கியது கடல் அலையின் ஓசையைவிட காகம் கத்தும் சத்தமே காதை கிழித்தது சுற்றும் முற்றும் பார்த்த வண்ணம் மோட்டர் சைக்கிளில் ராஜனும் ரஞ்சனுமாக முன்னே சென்றுகொண்டு இருக்கின்றனர் வோக்கியில் ரோமியோ ......ரோமியோ என கூப்பிடும் சத்தம் என்பக்கத்தில் நின்றவரின் வோக்கியில் கேட்டது அதக்கு ரகு ஓம் சொல்லுங்கோ ....... தங்கோ, என்ன வென்றால் இன்று நிலைமைகள் சரியாகவுள்ளது இன்றைக்கே அதை ஏற்பாடு செய்யலாம் என்று சொன்ன போது என்மனதில…
-
- 6 replies
- 2k views
-
-
கடற்கரையில் ஒரு நாடகம் – பால்ஸாக் – தமிழில்: ராஜேந்திரன் ஏறத்தாழ அனைத்து இளைஞர்களும் ஒரு திசைமானியை அவர்களது கற்பனையில் வைத்துள்ளனர். அதைக் கொண்டு எதிர்காலப் பாதையை நிர்மாணிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றனர். திசைமானியை விரித்துப் பரந்த கண்ணோட்டத்தில் பார்வையைச் செலுத்தும் வேளையில், அதற்கேற்ற மன உறுதியும் வாய்த்து விட்டால் உலகமே அவர்களுடையதாகும். இருப்பினும் ஒருவரது உள்ளார்ந்த வாழ்வில் நிகழும் அந்த அதிசயம் இளமைப் பருவத்திற்கே உரியதாகும். அது இருபத்தியிரண்டு முதல் இருபத்தியெட்டு வயதிற்குள்ளாக அனைவருக்கும் வாய்க்கும். அக்காலக் கட்டத்தில் மாபெரும் எண்ணங்களும், புதிய சிந்தனைகளும் தோன்றும். ஏனெனில் அது பெருமளவிலான ஆசைகளைத் தோற்றுவிக்கும் பருவம். அப்பர…
-
- 0 replies
- 1.4k views
-
-
கடல் சிரித்தது! …. எஸ்.அகஸ்தியர். September 16, 2018 சிறப்புச் சிறுகதைகள் (11) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – எஸ்.அகஸ்தியர் எழுதிய ‘கடல் சிரித்தது’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும். மூன்று நாட்களுக்கு முன் அந்தக் கடற்கரையில் முத்து பிணமாகக் கிடந்தான். அந்தச் சடலத்தின் சதைப் பிண்டங்கள் பிய்ந்து போய்க்கிடந்தன. மீன்களின் மாமிச வெறிவேட்டைக்கும், கடல் அலைகளின் முரட்டு மோதல்களுக்கும் ஆளாகி அழுகி நெக்கு விட்டுப்போன அந்தப் பிரேதம் கரையில் சதா மோதிக் கொண்டிருந்தது. காகங்கள் அதன் கண்களைத் திறந்து தின்று தீர்த்துவிட்டன. இன்னும் அதன் நாற்றம் ‘வெடில்’ அந்த ஊரை உசுப்பிவிட்…
-
- 1 reply
- 806 views
-
-
கடல் யோசித்தது…! - செ.டானியல் ஜீவா ‘எனக்கொரு நண்பன் உண்டு, அவன் தனக்கென வாழாத் தலைவன்!’ என்ற கிறிஸ்தவப் பாடல் சின்ன வயதிலிருந்தே எனக்கு பிடித்தமான ஒன்று. இந்தப் பாடலின் வரிகளை என் நண்பன் குமாரைக் காணும் போது அவ்வப்போது எடுத்து விடுவேன். அதை நான் பாடும் போதெல்லாம் அவன் பதிலுக்கு என்னை கேலியும் கிண்டலும் செய்வதோடு, என்னைப் பார்த்து ‘பன்னாடை பன்னாடை’ என்று திட்டவும் செய்வான். குமாருக்கு நாற்பத்திரண்டு வயதிருக்கும். பொது நிறமும், நல்ல உடல் கட்டோடு உயரமாகவும் இருப்பான். ரொம்பவும் கறாரானவன் போல் தன்னைக் காட்டிக்கொள்வான். நெஞ்சில் அடர்ந்து கிடக்கும் கறுத்த முடியெல்லாம் வெளியில் தெரியும்படியாக சேர்ட்டின் மேற்பக்கப் பட்டனைத் திறந்து விட்டபடியே எப்போதும் வலம் …
-
- 0 replies
- 970 views
-
-
கடவுளின் உரை.. சந்திரா இரவீந்திரன் மழைக்காலத்து மஞ்சள் பூக்கள் மலர்ந்து சொரிந்திருக்கும் வீதியோரங்களில் அவர்கள் நின்றிருந்தார்கள்! தலைக்கு மேலே சாம்பல் புறாக்கள் சத்தமிடாமல் பறந்து சென்றன. ரோஜாக்களின் மணம் கமழும் மெல்லிய குளிர்காற்று இடையிடையே வீசிக் கொண்டிருந்தது. கேள்விகள் ஏதுமற்ற மயக்கம் நிறைந்த பார்வைகள் தெருவெங்கும் நிறைந்திருந்தன. வார்த்தைகளும் வசனங்களும் அங்கு வலிமையற்றுப் போயிருந்தன! பிடுங்கி வீசப்பட்ட பெருமரத்து வேரின் தளைகளைப் போல் புத்துணர்ச்சி அரும்பும் வசீகர முகத்தோடு அவர்கள் நின்றிருந்தார்கள். அடிக்கடி எல்லோர் புருவங்களும் உயர்ந்து விரிந்தன. ஒருவரையொருவர் சிநேகத்துடன் பார்த்துக் கொண்டார்கள். உற்சாகமும் பெருமிதமும் நிரம்பித் ததும்பும் நிமிடங்கள் அவர்களி…
-
- 4 replies
- 872 views
-
-
கடவுளின் மரணம் - செல்வன் | "கடவுள் இறந்து விட்டார்..அன்னாரது ஈமக்கிரியைகள் வரும் 16ம் தேதி நடைபெறும்" "கடவுள் இறந்து விட்டார்..அன்னாரது ஈமக்கிரியைகள் வரும் 16ம் தேதி நடைபெறும்" இடி இறங்குவது போல் அந்த செய்தி மக்களிடையே இறங்கியது. ஆரம்பத்தில் யாரும் அதை நம்பவில்லை.ஆனால் கடவுளின் உடலை மக்களின் பார்வைக்கு வைத்ததும் தான் அதை அனைவரும் நம்பினர். "ஓ"வென அனைவரும் அழுது புலம்பினர். அவரது உடல…
-
- 0 replies
- 740 views
-
-
[size=4]தாங்களே கடவுளாக மாற விரும்பிய சில விஞ்ஞானிகள் ஒன்றாக சேர்ந்து கடவுளை சந்தித்து. 'முதியவரே, இதுவரை நீங்கள் நன்றாக படைப்புத்தொழிலை செய்து வந்தீர்கள், நாங்களும் உயிரை உருவாக்க முடியும், எதை விரும்புகிறோமோ, எதை விரும்புகிறோமோ அதை எங்களால் உருவாக்க முடியும், எனவே நீங்கள் ஓய்வு பெறுவதற்கு இது தான் சரியான நேரம்' என்றார்கள்.[/size] [size=4] [/size] [size=4]அதற்கு கடவுள், 'அப்படியா, உங்களால் எதை வேண்டுமானாலும் உருவாக்க முடியுமா? எங்கே ஒரு உயிரை உருவாக்கிக் காட்டுங்கள் பார்க்கலாம்' என்றார். விஞ்ஞானிகள் கொஞ்சம் மண்ணை எடுத்து, எதேதோ செய்து அந்த மண்ணை ஒரு சிறு குழந்தையாக மாற்றி விட்டார்கள். உடனே கடவுள் சொன்னார் 'இதெல்லாம் சரி தான், முதலில் உங்களுடைய சொந்த மண்ணை உருவாக்குங…
-
- 2 replies
- 675 views
-
-
கண்ணனின் தாய் அருந்ததி தனது மகன் கண்ணனைப் பற்றி மிகவும் துக்கப் பட்டுக் கொண்டிருக்கிறாள். இதுவரை அவன் ஒரு நல்ல தமிழ் இளைஞனாக இருந்ததாகவும், தற்போது பல கேள்விகளைக் கேட்டுத் தனது தமிழ் அடையாளத்தை அவன் தேடுவதாக அவளது பேதை மனம் துடிக்கிறது. அவனுடைய பேச்சைக் கேட்டு மகள் கருணாவும் ஏதோ கேட்கத் தொடங்கி விட்டாள். கண்ணனின் குடும்பம் தமிழ் அகதிகளாக லண்டனில் காலடி எடுத்து வைத்தவர்கள். “கடவுள் அருளால் இவ்வளவு நன்றாக இருக்கிறோம். நீங்களும் மற்றவர்கள் மதிக்கத் தக்கதாக வாழ, உயர்ந்த எங்கள் தமிழ் கலாச்சாரம் சார்ந்த பண்பாடுகளை அறிந்து கொள்ளுங்கள். எண்ணங்களை விருத்தி செய்யங்கள். கடவுளை வணங்குங்கள்” என்று தனது இரு குழந்தைகளுக்கும் அடிக்கடி புத்தி சொல்பவள் அவள். ஆணும் பெண்ண…
-
-
- 3 replies
- 1.3k views
- 1 follower
-
-
கடவுள் கடவுள் ம.வே.சிவகுமார் இ ரண்டு நாட்களாகவே அந்தக் கருப்புப் பூனை இரவில் நான் உறங்கிக்கொண்டு இருந்த அறைக்கு வந்துகொண்டு இருந்தது. இருட்டில் தொப்பென்ற சப்தத்தில் கனவு கலைந்து நான் திடுக்கிட்டு கண் விழிப்பேன். காலடியில் மெத்தென்று பூனை இடறும். இன்னதென்று புரியாத கலவரத்தில் சுவரில் துழாவி விளக்கைப் போடுவேன். வெளிச்சம் பழகுவதற்குள் பூனை கட்டிலுக்கடியே போயிருக்கும். பயத்தில் வியர்க்கும். ஒரு சந்தேகத்தில் கட்டிலுக்கடியே குனிந்து பார்ப்பேன். அந்தக் கருப்…
-
- 1 reply
- 2.7k views
-
-
கடவுள் எழுதிய கவிதை! கடவுள் எழுதிய கவிதை! ஜி.ஆர்.சுரேந்தர்நாத் அ வள் தன் செம்பொன் நிறப் பாதங்களை லேசாக உயர்த்தியபடி, நெற்றியில் விழுந்த தலைமுடியை இடக் கையால் ஒதுக்கிக்கொண்டு, உதடுகளைச்சுழித்து, கண்களைச் சுருக்கியபடி... தன் சிவந்த விரல்களால் வண்ணத்துப் பூச்சியை மெள்ள மெள்ளப் பிடிக்க முயன்றபோது, எனக்குத் தெரிந்துவிட்டது... அவ…
-
- 0 replies
- 3.1k views
-
-
கடவுள் காத்திருப்பார்! மிகவும் பழமையான வீடு, 60 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது, அந்த காலி இடம் வாங்கும்போது அந்த இடத்தில ஒரு சிறிய மாமரம் இருந்தது, அந்த வீட்டை கட்டிய தொழிலாளர்கள் அந்த மரத்தின் கீழ் அமர்ந்துதான் மதிய உணவு உண்பார்கள். அந்த வீட்டு முதலாளிக்கு அந்த மாமரத்தின் மீது தனி பாசம், அந்த மரத்தை போலவே அவரது வாழ்வும் குழந்தை குட்டியென சந்தோஷமாக வளர்ந்தது அவருக்கு இப்போது 90 வயது, மகன்களுக்கு திருமணம் ஆகி பின் பேரப்பிள்ளைகளுக்கும் திருமணம் ஆகி குழந்தைகளுடன் வெளிநாட்டில் வசிக்கிறார்கள். இந்த பாரம்பரிய வீட்டை இடித்து அதே இடத்தில் ஒரு Apartment கட்டி ஆளுக்கொரு flat எடுத்துக்கொள்ளலாம் என்கின்ற முடிவோடு ஒன்று கூடி இருக்கிறார்கள், தாத்தாவும் ஒப…
-
- 0 replies
- 536 views
-
-
ஒரு ஊரிலை ஒரு றவுடி இருந்தானாம். அவனும் ஊரிலை இருக்கிற கொஞ்ச றவுடிகளுமாச் சேர்ந்து ஒரு அப்பாவியைக் கொண்டு போட்டாங்களாம். இவ்வளவு நாளும் தாங்களும் தங்கடை வேலையுமா இருந்த ஊர்ச்சனம் இனியும் பொறுத்தால் றவுடி ஒருநாள் தங்களையும் கொண்டு போடுவான் எண்டு நினைச்சிட்டு கொலை செய்தங்களைப் பிடிச்சு ஜெயிலிலை போடுங்கோ எண்டு மெல்ல மெல்லச் சத்தம் போடத் தொடங்கீட்டுதாம். இதென்னடா இவ்வளவு நாளும் நானும் ஒரு பிரச்சினை இல்லாமல் களவு பாலியல் வல்லுறவு கொலை எண்டு செய்து கொண்டு தானே இருந்தனான். சனம் சத்தம் போடாமல் தானே இருந்தது. இந்த முறையும் ரெண்டு மூண்டு நாள் கத்திப் போட்டு சனம் இடங்கிப் போடும் எண்டு நினைச்சு றவுடி சத்தம் போடாமல் இருந்திட்டான். சனம் ரெண்டு மூண்டு நாNhளடை விடேல்லை.தொடர்ந…
-
- 3 replies
- 977 views
-