கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
தம்பியவ.... கோட்டைப் பக்கம் வெடி கேட்குது.. ஆமிக்காரன் வெளிக்கிடுறான் போல.. பங்கருக்குள்ள ஓடுங்கோ.... செல்லடிக்கப் போறாங்கள். அம்மாவின் குரல்.. யாழ் மணிக்கூட்டு வீதியில்.. எங்கள் வீட்டு வளவினில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த எங்களை விரட்ட.. நாங்களோ.. வழமை போல.. அதைப் புறக்கணிக்கிறம். கிட்டு மாமா இருக்கும் வரை ஆமியாவது வாறதாவது. ஷெல்.. ஆஸ்பத்திரி தாண்டி வராது. கிட்டு மாமா.. செஞ்சிலுவையோட கதைச்சிருப்பார். சும்மா இருங்கோம்மா. பதிலுக்கு நானும் நண்பர்களும் சேர்ந்து.. குரல் கொடுத்திட்டு.. அடுத்த ஓவரைப் போட நான் தயாராக... வாகனங்கள் எங்கள் வீதியால ஓடும் சத்தம் கேட்டிச்சுது. ஓடிப் போய் கேற்றடில நின்று பார்த்தால்.. இலை குழையெல்லாம் கட்டிக் கொண்டு.. 50 கலிபர் பூட்டின …
-
- 6 replies
- 1.5k views
-
-
கடந்த ஞாயிறு சிட்னியில் பொங்குதமிழ் நிகழ்வு நடைபெற்றது. வீட்டை விட்டு போக முடியாத நிலை. போக முடியாத நிலை என்பதை விட, வெளியே செல்ல மனம் இல்லை என்பதே உண்மை. காரணம் ஈழத்தில் சென்றவாரம் காலமாகியிருந்த என்னுடைய மாமா தான். இருப்பினும் தமிழனாக பிறந்துவிட்டு, பொங்குதமிழுக்கு போகாமல் இருப்பது, சொந்த அடையாளத்தை இழப்பது போன்றதல்லவா. காலை 11 மணியிலிருந்து மதியம் 3 மணிவரை பொங்குதமிழில் பங்கெடுக்க சென்றிருந்தேன். அந்த நான்கு மணி நேரங்கள் மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருந்தது. அதிலும் எனக்கு, மாமாவின் மறைவும் மனதில் இருக்க போக, மிகவும் வேதனையான மணித்துளிகளாக அமைந்துவிட்டது. சென்றவாரத்திலிருந்து வீட்டில் மிகவும் சோகமான சூழல். துக்கம் விசாரிக்க வருபவர்களும், தூர தேசங்களிலிருந்து வரும் தொ…
-
- 18 replies
- 3.2k views
-
-
துண்டு நிலம் by தர்மு பிரசாத் • July 1, 2020 01 தடுப்பு முகாமிலிருந்து வீட்டிற்கு வந்து சரியாக முப்பது நாட்கள் கழிந்துவிட்டன. துடக்கு நாட்களில் சாமி அறையினுள் புழங்கும் பட படப்புடனே வீட்டினுள் நடமாட முடிகிறது. அம்மாவும், அப்பாவும் வேற்று மனிதர்கள் போலவும், இது அயலாரின் வீடுபோலவும், இங்கே நான் வழி தவறி வந்துவிட்டதாகவும் தோன்றியபடி இருக்கிறது. கண்ணாடிக் குவளையை பட்டுத் துணியால் துடைப்பதுபோல மிக கவனமாக என்னைப் பாவிக்கிறார்கள். உண்மையில் அப்படி இல்லை என்றாலும், அப்பாவிற்கு பதில் சொல்லும் போது உள்ளங்கை வியர்த்து, உதடுகள் இறுகிக் கொள்கின்றன. சொற்களை நிதானமாகத் தேர்ந்தெடுத்துப் பதட்டத்துடன் பதில் சொல்கிறேன். அவை சரியான பதில்கள் இல்லை என்றாலும், …
-
- 1 reply
- 783 views
-
-
சில வித்தியாசங்கள் – சுஜாதா வாங்குகிற முந்நூற்றுச் சொச்சம் 25 தேதிக்குள் செலவழிந்துவிடுவது சத்தியம். இன்றைய தேதிக்கு என் சொத்து – ஒரு டெரிலின் சட்டை, பெட்டி நிறையப் பிரமாதமான புத்தகங்கள், ராஜேஸ்வரி. கடைசியில் குறிப்பிட்டவள் என் மனைவி. இவளைப் பற்றிக் கம்பராமாயண அளவில் புகழ் பாடலாம். அதிகம் பேசாதவள். என் வக்கிரங்களையும், பணமில்லாததால் வரும் அர்த்தமற்ற ஆத்திரத்தையும், என் புத்தக ஆசையையும், வீட்டின் ‘பட்ஜெட்’டையும், சித்தார்த்தனின் அழுகையையும் சமாளிக்கும் சாமர்த்தியம் படைத்த இவள், என் வாழ்வின் ஒரே அதிர்ஷ்டம்! ஜாய்ஸின் ‘யூலிஸிஸ்’ வாங்க விரும்புகிறான் கணவன் என்று தன் மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்த மனைவியை நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா? இவள் மற்ற நகைகளையும் விற்றாகிவிட்டது…
-
- 10 replies
- 6k views
-
-
காதலர் தினச்சிறுகதை: ஆசை வெட்கமறியாதோ..? குரு அரவிந்தன் - நான் காதல் என்றேன், அவள் டேற்ரிங் என்றாள். ஒன்று மனசைத் தொட்டு உடலைத் தொடுவது, மற்றது உடலைத் தொட்டு மனசைத் தொடுவது. சரியா பிழையா தெரியவில்லை. - எழுபது கிலே மீற்றர் வேகத்தில் சென்ற நான் சைகைவிளக்கு சிகப்பு நிறத்திற்கு மாறவே வண்டியை நிறுத்தினேன். அதே வேகத்தில் வந்த அவள் எனது வண்டிக்கு அருகே தனது சிகப்புநிற வண்டியை நிறுத்திவிட்டு உதட்டுக்குச் சாயம் பூசிக்கொண்டிருந்தாள். இப்படியான முகஅலங்காரங்களை சாதாரணமாக சைகை விளக்குகளில் வண்டியை நிறுத்தும் போது பெண்கள் செய்வது வழக்கம். ஆனால் இவள் தலையை ஒரே சீராக வேகமாக அசைத்துக் கொண்டு உதட்டுக்கு அலங்காரம் செய்ததால் அவளது அந்தச் செய்கை என்னை அவளது பக்கம் திரு…
-
- 2 replies
- 994 views
-
-
பல வருடங்களுக்கு முன்னர் நடந்தது. என் மகனுக்கு அப்ப சின்ன வயது. பள்ளிக்கூடங்கள் சிறுவர்களை தண்டிப்பதற்காக கட்டப்பட்ட கட்டிடங்கள் என்பதை அவன் அந்த வயதிலேயே கண்டுபிடித்துவிட்டான். பள்ளிக்கூட நாட்களில் காலையில் அவனை உருட்டி உருட்டித்தான் எழுப்பவேண்டும். பள்ளிக்கு போகமுன்னர் ஒவ்வொருநாளும் உணவு மேசையை சுற்றி பத்து தடவை ஓடிவிட்டுத்தான் புறப்படுவான். ஆனால் சனி, ஞாயிறு நாட்களில் அதிகாலையிலேயே எழும்புவான். அந்த நாட்களில் ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்கக்கூடாது என்பதில் அவனுடைய உறுதி தெரியும். வெளியே விளையாடப்போனால் இருட்டிய பின்னர்தான் வீடு திரும்புவான். நான் சொல்வேன் ’இன்று முழுக்க விளையாடியது போதும். இனி படிக்கலாம்.’ ’இப்பவேயா?’ என்பான். ‘இல்லை அடுத்த கிறிஸ்மஸ் வரும்போது’ என்பேன் நான…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிவப்புக்கல் மோதிரம் - சிறுகதை பாவண்ணன் - ஓவியங்கள்: ஸ்யாம் ``இன்னிக்கு என்ன பூமழையா? இப்படி ஏராளமான பூக்கள் விழுந்து கெடக்குது!” இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, வாசற்கதவைத் திறக்கும் வரையில் தமிழுடன் பேச்சை எப்படித் தொடங்குவது என்ற குழப்பத்தில் தத்தளித்தபடி இருந்தேன். ஆனால், சுற்றுச்சுவர் கம்பிக்கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்ததும், சுவருக்கும் வீட்டுவாசலுக்கும் நடுவில் நின்றிருக்கும் மகிழமரத்தடியில் விழுந்துகிடக்கும் பழைய பூக்களின் குவியல் மீது உதிர்ந்திருக்கும் புதிய பூக்களைப் பார்த்ததும் உரையாடலுக்கு ஒரு தொடக்கம் கிடைத்துவிட்ட வேகத்தில்தான் அப்படிக் கேட்டேன். ஆனால், மறுகணமே அந்த வேகம் வடிந்துவிட்டது. அதற்குள் ``எல்லாம்... `வருக …
-
- 1 reply
- 3.3k views
-
-
சின்ராசு மாமாவின் சேட்டுப் பொக்கற்றுக்குள் பீடி, சுருட்டு, சிகரெட், சிகரெட் பெட்டி என்பவற்றைப் பார்த்து அவருக்கு இப்ப தொழில் அந்த மாதிரியா, அல்லது நொந்தமாதிரியா என்று நான் சொல்வேன். “என்ன மாமா இண்டைக்கு உங்கடை கடலம்மா பாத்துப்பாராமல் தந்திருக்கிறா போலை” என்று நான் சொன்னால் அவர் சிகரெட்டை பெட்டியாகவே வைத்திருக்கிறார் என்றும் மணிக்கொரு தடவை ஊதித்தள்ளுகிறார் என்றும் அர்த்தம். அவரிடம் சிகரெட், பீடி, சுருட்டு என்பன போலவே கட்டுமரம், கரைவலை, மீன்பிடி வள்ளம், ரோலர் என்ற சாமான்களும் மாறி மாறி வந்து போயின. எப்பவாவது சமாதானம் வாறநேரம் அவர் அங்கையிங்கை கடன்பட்டு நல்ல மீன்பிடிப் படகாக வாங்குவார். பிறகு எல்லாம் முடிந்து வழமைபோல நேவி கடலுக்கை அடிக்கத்தொடங்க ஆழக்கடல் போகாட்டில் வள்ளமெதுக…
-
- 23 replies
- 4.8k views
-
-
அவுஸ்ரேலியாவுக்கு முதல்முதல் வந்தவுடன் மனிசி முருகன் கோவிலுக்கு போகவேணும் வாங்கோ என அழைத்தாள்.மறு பேச்சு இல்லாமல் வெளிக்கிட்டு போனேன்.புதுசா என்னைத்தை செய்தாலும் ஆண்டவனிடம் அனுமதி பெறுவது எங்கன்ட மனசில் பதிந்த ஒன்று.. காரில் போகும் பொழுது மனிசி சிட்னி முருகனின் சரித்திரம் சொல்லிகொண்டு வந்தாள் .நல்லூர் கந்தனுக்கு ஒரு கதை இருக்கு,செல்வசந்நிதிமுருகனுக்கு ஒரு கதை இருக்கு அதுபோல் நம்மட சிட்னி முருகனுக்கும் ஒரு சரித்திரம் உண்டு.ஒரு முருகதொண்டன் அவரை இந்தியாவிலிருந்து கொண்டுவந்து தனது வீட்டில் வைத்திருந்து ஓவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் ஒரு பாடசாலை மண்டபத்தை வாடகைக்கு எடுத்து அங்கு எம்பெருமான் முருகனுக்கு பிராமணர்களின் ஆசியுடன் பூஜை செய்து வந்தவராம். அந்த காலகட்டத்தில் அவுஸ்ர…
-
- 34 replies
- 5.4k views
-
-
பிரபல ரவுடி 'குரங்கு குமார்': வளர்ச்சியும் & வீழ்ச்சியும் | செங்கல்பட்டு நகரத்தை கலக்கிய குரங்கு குமாரின் கொலை சம்பவம்! யார் இந்த குரங்கு குமார்? அவருடைய குடும்ப பின்னணி, பிரபல ரவுடி ஆன கதை. இறுதியில் யாரால் கொல்லப்பட்டார்? எதற்காக கொல்லப்பட்டார் குமார்
-
- 1 reply
- 5k views
-
-
இரவு வேளையில்.. எனக்கு பரப்புரைக் கூட்டங்கள் இல்லாத வேளையில், நான் வீட்டில் இருந்து கவிதையோ கட்டுரையோ எழுதிக் கொண்டிருப்பேன்.. அந்த வேளைகளில் அவள் என் காலடியில்தான் அனேகமாக இருப்பாள்! உடனே நீங்கள் கற்பனைக் குதிரையை தட்டி விட்டு, நான் ஏதோ என் பழைய காதலியைப் பற்றி எழுதப் போகிறேன் என்று நினைத்தால்… ஏமாறப் போவது நிச்சயம் நீங்கள்தான்! அவள் ஓர் சிறுமி..! தூரத்து.. உறவு முறையில் அவள் எனக்கு மகள்தான்..! அப்போது ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்..! நிறம் கறுப்புத்தான்.. ஆனால்.. அவளிடம் எனக்கு எப்போதுமே பிடித்தது அவளது அந்த கருவிழிகளும் கூரிய நாசியும் நீண்ட கூந்தலும்தான்.. “சித்தப்பா”.. என்றுதான் எப்போதும் என்னை கூப்பிடுவாள்!.. வகுப்பில் கொஞ்சம் மக்கு!.. அதனால், தா…
-
- 11 replies
- 2.4k views
-
-
வணக்கம்! நானும் தங்கையும் சேர்ந்து எனது "இல்வாழ்வு தந்த இயலாமை" என்ற கதையை "கானமும் கதையும்" ஆகச் சொல்கிறோம் கேட்டுப்பார்த்திட்டுச் சொல்லுங்கோ. கானமும் கதையும் I
-
- 16 replies
- 2.7k views
-
-
“உ.பி மாநிலத்தின் லக்னோவைச் சேர்ந்தவர். மத்திய பீகார் கிராம வங்கியில் பணிபுரிபவர். பெயர் வினோத் ஸ்ரீவத்சவா. இராமேஸ்வரத்துக்கு டூர் சென்றபோது விபத்து நடந்திருக்கிறது. அவரது மனைவி அங்கேயே இறந்துவிட்டார். இரண்டு மகள்களும், ஒரு மகனும் அவரும் இப்போது மதுரை ஏர்போர்ட்டில் இருக்கிறார்கள். உடனடியாகச் சென்று அவர்களுக்கு உதவி செய்யுங்கள்” இதுதான் 31.8.2011 காலை 8 மணிவாக்கில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அர்விந்த் சின்ஹா எங்களிடம் சொன்ன தகவல். அவர், எங்கள் All India regional Rural Bank Employees Association (AIRRBEA பீகார் மாநிலக்குழுவின் முக்கிய தோழர். திருச்சியில் நடந்த எங்கள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டத்திற்கு நாங்கள் சென்று கொண்டு இருந்த வேளை அது. மதுரையில் வசிக்கும் எங்கள…
-
- 5 replies
- 988 views
-
-
"தைரியமானவள்" வவுனியாவில் உள்ள ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும். இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும். அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை! "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்…
-
- 0 replies
- 722 views
-
-
இப்போது சயந்தன் எழுதியிருக்கும் ஆறாவடு நாவலும் மிக முக்கியமான ஆவணங்கள் இந்த மூன்றுமே ஈழ சினிமாவுக்கான கதைக் களத்தைக் கொண்டிருக்கின்றன. அதிலும் தோழர் கோவிந்தனின் நாவலும், சயந்தனின் நாவலும் மிக மிக முக்கியமான பதிவைச் செய்திருக்கின்றன. இதை திரைப்படமாக்குவது தொடர்பாக நான் ஆறாவடு நாவலை எழுதிய சயந்தனிடம் பேசினேன். மேலும் சில நண்பர்களுடன் பேசினேன். தமிழ் சினிமா இயக்குநர்களால் ஈழ மக்களுக்கான சினிமாவை எடுக்க முடியாது.-அருள் எழிலன் http://www.globaltam...IN/article.aspx
-
- 5 replies
- 1.3k views
-
-
மீதமிருக்கும் கனவுகளின் ஈரம் ஜிஃப்ரி ஹாசன் களுத்துறைக்குச் செல்வதற்காக புறக்கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னால் பஸ்சுக்காக காத்துக் கொண்டு நின்றேன். எனக்கு கொழும்பு வரக் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் களுத்துறையிலுள்ள எனது நண்பன் ஒருவனை அநேகமாக சந்திக்கச் செல்வது வழக்கம். அவனும் அதை விரும்பி இருந்தான். எனது பல்கலைக் கழகத் தோழியான மிதிலா பாணந்துறையைச் சேர்ந்தவள். அவளது ஊரைக் கடந்துதான் அங்கு செல்ல வேண்டும். ஆனால் அங்கு செல்லும் ஒவ்வொரு பொழுதும் பாணந்துறை வரும் போது எனக்குள் பதட்டமும் ஒருவித சோகமும் கவிழ்ந்து கொள்கின்றன. இத்தனை ஆண்டுகள் கழித்தும் என்னால் அந்த ஞாபங்களிலிருந்து இன்னும் விடுபட முடியாதிருப்பது ஓர் ஆழமான அர்த்தத்தில் நான் தோற்றுப் போய்விட்டதாக உணர்கிறேன்.…
-
- 0 replies
- 856 views
-
-
உளவாளி இளங்கோ அவன் கனடாவிற்கு வந்ததன்பிறகு இப்போதுதான் முதன் முதலாக இலங்கைக்குப் போகின்றான். குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சிப்பூக்களைப் காண்பதை போன்ற உணர்வுடன் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கட்டுநாயக்காவை விமானத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தான். குடிவரவிற்கான அதிகாரி, 'உனது நாடு எது?' எனக் கேட்டதற்கு இலங்கையைக் கூறுவதா அல்லது கனடாவைக் கூறுவதா என்ற குழப்பம் ஏற்பட்டது. இப்படியான அரசியல் சிக்கல்கள் தனக்கு நேரக்கூடாதென்றுதான் ஒரு ஆலோசகரை இவன் எப்போதும் தன் அருகிலேயே வைத்திருப்பான். அவளின் பெயர் குகதர்மினி. அழகான முழுப்பெயரை தர்மினி என வெளிநாகரீகத்திற்கு ஏற்ப மாற்றிவைத்திருந்தாள். …
-
- 5 replies
- 1.3k views
-
-
அவரவருக்குச் சொந்தமான நிலம் குலசேகரன் ஓவியங்கள்: ரவி அன்றும் வழக்கம்போல் நாராயணமூர்த்தி காலை வேளையில் நிலத்துக்குப் புறப்பட்டார். ஊரில் வசிப்பவர்களில் பலர் நகரத்துக்குக் குடி பெயர்ந்து போய்விட்டதால் வெறிச்சோடியிருந்த தெருக்களின் வழியாக நடந்தார். குட்டையான கோபுரத்தில் சுண்ணாம்புச் சிற்பங்கள் சிதைந்து மூளியாக நிற்கும் பழைய மாரியம்மன் கோயிலையும் கடந்து ஆற்றை நெருங்கினார். நிறைய மரங்கள் வெட்டப்பட்ட கரை வெறுமையாக நீண்டிருந்தது. பழைய ஞாபகங்ளோடு ஆற்றில் முகத்தைக் குனிந்து பார்ப்பதுபோல் எஞ்சியிருந்த சில மரங்கள் கவிந்து நின்றிருந்தன. ஆழ்ந்த பெருமூச்சுடன் அவர் ஆற்றில் இறங்கினார். எங்கும் மணல் பரவியிருந்த ஆறு பெரிய பாலைவனமாகத் தோற்றமளித்தது. எண்ணற்ற கா…
-
- 0 replies
- 751 views
-
-
அன்றுதான் அண்ணா வீட்டில் இருந்து எங்கள் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தேன் வழியில் செல்லும் பேருந்து நிறுத்தப்பட்டது எல்லோரையும் சோதனையிட்டார்கள் நானும் கொஞ்சம் கறுப்பாக இருப்பதால் என்னையும் கீழ் இறக்கு சோதனையிட்டார்கள் நீ மட்டக்களப்பை சேர்ந்தவன் உனக்கு என்னடா இங்கு வேலை என்று கேட்டு கேட்டு விசாரித்தார்கள் நானும் என் அண்ணனை பார்க்கதான் திருகோணமலை வந்திருக்கிறேன் என்று சொன்னேன் வாடா உன்னை விசாரிக்க வேணும் என்று சொல்லி முகாமுக்குள் கூட்டி சென்றனர் .அங்கு சென்ற எனக்கு கை கால்கள் எல்லாம் உதறியது .யாரோ ஒருவர் முன்னால் நான் நிறுத்தப்பட்டேன் அவருக்கு கண்கள் தெரிய முகங்கள் மறைக்கப்பட்டிருந்தது. என்னை முன் நிறுத்தி இவனா என்றார்கள் அப்போது எனக்கு ஒன்றும் புரியவில்லை அண்ணனுக்…
-
- 22 replies
- 4.7k views
- 1 follower
-
-
------------------------------------------------------------------------------ ----------------------------------------------------------------------------- ------------------------------------------------------------------------------ ----------------------------------------------------------------------------- ------------------------------------------------------------------------------ ---------------------------------------------------- தொடரும்...........................
-
- 0 replies
- 855 views
-
-
டார்வினின் வால் கிறிஸ்டி அவன் அருகே வந்து “ஒரு பெயர் வைக்கலாமா?” என்றபோது அவன் ஏதும் பேசாமல் அவள் கண்களையே பார்த்தான். அக்கண்களிலிருக்கும் குழந்தைமை அவனுக்கு எப்போதும் ஆசுவாசமளிக்கும். “சொல்லுங்க அங்கிள் என்ன பெயர்” என்றாள் மறுபடியும் அழுத்தமாக. பிறகு அவளே ஒருகணம் யோசிப்பது போல பாவனைக் காட்டி “டார்வின்” என்றாள். அவன் ஆச்சர்யமாக நிமிர்ந்தான். எதற்காக அப்பெயரை தேர்ந்தெடுத்தாளெனக் கேட்கத் தோன்றவில்லை. ஏதோவொரு வகையில் ஒரு அடையாளத்திற்கு அப்போதைக்கு அப்பெயர் தேவையாகத்தான் பட்டது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அக்கணத்திலிருந்து இருவருடைய பிரக்ஞையிலும் டார்வின் என்ற சொல் உச்சரிக்கத் துவங்கியது. இந்த பெயர் அவளின் வளர்ப்பு பூனைக்கோ நாய்க்கோ அல்ல அவா்கள் பிடிக்கப் போக…
-
- 0 replies
- 1k views
-
-
அண்டை வீட்டு நல்லவன்! - சிறுகதை எழில்வரதன் - ஓவியம்: ரமணன் அசையாம பல மணி நேரமா காம்பவுண்டு சுவத்துக்கு முட்டுக்கொடுத்து உக்காந்திருக்காரே... அவர் பேரு பார்த்தசாரதி. இப்ப யார்கிட்டயும் பேச மாட்டார். அவருக்கு பொண்டாட்டியோட சண்டை. ரெண்டு நாளா வயிறும் சரியில்லை; வாழ்க்கையும் சரியில்லை. அதனால, ஒருத்தர்கிட்டயும் பேசக் கூடாதுங்கற வைராக்கியம் அவருக்கு. அவரைப் பார்க்க ரொம்ப நாள் கழிச்சு ஒரு ஃப்ரெண்டு வந்தாங்க. பேரு அமுதவள்ளி. பார்த்தசாரதியோட அந்தக் காலத்து டாவு. அவங்களுக்கு இப்ப ரெண்டு குழந்தைங்க. பார்த்தசாரதிகிட்ட, `கல்யாண வாழ்க்கை எப்படிடா போயிட்டிருக்கு?’னு கேட்டாங்க. பார்த்தசாரதிக்குக் கல்யாணம் முடிஞ்சி, ஆறு மாசம்தான் ஆச்சு. தாம்பத்ய வாழ்க்கையில பயங்கரத…
-
- 0 replies
- 4k views
-
-
ஒரு நிமிடக் கதை பழக்கம் காலை டிபனாக பொங்கலை எடுத்து சுவைத்த ராகவனின் முகம் சிவந்தது. ‘‘எனக்கு இஞ்சி பிடிக்காதுன்னு தெரியுமில்ல? இத்தனை நாளா இஞ்சி போடாமதானே இருந்தே? அப்புறம் ஏன் இன்னைக்குப் போட்டே?’’ - பொங்கலைத் துப்பியபடி கேட்டான். ‘‘இதுவரைக்கும் சாப்பிடலை. இனிமே சாப்பிடுங்க!’’ என்றபடி கிச்சனுக்குள் சென்றுவிட்டாள் சுசீலா. மதியம் பசியுடன் அமர்ந்த ராகவன், சாம்பாரில் முள்ளங்கி தெரிந்ததும், எரிச்சலானான். ‘‘ஏண்டி! எனக்கு முள்ளங்கி வாசனையே பிடிக்காதுனு தெரியுமில்ல?’’ - போனில் கேட்டான். ‘‘மூக்கை மூடிக்கிட்டுச் சாப்பிடுங்க!’’ என்று ‘கட்’ ஆனாள் சுசீலா. அலுவலகம் முடிந்து திரும்பிய ராகவனை, சூடான மெதுவடைகள் வரவேற்றன. ‘‘ஆஹா!’’ என்று எடுத்துக் கடித்தவன், கோபத்தில் வ…
-
- 1 reply
- 1.3k views
-
-
மீனுக்கும் கற்பு உண்டு! ரேகா ராகவன் ‘‘ச ரவணன் சார்... லைப்ரரி புக் கொண்டுவந்திருக்கேன்!’’ - எதிரே அழகுச் சிலையாக ரமா. காலேஜில் படிக்கும் பக்கத்து வீட்டுப் பெண். சரவணனிடம் அவளுக்கு அப்படி என்னதான் ஈர்ப்போ... லைப்ரரி புத்தகம் வாங்கிப் போகிற, பாடப் புத்தகத்தில் சந்தேகம் கேட்கிற சாக்கில் அடிக்கடி வீட்டுக்கு வந்து ஒட்டிப் பழகுகிறாள். ஆருயிர் மனைவி சித்ரா இறந்து ஒரு வர…
-
- 1 reply
- 972 views
-
-
வாய் அந்த இளைஞனை நெடுநேரமாய் கூர்ந்து பார்த்தேன்.... எங்கேயோ பார்த்த முகம்... நன்கு தெரிந்த ஒரு முகத்தின் அச்சு மின்னி மின்னி மறைந்தது... யாராக இருக்கலாம் ... கேட்க வேண்டும்போல மயிர்க் கூச்செறிந்தது... திகைத்து நின்றேன்... கழுத்தில் சுருட்டிவிட்ட நேர்த்தியான இளம் கம்பளிச் சட்டை, உடம்போடு அளவாகப் பிறந்ததுபோல நேர்த்தியான லோங்ஸ்... அவனுடைய சப்பாத்தின் கூரிய முனையின் பளபளப்பில் என் முகம் தெரிந்தது... அருகில் சென்றேன்... மேலும் ஒரு அடுக்கு கூர்மையாகப் பார்த்தேன்... களிம்பு போட்டு சுருள விட்ட கேசம்...அரும்பாத புதிய மீசை.. உயரம் போலவும், திடகாத்திரம் போலவும் ஒரு காந்தத் தோற்றம்.. கதைப்பதற்கு ஆயத்தமானேன்.. அதற்குள் யாரோ ஒருவர் கைகாட்ட ஓடிப்போய் காரில…
-
- 10 replies
- 2.3k views
-