கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்! கம்பார்ட்மென்ட் முழுக்க நிலக்கடலைத் தொலி கிடக்கும். கூடவே, பனங்கிழங்குப் பீலியும் தும்புகளும். இதுவே பண்டிகைகளைப் பொருத்து கரும்புச் சக்கைகள், சம்பா அவல் சிதறல் எனக் கிடக்கலாம். டி.டி.ஆர்., வள்ளென்றுதான் விழுவார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. நாகர்கோவிலிலோ வள்ளியூரிலோ ஏறின அண்ணாச்சி ‘கண்டக்டர் தம்பி... திர்னெலி எப்பொ வரும்’ எனக் கடுப்பைக் கிளப்பியிருப்பார். சீட்டு நம்பர், பெர்த் நம்பர் என இரண்டு எண்கள் எல்லா ரயிகளிலும் இருக்கும். இரண்டில் ஏதாவது ஒன்று பொருந்தினால் போதும் என்பது பயணிப்பவர்களின் பொது அபிப்பிராயம். இதுதான் என் பெர்த் என வாதிடும் எவரும் வென்ற தில்லை. ‘‘ரெண்டு நம்பர் போட்டு வெச்சவன்ட போயிக் கேளுலெ... எங்கிட்ட ஏன் எழவு எடு…
-
- 1 reply
- 969 views
-
-
மழை பெய்து வெள்ளம் வந்தால் அதை கடலுக்குள் கொண்டு சேர்ப்பதற்கான வாய்க்கால் எங்கள் ஊரிலே இருந்தது. எங்கள் ஊர் கிராமக்கோட்டுச் சந்தியில் இருந்த மதவின் கீழாக அந்த வெள்ளவாய்க்கால் வடிவமைக்கப்பட்டிருந்தது. கனமழை பெய்தால் அந்த வெள்ளவாய்க்காலில் வெள்ளம் கரைபுரளும். பலவிதமான பொருட்கள் அந்த வெள்ளத்தில் மிதந்து வரும். கூடைகள், பெட்டிகள், பாய்கள் என்று ஏகப்பட்ட பொருட்களுடன் சிலவேளைகளில் கோழிகள், பாம்புகளைக் கூட அந்த வெள்ள ஓட்டத்தில் காணலாம். கோடைகளில் தண்ணீர் இன்றி வாய்க்கால் காய்ந்திருக்கும். உடைந்த போத்தல் துண்டுகள், கற்கள் என பல குப்பைகள் அங்கே குவிந்திருக்கும். வெள்ளவாய்காலின் மேலே இருந்த சந்தி மதவை எப்பொழுது பார்த்தாலும் அழுக்காகவே தெரியும். எங்கள் ஊர் இளம் காளையர்கள் அதாவத…
-
- 2 replies
- 1.1k views
-
-
அவன் ஒரு சிறு கிராமத்தை சேர்ந்தவன்.கிரிக்கட் விளையாட்டு என்றால் அவனுக்கு நிகர் அவனேதான். பாடசாலை முடிந்து வீடு வந்து உணவு உட்கொண்டபின்பு மீண்டும் அதே பாடசலைக்கு விளையாடுவதற்காக சென்றுவிடுவான்.பாடசாலை அவனது வீட்டிற்க்கு அருகாமையில் இருந்தமையால் மிகவும் வசதியாக இருந்தது .விளையாட்டு ஆசிரியரும் அவனோடு மிகவும் நெருக்கமாக இருந்தார்.தேனீர் ,சிற்றூண்டிகள் போன்றவைகளை கொடுப்பான்.ஆசிரியரும் சில விளையாட்டு நுட்பங்களை கற்றுகொடுத்தார். படிப்பில் அவ்வளவு சுட்டி என்று சொல்ல முடியாது.ஆனால் ஆங்கிலத்தில் அவனுக்குத்தான் அதிக புள்ளிகள் கிடைக்கும் அவனது பெற்றோர்களும் ஆங்கிலத்தில்தான் இவனுடன் உரையாடுவார்கள் இவனும் நன்றாகவே ஆங்கிலத்தில் அந்த வயசில் பேசுவான். பாடசாலை கிரிக்கட் அணியில் தெறிவு…
-
- 12 replies
- 1k views
-
-
மூன்றாம் வகுப்பாக இருக்கலாம் தென்னை மட்டையில் பட் செய்து நெதர்லாந்தில் இருந்து வந்த உருளைக்கிழங்கு விதை பெட்டியில் ஒரு பகுதியை வெட்டி விக்கெட் ஆக்கி, வீட்டிற்கு முன் இருந்த ஒழுங்கையில் டென்னிஸ் பந்துடன் தொடங்கியது கிரிக்கெட் பைத்தியம் . பாடசாலை முடிய பின்னேரம் ,சனி ஞாயிறு காலை மாலை என விளையாட்டுத்தான் .எனது அண்ணர் ,தம்பி, அடுத்த விட்டுக்கார பகி ,சுதா என்று ஐந்து பேரும் தான் டீம் .மாறி மாறி பந்து எறிவதும் பாட்டிங் செய்வதும் என்று அலுக்காமல் விளையாடுவோம் .தம்பிக்கும் பக்கத்துக்கு விட்டு பகிக்கும் அவ்வளவு ஆர்வம் இல்லை இருந்தாலும் நாங்கள் கொடுக்கும் அலுப்பால் அவர்களும் வருவார்கள் .பக்கத்துக்கு வீட்டு சுதா மட்டும் இடக்கை ஆட்டக்காரன். விடுமுறை என்றால் காலை எட்டுமணிக்கே கதவை…
-
- 21 replies
- 2.4k views
-
-
கிருஷ்ண ரேகையோடு பிறந்தவன்! கிருஷ்ண ரேகையோடு பிறந்தவன்! ம.காமுத்துரை ‘‘நா ப்பது வயசுல ரெண்டாங் கல்யாணம்கறது, அவன் முடிவு செஞ்சது சாமி! அதுதே நடக்கணும்னு எழுதி இருந்தா நாம என்னா செய்ய முடியும்... என்னா?’’ புது மாப்பிள்ளை மினுமினுப்பில் இருந்தான் குருசாமி. சிவப்புத் தோலும், இழுத்துச் சீவி ஒட்ட வெட்டிய கிராப்பும், வெள்ளை முடி வெளிக்கிளம்பா வண்ணம் நாளரு தரம் சவரஞ் செய்து செய்து பச்சை படர்ந்த முகமும், முன் உதட்டில் ஒதுக்கிய வாச…
-
- 1 reply
- 919 views
-
-
காட்சி 2 : மணி 5.30. கடற்கரையில் அனிதா தன் காதலனுக்காக காத்திருக்கிறாள்.... இருவரும் 7 வருடங்களாக காதலிக்கிறார்கள்.... பள்ளிப் பருவத்திலேயே தொடங்கி விட்ட காதல்... கிருஷ்ணா +2 படித்துக் கொண்டிருந்தான்.... அனிதா +1 படித்துக் கொண்டிருந்தாள்.... அப்போது அரும்பிய காதல் 7 வருடமாக நீக்கிறது.... கிருஷ்ணாவின் மாமன் மகள் தான் அனிதா என்றாலும் அவர்கள் குடும்பத்தில் இருந்த பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இயல்பாக அவர்கள் மணமுடிக்கத் தடையாக இருந்தது.... கிருஷ்ணாவும் எப்படியோ தட்டுத் தடுமாறி வாழ்க்கையில் முன்னுக்கு வந்து கொண்டிருந்தான்.... இனி இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள் என்று தெரிந்தால் கூட குடும்பத்தில் பிரச்சினைகள் வர வாய்ப்பில்லை..... "சரியா 5.15 மணிக்கெல்லாம் வந்துடுவ…
-
- 25 replies
- 5.9k views
-
-
கிறிஸ்துமஸ் லைட்ஸ் – தன்ராஜ் மணி “ரூப், விண்டோ எல்லாத்துலயும் நிறைய… நிறைய்ய்ய்ய லைட்ஸ் வேணும் இந்த இயர்,” கைகளை அகல விரித்து சுவர் அகலத்திற்கு நீண்டிருந்த சாளரத்தின் முன்நின்று குதித்துக் கொண்டே சொன்னான் டெரி. சோபாவில் உட்கார்ந்திருந்த தேவதாஸ் ஐபேடில் இருந்து தலையைத் தூக்கி அவனைப் பார்த்துச் சிரித்தார். “இங்க வா,” என்றார் ஐபேடை சைட் டேபிளில் வைத்தபடி. ஓடி வந்து, வந்த வேகத்தில் தாவி, கால் முட்டியைத் தன் அப்பாவின் மடியில் அழுத்தி, முகத்தை அவர் மார்பில் பதித்து, கட்டிக் கொண்டான். வலியில், “ஐயோ,” என்று கத்தி விட்டார் தேவதாஸ். “எத்தன வாட்டி சொல்றது உனக்கு. இயர் த்ரி போய்ட்ட, இப்படி வந்து எம் மேல குத…
-
- 2 replies
- 1.2k views
-
-
கிறிஸ்மஸ் பரிசு ................. யாழ் நகரத்தின் மையப் பகுதியில் இருந்து சற்று தொலைவில் அமைந்து இருந்தது . அந்தக் கன்னியர் மடம். அங்கு இருபகுதிகளாக் பாடசாலையும் விடுதியுமாக பிரிக்க பட்டு பலகால்மாக இயங்கி வந்தது. இருப்பினும் சில ஆண்டு களுக்கு முன் படையினரின் அட்டகாசங்கள் குண்டு மழை போன்றவரால் சீர் குலைந்து . ஒரு சில மாதங்கள் தான் அது புனரமைக்க் பட அனுமதி பெற்று , ஆரம்பிக்க பட்டது . கடந்த கால் நடவடிக்கையில் குண்டுவீச்சுக்கும் கூரை சிதைவுகளுக்கும். கன்னியர் மடங்கள் தேவாலயங்களும்விதிவிலக்காகவில்லை. அந்த மடத்தில் , இப்போது தான் , சில புண்ணியவான்களின் நன் கொடையினாலும் தொண்டு ஸ்தாபனங்ளின் உதவியாலும் சிறுக சிறுக கட்ட பட்டு கொண்டு இருக்கிறது.அண்மையில் பல வ…
-
- 4 replies
- 2.2k views
-
-
கிறீஸ் மனிதனுக்கும் புலிக்கும் என்ன தொடர்பு.. ஒரே குழப்பம்… மேலும் கண்களைச் சுழற்றினார்… துப்பறியும் ஜாக்கிச்சானின் கண்ணாடி மேசையில் இருந்த ஐபோன் கண் சிமிட்டியது.. கிறீஸ் மனிதன் என்ற பெயர் அதில் மின்னி மறைந்தது.. ஜாக்கிச்சான் சிந்தித்தார்.. தனது சுங்கானை எடுத்து சிகரட் துகள்களை பொத்தி அடைந்துவிட்டு தீ மூட்டி புகையை இழுத்தார்… மனம் புகைக்குள் மறைய அங்கே ஒரு புலி தெரிந்தது.. கண்களை கூர்மையாக்கிப் பார்த்தார்… புலியேதான்.. கிறீஸ் மனிதனுக்கும் புலிக்கும் என்ன தொடர்பு.. ஒரே குழப்பம்… மேலும் கண்களைச் சுழற்றினார்… அது புலிதான் ஆனால் பழைய தமிழ்நாடு வண்டலூர் செக்ஸ் புலி… பாவம் பரிதாபமாகப் படுத்திருந்தது.. அவசரமாக நூல் நிலையம் வந்து, தமிழ…
-
- 6 replies
- 2k views
-
-
கிளி அம்மான் -கோமகன் இன்று எனக்கு விடுமுறை நாள் என்ற பொழுதும் நித்திரை என்வசப்படவில்லை.இன்று கிளி அண்ணையின் நினைவு நாள் என்பதால் அவரின் நினைவுகளே என்மனமெங்கும் நிரம்பியிருந்தன. நான் அதிகாலையிலேயே எழுந்து விட்டிருந்தேன்.என் மனைவி இன்னும் எழுந்திருக்கவில்லை.வேலைக்கு செல்லும் அவளை நான் குழப்ப விரும்பவில்லை.நான் எழும்பியவுடன் முதல் வேலையாக குளித்துவிட்டு ஓர் சாம்பிராணிக்குச்சியை கிளி அண்ணையின் படத்துக்கு முன்னால் கொழுத்தி வைத்து விட்டு அவரின் முகத்தை தொடர்ந்து பார்க்க திராணியற்றவனாக எனக்கான தேநீரைத் தயாரித்துக்கொண்டு பல்கணிக்கு வந்தேன்.பல்கணியின் முன்னே இருந்த மரங்கள் யாவும் பச்சையத்தை தொலைத்து உறைந்து போய் இருந்தன.குளிர் எலும்பை சில்லிட வைத்தது.கீழே தரையில் பனி மூட…
-
- 20 replies
- 2.7k views
-
-
பூசாரி தாத்தாவின் வீடு பனையோலைகளால் வேயப்பட்டது. அந்த வீடு கொடுத்த சில்லிப்பை எந்த ஏசியாலும் கொடுக்கவே முடியாது. வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் மண்தரையை சாணத்தால் மொழுகுவார் பூசாரி பாட்டி. அவர்கள் வீட்டுக்கு சென்றாலே சாணமணம் அடிக்கும். வீட்டுக்கு முன்பாக ஆலமர விஸ்தீரணத்தில் மிகப்பெரிய வேப்பமரம் ஒன்றிருக்கும். எங்கள் தெருவாசிகளின் வேடந்தாங்கல் அது. அம்மரத்தில் பொன்னியம்மன் இறங்கியிருப்பதாக பூசாரி தாத்தா சொல்வார். இரவு வேளைகளில் உச்சா போவதற்காக அப்பாவை துணைக்கழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வரும்போது, இருளில் அந்த மரம் மினுக் மினுக் என ஒளிருவதை கண்டிருக்கிறேன். மின்மினிப் பூச்சிகள் அதற்கு காரணமாய் இருந்திருக்கலாம். மரத்தின் பிரம்மாண்டமும் ஒரு மாதிரியான அடர்த்தி தோற்…
-
- 4 replies
- 3.8k views
-
-
[size=4]கிளிநொச்சியின் நினைவுகள் என்னை அறியாமல் மீள மீள கண்முன் [/size] [size=4]வந்து போகிறது.சிங்கள அரசின் சத்ஜெய இராணுவ நடவடிக்கையால் [/size] [size=4]இழந்த கிளிநொச்சியை தமிழர் மீண்டும் கைப்பற்றினர்.2001 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் [/size] [size=4]தமிழரின் மீள்குடியேற்றம் ஆரம்பம் ஆகிற்று.வளமான கிளிநொச்சி [/size] [size=4]உடைந்த கட்டிடங்களாலும்,பற்றைகளாலும் உருமாறிக்கிடந்தது.ஒருநாள் [/size] [size=4]கனகபுரத்திலிருந்து டிப்போ சந்திக்கு போகும் பாதையில் சென்று [/size] [size=4]இடப்பக்கமாய் கண்ணன் கோயில் ஒழுங்கையால் திரும்பி மோட்டார்சைக்கிளில் [/size] [size=4]போய்க்கொண்டிருந்தோம்.வேலிக்கரையோரமாய் நீளக்கோடுகள் [/size] [size=4]உள்ள சாரம் ஒன்று விரித்ததுபோல் கிடந்தது.மோட…
-
- 9 replies
- 1k views
-
-
அன்றைக்குச் சந்திரனுக்கு மகளின் பள்ளிக்கூடத்திலிருந்து, ஒரு தொலைபேசி அழைப்பொன்று வந்தது. அவனது மகளின்,பள்ளிக்கூட அதிபர் தான் ஏன் மகள் ஒரு கிழமையாப் பள்ளிக்கூடம் வரவில்லை என விசாரித்தார். அவள், வயசுக்கு வந்து விட்டதால், மூன்று நாட்கள் பாடசாலைக்குப் போகாமல் தாய்க்காரி நிப்பாட்டியிருந்தா. வாற திங்கட்கிழமை, கட்டாயம் மகளைப் பள்ளிக்கூடம் அனுப்புகின்றேன் என்று அதிபருக்குச் சொல்லி வைத்தான். பிள்ளையின்ர சாமத்திய வீட்டைப் பெருசாச் செய்து போட வேணும், எண்டு மாமி சொன்னது கேட்டது. சரி, உங்கட விருப்பப் படி,செய்யுங்கோ! ஆனால்,ஆகப்பெரிய ஆரவாரமெல்லாம், செய்யக் கூடாது. இப்பவே சொல்லிப் போட்டன். முதல்ல, அவளைப் பள்ளிகூடத்துக்கு, அனுப்பி விடுங்கோ. பிரின்சிப்பல், ஏன் வரேல்லை எண்டு அடிச…
-
- 34 replies
- 2.7k views
-
-
[size=4]அட...போய்க் குளியனடா...............[/size] [size=4]வழக்கமான, சனிக்கிழமைச் சத்தத்தில் , அந்தச் சிட்னியின் புறநகர்த் தெரு ஒரு முறை, புரண்டு படுத்தது![/size] [size=4]அந்தத் தெருவுக்குப் புதிதாக வந்திருந்த அம்மா தான், தனது பேரனைக் கோவிலுக்கு அழைத்துப் போவதற்காக, குளிக்க வைக்க முயற்சிக்கிறாள்![/size] [size=4]இந்தத் தெரு, அந்த அம்மா வர முந்திக் கொஞ்சம் அமைதியாகத் தான் இருந்தது! அந்தத் தெரு மட்டுமல்ல, சந்திரனின் குடும்பத்திலும், அமைதி சூழ்ந்திருந்தது![/size] [size=4]தொண்ணூறுகளில், அகதியாக வந்தாலும், இரவு நேர வேலை ஒன்றில், சேர்ந்து, தனது மனைவியையும், இங்கு அழைத்து மூன்று குழந்தைகளுடனும், சந்தோசமாகத் தான் போய்க் கொண்டிருந்தது, வாழ்க்கை![/size] [size=4]பிள்ளைக…
-
- 21 replies
- 2.1k views
-
-
[size=4]படுத்தவுடன், பத்து நிமிடத்தில் நித்திரைக்குப்போய் விடும், பழக்கமுள்ளவன் தான், சந்திரன். இப்போதெல்லாம், வெட்ட, வெட்டத் தழைக்கும், சூரபத்மனின் தலை தான் அவன் நினைவுக்கு வருகின்றது. வேறொன்றுமில்லை, இந்தக் கடனட்டை தான், அவனைப் பயமுறுத்திக் கொண்டிருந்தது. ஏதாவது, செய்யாவிட்டால், அது பூதாகரமாகி, அவனையும் விழுங்கி விடக் கூடும், என்ற பயம் அவனை ஆட்கொண்டதில்,நித்திரை அவனிடமிருந்து நிரந்தரமாகத் தள்ளி நின்றது.[/size] [size=4]மனுசி கொஞ்சம் சந்தோசமாக இருந்த நேரம் பார்த்து,[/size] [size=4]என்னப்பா, நீர் ஒரு சீட்டுப் போட்டனீர் எல்லே! இப்ப அது முடியிற நேரம் வந்திருக்கும் தானே. அதை எடுத்து, இந்தக் கடனட்டையைக், கட்டி விடுவமே!.[/size] [size=4]கொட்டக் கூடிய கனிவு அவ்வளவையும், …
-
- 20 replies
- 2.2k views
-
-
[size=4]பத்தாம் வகுப்பு படித்த காலத்திலேயே எங்களது கணக்கு வாத்தியார் செற்றாக திரிந்த எங்கள் நால்வரை வகுப்பில் நிற்க வைத்து மன்மதக் குஞ்சுகள் எனத் திட்டியிருந்தார். அவரது கோபம் நியாயமானதுதான். காரணம், எங்கள் கூட்டத்திலிருந்த ஒருவன் கூடப் படித்தவளொருத்தியைக் காதலித்திருந்தான். எங்கள் மூவரையும் துணைக்கழைத்துச் சென்று, அவளது சைக்கிள்க் கூடைக்குள் காதல்க் கடிதத்தை போட்டுவிட்டான். அவள் வாத்தியாரது மருமகள் முறையானவள். வாத்தியார் இப்படித் தான். சாதாரணமாக திட்டமாட்டார். நல்ல உவமான உவமேயங்களுடன்தான் திட்டுவார். தமிழ் படிப்பித்த நடராசா வாத்தியார்கூட பிச்சை வாங்க வேண்டும். வகுப்பில் தூங்கி விழுபவனை நிற்க வைத்து ‘இஞ்ச பாரும் ஐசே கும்பகர்ணன்’ என செம்மொழியிலான திட்டலை ஆரம்பிப்பார். சற…
-
- 3 replies
- 971 views
-
-
கிழக்கில் உதிக்காத சூரியன் என்ற இக்கதையில் கர்ணனால் எழுதப்பட்டுள்ள கடாபியண்ணா தலைவருக்கு நிகரான இயல்பும் தலைமையையும் தான் வளர்த்த போராளிகளையும் தனது உயிரைவிட மேலாக நேசித்த உன்னதமானவர். இந்தக் கடாபியண்ணா பற்றி பலரிடம் கேட்டிருந்தேன் எழுதுமாறு. இன்னும் யாரும் அந்த மனிதன் பற்றி அதிகம் எழுத முடியவில்லை. ஆயினும் அவரது வாழ்வு பற்றிய ஒருபகுதியை கர்ணன் எழுதியிருப்பதால் இங்கு இணைக்கிறேன். [size=5]கிழக்கில் உதிக்காத சூரியன் (தளபதி கடாபியின் வாழ்வைப் பதிந்துள்ள கதையிது)[/size] யோ.கர்ணன் பத்தாம் வகுப்பு படித்த காலத்திலேயே எங்களது கணக்கு வாத்தியார் செற்றாக திரிந்த எங்கள் நால்வரை வகுப்பில் நிற்க வைத்து மன்மதக் குஞ்சுகள் எனத் திட்டியிருந்தார். அவரது கோபம் நியாயமானதுதான…
-
- 5 replies
- 1.2k views
-
-
கிழவனின் உயிர் சயந்தன் “பொழுதுவிடிந்து வெளிச்சம் பரவியதும், புதைத்த இடத்தில் பூ வைக்கலாமென்று போனால், ஆண்டவரே, பச்சைப் பிள்ளையை மூடிய குழியில் மண்ணைக் கிளறிப் போட்டிருந்தார்கள். என்னால் தாங்க முடியவில்லை..” மர்மக்கதையொன்றின், முதலாவது முடிச்சை இலாவகமாக முடிவதுபோல நடேசுக் கிழவர் ஆரம்பித்தபோது நான் நிமிர்ந்து உட்கார்ந்து தலையை அவரிடத்தில் சரித்தேன். இம்மாதிரியான திகில் கதைகளை – ஏழு மலை, தாண்டி ஒரு குகைக்குள் கிளியின் உடலில் உயிரைப் பதுக்கி வைத்திருக்கும், மந்திரவாதிகளின் கதைகளை – வெள்ளை இறகுகள் முதுகில் முளைத்த கேட்ட வரம் தரும் தேவதைகளின் கதைகளை இப்பொழுது யாரும் பிள்ளைகளுக்குச் சொல்வதில்லை. “வாயைத் திற.. அல்லது ஆமிக்காரனிடம் பிடித்துக்கொடுப்பேன்” என்று நேற்றுப்பி…
-
- 3 replies
- 1.1k views
-
-
கிழவர்கள் கடல்புத்திரன் - நடேசன்,பள்ளி விடுமுறையிலே வளர்ந்த பிள்ளைகளுடன் இந்த முறை 'டொராண்டோ'வைப் பார்க்க வந்திருக்கிறான். விஜயன் வீட்டிலே,அவனுடைய அண்ணன் ரவியும், அவன் இரு பிள்ளைகளும், அக்கா ரதியும் (அவள் மகன் கதிர்,"அம்மா நாளைக்கு வேலையிலே தூங்க வழிய நேரிடும் "என இறக்கி விட்டுப் போய்யிருக்கிறான்) பால்ய வயதில் குடும்பத்தில் ஒருத்தனாக அயலிலே இருந்த… யூரோப்பிலிருந்து வந்திருக்கிற நடேசனை சுமார் 25,30 வருசத்திற்குப் பிறகு சந்திக்க வந்திருக்கிறார்கள் . அவன் தரப்பில் ,மனைவி... தரப்பில் சில உறவினர்கள் இங்கே இருக்கிறார்கள் தான்.யூரோப்பை விட வெளிநாடுகள் என்ன பெரிதாக வித்தியாசமாக இருக்கப் போகிறது என.. தாயகமான ஈழமாநிலத்தையே முக்கியமாக பார்க்க வேண்டியவர்கள் என அழைத்துச் செல்கிற…
-
- 0 replies
- 724 views
-
-
செங்கிப்பட்டிக்கு ரெண்டு டிக்கட் - ரிஷபன் கிழவி பஸ்ஸில் ஏறியதிலிருந்து அத்தனை பேரின் கவனமும் அவள் மீதுதான். பித்தளை அண்டா, எவர்சில்வர் குடம் இரண்டையும் என்ஜினுக்கு அருகில் காலியாயிருந்த இடத்தில் பத்திரப்படுத்திவிட்டு தானும் மருமகளும் அமர இடம் தேடினாள். டிரைவர் இருக்கைக்குப் பின்புறம் மூன்று பேர் அமர்கிற சீட்டில் கணவன், மனைவியாய் அமர்ந்திருப்பதைப் பார்த்தாள். "ஏம்ப்பா.. நீ இப்படி வந்தா.. பொம்பளைங்க நாங்க அங்கே ஒக்காருவோமுல்ல" கணவனுக்கு ஏழு மணி நேரப் பயணத்தில் மனைவியை விட்டுப் பிரிந்து அமரத் துளியும் மனசாகவில்லை. "வேற எடம் பாரு" என்றான் முறைப்பாக. "பஸ்ஸுல எடம் இருந்திச்சுன்னா.. நான் ஏன் ஒங்களைப் பிரிக்கப் போறேன்.. தயவு பண்னுப்பா..…
-
- 5 replies
- 7.4k views
-
-
கீதையடி நீயெனக்கு… (குறுநாவல்) மீண்டும் விலாசத்தை சரிபார்த்துக் கொண்டான் சந்திரன். சரிகைக் குஞ்சமெல்லாம் வைத்து அந்த அழைப்பிதழ் வெகு ஆடம்பரமாகவே அமைக்கப் பட்டிருந்தது. அவுஸ்திரேலிய தபால்காரருக்கு அழைப்பிதழ் விசித்திரமாகத் தெரியக்கூடும். அது தவறாமல் அந்த விலாசத்துக்கு போய்ச் சேரவேண்டும் என்பதற்காகவே, தெருவோரமுள்ள தபால்பெட்டி ஒன்றிலே போடாது, வடபழனி தபால் நிலயத்துக்கு அவன் வந்திருக்கிறான். அவுஸ்திரேலிய தொடர் மாடிக் குடியிருப்புகளின் முன்னால் வீதி ஓரமாக, தபால் பெட்டிகள் புறாக் கூண்டுகள் போன்று அமைந்திருக்கும். வீதியில் வலம் வரும் விடலைகள் அதன் மினுமினுப்பில் கவர்ந்து அழைப்பிதழை உருவி எடுக்கலாம். இதனால் பாதுகாப்பாக அதனை வேறொரு தடித்த தபாலுறையில் வைத்திருந்தான். த…
-
- 2 replies
- 1.2k views
-
-
குகைவாய் கழுகு - ப.தெய்வீகன் சுபத்ரா நிறைய இடங்களில் தடுமாறியிருக்கிறாள். முடிவெடுக்கும் திசை தெரியாமல் குழம்பியிருக்கிறாள். ஆனால், ஒருபோதும் வாழ்வை நினைத்து அச்சப்பட்டதில்லை. அடுத்த கணத்தை எண்ணி பீதியடைந்ததில்லை. இன்று மிருதுளா விடயத்தில்தான் பாம்பொன்றின் தொண்டைக்குள் அகப்பட்டிருப்பதுபோல அவள் உணர்ந்தாள். வருணின் மிருதங்க அரங்கேற்றம் நடைபெற்றுக்கொண்டிருந்த மண்டபத்திற்குள், உருட்டிச்செல்லும் வேகத்தில் வாகனத்தை மெதுவாக ஓட்டியபடியிருந்தாள். தரிப்பிடமொன்றினைத் தனது பதற்றம் மிகுந்த விழிகளினால் துழாவித் தேடினாள். வசதியான இடத்தைக் கண்டுபிடித்து, அதில் வாகனத்தை நிறுத்தும்போது, மெல்பேர்ன் “ரோஹினி ஸ்பைஸஸ்” உரிமையாளரும் மனைவியும் சுபத்ராவுக்கு கை காட்டியடி, மண்டபத்தை நோக்கி…
-
- 1 reply
- 735 views
-
-
குக்கூவென்றது கோழி - சிறுகதை சிறுகதை: க.சீ.சிவகுமார் , ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு வினோதினி... அவள் அருகில் இருப்பது ஐந்து தேவதைகளும் மூன்று பிசாசுகளும் உடன் இருப்பது போன்றது. அவற்றின் எண்ணிக்கை அல்ல விஷயம். அவை வெவ்வேறு விகிதங்களில் வெளிப்படும்போது அதனதன் தன்மையில் இருக்கும் காரியங்களில் இருக்கிறது விசேஷம். பெங்களூரில் முற்றமாகவும் வாசலாகவும் விரிந்திருக்கிற மொசைக் கட்டங்களின் மேல், தூரப் பார்வையில் கண்ணாடிச் செவ்வகங்கள் பார்வைக்குக் கிட்டுகிற பெருங்கட்டடம் ஒன்றில், என்னுடன் பணிபுரிகிறாள் வினோதினி; கணினியாளர். ஆந்திராவில் இருக்கும் ஸ்ரீகாகுளம் ஊரைச்சேர்ந்தவள். வினோதினி வெங்கடபதிராஜு. இந்த வி.பி.ஆர் அவளது …
-
- 0 replies
- 1.6k views
-
-
குசலா எங்கே? உ மாவுக்குத் தூக்கமே வரவில்லை. இப்படித் தூங்காமல் எத்தனை இரவுகள் போய்விட்டன! தனிமை இப்படியா தூக்கத்தை விரட்டும்? உமாவின் கணவர் விஸ்வம், இரு பிள்ளைகளை உமாவுக்குத் துணையாக விட்டுவிட்டு இறந்துபோனார். அந்தப் பேரிழப்புக்குப் பின்பும் வாழ்ந்தாக வேண்டும் என்ற வைராக்கியத்தையும், சாதிக்க வேண்டும் என்ற வெறியையும் கொடுத்ததே அந்த வாரிசுகள்தான்! ஆபீஸ், வீடு, பிள…
-
- 1 reply
- 1.2k views
-
-
குசலாம்பாள் என்னும் செயின் புளொக் யதார்த்தன் Yulanie ஆயிரத்தித்தொள்ளாயிரத்து தொண்ணூற்று இரண்டாம் வருடம் பங்குனி இருபத்தி மூன்றாம் திகதி, “நடுவில்” என்று அழைக்கப்படும் நடுவிலார் திருவடி, கோப்பாயில் உள்ள சிவப்பு தகரம் வேய்ந்த வேலியைக்கொண்ட கல்வீட்டில் வைத்து விடுதலைப்புலிகளால் கைது செய்யப்பட்ட பின்னர் சரியாக ஒரு மாதம் கழித்து அவருடைய விசாரணை அறிக்கையை புலனாய்வுப்பிரிவைச்சேர்ந்த லெப்டினன் கேணல் வெய்யோன் (பிறப்பு – 1965 வீரச்சாவு – 2001) மேலிடத்திற்குச் சமர்பித்திருந்தான். அறிக்கைப்பிரதி ஒன்றை, அதனுடைய கச்சிதத்தையும் விடையச்சுருக்கத்தையும் மீறி உரையாடல் வடிவத்திலோ கதை வடிவத்திலோ எப்போதும் நிறையப்பக்கங்களைச் செலவழித்து வெய்யோன் எழுதிக்குவிப்பதை அம்மான் …
-
- 1 reply
- 1.5k views
-