Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. சரவணன் மனசுல சுகந்தி சிறுகதை: வா.மு.கோமு, ஓவியங்கள்: ஸ்யாம் நண்பர்களின் காதல் சோகக் கதைகளைக் கேட்டுக் கேட்டு, 'என் வாழ்வில் எப்போதும் காதல் எனச் சிக்கி அவஸ்தைப்படக் கூடாது’ என, கல்லூரியில் படிக்கும்போதே முடிவுக்கு வந்திருந்தேன். நண்பர்கள் பலர் அந்தச் சமயத்தில் காதலில் விழுந்திருந்தாலும், எப்படியோ சின்னச் சின்னக் காரணங்களால் அது தோல்வியில் முடிந்திருந்தது. 'ஒண்ணே ஒண்ணு... கண்ணே கண்ணு’ என்பதுபோல பிரகாஷ் என்ற நண்பன் மட்டும், தன் கல்லூரிக் காதலில் வெற்றி பெற்று, திருப்பூரில் மருந்துக் கடை ஒன்றில் மனைவியோடு நிற்கிறான். நான் சரவணன். ஊத்துக்குளிவாசி. ஊத்துக்குளி என்றால், உங்களுக்கு வெண்ணெய்தான் ஞாபகம் வரும். சில திரைப்படப் பாடலாசிரியர்கள் 'ஊத்துக்…

  2. வளாகம் போன புதிது. புதிய இடம். புதிய போதனை மொழி-ஆங்கிலம். புதிய பாவனை மொழி-சிங்களம்.( கடை கண்ணிக்கு போறதெண்டால் சிங்களம் வேணும்). சிங்களவர்களாக ஆமிக்காறனை மாத்திரம் தெரிந்த எங்களுக்கு சிங்கள ஊரில் சிங்கள மாணவர்களுடன் சேர்ந்து படிக்கும் அனுபவம். புதிய நண்பர்கள் நண்பிகள் என்று எல்லாமே புதிது. ஒரு மாதகாலத்தில் எல்லாம் ஓரளவு பழக்கத்தில் வரத் தொடங்கியிருந்தது. அன்றும் வழமை போல விரிவுரை சென்ற எமக்கு ஏதோ ஒரு இனம் புரியாத வேறுபாடு தெரிந்தது. நட்புடன் சிரிக்கும் எமது சிங்கள நண்பர்களின் முகம் இருண்டிருந்தது. வழக்கமான புன்னகை தொலைந்திருந்தது. பிறகுதான் தெரிந்தது காரணம். ஆனையிறவை புலிகள் பிடித்துவிட்டார்களாம். ஆயிரக்கணக்கில் ஆமி பலியாகிவிட்டதாம். எங்களுக்கு உள்ளுக்குள் …

  3. 2009 வைகாசி 12 ஆம் நாள் சர்வதேசத்தின் கரங்களுக்காகவும் இந்தியாவின் பாதுகாப்புக்காகவும் நாங்கள் வானொலிகளை திருப்பி கொண்டு, அடுக்கப்பட்டு கிடந்த துணிகளால் ஆன மண் மூடைகளுக்கு நடுவே கிடந்த அந்த பொழுது. அவற்றையும் தொலைத்து விட்டு வெறும் நிலமே பாதுகாப்பாக படுத்திருந்த அந்த பொழுதுகள் சர்வதேசமே எங்கள் இருப்பை உறுதிப்படுத்த முடியாது தவித்து கொண்டிருந்த நாட்களில் ஒன்று. பல வல்லரசுகள் எம்மை ஒன்றிணைந்து அழித்தொழித்த நாட்களில் ஒன்று. நாங்கள் வழமையான சில பணிகளில் கிடக்கிறோம். வழமை போலவே அந்த இரவும் எமக்கு விடிந்து போனது. செல்லும் ரவையும் விமானமும் எங்கள் தலைகளை குறி வைத்து பாய்ந்து வந்து கொண்டிருந்த ஒரு காலை பொழுது அது. இதில ஒன்றை வெட்டுங்க அவடத்தில ஒன்றை வெட்டுங்க ” I ”…

    • 0 replies
    • 1.7k views
  4. 10 செகண்ட் கதைகள் பயம் திருடிய சிசிடிவி கேமராவை, தன் சொந்த வீட்டில் மாட்டினான் திருடன். - வேம்பார் மு.க.இப்ராஹிம் விளக்கம் 'புரளின்னா என்ன?' என்று கேட்ட பேரனுக்கு, 'வாட்ஸ்அப் மெசேஜ்' என்றார் தாத்தா. - வேம்பார் மு.க.இப்ராஹிம் திட்டம் கடும் பண நெருக்கடிக்கு ஆளான ஆளும் கட்சி ஆதரவு எம்.எல்.ஏ., `அரசுக்கு எதிராக அறிக்கை விடலாமா?' என்று யோசித்துக்கொண்டு இருந்தார். - ரா.ராஜேஷ் ஷவர் `எவ்வளவு பெரிய ஷவர்' என்றது, மழையில் நனைந்த குழந்தை. - சங்கரி வெங்கட் வேலை `இங்கே, டாஸ்மாக்கை எல்லாம் அடிச்சு மூடுறாங்க, அங்கேயே வேலை தேடிக்கோ' என்று நண்பனுக்குத் தகவல் கொடுத்தான் பீகாரி. - கி.ரவிக்குமார் …

  5. உன் பேர் சொல்லுஒரு பள்ளிக்கூடத்துக்கு ஆய்வாளர் ஒருத்தர் வந்தாரு.அந்த பள்ளிக்கூடத்தப் பத்தி ஏற்கனவே நிறைய அவரோட வேலை பாத்தவங்க சொல்லி இருக்காங்க. அதனால எதுக்கும் தயாராத்தான் அவர் வந்தார்.முதல்ல ஒரு வகுப்புக்குள்ள போன உடனே பசங்க எல்லாம் எழுந்திருச்சு நின்னு வணக்கம் சொன்னாங்க!.சரி எதாவது கேள்வி கேக்க வேண்டாம்ன்னு முதல் பையன எழுப்பி. . "உன் பேர் சொல்லு" "பழனி" "உன் அப்பா பேரு" "பழனியப்பா", அடுத்தப் பையன எழுப்பி , "உன் பேர் சொல்லு" "மாரி" "உன் அப்பா பேரு" "மாரியப்பா" அவருக்கு கொஞ்சம் டவுட் வருது. இருந்தும் அடுத்தப் பையன எழுப்பி. "உன் பேர் சொல்லு" "பிச்சை" "உன் அப்பா பேரு" "பிச்சையப்பா" இப்பொ அவருக்கு கன்பார்ம் ஆயிடுச்சு, சரி பசங்க ஆரம்பிச்சுட்…

  6. நான்தான் அடுத்த கணவன் அ. முத்துலிங்கம் பத்மப்ரியாவிடமிருந்து கடிதம் வந்திருந்தது. என் உடம்பு முழுக்க இருதயமாகித் துடித்தது. உருண்டை உருண்டையான எழுத்து. நான் டெல்லி சிறையிலிருந்து மீண்டு கனடா திரும்பி ஒரு வருடம் ஆகியிருக்கும். எப்படியோ என்னுடைய முகவரியைத் தேடிக் கண்டுபிடித்து எழுதியிருக்கிறாள். இது எப்படிச் சாத்தியமானது? ஐயா, என்னால் நம்பவே முடியவில்லை. என்னை அப்படிப் பார்க்க வேண்டாம்... அப்படிப் பார்க்க வேண்டாம். நான் ஆரம்பத்திலிருந்தே சொல்கிறேன். நான் பிறந்தது யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு சின்ன ஊர். 1990ஆம் வருடம் எனக்கு 18 வயது தொடங்கியபோது அப்பா என்னை வெளிநாட்டுக்கு அனுப்பத் தீர்மானித்தார். எங்கள் ஊர் ஏஜன்டைப் பிடித்துப் பணம் கொடுத்து என்னை எப்படியும் கனடாவுக்கு …

  7. தமிழீழம் தான் நம் கனவு... சிறு கதை.... சாந்தி சரியாக் கேளுங்கோ...இதில எல்லாம் ஆயத்தம் உங்கட உடுப்பு எல்லாம் சரிதானே.. விடிய முதல் இதால வருவினம். அண்ணை சொல்லிவிட்டது ஞாபகமிருக்குத்தானே....? வந்தினமெண்டா விடாம கவனிப்பம்..சரியோ..! குழப்பமில்லை தானே ''ஒன்றும் குழப்பமில்லை பயப்படாதேங்கோ... நான் அவர் வளர்த்த ஆளல்ல...எனக்கு பத்து போனாலும் மற்றவருக்கு ஒன்று என்றாலும் போகவேணும் என்ற பொலிசியெல்லாம் எனக்கில்லை...! என்னக்கு ஒன்று போனாலும் மற்றவருக்கு பத்துப் போகவைப்பன் என்ர வளர்ப்பு அப்படி ...தெரியுமல்ல....'' சொல்லி முடித்தாள் சாந்தி. ''அண்ணையும் பாவம் தானே எங்கள் எல்லாருக்காகவும் இத்தனை வருடமா கஸ்ரப்பட்டுக் கொண்டிருக்கிறார்தானே.. அவரோட பாக்கேகை இதெல்லாம்...…

  8. உஷ்… ! இதெல்லாம் வெளியே சொல்லக்கூடாது : கவிதா லட்சுமி – கருவறைக்கு வெளியே – நூலிலிருந்து-கவிதா லட்சுமி இந்த கண்ணாடி முன் நின்று என்னைப் பார்த்துக்கொண்டிருக்கின்றேன். தினமும் இப்படித்தான் பல நேரங்களில் நான் என்னைப் இப்படி நின்று நிதானமாக எந்த சலனமுமற்றுப் பார்ப்பதுண்டு. கண்ணாடியுள் விரியும் பெருவெளியின் வாடை, விறைத்த காற்று, மௌனத்தின் அலறல் என அனைத்தும் என்னால் மட்டுமே உணரக்கூடியது. வேண்டாம்! கண்ணாடியில் முகங்களை மட்டும் பார்க்கின்றவர்களுக்கான விம்பம் இல்லை இங்கு நான் காண்பது. அறையின் சாளரக் கண்ணாடி வழியே சூரியகதிர்கள் முகக்கண்ணாடியில் தெறித்து விழுந்துடைகின்றன. இந்தக் கண்ணாடி இருக்கும் அறையில் ஒரு கட்டிலும் பக்கத்தில் ஒரு மேசையும் இருக்கின்றது. அவை தவி…

  9. இது கதையா? அல்லது கடிதமா என்பதற்கு அப்பால், பேசப்படும் பொருள், தற்போதைய ஈழத்து நிகழ்வுகள் தனிமனிதர்களிடம் ஏற்படுத்தும் உணர்வோட்டாங்கள் என்பவற்றை திறம்பட எழுத்தில் வடித்திருப்பதாக நான் கருதுகிறேன். ஈழத்தில் ஏற்படும் போரியல் மாற்றங்கள் ஏன் ஒருவரை மனதளவில் துவண்டுவிடச்செய்கிறன, ஏன் அதீத மகிழ்ச்சியில் திழைக்கச்செய்கிறன என்பதை தமிழ்நதி சொல்லியிருக்கிறார். அன்பு நித்திலா, நலம். போர்சூழ்ந்த இந்நேரத்தில் நீயும் அவ்விதம் இருப்பாயென்றே இன்னமும் நம்புகிறேன். “இப்போது எங்கே இருக்கிறாய்…?”என்ற கேள்வியுடன் தொடங்கி எனது நாடோடித்தன்மையைக் குறித்துப் பரிகசித்திருந்தாய். ‘நான் உன்னுடன் தான் இருக்கிறேன்’ என்று நாடகத்தன்மையுடன் பதிலளிக்கவே விருப்பம். அக்கணத்தில் பொங்கும் நெகி…

    • 6 replies
    • 1.7k views
  10. ஒரு நிமிடக் கதைகள் https://www.vikatan.com

  11. இறுதிக்கட்ட சோதனைகள் நடக்கிறது... புரொவ் சங்கர் ( திட்டத் தலைவர்) : வணக்கம். எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது ஆய்வு..?! புரொவ் சுதர்சன் ( வடிவமைப்புக் குழுத் தலைவர்) : நல்ல முன்னேற்றம் தெரிகிறது. இன்னும் 5 மாதத்தில விண்ணுக்கு செலுத்திடலாம் சங்கர். அதன் பிறகு உங்கள் கனவு நனவாகிடும். இவர்கள் இப்படி பேச்சை ஆரம்பிக்க..சைரனும் ஒலிக்கிறது.. சங்கர் : என்னது சைரன் சத்தம் வருகிறது... சுதர்சன் வோக்கிடோக்கி மூலம் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்கிறார்... கலோ கலோ....மீண்டும் கலோ கலோஓஓஓஓ சங்கர்: என்ன தொடர்பு கிடக்குதில்லையோ....??! சுதர்சன் : ஆமாம் சங்கர். ஒரே இரைச்சலா இருக்குது.. அப்போது அவர்களை நோக்கி ஓடி வருகிறது ரோபோ திலீபன்.. அத…

  12. படிச்சன் பிடிச்சிருந்தது பாட்டி வடை சுட்ட கதை( 2020) 1.பாட்டி வழக்கம்போல் கடை போட புறப்பட்டாள்.கார்ப்பரேஷன் வண்டி வந்து நின்றது. அதிலிருந்து இறங்கினவன் " தா கெய்வீ .. ஒனக்கு இன்னியோட 60 வயசு முடியுது. உன்னை சாம்பலாக்கி உன் சொந்தக்காரவுங்களுக்கு கூரியர் அனுப்பனும் கெளம்பு கெளம்பு "என்றான் 2.பாட்டி வழக்கம்போல் கடை போட புறப்பட்டாள். தான் வழக்கமாய் கடை போடும் புளிய மரம் கருகிக்கிடப்பதை பார்த்து அதிர்ந்தாள். வேடிக்கை பார்க்கும் சோம்பேறி ஒருவனை கேட்டாள் " இன்னாச்சு நைனா ..மரம் இப்டி கருகி கிடக்குது?" .அவன் சொன்னான் "எனுக்கு இன்னா தெரியும்மே.. நேத்து கருப்பா மழை பேஞ்சுச்சாம். இந்த ஏரியால எல்லா மரமும் இப்படித்தான் ஆயிருச்சு. 3.பாட்டி வழக்கம்போல் கடை போட…

  13. Started by நவீனன்,

    மடை இருவார சிறுகதை - உமாமகேஸ்வரி சின்னக்கா தோசைச் சட்டியைத் தேய்த்துக் கழுவி திருப்தியாக அதன் பளபளப்பைப் பார்த்துவிட்டு, கொல்லைப் புறத் தென்னை வரிகளிட்ட ஆகாயத்தையே பார்த்துக்கொண்டு நின்றாள். அப்படி என்னதான் தேடுகிறாளென்று கடவுளுக்குத்தான் வெளிச்சம். தென்னைக்கு உரம் வைக்க வேண்டும் என்று நினைப்பாளோ என்னவோ. ஆமாம், நாளாகிவிட்டது. இரண்டு மரங்களும் காய்க்காது மொட்டையாக நிற்கின்றன. மேலே கருடன் பறக்கிறது போல. அக்கா ஆகாயத்தைப் பார்த்துக் கும்பிட்டு கன்னத்தில் போட்டுக்கொண்டாள். கண்ணில் நுனி விரல்களால் கற்பூரத்தை வணங்குவது போல் ஒற்றினாள். பிறகு தன் புடவையை இறக்கிப் பாதம் வரை தழைத்தாள். ‘மீன் கொடித் தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகி…

  14. சாமர்த்தியம் ‘‘அக்கா... போன்ல அத்தான்...’’ என்றபடி போனை கவிதா விடம் நீட்டினாள் வசந்தி. ‘‘என்னங்க..?’’ ‘‘காபிக்கு எத்தனை ஸ்பூன் சுகர்... பால், தண்ணீர்... கொஞ்சம் சொல்லேன்..?’’ கவிதாவின் கணவர் முருகராஜ். ஹோட்டல் சாப்பாடு சுத்தமாக ஒத்துக்கொள்ளாது. அதனால் கவிதா வெளியூர் செல்லும்போதெல்லாம் இப்படி கேட்டுக் கேட்டாவது செல்ஃப் குக்கிங்தான். பதில் சொல்லிவிட்டு போனை வைத்தாள் கவிதா. தொடர்ந்து காலை டிபன், மதிய சாப்பாடு, இரவு உணவு என்று அவ்வப்போது ரெசிபிகளையும் கணவனுக்குச் சொல்லிக்கொண்டே இருந்தாள். கேட்டுக் கொண்டு இருந்த வசந்திக்கு ஒரு சந்தேகம்.. ‘‘ஏன்க்கா நீ சொல்ற அளவெல்லாம் வித்தியாசமா இருக்கே... இப்படியா நீ சமையல் பண்றே..?’’ ‘‘இல்லடி... இது அவருக்கான அளவு.…

    • 1 reply
    • 1.7k views
  15. "-------" கள் தினம். காலையில் எழுந்ததில் இருந்து எல்லாம் வித்தியாசமாக இருந்தது. மனைவி போட்டுத்தந்த தேத்தண்ணி தேவாமிருதமாக இருந்தது. அதைக் குடித்துப் போட்டு இன்னுமொரு குட்டிப் தூக்கம் போட்டேன். "பொறுப்பில்லாமல்" நித்திரை கொள்வதாக மனைவி சொல்லவில்லை. இரண்டாம் தரம் அடித்த "அலாரம்" மணிக்கூட்டு கூட சங்கீதமாக ஒலித்தது. வழக்கம் போலில்லாமல் நிதானமாய்க் குளித்து, நிதானமாய்ச் சாப்பிட்டுவிட்டு பஸ் ஸ்டாண்ட் போனேன். பஸ் ஸ்டாண்டில், சும்மா புன்னகைத்தாலும் பதிலுக்கு முறைக்கும் அந்தச் சீனன், இன்று வலியக் "காலை வணக்கங்கள்" என்றான். வெள்ளைக்காரங்களுக்கு மட்டும் காலை வணக்கம் சொல்லும் நாதனும் (தன பெயர் நேத்தன் என்றுதான் அடம் பிடிப்பார்) இன்று "என்ன சுகமே, நல்ல weather என்ன?" என்று…

  16. மசாஜ் ம. நவீன் மசாஜ் நிலையங்களை அறிமுகம் செய்து வைத்தவன் திருநாவுக்கரசன்தான். கெடாவின் ஒரு கம்பத்திலிருந்து கோலாலம்பூருக்குப் பிழைப்புத்தேடிவந்த புதிதில் அறிமுகமானவன். வாடிக்கையாளனாகத்தான் டாக்சியில் ஏறினேன். என் நிலை புரிந்து சில மாதங்களில் என்னையும் டாக்சி ஓட்டவைத்து தொழில் நுணுக்கங்களைச் சொல்லிக்கொடுத்தான். நகர நெரிசலில் புகுந்து ஓடவேண்டிய குறுக்கு வழிகளைக் காண்பித்தான். டாக்சியை ஓட்டி அலையும்போது கோலாலம்பூர் முழுவதும் பரவலாக இருந்த மசாஜ் நிலையங்களைப் பார்ப்பதுண்டு. கடும் முதுகு வலியில் அதன் போஸ்டர்களும் அறிவிப்புகளும் மசாஜ் செய்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டினாலும் கூச்சம் வந்து தடுத்துக் கொண்டிருந்தன. நான்கு மாதங்களுக்கு முன் திரு என்னை முதன…

    • 1 reply
    • 1.7k views
  17. கொங்கை – ஜ.காவ்யா செல்போன் அலாரம் அடித்தது. எப்பொழுதும் ஒன்று இரண்டுதடவை ச்நூஸ் அழுத்திய பின்னே எழுந்திருக்கும் மீனுகுட்டி அன்றைக்கு உடனே எழுந்துவிட்டாள். எழுந்தவுடன் படபடப்பு கூடிகொண்டது. இதை இன்று செய்தே ஆக வேண்டுமா என்று யோசித்தாள். மேலும் யோசித்தால் செய்யாமல் போய்விடுவோமோ என்ற அச்சத்தில் படுக்கையில் இருந்து எழுந்து கிளம்ப தொடங்கினாள். இன்ஜினியரிங் முடித்துவிட்டு சென்னையில் தனியாக வீடு எடுத்து வேலைக்குச் சென்று கொண்டிருந்தாள். காலையில் எழ எப்பொழுதும் தாமதமாகி அவசர அவசரமாக கிளம்பி ஸ்கூட்டி எடுத்துக்கொண்டு அலுவலகம் செல்வது வழக்கம். காலையில் எதைப்பற்றியுமே யோசிக்க நேரமிருக்காது மீனுகுட்டிக்கு. மாறாக இன்று யோசிப்பதைத்தவிர எதுவுமே அவள் செய்யவில்லை. மெதுவாக சென்று சு…

    • 1 reply
    • 1.7k views
  18. திருந்தா உள்ளங்கள் எம் தொப்புள் கொடி உறவுளகின் அவலங்களை இந்த சர்வதேசத்திற்கு எடுத்துச் சொல்லும் எம்மவர்களின் உரிமைப் போராட்ட நிகழ்வு ஒன்று ஆர்த்தி வாழும்நாட்டிலும் முன்னெடுக்கப் பட்டிருந்த செய்தியை அவள் அறிந்து அதில் தன்னையும் முழு ழூச்சாக அர்ப்பணித்தவள் மற்ரவர்களையும் அதில் பங்கு கொள்ள வைக்க வேண்டும் என்பற்காகவும் பல இன்னல்கள் மத்தியில் தன் பள்ளிப் படிப்பையும் கவனிக்காது அயராத பணியை செய்ய தொடங்கினாள். இதனால் வீட்டிற்கு வரும் நேரம் தாமதமாகவே அவள் அம்மா அவளை பார்த்து உனக்கு சோதினை வருகுது சும்மா ஊர் உத்தியோகத்தில திரியுறாய் நாளைக்கு உதே உனக்கு சோறு போட போகுது.... சும்மா விட்டிட்டு உன்ர அலுவலை பார் என திட்டினாள். அவளுக்கு அம்மாவின் வார்த்தைகள் நெஞ்சில் …

    • 4 replies
    • 1.7k views
  19. பிரிகேடியர் துர்க்கா, பூமி யில் வாழப்போகும் கடைசி நாள் அன்று திடுக்கிட்டு விழித்தபோது, காலை ஐந்து மணி. அவர் மூன்றா வது நாளாகப் பதுங்கு குழியில் இரவைக் கழித்திருந்தார். வழக்க மாக, தோய்த்து அயர்ன் பண்ணி விறைப்பாக நிற்கும் அவருடைய சீருடை சேற்று நிறமாக மாறிவிட்டது. சப்பாத்துகளைக் கழற்றி, மண்ணை உதறி மறுபடியும் அணிந்துகொண்டார். சுவரில் சாத்திவைத்த S97 துப்பாக்கியின் மேல் வண்டு அளவிலான இலையான் ஒன்று உட்கார்ந்திருந்தது. அதை அடிக்கக் கை ஓங்கியவர், மனதை மாற்றி ஆயுத உறையைக் கையில் எடுத்து, திசைகாட்டியும் சங்கேத வார்த்தைத் தாளும் இருப்பதை உறுதி செய்த பின்னர், இடுப்பிலே கட்டினார். நிரையாக நீண்டுகிடந்த பங்கர்களைப் பார்த்தார். ஆள் நடமாட்டமே இல்லை. வெளியே வந்து அவசர அவசரமாக காலைக் கடன்கள…

  20. 1996ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 26ம் திகதி, மதிய வேளை, பனிக்கால நாட்கள். குளிர் ஊருக்குள் படிந்துபோயிருந்தது. நான் வடமேற்கு நோர்வேயில் உள்ள ஒரு வைத்தியசாலையின் மகப்பேற்றுப் பிரிவில் நின்றிருந்தேன். கனிவான தாதியர், அமைதியான அறை, மெதுவான இசை, தாங்கொணா வேதனையில் ஒருவர், மற்றும் நான். மகப்பேற்றுத் தாதியின் கட்டளைகள், அன்பான வார்த்தைகளுக்கு மத்தியில் ஒரு அலரல். ஒரு பிரசவம் நடந்து கொண்டிருந்தது, அங்கு. இரத்தமும், ச‌தையும், நீரும் கலந்ததொரு குழந்தையை கையிலெடுத்து, தொப்புள் கொடியை ‌வெட்ட என்னை அழைத்த போது பயத்தில் மறுத்துவிட, ஒரு தாதி அதை வெட்டினார். குழந்தையை எடுத்துப்போய் சுத்தப்படுத்தி, தலையைச் சுற்றி தொப்பி போன்றதொன்றை இட்டு, அளந்து, நிறுத்து, ஊசி போட்டு என் கையில் தந்த போத…

  21. Started by Athavan CH,

    வான்கா ஒன்பது வயதான வான்கா ழுகோவ் அல்யாகினின் செருப்புக் கடையில் வேலைசெய்கிறான், அந்த வேலைக்கு வந்து மூன்றுமாதமாகிவிட்டது.அது கிறிஸ்துமஸ் தினம்.முதலாளி,அவர் மனைவி,கடையின் மற்றவேலைக்காரர் கள் எல்லோரும் நள்ளிரவு வழிபாட்டிற்குப் போவதற்காகக் காத்திருந்தான். அவர்கள் போனபிறகு முதலாளியின் அலமாரியிலிருந்து மைபாட்டிலையும், துருப்பிடித்த முனையுடய பேனாவையும், கசங்கியிருந்த தாளையும் எடுத்துத் தனக்கு முன்னால் வைத்துக்கொண்டு எழுதஆரம்பித்தான்.தனது முதல்கடி தத்தை எழுதுவதற்கு முன்னால் கதவுகள்,ஜன்னல்கள் பரவியிருந்த ஷெல்பு கள் என்று சுற்றுமுற்றும் பயத்தோடு சில தடவைகள் பார்த்தான்.பெருமூச்சு விட்டான்.பெஞ்சில் அந்தத்தாள் இருக்க மண்டியிட்டு உட்கார்ந்தான். “அன்புள்ள தாத்தா,கான்ஸ்…

    • 3 replies
    • 1.7k views
  22. ஃபுளோராவின் காதல் - சிறுகதை சிறுகதை: எஸ்.செந்தில்குமார், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு விஜயா, தனது கழுத்தைப் பிடித்து நெரித்து, குளத்தில் தள்ளி விடுவதாகக் கண்ட கனவில் இருந்து பயந்து எழுந்தான் சரவணன். அவனது உடம்பு வியர்த்திருந்தது. படுக்கையைவிட்டு எழுந்தவன், தனது கைலியை இறுக்கிக் கட்டிக்கொண்டான். யாரோ அறைக்குள் இருந்து தன்னைக் கவனிப்பதுபோல அவனுக்குத் தோன்றியது. யார் எனத் தெரியவில்லை. சுற்றிலும் பார்த்துக்கொண்டான். இருட்டான அறை. கதவைத் திறந்துவைத்தாலும் பூட்டினாலும் வந்துவிடும் வெள்ளை நிறப் பூனையைத் தவிர வேறு யாரும் இல்லை. இரவில் மட்டும் வரும் பூனை பகலில் எங்கு இருக்கிறது, எந்த வீட்டில்…

  23. "உவனொரு இந்தியாக்காரன். சிறிலங்கன் தமிழ் என்று பொய் சொல்லி அகதித் தஞ்சம் கேட்டிருக்கிறான். " என்று பூலோகத்தார் காட்டிய பெடியன் எங்களைக் கடந்துபோய்க் கொண்டிருந்தான். அவனைப்பார்த்தால் புதுசு போலத்தான் இருந்தது. ஒன்றிரண்டு தடவைகள் எங்களைப் பார்க்கவும் செய்தான். அவன் பார்த்தபோதெல்லாம் பூலோகத்தார் உம் என்று முறைச்சுப்பார்த்தார். அவர் சொன்னால் சரியாகத்தானிருக்கும். பிபிசி என்றும் வீரகேசரி என்றும் விடுப்பு டொட் கொம் என்றும் முதுகுக்குப்பின்னால் கூப்பிடப்படுகிற பூலோகத்தார் இந்தமாதிரிக் கதைகளை விரல் நுனியில் வைத்திருப்பார். அதை அகப்படுகிற நாலைஞ்சு பேருக்குச் சொல்லாமலும் விடமாட்டார். அப்பிடியாப்பட்ட ஒவ்வொருக்காவும் "எப்பிடித்தெரியும்?" என்று நானும் கேட்காமல் விடுவதில்லை. எனக்குத் …

  24. அன்ரனிப்பிள்ளை மாஸ்டர் வீடுதான் எங்கள் வீட்டுக்கு அயலில் இருந்த, வீடுக்கு முன்னால சின்ன ஒரு வேளாங்கன்னி மாத சுருவம் சுவரில வைச்சு, அதுக்கு செவ்வாக்கிழமை மெழுகுதிரி கொளுத்தி, " சர்வேசுவர மாதவே,கன்னி மரியாயே, பாவிகளான எங்கள்......" எண்டு மாஸ்டரின் ஒரே மகன் ஜேசுதாசனும், ஒரே மகள் மேரியும் செபம் சொல்ல , மாஸ்டரின் மனைவி ஜோசப்பின் அக்கா அந்த செப முடிவில் " கர்த்தரின் கிருபை மாம்சத்தின் ஜீவனை ,,,, " எண்டு பைபிளின் வாசகம் வாசிக்க, எங்கள் "குளத்தடிக் குழப்படி குருப் " நண்பர்கள், அதை விடுப்புப் பார்க்கவும், கொஞ்சம் எக்ஸ்ட்ராவா மேரியை மெழுகுதிரி வெளிச்சத்தில் சாட்டோட சாட்டா கிட்டத்தில விபரமாகக் கவனிக்கவும் வாய்ப்புக் கிடைத்த ஒரே ஒரு வேதக்கார வீடு. இன…

  25. http://www.orupaper.com/issue55/pages_K___7.pdf

    • 3 replies
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.