Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. அது ஆயிரத்து தொளாயிரத்து தொண்ணூற்று நான்காம் ஆண்டு புரட்டாதி மாதம் முதல் வாரமாயிருந்தது. கிளாலிக் கடல் நீரேரியின் கரையில், அவளைச் சுமந்து வந்த படகு தரை தட்டிய போது பின்னிரவாகியிருந்தது. ‘ஊ…ஊ’ வென்று இரைந்தபடி தேகத்தின் மயிர்க் கால்களையும் கடந்து ஊசியாக உள்ளிறங்கியது கனத்த குளிர் காற்று. அவள் அணிந்திருந்த மெலிதான நூல் சேலையின் முந்தானையால் தலையையும் உடம்பையும் இழுத்து மூடியிருந்தாள். எலும்புக்கு தோல் போர்த்தியது போன்றிருந்த அந்த உடம்பு ‘கிடு கிடு’ வென நடுங்கிக் கொண்டேயிருந்தது. குச்சிகளைப் போல நீண்டிருந்த கைகளால் படகின் விளிம்பை இறுக்கமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டிருந்தாள். என்றுமில்லாதவாறு அவளது நெஞ்சுக் கூட்டுக்குள் இன்று ‘படக்.. படக்’ அதிகமாக அடித்துக் கொள்வது …

  2. பல வருடங்களாக ஆயத்தப்படுத்தி ஆவலுடன் நாட்களை எண்ணிக் காத்திருந்த பயணம் அது. போவதென்று முடிவெடுத்து வேலைத்தளத்திலும் அனுமதிபெற்று, பிள்ளைகளை உசுப்பேத்தி, அவர்கள் நாள்தோறும் அந்த நாமத்தை உச்சரிக்க (எதுவென்று கேட்கிறீர்களா? அட நம்ம கண்டாவைத்தான் சொல்கிறேன்!) வைத்து விட்ட பயணம். பயணிக்கும் தேதியும் முற்றாகிவிட, சுமார் 4 மாதங்களுக்கு முன்னதாகவே விமானச் சீட்டுக்களையும் வாங்கிவிட்டோம். தென்கொரியாவின் தலைநகர் சியோலினூடாகப் பயணிக்கும் பயணம் அது. அதுவும் பயணச் சிட்டுக்களை மிகவும் குறைந்த செலவில் வாங்கிக் கொண்டதால், இரட்டிப்பு மகிழ்ச்சி. பயணச் சீட்டுக்கள் வாங்கிய நாளிலிருந்து அனைவரையும் கணடாக் "காய்ச்சல்" பற்றிக்கொள்ள அதுவே எங்கள் எல்லோருக்கும் தியானம் என்று ஆகிவிட்டது. பயணிக்…

  3. அண்மைக்காலச் சிறுகதைகள் இமையம் மொழி என்ற தொடர்புச் சாதனம் உருவானபோதே கதை சொல்வது என்ற செயலும் உருவாகியிருக்க வேண்டும். மனிதனால் எவ்வாறு பேசாமல் இருக்க முடியாதோ அவ்வாறே கதை சொல்லாமலும் இருக்க முடியாது. கதை சொல்லும் முறை கற்பனையை உருவாக்கிற்றா, கற்பனை என்பது கதையை உருவாக்கிற்றா, கற்பனை என்பது கதையை உருவாக்கிற்றா என்றால் இரண்டும் ஒரே சமயத்தில் உருவாகியிருக்க வேண்டும். மனித சமூகம் பல்வேறு நிலைகளைக் கடந்து படிப்படியாகப் பல வளர்ச்சிகளைப் பெற்று இன்றும் பெரும் நம்பிக்கையுடன் பூமியில் காலூன்றி நிற்பதற்குக் கற்பனையும் கதை சொல்லும் முறையும் பெரும் பங்காற்றி இருக்கின்றன. கதையில்லை என்றால் கற்பனை இல்லை. கற்பனை இல்லை என்றால் வாழ்க்கை இல்லை. வாழ்க்கைக்கு உயிர்ச்சத்தாக இருப்பது கற்…

  4. Started by கிருபன்,

    இரை மாதவன் ஸ்ரீரங்கம் மனிதனின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பென்று என்னைக்கேட்டால் தயங்காமல் கூறுவேன் துப்பாக்கிதான் என்று. ஏனெனில் அது எவரையும் நம்காலில் விழச்செய்யும் சக்திவாய்ந்தது. அச்சத்ததின் விளிம்பில் ரத்தம்சுண்டி முகம்வெளுத்து முன்னால் உயிருக்காக மன்றாடும் ஒரு இரையினைப் பார்க்கும் பரவசம் அலாதியானது. இப்போது இவன் அப்படித்தான் கிடக்கிறான். ஆனால் இவனைப் பார்த்தால் அந்த பரவசம் தோன்றவில்லை எனக்கு. சவரம் செய்யப்படாத தாடிமீசைகள் கடந்தும் அவன் கண்களில் நங்கூரமிட்டிருக்கும் அச்சத்தை உணரமுடிகிறது என்னால். இவனுடன் பிடிபட்ட நான்குபேர்கள் தனது கண்ணுக்கு முன்பாகவே ரத்தம் சிதற இறந்துபோனதை இவன் இறுதிமூச்சுவரை மறந்துவிட முடியாது. மலங்க மலங்க விழித்தபடி குத்துக்காலிட்டு அமர்ந்திருக்…

  5. கோடை விடுமுறையும் தாயகத்தின் ஏக்கங்களும் வணக்கம் சொந்தங்களே.! பனி தேசங்களில் கோடை விடுமுறை ஆரம்பமாகிவிட்டது…இப்போதெல்லாம் தாயகத்தின் காலநிலை வருடம்பூராகவும் தகிப்பாகவும் வரட்சியாகவும் இருந்தாலும்சொந்தங்களின் வருகையால் பல மனங்களில் வசந்தம் தற்காலிகப்பூச்சொரியஆரம்பித்து விட்டது. திருமண வைபவங்கள் ,ஆலயத்தின் பெருந்திருவிழாக்கள் ,மஞ்சள் மணக்கும் புனித நீராட்டுதல்கள் ,புன்னகையோடு சேர்த்தே பொன்னகைக்கான முதலீடுகள் இன்னும் குளிருட்டிய வாகனங்கள் ,போத்தல் தண்ணீர்,சுற்றுலா மையங்கள்,நாகரீக அலைபேசிகள் .இவை தான் இப்போது இங்கு அதிகம் கலந்துரையாடப்படும் தலைப்புகள்.போர் தின்றது போக நெஞ்சில் மிஞ்சியிருக்கும் இனிப்புக்களை கிண்டியெடுத்து அசைபோட்டுக்கொள்கிறது தாயகத்தின் முதல…

  6. சாதல் என்பது... பொ. கருணாகரமூர்த்தி ஓவியங்கள்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி பெர்லினில் கேப்பர்னிக் என்கிற பசுமையான பகுதியில் அமைந்திருக்கிறது எங்கள் வளமனை. பின்பக்கச் சாளரத்தைத் திறந்தால் மரங்கள் செறிவான காடு, அதற்குள் ஐதான இழைகளுடையதும் தொய்வானதுமான, ஒரு சிலந்திவலைபோல குறுக்கும் நெடுக்குமாக சிறுசிறு பாதைகள் (புறோமினேட்ஸ்) காலாற உள்ளே நடப்பவர்களுக்கும் குதிரைகளில் சவாரி செய்பவர்களுக்குமாக உள்ளவை. காட்டின் எல்லைவரை நடந்தால் இறுதியில் கேப்பர்னிக் ஸ்ப்றே (கடலேரி) வரும். கோடைகாலத்தில் ஏரியின் தீரத்தின் முழுநீளத்துக்கும் முகாம் வண்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும், மக்கள் தனித்தனியாகவும் சிறு சிறு கூடாரங்கள் அமைத்தும் முகாமிடுவர், கிறில் போடுவர், நீச்சலடிப்பர். காட்டினுள் இருந்து இரவில் …

  7. கோமா சக்தி - சிறுகதை அடிப்படைத் தர்மங்களில் இருந்து மாறுபட்டவனிடம் நியாயம் கேட்க முடியாது. கிரேக்க பழமொழி இலக்கியப் பத்திரிகையின் அட்டைப் படமாகவே புகைப்படம் போடப்பட்டு கோமா சக்தியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நேர்காணல் ஒன்று வெளி வந்திருப்பதாக திரு.முடுலிங்கவிடம் அவரது வேலைக்காரன் போய்ச் சொல்லிய போது அவர் குரல் வளைத் தாடி மயிரை சேவ் எடுத்துக் கொண்டிருந்தார். நல்ல காலம் முடுலிங்க கோபம் கொள்ளும் ஆள் கிடையாது என்பதால் தனது குரல் வளையை தன்னிடமிருந்து காப்பாற்றிக் கொண்டு கண்ணாடியில் தனது முகத்தைக் கழுவினார். முகம் எப்போதும் போல வடிவாயிருந்தது என்றாலும் முகத்தில் எடுபடாமல் தவறவிடப்பட்ட மயிர்கள் அவரெழுதும் சிறுகதைகளைப் போல தீவிரமற்று பயணச் சோம்பலில் கிடந்தது. ரோஸ் நிறத்…

  8. Started by arjun,

    மஞ்சள் சுவாலை (சிறுகதை) .................................................... அன்று நாங்களொரு தீர்மானத்திற்கு வந்திருந்தோம். பரந்தனில் இருந்து கரடிப்போக்கு சந்தியை நோக்கி ஜீவனேசன் தன் லுமாலாவை வேகமாக மிதித்துக்கொண்டிருந்தான்.நான் அவனுக்கு உதவியாக பெடல் போட்டபடி அவனுக்கு பேச்சு கொடுத்து கொண்டிருந்தேன். இடைக்கிட அவன் வியர்வை என் கன்னத்தில் சிந்தியது . மூச்சிரைக்க என்னை ஏற்றிக்கொண்டு கரடி போக்கு சந்திக்கும் பரந்தன் சந்திக்கும் இடையில் இருக்கும் வயல் வெளியின் எதிர்காற்றுக்கு ஈடுகொடுத்து சைக்கிளை செலுத்தி கொண்டிருந்தான் ஜீவனேசன்.அவன் பருத்த தேகத்தின் பலத்திற்கு முன்னால் எதிர்காற்று ஒரு பொருட்டல்ல என்றே தோன்றியது எனக்கு “டேய் குண்டா எனக்கு பயமாகிடக்கு ” “ஏன் டா” “மாட்டினம் உ…

    • 0 replies
    • 746 views
  9. ஆண்கள் உலகம் நமகெல்லாம் அறிமுகபடுத்தப்படுவது அப்பா மூலம் தான். இருப்பினும் அதை இன்னும் சுவாரஸ்யமாக்குவது சகோதரனே. ரிக்கி மார்டினையும், WWF ராக்கையும், கிரிகெட்டின் சகல சூட்சுமங்களையும் நமக்கு அறிமுகப்படுத்துவது அவனே! நிலைக்கண்ணாடி முன் AXE வாசனையை தருவதற்கும், கண்ணாடியில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கர் பொட்டுக்காக கடுப்படிபதற்காகவும் எனக்கு ஒரு தம்பி இருக்கிறான். எண்ணிலடங்கா நினைவுகள் என் தம்பியோடு இருக்கின்றன எனினும் இந்த பதிவு அதில் ஒரு துளி - மத்திய தர வர்க்கத்துக்கே உரிய கோட்பாட்டின் படி பொறியியல் படித்து, கொஞ்ச காலம் சில பல உப்புமா கம்பெனிகெல்லாம் கோடு எழுதிக்கொடுத்து ஒரு வழியாக ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் ப்ராஜெக்ட் லீடர் ஆனான். அவர்கள் அதோடு விடாமல் H1B யும், அமெரிக்க கன…

  10. சதைகள் – அனோஜன் பாலகிருஷ்ணன். குருநாகல் புகையிரத நிலையத்தில் நியோன் வெளிச்சத்தில் நுளம்புகளை விரட்டிக்கொண்டு நின்றேன். குலுங்கலுடன் சிலுப்பி அதிர்ந்து புகையிரதம் பிளட்ஃபோமில் என் கால்விளிம்பருகே பாரிய உலோக அதிர்வுடன் நின்றது. அதிஷ்டவசமாக ஜன்னல் இருக்கை கிடைத்தது. ஆசுவாசப்படுத்திக்கொண்டு அமர்ந்தேன். வேகமாக இருட்டில் பதுங்கிய தென்னைமரங்கள் நீண்ட இலைகளுடன் என்னைக் கடந்துகொண்டிருக்க, தடக் தடக் ஒலிகள் காதின் சவ்வுகளை அதிர்வித்துக்கொண்டிருந்தன. சூடான மூச்சுக்காற்று என் மூக்கிலிருந்து புறப்பட்டு என் நெஞ்சில் மையம்கொண்டது. நேரத்தைப் பார்த்தேன் ஏழுமணியைக் கடந்திருந்தது. கொட்டுவை போய்ச்சேர பதினொரு மணியாகும். புகையிரதக் குலுங்கல் மத்தியிலும் பக்கத்திலிருந்த சிங்களவர் மூக்குக் க…

  11. Started by nunavilan,

    வைகறைக்கனவு (சிறுகதை) – தமிழினி ஜெயக்குமாரன் ‘மலரினி ஓடிக் கொண்டிருந்தாள். வேகமாக மிக மிக வேகமாக. பூமி அவளது கால்களுக்கு கீழே ஒரு மின்சார ரயிலின் வேகத்தில் பின்னோக்கி நகர்வதைப் போலிருந்தது. நிலத்தைத் தொட்டும் தொடாமலும் உதைத்தெழும்பும் ஒரு மானின் லாவகத்துடன் அவளது கால்கள் அசைந்து கொண்டிருந்தன. பிடரி மயிரை சிலுப்பிக் கொண்டு காட்டுப் பாதைகளையும் கட்டாந்தரைகளையும் கடந்து காற்றிலே பறக்கும் வேகக் குதிரையாகயாகவே மாறிவிட்டிருந்தாள் அவள். ஆஹா… எத்தனை இனிமையானதொரு அனுபவம் என எண்ணுவதற்குள்ளாகவே அவளது உடல் பாரமாகக் கனப்பதைப் போலிந்தது. ஒரு அங்குலம் கூட அசைக்க முடியாதபடி பெரும் பாராங்கல்லொன்றுடன் இறுக்கப் பிணைத்து கட்டி விட்டதைப் போல… “ஆ….ஐயோ…அம்மா” உடம்பு முழுவதையும் கொத்திக்…

  12. பூதக்கண்ணாடி கதையாசிரியர்: ஜே.பி.சாணக்யா பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் ஊரில் நடந்து முடிந்திருந்த அந்தச் சம்பவங்களைப் பற்றி முழுமையாகச் சொல்ல முடியாது என்றாலும் அவற்றைப் பற்றிய குறைந்தபட்ச விவரிப்புகள்கூட அவற்றின் தீவிரத்தை உங்களுக்கு உணர்த்திவிடும் என்பதாலும் நானும் அச்சம்பவங்களின் சாட்சிகளில் ஒருவனாய் இருப்பதாலும் இவற்றை உங்களுக்குத் துணிந்து சொல்கிறேன். நமக்கு அருகிலுள்ள மனிதர்கள் பற்றிய எச்சரிக்கை உணர்வுகளை இவை எனக்குத் தந்திருப்பினும், அவற்றிலிருந்து மெய்ஞ்ஞானிகள் தவிர்த்து, ஒருவருக்கும் பயனற்றதாகவே அவை முடிந்துவிடும். எங்களுக்கும் வத்சலாவுக்கும் நேர்ந்ததைப் போல. இளவழகனுக்கு நான்காவது வயது நடந்துகொண்டிருந்த ஒரு நாளில் அவன் அம்மா மனப்பிறழ்வுற்ற வேசியாகப…

  13. நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக்கொண்டிருந்தார் அந்நியன் மெல்லிய பனித்தூவிக்கொண்டிருக்க ஓர் உருவம் நடந்து போய்க்கொண்டிருக்கின்றது. மனிதர்களின் மனங்களுக்குப் பலவர்ணங்கள் இருப்பதுபோல, பனியிற்கும் பல உருமாற்றங்கள் நிகழ்கின்றன. இப்போது பெய்யும் பனி, பூக்கள் சொரிவதைப் போன்று மென்மையானது. பனிக்காலம் தாண்டி வசந்தத்தில் பிறழ்வாய் பொழிகின்றதெனினும் இதற்கென்று ஓர் அழகுண்டு. உடலை உறையச் செய்யும் காற்றில்லாது, நிலத்தை முத்தமிடும் எந்தப் பனியும் எவரையும் அலுக்கச் செய்வதுமில்லை. இது காலையா அல்லது மாலையா என்ற தடுமாற்றங்களைத் தருகின்ற வானம், கரும்சாம்பல் போர்வையைப் போர்த்திய ஒரு பொழுது. அந்நியன் தேர்ந்தெடுத்த இந்த இடம், பெரும் கூட்டத்திடையே தனித்து நிற்கும் ஒரு அமைதியான பெண…

  14. Started by கிருபன்,

    ஆராதனா - அனோஜன் பாலகிருஷ்ணன். அபத்தமான தருணங்களில் ஒன்று பஸ் பயணம்.அதுவும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வருவது மகா எரிச்சலை கிளப்பியது.மெல்ல மெல்ல தன்னிலை இழந்து அரைத்தூக்கத்தில் இருந்தேன். ஏஸி பஸ்க்கு ஆசைப்பட்டதின் விளைவாக குளிர் தாங்காமல் அவதிப்பட்டு குல்லா சகிதம் சில கிழவர்கள் குறட்டை விட்டு பஸ் எஞ்சின் சத்தத்தை முறியடித்தனர். சுற்றிப்பார்த்தேன் கவனிக்கத்தக்கவகையில் ஒரு இளமை ததும்பிய பெண்களையும் காணவில்லை. என் பின்னால் சுவட்டருடன் இருந்த ஒரு கிழவர் என் பிராணத்தை வேண்டனும் என்ற நோக்கத்தில் இருந்தார்போலும்,என்னால் சீட்டை பின்னால் மடிக்க முடியவில்லை.கொஞ்சம் மடித்தால் “கால் வைக்க முடியவில்லை தம்பி..கொஞ்சம் நிமித்திரியலே……” சம்பந்தம் இல்லாத சத்தங்கள்,முகங்கள். இ…

  15. கடுகு கதை - மருமகள் ராசாத்தியம்மா ...... வச்ச கண் மாறாமல் .......தொலைக்காட்சி தொடர் ஒன்றை பார்த்துகொண்டு இருந்தார் . தொலைக்காட்சி தொடரில் முக்கிய விடயம் "மருமகளை கொடுமைபடுத்தும் மாமியின் தொடர் " . கண் கலங்கிய படியும் வாய்க்குள் மாமியாரை திட்டியபடியும் முணுமுணுத்த படி கவலையோடு பார்த்துகொண்டிருந்தார் ......ராசத்தியம்மா ....!!! ராசாத்தி ...ராசாத்தி ....!!! கூப்பிட்டபடி ராசாத்தியின் கணவர் கோபாலபிள்ளை வீட்டுக்குள் நுழைந்தார் . கடும் வெய்யில் நடுவில் வெளியில் சென்று வந்த கோபாலபிள்ளை ...கொஞ்சம் தண்ணிகொண்டுவா ராசாத்தி ..... என்னா வெய்யிலப்பா என்று சளித்தபடி கேட்டார் .....!!! அந்த நொடியில் ராசாத்தியின் குரல் கடுமையானது ... உரத்த குரலில் அது சரி இந்த கொளுத்தும் வெய்யிலில் எங்…

  16. ஒரு கணத்துக்கு அப்பால் - ஜெயமோகன் வயது வந்தவர்களுக்கானது! அப்பாவின் கண்கள் விரிவதை கண்டு வியப்புடன் திரும்பிப்பார்த்தான். அவர் விசைப்பலகையில் கைத்தவறுதாலாக அழுத்தி திரையின் ஓரத்தில் துடித்துக்கொண்டிருந்த சிறியவண்ணப்படத்தை முழுமையாக விரித்திருந்தார். பெரிய முலைகள் கொண்ட ஒரு பெண் கால்களை ஒரு முக்காலியில் தூக்கி வைத்து நின்றிருந்தாள். அவளுடைய மழிக்கப்பட்ட யோனி செந்நிற அடுக்குகளாக விரிந்திருந்தது. இளநீலநிற நகச்சாயம் பூசப்பட்ட விரல்களால் அவ்விதழ்களின் மேல்நுனியை அகற்றியிருந்தாள். இன்னொரு கையில் கரியநிறமான செயற்கை ஆண்குறி. கீழே ஒரு கணத்துக்கு அப்பால் என்ற வரிகள் மின்னி மின்னி அணைந்தன அப்பா சுட்டுவிரலால் அந்தப்படத்தைச் சுட்டிக்காட்டினார். அவர் பார்வையை திருப்பும்பொருட்…

    • 1 reply
    • 909 views
  17. மழைக்கால இரவு. - தமிழினி ஜெயக்குமாரன் தன் கடந்த கால போராட்ட அனுபவங்களை மையமாக வைத்து அண்மைக்காலமாக எழுதும் கவிதைகளினூடு ஈழத்தமிழ் இலக்கிய உலகினுள் காலடி எடுத்து வைத்திருக்கின்றார். இவரது இச்சிறுகதையான 'மழைக்கால இரவு' இவரது எழுத்துச்சிறப்பினை எடுத்துரைக்கும் அதே சமயம் அனுபவங்களைப் பதிவு செய்யுமோர் ஆவணமாகவும் விளங்குகின்றது. தமிழினி ஜெயக்குமாரன் தன் படைப்புகளினூடு முக்கியமான படைப்பாளிகளிலொருவராக உருவாகி வருவதை அவதானிக்க முடிகின்றது. எதிர்காலத்தில் இவரிடமிருந்து மேலும் பல படைப்புகளைத் தமிழ் இலக்கிய உலகு எதிர்பார்க்கின்றது. வாழ்த்துகிறோம். - பதிவுகள் - அது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூற்று மூன்றின், கார்த்திகை பன்னிரண்டாம் நாள், மாரி மழை ஊறி ஊறி பெய்து கொண்டேயிரு…

  18. ஒரு மூன்றுவருடங்கள் இருக்கும். இருள் கெளவ்விய மாலைப் பொழுதில் ஆயிரக் கணக்கானவர் மத்தியில் ஒழுங்காகக் அடுக்கப்பட்டிருந்தன அவை. சாம்பலும், கறுப்புடன் இடையிடையே வெள்ளையும் கொண்டு பூசப்பட்ட கல்லறைகள். ஒவ்வொரு கல்லறையின் தலையிலும் மண்ணுக்காக மரித்துப் போன தெய்வங்களின் திருவுருவப் படங்கள். நானும் மாவீரர் குடும்பம்தான், ஆனால் எதற்கு முன்னால் போய் நிற்பது?அங்கிருந்த எல்லோருக்கும் மலர்தூவ எனக்கு ஆசைதான், ஆனால் ஒவ்வொரு படத்தினதும் முன்னால் அந்ததந்தக் குடும்பங்கள் அழுதுகொண்டிருக்க நான் எப்படி...........முடியவில்லை. முகவரி தெரியாத கல்லறை தேடிக் கண்களும், கூடவே கால்களும் சேர்ந்துகொள்ள அடுக்கப்பட்டிருந்த கல்லறைகளிலே அதனைத் தேடிக் கொண்டிருந்தேன். ஒரு ஓரத்தில் அது இருந்தது. படம…

  19. தாயின் கணச்சூடு ----------------------------- பரபரப்பான நகர வாழ்க்கை (நரக வாழ்க்கை ) ஆதவன் அதிகாலையில் எல்லோரையும் உட்சாகபடுத்தும் வண்ணம் எழுகிறான் அவனுக்கென தன் கடமையை தவறாமல் செய்கிறான் என்று முணுமுணுத்தபடி என் கடமைக்கு ஆயத்தம் ஆகினேன் நான் . என் பெயரும் ஆதவன் ......! என் குடும்பம் ஒரு அழகான அளவான குடும்பம். எல்லோருக்கும் காலை நேரம் என்றால் நகர புறத்தில் வீடு ஒரு போர்களம் தான் எல்லாவற்றையும் கவனித்து விட்டு வேலைக்கு போகும் முன் மேல் மாடியில் இருக்கும் என் அம்மாவிடம் முகத்தை காட்டிவிட்டு வேலைக்கு செல்வதுதான் ஆதவனின் வழமையான செயல். அம்மா " பூரணம் " எண்பது வயதை தாண்டி வாழ்க்கையின் இறுதியோடு போராடும் ஆத்மா ஜீவன். அப்பாவை இழந்து மூன்று வருடங்களாக அவரின் நினைவுகளோ…

  20. பருப்பு கோமகன் குரங்கு அப்பம் பிரித்த கதையாக சமாதானம் பேசவந்தோம் என்று அந்நியப்படைகள் ஈழ மண்ணில் மூலை முடுக்கெல்லாம் பரவியிருந்த காலத்தில் எல்லரோரையும் போல பருப்பின் வாழ்கையிலும் இரண்டு பெரிய சூறாவளிகள் அடித்து பருப்பின் வாழ்கையையே புரட்டிப்போட்டன. கோண்டாவிலிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பெடியளுக்கு கதிரவேலர் ஓர் கடவுளாகவே இருந்தார். அந்த நேரத்தில் அமைதிப்படைகள் நடத்தும் சுற்றிவளைப்பில் சந்தேகத்தின் பேரில் கைதாகும் பெடியளை, கதிரவேலர் தனது ஆங்கில அறிவாலும், பிரைஜைகள் குழுவின் தலைவர் என்ற முறையிலும் அமைதிப்படை முகாம்களுக்கு சென்று கைதான பெடியளை மீட்டு வருவதுண்டு. இந்த தொடர்பால் அமைதிப்படைக்கும் கதிரவேலருக்கும் ஓர் சிநேகபூர்வமான தொடர்புகள் இருந்தது. கதிரவேல…

    • 2 replies
    • 1.2k views
  21. அம்மா என்னும் தெய்வம் கஜன் எண்பது வயதாகியும் ,இருபது வயது குமரி போல் ஓயாமல் சுழன்று கொண்டு இருக்கும் எனது அம்மா , பாத்ரூமில் சறுக்கி விழுந்ததிலிருந்து ,கடந்த இரண்டு மாதகாலமாக படுத்த படுக்கையாய் மட்டுமே இருக்கின்றார்.விழுந்த வலியை விட இயங்காமல் இருப்பதே அந்தக்கிழவிக்கு மேலும்மேலும் வலியைக் கொடுத்தது, அந்தக் கால கிழவி அல்லவா , சோம்பல் என்றாலே என்னவென்று அறியாத கிழவி அவள். திடீரென்று மூச்சு வாங்கியது கிழவிக்கு , பயந்து போன நான் இன்றுதான் வைத்திய சாலைக்கு கொண்டு வந்தேன்.அம்மா என்னை விட்டுபோய் விடுவாளோ என்ற ஏக்கம் திடீரென்று என்னைப்பற்றிக்கொண்டது என்றுமில்லாதவாறு இன்றைக்கு. கணவன் என்னை விட்டு பிரிந்து வேறோத்தியுடன் சென்ற பின், இருந்த ஒரு மகளும் தான் பாய் பிரண்டுடன் சென…

  22. "இன்று செவ்வாய்க்கிழமை. வேலைவிட்டு நேரத்திற்கே கிளம்பி வந்துவிட்டது வசதியாகி விட்டது. இன்றும் அவள் வருவாள். கடந்த இரண்டரை வருடங்களாகக் கண்களாலேயே மட்டும் பேசிக்கொள்ளும் எமது உணர்வுகள் மாற்றங்கள் ஏதுமின்றி இன்றைக்கும் தொடரும்" என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டே காரிற்குள் காத்திருந்தேன். பிண்னனியில் இலளையாராஜாவின் பாடல்கள் மெதுவாக மனதைத் தாலாட்டிக்கொண்டிருக்க அவள் வரும் வழி பார்த்துக் காத்திருந்தேன். நேரம் நெருங்க நெருங்க மனது துடிப்பது எனக்கு வெளியே கேட்டது. என்னைத் தாண்டிச் சென்றுகொண்டிருந்த காரெல்லாவற்றையும் மனம் அங்கலாய்ப்புடன் பர்த்துக்கொண்டது. அவளில்லை. சரி, 3 மணியாகிறது, இனிக் கிளம்பலாம் என்று நான் நினைத்திருக்க அவளது சாம்பல் நிறக் கார் வீதியின் ஆரம்பத்தில் திரும்…

  23. நல்ல காலம் பிறக்குது 1:50 PM Posted by Siva Sri No Comment நல்ல காலம் பிறக்குது இந்தக் கிழமை கட்டாயம் பாரிசுக்கு போகவேண்டும் காரணம் என் சிறுவயது நண்பன் சிவாவின் அழைப்பு.கட்டாயம் நீ வரவேணும் டிக்கெட் போட்டு தரலாம் ஏனெண்டால் இண்டைக்கு நான் இந்தளவு மகிழ்ச்சியாய் இருக்கிறதுக்கு காரணம் நீ தாண்டா என்று தொடர்ந்து வற்புறுத்தியதால் மறுக்க முடியாமல் போவதாக முடிவெடுத்து விட்டேன்.எனது நகரத்தில் இருந்து பாரிசுக்கு அதி வேக ரயிலே ஆறு மணித்தியாலம் ஓடும் அதனால் விமானத்தில் போனால் நேரத்தை மிச்சம் பிடிக்கலாம் இரண்டு நிகழ்வும் அடுத்தடுத்த நாளில் வருவதால் போகலாம் என்று முடிவெடுத்து முதலாளியிடம் மென்முறயில் இரண்டு நாள் லீவு கேட்டதும் முகத்தை சுளித்து முடியாது என்றான்.எனவே அடுத்து வ…

    • 0 replies
    • 1.1k views
  24. ‘சாத்தானின் மைந்தன்’ - இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் (லண்டன்) 29.04.1945 (இரவு) தூரத்தில் கேட்டுக்கொண்டிருக்கும் பீரங்கிகளின் வெடிச்சப்தம் அதல பாதாளத்தில் அமைக்கப்பட்டிருந்த பங்கரில் வாழும் அந்த நாயை மிகவும் பயப்படுத்திவிட்டது. வெளியில் ஓடியாடித்திரிந்த அந்த அல்ஸேஸியன் நாய் கடந்த சில மாதங்களாக இந்த பங்கரில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இயற்கை வெளிச்சத்தைக் கண்டே எத்தனையோ மாதங்களாகி விட்டன. பங்கரின் குறுகிய பாதைகளில் அங்குமிங்குமாகத்தெரியும் சின்ன வெளிச்சங்கள் ஏதோ ஒரு குகையில் இருட்டில் அகப்பட்ட உணர்வையே கொடுப்பதால் அந்த அல்ஸேஸியன் நாய் என்னேரமும் ஏதோ ஒரு பயத்தில் மனமுடைந்து போயிருக்கிறது. வெளிச்சமற்ற சவப்பெட்டியில் வாழ்வது போலிருப்பதாக அந்த நாய் உணர்கிறது. வெள…

    • 2 replies
    • 1.4k views
  25. Started by Surveyor,

    அப்போதெல்லாம் பள்ளி விடுமுறை விட்டால் எங்கள் சொந்த ஊரான கிராமத்திற்கு செல்வது வழக்கம். நான் அரைக்கால் சட்டை அணிந்த காலம் அது. மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே தனியாக ஊருக்கு சென்று வந்து விடுவேன். தேர்வு சமயத்தில் என் தாத்தா இறந்து விட்டார் என்று செய்தி வந்தது. அம்மாவும் அப்பாவும் உடனே ஊருக்கு கிளம்பி விட்டார்கள். நானும் என் தம்பியும் தேர்வு எழுத வேண்டுமென்பதால் மதியத்திற்கு மேல் ஆள் விட்டு அழைத்து கொள்வதாக முடிவு. ஆனால் நாங்கள் முன்னரே தேர்வு எழுதி முடித்து விட்டு ஊருக்கு தனியாக கிளம்பி சென்று விட்டோம். அன்று முதல் நான் தனியாக ஊருக்கு செல்ல அனுமதி கிடைத்தது. அப்படி தான் ஒரு நாள் நான் ஊருக்கு புறப்பட்டேன். பேருந்திலிருந்து இறங்கி இரண்டு கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும…

    • 0 replies
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.