கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3073 topics in this forum
-
ஆண்மை - எஸ்.பொன்னுத்துரை ஈச்சேரில் விழுந்த” சந்திர சேகரம் கோழி உறக்கத்தை வாலாயம் பண்ணி, அதனைச் சுகிக்கின்றார். யாழ்தேவியிலே பகற் பயணம். அகோர வெயில். காட்டு வெக்கை. இத்தனைக்கும் மேலாகச் சிவசம்பு சாப்பாட்டுக்கடைச் சோற்றைக் கொறித்தார். மனசார ஒரு மயக்கம். சாய்வு நாற்காலியிற் தாம் தூங்குவதான நினைப்பே அவருக்கு யாரோ உடம்பைப் பிடித்து விட்டது போன்ற சுகத்தைக் கொடுத்தது. வள்ளிசாக மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், அவருடைய குடும்பம் தாயடி வீட்டிலே வந்திருக்கிறது. பெத்துப் பெருகிய குடும்பம். அவருடைய மனைவி சரஸ்வதி மூலம் ஐந்து பிள்ளைகளையும் பெட்டைக்குஞ்சுகளாகவே பீச்சி விட்டாள். அரிய விரதங்கள் பிடித்து, இருக்காத தவம் எல்லாம் கிடந்து, கண்ட கண்ட தெய்வங்களையெல்லாம் கையெடுத்துக் கும…
-
- 2 replies
- 1.7k views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் ஆசி பெண் குழந்தையுடன் அம்மன் கோயிலுக்கு சந்தோஷமாக வந்த கணவன் மனைவியிடம் ``அடுத்தமுறை ஆண் குழந்தையுடன் வரணும்’’ என ஆசி வழங்கினார் கோயில் பூசாரி! - கே.மணிகண்டன் ஓய்வு “நாளைக்கு சண்டே. கொஞ்சம்கூட ரெஸ்ட் கிடைக்காது’’ என்றார் சலூன் கடைக்காரர்! - பிரகாஷ் ஷர்மா நாடகம் ‘தடியடி’ நடத்திவிட்டுக் காவல்துறையினர் நான்கு பேர் ஆஸ்பத்திரியில் ‘அட்மிட்’ ஆகினர்! - இரா.இரவிக்குமார் ஸ்டேட்டஸ் நண்பனின் பெருமைகளைக் கவிதைகளாக எழுதி ஃபேஸ்புக்கில் லைக்ஸ் வாங்கினான், அவனின் சாவுக்குப்போக நேரமில்லாத வரதன்! - பெ.பாண்டியன் சண்டை “வாய்ல வைக்க முடியல... என்னடி சமைச்சிருக்கே…
-
- 0 replies
- 1.6k views
-
-
பார்வை தாட்சாயணி பச்சை வைப்பர் இழைக்கண்ணாடிகள் இருபக்கமும் கூரைகளாய் வளைந்து இறங்கிய கூடாரம். மழைத்துளிகள் வளைந்த விளிம்புகளில் சிறு பிள்ளைகள் சறுக்கி விழுவது போல விழுந்து வழிந்தன. வெளிமுற்றத்தின் குடை நிழலொன்றில் மழைக்கு ஒதுங்கியபடி அந்தக் கூடாரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் தரணிகா. அவள் வந்து பத்து நிமிடங்கள் ஆகியிருந்தன, கீதாஞ்சலி இன்னும் வரவில்லை. மழையின் சாரல்கள் அவளது பயணத்தில் இடையூறு தந்திருக்கக் கூடும் என நினைத்தாள். வானம் காலையில் வெயிலின் பளிச்சிடலோடு சிறிது தகதகப்போடு தான் இருந்தது. நாலைந்து நிமிடங்களுக்குள் திடுமென்று சூழ்ந்த இருண்மையின் நெருக்கத்தை எப்படி விலக்குவது?. அதற்குப் பிறகு சூழ்ந்த சாம்பல் நிறம் சூழலை ஒரு இ…
-
- 1 reply
- 1.5k views
-
-
மாசு எனக்கு இன்றைக்கு பள்ளிக்குக் கிளம்பவே மனம் இல்லை. என்னமோ மிகவும் பாரமாகத்தான் இருந்தது. நினைவெல்லாம் மதுவைச் சுற்றியே இருந்தது. ஆனால் கால்கள் மட்டும் பழக்க தோஷத்தில் பஸ் ஸ்டாண்ட் வந்து நின்றன. இன்று உடலுறுப்பு பற்றி ஸ்கூலில், பாடம் நடத்த வேண்டும். எந்த மெட்டீரியலும் தயார் செய்து கொள்ளவில்லை. பஸ் வந்து நின்றது. அவசர அவசரமாய் ஏறிய எனக்கு நல்ல வேளை உட்கார இடம் கிடைத்தது. கொஞ்ச நேரம் டெக்ஸ்ட் புக்கைப் புரட்டினால், இன்று எடுக்கப் போகும் புது பாடத்தின் மெட்டிரியல்களைக் கொஞ்சம் சேகரித்துக் கொள்ளலாம். புத்தகத்தைப் புரட்டி, அதற்கான பக்கத்தையும் எடுத்துப் பிரித்துக் கொண…
-
- 1 reply
- 1.3k views
-
-
வசந்தத்திற்கும் கோடைக்கிற்கும் இடைப்பட்ட குழப்பகரமான காலநிலை. கருக்கற் பொழுதின் குறைந்த ஒளி, இரைச்சல்கள் இல்லை, புத்துணர்ச்சி நிறைந்த மனநிலை. ஆங்காங்கே சில பனித்துளிகளும் விழுந்தவண்ணம் காத்து நின்ற இரயில் நிலையத்தில் இரயில் வந்து நின்றது. வழக்கமான இருக்கை, வழக்கமான முகபாவங்கள், பழகிப்போன செயற்கைத் தனம். மூடிக்கொண்ட கதவுகளைத் தொடர்ந்து அடுத்த நிலையம் நோக்கிய இரயிலின் நகர்வு. கண்கள் இரயில் பெட்டிக்குள் உலாவிக்கொண்டிருந்தன. பிற கண்களைக் காண்பதைச் சாலைவிபத்துக்கள் போல்த் தவிர்த்;து, தாழ்த்தியும் உயர்த்தியும் முகங்கள் கண்களை உருட்டிக்கொணடிருந்தன. நடனம் தெரியாத முகங்கள் உறங்கின. சில உறங்குவதாய்ப் பாசாங்கு செய்தன. உண்மையில் உறங்கும் முகங்களில் எத்தனை அமைதி. ஓவ்வொரு மனிதனிலும் பி…
-
- 34 replies
- 3.9k views
-
-
கோம் தியேட்டரில் சிவாஜி படத்தை பார்த்துக் கொண்டு இருந்தான் சிவா.யாரப்பா வந்தது என்று மனைவி புஷ்பாவின் குரல் கேட்டும்,கேட்காதவன் போல் சிவாஜி படத்தை பார்த்து ரசித்து கொண்டிருந்தான். இங்கை உத நிற்பாட்டுங்கோ எத்தனை தரம் தான் இதை போட்டு போட்டு பார்க்கிறியள் அலுக்கவில்லையோ உங்களுக்கு அப்படி என்ன தான் ஸ்ரேயவில் இருக்கு என்று அன்பு கலந்த அதட்டலாக கேட்டாள் புஷ்பா. இல்லையப்பா நான் அவளை ரசிக்கவில்லை இந்த நம்மன்ட ரஜனியை தான் ரசித்தனான் என்னை விட பத்து வயசு கூட ஆனாலும் பாரும் மேக்கப் போட்டு எவ்வளவு இளமையாக இருக்கிறார் இளசுகளோடும் எவ்வளவு ஸ்டைலா டான்சும் ஆடுகிறார் பாரும் என்றவனை,இங்கப்பா சும்மா அலட்டாமல் யார் உங்க வந்தது என்று சொல்லுங்கோ. நான் "ஸ்பாவில்" இருந்தனான் அதுகுள்ள …
-
- 10 replies
- 2k views
-
-
சுவையான தேநீர் போடுவது எப்படி? சீன மகாராஜா ஷெனொங் 'சுடுதண்ணி' குடித்துக்கொண்டிருந்தார். நிச்சயமாக அரண்மனையில் இல்லை. வெளியில் எங்கோ காட்டில் என்று வைத்துக் கொள்வோம். திடீரென்று குடித்துக் கொண்டிருந்த சுடுதண்ணி சுவையாக மாறியது. அதன் நிறமும் மாறிவிட்டது. மாண்புமிகு ஷெனொங் அவர்களுக்கு அளவுக்கு அதிகமாகக் கடவுள் நம்பிக்கை அல்லது பேய்,பிசாசு நம்பிக்கை இல்லைப் போல. தேத்தண்ணிப் பேணிக்குள்ளே மெதுவாகப் பார்வையை விட்டார். எங்கிருந்தோ மரத்தில் இருந்து உதிர்ந்து பேணிக்குள் விழுந்திருந்த இலைகளைக் கவனித்தார். வேறு பேர்வழிகள் எனில் உடனே கவிதை எழுதத் தொடங்கியிருப்பார்கள். மகாராஜா புத்திசாலி. ஆராய்ந்து பார்த்து அந்த இலைகள் எந்த மரத்தில் இருந்து உதிர்ந்தன என்று கண்டுபிடித்தார். இதுத…
-
- 2 replies
- 2.4k views
-
-
[size=4]நகரில் இசை நிகழ்ச்சி ஒன்று நடப்பதாக இருந்தது. இந்த நிகழ்ச்சியைக் காண ஆசைப்பட்டான் ஒருவன். [/size] [size=4]ஆனால், நுழைவுச்சீட்டு இல்லை![/size] [size=4]கலக்கத்துடன் இருந்தவனுக்கு, பிரபல பத்திரிகை ஒன்றில் ஓவியராகப் பணிபுரியும் நண்பன் ஒருவன் உதவ முன்வந்தான். ''எங்கள் அலுவலகத்தில், ஓவியருக்கென நுழைவுச் சீட்டு ஒன்று உண்டு. அதை உனக்குத் தருகிறேன்'' என்று நண்பன் சொன்னதும் நம்மவனுக்கு உற்சாகம் கரைபுரண்டது.[/size] [size=4]இசை நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று, நண்பன் தந்த நுழைவுச் சீட்டை வாங்கிக் கொண்டு இசையரங்கத்துக்குச் சென்றான். அங்கே, நுழைவாயிலில் நின்றவர், இவனை சந்தேகத்துடன் பார்த்தார்.[/size] [size=4]''நீங்க... அந்தப் பத்திரிகையின் ஓவியர்தானா?'' என்று …
-
- 5 replies
- 885 views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
பிராங்பேர்ட் விமானநிலையம். விமானங்களின் போக்குவரத்து விபரங்களை விளம்பும் அறிவிப்புப் பலகையை நோட்டமிட்டவாறு அமர்ந்திருந்தாள் சுதா. பல்வேறு நாட்டவர்கள் புரியாத மொழிகளில் உரையாடியவாறு, சக்கரங்கள் பூட்டிய 'சூட்கேஸ்'களை இழுத்தவாறு அவளைக் கடந்து சென்றுகொண்டிருந்தார்கள். தோளில் ஒரேயொரு 'வாய்க்'. இலங்கையில் இருந்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இதே பிராங்பேர்ட் விமானநிலையத்தை மிதித்தபோது கொண்டு வந்திருந்த அதே 'வாய்க்'. அப்போது கனத்திருந்தது. பெறுமதியான பொருட்களுடன் இருந்தது. ஆனால் இப்போது இரண்டொரு உடுபிடவைகளுடன் பாரமில்லாமல் இலேசாக அவள் தோளே தஞ்சமெனத் தொங்கியது. சுதாவின் மனம் இந்த மண்ணை மிதித்தபோது எவ்வளவோ இன்ப மதர்ப்புடன் காற்றாடியாகக் கற்பனையென்ற வானத்தி…
-
- 12 replies
- 1.5k views
- 1 follower
-
-
தொலைந்து போனவைகள். போர் சூழலினால் வஞ்சிக்கபட்ட ஒரு இளைஞன் கதை. அமைதியான அந்தக் கிராமத்துக்கு படையினர் உட்புகு மட்டும் மக்கள் சாதாரண வாழ்வு தான் வாழ்ந்தார்கள். அதன்பின்பு தானேல்லாமே தலை கீழாய் போனது. சீர் குலைந்து நிம்மதி இழந்தது. பால பாஸ்கரன் அந்த கிராமத்தின் , ஊர்ச்சங்க தலைவரின் மகன். ஊர்பள்ளிக்கூடத்தின் உதவித் தலைமை ஆசிரியராய் இருந்தான். காலாகாலத்தில் திருமணம் செய்து ....மனைவி கற்பமாய் இருந்த காலத்தில் தான் ராணுவத்தினர் கிராமத்துள் புகுந்தனர் . சோதனை என்றும் சந்தேகம் என்றும் கைது செய்துகொண்டு சென்றுவிடுவார்கள். இதில் பாஸ்கரனும் விதிவிலக்கல்ல. பலமுறை கொண்டு சென்றாலும்.பாடசாலையை காரணம் காட்டி வெளிவந்து விடுவான். இவர்களது தொல்லை தாங்க முடியாமல்,வேறு ஊருக…
-
- 4 replies
- 934 views
-
-
காட்சிப் பிழை கே.எஸ்.சுதாகர் பாலகிருஷ்ணனின் மாமா அமிருக்கு ஒரு விருந்தாளி வந்திருந்தார். ‘ஹோல்’ மகிழ்ச்சியும் சிரிப்புமாக களை கட்டியிருந்தது. விருந்தாளி, பாலகிருஷ்ணனையும் அவனது மனைவி கலைச்செல்வியையும் பார்ப்பதற்குத்தான் வந்திருக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவர்கள் இருவரும் இலங்கையிலிருந்து கனடாவிற்கு வந்திருந்தார்கள். கனடாவில் கலைச்செல்வியின் அப்பாவும் அண்ணனும் இருக்கின்றார்கள். வவனியாவிலிருந்து கொழும்பு வந்து பின்னர் கனடா வந்த களைப்பு இன்னமும் தீரவில்லை. குளியலறைக்குள் பாலகிருஷ்ணன் ‘ஷேவ்’ செய்து கொண்டிருந்தான். முப்பது வருடங்களாகியும் பாலாவின் முகத்தினில் இருந்த தழும்புகள் மறையவில்லை. அதை தடவிப் பார்த்தான். காலம் போக வடுக்கள் எல்லாம் மறைந்து, உடம்பில…
-
- 1 reply
- 637 views
-
-
சங்கரன் வாழ்வில் ஆறு சுளைகள் - ஆதிரன் கனகமணிக்கும் அவளின் மகன் சங்கரனுக்கும் சுமுகமான உறவு அற்றுப் போய் வருடங்கள் ஆகிவிட்டிருந்தன. சிறுசிறு காரணங்கள் இருந்தாலும் மொத்தமான வெறுப்புக்கு செண்பகராணி பொறுப்பாயிருந்தாள். அவள் அவனுக்கு முறையில் சித்தியாகவும் இன்னொரு முறையில் அத்தை மகளாகவும் இருந்தாள். அவனை மாமா என்று அழைக்கும் அளவுக்கு அவள் சின்னப் பெண்ணாகவே இருந்தாள். சங்கரனுக்குப் புத்தி மந்தம். பெரிய உதட்டில் இடது ஓரத்தில் சதா எச்சில் ஒழுகும். மெலிந்த தேகம் என்றாலும் கைகளும் பாதங்களும் பெருத்து அவனது உடல்வாகுக்கு ஒவ்வாத ஒரு தினுசில் இருக்கும். ஊரில் தப்பையன் என்றே அவனை அழைத்தார்கள். சிலர் வாத்துக்காலு என்றும். அடங்காத தலைமுடியும் லேசான மாறுகண்களும் அவனை மனிதர்…
-
- 1 reply
- 1.8k views
-
-
சயனைடு - சிறுகதை ப.தெய்வீகன் - ஓவியங்கள்: ஸ்யாம் சயனைடு உட்கொள்வதன் மூலம் எவ்வாறு உயிரிழப்பது என்பது, அப்போது எங்கள் கூட்டத்தில் மிக முக்கிய விவாதமாக இருந்தது. சயனைடை அதிகம் பயன்படுத்தும் போராளிகள் எப்போதும் அதைக் குப்பியில் அடைத்து, கழுத்தில் கட்டியிருப்பர். ஆபத்து நெருங்கும் தருணத்தில் அந்தக் குப்பியின் மூடியைக் கழற்றி சயனைடு தூளை வாயில் போட்டு விழுங்கி இறந்துவிடுவர் என்பது சுதா, தான் படித்த ஏதோ ஒரு புத்தகத்தை மேற்கோள் காட்டிச் சொன்ன கதை. மணிவண்ணன், தனது பக்கத்தில் வேறொரு தகவலை வைத்திருந்தான். ``எதிரிகள் தங்களைச் சூழ்ந்துகொள்ளும் தருணங்களில், சயனைடு மூடியைக் கழற்றி வாயில் போட்டு விழுங்குதற்கெல்லாம் போராளிகளுக்கு நேரம் கிடைக்க…
-
- 0 replies
- 2.4k views
-
-
தாண்டி வா பெண்ணே! வேலை முடிந்து விட்டது. ஆனால், நிமிர்ந்து பார்ப்பதற்கே அச்சமாக இருந்தது. எங்கே வாசு வந்து நிற்பானோ என்று இருந்தது. ஆனால், விழிகள் தன்னிச்சையாக இயங்கின. இரண்டு பக்கமும் அடிப்பார்வையாக அவனைத் தேடின. ''வேலை முடிஞ்சுதா கல்பனா?'' அவன்... அவன்... அவனே தான்... வந்து விட்டான். ''இல்லே... ஆமா... முடியலே,'' என்று குழறினாள். ''ரிலாக்ஸ் கல்பனா... நோ டென்ஷன் ப்ளீஸ்... நான் வெயிட் பண்றேன்.'' ''ஏன்... ஏன் வெயிட் பண்ணணும்?'…
-
- 1 reply
- 892 views
-
-
அப்பலேர்ந்து அந்தக் கயவாணிப் பயபுள்ள ஒரு மாதிரியா என்னய உத்து உத்துப் பாக்குறான். மூஞ்சி முச்சூடும் தழும்ப வைச்சுக்கிட்டு சண்டைக்கோழி ராஜ்கிரண் ஸ்டைலுல ஒரு லுக்கு. எதோ அவம் பொண்டாட்டி தாலிய நான் அறுத்தா மாரி ரவுசு காட்றான். எங் காலக்கொடுமை அவனயும் என்னயும் ஒரே றூம்புக்குள்ளாறதான் போட்டு அடைச்சிருக்கு. நா ரீஜண்டான ஆளுதான். இந்த ஈ.சீ.ஆர். றோட்டாண்ட ஒரு பில்டிங் கட்றாங்க இல்ல… அங்ஙன காட்டுவெயாரோ சாப்டுவெயாரோ என்னா கசுமாலமோ… அங்ஙனதா நமக்கு வேல. வேலன்னா இன்னா சும்மாவா… ஒரு நாளிக்கு எத்னை கல்லு தூக்கணும் தெர்யுமா… கல்லுத் தூக்கித் தூக்கியே ஒடம்பு கல்லு மாரி ஆய்ப் போய்ச்சு. எம் பொண்டாட்டி தேவியும் அங்ஙனதாம் வேலை பாக்குறா. என்னய மாரி நல்ல கலர்ரா ரெண்டு பசங்க. கறுப்புத்தா நைன…
-
- 7 replies
- 1.8k views
-
-
வேகமாக சென்ற லண்டன் நிலக்கீழ் ரயில் தீடிரென்று நின்றது.ஏதோ நினைவுகளுடன் போராடி முட்டி மோதாடி எங்கோ நின்றிருந்தவைனயும் மறித்து திரும்பி நிஜத்துக்கு வரச்செய்தது.என்ன என்று அறியும் ஆவலுடன் தவிக்கும் மற்ற பயணம் செய்து கொண்டிருக்கும் பிரயாணிகள் போலவே அங்கும் இங்கும் நோட்டமிட்டு கொண்டு அசைந்த கண்கள் ஒரு இடத்தில் அசையாமால் தீடிரென்று நின்றது,அந்த வெள்ளை தோலுகளுக்கிடையில் இருந்த ஆசிய நாட்டு பெண்ணாய் இருந்ததுக்கல்ல,,எந்த வித சலனமற்று அமைதியாக அடுத்த கணம் எதுவானாலும் வரவேற்கும் முகபாங்குடன் இருக்கும் அவளை எங்கையோ எங்கையோ நெருக்கமாக பார்த்திருக்கிறேனே என்று என்று .......அவன் தவித்துக்கொண்டு அதற்க்குரிய விடையறிய முன் .நினைவுகள் வழுவி நழுவி நேரம் ,நாள் மாதம் வருடங்கள் கடந்து அந்த வருட…
-
- 9 replies
- 1.2k views
-
-
புதுச்சப்பாத்து... (இந்தவார ஒருபேப்பரிற்காக எழுதியது) தீ,பெருந்தீ,விண்ணைமுட்டும் வேட்கையுடன் கொழுந்துவிட்டெரிந்துகொண்டிருந்தது,மனிதர்களை எரித்துஎரித்து எஞ்சிய கரித்துண்டுகள் குவிந்து அந்த இடம் மேடாகி இருந்தது.அதன் மேல் வைக்கப்பட்டிருக்கும் அந்த சிதையைத்தான் தீ விரைவாகத் தின்றுதீர்த்துவிடவேண்டும் என்ற பெருஞ்சங்கல்ப்பத்துடன் எரித்துக்கொண்டிருந்தது.மாலை நேரத்து மெல்லிருளில் அந்த மயானப் பிரதேசமெங்கினும் அத்தீயின் ஒளியில் கரைந்து செந்நிறமாக உருகிக்கொண்டிருந்தது.சனசந்தடியற்ற அந்தச்சுடலை ஏரியாவில் பினமெரியும் சிதையை சற்றுத்தொலைவில் இருந்து வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் கோபி.தீ எழுந்து வானத்தை தொட்டுவிட எத்தனித்துக்கொண்டிருந்தது.சுடலையை அடுத்திருந்த வயல்வெ…
-
- 11 replies
- 1.8k views
-
-
[01] அந்தக் கடற்கரையில் அன்றைக்கு அலைகள் கொஞ்சம் அதிகமாகவே கரைதொட்டன. பெளர்ணமி நாளின் நிலவினை அவைகளும் ரசித்தன போல்! பரந்து கிடந்த மணற்பரப்பில் 'குட்டிப்பவுண்' அண்ணர் வலை பின்னிக் கொண்டிருந்தார்! ஐம்பத்தெட்டு வயசானாலும், நிலவு வெளிச்சத்தில் வலை பின்ன முடியாத அளவுக்கு கண் பார்வை மட்டுமல்ல அவர் உடலும் வலுவிழந்து போகவில்லை. அவரின்ர உண்மையான பெயர் சூசைப்பிள்ளை. சொந்த இடம் மயிலிட்டி. சம்மாட்டியாரா..... கைவிரல் முழுக்க மோதிரம் , கழுத்தில பெரிய சங்கிலி........ என அவர் வலம் வந்ததைப் பார்த்திட்டு அவரின்ர ஊர்ச்சனம் செல்லமா வைச்ச பெயர்தான் "குட்டிப்பவுண்". இவரின்ர மனிசிக்காரி தங்கராணி. அவவின்ர பெயரிலயே தங்கம் இருந்ததால்.... இந்தமாதிரி செல்லப்பெயரில் இருந்து அவ கொஞ்சம்…
-
- 14 replies
- 4.2k views
-
-
1. கடல் கொண்ட கோவில் நான் கிழக்குக் கோபுர வாசல் திண்ணையில், 'முருகா' என்ற கொட்டாவியுடன் துண்டை உதறிப் போட்டுக் கொண்டு சாய்ந்தேன். கிழக்குக் கோபுர வாசல் கதவு எப்பொழுதும் சாத்தித்தான் இருக்கும். ஆனால், அதே மாதிரி எப்பொழுதும் அதன் திட்டிவாசல் திறந்தே இருக்கும். திட்டிவாசல் வழியாக சமுத்திர கோஷமும் சமுத்திர அலைகளும் புலன்களில் உராய்ந்துகொண்டு இருக்கும். நான் உள்ளிருப்பதைக் கவனியாமல் அர்ச்சகர்கள் கதவைத் தாளிட்டுப் பூட்டிக்கொண்டு சென்றுவிட்டார்கள். அன்றிரவு நான் கன்னியின் சகபாடியாக அவளுடன் தனிமையில் கழிக்க வேண்டியதாயிற்று. பொச்சாப்பும் குரோதமும் புகையும் மனிதர் வாழ் சமாதிகளுக்குள் ஒன்றில், என்னை இவ்வாறு நிச்சிந்தையாக ஒரு கன்னியுடன் இராப் பொழுதைக் கழிக்க விட…
-
- 0 replies
- 773 views
-
-
மறக்காமல் வெள்ளிகிழமை பின்னேரம் ஏழு மணி போல் ஒருக்கா வீட்ட வாரும் தம்பி என்று மணி அண்ரி சொன்னவுடன் சுரேஷ் ஏன் ஏதாவது விசேசமா அண்ரி என்றான்..அப்படி ஒன்றுமில்லை நீ வா,காரணத்தை சொன்னா தேவை இல்லாம அலட்டுவாய் ஆனபடியா நீ வெள்ளிகிழமை மனிசியையும் பிள்ளைகளையும் கூட்டி கொண்டு வா. மணி அண்ரி சுரேஷின் அம்மாவின் தோழி.இப்பொழுது சிட்னியில் மகள் சும்தியுடன் வாழ்ந்து வருகிறா கணவன் மூன்று வருடங்களிற்கு முன் சிவபதம் அடைந்து விட்டார்.ஹரிதாஸ் சுவாமிகள் என்றால் மணி ஆண்ரிக்கு உயிர் ஊரிலே பஜனைகளை பூசைகளை என்று வைத்து தனது பக்தியை ஊர்மக்களுக்கு வெளிபடுத்து கொண்டிருப்பா ஊரில் சிலர் மணி ஆண்ரியை பஜனை ஆண்ரி என்று நக்கலாகவும் கூறுவதுண்டு.அதில் சுரேஷும் ஒருவன். ஹரிதாஸ் சுவாமிகள் பற்றி கதைக்க வ…
-
- 8 replies
- 2.1k views
-
-
திருந்தி விட்டான் ஓர் தமிழன்...... சிறு கதை.... கிருபாவும், ஜீவனுமாக அவசர அவசரமாக வெளிக்கிட்டுக் கொண்டிருக்க தொலைக்காட்ச்சியில் 6 மணி செய்தி தொடங்கும் சத்தம் கேட்க கிருபா... '' ஜீவன் நேரமாச்சு பொம்பிள்ளைபோல வெளிக்கிடாம கெதியென்று வெளிக்கிடடா..'' என்று கிருபா அவனை அவசரப்படுத்தினான். '' மச்சான் தெரியும் தானே... நீ ஏன் அவசரப் படுகிறாய் எண்டு...அங்க போய் மூக்கு முட்ட குடிச்சுப் போடு பெட்டையளோடையும் சேட்டைவிட்டுட்டு... வந்து பிரண்டு கிடக்கிறத்துக்குத் தானே..'' என்றான் ஜீவன் சிரித்தபடி. '' தெரிஞ்சாய் சரி..அனுபவிக்கத்தானே போறது வேற என்னத்துக்கு மச்சான் போறது சரி..சரி இறங்கு மச்சான்...'' என்று சொல்லியவண்ணம் கிருபா காரை நோக்கி நடக்க ஜீவனும் அவனைத் தொடர்…
-
- 6 replies
- 1.9k views
-
-
ஆம்பளைங்களை நம்பாத..! ------------------------------------------------ தீபாவிற்கு ஒரு நொடியில் உடல் நடுங்கி விட்டது. சித்தியினை அவள் இங்கு எதிர்பார்க்கவில்லை. என்ன பேசுவது எனத் தெரியாமல் உறைந்து நின்றிருந்தாள். சித்தியேதான் “என் தங்கம்” என்று அழுதபடி வந்துக் கட்டிக் கொண்டாள். உணர்வு திரும்பவும் தானும் அழத் தொடங்கிய தீபா சித்தியைக் கட்டிக் கொள்ள, சத்தம் கேட்டு வீட்டினுள் இருந்து வந்த ராஜேஸ்வரி நிலைமையைப் புரிந்துக் கொண்டு இருவரையும் வீட்டினுள் அழைத்து சென்றாள். சித்திக்கு குரல் அடங்கவில்லை. “இப்படி யாருமில்லாத அனாதை மாதிரி ஓட வச்சுட்டானுகளே பாவிங்க” அந்த வார்த்தை தீபாவிடம் அடங்கி இருந்த அழுகையை மேலும் தூண்டியது. அதைப் புரிந்துக் கொண்ட ராஜேஸ்வரி அதை திசை திருப…
-
- 8 replies
- 2k views
- 1 follower
-
-
அங்காடி தெருவின் கதை! :மினி தொடர்! பகுதி 1 “அக்கா, சுடிதார் தைக்கனுமா, ஒன் அவர்ல தைச்சு கொடுக்குறோம். வாங்கக்கா” என்று கையில் துணிப்பையுடன் போகும் இளம் பெண்ணை பார்த்து அழைக்கிறார் ஒருவர். அவர் கையில், தான் வேலைபார்க்கும் டெய்லர் கடையின் விசிட்டிங் கார்டுகள் இருக்கின்றன. அவர் அழைத்த அந்தப் பெண் மறு மொழி சொல்லாமல் கடந்து சென்ற பின்னர், இன்னொரு பெண்ணைப் பார்த்து அதே போன்று ரிபீட் செய்கிறார். தி நகர் ரங்கநாதன் தெருவில் மனித கடலுக்கு நடுவே ஒரு ஸ்டூலை வைத்து, அதற்கு மேல் பாத்திரத்தை வைத்து அதில் முக்கோண வடிவில் சமோசாக்களை அடுக்கி வைத்தவாறே, "ரெண்டு சமோசா பத்து ரூபா" என்று கூவி, கூவி விற்கிறார் இளைஞர் ஒருவர். நுகர்வு கலாசாரம் "ரெ…
-
- 25 replies
- 5.9k views
-
-
கற்கனைக்கதை ஒன்று (ஒன்றா?) சொல்வேன் கேளுங்கள் உங்கள் வீட்டில் உட்கார்ந்து கொள்ளுங்கள் இப்பொழுது கண்களை இறுக மூடிக்கொள்ளுங்கள் .... ....... ...... உங்கள் வீட்டின் அசையாப்பொருள் அனைத்துக்கும் (சுவர் கதவு உட்பட) கண் காது உள்ளது என்று நினைத்துக்கொள்ளுங்கள் .... ...... ..... உங்களது வீட்டில் நடந்தவைகளை அசை போடுங்கள் .... .... ... இப்போ கதை சொல்லி நானல்ல நீங்கள் ... .... யாவும் கற்பனை அல்ல நிஐம் ... ... முற்றும்🤣🙏
-
- 3 replies
- 928 views
-