Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. ஓய்வுக்காக காட்டுக்குச் சென்றபோது தனது செல்ல நாயையும் அழைத்துப் போனார் ஒரு அரசர். அவர் வேட்டையில் மும்முரமாக இருக்க, அங்குமிங்குமாக பாய்ந்துபாய்ந்து காட்டின் வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திக் கொண்டிருந்தது நாய். பல நிமிடங்களுக்குப் பிறகுதான் தான் வழியைத் தவறவிட்டுவிட்டதை உணர்ந்தது. அப்போது சற்று தூரத்தில் புலி ஒன்று வருவதைக் கண்டது நாய். அது தன்னை வேட்டையாடத்தான் வருகிறது என்பதையும் உணர்ந்தது. தப்பிப்பது எப்படி என்று எண்ணியபோது எதிரில் சில எலும்புத் துண்டுகளைக் கண்டது. சட்டென ஒரு காரியம் செய்தது அந்த நாய் . புலிக்கு முதுகு காட்டியவண்ணம் எலும்புத் துண்டுகளின் முன் அமர்ந்தது. புலி அருகில் வந்தவுடன் "ஆஹா...புலியின் மாமிசம் எவ்வளவு சுவை! இன்னும் ஒரு புலி கிடைத்தால் நன்றாக இ…

  2. தண்ணீரிலே தாமரைப் பூ (1) 'வசந்தங்கள் வாழ்த்துரைக்க வான்மேகம் பூத்தெழிக்க சொந்தங்கள் சூழ்ந்து நிற்க சொர்க்கமே அருகிருக்க மங்கள மேளமது சங்கமம் என ஒலிக்க தங்கமாய் வந்ததொரு தரமான வசந்தவிழா' விடிந்தால் திருமணம். வீடு முழுவதும் உறவினர்கனாலும் நண்பர்களாலும் நிறைந்திருந்தது. ஆங்காங்கே கூடிக் கூடி குதூகலமாகப் பேசுவதும் அலங்காரம் செய்வதுவும் திருமண காரியங்களுக்குத் தேவையான காரியங்களைக் கவனிப்பதுமாக வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. ஒவ்வொருவரும் தத்தமக்கு ஏற்ற தெரிந்த வேலைகளைப் பொறுப்பெடுத்து செய்து கொண்டிருந்தனர். முற்றத்தில் பெரிய பந்தல் போடப்பட்டிருந்தது. பந்தல் அலங்காரம் செய்பவர்கள் ஒரு பக்கம் மும்முரமாக செயற்பட்டுக்கொண்…

  3. ஒரு கார் விபத்தில் தன் இடது கையை இழந்திருந்த ஒரு பத்து வயது சிறுவனுக்கு ’ஜூடோ’ என்ற ஜப்பானிய மற்போர்க் கலையைக் கற்றுக் கொள்ள ஆவலாக இருந்தது. அவன் ஒரு வயதான ஜப்பானிய ஜூடோ ஆசிரியரிடம் தன் ஆவலைத் தெரிவித்தான். அந்த ஆசிரியர் அவன் ஊனத்தைக் கவனித்தும் பொருட்படுத்தாமல் அவனுக்கு ஜூடோ கற்றுக் கொடுக்க ஒப்புக் கொண்டார். அந்த சிறுவனும் அவரிடம் அந்த மற்போர்க் கலையைக் கற்றுக் கொள்ள பயிற்சியை ஆரம்பித்தான். சில மாதங்கள் கழிந்த பின்னும் அந்த ஆசிரியர் அவனுக்கு ஜூடோவின் ஒரே ஒரு ஆக்கிரமிப்புப் பயிற்சியை மட்டுமே திரும்பத் திரும்ப மிக நுணுக்கமான முறையில் கற்றுத் தந்திருந்தார். அந்த சிறுவன் அந்தப் பயிற்சியை ஓரளவு நன்றாகவே கற்றுத் தேர்ந்த பின் ஆசிரியரிடம் சொன்னான். ”ஐயா எனக்கு நீங்கள் வேறு பயிற…

  4. அழிந்துவரும் வரும் கலைகளில் ஒன்றான புலிக்கூத்து நேற்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு - வந்தாறுமூலை கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றது. இந்நிகழ்வு கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சி.ஜெயசங்கரின் வழிகாட்டலின் கீழ் நுண்கலைத்துறை இறுதி வருட மாணவியான ந.துஷ்யந்தியின் இறுதி வருட ஆய்வின் ஒரு பகுதியாக நடைபெற்றது. இவ்வாற்றுகை நிகழ்வில் ஆற்றுகையாளர்களாக நுண்கலைத்துறை மாணவர்களும் விரிவுரையாளர்களுமே கலந்து கொண்டனர். இவர்கள் புலிகூத்தின் மரபுவழி அண்ணாவியார்களினதும், புலிக்கூத்துக் கலைஞர்களினதும் பயிற்றுவிப்பின் கீழ் முறைப்படி பயின்றே இந்த ஆற்றுகையை நிகழ்த்தினர். வந்தாறுமூலை - பலாச்சோலை, சித்தாண்டி, வாகரை - அம்மன்தனாவெளி போன்ற கிராமங்களில் ஆடப்பட…

  5. கப்பல்காரன் வீடும் வக்சலாவும் ... யாழ்பாணத்தில எங்களின் வீடுக்கு கொஞ்சம் தள்ளி, எங்கள் வீதியின் முடிவில், கப்பல்காரன் வீடு இருந்தது! அந்த வீட்டில் என்னோட மிக சிறிய வயசில், அரச மரக்காலையில் ஸ்டோர் கீப்பர் வேலை செய்த கனகசுந்தரமும் ,அவரின் மனைவி ஸ்டோர் கீப்பர் மாமியும், அவர்களின் ஒரே ஒரு அழகு மகள் வக்சலாவும்,ஊருக்கும் இடைஞ்சல் இல்லாமல் , ஒருவருக்கும் இடைஞ்சல் இல்லாமல் அதில வாழ்ந்ததால " ஸ்டோர் கீப்பர் " வீடு எண்டுதான் ஆரம்பத்தில் ஊருக்குள்ள சொல்லுவார்கள் ! அது எப்படி பின்னாட்களில் " கப்பல்காரன் வீடு " எண்டு மாறியது எண்டு சொல்லுறதுக்கு காரணம் யாழ்பாணத்தில 80 களில், எங்கோ அரபிக் கடலிலும் ,அத்திலாந்திக் கடலிலும் ஓடிய கப்ப…

  6. பரபரப்போடு... கூட்டம் கூடுகிறது... கேள்விகளை தொடுக்கிறார்... (வெள்ளையின ஆங்கிலேய) முகாமையாளர்: உங்கள் பெயர்தான் கோலியாத்தா..?! கோலியாத்: ஆம்.. நானே தான் அது. முகாமையாளர்: உங்கள் மீது ஒரு குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. அது எமது நிறுவன ஒழுங்கு விதிக்கமைய பராதூரமாக பார்க்கப்படுகிறது..! அந்த வகையில் தான் இந்த விசாரணைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. நீங்கள் அண்மையில் அப்படி ஏதாவது குற்றம் செய்ததாக உணர்கிறீர்களா..??! கோலியாத்: நானா. அப்படி எதுவும் செய்ததாகத் தெரியவில்லையே..?! முகாமையாளர்: உங்களுக்கு சீதாவை தெரியுமா..??! கோலியாத்: என்ன அந்த மகாபாரத சீதாவா.. மன்னிக்கனும்.. இராமாயண சீதாவா.... அவாவை தெரியும். (முகாமையாளர் இந்தப் பதிலைக் கேட்டு முழிக்கிறார். …

  7. மகத்தான ஞானி ஒருவர் தான் இறக்கும் தருவாயில், தனது சீடனை அழைத்தார். “ ஒரே ஒரு விஷயத்தை மட்டும் ஞாபகம் வைத்துக்கொள். உனது வாழ்க்கையில் பூனையை மட்டும் அனுமதிக்க வேண்டாம்” என்று கூறிவிட்டு மரணத்தைத் தழுவினார். குருவின் கடைசி வார்த்தைகளை ஒரு பெரிய கூட்டமே கேட்டுக்கொண்டிருந்தது. சீடனுக்கோ யோசனையாக இருந்தது. “ நான் ஏன் என் வாழ்க்கையில் ஒரு பூனையை நுழையவிட வேண்டும்? இதுதான் எனது குருவின் ஒட்டுமொத்த கோட்பாடா?” என்று சந்தேகம் எழுந்தது. அவனோ வயதில் இளையவன். அப்போதுதான் இன்னொரு சீடர் உதவிக்கு வந்தார். அவரோ வயதில் முதிர்ந்தவர். அவர் முதுமையை அடைந்துவிட்ட காரணத்தாலேயே அவருக்கு ஆசிரமத்தின் தலைமைப் பதவி தரப்படவில்லை. அவர் இளைய சீடனிடம் கூறினார். “ குரு சொன்னது தொடர்பாக உனக்கு எதுவும் …

    • 4 replies
    • 1.3k views
  8. சீனாவில் எப்படி பாட்டி வடை சுட்ட கதை! - பேரா.பர்வீன் சுல்தானா https://www.facebook.com/video/video.php?v=10202785308383005

    • 2 replies
    • 3k views
  9. நின்றறுத்த தெய்வம் இது ஒரு உண்மைக் கதை - சில பெயர்கள் மாறி உள்ளன. பப்பிலிருந்து வெளியே வந்தாள் சமந்தா. நல்ல தோர் பார்ட்டி, நல்ல தோர் டான்ஸ், நல்ல மப்பு. பரவாயில்லை, கருமியாய் இருப்பாள் என்று நினைத்தேன், ஜோ தனது பிறந்த நாள் பார்ட்டிக்கு நன்றாக பணத்தினை வீசி செலவு செய்தாள் என்று நினைத்துக் கொண்டாள், சமந்தா. 1983 ம் ஆண்டின் டிசம்பர் மாதத்து குளிர் சில்ரென்று முகத்தினைத் தாக்கியது. காரின் அருகே சென்றாள் சமந்தா. 5 நிமிடத்தில் வீடு செல்லாம், அசட்டுத் துணிவுடன் கார்த்திறப்பினை எடுத்தாள். 'ஏ..ஏய், சாம்... முட்டாள் தனமாயிராமல் காரை அங்கேயே விட்டு விட்டு நடந்து போய் விடு'. திருப்பிப் பார்த்தால், தள்ளாடியபடியே போய் கொண்டிருந்தாள், சூசன் தனது ஆண் நண்பனுடன். …

    • 57 replies
    • 6.7k views
  10. கண்டி வீரன் ஷோபாசக்தி சிலோனில் முன்னொரு காலத்தில் கண்டி வீரன் என்றொருவன் இருந்தான். அவனுக்கு ஒரு தமிழ் விடுதலை இயக்கம் மரணதண்டனையைத் தீர்ப்பளித்ததாம். பின்னொரு சந்தர்ப்பத்தில் அந்த மரணதண்டனையை அந்த இயக்கம் விலக்கியும் கொண்டதாம். கண்டி வீரனின் சரித்திரம் பற்றி இதற்கு மேல் எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் இத்தகைய சம்பவம் எங்களது போராட்ட வரலாற்றில் வெகு அபூர்வமாகவே நிகழ்ந்த ஒன்று. இயக்கங்களின் கைகளில் சிக்கியவர்கள் மீண்டதான நிகழ்வுகள் வெகு அரிதே. குறிப்பாக மரணதண்டனை விதிக்கப்பட்ட பின்பாக அத்தண்டனை விலக்கிக்கொள்ளப்பட்ட நிகழ்வு இது ஒன்றுதான். நான் கண்டி வீரனைப் பற்றிக் கேள்விப்பட்ட நாளிலிருந்தே இது எப்படி நடந்திருக்கக் கூடும் என யோசித்து வந்திருக்கிறேன். கண்டி வீரனின் …

  11. தம்பி சுறுக்கென்று சிப்டை( shift)மாத்து ராசா. .அவனை அவசர படுத்தினார். இன்றைக்கு என்னவோ வழமைக்கு மாறா பிசியாய் இருக்கு ..இவங்கள் துலைவாங்கள் எங்கிருந்து தான் வாறங்களோ தெரியாது வந்து கொண்டிருக்கிறாங்கள்.அவருடையதை தொடங்க முன்னரே அவரே இப்பவே வேலை செய்து கடினமாக கஸ்டபடுவர் போல வார்த்தைகளை கொட்டி கொண்டிருப்பதை கேட்ட அவன் , கொஞ்சம் பொறண்ணை இந்த கியூவை கிளியர் பண்ணி போட்டு தாறன் அது உங்களுக்கும் நல்லது எனக்கும் நல்லது. அவர் நடுத்தர வயதை கடந்தவர் . இதே வேலையை இங்கு கன காலமாக செய்யிறார் அதிலை ஒரு பிடிப்பில்லாமால் அவருக்கு மட்டுமல்ல அந்த மூலையில் கடந்த வார தமிழ் பேப்பரோடு மல்லாடி கொண்டிருக்கும் இவரின் நண்பர் சண்முகமும் அப்படித்தான் .அவர்கள் இரண்டு பேரும் என்ன …

  12. திருவட்டார் ஆதிகேசவன் கோயிலருகே அன்று ஒரு நல்ல நூலகம் இருந்தது. ஸ்ரீ சித்ரா நூலகம். சித்திரைத்திருநாள் மகாராஜா சொந்தப் பணத்திலிருந்து கொடுக்கும் நிதியுதவி இருந்தமையால் அங்கே நல்ல நூல்கள் நிறையவே வாங்குவார்கள். நாங்கள் திருவட்டாரிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தள்ளி திருவரம்பில் குடியிருந்தோம். அப்பாவின் அம்மாவும் தங்கையும் திருவட்டாரிலேயே கோயில் அரசமரத்தருகே மூதாதையர் வீட்டிலேயே இருந்தனர். நாங்கள் பரம்பரையாக திருவட்டார் கேசவப்பெருமாள் கோயில் ஊழியர்கள். அந்தக்காலத்தில் யானைக்கொட்டில் பொறுப்பில் இருந்ததாகச் சொல்வார்கள். விடுமுறை நாட்களில் அனேகமாக வாரம் மூன்றுமுறை திருவட்டார் போய் பாட்டியைப்பார்த்துப் பழங்கதைகள் பேசிவிட்டு நூலகத்திலிருந்து புத்தகம் எடுத்துவருவேன். இதெல்லாம் எழு…

  13. எழுச்சி - ஷோபாசக்தி சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும் பாரிஸை வதிவிடமாகவும் கொண்ட ஆழ்வார் தருமலிங்கத்திற்கு இந்தப் புரட்டாதி வந்தால் சரியாக நாற்பத்தேழு வயது. இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் பிரான்ஸின் புகழ்பெற்ற தொழிற்சாலையொன்றில் கடைநிலைத் தொழிலாளியாகப் பணி செய்கிறார். பிரான்ஸுக்கு வந்து பதின்மூன்று வருடங்களாகின்றன. பிறந்து வளர்ந்ததற்கு இதுவரை அவர் விமானத்தில் ஏறியதில்லை. பதினைந்து வருடங்களிற்கு முன்பு தருமலிங்கத்திற்கும் காரைநகர் தங்கோடையைச் சேர்ந்த அசோகமலருக்கும் பொன்னாலை வரதராஜப்பெருமாள் கோயிலில் கல்யாணம் நடந்தது. அந்தக் காலத்திலேயே அய்ந்து இலட்சம் ரூபாய்கள் ரொக்கமும் முப்பது பவுண் நகையும் வீடு வளவும் சீதனமாக தருமலிங்கத்திற்குக் கொடுக்கப்பட்டது. இவ்வளவுக்கு…

  14. Started by nunavilan,

    பெரியாத்தா வீட்டுவாசலிலேயேபெரியாத்தாஉட்கார்ந்திருப்பார்.வீட்டுக்கு வருபவர்களின்கண்களில் சட்டென படவேண்டும் என்பதுதான் அவளுடைய திட்டம்.தங்கையின் வீட்டில் வந்து உட்கார்ந்து 5வருடங்கள் ஓடிவிட்டன பெரியாத்தாவிற்கு. தோள் துண்டை குறுக்காக மாட்டிக் கொண்டு பவுடர் பூசிக் கொள்வாள். வீட்டுக்கு வெளியில் போகவும் அனுமதியில்லை. “வாங்க தம்பி! உட்காருங்க” “நான் பெரியாத்தா. என் தங்கச்சி வீடுதான் இது. குளிச்சிக்கிட்டு இருக்கா? இதோ வந்துருவா. உட்காருங்க” “நான் பெரியாத்தா. அப்படித்தான் கூப்டுவாங்க முன்னலாம். நானும் நல்லாத்தான் இருப்பேன். அழகா எலும்பா... என் புருஷன் பத்து வருசத்துக்கு முன்னாடியேசெத்துட்டாருயா” “எப்படி செத்தாருனுத்தானே நினைக்கற?” “எல்லாம் குடிதான…

  15. நம்ம யாழ் கள சாத்திரியின் மாந்தீரிக யதார்த்தப் பாணியில் எழுதப்பட்ட சிறுகதை. டுபுக்கு டொட் கொம்முக்காக எழுதப்பட்டு, அவர்கள் அனுமதிக்காததால் எதுவரை நெற்றில் வெளிவந்தது. அகதிக்கொடி - சாத்திரி கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் பிரான்சில் இருந்து வந்த விமானம் இறங்கி ஓடு பாதையில் ஓடத் தொடங்கியிருந்தது ………………..மற்றைய பயணிகள் கவனத்தை இவர்கள் மீது திருப்பி விடாதபடி கடைசி வரிசையில் இருத்தப்பட்டிருந்த இருவர்களினதும் கைகளிலும் விலங்கிடப்பட்டு போர்வையால் மறைக்கப்பட்டிருந்தது.பத்து மணி நேரப் பயணம் இருவருமே ஒருவரோடொருவர் எதுவும் கதைக்கவில்லை ரமணனுக்கு அருகில் இருந்தவன் மீது வெறுப்பும் கோபமுமாக வந்தது . தனது திட்டம் தோற்றுப் போக அவனும் ஒரு காரணம் என்று நினைத்தான் . …

    • 21 replies
    • 4.9k views
  16. அன்ரனிப்பிள்ளை மாஸ்டர் வீடுதான் எங்கள் வீட்டுக்கு அயலில் இருந்த, வீடுக்கு முன்னால சின்ன ஒரு வேளாங்கன்னி மாத சுருவம் சுவரில வைச்சு, அதுக்கு செவ்வாக்கிழமை மெழுகுதிரி கொளுத்தி, " சர்வேசுவர மாதவே,கன்னி மரியாயே, பாவிகளான எங்கள்......" எண்டு மாஸ்டரின் ஒரே மகன் ஜேசுதாசனும், ஒரே மகள் மேரியும் செபம் சொல்ல , மாஸ்டரின் மனைவி ஜோசப்பின் அக்கா அந்த செப முடிவில் " கர்த்தரின் கிருபை மாம்சத்தின் ஜீவனை ,,,, " எண்டு பைபிளின் வாசகம் வாசிக்க, எங்கள் "குளத்தடிக் குழப்படி குருப் " நண்பர்கள், அதை விடுப்புப் பார்க்கவும், கொஞ்சம் எக்ஸ்ட்ராவா மேரியை மெழுகுதிரி வெளிச்சத்தில் சாட்டோட சாட்டா கிட்டத்தில விபரமாகக் கவனிக்கவும் வாய்ப்புக் கிடைத்த ஒரே ஒரு வேதக்கார வீடு. இன…

  17. Started by கிருபன்,

    வாசனை - சிவப்பிரசாத் வாசனை * 1 ஆழ்ந்த உறக்கத்திலிருந்த வாசுவுக்கு யாரோ தன் மேல் படுத்திருந்ததுபோல் பாரம் அழுத்தியது. மல்லாந்து படுத்திருந்தவன் புரண்டு படுக்க முற்பட்டான். அவனால் திரும்பக்கூட முடியவில்லை. மலைப்பாம்புபோல் ஏதோ ஒன்று அவனைச் சுற்றியிருந்தது. வாய்விட்டுக் கத்தலாம் எனப் பார்த்தால், அவன் உதட்டை யாரோ கவ்விக்கொண்டிருந்ததாகத் தோன்றியது. பதட்டத்தோடு மேல்மூச்சு வாங்கினான். அவன் நாசி ஏதோ வாசனையை உணர்ந்தது. அது அவன் அதுவரை முகர்ந்திராத ஒன்று. ஆற்றிலும் குளத்திலும் வளரும் பெயர் தெரியாத ஏதோ செடியின் இலைகளிலிருந்து வரும் வாசனையைப் போல் இருந்தது. அந்தப் பச்சை இலையின் வாசம் வாசுவுக்குக் காமத்தைத் தூண்டியது. அந்தச் சுகந்தத்தை உணர்ந்த தருணத்தில் தன்னுடலின் ரோமங்கள் சிலி…

  18. மத்தியபிரதேசத்தில் பீல் (Bheel) எனும் பழங்குடியினர் உண்டு. அவர்களை ஆய்வு செய்ய சென்ற பேராசிரியர் பகவான் தாஸ் படேல், பீல் பழங்குடியினரிடம் ஒருவகை மகாபாரதம் இருப்பதைக் கண்டார். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் திரவுபதியின் கதை மிக வித்தியாசமானது என்பதுடன் பழங்குடி மரபுகளையும் உள்ளடக்கியது. பீல் மகாபாரதம் (Bheel Mahabharat) எனும் பெயரில் சாகித்ய அகாடமி நூலாக இது வெளிவந்தாலும் இதன் பெயர் பாரத் என்பதாகும். பீல் மொழியில் இதன் பொருள் யுத்தம் என்பதாகும். இதில் திரவுபதி பொன்னிற முடியை உடையவளாகச் சித்திரிக்கப்படுகிறாள். அஸ்தினாபுரத்தில் அவள் உறங்குகையில் அவள் தோழியர் அவள் தலையைச் சீவுகின்றனர். அப்போது ஒரு பொன்னிற முடி பறந்து சென்று காற்றில் அடித்துச் செல்லப்பட்டு, பாதாள உலகம் செல்க…

  19. பிரபு (எ) பிரபாகரன்! Wednesday, 17 September 2014 10:52 தொண்ணூறாம் ஆண்டு புரட்டாதி மாதம் பதினைந்தாம் திகதி பிரபாகரன் முதன்முறையாக இறந்து போயிருந்தார். உலகில் மிகச்சிலரைத்தவிர ஏனைய மனிதர்கள் எப்போரும் முதற்தடவையிலேயே இறுதியாகவும் இறந்துபோய்விடுகிறார்கள். பிரபு என அழைக்கப்பட்ட பிரபாகரனும் அப்படித்தான் முதலும் கடைசியுமாக இறந்திருந்தார். செய்தி கேட்டு எல்லோரும் அதிர்ச்சியானார்கள். அப்போது அவருக்கு இருபத்திரண்டு வயதாக இருந்திருக்கலாம். சாகிற வயதா இது என்றெல்லாம் யாரும் பேசிக் கொள்ளவில்லை. எப்போதும் எதுவும் நிகழ்ந்துவிடலாம் என எதிர்பார்க்கப்பட்டதுதான். ஏராளமான மரணச் செய்திகள் தாக்கியவாறிருந்த காலப்பகுதி அது. சின்னட்டித் தாத்தாவைப் பார்க்கும்தெல்லாம் அப்படியே இவருக்கு…

    • 0 replies
    • 1.6k views
  20. கிளி அம்மான் -கோமகன் இன்று எனக்கு விடுமுறை நாள் என்ற பொழுதும் நித்திரை என்வசப்படவில்லை.இன்று கிளி அண்ணையின் நினைவு நாள் என்பதால் அவரின் நினைவுகளே என்மனமெங்கும் நிரம்பியிருந்தன. நான் அதிகாலையிலேயே எழுந்து விட்டிருந்தேன்.என் மனைவி இன்னும் எழுந்திருக்கவில்லை.வேலைக்கு செல்லும் அவளை நான் குழப்ப விரும்பவில்லை.நான் எழும்பியவுடன் முதல் வேலையாக குளித்துவிட்டு ஓர் சாம்பிராணிக்குச்சியை கிளி அண்ணையின் படத்துக்கு முன்னால் கொழுத்தி வைத்து விட்டு அவரின் முகத்தை தொடர்ந்து பார்க்க திராணியற்றவனாக எனக்கான தேநீரைத் தயாரித்துக்கொண்டு பல்கணிக்கு வந்தேன்.பல்கணியின் முன்னே இருந்த மரங்கள் யாவும் பச்சையத்தை தொலைத்து உறைந்து போய் இருந்தன.குளிர் எலும்பை சில்லிட வைத்தது.கீழே தரையில் பனி மூட…

  21. கனடாவுக்கு வந்த புதிதில் எனக்கு ஒரு மருத்துவர் தேவைப்பட்டார். என் பக்கத்து வீட்டுக்காரர் பரிந்துரை செய்ததில் அவரிடம் போயிருந்தேன். குஜராத்திப் பெண்மணி. பெயர் பிந்துரேகா. சிறு வயதிலேயே கனடா வந்து, இங்கேயே படித்து டொக்ரர் பட்டம் பெற்றவர். நான் போனபோது வரவேற்பறையில் 20 பேர் காணப்பட்டார்கள். எனக்கு முன்னர் 1,000 பேர் உட்கார்ந்து பள்ளம் விழுந்திருந்த நாற்காலியில் பாதி புதைந்துபோய் அமர்ந்தேன். நீண்ட கனவுகளைக் காண்பதற்கு மருத்துவரின் அறையைவிட உகந்த இடம் கிடையாது. ‘அடுபாரா முட்டுங்கலிம்’என்று யாரோ கத்தினார்கள். ‘இப்படியும் பெயர் இந்த நாட்டில் வைக்கிறார்களே’என்று நினைத்துச் சிரித்துக்கொண்டு, மறுபடியும் தூங்கப்போனேன். டொக்ரர் எனக்கு முன் நின்றார். வெள்ளை கோட் அணிந்திருந்த உயரமான ப…

  22. நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்! கம்பார்ட்மென்ட் முழுக்க நிலக்கடலைத் தொலி கிடக்கும். கூடவே, பனங்கிழங்குப் பீலியும் தும்புகளும். இதுவே பண்டிகைகளைப் பொருத்து கரும்புச் சக்கைகள், சம்பா அவல் சிதறல் எனக் கிடக்கலாம். டி.டி.ஆர்., வள்ளென்றுதான் விழுவார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. நாகர்கோவிலிலோ வள்ளியூரிலோ ஏறின அண்ணாச்சி ‘கண்டக்டர் தம்பி... திர்னெலி எப்பொ வரும்’ எனக் கடுப்பைக் கிளப்பியிருப்பார். சீட்டு நம்பர், பெர்த் நம்பர் என இரண்டு எண்கள் எல்லா ரயிகளிலும் இருக்கும். இரண்டில் ஏதாவது ஒன்று பொருந்தினால் போதும் என்பது பயணிப்பவர்களின் பொது அபிப்பிராயம். இதுதான் என் பெர்த் என வாதிடும் எவரும் வென்ற தில்லை. ‘‘ரெண்டு நம்பர் போட்டு வெச்சவன்ட போயிக் கேளுலெ... எங்கிட்ட ஏன் எழவு எடு…

  23. மாயக்கிளிகள் ஜீ. முருகன் தனது இனத்துடன் வனங்களில் திரிந்து கொண்டிருந்தவளிடம் பிரேமைகொண்டு பட்டமகிஷியாக்கிக் கொண்டான் அரசன். மலைநாட்டுக்காரி ராணியாகி விட்டாள். அவள் இங்கே வரும்போது சீதனமாகப் பாடல்களைக் கொண்டு வந்திருந்தாள்; ஏராளமான பாடல்கள். அவள் பாடத்தொடங்கிய கணத்திலேயே நறுமணம் கமழ்ந்தது. துரிதமாக வளர்ந்து பூத்தன செடிகளெல்லாம். அவள் வருகைக்குப் பின்னர் அந்தப்புரத்திற்கு விதவிதமான பறவைகள் வரத்துவங்கின. புதுப்புது வண்ணங்களில் பட்டாம்பூச்சிகள் காணக்கிடைத்தன. வேட்டைக்குப் போனவன் இப்படி மணக் கோலத்துடன் திரும்பி வருவானென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சூன்யக்காரி என்று குமைந்தார் கிழட்டு மந்திரி. ஒரு மலைநாட்டுக்காரி கீர்த்திமிக்க இந்நாட்டின் மகாராணியாவதை அவருட…

  24. சாப்ட்வேர் சீதை வா.மு.கோமு திரைப்படங்களில் நாம் பார்த்து ஏக்கப்பெருமூச்சு விடுவதற்கு தகுந்தாற்போல புதுமணத் தம்பதிகள் நிஜவாழ்வில் நடந்து கொள்வதில்லை தான். குளித்து முடித்து, புது டிசைனில் சேலை அணிந்து, ஈரம்காயாத தலைமுடிக்கு துண்டு கட்டி கையில் காபி டம்ளரோடு வரும் நாயகி படுக்கையில் குப்புற விழுந்து தூங்கிக் கொண்டிருக்கும் கணவனைப் பார்த்தும் நம்மைப் பார்த்தும் புன்னகை சிந்துவாள். காபி டம்ளரை பத்திரமாய் டேபிள் மீது வைத்துவிட்டு குளிக்க அனுப்ப கணவனை முதுகில் தட்டி, ‘எழுந்திருங்க கதிர், இன்னும் என்ன தூக்கம்?’ என்பாள். நாயகியின் குரல் கேட்டதும் பொய்யாய் தூங்கிக் கொண்டிருந்த கதிர் படுக்கையில் உருண்டு திரும்பி நாயகியை பாய்ந்து பிடித்து தன்னோடு இழுத்து கட்டிக் கொள்வான்.…

  25. படம்: கே.ஜீவன் சின்னப்பா சின்ன வயது நாட்களில் என்னால் தவிர்க்க முடியாத ஒரு பெயர் மருதண்ணா. அன்றைய நாட்களில் சுவாமிமலையில், இருள் கவியும் வேளைகளில், பலப்பல… புதுப்புது உலகங்களை சிருஷ்டித்தவர் அவர். பின்னாளில் எனக்கு விஷயம் தெரிந்த காலந்தொட்டு எவ்வளவோ புரியாத விஷயங்களை நான் ஓடியோடித் தேடித்தேடிப் படித்தும் பார்த்தும் கற்றுணர்ந்தும் கண்டறிந்தும் இருக்கிறேன். ஆனால், என் வாழ்க்கையில் இன்னமும் விடை தெரியாத - இன்னமும் மர்மம் விளங்காத விஷயங்களில் ஒன்று மருதண்ணா சொன்ன 'முறை தெரியாத கதை'. ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தானாம். அந்த ராஜாவுக்கு ஒரு இளவரசன் இருந்தானாம். ஒரு நாள் ராஜாவும் இளவரசனும் குதிரை மேலே ஏறிக் காட்டுக்குப் போனார்களாம். ஓர் இடத்தில் குதிரைகளுக்கு முன்பு இரு காலடித் தட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.