கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
புத்தகம் ………………….. உங்கட மகனை நான் அனுப்புகிறேன். அவற்ர புத்தகத்தையும், 50000 ரூபா காசை அட்வான்சாகவும் தாங்கோ. ஓம் தம்பி சொன்ன மாதிரி செய்யிறன். எம்மவரின் புலம்பெயர்வு காலத்தில் சாதாரணமாகப் பேசப்பட்ட வசனங்களில் ஒன்று. ஏஜென்ஸிமாருக்கும் எமக்குமான உரையாடல்களில் இச் சொற்கள் சர்வசாதாரணமாகவே வரும் அது என்ன புத்தகம். பாடப்புத்தகம், பாஸ்போட் ( கடவுச் சீட்டு -Passport ), மோட்டார் வாகனப் பதிவுப் புத்தகம். ஆகியவை எம்மால் புத்தகமென கூறப்படும் புத்தகங்களாகும். எம்மவருக்கும் புத்தகம் எனப்படும் பாஸ்போட்டுக்கும் இரத்தமும் சதையுமான உறவு ஒன்று உள்ளது. பலாலி விமான நிலையம் ஊடாக நாம் வெகு சுதந்திரமாக இந்தியாவுக்குப் போய் வந்த ஒரு காலம் இருந்தது. 1974 ஆம் ஆண்டு எனது…
-
- 3 replies
- 1.5k views
-
-
நீ எங்கிருந்து வருகிறாய்?' வ.ந.கிரிதரன் - புகலிட அனுபவ சிறுகதை கி.பி.1964ஆம் ஆண்டு தை மாதம் 14ந்திகதி, தமிழ் மக்களின் முக்கிய திருநாளான தைப்பொங்கள் திருநாளன்று, அவன் இந்து சமுத்திரத்தின் முத்து , சொர்க்கம் என்றெல்லாம் வர்ணிக்கப்படுகின்ற, ஒரு காலத்தில் போர்த்துகேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர்களின் காலனியாக விளங்கிய, 'சிலோன் (Ceylon) என்றழைக்கப்பட்ட, தீவான இன்று ஸ்ரீலங்கா என்றழைக்கப்படுகின்ற இலங்கைத் தீவில் அவதரித்தான். அவன் அவதரித்தபொழுது அவனுக்கொன்றும் இவ்விதம் அவனது வாழ்க்கை பூமிப்பந்தின் பல்வேறு திக்குகளிலும் அலைக்கழியுமென்று தெரிந்திருக்கும் வாய்ப்பு இருந்ததில்லை. ஆனால் தீவின் தொடர்ச்சியான அரசியல் நிலைகள் அவனைப் புலம்பெயர வைத்து விட்டன. இன்று அவன் வட…
-
- 3 replies
- 1.5k views
-
-
அட நம்ம குருவியார் கவிதையில் தான் கொடி கட்டி பறக்கிறார் என்டால் கதையுமா............... ம்.ம். பாராட்டுக்;ள் குருவிகள் வேண்டுகோளிற்கிணங்க கருத்தை பிரித்து புதியபிரிவில் போடப்பட்டுள்ளது - யாழினி
-
- 2 replies
- 1.5k views
-
-
(1) குப்பியைக் கடித்துவிடக் கூடாது என முன்னரே திட்டமிட்டிருந்தார்களோ என்னவோ சாகீரின் கையிரண்டையும் பின் முதுகில் சேர்த்து அழுத்திப் பிடித்துக் கொண்டார்கள். சாகீர் தலையை உயர்த்த முடியாதபடி இன்னொரு கை தரையோடு தலையை இறுக்கி வைத்திருந்தது. சர்வ நிச்சயமாய் தன்னைக் குறிவைத்துக் கொத்தியிருக்கிறார்கள் என்பது அவனுக்கு விளங்கியது. ´´செத்து விட வேண்டும்´´. இடுப்பிலிருக்கும் குப்பியை எப்படிக் கடிப்பது ? வீடு கொடுத்தவர்களின் கதி என்னாயிற்றோ தெரியவில்லை. அவர்களையும் அள்ளியிருப்பார்கள். என்னைப் போலவே கைகளைப் பின்னால் முறித்து தலையைத் தேய்த்து… ´´எங்கு பிசகியதெனத் தெரியவில்லை. ஆனால் பெரும் பிசகல். குலேந்தியும் அருளும் என்னவானார்களோ? அருள் இடத்தைவிட்டு அகன்றிருப்பான் என்றே தோ…
-
- 5 replies
- 1.5k views
-
-
சாகீரை நித்திரையில் வைத்து அமத்திய போதே முதற்காரியமாக அவனது கையிரண்டையும் பின் முதுகில் சேர்த்து அழுத்திப் பிடித்துக் கொண்டார்கள். சாகீர் தலையை உயர்த்த முடியாதபடி இன்னொரு கை தரையோடு தலையை இறுக்கி வைத்திருந்தது. இடுப்பில் கட்டப்பட்டிருந்த சயனைட் குப்பியை எப்படிக் கடிப்பதென்று தெரியவில்லை.எப்படியாவது செத்து விட வேண்டும். எங்கு பிசகியதெனத் தெரியவில்லை.… ஆனால் பெரும் பிசகல். குலேந்தியும் அருளும் என்னவானார்களோ தெரியவில்லை. அருள் அகன்றிருப்பான். அவன் சுழியன்! கடைசியாய் ரத்மலானையில் வாகனத்துக்குள் சக்கை அடைந்துகொண்டிருந்த போது அவன் அருகில் நின்றிருந்தான். “வாகனத்தின்ரை செஸி நம்பரை இடிச்சு அழிக்க வேணும். அலவாங்கொண்டு கிடைச்சால் நல்லது” அவன் அலவாங்கு அல்லது கோடாலியொன்றைத் தேட…
-
- 8 replies
- 1.5k views
-
-
இடமும் வலமும் ஆர். அபிலாஷ் கிருஷ்ணன் தூங்கிக் கொண்டிருக்க அர்ஜுனன் வருகிறான். ஏற்கனவே அங்கே துரியோதனன் கிருஷ்ணனின் தலைமாட்டில் இருந்து தூங்கி விழுந்து கொண்டிருக்கிறான். அர்ஜுனன் செருமுகிறான். துரியோதனன் அதிர்ந்து விழிக்கிறான். அர்ஜுனனை அடையாளம் கண்டதும் அவன் மீண்டும் அசட்டையாய் கண்ணை மூடிக் கொண்டு தலையை முன்னும் பின்னுமாய் அசைத்து தூக்கத்தை தொடர்கிறான். அர்ஜுனன் சுற்றுமுற்றும் பார்க்கிறான். அங்கே கிருஷ்ணன் தூங்கும் கட்டிலைத் தவிர வேறு அறைகலன்களே இல்லை. கிருஷ்ணனின் கால்மாட்டில் மட்டுமே உட்கார்வதற்கு இடம் உள்ளது. அர்ஜுனன் தன் உடலை ஒடுக்கி ஓரமாய் ஒண்டிக் கொள்கிறான். அர்ஜுனனின் இருப்பு துரியோதனனை தூங்க விடாமல் பண்ணுகிறது. அவன் பாதி கண்ணை திறந்து பார்க்…
-
- 1 reply
- 1.5k views
-
-
காட்டில் ஒரு மான் அம்பை அந்த இரவுகளை மறப்பது கடினம். கதை கேட்ட இரவுகள். தங்கம் அத்தைதான் கதை சொல்வாள். காக்கா-நரி, முயல் ஆமை கதைகள் இல்லை. அவளே இட்டுக் கட்டியவை. கவிதைத்துண்டுகள் போல சில. முடிவில்லா பாட்டுக்கள் போல சில. ஆரம்பம், நடு, முடிவு என்றில்லாமல் பலவாறு விரியும் கதைகள். சில சமயம், இரவுகளில் பல தோற்றங்களை மனதில் உண்டாக்கி விடுவாள். அசுரர்கள், கடவுளர்கள் கூட அவள் கதைகளில் மாறி விடுவார்கள். மந்தரையைப்பற்றி உருக்கமாக சொல்வாள். சூர்ப்பனகை, தாடகை எல்லோரும் அரக்கிகளாக இல்லாமல் உணர்ச்சிகளும், உத்வேகங்களும் கொண்டவர்களாக உருமாறுவார்கள். காப்பியங்களின் பக்கங்களில் ஒட்டிக்கொண்டவர்களை வெளியே கொண்டுவருவாள். சிறகொடிந்த பறவைகளை வருடும் இதத்தோடு அவர்களை வர…
-
- 1 reply
- 1.5k views
-
-
அவனுக்குக் குழப்பமா இருந்தது, ஒருவகை பயம் கலந்த ,எண்ணங்கள் மாறி மாறி வந்தன.கிராமத்தின் புதிய சூழல், முதல் முதலாக தனியாக ஒரு வீட்டுக்குள், எவரது கண்காணிக்கும் பார்வைகள் அற்ற நிலையில்.அவனுக்கு, எழும் உணர்வுகளை அதன் சூழலை அலசுவது அதன் பின்னரே நிதானமாக செயற்படுவது என வயசுக்கு மீறிய சிந்தனைகள் அந்த விடலைப் பருவத்திலும்.விடலைப் பருவத்திற்கே உரிய உணர்வுகள் எழுந்த போதெல்லாம் அதே அலசல் அதே நிதானம்.ஆனால் இப்போ அந்த நிதானத்தை ,இவள் விழுங்கி விடுவாளோ என்று மனசு படபடத்தது. அவள் பக்கத்து வளவுக்குள் இருந்து பனை ஓலையினால் வேயப்பட்ட கதியால் வேலிக்குள்ளால் மறைந்திருந்து இவன் என்ன செய்கிறான் என்று நோட்டம் விடுவது.ஒவ்வோரு நாள் காலையிலும் இவன் பக்கத்து வீட்டு அண்ணையிடம் இருந்து அன்றைய ப…
-
- 1 reply
- 1.5k views
-
-
நிரா எனும் நிரஞ்சலா அழுது வீங்கிய கண்களுடன். காணப் பட்டாள் . என்னம்மா நடந்தது என்று மாமியார் வினவ விம்மலும் விக்க்லுகுமிடையில் இதோ சொல்கிறாள் கேளுங்கள். கவலையிலாமல் துள்ளி திரிந்த பள்ளிப்பருவம் ,நிராவையும் சுகந்தனையும் காதலர்கள் ஆக்கியது . இளமை வேகம் , பயமறியாத பருவம். ஒருநாள் நிரா வீட்டை விட்டு சுகந்தனை நம்பி வந்து விடாள். அப்போது சுகந்தன் உயர்கல்வி வகுப்பு படித்து கொண்டிருந்தான் . பகுதி நேரமாக் ஒரு கடைத்தொகுதியில் சிறு வேலையும் செய்து கொண்டு இருந்தான்.அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நண்பர்களின் உதவியுடன் பத்தொன்பது வயது நிராவும், இருபத்தியொரு வயது சுகந்தனும் பதிவு திருமணம் செய்து கனடா நாடில் ஒரு சிறு நிலக் கீழ் குடியிருப்பில் வாழ்க்கையை தொடங்கினர். சுகந்தன் …
-
- 11 replies
- 1.5k views
-
-
நேரம் கிடைக்கும் போது படியுங்கள். தீபாவளி சிறப்புச் சிறுகதைதான். ராணியில் வந்தது. (பெண் குழந்தைகள் தினத்திற்கும் பொருத்தமாக இருக்கக் கூடும்) வந்தாள் மகாலக்ஷ்மி “மகாலஷ்மி இல்லாமல் தீபாவளியா? கூடவே கூடாது” அம்மா திட்டவட்டமாகச் சொல்லி விட்டாள். மகாலஷ்மி என்று அம்மா குறிப்பிட்டது பத்மா அண்ணியை. பெரிய அண்ணன் ஹரியின் மனைவி. அம்மா அப்படிச் சொன்னதும் அண்ணாவின் முகத்தில் ஏமாற்றம். தன் நான்கு வயது பெண் குழந்தைக்கு ஆசை ஆசையாய் புது கவுனும், விளையாட்டு பொருட்களும், வாண வேடிக்கைகளும் வாங்கி வந்திருந்தான். எல்லோரும் சேர்ந்து கொண்டாடினால்தான் அது பண்டிகை. குழந்தைக்கும் முழு சந்தோஷமும் கிடைக்கும். அனால் அம்மா சொன்னால் சொன்னதுதான். அவள் பேச்சை மீறி யாரும் பண்டிகை கொண்டாட மாட்டார…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி ராஜப்பா திடீரென எழுந்து உட்கார்ந்தான். அவன் உடம்பு வியர்வையினால் நனைந்திருந்தது. பக்கத்தில் இருந்த பழுப்பேறிய சாயத் துண்டினால் முதுகைத் துடைத்துக்கொண்டான். என்ன விசித்திரமான சொப்பனம். ’வனாந்திரமான இடம். பாம்புப் புற்று போல் ஓங்கி வளர்ந்திருந்த மண்மேடிட்ட பெரிய குகைகள். அவன் தனியாக அந்தப் பிரதேசத்தின் வழியாகப் போய்க் கொண்டிருக்கிறான். அங்கு நிலவிய நிசப்தம் ஒரு பாரமாகச் சூழ்ந்து அவன் நெஞ்சை அழுத்தியது. குகைகளிலிருந்து பாம்புகள் புறப்பட்டுத் தன்னைத் தாக்க வருமோ என்ற பயம் அவனை வேகமாக நடக்கத் தூண்டியது. குகைகளில் பாம்பு இல்லை. திடீரென்று அவற்றிலிருந்து கூட்டம் கூட்டமாக ஜனங்கள் வெளியே வந்தார்கள். அனைவரும் முடவ…
-
- 1 reply
- 1.5k views
-
-
அது நான்தான் இரவு ஒன்பது மணியாகிவிட்டது. ரொறொன்ரோ சூரியனின் சாய்ந்த கிரணங்கள் அவன் கண்களைக் கூசவைத்தன. நெடுஞ்சாலையில் காரை வேகமாக விமான நிலையத்தை நோக்கி ஓட்டினான் வசந்தகுமாரன். அவனுடைய புது மனைவி தன்னந்தனியாகக் கொழும்பிலிருந்து வருகிறாள். அவள் வரும்போது அவன் அங்கே நிற்க வேண்டும். 13 மாதத்திற்குப் பிறகு மனைவியைப் பார்க்கப்போகிறோம் என்று நினைத்தபோது மனது குறுகுறுவென்று ஓடியது. காரை மூன்றாவது தளத்தில் நிறுத்திவிட்டுத் தரிப்புச் சீட்டில் காரை நிறுத்திய இடத்தைக் குறித்து வைத்துக்கொண்டான். புது மனைவியுடன் திரும்பும்போது காரைக் கண்டுபிடிக்க அலையக் கூடாது. வருகைக்கூடத்தில் நிறைய ஆட்கள் சேர்ந்துவிட்டார்கள். அவனுக்குப் பக்கத்தில் ஒருவர் உரத்துப் பேசிக் கொண்டிருந்தார். அவ…
-
- 2 replies
- 1.5k views
-
-
சொக்கப்பானை - கோமகன் காலம் 1987. எமது தாயகத்து காற்று வெளியிலும் , வயல் வரப்புகளிலும், வீதிகளிலும், ஒழுங்கைகளிலும் எமது சனங்களின் கதறலின் கண்ணீரை துடைத்து சமாதானம் பேசுகின்றேன் என்று வந்த சமாதானப்புறாக்கள் தங்கள் முகங்களை மாற்றி ஆயுததாரிகளான ஓர் இரவின் இருட்டும் காலம் பிந்திய கார்த்திகை மாதத்து பனிப்புகாரும் அந்த ஊரில் மண்டியிருக்க. அவைகளை விரட்டும் பணியை கதிரவன் எடுத்துக்கொண்டிருந்தான். அது அவ்வளவு சுலபமாக அவனுக்கு இருக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவனது கையே ஓங்கியிருந்தது. படுதோல்வியை தழுவிய இருட்டும்மண்டியிருந்த பனிப்புகாரும் மெதுமெதுவாக அவனிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டிருந்தன. ராமசாமிக்குருக்களின் வீட்டு மா மரத்தில் குடியிருந்த பக்கத்து வீட்டு சேவல் ஒன்று தனது முதல…
-
- 1 reply
- 1.5k views
-
-
http://www.viduthalaipulikal.com/file/docs...6/09/132-08.pdf
-
- 3 replies
- 1.5k views
-
-
காலை வேளை 5 மணியாகி இருந்தது . தூரத்தே சேவல் ஒன்று காலை விடிவதற்குக் கட்டியங் கூறியது .இருட்டுக்கும் பகலுக்கும் நடந்த போரில் இருட்டு தோல்வியைத் தழுவிக் கொண்டிருந்தது . எனக்குப் பக்கத்தில் படுத்திருந்த றொனியன் காலை நக்கி அதன் சந்தோசத்தைக் காட்டியது . இன்னும் கடைசி மகள் எழுந்திருக்கவில்லை . நான் மெதுவாக எழும்பி உடம்பை சிவருக்கு முட்டுக்குடுத்துக் கொண்டு இருந்தேன் . இடுப்பில் கட்டி இருந்த மூத்திரப்பை முட்டியிருந்தது . எனக்கு வாய் நமநமத்தது . பக்கத்தில் இருந்த வெத்திலையையையும் , பொயிலையையும் பாக்கையும் , கலந்து வாய்க்குள் வைத்துக்கொண்டேன் .என் மனமோ காலம் என்னும் சக்கரத்தை திருப்ப முயன்று வெற்றியுங் கொண்டது .எனது அப்பா மலாயாவில் வேலை செய்து கொண்டிருந்தபோது நான் பிறந்தேன் . எனக…
-
- 12 replies
- 1.5k views
-
-
ஒரு நிமிடக் கதை: படிப்பு வழக்கம் போல் அந்த இட்லி கடையில் நல்ல கூட்டம். காரணம், ருசி, சுகாதாரம் மட்டுமல்ல.. அங்கு வேலை செய்யும் அந்த இளவயசுப் பையனும்தான். கில்லி மாதிரி சுழன்று, சாப்பிட வருபவர்களையும், பார்சல் வாங்கிப் போகிறவர்களை யும், மின்னல் வேகத்தில் கவனித்து இன்முகத்துடன் அனுப்பி வைப்பான். இட்லி வாங்க வந்த பெரியவர் ஒருவர், பையனைப் பற்றி கடை முதலாளியிடம் விசாரிக்கத் தொடங்கினார். “என்ன சம்பளம் குடுப்பீங்க.. இந்த பையனுக்கு..?” “எனக்கு கிடைக்கிற சொற்ப லாபத்துல என்னத்த குடுத்துடப் போறேன். சாயந்திரம் 7 மணியிலிருந்து 10 மணி வரை வேலை. போகும் போது இங்கேயே சாப்பிடச் சொல்லிட்டு,கையில் 5…
-
- 1 reply
- 1.5k views
-
-
ஆத்மராகம் - சிறுகதை சுபஸ்ரீ முரளிதரன், ஓவியம் : ஸ்யாம் மஹா அக்காவை நான் அங்கு பார்ப்பேன் என்று எதிர்பார்க்கவேயில்லை. முதலில் அது அவள்தான் என்றே தெரியவில்லை என்றாலும், அவள் உதடும் என் உள்ளுணர்வும் அவளைப் பற்றிய விவரங்களைத் தேடத் தூண்டின. கிடைத்த விவரங்கள், எனக்குள் அதிர்ச்சியையும் மனபாரத்தையும் ஏற்றின. அங்கிருந்த செவிலியிடம், ``இவங்களை யாரு, எப்போ இங்கே சேர்த்துவிட்டாங்க?’’ என்றேன். ``ஒரு வாரம் ஆச்சும்மா. ஒரு பொண்ணு கூட்டிவந்துச்சு. இப்போ வேலைக்குப் போயிருக்கு’’ என்றாள். ``வேலைக்கா?’’ என்றேன். ``ஆமாம்மா. எங்கேயோ திருச்சி பக்கமாம். இந்த அம்மாவோட மகதான் கூட்டிட்டுவந்துச்சு. நம்ம சென்டரைப் பற்றி…
-
- 0 replies
- 1.5k views
-
-
பாக்கி ‘‘என்னங்க, ஏதோ அன்பா எங்க அம்மாவை அழைச்சுட்டு வந்திருப்பீங்கனு நினைச்சேன். ‘வரதட்சணையா தர வேண்டிய பாக்கிப் பணத்தை எடுத்து வையுங்க... இல்லாட்டி எங்க வீட்ல வந்து வேலைக்காரியா இருந்து அதைக் கழிச்சுடுங்க’னு சொல்லிக் கூட்டிட்டு வந்தீங்களாமே..? எங்க அம்மாவை வேலைக்காரியா நினைக்கிற உங்களுக்கு நான் எப்படி பொண்டாட்டியா இருக்க முடியும்? இனி எனக்கும் இந்த வீட்ல வேலை இல்லை. நாங்க ரெண்டு பேருமே கிளம்புறோம்!’’ - கணவன் சித்தேஷிடம் பத்மா எகிறிக் குதித்தாள்.அவளைத் தனியே அறைக்குள் அழைத்துப் போய்ப் பேசினான் சித்தேஷ். ‘‘நமக்கு கல்யாணமாகி ரெண்டு வருஷத்துக்கு மேல ஆகிடுச்சு. வரதட்சணை பாக்கியிருக்குறதால இந்த வீட்டுப் பக்கமே வராம இருக்காங்க உ…
-
- 7 replies
- 1.5k views
-
-
பிரபஞ்ச நூல் - ஷோபாசக்தி இந்தக் கதையைத் தனது இரகசியக் குரலைக் கலையவிடாது, தகரத்தில் மெல்லிய ஆணி முனையால் கிறுக்குவது போன்ற கூசிய தொனியில் ஏற்ற இறக்கங்களின்றி சித்திரைலிங்கம் என்முன்னே சொல்லத் தொடங்கினான். நடுநடுவே கதையை நிறுத்தி அதே இரகசியக் குரலில் என்னிடம் சந்தேகங்களும் கேட்டான். நான் 2012-ல் சித்திரைலிங்கத்தை சென்னை புத்தகச் சந்தையில் கடைசியாகப் பார்த்தது. மனைவி பிள்ளைகளுடன் ‘க்ரியா புத்தகக் கடை’க்குள் நின்றுகொண்டிருந்தான். கையில் ‘கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’ வைத்திருந்தான். என்னைக் கண்டதும் முதல் வார்த்தையாக “மச்சான் நீ இந்த அகராதியில் ஏதோ பிழை இருக்கிறது என்று எழுதியிருந்தாய். அதுதான் வாங்கிச் சரி பார்க்கப் போகிறேன்” என்றான். அன்றிரவே அவுஸ்ரேலியா திரும…
-
- 0 replies
- 1.5k views
-
-
செக்கு மாடு (குறுநாவல் ) பற்றிய குறிப்புகள் வ.ஐ.ச.ஜெயபாலன் செக்குமாடு குறுநாவல் ஒஸ்லோ பல்கலைக் களகத்தில் மானிட இயலில் கலாநிதிப் பட்ட (Phd) ஆய்வுகள் மேற்கொண்டிருந்தபோது கலாநிதி ஒய்விண்ட் புக்ளரூட்டால் எனது வாய்மொழி ஆங்கிலம் பெயர்பின்மூலம் நோர்வீஜிய மொழியில் மொழி பெயர்க்கப் பட்டது. அது அவரது (Life on the Outside - Oivid Fuglerud) ஆய்வில் விரிவாகப் பயன்படுத்தப் பட்டது. கனடாவைச் சேர்ந்த மானிடவியலாளரான தோழி றொபின் ஓக்லே என் வாய்மொழி ஆங்கில மொழிபெயர்ப்பினூடாக செக்குமாட்டை மொழியாக்கம் செய்தார்.(Beast of Burden (Chekku Madu): The Power of the Wandering Poet Among the Sri Lankan Tamil Diaspora Authors: R. Oakley; V. I. S. Jayapalan ) அவரது மொழியாக்கம் ஆங்கில உளவியல் சஞ்ச…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஆண்களைப் பார்த்தால் நம்ப மாட்டாள் போன ஆகஸ்ட்டில் அம்மா இறந்து விட்டாள். திடுமென்று இறந்துவிட்டாள். இப்போது அம்மா இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். அம்மா கண்டிப்பானவள். அவள் பார்வையே ஒரு தினுசாக இருக்கும். எதாவது சொல்லிக்கொண்டே இருப்பாள். டிரஸ் சரியாகப் போட்டுக் கொள்ளவில்லை என்றால் திட்டுவாள். "ஏன் எல்லாம் தெரியும்படி டிரஸ் செய்துக்கிறே?'' என்பாள். நான் வயதுக்கு வருவதற்கு முன்னாலேயிருந்து அம்மாவின் நச்சரிப்பு தொடர்ந்துகொண்டே இருக்கும். இப்போது எனக்குக் கல்யாணம் ஆகி என் பெண் பத்மஜா பெரியவளாகப் போகிறாள். எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கிறாள். …
-
- 0 replies
- 1.5k views
-
-
அழிந்துவரும் வரும் கலைகளில் ஒன்றான புலிக்கூத்து நேற்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு - வந்தாறுமூலை கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றது. இந்நிகழ்வு கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சி.ஜெயசங்கரின் வழிகாட்டலின் கீழ் நுண்கலைத்துறை இறுதி வருட மாணவியான ந.துஷ்யந்தியின் இறுதி வருட ஆய்வின் ஒரு பகுதியாக நடைபெற்றது. இவ்வாற்றுகை நிகழ்வில் ஆற்றுகையாளர்களாக நுண்கலைத்துறை மாணவர்களும் விரிவுரையாளர்களுமே கலந்து கொண்டனர். இவர்கள் புலிகூத்தின் மரபுவழி அண்ணாவியார்களினதும், புலிக்கூத்துக் கலைஞர்களினதும் பயிற்றுவிப்பின் கீழ் முறைப்படி பயின்றே இந்த ஆற்றுகையை நிகழ்த்தினர். வந்தாறுமூலை - பலாச்சோலை, சித்தாண்டி, வாகரை - அம்மன்தனாவெளி போன்ற கிராமங்களில் ஆடப்பட…
-
- 3 replies
- 1.5k views
-
-
நாலைந்து நாட்களாக மண்டை பிளக்கும் வெயில். மத்தியான வெயிலில் சன சந்தடி குறைந்துவிட்டது. சின்னப் பெடி பெட்டைகளுக்கு மட்டும் வெயில் என்று ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. புதிதாக விழுந்த கமுக மடல் ஒன்று அவர்களிடம் அகப்பட்டுவிட்டது. கமுகம் மடலை இழுத்துக் கொண்டு இரண்டு பொடிசுகள், மடலின் அடிப்பகுதியில் மூன்றுபேர் நெருக்கியடித்துக் கொண்டு இருந்தார்கள். "பீப் பீப்" என்று சத்தமிட்டுக் கொண்டு கற்பனைக் காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.ஒருவன் மட்டும் வேலிக்கரையில் நிழலில் நின்றுகொண்டு பூவரசம் இலையிற் செய்த குழலை ஆனந்தமயமாக ஊதிக்கொண்டிருந்தான். அவன் பாவனைகளும் அங்க சேஷ்டைகளும் முந்தநாள் அம்மன் கோவிற்திருவிழாவில் நாதஸ்வரம் வாசித்த வித்துவானை ஞாபகப்படுத்தியது. திடீரென வாயில் இருந்…
-
- 4 replies
- 1.5k views
-
-
அவனைத் தேடுகிறாள் அவளது குழந்தையின் கனவுகளுக்காக…… பதிவுகள் விசாரணைகள் என்று அவள் ஏறாத படிகளில்லை. இன்று கடைசி முயற்சியாக இதையும் செய்து முடிப்பதென்ற முடிவோடு காத்திருக்கிறாள். அம்மா அப்பா வருவாரோ ? அடிக்கடி நச்சரித்துக் கொண்டிருந்த மகனை….ஓமய்யா பேசாம இருங்கோ என அடக்கினாள். ஒன்றரை வருடங்கள் போய்விட்டது அவன் எங்காவது இருப்பானென்ற நம்பிக்கை வலுத்துக் கொண்டேயிருக்கிறது. அது அவளது முறை. நீதி மன்றத்தில் இருப்பது போலிருந்தது. அவர்கள் முன் சாட்சியம் கொடுத்தவர்களின் துயரங்களால் நிறைந்தது அந்த மண்டபம். உள்ளே சென்று வெளிவருகிற ஒவ்வொருவரும் அழுது சிவந்த கண்களுடனே வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்கள். நிச்சயம் அவனைக் கொண்டு வந…
-
- 5 replies
- 1.5k views
-
-
என்னைக் கவர்ந்த எளுத்தாளர்களில் ந . பிச்சமூர்த்தியும் ஒருவர் . நான் சிறுவயதில் கலைமகளில் அவரின் கதை ஒன்று வாசித்தேன் . பல வருடங்கள் கடந்து மீண்டும் அதே கதையை இணையத்தில் வாசிக்கும் சந்தர்ப்பம் அண்மையில் மீண்டும் எனக்குக் கிடைத்தது . அவரின் இந்தக்கதை 60 களில் வெளிவந்தாலும் , குறிப்பாக எம்மிடையே இப்பொழுது நடக்கின்ற சம்பவங்கழுக்கு ஒரு செய்தியை இந்தக் கதைமூலம் 60 களிலேயே சொல்லியிருப்பது எனக்கு ஆச்சரியத்தையே ஏற்படுத்தியது . உங்களுக்காக இதைப் பகிர்கின்றேன்..................................... ஆதிகாலம் முதற்கொண்டே வங்காள வேங்கைக்கும் மூங்கில் கொத்துக்கும் இணை பிரியாத நட்பு. அப்பொழுது மூங்கில்களுக்குப் பொன்வர்ணம் இல்லை. பச்சையாகவே இருந்தன. புலிக்கு வரிகள் இல்லை. பழம் போன்ற …
-
- 6 replies
- 1.5k views
-