Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. வாடைக்காற்று வாடைக்காற்று நாவல் .pdf வடிவில் கீழ் உள்ள இணைப்பிணை அழுத்தி வாசியுங்கள். (இணைப்பு தரவேற்றம் செய்ய சிறிது நேரம் எடுக்கும்) http://noolaham.net/project/167/16603/16603.pdf நந்திக்கடல் நந்திக்கடல் நாவல் .pdf வடிவில் கீழ் உள்ள இணைப்பிணை அழுத்தி வாசியுங்கள். (இணைப்பு தரவேற்றம் செய்ய சிறிது நேரம் எடுக்கும்) http://noolaham.net/project/172/17152/17152.pdf

    • 2 replies
    • 1.5k views
  2. மழை நின்ற காலத்தில்... குருவாயூர் கோயிலில் லட்டு கிருஷ்ணனின் தரிசனத்துக்காக வரிசையில் காத்து நின்றிருந்தேன். விசேஷ நாள் கிடையாது தான். என்றாலும் கூட்டம் இருந்தது. எதிரே துலாபாரத்தில் ஒரு சிறுமியை உட்கார வைத்து எடைக்கு எடை நேந்திரம் காய்களை காணிக்கைக் கொடை தந்து கொண்டிருந்தார்கள். உள்ளே பூஜை நடந்து கொண்டிருக்க கொஞ்ச நேரமாகக் காத்திருப்பு. யாரோ என் தோளைத் தொட திரும்பினேன். "நிங்ஙள அவிட யாரோ விளிக்குன்னு...'' அந்தப் பெரியவர் கை காட்டின திசையில் நோக்கினேன். எனக்குப் பின் வரிசையில், பத்திருபது பேர் தள்ளிக் கைக்குழந்தையுடன் நின்றிருந்த அந்தப் பெண் உற்…

    • 3 replies
    • 1.5k views
  3. நடுநிசி நட்சத்திரங்கள் - சிறுகதை ஆனந்த் ராகவ், ஓவியங்கள்: அனில் கே.எஸ். மேகங்களின் குறுக்கீடு இல்லா வானத்தில், வைரத் துகள்களாக இறைந்துகிடந்தன நட்சத்திரங்கள். படுத்து உறங்கும் வசதிகொண்ட, சொகுசான அந்தக் குளிர் பேருந்தின் படுக்கையில் இருந்து இயற்கையின் அந்த கேன்வாஸை நகர்ந்துகொண்டே ரசிப்பது... பரவச அனுபவம். மூன்று நாட்கள் வேலைக்குப் பிறகு உடல் சோர்வாக இருந்தாலும், நட்சத்திரச் சிதறல் வானத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டு வரும் ஆர்வத்தில் தூக்கம்கூடப் பிடிக்கவில்லை. கேமராவும் கையுமாக நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சுற்றும் எனக்கு, நட்சத்திரங்கள் மட்டும் இல்லாவிட்டால் பயணங்கள் சலிப்புற்றுவிடும். வனவிலங்குக் காப்பகங்களிலும், அடர்ந்த காடுகளி…

  4. எப்படியும் வாழலாம்! சுஜாதா உங்களுக்கு வயசு எத்தனை?” ”செரியாச் சொல்ல முடியாதுய்யா!” ”உங்க அப்பாஅம்மா?” ”அவங்கதான் இல்லியே… பூட்டாங்களே… இருந்தாங்கன்னா விசாரிச்சு எத்தனை வயசுன்னு சொல்லலாம்.” ”உங்க சொந்த ஊரு?” ”கோலாருக்குப் பக்கத்துல கொடுமூர்னு ஒரு கிராமம்.” ”த…

  5. கப்ரன் வாசு (கண்ணாடி வாசு.ஜடியா வாசு)வல்வெட்டிதுறை 1984 ம் ஆண்டு ஒரு கோடைகாலத்தின் மாலை நேரத்தில் யாழ் அராலி வீதி கல்லுண்டாய் வெளியில் ஒருவர் மட்டுமே அமரகூடிய ஒரு சிறிய விமானம் உள்ளே அதனை இயக்க தயாராய் வாசு அமர்ந்திருக்கிறான். அதனருகே மாவீரர்களான லெப்.கேணல்அப்பையா அண்ணை குட்டிசிறி. கப்ரன் பாரத் மேஜர் சுபாஸ் இவர்களுடன் மேலும் பல போராளிகள் நிற்கிறார்கள். வாசு மற்யை போராளிகளை பார்த்து எல்லாம் சரி எல்லாரும் சேர்ந்து வேகமா தள்ளுங்கோ இந்த முறையாவது பிளேன் பறக்கவேணும் என்று சொல்லவும் எல்லா போராளிகளும் சேர்ந்த்து விமானத்தை தள்ள அது வீதியில் உருள ஆரம்பிக்கவும் வாசு மற்றவர்களிடம் இன்னும் இன்னும் வேகமா என்று கத்தியபடி அந்த விமானம் மேலே கிழம்ப வசதியாய் அதன் இறக்கைகளை …

  6. துணிச்சல் நாங்கள் நான்கு பேர்... மூர்த்தி, வாசு, ராஜேந்திரன் மற்றும் நான். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள். தினம் மாலை கடற்கரையில் சந்திப்போம். மூர்த்தி நான்கு நாட்களாக வரவில்லை. அவருடைய அண்ணன் மகன் மரணத்துக்குப் போயிருந்தவர் இன்றுதான் வந்தார்.‘‘ப்ச்... 35 வயசுதான். எந்த கெட்ட பழக்கமும் இல்லை. உடம்பு சரியில்லைன்னு படுத்ததும் இல்லை. ஆனாலும் திடீர் ஹார்ட் அட்டாக். பாவம், மூணு பொட்டப் புள்ளைங்க, பொண்டாட்டி எல்லாரையும் அம்போனு விட்டுட்டுப் போயிட்டான்!’’ - அவர் சொன்னதும் சாவின் நிதர்சனம் எங்களுக்கும் உறைக்க, நிசப்தம் நிலவியது. நான் மௌனம் கலைத்து, ‘‘ஓகே... என்னுடைய எல்லா கடமைகளும் முடிஞ்சுடுச்சு. நான் ரெடியாயிட்டேன். எ…

  7. அந்த தொடர் மாடிக்கட்டத்தின் நான்காம் மாடியில் அமைந்து இருந்தது அவர்களது குடியிருப்பு. தாய் மாலதி .தந்தை வாகீசன் மகன்கள் சுபன் .சுதாகரன் ஆகிய நால்வரும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். முதலில் நாட்டுப்பிரச்சினை காரணமாக் தந்தை வாகீசன் தான் குடிபெயர்ந்து இருந்தார். மனைவி மாலதி அவனது தூரத்து உறவு தான் . அப்போது சவூதியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான் . திருமணமாகி இரு குழந்தைகள் பிறக்கும் வரை ஒழுங்காக் தான் இருந்தான். ஒரு தடவை விடுப்பில் வந்தவன் நாட்டு பிரச்சினை காரணமாக மீண்டும் போக முடியாது போனது. மதுவகை பாவிக்க் தொடங்கினான். மாலதி இருந்த நகை நட்டு எல்லாம் விற்று சகோதரர்களிடமும் கடன் வாங்கி ஒரு பாடசாலை வாகனம் எடுத்து கொடுத்தாள் பிள்ளைகளை பாடசாலைக்கு ஏற்றி வரும் பண…

    • 10 replies
    • 1.5k views
  8. நாம் வாழ்வும் பண்பாடும் கலாச்சாரம் என எமக்கான தனி அடையாளங்களுடன் வாழ்ந்த இனம் இப்பொழுது பயணிக்கும் பாதை மிக கவலையானது எமக்கான அடையாளங்களை தொலைத்து நாம் என்ன லாபம் அடைய போகிறோம் ஒரு சாதாரண கைபேசியில் தொடங்கி வீட்டு கழிவறைக்கு போடும் செருப்பு வரை என்னுடையது விலை மதிப்பாக இருக்க வேணும் என்பதே எமது எண்ணம் ஆகி இருக்கு கலக்சி போனில் அல்லது ஐபோனில் என்ன இருக்கு அதை பயன் என்ன பாவனை திறன் என்ன என்றுகூட அறியாது நான் மார்க்கான ஒரு போன் வைத்துள்ளேன் என்பதில்தான் என் கௌரவம் அடங்கி இருக்க என போகிறது வாழ்க்கை வருமானத்துக்கு மேலக செலவுகளும் பிழைகளுக்கு நாங்கள் ஊரில பில்கேஸ் என நீட்டி முழங்கி கதைகள் சொல்லி எங்கள சுயங்களை அவர்களுக்கு விளக்காது ஒரு கனவு உலகத்தில் பயணிக்க செய்வதால…

    • 5 replies
    • 1.5k views
  9. ஒரு நிமிடக் கதைகள் வல்லவன் வல்லவன் செ ல் ஒலித்தது. எடுத்துப் பார்த்தான் ஹரி. அவனது மேலதிகாரி. “சார், சொல்லுங்க சார்!” “ஹரி, என்னன்னு தெரியலே, திடீர்னு என் சிஸ்டம் ஹேங் ஆயிருச்சு. என்ன பண்றது?” ‘ஹூம்... இவருக்கெல்லாம் ஒரு கம்ப்யூட்டர்’ என்று மன…

  10. உறுப்பு - அனோஜன் பாலகிருஷ்ணன் ஏதோவொரு வாசம் கமழ்ந்துகொண்டிருந்தது. சன்னலைத் திறந்து வெளியே வேடிக்கை பார்த்தேன். பலாமரத்தில் அணில்கள் குறுக்கும் மறுக்குமாக ஓடிக்கொண்டிருந்தன. சிறிய ஆசுவாசம் பரவியது. அவசர அவசரமாக என் பாடசாலை உடைகளைக் களைந்து, மாற்றுடை மாற்றிவிட்டு சாப்பாடு மேசைப்பக்கம் சென்றேன். ஏற்கெனவே போட்டு மூடிவைத்திருந்த மதியத்து சோறு, கறிகளுடன் ஆறிப்போய் இருந்தது. சுவரிலிருந்த மணிக் கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தேன். இரண்டு நாற்பது. இன்னும் இருபது நிமிடங்கள் இருக்கின்றன வகுப்புத் தொடங்க. பாதிவரை சாப்பிட்டுவிட்டு, கொப்பிகளோடு லுமாலா சைக்கிளில் ஏறி மிதித்தேன். வெயில் முதுகில் ஊடுருவிச் சுட்டது. செம்மண் பாதை வளைந்து நெளிந்து சென்று தார் வீதியில் ஏறியது. இருப…

  11. மற்றுமொரு பழைய கதையைத் தேடிப்பிடிச்சு இணைத்திருக்கிறன் கிட்டத்தட்ட 7- 8 வருடங்களுக்கு முன் எழுதினது. படிச்சுப் பார்த்திட்டு பிடிச்சிருந்தால் சொல்லுங்கோ பிடிக்காட்டிலும் எட்டி உதைச்சுப்போடாதையுங்கோ கிழவன் பாவம் படக்கூடாத இடங்களிலை பட்டு இசகுபிசகாகிவிடும். பக்குவமாச் சொல்லுங்கோ கேட்கிறன். கொம்பியூட்டர் விற்பனைக்கு இது கொஞ்சம் விவகாரமான விசயம்தான் ஆனாலும் நாலு பேருக்கெண்டாலும் சொல்லாட்டில் தலையே வெடிச்சிடும் போலக்கிடக்கு அதுதான் சொல்லவாறன். என்ரை அவகொஞ்ச நாளா ‘இஞ்சாருங்கோ எங்களுக்கு முந்தி வந்ததுகளெல்லாம் சொந்தவீடு, சிட்டிசன்சிப் எண்டு ஒரு பந்தாவோட இருக்குதுகள். முந்தநாள் வந்ததுகள்கூட இன்ரநெற், ஈமெயில் எண்டு பீத்திக்கொண்டு திரியுதுகள். ஒரு சபை சந்திக்குப்ப…

  12. முள்ளில் ஒரு சேலை விமலி! என்ன பிள்ளை நீ செய்யுற வேலை? முதலிலே போய் அவரின்ரை காலிலே விழுந்து கும்பிடு மோனை. அப்பா இல்லாத இடத்திலே ஒரு தகப்பனுக்குத் தகப்பனாக இருந்து உன்னை வளர்த்து இப்படியொரு நல்ல வாழ்க்கையை அமைச்சுத் தந்த மனுசன். ஓடி வந்து என்ரை காலிலே விழுகிறாய்! போ போ பிள்ளை. அம்மா இப்படித்தான் சொல்லுவாள் என்று விமலிக்குத் தெரியும். அப்படியிருந்தும் அம்மாவின் காலிலே தான் முதலில் விழுந்து கும்பிட்டாள். அவர் அவரென்று அம்மா சொல்வது அக்காளின் கணவனை. அவளின் அத்தானை. அத்தான்! அவர் அக்காளுக்கு மட்டும் அத்தானாக நடக்க நினைத்திருந்தால் வாய் குளிரக் கோடி முறை அத்தான் அத்தானென்று விமலி கூப்பிட்டிருப்பாள்.…

  13. “கந்தசாமி சொல்லுரத கேட்கிறது ஹரித? இந்த வீடு ஆர்மிக்கு தான் .. வீடு உண்ட பேர்ல இல்ல” கந்தசாமி தனியனாக ப்ளேன் டீ ஊத்திக்கொண்டிருக்கும்போது தான் செல்வராணியை நினைத்துப்பார்த்தார். இந்த நாச்சார் வீடு அவளின் சீதன உரித்தம் தான். இங்கே தான் 1982 இல் கந்தாசாமிக்கும் செல்வராணிக்கும் கலியாணம் நடந்தது. அப்போது எல்லாம் இரவில் தான் திருமணம்; முடிந்து மாப்பிள்ளை, பொம்பிளை முதலிரவு அறைக்குள் போனபின்பும் வெளியே நாற்சார் திண்ணையில் “தாள்” ஆட்டம் தண்ணியுடன் அனல் பறக்கும். பக்கத்தில் உட்கார்ந்திருந்தால் யாழ்ப்பாணத்து தூஷணங்கள் பற்றி பிஎச்டி செய்ய அமெரிக்கா போகலாம். கந்தசாமிக்கு இன்னமும் ஞாபகம் இருக்கிறது. அன்றைக்கும் அவர் தண்ணியை சாதுவாக போட்டுவிட்டு ஒரு “கை” விளையாடிவிட்டு தான் அறைக்குள…

  14. “என் உயிரிடத்தில் நான் சொல்வேன். மெதுவாக செல்லவும். நான் குடிக்கும் கண்ணாடி டம்ளர் உலரட்டும். நான் என்னவாக இருக்கிறேன் அல்லது யாராக என்பதில் எனக்கு எந்த பங்குமில்லை. ஒரு வாய்ப்பின் பிறப்பு தவிர . இதற்கு எந்த பெயருமில்லை. என் மரணத்தின் பத்து நிமிடங்கள் முன்பாக டாக்டரை அழைக்கிறேன். பத்து நிமிடங்கள் வாழ்வதற்கான வாய்ப்பு போதும்.” மரணப்படுக்கையின் இறுதியில் மேற்கண்ட வரிகள் பாலஸ்தீனின் நூற்றாண்டுகளை கடந்து நிற்கும் கவிஞர் மஹ்மூத் தர்வீஷ் புனைந்து சென்றவை. தன் இறுதி கட்டத்தில் வாசக சமூகத்தின் மீது கவிதை வரிகளோடு செல்லும் வாய்ப்பு சிலருக்கே மட்டுமே கிடைக்கிறது. அது அவனுக்கான வித்தியாச அனுபவம் கூட. படைப்பு மனத்தின் நெருடிய இடைவெளியில் விகசங்களின் வெளிப்பாடாக இவை அமைகி…

  15. பிராங்பேர்ட் விமானநிலையம். விமானங்களின் போக்குவரத்து விபரங்களை விளம்பும் அறிவிப்புப் பலகையை நோட்டமிட்டவாறு அமர்ந்திருந்தாள் சுதா. பல்வேறு நாட்டவர்கள் புரியாத மொழிகளில் உரையாடியவாறு, சக்கரங்கள் பூட்டிய 'சூட்கேஸ்'களை இழுத்தவாறு அவளைக் கடந்து சென்றுகொண்டிருந்தார்கள். தோளில் ஒரேயொரு 'வாய்க்'. இலங்கையில் இருந்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இதே பிராங்பேர்ட் விமானநிலையத்தை மிதித்தபோது கொண்டு வந்திருந்த அதே 'வாய்க்'. அப்போது கனத்திருந்தது. பெறுமதியான பொருட்களுடன் இருந்தது. ஆனால் இப்போது இரண்டொரு உடுபிடவைகளுடன் பாரமில்லாமல் இலேசாக அவள் தோளே தஞ்சமெனத் தொங்கியது. சுதாவின் மனம் இந்த மண்ணை மிதித்தபோது எவ்வளவோ இன்ப மதர்ப்புடன் காற்றாடியாகக் கற்பனையென்ற வானத்தி…

  16. இப்பொழுது எல்லாம் வீடு கலகலப்பு குறைந்து போகிறது.மகளின் பிரிவுடன் ஏதோ எழுததொடங்கிவிட்டேன்.எனக்கு ஒரே பிள்ளை ஜான்சி . ஜான்சி இப்போது போலந்தில் மருத்துவ படிப்பு படிக்கிறாள்.ஜான்சிக்கு இப்ப பத்தொன்பது வயது.நல்ல துடியாட்டம்.தமிழ் கதைப்பாள் ஆனால் எழுத வாசிக்கமாட்டாள்.நானும் தமிழ் பாட்டுகளைப்போட்டு கேள் கேள் எண்டாள். போங்க அப்பா நல்லா இல்லை அப்பா என்னுறாள்.கிறிஸ்மஸ் லீவில இரண்டு கிழமை நின்றவள் இப்ப மனிசி அவளைக்கூட்டிக்கொண்டு போலந்துக்கு போயிட்டுது.மனிசி வாற கிழமைதான் வரும்.இன்றைக்கு ஒரு கதையை யாழில வாசிச்சன் எனக்கும் ஏதோ எழுதோணும் மாதிரி கிடக்குது. நானும் யாழ்ப்பாணம்தான். பள்ளிக்கூட படிப்பு எனக்கு சரிவரயில்லை. ஒரு மினி பஸ்சில கொண்டட்டறாய் வேலை செய்தன்.அப்பதான் விக்…

  17. இன்னா செய்தாரை...! மாலை சூரியன் தன் வனப்பில் வானம் முழுமையையும் ஆரஞ்சு வண்ணமயமாக்கியிருந்தான். ஆனால் வள்ளி அதை ரசிக்கும் மனநிலையில் இல்லை. ஆற்றாமையில் அவள் மனம் குமைந்தது. “என்ன பிழைப்பிது, பொம்பளைங்கன்னா அவ்வளவு இளக்காரமாயிருக்குது இந்த ஆம்பளைங்களுக்கு. உடம்பே கூசுது... சை'' என்ற வள்ளி மனத்தில் சற்றுமுன் நடந்த நிகழ்ச்சி படமாக ஓடியது. வள்ளி அந்த ஊரின் மிகப் பெரிய பனியன் கம்பெனியில் கடைநிலை ஊழியராக வேலை பார்த்து வருகிறாள். அன்று மாலையும் வழக்கம்போல் வேலை முடித்து ஸ்டாஃப்ஸ் அனைவரும் சென்றதும் மூன்றாவது மாடியைக் கூட்டும் பணியில் இருந்தாள் வள்ளி. அப்போது மேனேஜர் மூர்த்தி அதே ப்ளோரில் உள்ள அவன் அற…

    • 1 reply
    • 1.5k views
  18. ஒரு மனைவியின் கதை சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு. பிரஷ்யா என்று அழைக்கப்பட்ட இன்றைய ஜெர்மனியில் ட்ரியர் நகரம். பிரஷ்ய அரசாங்கத்தில் அதிகாரியாக இருந்தவரும் பரம்பரை பணக்காரருமான ஜான் லுத்விக் வோன் வெஸ்ட்பாலனுக்கும் கரோலின் ஹ்யூபெலுக்கும் 1814-ம் ஆண்டு பிறந்தார் ஜென்னி. அதே நகரில் நான்கு ஆண்டுகள் கழித்து, 1818-ம் ஆண்டு ஹென்ரிச் மார்க்ஸ் — ப்ரெஸ்பர்க் தம்பதிக்குப் பிறந்தார் கார்ல் மார்க்ஸ். ஜென்னியின் குடும்பமும் மார்க்ஸின் குடும்பமும் பக்கத்து பக்கத்து வீடுகளில் வசித்தன. மார்க்ஸின் அக்காவும் ஜென்னியும் பள்ளித் தோழிகள். ஜென்னியின் தம்பியும் மார்க்ஸும் ஒன்றாகப் படித்தாலும் ஜென்னியின் அப்பாதான் மார்க்ஸுக்கு நெருங்கிய நண்பராக இருந்தார். அரசியல், சமூகச் சிந்தனைகள், …

  19. தேவதைகளின் உலகம் விநாயக முருகன் என் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பாடம். பெண்களுக்கு இதயத்தை கடன் கொடுத்தாலும் கொடுக்கலாம். பணத்தை மட்டும் கடன் கொடுக்கவே கூடாது. அதுவும் அழகான இளம்பெண்களுக்கு கடன் கொடுக்கவே கூடாது. அவர்களிடம் வசூல் செய்ய முடியாது என்று அர்த்தமில்லை. திருப்பி கேட்க நமக்கு மனசு வராது. நான் பணிபுரியும் மென்பொருள் நிறுவனத்தின் கிளையலுவலகம் ராமாபுரம் எதிரே இருக்கும் டிஎல்எப் வளாகத்தில் உள்ளது. டிஎல்எப் வளாகத்தை சுற்றி அழகான மரங்களுக்கும்,குளுமைக்கும் பஞ்சமே இருக்காது. சென்னையிலேயே போயஸ் கார்டனுக்கு பிறகு நான் மிகவும் விரும்பி ரசிக்கும் இடம் இது. இங்கு பரங்கிமலையும், கூவம் ஆறும், நிறைய மரங்களும் இருப்பதால் கோடைக்காலத்தில் கூட அவ்வளவாக சுகமாக இருக்கும். தவி…

  20. கலோ கலோ... ஒன்றும் சரியாக் கேக்கல்ல.. பெலத்தாக் கதை பிள்ள... அம்மா.. நான் சுசி. லண்டனில இருந்து கதைக்கிறன்... சுசியே.. சொல்லு பிள்ள.. எப்படி அம்மா இருக்கிறீங்கள். எப்பவாம் விசாத் தருவாங்கள். எப்ப ரிக்கட் போடப் போறீங்கள்.. இண்டைக்குப் பின்னேரம் தான் பதில் சொல்லுவாங்கள் பிள்ள. விசா கிடைச்ச உடன ரிக்கட் போடுவன். நீ ஒன்றுக்கும் யோசியாத. பிள்ளப் பிறப்புக்கிடையில அங்க நிப்பன். இப்ப தான் உங்க கதிரேசன் கோயிலுக்கு போய் உன்ர பெயரில.. கனடா பவாட பெயரில.. அவுஸி.. தீபாட பெயரில.. நியூசி சங்கர் பெயரில.. பிரான்ஸ் கோபி பெயரில.. நோர்வே துசி பெயரில அர்ச்சனை செய்திட்டு வந்திருக்கிறன். அப்படியே அம்மா. நல்லது. இந்த முறை நீங்க வந்தால்.. இங்கையே லண்டனில நிரந்தரமா நிற்பாட்…

  21. பார்வை தாட்சாயணி பச்சை வைப்பர் இழைக்கண்ணாடிகள் இருபக்கமும் கூரைகளாய் வளைந்து இறங்கிய கூடாரம். மழைத்துளிகள் வளைந்த விளிம்புகளில் சிறு பிள்ளைகள் சறுக்கி விழுவது போல விழுந்து வழிந்தன. வெளிமுற்றத்தின் குடை நிழலொன்றில் மழைக்கு ஒதுங்கியபடி அந்தக் கூடாரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் தரணிகா. அவள் வந்து பத்து நிமிடங்கள் ஆகியிருந்தன, கீதாஞ்சலி இன்னும் வரவில்லை. மழையின் சாரல்கள் அவளது பயணத்தில் இடையூறு தந்திருக்கக் கூடும் என நினைத்தாள். வானம் காலையில் வெயிலின் பளிச்சிடலோடு சிறிது தகதகப்போடு தான் இருந்தது. நாலைந்து நிமிடங்களுக்குள் திடுமென்று சூழ்ந்த இருண்மையின் நெருக்கத்தை எப்படி விலக்குவது?. அதற்குப் பிறகு சூழ்ந்த சாம்பல் நிறம் சூழலை ஒரு இ…

    • 1 reply
    • 1.5k views
  22. யாழ்ப்பாணம் வழமை போலவே அதிகாலையிலேயே விழித்திருந்தது. வெளிச்சம் இன்னும் பரவலாக படரத் தொடங்கவில்லை. மார்கழி மாத பருவமழையில் திருநேல்வேலி சந்தை சாக்லட் தொழிற்சாலையாக காட்சியளித்தது. வியாபாரிகள் சைக்கிளில் கட்டிக்கொண்டுவந்திருந்த மரக்கறி மூட்டைகளை இறக்கி அன்றைய ஏலத்துக்கு தயாராகிக்கொண்டிருந்தனர். Special Task Force officer குமரன் Splender Motorbike இல் வந்து இறங்கும் போது நேரம் சரியாக நான்கு மணி. யாழ்ப்பாணம் ASP திலீபன் spot இல் ஏற்கனவே காத்துகொண்டிருந்தார். “எப்பிடி தெரியும் திலீபன்?” “சந்தைல தேங்காய் கடை வச்சிருக்கிற சண்முகம் தான் inform பண்ணினவர்” “வரச்சொல்லுங்க” “நான் தான் அய்யா சண்முகம், காலைல சந்தைக்கு பின்னால ஒதுங்க…” “எத்தினை வருஷமா இங்க கடை வச்…

  23. ஆப்பரேசன் அல்ககோல் – யதார்த்தன் வவுனியா, நெழுக்குளம் வன்னியை விட்டு வெளியேறியவுடன் நாங்கள் தங்கவைக்கப்பட்ட முதலாவது நலன்புரி முகாம். நெழுக்குளம் முகாமிற்கு வந்து 4 மாசத்திற்கு மேலாகி விட்டது. இன்னும் மூன்று மாதத்தில் எங்களுக்கு ஓ.எல் பரீட்சை. முகாமிற்கு வெளியில் எங்கட வயது இருக்கும் பிள்ளைகள் பள்ளிகூடம் ஸ்பெசல் கிளாஸ் டியூசன் என கற்று கொண்டிருந்தார்கள். நாங்கள் தண்ணீர் எடுபதற்கும் சாப்பாட்டிற்கும் லைனில் நிற்பது போக மீதி நேரங்களில் கரம் போட் விளையாடுவது. இரவில் பெரிய திரையில் போடப்படும் ஏதோ ஒரு தமிழ் சினிமாவை பார்த்த படி நாட்களை நகர்த்தி கொண்டு இருந்தோம். அப்போது முகாமில் இருக்கும் ஆசிரியர்கள் சிலர் சும்மா சம்பளம் எடுக்கிறம் என்று மனம் உறுத்த ராணுவத…

    • 1 reply
    • 1.5k views
  24. அச்சுவேலி சிவப்பிரகாசத்தாருடைய வீட்டு வேலியைப் பார்த்தே அவருடைய தொழில் எதுவாயிருக்குமென்று எவரும் எளிதாகச் சொல்லிவிடுவர். சொல்லப்போனால், அச்சுவேலியில் மட்டுமல்ல யாழ்ப்பாண மாவட்டம் பரவலாக எங்குமே ஓவசியர்மாருடைய வீட்டு வேலி ஒரே மாதிரித்தான். ஓவசியரென்றால் றோட்டு ஓவசியர். றோட்டுப் போடுவதற்கென்று அரசாங்கம் கொடுத்த தார் பீப்பாய்களையெல்லாம் அவற்றிலிருந்து தாரை வழித்து றோட்டில் மெழுகிய கையோடு தமக்கு வேலை செய்யும் தொழிலாளர்களைக்கொண்டே நறுவீசாக வெட்டிவித்துத் தட்டைத் தகரமாக அடுக்கி அரசாங்க லொறியிலேயே தம் வீட்டுக்குக் கொண்டுவந்து சேர்த்துவிடுவார்கள் இந்த ஓவசியர்மார். அவற்றின் இரண்டு பக்கமும் அங்கும் இங்கும் தடிப்பாய்ப் படர்ந்து கிடக்கும் காய்ந்துபோன தார் பிசுக்கு கண்ணை உறுத்தின…

  25. வெளிச்சக்கொடி - சிறுகதை சிறுகதை: சந்திரா, ஓவியங்கள்: செந்தில் திருச்சி தாண்டி இரு பக்கங்களும் கருவேலங்காடு அடர்ந்திருந்த நெடுஞ்சாலையில் கார் போய்க் கொண்டிருந்தபோது, அம்மாவும் நானும் விழித்துக்கொண்டோம். அந்தக் கருவேலங்காட்டைப் பார்க்கும்போதெல்லாம் தோகை விரித்துப் பறந்து வரும் மயில்தான் எனக்கு ஞாபகம் வரும். குழந்தைகள் கற்பனை செய்துகொள்ளும் தேவதைக் கதைகளில் வருவதைப்போல, அப்பாவின் முகத்தோடு மயில் பறந்துபோகும் காட்சி சில சமயங்களில் என் நினைவில் வந்துபோகும். கடவுள் நம்பிக்கை இல்லாத எனக்கு, இப்படிக் கிறுக்குத்தனமான அல்லது பகுத்தறிவற்ற சில வி‌ஷயங்களில் ஆழமான நம்பிக்கை உண்டு. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட என் அப்பா அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில…

    • 1 reply
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.