கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3071 topics in this forum
-
அந்த திரைபடம் திரையில் சும்மா தன் பாட்டில் ஓடி கொண்டிருந்தது. அந்த தியேட்டரில் அதிகம் கூட்டமில்லை அது ஒரு இலங்கை படம் .வேறு எங்கையோ அரைத்த மாவை அரைத்ததை எடுத்து மேலும் அரைத்து கொண்டிருந்தது .அதிகம் கூட்டமில்லை அதுவும் வந்தவர்கள் வெளியில் எரியும் வெய்யிலின் புழுக்கத்தை தணிக்க ஒதுங்கி இடம் தேடித்தான் இங்கு வந்தவர்கள் மாதிரி மூலைக்கு மூலைக்கு தூங்கி வழிந்து கொண்டிருந்தார்கள் ,அவர்களுடன் அங்கு இருவர் திரையை வெறித்து பார்த்த படி படம் பார்த்து கொண்டிருந்தனர் ..அதில் ஒருவன் திரையை பார்த்து ரசிப்பது போல் இருந்தான் .மற்றவன் படத்தை வெறுத்து திரையை எரித்து விடுவது போல் பார்த்து கொண்டிருந்தான் படத்தை ரசித்து பார்த்த அந்த உயரமானவன் திரையில் கதாநாயகன் கதாநாயகிக்கு ஏதோ நாடகத்தனமா…
-
- 2 replies
- 1.1k views
-
-
Proud To Be Tamil அப்போது(சேட்டிலைட் டிவி எல்லாம் வருவதற்கு முன்னாடின்னு வச்சுக்கோங்களேன்!!!!) எல்லாம் விடுமுறை என்றால் மனிதர்களை காணுதல், மனிதர்கள் கூடுதல், குடும்ப உறவுகள் சுற்றி அமர்ந்து பேசி சிரித்தல், உறவினர் வீடுகளுக்குச் செல்லுதல், சிறுவர்களும் சிறுமிகளும் சேர்ந்து கேளிக்கை விளையாட்டுகள் விளையாடுதல் என்று ஓய்வு நேரம் மனிதக்கூட்டுகளாகவே கழியும்... என் அம்மா இரவு 7மணிக்கு எல்லாம் சமையல் முடித்து வாசலுக்கு வருவது போலத்தான் எதிர்த்த வீட்டு அய்யர் வீட்டு அம்மாவும், சுகுணா அக்கா, வைதேகி அக்கா, கண்ணா அண்ணா, ஜெயா அக்கா, பக்கத்து விட்டு அருள் அண்ணன், இந்த பக்கத்து வீட்டு பாபு பய, கடைசி வீட்டு மீனா அக்கா, சுரேந்தர், டிரைவர் பையன் சிவா, டைப்பிஸ்ட் பையன் ரகு, இப்படி தெருவ…
-
- 2 replies
- 1.9k views
-
-
முறை அப்பாவின் கம்பெனி என்றாலும், அதில் பதவியேற்க தனக்கு மெக்கானிக்கல் எஞ்சினியரிங் பட்டமும் எம்.பி.ஏவும் தேவை என்பதை உணர்ந்திருந்தான் சரவணன். முறையாக அந்தப் படிப்புகளை முடித்துவிட்டு அவன் பதவி ஏற்றபோது அப்பா மோகனசுந்தரம் பூரித்துப் போனார். ‘‘சரவணா, நம் சொந்தங்கள் எல்லாரும் உன் கல்யாண விஷயமா தொந்தரவு செய்யறாங்க! நல்ல பொண்ணா பார்த்துடலாமா?’’ கேட்டார் மகனிடம். ‘‘செய்யலாம்பா! ஆனா அதுக்கு முன்னாடி முறைப்படி சில விஷயங்களை முடிக்க வேண்டியிருக்கு. நான் படிக்கும்போதே கூடப் படிச்ச வந்தனா என்கிற பொண்ணைக் காதலிச்சி, ரகசியமா பதிவுத் திருமணமும் செய்துக்கிட்டேன். கொஞ்ச நாள்லயே எங்களுக்குள்ள எதுவும் ஒத்துப்போகாம விலகிட்டோம்! அவள் மும்பைல வேலை கிடைச்சு போயிட்டா. இப்ப…
-
- 2 replies
- 1.3k views
-
-
மனம் தேவகாந்தன் ‘நிக்கலஸ் ஏன் அவ்வாறு செய்தான்?’ விடை தேடிக்கொண்டு ஏற்கனவே கிடந்த கேள்விகளோடு, அப்போது இன்னொரு கேள்வியும் இராஜலிங்கத்தின் மனத்துள் சேர்ந்துகொண்டது. ‘அதெல்லாம் கள்ளக் கூட்டம். கறுவல்களோடெல்லாம் சேர்ந்து நீ இனிமேல் விளையாடப் போகவேண்டாம்’ என மகன் அனூஷனுக்கு கண்டிப்புச் சொன்ன ஆனந்தி, கூடத்துள்ளிருந்து எல்லாம் கண்டுகொண்டிருந்த தந்தையிடம் திரும்பி, ‘பாத்தியளேயப்பா, அதுகள் செய்த வேலையை? நாளைக்கு ஸ்கூலுக்குப் போய் இதைப்பற்றி கொம்பிளெய்ன் பண்ணியிட்டு வந்திடுங்கோ. எல்லாத்தையும் இப்பிடியே சும்மா விட்டிடேலாது’ என்றுவிட்டு மேலே போய்விட்டாள். …
-
- 2 replies
- 810 views
-
-
வானம் எங்கும் கரிய பெரிய மேகங்கள் உருண்டு திரண்டு நகர்ந்து கொண்டு இருந்தன. அப்பப்போ கண்ணைப் பறிக்கும் வெளிச்சத்துடன் மின்னலும் அதைத் தொடர்ந்து இடியும் கேட்டுக்கொண்டே இருந்தது. மழை சாதுவாகத் தூறத் தொடங்கிவிட்டது. அந்தப் பழைய சுண்ணாம்பு வீட்டிலிருந்து சலிப்புடன் ஒரு உருவம் எட்டிப்பார்த்தது. இன்றும் இப்படிப் சில பழைய சுண்ணாம்பு வீடுகளை யாழ்பாணத்தின் புறநகர்ப்பகுதிகளில் காணலாம். அந்தக் கலைந்த கேசமும் இளமையிலேயே முதுமை தோன்றிய அந்த முகமும் முதற் பார்வையிலேயே காட்டிக்கொடுத்துவிடும் இவள் ஒரு நடுத்தரக் குடும்பத்தின் தலைவியென்று. கண்களை சுருக்கி மழைத் தூறலூடு யாரையோ தேடினாள். அவளுக்குத் தெரியும் மழையென்றால் இவன் நனையவென்றே வெளியில் ஓடிவிடுவான். “டேய்! சின்னத்தம…
-
- 2 replies
- 1.4k views
-
-
ஹெச். எச். ஆண்டர்சன் (1837) பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு அரசன் இருந்தான், அவர் அணிகலன்கள் மற்றும் புதிய ஆடைகளை உணர்ச்சியுடன் விரும்பி, தனது பணத்தை அதற்கே செலவழித்தார். அவர் தனது வீரர்களிடம் வெளியே சென்று, ஒரு புதிய உடையில் காட்டுவதற்காக மட்டுமே தியேட்டருக்கு அல்லது காட்டுக்குள் ஒரு நடைக்குச் சென்றார். நாளின் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அவர் ஒரு சிறப்பு கேமிசோலை வைத்திருந்தார், மேலும் ராஜாக்களைப் பற்றி அவர்கள் சொல்வது போல்: "ராஜா கவுன்சிலில் இருக்கிறார்", எனவே அவர்கள் எப்போதும் அவரைப் பற்றி சொன்னார்கள்: "ராஜா டிரஸ்ஸிங் அறையில் இருக்கிறார்." ராஜா வாழ்ந்த நகரம் பெரியதாகவும், கலகலப்பாகவும் இருந்தது, அதனால் ஒவ்வொரு நாளும் வெளிநாட்டு விருந்தினர்கள் வருகிறார்கள், ஒ…
-
- 2 replies
- 1k views
-
-
யாழ்ப்பாணம் வழமை போலவே அதிகாலையிலேயே விழித்திருந்தது. வெளிச்சம் இன்னும் பரவலாக படரத் தொடங்கவில்லை. மார்கழி மாத பருவமழையில் திருநேல்வேலி சந்தை சாக்லட் தொழிற்சாலையாக காட்சியளித்தது. வியாபாரிகள் சைக்கிளில் கட்டிக்கொண்டுவந்திருந்த மரக்கறி மூட்டைகளை இறக்கி அன்றைய ஏலத்துக்கு தயாராகிக்கொண்டிருந்தனர். Special Task Force officer குமரன் Splender Motorbike இல் வந்து இறங்கும் போது நேரம் சரியாக நான்கு மணி. யாழ்ப்பாணம் ASP திலீபன் spot இல் ஏற்கனவே காத்துகொண்டிருந்தார். “எப்பிடி தெரியும் திலீபன்?” “சந்தைல தேங்காய் கடை வச்சிருக்கிற சண்முகம் தான் inform பண்ணினவர்” “வரச்சொல்லுங்க” “நான் தான் அய்யா சண்முகம், காலைல சந்தைக்கு பின்னால ஒதுங்க…” “எத்தினை வருஷமா இங்க கடை வச்…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஒரு பெரிய பணக்காரன் தன் நண்பனிடம் சொன்னான். நான் இறந்த போன பின் என் சொத்துக்களை எல்லாம் தர்மத்திற்கு கொடுக்க இருப்பது தெரிந்தும் ஏன் எல்லோரும் என்னை குறை கூறிக்கொண்டே இருக்கிறார்கள்? இதற்கு பதில் கூற வேண்டுமானால் உனக்கு பன்றி, பசுவை பற்றிய விபரங்களை சொல்ல வேண்டும் என்றான் நண்பன். பன்றி பசுவிடம் தன்னுடைய ஏக்கத்தை கூறிற்று. அதாவது பன்றி எவ்வளவுதான் செய்தாலும் மக்கள் பசுவைதான் புகழ்கின்றார்கள். பசு பால் தந்தாலும் பன்றி அதைவிட அதிகமாக தன் மாமிசத்தை தருகிறது. இருந்தும் தன்னை ஒருவரும் விரும்பமாட்டேன் என்கிறார்கள் என்றது பன்றி. பசு கூறியது: நீ சொல்வது உண்மையாக இருக்கலாம். ஏனெனில் நான் உயிருடன் இருக்கும் போதே இவைகளை கொடுத்து கொண்டிருக்கிறேன். ஓஷோ கூறுகி…
-
- 2 replies
- 1.4k views
-
-
சொல்லப்பட்ட கதையும், சொல்லில் வராத கதைகளும் ஆர்.அஜய் சிறுகதையோ, நாவலோ அது தான் வெளிப்படையாக சொல்லும் விஷயங்களோடு, நேரடியாகச் சொல்லாமல் வாசகனின் கற்பனையையும் நுண்ணுணர்வையும் செயலிறங்கக் கோருகிற சில விஷயங்களையும், அவற்றுக்கான மௌனங்களையும் இடைவெளிகளையும் தன்னுள் கொண்டிருக்க வேண்டும் என்பது ஒரு எதிர்பார்ப்பாக உள்ளது, இது நல்ல படைப்பின் ஒரு அடையாளமாகவும் கொள்ளப்படுகிறது. சிறுகதையை எடுத்தால், அதன் நீளமும் காலமும் குறுகியவை என்று துவக்கத்திலேயே வரையறுக்கப் பட்டுவிடுவதால் அது பல பாதைகளில் கிளைக்கும் சாத்தியத்தை தன்னுள் இயல்பாகவே கொண்டுள்ளது. ஆலிஸ் மன்றோ முதலானவர்கள் எழுதும் நெடுங்கதைகளைத் தவிர்த்து, பொதுவாக ஒரு சிறுகதையின் நீளம் ஐந்து முதல் பத்து பக்கங்கள் கொண்டதாகவும…
-
- 2 replies
- 1.1k views
-
-
விரும்பிக் கேட்டவள் எழுதியவர் : எஸ்.ராமகிருஷ்ணன் ஓவியம் : எஸ்.இளையராஜா ''அப்பா உன் பாட்டு டி.வி-யில போடுறான், அம்மா உன்னைக் கூப்பிடுறா...'' என்று நித்யா வந்து கூப்பிட்டாள். அவள் சொல்வதற்கு முன்பாகவே அந்தப் பாடலைக் கேட்கத் துவங்கியிருந்தேன். 'மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும், நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்’ என்று பி.பி.ஸ்ரீனிவாஸ் குரலில் ஒரு இளைஞன் பாடிக்கொண்டு இருந்தான். ஸ்ரீனிவாஸோடு பொருந்தவில்லை என்றபோதும், அந்த இளைஞன் பாடலை அனுபவித்துப் பாடுகிறான் என்பது புரிந்தது. ஒவ்வொரு முறை அந்தப் பாடலைக் கேட்கும்போதும் மனம் கனத்துவிடுகிறது. பல நேரங்களில் என்னை மீறி நான் அழுதுவிடுவதும் உண்டு. 'சினிமா பாட்டைக் கேட்டு யாராவ…
-
- 2 replies
- 5.7k views
-
-
#படித்ததில்_பகிர்ந்த்து 2500/- தண்டப்பணத்தை செலுத்த முடியாத வயோதிபர் 07 ஆண்டுகள் சிறையில்....!!! எனது மூத்த மகன் கொழும்பில் மேசன் வேலை செய்து கொண்டிருந்தார். அவருடைய மனைவி அவரை விட்டுச் சென்றதன் பின்னர் அவரது பிள்ளைகளை நானும் எனது மனைவியும்தான் பராமரித்து வந்தோம்... ஏழு வருடங்களுக்கு முன்னர் அன்றொருநாள் செய்தி வந்து சேர்ந்தது... " மூத்தமகன் வேலை செய்யும் போது பலஞ்சியிலிருந்து விழுந்துவிட்டார் என்று " ! நான் அணிந்திருந்திருந்த ஆடையுடன் மகனிற்கு என்ன நடந்ததோ என்று பதறிப்போய் கொழும்பு வரும் ரயிலில்த் தொற்றி ஏறிக் கொண்டேன். அப்போது என்னிடம் பணம் இல்லை என்பது கூட எனது நினைவிலிருக்கவில்லை. என்னுடைய துரதிர்ஷ்டம் ரயில் டிக்கெட் பரிசோதணைக்க…
-
- 2 replies
- 968 views
-
-
அர்ச்சுனாபுரம் மற்றும் அந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதியை ராமலிங்க சேதுபதி, இந்திராணி தம்பதியினர் ஆட்சி செய்து வந்தனர். இவர்களுக்கு நல்ல தம்பி, நல்லதங்காள் என இரண்டு குழந்தைகள். இவர்கள் தாய், தந்தையை இளம் வயதிலேயே இழந்தனர். இருந்த போதிலும், அந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்த நல்லதம்பி, தன் தங்கை நல்லதங்காளைச் சீராட்டி வளர்த்து தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் வாழ்ந்த ராஜ வம்சத்தைச் சேர்ந்த காசிராஜா என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார். திருமணம் ஆன இளம் வயதிலேயே நல்ல தங்காள் ஏழு குழந்தைகளுக்குத் தாய் ஆனாள். இதில் நான்கு ஆண் குழந்தைகள், மூன்று பெண் குழந்தைகள். இந்நிலையில், மானா மதுரையில் மழை பொய்த்ததால் பஞ்சம் தலைவிரித்தாடியது. தொடர்ந்து பன்னிரண்…
-
- 2 replies
- 9.6k views
-
-
எப்போதோ எழுதியது இப்போது ஒரு ஞாபகமாய் (2000ம் ஆண்டில் இந்த ஞாபகம் எழுதப்பட்டது. ஏற்கனவே பத்திரிகையொன்றிலும் வெளியாகியது. தூசுதட்டப்போனதில் கிடைத்தவற்றிலிருந்து ஒரு ஞாபகக்கதையிது) 1985ம் ஆண்டு. புண்ணியன் சித்தப்பா சந்திராச்சித்தியின் ஊரான கோண்டாவில் அந்நொங்கைக்குப் போய்விட ராசையாப்புவின் கேணியடிக் கடைக்கு நாங்கள் போய்ச்சேர்ந்தோம். கேணியடியிலிருந்துதான் அப்பா புன்னாலைக்கட்டுவன் சங்கத்துக்குப் போய் வரத்தொடங்கினார். புன்னாலைக்கட்டுவனிலிருந்து பல இளைஞர்கள் புலிகளாகி இந்தியாவிலிருந்து திரும்பி ஊருக்குள் வந்தார்கள். ஊர்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த ஆமிக்கு அது பயத்தைக் கொடுத்தது. அப்பாவின் நண்பர்களாக எங்கள் வீட்டுக்கு இரவில் வந்து போகும் அந்த மாம…
-
- 2 replies
- 938 views
-
-
பாட்டில் ‘மது பாட்டில்கள் வாங்குவதில்லை’ - ஒரு பழைய இரும்புக் கடையில் இந்த வாசகம் தாங்கிய போர்டைப் பார்த்து வியந்து போனான் வசந்த். பொதுவாக இம்மாதிரி கடைகளில் குவியல் குவியலாக காலி மது பாட்டில்கள்தான் இருக்கும். அதைப் பார்க்கும்போதெல்லாம் ‘நாட்டில் இவ்வளவு பேர் குடிக்கிறார்களா?’ என்று தோன்றும்.ஆனால் இங்கே... மதுவுக்கு எதிராக இப்படியும் ஒருவர் போராட முடியுமா?! அந்த முதலாளியைப் பார்த்து பாராட்டியே தீர வேண்டும் என்று கடைக்குள் நுழைந்தான் வசந்த். கல்லாவில் வெள்ளைச் சட்டை அணிந்து அமர்ந்திருந்தார் முதலாளி.‘‘குடியை ஊக்கப்படுத்தக் கூடாதுனு இப்படி ஒரு முடிவெடுத்து வியாபாரம் பண்றீங்க பாருங்க... நீங்க பெரிய மனுஷர்ங்க!’’ என்றான் அவரிடம்! ‘…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஓசியில் வளர்த்த ஒழுங்கற்ற உடம்போடை சைக்கிள் விட்டு இறங்க மனம் இல்லாமால் சீற்றில் இருந்தபடியே மற்ற காலை நிலத்தில் ஊன்றின படி பக்கத்து வீட்டு மணியத்தாரோடை தனகு பட்டு கொண்டிருந்தார். மணியத்தாரும் கூனி குறுகி ஏதோ சொல்லி கொண்டிருக்க.. அதையும் மீறி அதட்டும் குரல் மாதிரி ஒலிக்க.. அக்கம் பக்கம் வீடுகளிலிருந்து சனங்கள் வேலிக்கு மேலாலும் வேலி இடுக்குக்காலும் அரை குறை உருவங்களோடு எட்டிப்பார்த்து கொண்டிருந்தன. இந்த போகம் முடிய உன்ரை கணக்கை முடிக்கிறன் என்று தவணை தவணையாய் சொல்லி http://sinnakuddy.blogspot.com/2007/01/blog-post_15.html
-
- 2 replies
- 1.4k views
-
-
"இன்னொரு இடத்தில் பேசுதல்..." உலோகத்தின் எழுத்துக்கள் கற்சுறா இடங்களில் காவிழாய்ச் செடிகள் முளைத்திருந்த இடங்களில் தகரைப்பற்றைகள் முளைத்திருந்த இடங்களில் குப்பைமேனிகள் முளைத்திருந்த இடங்களில்தான் உன்னைக் காலாற நடாத்திப் போனேன். காண்டாவன வெக்கையில் கருகிப்போகாத காலத்தில்தானே உனது கால்களை ஊன்றினாய்? பருவத்தின் கால்கள் இடங்களை அளையாதிருந்ததா? மரணத்தின் வெக்கையில் கருகியதா உன்பாதம்? மரணங்கள் உடலில் நிகழ்வதல்ல. நாட்காட்டிகளால் நினைவுறுத்தும் ஒவ்வொரு நாட்களிலும் மரணத்தைக் கடக்கவேண்டியிருக்கிறது. நினைவுகளால் மரணம் வேறு வேறு நிறங்கள் பூசப்பட்டிருக்கிறது. நாட்களைத் தாண்டுதல் என்பதே நடைபெற்று முடிந்…
-
- 2 replies
- 1.3k views
-
-
"ஈரம் தேடும் வேர்கள்" "கடலின் அலைவந்து கரையில் விளையாடும். கரிய முகில் வந்து மலையில் சதிராடும். கடலின் இளங்காற்று எமது தலைசீவும். தமிழர் திருநாடு அழகின் மொழி பேசும் கோயில் வயல் சூழ்ந்த நாடு - திருக் கோண மலையெங்கள் வீடு." என மார்புதட்டி பெருமையாக வாழ்ந்தவர் தான், முன்னைய கணித ஆசிரியை கண்மணி என்ற மூதாட்டி ஆகும். இலங்கையின் கிழக்குப் பகுதியிலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான திருகோணமலையில், உயர்ந்து நிற்கும் சிவனின் சிலையை முன்னுக்கு கொண்டிருக்கும் திருக்கோணேஸ்வரத்திற்கு அண்மையில் இவரின் வீடு இருந்தது. கண்மணி தனது அறிவு மற்றும் சிரமங்களைத் தாங்கும் அல்லது விரைவாக அதில் இருந்து மீளும் விரிவாற்றலுக்கும் அறியப்பட்டார், வாழ்க்கையின் பல பருவங்களை அல்லது கட்ட…
-
- 2 replies
- 441 views
-
-
கற்சிலை!… – நவாலியூர் சோ.நடராஜன். சிறப்புச் சிறுகதைகள் (13) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – நவாலியூர் சோ.நடராஜன் எழுதிய ‘கற்சிலை’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும். கல்லிற் கோதிய அந்த உருவம் முடிந்து தன்னெதிரே நின்றதைக் கண்ட கணேசாச்சாரி புன்முறுவல் செய்தான், அக்கற்சிலையின் புன் முறுவல் போல. இந்த முறுவலின் வனப்புத்தானென்ன! புதிதாய் உலகத்தைக் கண்டு ஆச்சரியமடையும் குழந்தையின் அப்பழுக்கில்லாத தூய உள்ளத்திலிருந்து எழும் மனோரம்மியமான புன்முறுவல் போன்றது. என்ன பூரணமான அமைவு, விஸ்வகர்மாவும் செய்யமுடியாத கற்சிலை! “என் உள்ளக் கோவிலில் இத்தனை காலமாகக் கண்ணாம்பூச்சி விள…
-
- 2 replies
- 1.4k views
-
-
இராமன் வில் - நெற்கொழு தாசன் அவன் சாவோடும் போரோடும் வளர்ந்த குழந்தை. இப்போது எல்லாம் அழிவுற்றதான ஒரு தனியன். எறும்பைப் போல, இலையானைப் போலவாவது தனக்குமொரு வாழ்க்கை இருந்துவிடாதாவென எண்ணுகின்ற போதெல்லாம் தனது பெயரைத்தான் நினைத்துக்கொள்வான். பார்க்கும், பழகும் அனைவருக்கும் அவன் எல்லாவற்றாலும் விடுதலை பெற்றவொரு சாமானியன். விடுதலை என்பதன் அர்த்தம் உள்ளங்கை ரேகைபோல ஆளுக்காள் மாறுபட்டாலும் விடுதலையில்தான் எல்லாமுமிருக்கிறது என்பவர்களுக்கு, தனது பெயரே விடுதலை என்பதுதான் என்பதை, விளங்கவைக்கவே தன் கதையை சொல்லுவான். அந்தக் கதை கருப்பிகுளத்திலிருந்து ஆரம்பிக்கும். "இராமன் வில்லு காட்டுகிறேன் வா" என்று மதுரா அவனது கையைப் பிடித்து அழைத்துச்சென்று கருப்பி க…
-
- 2 replies
- 1.1k views
-
-
காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் - எம்.ரிஷான் ஷெரீப் (சர்வதேச ரீதியில் வம்சி பதிப்பகம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசினை வென்ற சிறுகதை) _______________________________________________ காக்கைகள் எப்பொழுதும் அவன் தலையைத்தான் குறி வைத்தன. அவன் பகல் வேளையில் வெளியே வந்தால் போதும். தெருவின் கரண்ட் கம்பிகள், தொலைபேசிக் கம்பிகளில், வேலியோரப் பூவரச மரங்களில், வீட்டுக் கூரைகளில், மீன் வாடியிலெனக் காத்திருக்கும் காக்கைகள் அல்லது ஒற்றைக் காக்கையேனும் அவனது தலையைக் குறி வைத்துப் பறந்து வந்து கொத்திவிட்டுச் செல்லும். ஒரு முறை கொத்திவிட்டுப் போன காக்கை, திரும்ப அவன் வெளியில் அலைந்து வீடு திரும்பும் வரை கொத்துவதுமில்லை, துரத்துவ…
-
- 2 replies
- 4.6k views
-
-
காமிய தேசத்தில் ஒரு நாள் - ஆதவன் தீட்சண்யா ஓவியம் : ரமணன் அதிகாலை 2.31 மணி. அதிகாரபூர்வமாக கண் விழிப்பதற்கான அலாரம் ஒலிப்பதற்கு இன்னும் 29 நிமிடங்களிருந்தன. அதற்குள்ளாகவே அவனுக்கு விழிப்பு வந்துவிட்டது. விழித்ததுமே அவனுக்கு எழுந்த முதல் சந்தேகம், தூங்கினோமா என்பதுதான். இமைகளின் உட்புறத்தில் கங்கு மூட்டித் தீய்ப்பதுபோல கண்களில் அப்படியொரு எரிவு. தூக்கத்தின் போதாமை, உடலெங்கும் அணுவணுவாக நகரும் நோவாகித் தன்னைப் பெரிதும் வதங்கச் செய்திருப்பதாக உணர்ந்தான். நள்ளிரவு 12 மணிக்கு வேலை முடிந்ததும் விர்ரென வண்டியை முறுக்கிக்கொண்டு வந்தும்கூட வீடு சேரும்போது இன்றைக்கும் 12.32 மணி ஆகிவிட்டிருந்தது. நாடு முழுவதும் வேலை முடிவது அந்நேரம்தான் என்பதால், சாலைகளில் ம…
-
- 2 replies
- 1.7k views
-
-
மௌனத்தின் எல்லையிலே வீடு ஒரே கும்மிருட்டாக இருந்தது. உள்ளே போவதற்காக எட்டிப் பார்த்தவளின் மனதிலே அதை எப்படி எடுப்பது என்ற எண்ணமே தோன்றியது. அவளுக்கு உதவுவது போல் அந்தக் கூரையில் இருந்த ஓட்டைகள் மூலம் வந்த நிலவின் ஒளி, வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்தது. பானைக்குள் கையை விட்டு துளாவினாள் சரசு. கையில் கிடைத்த சில்லறைகளை அந்த நிலா வெளிச்சத்தில் பிடித்து உற்றுப் பார்த்து உறுதி செய்தவள் ஒருவித திருப்தியுடன் தனது முந்தானையிலே முடிந்து தன் இடையிலே செருகினாள். நாளை நேரத்திற்கே போகவேண்டும் என்ற நினைவு உந்தவே கயிற்றிலே தொங்கிக் கொண்டிருந்த ஒரு பழந் துணியை நிலத்திலே போட்டவள் சுருண்டு படுத்துவிட்டாள். ஆனால் அவளால் நித்திரை கொள்ள முடியாதவாறு நினைவு அலைகளிலே சிக்கித் தவித்துக…
-
- 2 replies
- 2.3k views
-
-
வலிமை (கலைமகளில் வெளியான முத்திரைச் சிறுகதை) நேரம் கிடைக்கும் போது படியுங்கள். வீடு முழுக்க அம்மாவின் வாசனை நிறைந்திருந்தது. காற்று, தண்ணீர், தோட்டத்து மண், அடுப்பில் எரியும் நெருப்பு, முற்றத்து ஆகாசம் எல்லாவற்றிலும் அவளது மணமும், ஓசையும், வெம்மையும், குளுமையும் நிறைந்திருந்தது. அம்மாதான் அமிர்தாவின் வாழ்க்கை. அவள் மட்டும் இல்லை என்றால் இந்நேரம் வேறு எப்படியோ இருந்திருக்கும். அம்மாவின் திடமும், மன உறுதியும், எண்ணங்களும், துணிச்சலும் காலத்தைக் கடந்தவை. வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை சந்தித்தவள். தனக்கென்று சீரிய சிந்தனைகள் கொண்டவள். தன் நியாயமான தீர்மானங்களிலிருந்து அவள் ஒரு போதும் பின் வாங்கியதில்லை. அம்மா தன் வாசத்தை வீட்டில் நிரப்பி விட்டு ஊருக்குச் சென்றிரு…
-
- 2 replies
- 862 views
-
-
கடன் மஹாத்மன் அமைதி நிலவியது. நீள் கல்லிருக்கையில் படுத்ததும் சட்டெனத் தூங்கிப் போனேன். அவ்வப்போது முகத்தை மூடிய சிறு துண்டு நழுவிக் கீழே விழும்போது தன்னிச்சையாக என் இடதுகை அதனை எடுத்து மறுபடியும் முகத்தை மூடிற்று. அசதியில் உடல் படுத்திருந்தாலும் மூளை மட்டும் விழித்துக்கொண்டிருந்தது. அதிகாலை நெருங்கியிருக்கும். விசும்பல் சத்தம் கிணற்றடியிலிருந்து கேட்பது போலிருந்தது. விழித்துக்கொண்டேன். கண்ணிமைகளை இலேசாய்த் திறந்தபடியே எதிரில் இருப்போரைக் கண்ணோட்டமிட்டேன். அழுக்கு உடைகளைத் தரித்திருந்த ஒரு சீனன் சன்னக் குரலில் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான். நடுவில் பயணி ஒருவர் தன் அகலமான நீண்ட துணிப் பெட்டியின்மீது தலையைக் கவிழ்த்தபடி தூங்கிக் கொண்டிருந்தார். இடது மூலை…
-
- 2 replies
- 1.2k views
-
-
குறையொன்றுமில்லை! பாலகிருஷ்ணன் குட்டி போட்ட பூனை போல இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தார். ஆயிற்று கிட்டத்தட்ட இரண்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஓட்டமாய் ஓடிவிட்டது. ரிடையர்டு ஆன பிறகு பென்ஷன் பணம் அருகில் உள்ள வங்கிக் கணக்கில் சேர்வதற்கான என்னென்ன வேலைகள் செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்து முடித்தாகிவிட்டது. இனி ஒரு வேலையும் கிடையாது. காலையில் எழுந்தவுடன் காப்பி சாப்பிட வேண்டியது, தினசரிகளைப் படிக்க வேண்டியது, குளிக்க வேண்டியது. சில ஸ்தோத்திரங்களையும் சொல்ல வேண்டியது. பிறகு சாப்பிட வேண்டியது. மீண்டும் சாப்பிட வேண்டியது. தூங்க வேண்டியது. மாலையில் நடைப்பயிற்சி, பிறகு வீடு, சாப்பாடு, தூக்கம்....மூன்…
-
- 2 replies
- 676 views
-