கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3071 topics in this forum
-
என் வாழ்க்கையில் நான் பட்ட கடன்களை வரிசைப் படுத்தும்போது பல கடன்களை நான் தீர்க்கவில்லை என்பது இப்போது தெரிகிறது. சிறுவயதில் பக்கத்து மேசை நண்பனிடம் பென்சில் கடன் வாங்கி அதை திருப்பிக் கொடுக்கவில்லை. கோயிலுக்கு நேர்ந்து கடவுளுக்கு இது செய்வதாக, அது செய்வதாகச் சொல்லி செய்யாமல் விட்டது. புத்தகங்கள் கடன் வாங்கிப் படித்தால் தவறாமல் திருப்பிவிடுவது என் வழக்கம். ஒரு முறை என் புத்தகத் தட்டை ஆராய்ந்தபோது யாரோ ஒருவரிடம் கடன் வாங்கிய புத்தகம் ஒன்று இன்னும் திருப்பிக் கொடுக்காமலே இருப்பது தெரிந்தது. ஆனால் யாரிடம் புத்தகத்தை இரவல் வாங்கினேன் என்பது மறந்துவிட்டது. உரிய நேரத்தில் கடனை அடைக்காவிட்டால் அதை திருப்பிக் கொடுக்கும் வாய்ப்பே சமயத்தில் நழுவி விடக்கூடும். சில நாட்களுக்கு மு…
-
- 3 replies
- 1.1k views
-
-
நினைவின் நிழல் நான் அமைதியாகக் கண் அயர்ந்து இருந்தேன். எனக்கு உயிர் இருக்கிறதா என்பதை பலரும் நம்பிக்கையே இல்லாமல் பரிசோதித்துக்கொண்டிருந்தார்கள். உடலில் ஒரு அசைவும் இல்லை. பத்து குதிரைத்திறன் உள்ள நீர் இறைக்கும் இயந்திரத்தை தோளில் சுமந்து செல்லக்கூடிய என் தோள்கள் துடைத்துப் போட்ட கரிக்கந்தை போல கிடந்தது. இமையைக்கூட அசைக்க முடியவில்லை. என்னைச் சுற்றி நான்கைந்து டாக்டர்கள் நின்றிருப்பதை மிக யோசனைக்குப் பிறகே உணர்ந்தேன். எல்லோருமே நான் பிழைப்பது அரிது என்பதைத் தங்கள் மருத்துவ அறிவைக்கொண்டு தீர்மானமாகச் சொன்னார்கள். நெடிய உருவம் கொண்ட ஆங்கிலேயரை நினைவுபடுத்தும் தோற்றம் உள்ள அந்த மருத்துவர்& இது அவருடைய குரலை வைத்து நான் செய்த கற்பனை& என்னை ஏறத்தாழ இறந்துவி…
-
- 0 replies
- 1.2k views
-
-
பிச்சை ஏ.எம். சாலன் அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. பாலச்சந்திரன் தன் வேலையை முடித்துவிட்டு அலுவலகத்திலிருந்து வெளியேற சாயந்திரம் 5.30 மணிக்கு மேலாயிற்று. வழக்கமாக அவன், ஞாயிற்றுக் கி-ழமைகளில் 4 அல்லது 4.30 மணிக்கெல்லாம் அலுவலகத்தை விட்டு வெளியேறிவிடுவான். ஆனால், இன்று அவன் கைக்கடிகாரத்தைப் பார்க்க மறந்ததால் வசமாக மாட்டிக் கொண்டான். எல்லா ஞாயிற்றுக் கிழமைகளிலும் அந்த ஆர்.எம்.எஸ். அலுவலகத்தில் வேலை நடைபெறுவதுண்டு. நான்கு அஞ்சல் பிரிப்பாளர்களும், ஒரு தலைமைப் பிரிப்பாளரும் இருப்பார்கள். இம்மாதிரி ஞாயிற்றுக் கிழமைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு வார ஓய்வு நாளாக வேறொரு நாள் கொடுக்கப்படும். பாலச்சந்திரன் வேலை பார்க்கும் முதல் பிரிவில் ஞாயிற்றுக் கிழமைகளில் ஓய்வு வேண்டும் என்ற பேச்…
-
- 1 reply
- 946 views
-
-
பேயோட்டி வினையூக்கி முதலில் சாமியார் ஆகவேண்டும் என்றுதான் நினைத்தேன். இத்தாலியில் சாமியார் வேடங்களுக்கு வங்காள தேசத்தவர்களும் ஹரே கிருஷ்ணா குழுமமும் பிரபலம் ஆகிவிட்டதால் , சொகுசா இருக்கிற ஒரு வேலை என்ன என தேடிய பொழுது சிக்கிய தொழில் தான் 'பேயோட்டி' ... ஆங்கிலத்தில் Ghost Buster , Exorcist எனச் சொல்லுவார்கள். ஸ்டைலாக பில்டிங் காண்டிராக்டர் என்பது போல நான் எனக்கு வைத்துக் கொண்ட தொழில் பெயர் Para Normal Scientist. பேய் வீடுகளில் இருக்கும் பேய்களை ஒட்டுவதற்குத்தான் என் முதல் முன்னுரிமை. மனிதர்களுக்குப் பேய் பிடித்ததாக சொன்னால் நான் எதுவும் செய்ய மாட்டேன், நல்ல மன நல மருத்துவரைப் பரிந்துரைப்பேன். என்னுடைய பாட்டி ஒரு முறை தனக்கு யாரோ செய்வினை வைத்து விட்டதாகவும் அந்த செய்…
-
- 1 reply
- 866 views
-
-
(a+b)2 = a2+b2+2ab கல்யாணமாகி ஒரு மாதம் - A கல்யாணமாகி 2 வருடம் - B ---------- ஆருயிர் நண்பன் ரமேஷ் - C கண்ணதாசன் பாடல் - D A "என்னங்க உங்களுக்கு ஹார்லிக்ஸ் வேணும்மா, பூஸ்ட் வேணும்மா" இங்கி, பிங்கி போட்டு பார்த்ததில் பூஸ்ட்தான் வந்தது. ஆனால் எனக்கு ஹார்லிக்ஸ்தான் பிடிக்கும். அதனால், "எனக்கு ஃபில்டர் காஃபிதான் வேணும்" B "எருமைமாடு அந்தப் பாலை குடிச்சாத்தான் என்ன? அதுல என்ன வெஷம்மா கலந்திருக்கு, அப்பனும், பிள்ளையும் ஒரே மாதிரி வந்து வாச்சிருக்கு பாரு. எனக்கு வேலை வைக்கணும்னே பிறந்து தொலைச்சிருக்கு" "ஏய்..... ஏண்டி பிள்ளைய திட்டுற" "ம்....... எனக்கு கிறுக்கு பிடிச்சிருக்கு அதான் திட்டுறேன்" "உனக்கு திமிறு அதிகம…
-
- 3 replies
- 1.2k views
-
-
கோத்தபாயவும் நானும் விமானத்தில் இருந்து இறங்கிப் பதட்டத்துடன் பயணிகளுடன் பயணிகளாக விமான நிலையத்தின் உள்ளே காலடி வைத்தேன் .அடுத்த வருவது பயணிகளைச் சோதிக்கும் இடமென்பதால் பதட்டம் இன்னும் அதிகரித்தது. எதற்காக இந்த்தப் பதட்டம் "நீ என்ன கொள்ளையடித்தாயா கொலை செய்தாயா எதற்காகப்பயப்படுகின்றாய் " என் உள்மனம் சொல்லிக் கொண்டாலும் பதட்டம் தீர்ந்த பாடில்லை. ஒருமாதிரி சிங்கள அதிகாரி கேட்ட கேள்விகளுக்கும் முறைத்த முறைப்புகளுக்கும் பதில் அளித்துவிட்டு வெளிவாசலை நோக்கி என் கால்கள் விரைகின்றன. வெளி வாசலை அடைந்ததும் என் கண்கள் வாடகை வண்டிகள் நிற்கும் இடத்தைத் தேடின. தூரத்தில் அவைகள் நிறுத்தப் பட்டிருந்ததை அடையாளம் கண்டுகொண்டு நடந்து கொண்டிருந்தேன் திடீரெனப் பல இரு…
-
- 27 replies
- 3.8k views
-
-
மொழி பெயர்ப்பு சிறுகதை சின்ன சின்ன பூகம்பங்கள் எம்.டி.வாசுதேவன்நாயர் தமிழில் -.நர்மதாகுப்புசாமி செப்ரெம்பர் 17, 2012 மொழி பெயர்ப்பு சிறுகதை சின்ன சின்ன பூகம்பங்கள் எம்.டி.வாசுதேவன்நாயர் தமிழில் -.நர்மதாகுப்புசாமி , கேளுங்கள்! நான் உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும்.இது உண்மையிலேயே சுவரஸ்யமானது. அவர்கள் எத்தனை பீதியில் இருக்கிறார்கள்,எத்தனை பயத்துடன் அவளைப்பற்றி பேசுகிறார்கள். எனக்கு எப்போதுமே அவர்கள் எதைப்பற்றி பேசுகிறார்கள் என்று புரியாது…..இருந்தாலும் நானும் சிலசமயம் அவர்களை நம்புவேன். “அவள் தனது தம்ஷ்த்ராவால்(கோரைப்பற்களால்) உன்னைக் கிழித்துவிடுவாள்.பிறகு உன் இரத்தத்தை ஒரே மூச்சில் குடித்துவிடுவாள். அப்புறம் உன் எலும்புகள்? அவற்ற…
-
- 0 replies
- 1.8k views
-
-
பட்டணம் தான் போகலாமடி..! சென்னையில் அடுக்கு மாடிகளாகும் மனைகள்... சரவணன் .. சென்னையில் வேலை பார்க்கும் துடிப்பான இளைஞன். ஒருநாள் தன் கிராமத்திற்குச் சென்று ”நான் சென்னையில் ஒரு வீடு வாங்கப் போகிறேன். 5 லட்சம் பணம் தாருங்களப்பா..” என்று தன் தந்தையிடம் கேட்டான். அதற்கு அவர்,”இன்னும் உனக்குத் திருமணமே ஆகவில்லை! அதற்குள் என்ன அவசரம்?” என்றார். "இப்பொழுது வாங்கினால் 30 லட்சத்தில் வாங்கிவிடலாம். பிறகு வாங்கினால் குறைந்தது 60 லட்சம் தேவைப்படும். தினம் தினம் விலை ஏறி கொண்டே போகிறது" என்றான். யோசித்த அப்பா,” சரியான முடிவு தான். ஆனால் நான் ஒரு விவசாயி, உன்னை படிக்க வைக்க வாங்கிய கடனை உன் சம்பளத்தில்தான் அடைக்க ஆரம்பித்து இருகின்றோம்.திடீரென்று 5…
-
- 1 reply
- 1.5k views
-
-
லூக்கா 22:34 அ. முத்துலிங்கம் ஏசு அவனை நோக்கி: பேதுருவே, இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை அறிந்திருக்கிறதை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். ஆரம்பத்தில் ஒரு துவக்கு இருந்தால் நல்லாயிருக்கும் என்ற எண்ணம் மார்செலாவுக்கு எழவே இல்லை. கனடாவில் அவளுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகத்தான் ஆரம்பித்தது. ஒரு முடி திருத்தகத்துக்குப் போனால்கூட முதலில் உங்கள் உயரத்துக்கு ஏற்ப நாற்காலியை ஏற்றி இறக்குவார்கள். திருமணத்தில் அப்படி ஒன்றும் செய்வதில்லை. முதல் ஆறு மாதம் சுமுகமாகப் போனது. அதன் பின்னர்தான் தொடங்கியது. காலையில்தான் அவளுக்கு அடி விழும். மற்ற வீடுகளில் நடப்பது போல மாலையில் கணவன் குடித்துவிட்டு வந்து அடிப்பதில்லை. அலுவலகத்துக்குப…
-
- 0 replies
- 767 views
-
-
கொம்பியூட்டர் படிக்க போன விசுகு....... அது 1995 இல். ஒரு விளம்பரம் பார்த்தன். தமிழில் கணணிப்படிப்பு, விளக்கங்கள், செய்கைகள்....... என்று. அப்போ இரண்டு நேர வேலை. ஆனால் தெரிந்து கொள்ளணும். இது ஒரு காலத்தில் உலகத்தையே ஆட்டிப்படைக்கப்போகிறது என்ற தூரநோக்கு வேறு. 1982இல் பம்பலப்பிட்டியில் கீபோட்டு பழகியாச்சு அதனால் சுலபம் என்று மனைவியிடம் தருணம்பார்த்து தலையணை மந்திரம் போட்டு வென்றாகிவிட்டது. (இது தான் எனக்கு மிகவும் சுலபமாக வேலையும் கை வந்த கலையும்.) வகுப்பும் தொடங்கியாச்சு. கொம்பியூட்டர் வாங்கினால்தான் நீங்கள் முன்னுக்கு வரலாம் இல்லையென்றால் இங்கு மட்டும் படித்து... கொஞ்சம் லேற்றாகும் என்று வாத்தி சொன்னதால் 15000 பிராங்குகளுக்கு Print…
-
- 31 replies
- 5.3k views
-
-
முருகா.... நீ ஏன் இப்படிக் கோவணத்துடன்...... இவங்கள் கொஞ்ச நாட்களாக ஓவர் ஆட்டம் போடுறாங்கள். "நான் ரண்டு வச்சிருக்கிறன்", என்றான் விஜயன். "மூண்டு என்னட்டை" என்றான் அச்சுவேலி ரமணன். "நான் எப்படியும் இந்த சனிக்கிழமை ஒண்டு வாங்கிப்போடுவன்" என்கிறான் விக்கி. ஐந்தாம் வகுப்பில் இருந்து ஆறாம் வகுப்பிற்கு வந்தால் புதுக் கொம்பாஸ் பெட்டி, கொப்பி, இலவசப் புத்தகங்கள் என்று போக இதுவும் சேர்ந்தாயிற்று. வீட்டிலே கேட்கக் கொஞ்சம் வெட்கம். மெதுவாக அம்மாவை அப்பாவிடம் காசு வாங்கச் சொன்னேன். அச்சுவேலியில்தான் இது விற்கும். "இதெல்லாம் தேவையில்லாத வேலை, கொம்மாவைக் கேட்டாத் தச்சுத் தருவா" என்று அப்பா சொல்லிப்போட்டார். சட்டை தைத்து மிஞ்சிப் போன சீததைத் துணியில் "சஸ்பென்ரர்" என்ற பெயரில் ஒன…
-
- 16 replies
- 5k views
-
-
"கிழிச்சம்" சஞ்சிகையின் முப்பதாவது ஆண்டு விழா "கிழிச்சம்", கலை இலக்கிய, மாத சஞ்சிகை என்றால் சாதாரண வாசகர்கள் தலை தெறிக்க ஓடித்தப்பி விடுவார்கள். என்றாலும் தீவிர வாசகர்கள் விட்டு விட மாட்டார்கள். ஒரு விசித்திரக் கூட்டம் நாடி, நரம்பு, இதயம் கணையம், பித்தப்பை எல்லாவற்றிலும் இலக்கியம் பரவி இனித்தப்ப முடியாது என்ற ஒரு நிலையில் இருப்பது எல்லாருக்கும் தெரிந்திருக்க நியாயம் இல்லை. இவர்கள்தான் தீவிர இலக்கிய வாசகர்கள். 2013 தை "கிழிச்சம்" இதழில் வந்த ஒரு 'படைப்பு'க் கீழே. ஏம்பிச் சலித்து எழுந்து, "ஆவ் என்று கொட்டாவி விட்டான். கச கச என்று வியர்வை உடம்பெல்லாம் வழிந்து ஓடியது. பாயைச் சுருட்டிக் கதவுக்குப் பின் வைத்தான். பாயிருந்தவிடத்தில் பத்திருவது சிற்றெறும்புகள் ஓடின. கரப்பா…
-
- 2 replies
- 1.1k views
-
-
# நம் மனமும் இக்கதையைப் போலதான்! கோவணம்! எல்லாவற்றையும் துறந்து விடு என்று ஒரு குரு சொல்லக் கேட்டு ஒரு சிஷ்யன் ஒரே ஒரு தவிர்க்க முடியாத கோவணத்துடன் ஊருக்கு வெளியே வாழ்ந்து வந்தான். அந்தக் கோவணத்தை அடிக்கடி எலி கடித்து விட்டது. ஊரார் என்ன இது? இவ்வாறு கந்தலாகக் கோவணம் கட்டியிருக்கிறாயே என்று கேட்க "எலி கடித்து விட்டது" என்று பதில் சொன்னான் அவன். ஊரார், "அந்த எலியிடமிருந்து பாதுகாப்பிற்காக ஒரே ஒரு பூனை வளர்க்கலாமே?" என்றார்கள். அவன் பூனை வளர்க்கத் தொடங்கினான். பூனைக்குப் பால் தேவையாக இருந்தது. இல்லாவிடில் அது எலியைக் கடிக்க மறுத்தது. பாலுக்காக ஊரில் பிச்சை எடுக்க ஆரம்பித்தான். ஊரார், "ஒரே ஒரு பசுமாடு தருகிறோம். தினம் தினம் இங்கே வராதே" என்று பசு மாட்டைத் தானமாக …
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறு வயதிலிருந்தே திருமாறனிற்கு போராட்டம் பற்றிய அக்கறை இருந்தது. விபரம் தெரியாவிட்டாலும் இங்கு நடக்கின்ற அனைத்து ஊர்வலங்களிலும் கலந்துகொள்வான். இப்படியான நிகழ்ச்சிகள் அவனிற்கு நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடிக்க ஒரு சந்தர்ப்பமாகவே தெரிந்தது. காலப்போக்கில் போராட்டம் பற்றிய அறிவும் தேடலும் அதிகரித்தது. கடமைக்காக பங்குபற்றிய காலம் போய் உணர்வுடன் பங்குபற்றிய காலம் வந்தது. திருமாறனும் நண்பர்களும் பங்குபற்றாத நிகழ்ச்சிகள், போராட்டங்கள் என்று எதுமே இல்லையெனலாம். தமிழ் பாடசாலை முதல் கோயில் வரை விடுதலைப்போராட்டம் கிளைகளாய் பரந்திருந்த காலம் அது. எங்கும் தமிழன் எதிலும் தமிழன் என்பது அந்த காலகட்டத்திற்கு பொருந்தும். நாம் பலமாக இருந்த காலம் அது. இந்த நிலை 2009ஆம் ஆண்டு மெதுவாக…
-
- 9 replies
- 2.2k views
-
-
புலமைப்பரிசில் பரீட்சையில் நான்கு புள்ளிகளால் சித்தி எய்த தவறுகிறாள் தாரணி. அந்தக் கவலையின் மத்தியிலும்.. தொடர்ந்து ரீயுசனுக்கு ஓடிஓடிப் படித்தே வந்தாள். பிரபல.. பாடசாலை புகுமுகப் பரீட்சை ஒன்றிற்காக தோற்றுவதற்காகவே அந்தப் படிப்பு. 10 வயதே தாண்டி இருந்தவளின் முதுகிலும் தலையிலும்.. சுமைகள் என்பதே அதிகமாக இருந்தது. அவளால் அந்த வயதை சுமையாக உணர முடிந்ததே தவிர சுகமாக உணர முடியவில்லை. எப்படா இந்த 5ம் ஆண்டு தாண்டிப் போகும் என்பதே அவளின் நினைவாக இருந்தது. 5ம் ஆண்டை தாண்டிய பின் வர இருக்கும் சோதனைச் சுமைகள் பற்றி அவள் அன்று அறிந்திருக்கவில்லை என்பதால்.. 5ம் ஆண்டு தாண்டினாலே போதும் என்பது தான் அவளின் எண்ண ஓட்டமாகவே இருந்தது. ஒருவாறு.. அந்தப் புகுமுகப் பரீட்சைக்கான நாளும் வர…
-
- 4 replies
- 3.5k views
-
-
எனக்கு றொனியனின் ஞாபகம் இப்பொழுது தான் வந்தது . நான் வந்து இவ்வளவு நேரமாகியும் அதைக் காணவில்லை . அம்மாவின் அரவணைப்பில் , மரக்கறி உணவையே உண்டு வளர்ந்த சுத்த வீரன் றொனியன் . ஒழுங்கையில் யாரும் அவனுடைய அனுமதியில்லாமல் போகமுடியாது . மீறினால் வயிற்ருப்பிடி தான் ஆள் அரக்காது . தங்கைச்சி பகலில் பள்ளிக்கூடம் போனால் றொனியன் தான் அம்மாக்கு காவல் வீரன் . அம்மா என்னுடன் கதைக்கும்பொழுது , றொனியனப்பற்றி கதைக்காவிட்டால் அவாக்குப் பத்தியப்படாது . ஒருநாள் தங்கைச்சியைக் கொண்டு றொனியனைப் படம் எடுத்து எனக்கு அனுப்பியிருந்தா . அப்பொழுது தான் எனக்கு றொனியனின் ஆழுமை தெரிந்தது . அவன் மண்ணிற நிறத்தில் , நெடிய உருவத்தில் , அம்மாவின் ஊட்டத்தால் நல்ல செளிப்பாக இருந்தான் . நான் தங்கைச்சியைக் கூப்பிட்…
-
- 8 replies
- 1.6k views
-
-
இந்த மரத்தின் கதையைக் கேளுங்கள்..(முழுவதுமாகப் படிக்கவும் ) சில வருடங்களுக்கு முன், ஒரு அழகான ஊரில் ஒரு பெரிய ஆப்பிள் மரம் இருந்தது. அந்த மரத்துடன் விளையாடுவதையே ஒரு சிறுவன் வழக்கமாக கொண்டிருந்தான்.தினமும் அந்த மரத்தை பார்க்க கண்டிப்பாக வந்திடுவான்.அந்த மரமும் அவனுடன் விளையாடி மகிழ்ந்தது. ஆப்பிள்களை பறித்து விளையாடுவது ,மரக்கிளையில் தொங்குவது, மரத்தைக் கட்டிக் கொள்வது என்று சின்ன சின்ன குறும்புகள் செய்து விளையாடிக் கொண்டிருந்தான். அவனை பார்க்கும் போதும், அவனுடன் விளையாடும் போதும் அந்த மரத்திற்கு அளவற்ற மகிழ்ச்சி. சிறுவன் கொஞ்சம் பெரியவன் ஆனதும் ஒரு நாள் மரத்தை பார்க்க வந்தான்.அவனை பார்த்ததும் மரம் "வா வந்து என்னுடன் விளையாடு " என்று ஆசையாக அழைத்தது. சிறுவன் "இல்…
-
- 0 replies
- 1.1k views
-
-
சுந்தரேசன் வீடு கலகலப்பாக இருந்தது. அவரது ஒரே பெண்ணான ஹரிணிக்கு அன்று, பெண் பார்க்கும் வைபவம். "அப்பா, ஒவ்வொருத்தரா வந்து பார்த்துட்டு போறதுக்கு, நான் ஒண்ணும் பொருட்காட்சி இல்ல. ஒரு பையன பாருங்க, குடும்பத்த விசாரிங்க; என் போட்டோவ காட்டுங்க. எல்லாம் புடிச்சிருந்தா... பெண் பார்க்க வரட்டும்...' என்று, ஹரிணி கறாராக சொல்லியிருந்தாள், அதன்படியே, அவரது மருமகளின், தூரத்து உறவினரான ரமேஷ் பற்றி, சுந்தரேசனுக்கு தெரிந்தது. கொஞ்சம் தெரிந்த இடம் என்பதால், மருமகள் மூலமாகவே விசாரித்து, மற்ற விவரங்களை சேகரித்து, கடைசியில் ரமேஷையும் நேரில் பார்த்தார். பையன் களையாக இருந்தான். அப்பா இல்லை; அம்மா மட்டும். சொந்த வீடு, கை நிறைய சம்பளம்; அதுவும், ஒரு பெரிய நிறுவனத்தில். ஹரிணியின் போட்டோவைப் …
-
- 1 reply
- 1.2k views
-
-
நாம் வாழ்வும் பண்பாடும் கலாச்சாரம் என எமக்கான தனி அடையாளங்களுடன் வாழ்ந்த இனம் இப்பொழுது பயணிக்கும் பாதை மிக கவலையானது எமக்கான அடையாளங்களை தொலைத்து நாம் என்ன லாபம் அடைய போகிறோம் ஒரு சாதாரண கைபேசியில் தொடங்கி வீட்டு கழிவறைக்கு போடும் செருப்பு வரை என்னுடையது விலை மதிப்பாக இருக்க வேணும் என்பதே எமது எண்ணம் ஆகி இருக்கு கலக்சி போனில் அல்லது ஐபோனில் என்ன இருக்கு அதை பயன் என்ன பாவனை திறன் என்ன என்றுகூட அறியாது நான் மார்க்கான ஒரு போன் வைத்துள்ளேன் என்பதில்தான் என் கௌரவம் அடங்கி இருக்க என போகிறது வாழ்க்கை வருமானத்துக்கு மேலக செலவுகளும் பிழைகளுக்கு நாங்கள் ஊரில பில்கேஸ் என நீட்டி முழங்கி கதைகள் சொல்லி எங்கள சுயங்களை அவர்களுக்கு விளக்காது ஒரு கனவு உலகத்தில் பயணிக்க செய்வதால…
-
- 5 replies
- 1.5k views
-
-
பாடசாலை விட்டு வந்த சுஜீவன் அறையின் மேசையில் கிடக்கும் கடிதத்தைப் பார்க்கிறான். இது அண்ணன் கையெழுத்தாச்சே என்று எதிர்பார்ப்பை வளர்த்தபடி அவசர அவசரமாக கடிதத்தை பிரித்துப் படிக்கிறான். படித்தவன் கண்களில் நீர் வடிய மூலையில் சாய்கிறான். சுஜீவன் 12 வயசுச் சிறுவன். போரின் விளைவால் அனாதையாகிவிட்டவன். உறவினரோடு தங்கித்தான் வாழ்கிறான். எதிர்காலம் என்பது அவனைப் பொறுத்தவரை நிச்சயமில்லாததாகி விட்டது. சசி சுஜீவனின் அண்ணன். அவர்கள் இருவருமே குடும்பத்தில் மிஞ்சி உள்ளனர். தாயும் தகப்பனும் சில ஆண்டுகள் முன்னர், யாழ் குடாவில் கிளாலிக் கடற்பரப்பில் பயணிக்கும் போது, சிங்களக் கடற்படை பயணிகள் படகுமீது நடத்திய தாக்குதலில் படகோடு காணாமல் போனவர்கள் தான். இன்று வரை அவர்களின் கதி என்னவென்று யாருக…
-
- 2 replies
- 762 views
-
-
நித்திரை கொண்டிருப்பதே தெரியாமால் கொண்டிருந்த நித்திரை தானாகவே அவனை குழம்பியது.இருட்டில் இப்ப நேரம் என்ன என்று திண்டாடி சுவரில் இருந்த மணிக்கூட்டில் இருந்த கம்பிகளை அனுமானிக்க கண்ணை கொண்டு எத்தனை சித்து விளையாட்டுகள் செய்தாலும் முடியவில்லை.கொஞ்ச நாளாக இப்படித்தான் கொஞ்ச காலமாக குழப்புகிறது இந்த நேரத்தில் அந்த நேரம் தான் இப்பவாக இருக்க கூடும் என்று நினைத்தவன் . என்ன நேரமாக இருந்தாலும் வழமையாக எண்ணங்களோடு போராடி கொண்டு நித்திரைக்கு முயன்று திருப்ப படுப்பது போல இன்று செய்வதில்லை என்று தீர்மானித்தான்.சோம்பலை கஸ்டப்பட்டு முறித்துக்கொண்டு தூரத்தில் சுவரில் இருந்த சுவிட்சை தடவி தேடி அமிழ்த்தினான் .வெளிச்சமும் அவனைப் போலவே சோம்பலை முறித்து கொண்டு எழும்புவது போல மெது மெத…
-
- 15 replies
- 2.4k views
-
-
சிட்னியில இருக்கிற குமர்கள்,குமரங்கள்,கிழடன்கள்,கிழடிகள்,நடுவயதானர் ஒருவித அருட்டப்பட்ட நிலையில் இருக்கிறார்கள் .காரணம் என்ன தெரியுமோ இளைய தளபதி விஜய் எங்கன்ட சிட்னியில நிற்கிறார் எனபதுதான். தலைவா படப்படிப்பு சிட்னியில் நடைபெறுகிது. கமராவுக்கு முன்னாள் நின்று இளை தளபதி இலையான் கலைப்பது போல் கையை,காலை ஆட்டினால் கோடியாக பணம் அவரது வங்கியில் போய்சேரும். எங்களுக்கு என்ன வரும் ?????? "தம்பி என்னை ஒருக்கா கூட்டிகொண்டு போறியேடா”, "எங்கன ஆச்சி கோவிலுக்கோ? பஜனைக்கோ? அல்லது எவனாவது புது சாமிமார்,சாத்திரிமார் இந்தியாவில் இருந்து வந்திருக்கிறானோ " "இல்லையடா தம்பி எங்கன்ட தளபதி விஜய் தலைவா பட சூட்டின் சிட்னியில் எடுக்கிறாங்கள் அதுக்கு வந்திருக்கிறார்" நான் எம்.ஜி.ஆர்…
-
- 27 replies
- 3.3k views
-
-
கச்சாமி கண்டி நகரத்திலிருந்து வடமேற்காக நாற்பது கிலோ மீற்றர்கள் தொலைவிலிருந்த புராதன புத்த விகாரையைச் சுற்றிப் பார்த்துவிட்டு நானும் கெய்லாவும் வெளியே வந்தபோது எங்களையே பார்த்துக்கொண்டு இரண்டு பொலிஸ்காரர்கள் வீதியில் நிற்பதைக் கண்டேன். நானும் கெய்லாவும் செருப்புகளை அணிந்துகொண்டு வீதிக்கு வந்தபோது, வீதியில் சனங்களும் கூடிநின்று எங்களையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதுவொரு மிகச் சிறிய நகரம். புத்த விகாரையைச் சுற்றியே அந்த நகரம் அமைந்திருந்தது. விகாரையின் முன்னால் ஏழெட்டுக் கடைகள் இருந்தன. அந்தப் பொலிஸ்காரர்கள் இருவரும் ஏதோ காரியமாகத்தான் எங்களையே கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் என எனது உள்ளுணர்வு சொல்லியது. வரப்போகும் பிரச்சினைகளை முன்கூட்டியே அனுமானிக்கும் எ…
-
- 8 replies
- 1.5k views
-
-
அன்று ஒரு நாள் ஒர் முந்திரிகை தோட்டத்தில் முந்திரிகை காய்த்தி குலுங்கியது.அங்கு ஒரு செம்மறி தோல் போர்த்த நரி வந்தது. மிகுதி நாளை எதிர்பாருங்கள்.
-
- 9 replies
- 1.7k views
-
-
(பள்ளிநாட்களில் துணைப்பாட நூலில் படித்த இந்தக் கதை மனதில் பதிந்துவிட்டது. என்னால் முடிந்தவரை மொழிபெயர்த்திருக்கிறேன்.) 'தழும்புள்ள மனிதன் ' சாமர்செட் மாம் தமிழில்: வெ.சந்திரமோகன் பெரிய பிறைப் போல நெற்றியின் ஓரத்திலிருந்து தாவாங்கட்டை வரை ஓடிய பெரிய சிவப்புத் தழும்பு தான் அவனை கவனிக்கச் செய்தது. கடுமையான காயம் ஒன்று தான் இந்தத் தழும்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். ஒரு பட்டாக் கத்தி அல்லது செல்லின் ஒரு துண்டாக இருக்கக்கூடும். வட்டவடிவமான, பெருத்த, நல்ல சிரிப்புடன் கூடிய முகத்துக்கு அது பொருத்தமாயில்லை. சிறிய, கவனம் ஈர்க்காத தன்மைகளுடன் அவன் இருந்தான். கபடமில்லாத முகக் குறிப்பு. அவனது பெருத்த உடலுக்கு அந்த முகம் பொருந்தாமல் தோன்றியது. நல்ல வலு…
-
- 0 replies
- 967 views
-