கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3073 topics in this forum
-
அது 1988 ஆம் ஆண்டின் ஒரு சனிக்கிழமை "இண்டைக்குப் பள்ளிக்கூடமில்லை, சுண்ணாகம் லைபிறறிக்குப் போனால் தினத்தந்தியில் இருந்து பொம்மை, குமுதம் எல்லாம் வாசிக்கலாம்" என் உள்மனது துரத்த, அப்பா தன் மதிய உணவை உண்ட களைப்பில் கட்டிலில் மதிய நேரத்துக் கோழித்தூக்கம் போடும் நேரம் பார்த்து அவரின் பி.எஸ்.ஏ சைக்கிளை எடுத்துக் கொண்டு சத்தம் கேட்காதவாறு மிதிக்கிறேன். அம்மா முத்துலிங்க மாமா வீட்டுப் பக்கம் போயிருப்பா அவ இருந்தால் சுண்ணாகம் பக்கம் எல்லாம் போக விடமாட்டார் என்ற அவநம்பிக்கை வேறு. அம்மா பயப்பிடுவதில் காரணம் இல்லாமல் இல்லை. 1987 ஆம் ஆண்டு இந்தியன் ஆமிக்கும் புலிகளுக்கும் சண்டை மூண்ட பிறகு ஒவ்வொரு நாளும் கே.கே.எஸ் றோட்டுப் பக்கம் போறதே பெருங்காரியம் தான். எப்ப என்ன நடக்…
-
- 0 replies
- 811 views
-
-
செருக்கைத் துறந்த சுகர் நான் எனது என்ற செருக்குக் கொண்ட மனிதனை யாரும் அண்டுவதில்லை. செருக்குக் கொண்ட மனிதன் தனித்து விடப்படுகிறான். ஆனால் செருக்கு அகன்று தன்னை உணர்ந்து பிறரை மதிப்பவன் மேன்மகனாகப் போற்றப்படுவான். அப்படிச் செருக்குக் கொண்ட சுகரைப் பற்றியும் தன் செருக்கை அவர் அகற்றி மேன்மகனாக ஆனது பற்றியும் பார்ப்போம் குழந்தைகளே. பதினெண்புராணங்களையும் இயற்றியவர் வேத வியாசர். அவர் ஒரு முறை பச்சைக்கிளி உருவில் இருந்த கிருதாசீ என்ற தேவ கன்னிகையின் மேல் விருப்பம் கொண்டதால் அவர்களுக்கு சுகப் பிரம்மர் என்ற குழந்தை பிறந்தது. தாயைப் போல சுகப் பிரம்மருக்கும் மூக்குக் கிளிமூக்குப் போல அமைந்து இருந்தது. இளம் வயதிலேயே அறிவுக்கூர்மை மிக்கவராக விளங்கினார் சுகர். ஆ…
-
- 3 replies
- 1.6k views
- 1 follower
-
-
செருப்.........பூ ...(காலணி ).. மனிதனுக்கு அன்றாடம் தேவையான பொருட்களில் ஒன்று. இதன் பலன்கள் பெருமை பல கோடி.........காலுக்கு பாதுகாப்பு ........மழை ....குளிர் ...வெப்பம்.... முட்கள் ...அழுக்குகள் என்று .........ஆனால் இதற்கு மதிப்பு என்னவோ ?........இத்தனைக்கும் சுமை தாங்கியாய் உற்ற தோழனாய் நம்மோடு தொடர்ந்து வருகிறது. இந்த பாதணி. ஆரம்ப காலத்தில் மிதியடிக்கட்டை என்றும்...செருப்பு என்றும் காலணி..... பாத அணி ......என்றும் அழைக்க பட்டது. இதன் அமைப்பு ..வண்ணவண்ணமாய் ...நிறங்களாய் ..ரகங்க்களாய்...இதன் அலங்காரம் சொல்லி முடியாது. காலத்தின் தேவைக்கேற்ப மாறு படும். சில சமயம் புதுசாய் இருக்கையில் காலையே ( கடித்து )வலிக்க செய்து விடும். இன்டர் வியூ சமயத்தில் சங்கடம் தந்த சம…
-
- 4 replies
- 1.3k views
-
-
அழகான மாடி கட்டிடம் அதை சூழ மாமரங்கள்,தென்னை மரங்கள் என்று ஒரே சோலை வனம் தான்.ரோஜா மலர்,அலரி மலர்கள் செவ்வரத்தம் மலர்கள் பல வித வண்ணங்களிள் பூத்து குலுங்கும் இதற்கு சொந்தகாரர் ஒரு வெள்ளைகார சாமியார் அவருடன் ஆங்கிலம் தெரிந்த ஜயரும் வசித்து வந்தார்கள். சுரேஷின் தந்தை அந்த ஊரில் வேலை மாற்றலாகி வந்தவுடன் அந்த மாடி வீட்டிற்கு அருகாமையில் வீடு வாடகைக்கு எடுத்து கொண்டார்.சுரேஷ் சிறு பையன் அப்பொழுது.வீட்டிற்கு குடிபெயர்ந்த அடுத்த நாள் மாடிவீட்டில் ஒரே மக்கள் கூட்டம் அலை மோதுவதை கண்டவனுக்கு அங்கு செல்ல வேண்டும் போல தோன்றவே பெற்றோருடன் அனுமதி பெற்று கூட்டத்துடன் கூட்டமா சென்றான்.வெளியே மதிய உணவிற்காக ஏழைகள் காத்து கொண்டிருந்தார்கள் உள்ளே உயர் குடி மக்கள் உணவருந்தி கொண்டிருந்தா…
-
- 14 replies
- 2.8k views
-
-
-
- 47 replies
- 5.2k views
-
-
செல்லக் கிறுக்கி - சிறுகதை வரவணை செந்தில் - ஓவியங்கள்: ஸ்யாம் காய்கறி மூட்டைகளுடன் முன்னால் சென்றுகொண்டிருந்த `சின்ன யானை’யின் இன்ஜின் ஆயிலை மாற்றிப் பல ஆண்டுகள் ஆகியிருக்கும்போல. அதன் டிரைவர் கியர் மாற்றும்போதெல்லாம், எதிரியிடமிருந்து தப்பிக்கவென கணவாய் மீன்கள் பீய்ச்சும் கறுப்பு மையைப்போல சைலன்சரிலிருந்து குப்பென்று கரும்புகைப் பந்து வெளியாகி, ஒரு கணம் நின்று, பின் காற்றில் கலந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு முறை வீடு மாறும்போதும், `இதுதான் கடைசியாகப் போகும் வாடகை வீடு’ என்று மனம்நிறைய நினைத்துக்கொள்ளும் நம்பிக்கை இப்போதும் இருந்தது. `விரைவில் சொந்த வீடு வாய்க்கவிருக்கிறது’ என்ற குரலை, `உங்களை ஏற்றுக்கொள்ளும் பட்டினத்தில் அவர்கள் உங்கள் முன் வைப்பதைப…
-
- 0 replies
- 3.2k views
-
-
செல்லமடி நீ எனக்கு யாரைத் தன் வாழ் நாளில் இனிச் சந்திக்கக் கூடாது என்று எண்ணி இருந்தாளோ யாருக்காகத் தன் ஊரையும் உறவுகளையும் தூக்கி எறிந்து விட்டு தனிமையை நாடி வந்தாளோ யாருடைய வாழ்க்கையில் சந்தோச சாரல் வீச வேண்டும் என்பதற்காக தன் மனதையே கல்லாக்கிக் கொண்டு ஒரு பிரமச்சாரி வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தாளோ இன்று அவனையே சந்திக்க வேண்டியதாயிற்று. ஏறத்தள ஒரு வருடம் அவள் போராடியதெல்லாம் அவனைப் பார்த்த அந்தக் கணத்திலேயே வீணாகிப் போயிற்று. சுதன் அவளை இந்நிலையில் எதிர் பார்க்கவில்லைத்தான்… அவள் தன்னை மறந்து வாழ்ந்தாலும் எங்கோ ஓர் மூலையில் நல்லபடியாய் வாழ்கிறாள் என்றுதான் என்ணியிருந்தான். அவள் தனக்குத் துரோகம் செய்திருக்க மாட்டாள் என்பது அவனுக்கு நன்றாகத் தெ…
-
- 7 replies
- 1.9k views
-
-
செல்லம்மாப்பாட்டி. (சிறுகதை) செல்லம்மா பாட்டிக்கு வாடிக்கை யாளர்கள்ரஎல்லாம் சின்னப் புள்ளைங்க தான் காலங்காத்தால அஞ்சுமணிக்கி அடுப்புப்பத்தவைச்சி குழிப்பணியாரம் இட்லி சூடா பாசிப்பருப்பு சாம்பார் தேங்காசட்ணி காரச்சட்டிணியோட தெருவோரத்துல கடைபோட்டுருக்கும் சின்னபுள்ளக கொடுவாய் கூடக்கழுவாம தூக்குபோணியும் காசுமா வந்து நிக்கும் அப்பத்தா எனக்கு ரெண்டு இட்லி மூணுபணியாரம்ன்னு. அவுகளோட அம்மா மாருக செலபேரு கூட வருவாக செலபேரு புள்ளகிட்ட குடுத்து விட்டுருவாக. பல்லக் கூடவெளக்காம பிள்ளக பணியாரம் வாங்க வந்துடும். ச…
-
-
- 2 replies
- 1.1k views
-
-
செல்லம்மாளுக்கு அப்பொழுதுதான் மூச்சு ஒடுங்கியது நாடியும் அடங்கியது. செல்லம்மாள் பெயரற்ற வெற்றுடம்பு ஆனாள். அதாவது பதியின் முன்னிலையிலே, உற்றார் உறவினருக்கு ஐந்நூறு அறுநூறு மைல் தூரத்திலே, பட்டணத்துத் தனிமையிலே மாண்டு போனாள். நெற்றியில் வியர்வை ஆறாகப் பொழிந்து கொண்டிருந்த பிரமநாயகம் பிள்ளை, கையிலிருந்த தவிட்டு முடிப்பைச் சற்று எட்ட வைத்துவிட்டு, செல்லம்மாளாக இருந்த அந்த உடம்பைப் பார்த்துக் கொண்டிருந்தார். சற்று அரைக்கண் போட்ட படி திறந்திருந்த இமைகளை மூடினார். அங்கொன்றும் இங்கொன்றுமாக வசமிழந்து கிடந்த கைகளை எடுத்து நெஞ்சின் மேல் மடித்து வைத்தார். இடது கால் சற்று ஒரு புறமாக மடிந்து கோணியிருந்தது. அதை நிமிர்த்தி, இரண்டு கால்களையும் சேர்த்து வைத்துக் கிடத்தினார். வாய…
-
- 0 replies
- 552 views
-
-
அறிமுகம் அனைவருக்கும் வணக்கம்! "போர் உலா" என்ற நூலை எழுதிய மாவீரன் கப்டன் மலரவனுக்கு(லியோ) (காசிலிங்கம் விஜிந்தன், யாழ்ப்பாணம்) இந்த செல்வன் தொடர்கதையை கண்ணீர்க் காணிக்கையாக சமர்ப்பிக்கின்றேன். கதையில் ஏதாவது குற்றங்கள், குறைகள், இலக்கணம் மற்றும் எழுத்துப்பிழைகள், மற்றும் வேறு ஏதாவது தவறுகள் இருந்தால் அடியேனை பொறுத்து அருளும்படி மாண்புமிகு வாசகர் பெருமக்களை பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன். நன்றி! அன்புடன், கலைஞன் குறிப்பு 01: இங்கு வரும் பல பாத்திரங்களிற்கு யாழ்கள உறவுகளின் பெயர்களே வைக்கப்பட்டுள்ளது. உங்கள் பெயரிலும் ஒரு பாத்திரம் இங்கு உருவாக்கப்படுவதை நீங்கள் விரும்பினால் கீழே உள்ள இணைப்பை சொடுக்கி அங்கு உங்கள் விருப்பத்தை எழுதிவிடு…
-
- 37 replies
- 9.1k views
-
-
செவத்தகன்னி - சிறுகதை சிறுகதை:சிவக்குமார் முத்தய்யா, ஓவியங்கள்: ஸ்யாம் காற்றில் சாசுவதமாக கைகளை அசைத்தபடி நடக்கத் தொடங்கினாள் செவத்தகன்னி. பொழுது மெள்ள ஏறிக்கொண்டிருந்தது. பொழுதுக்கும் அனலாகக் கொட்டித்தீர்த்த வெயில் குறைந்து, தெற்கே இருந்து மெல்லிய காற்று வேப்பம்பூக்களின் வாசனையோடு வீசியது. சைக்கிள் பஞ்சர் ஆகிவிட்டிருந்தது. அதை எடுத்துக்கொண்டும், ‘முக்கூட்டில்’ இருக்கும் சலீம்பாய் கடையில் மளிகை சாமான்கள் வாங்கிக்கொண்டும் வரவேண்டும் எனக் கிளம்பியிருந்தாள். முக்கூட்டுக்கும் ஓர்ச்சேரிக்கும் மூன்று மைல் தூரம். இதைக் கடந்துதான் டவுனுக்குப் போக வேண்டும் என்பதால், முக்கூட்டில் இருந்துதான் நாலு ரோட்டுக்கு பஸ் பிடித்து, 20 மைல் தொலைவில் உள்ள தஞ்சாவூருக்கு…
-
- 0 replies
- 3.4k views
-
-
செவலைகள் தொலைந்த இடம் - சிறுகதை ஏக்நாத் - ஓவியங்கள்: ரமணன் மூன்று நாள்களாக செவலைப் பசுவைக் காணவில்லை. தேடித் தேடிக் களைத்துப் போய்விட்டார், புனமாலை. `பய மாடு எங்கு போயிருக்கும்?’ பெருங்கவலை தேடி வந்து உட்கார்ந்துகொண்டது அவர் முகத்தில். சோறு தண்ணீர் சரியாக இறங்கவில்லை. எதையோ பறிகொடுத்தவர்போல அல்லாடுகிறார், அங்கும் இங்கும். மனம் ஒரு நிலையில் இல்லை. இப்போதுகூட பாப்பான்குளத்தில் தேடிவிட்டு வந்துகொண்டிருக்கிறார். களைப்போடு கவலையும் சேர்ந்துகொள்ள அவருக்கு அசதியாக இருக்கிறது. செவலையை உடனடியாகப் பார்க்க வேண்டும் என்று துடிதுடிக்கிறது மனசு. `எங்க கெடந்து என்ன பாடுபடுதுன்னு தெரியலயே’ என்று நினைத்துக்கொண்டார். தூரத்…
-
- 1 reply
- 2.7k views
-
-
வைகாசி பிறந்தவுடன் தலைக்கச்சான் தொடங்கிவிடும். தென்மேற்குத் திசையிலிருந்து சீறிக்கொண்டுவரும். சித்திரை வெயில் புழுக்கத்தில் கிடந்தவர்களுக்கு சீதளக்காற்று சுகமாகத்தான் இருக்கும். ஆனால் அடுத்த வாரமே வெம்மை கூடிவிடும். மரங்களைத் தலைவிரித்தாட்டிவிடும். பூவையும் பிஞ்சுகளையும் விழுத்திவிட்டு வாழை இலைகளை நார் நாராகக் கிழித்துவிடும். கானல் பயிர்கள் விளைந்து முற்றி விழுவதும் இந்த நாட்களில்தான். வட்ட விதானையின் மனைவி, அம்பலவி மாமரத்திற்கு கீழ் நின்று வேதனையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். இலைகொள்ளாமல் பிடித்திருந்த பிஞ்சுக் காய்களை புரட்டி எடுத்து விழுத்திவிட்டிருந்தது. நூற்றுக்கணக்கான பிஞ்சுகள் விழுந்து, மண்ணில் புரண்டு கிடந்ததை நெஞ்சு பதறப் பார்த்தாள்……. பனையாற்றுக்கு மேலே நாணல்…
-
-
- 1 reply
- 366 views
- 1 follower
-
-
சேர்! என்னைக் கல்யாணம் கட்டுங்கோ. உங்களை நான் கவனமாகப் பார்த்துக் கொள்வேன்! கனடா ஈழ….. ஒரு காலத்தில் இந்த வார்த்தைகளைச் சொன்னவளைத் தான் கணவன் பிள்ளைகள் மாமன் மாமி என்று ஒரு கூட்டமாக இன்று கனடா பெரிய பிள்ளையார் கோவிலில் காண்கிறான் சத்யா. அவனுக்கு அது அதிர்ச்சியாக இருக்கவில்லை. எனக்கே கல்யாணம் கட்டும் வயதில் பிள்ளைகள் இருக்கும் போது நான் காதலித்தவளுக்கு இருக்காதா என்ற எண்ணமே அவன் மனம் முழுவதும் வியாபித்து இருந்தது. கோவில் உட்பிரகாதத்தை சுற்றி வரும் போது அவள் மூன்று முறை திரும்பிப் பார்த்துவிட்டாள் கூட வந்தவர்களுக்குத்; தெரியாமல். அவள் கதைக்க விரும்புகிறாள் என்பதை இதழ் ஓரத்தில் தோன்றி மறைந்த புன்னகை இருமுறை சொல்லிக் காட்டிவிட்டது. ஆனால் அந்தப் பு…
-
- 6 replies
- 2k views
- 1 follower
-
-
சேவலும் முயலும் சேவலும் முயலும் நீண்டகால நண்பர்கள். அடர்ந்து செறிந்த பற்றைக் காட்டில் அடிக்கடி சந்தித்து, இருவரும் ஒன்றாகவே இரைதேடி அலைவார்கள். அன்று நீண்டநேர அலைச்சலின் பின்னர் களைப்பாறவென்று, பச்சைப் பசேலெனக் கிளைபரப்பி வளர்ந்திருந்த புன்னைமர நிழலை நாடிச் சென்ற இருவருக்கும் ஆச்சரியம் ஒன்று காத்திருந்தது. ஓநாயொன்று புன்னை மரத்தடியில் கண்ணை மூடி நிஷ்டையில் மூழ்கி இருந்தது! ஓநாயாரின் தெய்வீகக் கோலத்தைத் தூர இருந்தே பார்த்த சேவலும் முயலும் ஒருகணம் ஸ்தம்பித்து நின்றன. அன்பே உருவான சாந்த சொரூபியாய் தியானத்தில் சமைந்திருந்த ஓநாயாரின் திருவுருவில் தன்னை இழந்த முயலோ, பக்தி சிரத்தையோடு தன் பின்னங் கால்களில் குந்தியிருந்து, பவ்வியமாகச் சிரந்தாழ்த்தி முன்னங் கால்…
-
- 1 reply
- 605 views
-
-
சேவல் கூவிய நாட்கள் (குறுநாவல்) வ.ஐ.ச.ஜெயபாலன் (நாவல் எழுதும் முயற்சிக்கு முன்னோடியாக செக்குமாடு மற்றும் சேவல்கூவிய நாட்கள் குறுநாவல்களை எழுதினேன். கணயாழியில் வெளிவந்தது. என் நாவல் முயற்ச்சியில் உங்கள் கருத்துக்கள் ஆலோசனைகள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன் ) ஏனோ எனக்கு உருப்படியாக சிறுகதைகள் எழுத வரவில்லை. பேனா எடுத்ததுமே எனது நீண்ட வாழ்வில் கண்ட கேட்ட கருதிய எல்லாமே முந்தி அடித்துக்கொண்டு தாளில் குதித்து விடுகின்றன. அவை ஒவ்வொன்றுமே நல்ல சிறுகதையாக வளரக்கூடிய வாழ்வின் பதியங்கள்தான். எனினும் அவற்றை ஒரு சிறுகதையாக வளைத்துப் போடுவது எனக்கு இன்னமும் கைவரவில்லை. சொல்ல வந்த கதை நல்லபடி ஆரம்பித்து, சிறுகதையின் எல்லைகளைத் தாண்டிப் பெருகி எங்கெங்கோ சென்று, பின்னர் எழு…
-
- 5 replies
- 3.3k views
-
-
சைக்கிள் -தர்மினி- மூன்று பக்கங்களும் கடல்களும் ஒரு பக்கம் மணற் கும்பிகளும் என எங்கள் ஊர் ஒடுங்கியதும் சிறியதும். ஆகவே, பள்ளிக்கூடம், லைப்ரரி, ஞாயிறு தேவாலயம் என எங்கே போவதென்றாலும் (இந்த இடங்கள் தவிர வேறெங்கும் போறதேயில்லை) கால்நடை தான். போற-வாற வழிகளில் தெரிந்தவர்களுடன் கதைத்துக்கொண்டே நடப்பது. வழியில் எங்கேயாவது மாங்காய், புளியங்காய், நெல்லிக்காய் கண்டால் கல்லெறிவதோடு சரி. சைக்கிள் ஓடும் யாரைப்பார்த்தும் ஆசையே வரவில்லை. எப்பிடித்தான் ஓடுறார்களோ? என ஆச்சரியம் தான். பக்கத்து ஊரிலிருந்து விஞ்ஞானம் படிப்பிக்க வரும் ரீச்சர் தங்களைத் திட்டுவதைக் காரணமாகக் கொண்டு ரீச்சரின் சைக்கிளை என் வகுப்புப் பொடியங்கள் சிலர் ரயறை வட்டாரிக் கூரால் குத்திக் காற்றை …
-
- 1 reply
- 2.3k views
-
-
சொக்கப்பானை - கோமகன் காலம் 1987. எமது தாயகத்து காற்று வெளியிலும் , வயல் வரப்புகளிலும், வீதிகளிலும், ஒழுங்கைகளிலும் எமது சனங்களின் கதறலின் கண்ணீரை துடைத்து சமாதானம் பேசுகின்றேன் என்று வந்த சமாதானப்புறாக்கள் தங்கள் முகங்களை மாற்றி ஆயுததாரிகளான ஓர் இரவின் இருட்டும் காலம் பிந்திய கார்த்திகை மாதத்து பனிப்புகாரும் அந்த ஊரில் மண்டியிருக்க. அவைகளை விரட்டும் பணியை கதிரவன் எடுத்துக்கொண்டிருந்தான். அது அவ்வளவு சுலபமாக அவனுக்கு இருக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவனது கையே ஓங்கியிருந்தது. படுதோல்வியை தழுவிய இருட்டும்மண்டியிருந்த பனிப்புகாரும் மெதுமெதுவாக அவனிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டிருந்தன. ராமசாமிக்குருக்களின் வீட்டு மா மரத்தில் குடியிருந்த பக்கத்து வீட்டு சேவல் ஒன்று தனது முதல…
-
- 1 reply
- 1.5k views
-
-
சத்தியமாக இந்த சொக்ஸ் பண்ணுற தொல்லையை தாங்கமுடியவில்லை. மூக்குள்ளவரை சளிபோல இதுவும் நான் இந்த ஊரில இருக்கு மட்டும் என்னை விடாது போலிருக்கிறது . விதி வலியது இவ் விடயத்திலும். முதலில் பிரச்சனையை விளக்குகிறேன். கடந்த 23 வருடங்களாக நான் வாஷிங் மெசீனுக்குள் 2 சொக்ஸ் போட்டால் வாஷிங் மெசீன் ஓன்றைத்தான் திருப்பித்தருகிறது. 2 சோடி போட்டால் ஒரு சோடி மட்டும் திரும்பித் தருகிறது ஆனால் அது வேற வேற நிறத்திலிருக்கும். ஆனால் அடுத்தமுறை உடுப்புகளுவும் போது முதல் முறை காணாமல் போன சொக்ஸ் வந்திருக்கும் ஆனால் இந்த முறை போட்டது வந்திருக்காது. கல்ல கண்டா நாய கணோம் நாய கண்டா கல்ல கணோம் மாதிரி அல்லது பார்முடா முக்கோத்தினுள்ளக்குள்போன கப்பல் மாதிரி.. மாயமாய் மறைகிறது. வாஷிங் மெசீன் என்ற …
-
- 11 replies
- 9.1k views
-
-
அடுப்பங்கரையில் வைக்கப்பட்டிருக்கும், அதன் கழுத்தில் கயிறு கட்டப்பட்ட சாராய போத்தலில் சொர்ர்ர்ரென்ற சத்தத்துடன் கருப்பு தேநீர் ஊற்றப்படுகிறது. வாசலில் நிழல் அசைய அவள் தனது கையில் உள்ள தேநீர் சாயத்தை வேறு ஒரு ஜொக்கில் ஊற்றிகிறாள். சாரய போத்தலில் ஊற்றப்பட்ட சாயம் போத்தல் வாயில் வழியாக புகையை வெளியே பரப்பபுகிறது. சூடு ஆறி விட கூடாது என்பதால் அதை ஒரு சாரய மூடியில் இறுக்கமாக மூடுகிறாள் அவள். “தேயிலை துாளையா தராங்கங்க.. ஒரு மண்ணுக்கும் புரோஜம் படாது..தேயிலையே கெதினு கெடக்கும் நமக்கு எங்க நல்ல சாயம் கிடைக்கிறது..” அம்மாவின் சத்தம் கேட்டு அன்பரசு எழந்து வருகிறான். தேத்தண்ணிய ஆற்றியபடி அவனிடம் தருகிறாள். கூதல் காய அடுப்பில் மிலாறு தனலில் முன் கிடந்த பலாக்கட்டையில் அவன் உட்காந்து…
-
- 0 replies
- 299 views
- 1 follower
-
-
சொத்தையா - ஜி.தமிழினியன் சொத்தையாவுக்கு எப்போது இந்தக் குறை வந்தது? தெரியவில்லை. அதைக் கண்டுபிடிக்க டி.நாராயண ரெட்டியாலும் முடியாது. அவன் ‘அப்படி’ என்று வெளியுலகத்துக்குத் தெரியாமலிருக்க கட்டை மீசை வைத்திருந்தான். எவரும் அவன் கெத்தாக ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 ஓட்டுவதைப் பார்த்தும் பொறாமைப் பட்டதில்லை. உறுதியாகத் தெரியும் ‘கன்னிப் பருவத்திலே’ மாடும் முட்டிவிடவில்லை. ஆனாலும் அந்தக் குறை வந்துவிட்டது. மும்பை பெண்ணை விர்ச்சுவலாக கற்பழித்த தமிழக வாலிபர் கைதாவாரா? திருப்பூர், ஆக. 21: மும்பை பெண்ணை விர்ச்சுவலாக கற்பழித்த வாலிபரைத் தேடி நாளை தமிழகம் வரும் மும்பை போலீஸ் அவரைக் கைது செய்து விசாரிக்கப் போவதாகத் தெரிவித்தனர். முகநூல் திருப்பூர் அவிநாசி ரோடு கம்பன் நகரில…
-
- 0 replies
- 1.2k views
-
-
2010 ஆம் ஆண்டின் பிற்பகுதி ஒரு சனிக்கிழமை காலை நேரம் வேலையில் நிண்டு கொண்டிருந்த எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு "ஹலோ நான் ஜொனிகதைக்கிறன் உங்க university க்கு முன்னால தான் நிக்கிறன்" " நான் u .k la இருந்து விடுமுறைல இங்க வந்திருக்கன் என் நண்பன் ஒருவனை தேடி வந்தன் இப்போது அவனின்ட தொடர்பும் அட்ரஸ் ம் இல்லை எனக்கு தங்குவதற்கு கூட இடம் இல்லை நடுதெருவில நிக்கிறன்" என்ன செய்கிறதெண்டு தெரியல எண்டு அழுவாரை போல சொல்லி கொண்டே போனது மறுமுனை எனக்கோ யோசனை லண்டன்ல இருந்து ஒருத்தன் வாரான் இவ்வளவு தூரம் அட்ரஸ் போன் நம்பர் ஏதும் இல்லாமலா ஒருவரை தேடி வருவான் சரி எதற்கும் வேலை முடிச்சு போய் கதைப்பம் எண்டிட்டு அவனிடம் மேலும் சில கேள்விகள் கேட்டு அவனின் சொந்த இடங்களை பற்றி விசாரிச்சன்…
-
- 2 replies
- 2.3k views
-
-
சொந்தக்கதை: வாழ்க்கையில அவலம் வரும்... அவலம் வாழ்க்கை ஆனால்... ? இனிய வணக்கங்கள், வாழ்க்கையில நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான பிரச்சனைகளிற்கு முகம் கொடுக்கவேண்டி இருக்கிது, ஒவ்வொருவிதமான அவலங்களை சந்திக்கவேண்டி இருக்கிது. நீங்கள் உங்கட தனிப்பட்ட வாழ்க்கையிலபட்ட ஒரு பெரும் அவலத்தை நான் சிலவேளைகளில அனுபவிச்சு இருக்கமாட்டன். இதைமாதிரி நான் சந்திச்ச ஒருபெரும் அவலத்தை நீங்கள் சந்திச்சு இருக்கமாட்டீங்கள். நான் இஞ்ச உண்மைக்கதையாக சொல்லப்போறது எனது தனிப்பட்ட வாழ்க்கையில ஏற்பட்ட ஓர் நெருக்கடிபற்றிய சில எண்ணப்பகிர்வுகள். பலவிதமான பயனுள்ள தகவல்களை மற்ற ஆக்களுக்கு சொல்லலாம் எண்டுற காரணத்தாலையும், தாயக மக்கள் படுகின்ற சில கஸ்டங்களை இந்தக்கதைமூலம் சிறிது கற்பனை செய…
-
- 136 replies
- 17.2k views
-
-
சொந்தக்காரன்! - வ.ந.கிரிதரன்- - புகலிட அனுபவ சிறுகதை கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலங்களாக விடாமல் உறை பனி (snow) மழை பொழிந்து கொண்டிருந்தது. வீதிகளெல்லாம் உறை பனி படிந்து, படர்ந்து ..போதாதற்குக் குளிர் வேறு. சோமசுந்தரம் மணியைப் பார்த்தார். இரவு மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அவரிற்கு இந்தக் குளிரிலை, கொட்டுகின்ற உறை பனி மழையில் நனைந்தபடி வேலைக்குச் செல்லவே விருப்பமில்லாமலிருந்தது. ஊரங்கிக் கிடக்கும் இந்தச் சமயத்தில் சாமத்துக் கோழியாக அலைய வேண்டியிருக்கிறதே என்று நொந்து கொள்ளத்தான் முடிந்தது. ஊரிலை அவர் ஒரு பௌதிக ஆசிரியர். அவரிடம் பயின்ற எத்தனை மாணவர்கள் 'டாக்டர்கள்', 'எஞ்சினியர்கள்' என்று வந்திருக்கின்றார்கள்..ஆனால் ..இங்கோ அவரோ ஏழு நாட்களும் வே…
-
- 1 reply
- 1.2k views
-
-
சொந்தம் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்த கருத்து வேறுபாடுகள் பெரும் விரிசலாக வளர்ந்து நின்றபோது சித்தார்த்தும், சியாமளாவும் மனம் இணங்கிப் பிரிந்து போவது என முடிவெடுத்தனர். ஆறு மாத இடைவெளியில் இருவருக்கும் விவாகரத்தை உறுதி செய்த நீதிபதியிடம், ‘‘மகள் சசி எனக்குத்தான் சொந்தம்’’ என சியாமளாவும், ‘‘எனக்குத்தான் சொந்தம்’’ என சித்தார்த்தும் வாதம் செய்தனர். ஒரு நிமிடம் யோசித்த நீதிபதி, ‘‘இதை உங்க மகளிடமே கேட்டுடுவோம். ஏன்னா அவ இப்போ மேஜர்!’’ என்று சசியை அழைத்தார். ‘‘நீ அம்மாகூட இருக்கியா? இல்ல, அப்பாகூட இருக்கியாம்மா?’’ - கேட்டார் நீதிபதி.‘‘அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருந்தப்பதான் அவங்க எனக்கு அப்பாவும் அம்மாவும். நானும் அப்போதான் அவங்களுக்குச் சொந்தம். அவங்கதான் பிரிஞ்சிட்ட…
-
- 0 replies
- 745 views
-